Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தவிர்க்கப்பட வேண்டிய அப்பாவிகளின் மரணம் [06 - April - 2007] முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்புப் பகுதியில் விமானப்படை விமானங்கள் நடத்திய கடும் தாக்குதலில் பொதுமக்களில் இருவர் கொல்லப்பட்டதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்புச் சதிக்கு அருகில் மக்கள் குடியிருப்புப் பகுதியிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இலங்கையில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தில் அப்பாவிப் பொதுமக்கள் பலியாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படவில்லை என்பதை இது உறுதிப்படுத்துவதாக இருக்கும் அதேவேளையில், இவ்விதம் பொதுமக்கள் பலிக்கடாவாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தேவையையும் இச்சம்பவம் தெளிவாக உணர்த…

  2. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டமும் அரங்கேறும் அபத்த நாடகமும் ` "இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் உட்பட யாவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை எனது அரசு விரைவில் முன்வைக்கும்.'' இப்படி உறுதியளித்திருக்கின்றார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு ("சார்க்") மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் புதுடில்லி சென்றிருந்த ஜனாதிபதி, அந்த மாநாட்டில் பார்வையாளர் அந்தஸ்தில் கலந்து கொண்ட அமெரிக்க நாட்டுப் பிரதிநிதியான அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜாங்க அமைச்சரான ரிச்சர்ட் பௌச்சரிடமே இந்த உறுதி மொழியை நேரில் வழங்கியிருக்கின்றார் எனச் செய்திகள் தெர…

  3. யாழில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து இளைஞர் ஒருவரது சடலம் மீட்பு. தென்மராட்சி மிருசுவில் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து இளைஞர் ஒருவரது சடலம் சூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி மிருசுவில் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இளைஞர் ஒருவரது சடலம் உள்ளதாக நேற்று முன்தினம் கொடிகாமம் காவல்துறையினரால் சாவக்கச்சேரி நீதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற நீதிவான் சடலத்தை பார்வையிட்டு அடையாளம் காண்பதற்காக யாழ். வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டதையடுத்து சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. -Sankathi-

  4. கிளிநொச்சியில் இரத்தவங்கி ஒன்றை அமைப்பதற்காண நிதி சேகரிப்பு முயற்சி ஒன்று இன்று 06.04.07 முன்னெடுக்க படுகின்றது இனபத்தமிழ் ஒலி மற்றும் மெல்பேர்ண் 2 ccrஊடாகவும் திரட்டபட்டு கொண்டு இருக்கின்றது Australia கள உறவுகள் உங்கள் பங்களிப்பையும் வழங்குங்கள்.....

  5. ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி. மன்னார் மாவட்டம் பாலம்பிட்டி - நட்டாங்கண்டல் வீதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஈருளியில் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி இருவர் மீது இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வவுனியா பாவற்குளம் 8 ஆம் யூனிட்டை சொந்த முகவரியாகவும், பெரியதம்பனை தட்சணாமருதமடு முகாமைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் பெற்றோரான ரவீந்திரன் ரவி (வயது 54), ரவி சிந்து (வயது 42) ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர். -Puthinam-

    • 3 replies
    • 1.2k views
  6. அவசரகாலச்சட்ட நீட்டிப்புக்கு எதிர்ப்பு இல்லை- வாக்கெடுப்பிலும் பங்கேற்பில்லை: ஐ.தே.க. அவசரகாலச் சட்ட நீட்டிப்பை எதிர்க்கவும் மாட்டோம். அதே நேரத்தில் அதன் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவும் மாட்டோம் என்ற "புதிய" நிலைப்பாட்டை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசர காலச் சட்ட நீடிப்பு விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கேல் பெரேரா பேசியதாவது: படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் போன்றவற்றை அரசாங்கம் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது. இவற்றைத் தடுப்பதற்கு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு நாம் அரசாங்கத்தை கேட்டிருந்தோம். ஆனால் அரசாங்கத்தினால் எ…

  7. மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கம் பொறுப்பல்ல ஆட்கடத்தல், காணாமல் போதல், கப்பம் பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகளே ஈடுபடுகின்றனர். மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கம் பொறுப்பு அல்ல என்று பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க சபையில் தெரிவித்தார். மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்ற புலிகள், வெளிநாடுகளில் அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணையை சபையில் சமர்ப்பித்து விட்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். http://www.virakesari.lk/

    • 3 replies
    • 1.2k views
  8. சிறீலங்காவின் கடந்த மாதம் விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற மோதல்களில் 46 படையினர் கொல்லப்பட்டும் 202 படையினர் காயமடைந்தும் உள்ளனர் என சிறீலங்காப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணையிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 77 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 65 பேர் காயமடைந்தனர் என்றும் பிரதமர் ரண்டசிறீ விக்கிரம நாயக்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். நன்றி - பதிவு

    • 1 reply
    • 1.1k views
  9. .மனிதஉரிமை மீறல்களை அவதானிக்க ஐ.நா.மனித உரிமை கண்காணிப்பு அவசியம் நாட்டில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்களை அவதானிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பு பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். மனித உரிமை மீறல் அவதானிப்புக்கள் பூச்சிய நிலைக்கு சென்று விட்டன. வெறுமனே ஆணைக்குழுக்களை அமைப்பதன் மூலம் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்திவிட முடியாது என்று தெரிவித்த அவர், தினமும் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துச் செல்கின்றன என்றும் குற்றம் சாட்டினார். அத்துடன் சமாதான முயற்சிகளுக்கான செயன் முறைகள் பின்நோக்கிச் செல்வதாகவும் சம்…

    • 0 replies
    • 717 views
  10. விடுதலை புலிகளின் வான் தாக்குதல் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் மாத்திரம் விடுக்கப்பட்ட சவால் அல்ல [05 - April - 2007] * இது அரசியல் ரீதியாகத் தனிப்பட்ட விதத்தில் பிச்சுப் பிடுங்கும் வேளையல்ல. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வேளையாகும். பிரச்சினை இயல்பான வளர்ச்சியை விட அதிக வளர்ச்சியை அடைந்துள்ளதைப் புரிந்துகொண்டு நாட்டின் பொது நன்மையைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவது முக்கியமானது -விக்டர் ஐவன்- கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் மூலம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்ன? விடுதலைப் புலிகளிடம் இலகுரக விமானங்கள் உள்ளன என்பது ரகசியமன்று. பாதுகாப்புத்துறை தொடர்பான ஆய்வாளர் இக்…

  11. தமிழ் - சிங்கள புதுவருடத்தின் பின்னர் நாட்டில் புது ஆட்சி: ஐ.தே.க [வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007, 08:07 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் எதிர்வரும் தமிழ் - சிங்கள புதுவருடத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஆட்சி மலரும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எட்வேட் குணசேகர மீண்டும் கட்சிக்கு வந்தது தற்போதைய அரசாங்கத்தை இல்லாது ஒழிக்க எமது கட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகும் என அக்கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு கிராண்ட்பாசில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போதே அவர் இவ்வாறு த…

    • 8 replies
    • 1.6k views
  12. வியாழன் 05-04-2007 21:30 மணி தமிழீழம் [கோபி] கொழும்பில் சிறிய சூறாவளி 11 பேர் காயம்: இருவர் நிலை கவலைக்கிடம் கொழும்பு நகரப்பகுதியில் சிறிய சூறாவளி ஒன்று வீசியுள்ளது. இதனால் கொழும்பில் ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை,கிரான்ஸ்பாஸ், முகத்துவாரம், போன்ற இடங்களில் உள்ள கட்டிடங்கள் பல தேசமடைந்து மரங்களும் முறிவடைந்து வீழ்ந்துள்ளன. ஒரு நிமிடம் வரை வீசிய சூறாவளியால் மரங்கள் வீழ்ந்து வீதிப் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளது என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சூறாவளித் தாக்குதலில் 11பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளன. காயமடைந்தோரில் 2 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய பொது மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். pathivu

  13. மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் ஓட்டுவெளிப்பகுதியில் வயல்வேலை செய்வதற்காக உழவு இயந்திரத்தில் பயணித்த இரு விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் வாழைச்சேனை தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர் மீராவோடை பாடசாலை வீதியை சேர்ந்த 30 அகவையுடைய அக்பர் அனீஸ் எனவும் இவரை முதலில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பின்னர் மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலைக்கு மாற்றம் செய்ததாகவும் அறியமுடிகிறது. வியாழக்கிழமை காலை அந்த இடத்தில் கருணா குழுவினர் விடுதலைப்புலிகளுடன் துப்பாக்கி பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் பின்னர் அவ் இடத்தால் சென்ற விவசாயிகள் மீது ஆயுததாரிகள் துப்பாக்கி சூடு நடாத்தியதாகவும் வாழைச்சேனை கா…

  14. எங்களுக்கு சட்டம், ஒழுங்கை கற்பிக்கமுடியாது சர்வதேச மன்னிப்புச் சபையைச் சாடுகிறார் வீரவன்ச வெள்ளையர்கள் எங்களுக்கு சட்டம் ஒழங்கு பற்றிக் கற்பிக்க முடியாது. சட்டவரம்புக்கு உட்படாத நாடாக இலங்கையைக் காட்ட முயல்கிறது சர்வதேச மன்னிப்புச் சபை. இலங்கை கிரிக்கெட் அணிமீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி விடுதலைப் புலிகளுக்கு உதவதேவ அவர்கள் முயற்சிக்கின்றனர். இவ்வாறு சர்வதேச மன்னிப்புச் சபையைக் கண்டித்தார் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச. மேற்கிந்தியாவில் இடம்பெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கட் அணி சட்ட ஒழுங்கின்படி செயற் பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப் புச் சபை தெரிவித்திருந்தது. ஜே.வி.பியின…

  15. வியாழன் 05-04-2007 18:55 மணி தமிழீழம் [கோபி] யாழ் குடாநாட்டு சிறுவர்கள் மீதான மனித உரிமைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா விடுத்த பணிப்பின் பேரில் உயர்மட்டக்குழு ஒன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளது. இன்று சென்றுள்ள குழுவில் யுனிசெவ், சர்வோதயம், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, மனித உரிமை ஆணைக்குழு ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த அதிகாரிகளே யாழ் சென்றுள்ளனர். யாழ் செல்லும் அதிகாரிகள் யாழ் அரச அதிபர், சிறுவர் நலன் பேண் அமைப்புக்கள், மற்றும் அரச அரசசார்பற்ற பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நன்றி : பதிவு எங்கிருந்து இவர்கள் செயல்படப் போகின்றார்கள். கரிநாயின் பசரையில் இருந்தா?

  16. தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு எதிராக "சார்க்'கைத் தவறாகப் பயன்படுத்துகிறது அரசு! குற்றம் சுமத்துகிறார் தமிழ்ச்செல்வன் கொழும்பு, ஏப்ரல் 05 மிக மோசமான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டும், தமிழர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விசேட விலக்களிப்பு வழங்கும் நிறுவன முறையைப் பின்பற்றியும் தனது பெயரைக் கெடுத்துக் கொண்டுள்ள இலங்கை அரசு, அதில் இருந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திசை திருப்பவும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் ஈழத் தமிழர்களின் தற்காப்பு உரிமைக்கு எதிராகவும் தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்கின்) உச்சிமாநாட்டைத் தவறாகப் பயன்படுத்துகின்றது. இவ்வாறு குற்றஞ்சுமத்தியிருக்கின்றா

  17. தெற்காசியாவில் `ஒரே நாணய' யோசனை பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி -சபை விவாதிக்க வேண்டுமென ரணில் வலியுறுத்தல் தெற்காசியாவில் `ஒரே நாணய'த்தை புழக்கத்தில் விடுவது தொடர்பாக சார்க் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனை தொடர்பாக நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டதுடன் ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பாக சபையில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல் விடுத்தார். `ஒரே நாணய'ப் புழக்க யோசனை தொடர்பாக பாராளுமன்றத்துடன் ஜனாதிபதி ராஜபக்ஷ கலந்துரையாடவில்லையெனவும் இந்த விடயம் குறித்து விவாதம் நடத்தப்படுவது அவசியமென்றும் ரணில் விக்கிரமசிங்க வாதிட்டபோதும் அவரின் கோரிக்கையை அரசாங்கம் நிர…

    • 8 replies
    • 1.7k views
  18. தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிபோடும் சதித்திட்டத்தை புதுடில்லியில் இந்திய உளவுத்துறையினர் முனைப்புடன் மேற்கொண்டு வருவதாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்கள் படுகொலையில் புலிகளை ஏன் பழி போட வேண்டும்? தமிழீழத் தமிழர்களுக்கான தமிழ்நாட்டின் தார்மீக ஆதரவு மற்றும் அதன் எதிர் வினையாக இந்திய அரசியல் தலைவர்கள் நிலைப்பாட்டில் உருவாகி வரும் மாற்றங்களால் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளைத் தீர்மானித்துக் கொண்டிருந்த "உளவுத்துறை" அதிகார வர்க்கம் அதிர்ந்து போயிருக்கிறது. அதனால்தான் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளை மத்திய உளவுத்துறை முடுக்கிவிட்ட…

    • 1 reply
    • 1.6k views
  19. பொலநறுவைப்பகுதியில் நான்கு சிங்கள விவசாயிகள் சுட்டுக்கொலை. பொலநறுவை மாவட்டம் திம்புல்லாகல பகுதியில் நிடான்வெலவில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் நான்கு சிங்கள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் மூவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்கள் மற்றயவர் காயம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இறந்துள்ளார். -Pathivu-

  20. சப்புகஸ்கந்தை அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் சாவகச்சேரி இளைஞனின் சடலம் மீட்பு நிலைய அதிபாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சப்புகஸ்கந்தை பொலிஸார் தெரிவித்தனர். இச்சடலத்தில் வெளிக்காயங்கள் காணப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இவர் கொலை செய்யப்பட்டு சடலம் இங்கு போடப்பட்டிருப்பதாக பொலிஸார் கருதுகின்றனர். இவர் வேவு பார்க்க வந்தவராக இருக்கலாமென சந்தேகிக்கப்பதாக பொலிஸார் குறிப்பிட்டபோதும் அவரின் பெயர் உட்பட மேலதிக விபரங்கள் எதனையும் அவர்கள் வழங்கவில்லை. சடலம் ராகம வை…

  21. கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியோடிய இளைஞனை சுட்டுக் கொன்ற ஆயுதபாணிகள் -கோண்டாவில் பகுதியில் அக்கிரமம் யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் நேற்று புதன்கிழமை காலை, ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞனொருவர் அவர்களிடமிருந்து தப்பியோடிய போது ஆயுதபாணிகள் அவரைத் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். கோண்டாவில் மேற்குப் பகுதியில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் கோண்டாவில் புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் சசிதரன் (வயது- 20) என்ற இளைஞரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கோண்டாவில் இந்து மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இந்த இளைஞன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அங்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு ஆயுதபாணிகள் இவரை பலவந்…

  22. எதிர்க்கட்சிக்கு மீண்டும் திரும்பிய எட்வினுக்கு கொலை மிரட்டலாம்! பிரதிஅமைச்சராகவிருந்து அப்பதவியை துறந்துவிட்டு மீண்டும் ஐக்கியதேசியக்கட்சியுடன் இணைந்துகொண்ட எட்வின் குணசேகரவிற்கு அரச தரப்பிலிருந்து தொலைபேசிமூலம் தொடர்ச்சியாக கொலைமிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றது என்று அவர் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். தனது உயிருக்கும் தனது குடும்பத்தினரது உயிர்களுக்கும் ஏதும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசே ஏற்கவேண்டும் என்றும் அவர் கூறினார். எட்வோர்ட் குணசேகர நேற்று நாடாளு மன்றில் சிறப்புரிமை பிரச்சினை எழுப்பி உரையாற்றினார். நாட்டுமக்களுக்குச் சேவையாற்றவேண்டும். அந்த நோக்கிலேயே நான் அரசு டன் இணைந்து பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்டேன். ஆனால் சேவ…

  23. பொலநறுவைப்பகுதியில் நான்கு சிங்கள விவசாயிகள் சுட்டுக்கொலை பொலநறுவை மாவட்டம் திம்புல்லாகல பகுதியில் நிடான்வெலவில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் நான்கு சிங்கள விவசாயிகள் சுட்டுக்கொலை வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் மூவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்கள் மற்றயவர் காயம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இறந்துள்ளார் இதேவேளை சிறீலங்கா பாதுகாப்பு ஊடக மையம் விடுதலைப்புலிகளே இத்தாக்குதலை நிகழ்த்தியதாக குற்றம் சுமத்தியுள்ளது tamilwin.com

    • 1 reply
    • 925 views
  24. யாழில் வெவ்வேறு சம்பவங்களில் இரு இளைஞர்கள் சுட்டுக்கொலை யாழில் வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கோண்டாவிலில் நேற்றுக் காலை இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கோண்டாவில் புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த தெய்வேந்திரம் சசிதரன் (வயது 20) என அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்றுக் காலை 8 மணியளவில் பிரதாப நபர் வீட்டிலிருந்து புறப்பட்ட சமயம் மோட்டார் øகிளில் வந்த ஆயுததாரிகளே இவரை கடத்திச் சென்று நூறு மீற்றர் தூரத்தில் வைத்து சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நேற்று முன்தினம் இரவு சாவகச்…

  25. மூதூர் நலன்புரி நிலையத்தில் 6 தமிழ் இளைஞர்கள் கைது [வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007, 15:12 ஈழம்] [செ.விசுவநாதன்] மூதூர் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த 6 தமிழ் இளைஞர்களை சிறிலங்கா இராணுவம் கைது செய்துள்ளது. திருகோணமலை மாவட்டம் மூதூரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் இளைஞர்கள் தங்கியிருந்த போது கடந்த மார்ச் 31 ஆம் நாள் நள்ளிரவு இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்காக இளைஞர்களை அழைத்துச் செல்வதாக அவர்களின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் இன்னமும் எவரும் விடுவிக்கப்படவில்லை. இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணையத்திடம் இளைஞர்களின் பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டோர் விவரம்: அருள்நாயகம் யோசப் யேசுதாசன் (வயது 25) …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.