Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளி 13-04-2007 14:23 மணி தமிழீழம் [மோகன்] யாழில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை வியாழக் கிழமை மாலை 6.30 மணியளவில் உந்துருளியில் சென்ற இனம் தெரியதா ஆயுததாரிகளால் சாந்தை பகுதி சங்கானையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் இவருடன் இருந்த நண்பர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இதன் போது கொல்லப்பட்டவர் 24 அகவையுடைய தவராசா மூர்த்தி எனவும் தனது நண்பனின் மனைவிக்கு முதலாவது குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட குருதியிழப்பை ஈடுசெய்ய குருதி வழங்கிவிட்டு வரும் வழியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது காயமடைந்தவர் தையல் தொழில் புரியும் 21 அகவையுடைய மாணிக்கம் தவராசா எனவும் இனம் காணப்பட்டுள்ளார். மூலம் - பதிவு

  2. சர்வதேச மன்னிப்புச் சபைக்கு எதிராக ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம். சர்வதேச மன்னிப்புச் சபையையும் அரச சார்பற்ற நிறுவனங்களையும் எதிர்த்து ஜே.வி.பி.யினர் வியாழக்கிழமை காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பி. யின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். சர்வதேச மன்னிப்புச் சபையை விரட்டவேண்டும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை தோற்கடிக்கவேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டதின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய…

  3. கிழக்கைப் பறித்தெடுக்கும் பாதகம் ` கிழக்கு மாகாணத்தை, மிகக் குறிப்பாக திரு கோணமலையை, முற்றுமுழுதாகச் சிங்கள மயப் படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் முழு மூச் சில் செயற்பட்டு வருகிறது. எல்லோரும் அறிந்த இந்த விடயத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரின் இந்தியாவின் கவ னத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். 1987ஆம் ஆண்டில் கைச்சாத்தான இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு, ஒரே மாகாண சபை நிர்வாகம் கொண்டுவரப்பட்டது. தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் மூலம் கிடைத்த சொற்ப விளைச்சலாக, பத்தொன்பது வருடங்களாக அது துளி அளவான அதிகாரப் பகிர்வு முறைக்கு வழி செய்தது. நிர்வாக அதிகா…

  4. வட தமிழீழத்தில் நேற்றிரவு நடைபெற்ற மோதல் ஒன்றில் 10 ற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளிற்கு எதிராக தாக்குதல் நடத்திய படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே 10ற்கும் அதிகமான படயினர் கொல்லப்பட்டதாக ரொய்ட்டர்ஸின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடபகுதி முன்னரங்க பாதுகாப்பு நிலைகள் மீது புலிகள் நடத்திய தாக்குதலின்போது ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதுடன் மேலும் நால்வர் காயமடைந்ததாகவும் இதனைத் தொடர்ந்து படையினர் நடத்திய பதில் எறிகணைத் தாக்குதலில் 20 புலிகள் கொல்லப்பட்டதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் ரொய்ட்டசின் ச…

  5. யாழ் குடாநாட்டுக்கான செல்லிடப்பேசி சேவை துண்டிப்பு. யாழ்ப்பாணக் குடாநாட்டின் முன்னணி பாதுகாப்பு நிலைகளை நோக்கி நேற்று புதன்கிழமை சிறிலங்காப் படையினர், படையினரையும், ஆயுத தளபாடங்களையும் நகர்த்தி வந்ததுடன், பலாலி படைத் தளத்தில் இருந்து வழங்கப்படும் குடாநாட்டுக்கான செல்லிடப்பேசி இணைப்புக்களையும் துண்டித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாள் முழுவதும் பலாலி படைத் தளத்தில் இருந்து கனரக வாகனங்களில் பொருட்கள் முன்னணி நிலைகளுக்கு படையினர் நகர்த்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -Puthinam-

  6. மாமனிதர் ஜெயக்குமாரின் இறுதி மரியாதையில் கலந்து கொண்ட கவுன்சிலர் ஒருவருக்கு சிங்களவர்கள் சிலர், கவுன்சிலர் கலந்து கொண்டது தவறு என்றும் பகிரங்க மன்னிப்பு கேக்கவேண்டும் என்றும் மின்னஞ்சலில் கேட்டிருந்தார்கள். அதற்கு கவுன்சிலரின் பதில் A TRIBUTE by the Greater Dandenong mayor to a community leader whose opponents say supported a terrorist group has outraged a sector of the city’s Sri Lankan residents. Mayor Youhorn Chea last week thrust council into an ongoing fray between Sri Lanka’s two main ethnic groups – the Tamils and Sinhalese – when he attended a memorial service of a deceased Tamil community leader and sent a wreath to the Tamil community on behalf of …

  7. திருமலையை சிங்கள மயமாக்கும் தீவிர முயற்சியில் அரச நிர்வாகம் இந்தியத் தூதரை நேரில் சந்தித்து தமிழ்க் கூட்டமைப்பினர் முறைப்பாடு கிழக்கு மாகாணத்தை குறிப்பாகத் திருகோணமலைப் பிரதேசத்தை முற்று முழுதாகச் சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கையில் அரச நிர்வாகம் முழு மூச்சில் ஈடுபட்டிருக்கின்றது எனக் குற்றம் சுமத்தியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்புக்கான இந்தியத் தூதரை நேரில் சந்தித்து இது தொடர்பாக முறைப்பாடு செய்தனர். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், எம். பிக்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே நேற்று கொழும்பில் இந்தியத்தூதர் அலோ…

  8. இலங்கையுடன் கூட்டுரோந்து ஒருபோதும் சாத்தியமற்றது இலங்கை கடற்படையினருடன் இணைந்து ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் இந்திய கடற்படைக்கு இல்லை. இவ்விவகாரம் இந்திய தரப்பினர் மத்தியில் அதிருப்தி நிலையையே தோற்றுவித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையுடன் இணைந்து கூட்டுரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் தீர்மானம் எதுவும் உயர்மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு தமிழ்நாடு கடற்படை கொமடோர் பிலிப்வேன் ஹோல்ட்ரன் பதிலளிக்கையில்இ கூட்டுரோந்து விவகாரம் மிகவும் சிக்கலுக்குரியது. அத்துடன் கூட்டுரோந்து நடவடிக்கையில் ஈடுபடவேண்டிய தேவை இந்திய கடற்படைக்கு இல்லை. இதில் பல்வேறு விடயங்கள் தங்கியுள்ளன என்றார். அத்துடன் இந்த சண்டையில் நாங்கள் எதற்காக பங்குகொ…

    • 2 replies
    • 1.2k views
  9. 7 Sinhala civilians shot and killed in Vavuniya Seven Sinhala villagers, including a boy and 6 women, all civilians, were shot and killed by unknown gunmen at Awaranthalawa, located 13 km southwest of Vavuniya around 5:30 p.m. Thursday, Police said. The Sinhala villagers who were settled in the village before 1983, had resettled in the village after the Ceasefire Agreement in 2002. The killings come a day after 3 Tamil civilians were gunned down in Vavuniya allegedly by paramilitary men. [TamilNet, Thursday, 12 April 2007, 13:42 GMT]

    • 10 replies
    • 1.9k views
  10. மழை கொட்டுகிறது, உணவும் இல்லை மட்டக்களப்பில் அகதிகள் பெரும் அவலம் மட்டக்களப்பில் இடம்பெயர்ந்துள்ள ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு பெய்து வரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம், கடுமையான உணவுப் பற்றாக்குறைக்கும் முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் மீண்டும் மீண்டும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளைப் போல் எந்த விதமான உணவு விநியோகங்களும் இந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். மூன்று வேளையும் உணவை உட்கொள்ள வேண்டிய மக்கள் 100 தொடக்கம் 200 கிராம் அரிசியுடன் ஒரு நாளைக் கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பால் மா வகைகளின் பற்றாக்குறையினால் சிறார்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

    • 8 replies
    • 1.5k views
  11. வியாழன் 12-04-2007 18:37 மணி தமிழீழம் [மயூரன்] மகிந்தவின் ஆட்சிக்கு ஆபத்தென்றால் இராணுவ ஆட்சி வரும் - அமைச்சர் டலஸ் அழகப்பெரும சிறீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அல்லது அவரின் தலைமைத்துவத்தில் கேள்வி எழுப்பப்படும் பட்சத்தில் நாட்டில் இராணுவ மயமாக்கப்பட்ட ஆட்சி கொண்டுவரத் தயக்கப் போவதில்லை என இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும எச்சரித்துள்ளார். ராஜபக்சவின் தலைமைத்துவம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்பது வெறும் பகல் கனவாகவே அமையும் எனவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ராஜபக்சவின் ஆட்சி கவிழ்கப்பட்டால் இராணுவ ஆட்சி நடைமுறையில் வரும் …

    • 6 replies
    • 1.9k views
  12. கிழக்கை சிங்களமயமாக்கும் நடவடிக்கைகள் கடும் தீவிரம் [12 - April - 2007] *தடுத்து நிறுத்த உதவுமாறு இந்தியாவிடம் அவசர வேண்டுகோள் * உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு சந்திப்பு இலங்கை- இந்திய உடன்பாட்டின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு- கிழக்கு மாகாணங்களை பிரித்தது மட்டுமல்லாமல் கிழக்கை துரிதமாக சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கையிலும் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருவதாக கடும் விசனம் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதனை தடுத்து நிறுத்த இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டுமென அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று புதன்கிழமை காலை சந்தித்தபோதே இந்த அ…

    • 3 replies
    • 1.2k views
  13. சிறீலங்காவில் போர் நிறுத்த ஒப்பந்தம் என்று ஒன்றில்லை. இருப்பது சர்வதேசத்தை ஏய்க செய்யப்பட்ட பத்திரப்பரிமாற்றமே என்று தமது பக்க உண்மைகளைக் கொட்டியுள்ளார் கோத்தபாய..! ‘There is no ceasefire agreement with LTTE’ - Gotabhaya [TamilNet, Thursday, 12 April 2007, 17:02 GMT] There is no ceasefire between the Liberation Tigers and the Sri Lankan government and the 2002 agreement was only being left in place to satisfy the international community, Defence Secretary Gotabhaya Rajapakse said Tuesday. "There is no cease-fire agreement. There is no meaning in that," said Rajapakse, who is the brother and a close-confidant of Sri Lankan President Mahinda Rajapakse…

  14. வவுனியாவில் நான்கு பொதுமக்கள் சுட்டுப்படுகொலை. வவுனியா கூமாங்குளத்தில் நேற்று மாலை 5.45 மணியளவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் வீதியால் சென்ற பெண்மணி உட்பட நால்வரை சிறீலங்கா படையினர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதன்போது வீடொன்றில் இருந்த சிறுவன் ஒருவனும் வயோதிபர் இருவரும் மற்றும் வீதியில் சென்ற பெண்மணியுமே கொல்லப்பட்டவர்களாவர். இவர்களை இராணுவத்தினர் படுகொலை செய்த போதும் காவல்துறையினர் இதனை மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -Pathivu-

  15. சித்தங்கேணியில் காணாமற் போனவரின் சடலம் சூட்டுக்காயத்துடன் அளவெட்டியில் சித்தங்கேணி, பிளவத்தை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போன இளம் குடும்பஸ்தரொருவரது சடலம் நேற்று புதன்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அளவெட்டி பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. பிளவத்தை சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சிவகணேசன் (வயது 31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். கடந்த செவ்வாய்க்கிழமை இவர் வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றபோதும் பின்னர் அவர் வீடு திரும்பாத நிலையில் அவரைத் தாம் தேடி வந்ததாகவும் அவரது மனைவி மல்லாகம் நீதிவானிடம் வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே இவரது சடலம் அம்பனைப் பகுதியிலுள்ள பாவனையற்ற…

  16. வவுனியாவிலிருந்து புறப்படும் பஸ்களில் பொலிஸார் தீவிர சோதனை வவுனியா பஸ் நிலையத்திலிருந்து வெளியிடங்களுக்கு புறப்படும் சகல பஸ்களும் பொலிஸாரினால் கடும் சோதனைக்குள்ளாக்கப்படுகின்ற

  17. அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது பாரபட்சம் வேண்டாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது அனைவருக்கும் சமமாகக் கிடைக்கக்கூடியதாக நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிபருக்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி கூறியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்திலிருந்து படையினரின் திட்டமிட்ட எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் பல்வேறு இடங்களில் பாடசாலைகளிலும் தற்காலிகக் கொட்டில்களிலும் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களை உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் நிர்வகித்து வரும் அதேவேளை, உ…

  18. அமெரிக்கப் படைகளிடம் இராணுவப் பயிற்சி பெற்ற எனக்கு விடுதலைப் புலிகளுடன் எந்தவித தொடர்புகளுமில்லை அமெரிக்க படைகளிடம் முறையாக இராணுவ பயிற்சி பெற்ற தமிழ் இளைஞர் ஒருவர் புலிகள் இயக்கத்துடன் தனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என்று தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை நேற்று புதன்கிழமை தாக்கல் செய்தார். புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர் என்ற சந்தேகத்தில் தன்னை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதை இம்மனுவில் கடுமையாக ஆட்சேபித்துள்ளார். மனுதாரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மனுதாரர் கடந்த மார்ச் 13 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு கடுவெலவிலுள்ள வீட்டில் வைத்து கம்பஹா பொலிஸாரால் புலிகளின் முக்…

  19. காணாமல்போன யாழ்.பல்கலைக்கழக மாணவன் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் விடுதலை -யாழ் நகர் நிருபர்- கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல்போன யாழ்.பல்கலைக்கழக இறுதியாண்டு கலைப்பீட மாணவன் கடுமையாகத் தாக்கப்பட்ட பின்னர் நேற்று புதன்கிழமை காலை விடுவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாணவர் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, எமது பல்கலைக்கழக இறுதியாண்டு சிறப்பு மாணவன் நாகேந்திரம் இராஜலஷ்மன் காணாமற்போயிருந்த நிலையில் கடுமையாகத் தாக்கப்பட்டு நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார். எமது கற்றல் செயற்பாடுகளுக்கான சூழ்நிலை மிகவும் இறுக்கமாக உள்ள நிலையில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்…

  20. அரசாங்கம் 2010 வரை நீடிக்கும் ரணிலின் பகல் கனவு பலிக்காது தோழமைக் கட்சிகள் கூட்டாக தெரிவிப்பு [12 - April - 2007] - ப.பன்னீர்செல்வம் - ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பதவிக்காலம் 2010 ஆம் ஆண்டுவரை தொடருமென்றும் அதனை எவராலும் அசைக்க முடியாதென்றும் உறுதிபடத் தெரிவிக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது என்றும் தெரிவித்தனர். கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இ…

  21. அரசியல் வங்குரோத்து [12 - April - 2007] மகிந்த சிந்தனை என்ற தனது 2005 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தற்போது எந்தவகையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால், அத்தேர்தலின் போது அவருடன் அணிசேர்ந்து நின்று அவரது வெற்றிக்கு காரணம் தாங்களே என்று இன்றும் உரிமைகோரிக்கொள்வதில் பெருமை காணும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் தலைவர்கள் மகிந்த சிந்தனையைத் தவிர தங்களுக்கு வேறு சிந்தனையே இல்லை என்பதைப் போல பேசிக் கொண்டு திரிவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களுக்கே மகிந்த சிந்தனையில் இல்லாத அக்கறையையும் பற்றுதலையும் தாங்கள் கொண்டிருப்பதாக ஜே.வி.பி. தலைவர்…

  22. வியாழன் 12-04-2007 13:12 மணி தமிழீழம் [மோகன்] ஐக்கிய தேசியக் கட்சி குருநாகல் பாராளுமன்ற உறுப்பினர் பெர்ணாண்டோவிற்கு கொலை அச்சுறுத்தல் ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்சன் பெர்ணாண்டோ அவர்களுக்கு அவர் அண்மையின் சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலரும் சிறீலங்கா ஐனாதிபதியின் சகோதரருமான கோட்டபாய ராஜாபக்ஸவை விமர்சித்தது தொடர்பில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதா புதன் கிழமை முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் திரு.ஜோன்சன் பெர்ணாண்டோ அவர்களுக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்த நபர் சிறீபதி சூரியாராச்சிக்கு நிகழ்ந்தது போல் நடைபெறும் என அச்சுறுத்தியுள்ளார்கள். http://www.pathivu.com/index.php?subaction..…

  23. வியாழன் 12-04-2007 13:25 மணி தமிழீழம் [மோகன்] நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் மோதல் யாழ்ப்பாணம் வடமராச்சி கிழக்கு நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் நேற்று நண்பகல் வரை அறிகணை மோதல்கள் இடம்பெற்றுள்ளன. ஆட்டிலறி, பீரங்கி வேட்டுச்சத்தங்களும் துப்பாக்கிப் பிரயோக சத்தங்களும் இடையிடையே கேட்டவண்ணம் இருந்ததாக அறியமுறிகிறது. pathivu

  24. போரின் தோல்விக்கு பத்திரிகையாளர்களை பழிவாங்கும் அரசாங்கம். - பண்டார வன்னியன் Thursday, 12 April 2007 12:51 ஊடகவியலாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் மற்றும் விடுதலைப் புலிகளுடன் மோதலில் ஈடுபட்டு வரும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாகக் கேள்வியெழுப்பும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதாக அந்த அமைப்பு இன்று அறிவித்துள்ளது. ஸ்ரான்டட் நியூஸ்பேப்பர் லிமிட்டட் நிறுவனத்தால் வெளியிடப்படும் மௌபிம மற்றும் சண…

  25. தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கனேடிய தமிழ் காங்கிரஸ் கனேடிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தது. இந்த வேண்டுகோள் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் விடுக்கப்பட்டது (என நினைக்கிறேன்). CTV Newsnet இல் தொடர்ந்து 1/2 மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஒளிபரப்புகிறார்கள். மேலதிக தகவல் விரைவில்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.