ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
உறுதிசெய்யப்படாத தகவல் குறித்து குழப்பமோ கவலையோ கொள்ளவேண்டாம் யாழ். ஆயர் சொல்கிறார் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயிலுக்கு அருகில் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம், காணாமற்போன ஜிம்பிறவுண் அடிகளாரினது என்ற சந்தேகம் எந்த அடையாளத்தையும் வைத்து உறுதி செய்யப்படவில்லை. எனவே, அது சம்பந்தமான செய்திகளை முன்னிட்டு எவரும் கவலையோ குழப்பமோ அடையவேண்டாம். இவ்வாறு யாழ். ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் நேற்று விடுத்த செய்திக் குறிப்பு ஒன்றின் மூலம் கேட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை (16.04.2007) அன்று யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து மேற்படி சடலத்தை இனங்காண மரபணுச் சோதனை நடத்தவிரும்புவதாகவும், அதற்கு உதவ ஜிம்புறவுண் அடிகளாரின் பெற்றோரின் உதவியை நாடுவதாகவும் அதற்குத் துணைபுரிய…
-
- 0 replies
- 688 views
-
-
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி [18 - April - 2007] - கே.பி.மோகன் - கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இனம் தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனை கிரீன்லேன் பகுதியிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர் கொழும்பு, மட்டக்குளியைச் சேர்ந்த ஆட்டோ சாரதியான ஹாஜா முஹம்மது அலி ஜின்னா (23 வயது) என அடையாளம் காணப்பட் டுள்ளார். துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் 72 ஆம் இலக்க வாட்டில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அங்கு உயிரிழந்துள்ளார். இவர்மீதான துப்பாக்க…
-
- 0 replies
- 691 views
-
-
புங்குடுதீவில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் காணாமற்போன மதகுருவின் உடையதா? மரபணுப்பரிசோதனை வெள்ளியன்று ராகம ஆஸ்பத்திரியில்! புங்குடுதீவுப் பகுதியில் கடந்தமாதம் 14ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட சடலம், காணாமற்போன போதகர் ஜிம் பிறவுண் அடிகளாருடையதா என்பதைக் கண்டறிய மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இப்படிக் கூறப்பட்டுள்ளது. அந்தச் சடலம் ஊர்காவற்றுறை நீதிவானின் அனுமதியுடன் எடுத்துவரப்பட்டு ராகம வைத்தியசாலையில் எதிர்வரும் 20ஆம் திகதி மரபணுச் சோதனைக்கு உட்படுத்தப்படவிருக்கின்றது. மரபணுத்துறை நிபுணர் பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ இந்தப் பரிசோதனையை மேற்கொள்வார். இது விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுப் ப…
-
- 0 replies
- 548 views
-
-
அமெரிக்க இன்ரெல்சற் செய்மதி சேவைக்குள் புலிகள் ஊடுருவல் [18 - April - 2007] அமெரிக்காவிலிருந்து சர்வதேசம் முழுவதும் ஒளிபரப்பாகி வரும் பிரபல செய்தித் தொலைக்காட்சி வலையமைப்பாகிய "இன்ரெல் சற்"(Intel Sat) செய்மதிச் சேவையை ஷ்ரீலங்காவிலுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பு சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வருவதாகவும் குறித்த செய்மதி சேவையின் அனுமதியின்றி இன்ரல்சற் செய்மதி வலையமைப்புக்குள் புலிகள் அமைப்பு அதன் செய்மதித்தொடர்பைப் புகுத்தியுள்ளதாகவும் இன்ரெல் சற் செய்தி சேவையின் பிரதிநிதி பிலிப்ஸ்பெக்ரர் தெரிவித்துள்ளார். புலிகள் அமைப்பினர் இவ்வாறாக அமெரிக்காவின் இன்ரெல் சற் செய்மதி வலையமைப்புக்குள் ஊடுருவியிருப்பது அமெரிக்க சட்டவிதிகளை மீறும் செயலெனவும் அத்துடன் ஷ்ரீலங்காவிலிருந்து…
-
- 0 replies
- 660 views
-
-
மன்னார் மீனவர்கள் புங்குடுதீவில் கைது யாழ்ப்பாணம்,ஏப்.18 புங்குடுதீவு கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட மன்னாரைச் சேர்ந்த நான்கு மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். மன்னார், பேசாலையைச் சேர்ந்த ச.சந்திரகுமார், ந.சுதர்சன், செ.கோபிநாத், த.சுரேஷ் ஆகியோரே கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டிருந்தனர். பள்ளிமுனையில் இருந்து நேற்றுமுன்தினம் மீன்பிடிக்கச் சென்று காணாமற்போனதாகக் கூறப்படும் 13 மீனவர்களில் இந்த நான்கு மீனவர்களும் அடங்கலாம் உதயன்`
-
- 0 replies
- 628 views
-
-
யாழ்.குடாநாட்டில் இடம்பெற்றுவரும் கடத்தல்களுக்கும் கொலைகளுக்கும் படையினரே பொறுப்பாளிகள். - பண்டார வன்னியன் Wednesday, 18 April 2007 08:59 தமிழ் பேசும் மக்களின் வாழ்வியலை சிதைப்பதன்மூலம் இனவாத யுத்தம் ஒருபோதும் வெற்றி பெறாது என்ற வரலாறுகள் தரும் உண்மையினை புரிந்து,தமிழ் பேசும் மக்களின் மனித கௌரவத்தினை மதித்து நடக்குமாறு மாணவர்கள் சார்பாக படைகளை வேண்டி நிற்கின்றோம் என யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழுவடிவம்.. யாழ்ப்பாணக்குடாநாட்டில் கடத்தி காணாமல் போகவைக்கப்படும் செயற்பாடுகளுக்கும் கொலைகளுக்கும் யாழ் மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள படையினரும் அவர்களை வழிநடத்துப…
-
- 0 replies
- 504 views
-
-
புதன் 18-04-2007 06:10 மணி தமிழீழம் [சிறீதரன்] 38 பில்லியன் ரூபாக்கள் அச்சிடப்பட்டுள்ளன – ஐதேக குற்றச்சாட்டு சிறீலங்கா அரசாங்கம் தனது மிகஅதிகளவு எண்ணிக்கையான அமைச்சர்களை கொண்ட அமைச்சுக்களது தேவைகளையும் செலவீனங்களையும் ஈடுசெய்யும் வகையில் 38 பில்லியன் ரூபா பெறுமதியான பண நோட்டுக்களை அச்சிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஒவ்வொரு அமைச்சுக்களுக்கும் அலுவலகங்கள் வழங்கப்படாது வீட்டு ஓதுக்கீடாக மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒரு இலட்சம் ரூபா செலவு செய்வதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் நகர்புறங்களில் மக்களின் பொருட்களை கொள்வனவு செய்யும் திறன் 30 வீதத்தாலும் கிராமப்புறங்களில் 50 வீதத…
-
- 0 replies
- 586 views
-
-
இராணுவத் தீர்வு பற்றிய நம்பிக்கையில் தெற்கு! ` "எது நடக்க வேண்டுமோ, அது நன்றாகவே நடக்கின்றது!' பகவத்கீதை சாராம்சத்தின் ஒரு வாசகம் இது. இலங்கை அரசை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் தலைமையை பொறுத்தவரை காரியங்கள் இப்படித்தான் நடக்கின்றன. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் படைப்பலத்தின் அடிப்படையில் தமிழரின் தலைவிதியைத் தீர்மானிக்க மஹிந்தரின் அரசு எண்ணுகின்றது. இராணுவப் பலத்தை வைத்துக் கொண்டு பௌத்த, சிங்கள மேலாண்மையை உறுதிப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, நிலைநிறுத்த கங்கணம் கட்டிச் செயற்படுகின்றது அரசு. அந்தத் திசையில் தான் விடயங்கள் நன்றாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழியில் அமைதி முறையில் நியாயமான தீர்வு ஒன்றை கொழ…
-
- 0 replies
- 645 views
-
-
அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய ஈழத் தமிழ் அகதிகளை அமெரிக்காவில் குடியேற்ற முடிவு அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாகப் பிரவேசித்து அடைக்கலம் கோரிய 83 தமிழர்களையும் அமெரிக்காவில் குடியேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கின்றது. புதிய உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையிலேயே இதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் 'த அவுஸ்திரேலியன்' என்ற நாளேடு செய்தி வெளியிட்டிருக்கின்றது. அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரியிருக்கும் இவர்களை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கும் அதற்கு பதிலாக குவந்தனாமோ குடாவில் உள்ள கியூபா நாட்டு அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு வரவும் புகலிடம் கோருவோர் பரிமாற்றம் என்னும் உடன்படிக்கையின் மூல…
-
- 1 reply
- 908 views
-
-
'பொய்ப் பரப்புரைகள் மூலம் தவறாக வழிநடத்தப்படும் சிங்கள மக்கள்': சுரேஸ் பிரேமச்சந்திரன் சிறிலங்கா அரசாங்கமானது பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் சிங்கள மக்களை தவறாக வழி நடத்துகின்றது" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 59.2 வீதமான சிங்கள மக்கள் இராணுவத் தீர்வு மூலம் இனப்பிரச்சனையை தீர்க்கலாம் என தமது வாக்கெடுப்பில் தெரிவித்ததாக கொள்கை வகுப்புத் திட்ட கற்கைக்கான ஆய்வு நிலையம் அண்மையில் வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரித்துள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்ததாவது: "இந்த கற்கை நிலையத்தின் வாக்கெடுப்பு முடிவுகள் பெரும்பாலும் கி…
-
- 0 replies
- 673 views
-
-
புதன் 18-04-2007 03:20 மணி தமிழீழம் [தாயகன்] யாழ் கடற்றொழிலாளர்களின் அவலம் யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாடுகள் காரணமாக அங்குள்ள கடற்றொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ் குடாநாட்டிலுள்ள கடற்றொழிலாளரின் நிலை பற்றி அறிவதற்காக, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் தர்மரத்தினத்தை தொடர்பு கொண்டு கேட்டபோதே, இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான கடின உழைப்பை மேற்கொண்டு தொழில் ஈடுபட்டுவந்த கடற்றொழிலாளர்கள் சிறீலங்காப் படையினரின் கட்டுப்பாடுகள் காரணமாக உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். யாழ்ப்பாணத்தி…
-
- 0 replies
- 781 views
-
-
ரணிலின் இரட்டை வேடம் [17 - April - 2007] -வி.திருநாவுக்கரசு- ஆட்கடத்தல்கள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், காணாமற் போதல்கள் போன்ற கொடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கவன ஈர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கு முகமாக மக்கள் கண்காணிப்பு ஆணைக்குழு (C.M.C) அழைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மனோகணேசனால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒன்று 2007.04.09 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றதல்லவா? அக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய ரணில் விக்கிரமசிங்க பிரதான உரையினை நிகழ்த்தினார். காணாமற் போன அல்லது கடத்தப்பட்ட தமது அன்பிற்குரியவர்களை காணத்துடிக்கும் அப்பாவி உறவினர்கள் கண்ணீரும் கம்பலையுமாக காட்சியளித்தனர்.காணாமல் போனவர்களை கண்டுபிடி…
-
- 4 replies
- 2.1k views
-
-
அமைச்சர்கள் பலர் வெளிநாடுகளுக்கு விஜயம் இலங்கையிலிருந்து 15 இற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தற்போது வெளிநாடு சென்றுள்ளதாகவும் மேலும் 6 அமைச்சர்கள் செல்லவிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகப்பற்றற்ற முறையிலேயே இவ் அமைச்சர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். எதிர்வரும் சில நாட்களில் மேலும் பல அமைச்சர்கள் வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர்கள் வெளிநாடு செல்லுமுன் ஜனாதிபதிக்கு அதனை அறியப்படுத்துவதுடன் பாராளுமன்ற கூட்டத் தொடர்கள் நடைபெறும் காலங்களில் வெளிநாடு செல்வதைத் தவிர்க்க வேண்டுமெனவும் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கு மாத்திரமே அரசாங்க நிதியைப் பயன்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிப…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஊடகவியலாளர் பரமேஸ்வரி நாட்டைவிட்டு வெளியேற்றம்? புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு சுமார் மூன்று மாதகாலம் வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப் பட்டிருந்த பின்னர், குற்றமற்றவர் எனத் தெரிவித்து விடுவிக்கப்பட்ட ஊடகவிய லாளர் முனுசாமி பரமேஸ்வரி இந்தியா புறப்பட்டுச் சென்றார். இரண்டுவார கால ஊடகப் பயிற்சி நெறி ஒன்றை மேற்கொள்ளவே அவர் இந்தியாவுக்குச் சென்றார் எனக் கூறப்பட்ட போதிலும், பயிற்சி நெறி முடிந்து அவர் நாடு திரும்புவாரா என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் அவர் வேறு ஒரு நாட்டுக்குச் செல்லக்கூடும் என ஊகம் தெரிவிக்கப் படுகின்றது. ஊடகவியலாளர் பரமேஸ்வரி ந…
-
- 1 reply
- 1.5k views
-
-
'நாட்டுப்பற்றாளர் தினம் - அன்னை பூபதி ஒரு குறியீடு'-சபேசன் தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக, அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை, நாட்டுப்பற்றாளர் தினமாகக் கடந்த ஆண்டு தமிழீழத் தேசியத் தலைமை பிரகடனப் படுத்தியிருந்தது. அன்னை பூபதியின் நினiவு தினத்தை, நாட்டுப்பற்றாளர் தினமாகத் தமிழீழத்து மக்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்தார்கள். விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில், நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையைத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக, தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம், ஆக்கிரமிப்புப் …
-
- 1 reply
- 1.2k views
-
-
வவுனியாவில் தமிழ்ப் படைப்பாளி சுட்டுக்கொலை. வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்தினரால் தமிழ்ப் படைப்பாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். திருநாவற்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்குள் நேற்று திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் நுழைந்த இராணுவத்தினர், தரையில் தூங்கிக் கொண்டிருந்தவரை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர், சந்திரபோஸ் சுதாகர் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சுட்டுச் சத்தத்தினைக் கேட்ட கொல்லப்பட்டவரின் 8 வயது மகன் விழித்த போது, இராணுவத்தினர் சிங்களத்திலும் தமிழிலும் அவரது அப்பா தூங்குவதாகவும் அவரை பக்கத்து வீட்டுக்குச் செல்லுமாறும் மிரட்டியுள்ளனர். இராணுவத்தினரின் மிரட்டலைத் தொடர்ந்து வெளியேறிய சுதாகரின் மக…
-
- 1 reply
- 1.1k views
-
-
வெள்ளவத்தையில் தமிழ் யுவதிகளிடம் சேஷ்டைபுரியும் நிர்வாண ஆசாமிகள் கொழும்பு வெள்ளவத்தைப் பொலிஸ் பிரிவில் வாகனங்களில் வரும் கும்பலொன்று வீதிகளில் தனியாக செல்லும் பெண்களிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. காலிவீதி தவிர்ந்த இப் பொலிஸ் பிரிவிலுள்ள குறுக்குத்தெருக்கள், மற்றும் ஒழுங்கைகளில் தாம் வந்த வாகனத்தை நிறுத்தும் இக் கும்பல் வாகனக் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு பெண்கள் தனியாக வரும் போது தமது உடைகளை களைந்து நிர்வாணமாக இருக்கின்றனர் அத்துடன் ஆபாசமாக சைகைகளையும் காண்பிக்கின்றனர். நேற்று திங்கட்கிழமை மாலை வெள்ளவத்தை பசல்ஸ் லேனில் இவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த பஜுரோ ஜீப் வண்டியிலிருந்த அக் கும்பல் அவ்வழியால் தமிழ் யுவதிகள் சென்ற…
-
- 20 replies
- 4.7k views
-
-
ஞாயிறு 15-04-2007 02:16 மணி தமிழீழம் [தாயகன்] புலிகளின் வலையமைப்பு - இந்திய மத்திய புலனாய்வுத்துறை தகவல் சேகரிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாடுகளிலுள்ள வலைப் பின்னல் தொடர்பான விபரங்களை இந்திய மத்திய புலனாய்வுத்துறை சேகரித்து வருகின்றது. ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் உட்பட உலகின் 17 நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் வலைப் பின்னல்கள், மற்றும் தொடர்பாடல்கள் குறித்தே தகவல் சேகரிக்கப்படுகின்றது. இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கு பற்றிய இறுதிக்கட்ட விசாரணைகளை மேற்கொள்ளும் குழுவினரே இந்தத் தகவல் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல நாடுகள் விடுதலைப் புலிகள் பற்றிய தகவலை வழங்க மறுத்திருப்பதுடன், தமது தகவ…
-
- 17 replies
- 4k views
-
-
Unidentified aircraft over Jaffna town [TamilNet, Monday, 16 April 2007, 18:23 GMT] An unidentified aircraft flew over parts of government-controlled Jaffna just after dusk Monday, residents in the northern peninsula said. The aircraft passed low over Jaffna city centre and parts of Vadaramadchchi North and Valikamam sectors. Sri Lankan troops in some areas doused the lights of their camps as the aircraft approached, fuelling suspicions it was one of those operated by the Tamil Tigers, they said. Residents said the aircraft was different to those customarily operated by the Sri Lanka Air Force (SLAF). Some said its flight route was one not usually flown by SLA…
-
- 10 replies
- 3.9k views
-
-
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரவு, பகலாக விமானத் தாக்குதல்கள். - பண்டார வன்னியன் Tuesday, 17 April 2007 10:33 புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நேற்றுப்பகலும் இரவும் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத்தொடர் குண்டுவீச்சுத் தாக்குதலால் அப்பகுதியே அதிர்ந்தது மக்கள் பாதுகாப்புத் தேடி அவலமாக ஓடித்திரிந்ததை அவதானிக்க முடிந்தது புதுக்குடியிருப்புப் பிரதேச வான்பரப்பினுள் காலை 8.35 மணிக்கும் பின்னர் 9.15 மணிக்கும் தொடர்ந்து 9.30 மணிக்கும் இரவு 8.30 மணிக்கும் பிரவேசித்த சிறிலங்கா வான்படையின் மிக் 27 ரக யுத்த விமானங்கள் மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதி மீது தாக்குதலை மேற்கொண…
-
- 4 replies
- 1.5k views
-
-
அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு அனுமதி மறுப்பு. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 17 யுpசடை 2007 12:11 இலங்கையில் அதிகரித்திருக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பிரசாரத்தை ஆரம்பித்திருக்கும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் பணிப்புரைக்கமைய இலங்கை வருவதற்காக விண்ணப்பத்திருந்த அனைத்துலக மன்னிப்புச் சபையின் இரண்டு பிரதிநிதிகளுடைய விசா அனுமதி லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தால் மறுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “அவர்களின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபையின் அதிகாரிகளை இ…
-
- 1 reply
- 731 views
-
-
புலிகளின் எறிகணைத் தாக்குதலில் படையினரின் 3 உலங்குவானூர்தி இறங்குதளங்கள் தேசம். வடபோர் முனையில் சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகளும் பதில் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலில் தென்மராட்சியில் அமைந்துள்ள மூன்று உலங்குவானூர்த்தித் தளங்கள் தேசமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கெற்பலி மத்தி, மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத் திட்டம், வரணி எருவன் பகுதியில் அமைந்துள்ள உலங்குவானூர்தி தளங்களே தேசமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளன. -Pathivu-
-
- 0 replies
- 1.1k views
-
-
தே.க. விலிருந்து பலர் அரசுடன் இணைந்து வருகையில் அவர்களால் எப்படி ஆட்சியைக் கைப்பற்ற முடியும் பிரதான எதிர்க்கடசியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளில் இருந்து பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து கொண்டமையினால் அரசாங்கம் பலமடையவுள்ளது. ஐ.தே.க. வில் இருந்து இன்னும் பல உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவிருக்கின்றனர். அதனால், அரசாங்கம் இன்னும் பலமடைந்துள்ளது. இவ்வேளையில், ஆட்சி கவிழப்போவதாக பிரசாரம் செய்யப்படுவது வெறும் கேலிக்கூத்தென கால்நடை வள அபிவிருத்தி பிரதியமைச்சர் கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார். தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக கால்நடை வள அபிவிருத்தியமைச்சில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
-
- 0 replies
- 676 views
-
-
தம்மை விடுவிக்கக்கோரி சிறைக்கூரை மீதேறி ஆயுள் தண்டனைக் கைதிகள் போராட்டம் வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் சிலர் தங்களை விடுவிக்குமாறு கோரி கூரைமீது ஏறிநின்று போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்ட நடவடிக்கையில் ஆயுள் தண்டனைவழங்கப்பட்ட ஆறு கைதிகளே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. சிங்களவர்களாகிய இந்த ஆயுள் கைதிகள் செப்பல் சிறைக் கூடத்தின் கூரைமீது ஏறியே இப்போராட்ட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். விடுதலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இவர்கள் ஆறுபேரும் நேற்று உணவு உண்ண மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆயுள் தண்டனைக் கை…
-
- 0 replies
- 571 views
-
-
வெள்ளவத்தையில் தமிழ் இளைஞனை கடத்த முயன்ற `வெள்ளை வான்' -மதகுருவின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது கொழும்பு, வெள்ளவத்தையில் நேற்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் தமிழ் இளைஞர் ஒருவரை கடத்திச் செல்வதற்கு முற்பட்ட முயற்சி அப்பகுதியால் சென்ற கிறிஸ்தவ மதகுரு ஒருவரின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் கண்காணிப்புக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரும் மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் எம்.பி.யின் கவனத்திற்கு இச் சம்பவம் தொடர்பாக முறையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மனோ கணேசன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது: வங்கியொன்றிலிருந்து பணத்தை மீ…
-
- 1 reply
- 1.1k views
-