ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142779 topics in this forum
-
விடுதலைப் புலிகள் எவ்வாறு வானூர்திகளையும் வானோடிகளையும் பெற்றனர்: கொழும்பு ஊடகம். தமிழீழ விடுதலைப் புலிகள் இரு இலகு ரக வானூர்திகளை 2005 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து பெற்றுக்கொண்டதாக சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளதாக கொழும்பு வார ஏடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இது தொடர்பாக பாதுகாப்புத் துறையினரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை அடுத்து காலம் சென்ற வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவை இரகசியக் கடிதம் மூலம் எச்சரிக்கை செய்திருந்தார். அத்தகவல்களின் படி, விடுதலைப் புலிகள் இடைத்தரகர்கள் மூலம் 3 இலகுரக வானூர்திகளை பெற்றுள்ளனர் எனவும், அதில் இ…
-
- 1 reply
- 972 views
-
-
500 அடி உயரத்தில் பறந்த விடுதலைப் புலிகளின் வானூர்திகள். கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் வானூர்திகள், புத்தளம் மாவட்டத்தில் உள்ள வில்பத்து காட்டுப்பகுதிக்கு மேலாக தெற்கு நோக்கி பறந்து சென்றதனை கண்டதாக வில்பத்து சரணாலயப் பகுதியில் உள்ள ஒலுமடுவப் பகுதியில் வசிக்கும் மக்களும் ஊர்காவல் படையினரும் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: இரு வானூர்திகளும் நில மட்டத்தில் இருந்து 500 தொடக்கம் 600 அடி உயரத்தில் பறந்து சென்றன. அவை எழுப்பிய ஓசைகள் மிகவும் அதிகமாகவும் ஏனைய விமானங்களில் இருந்து வேறுபட்டதாகவும் இருந்தன. நாங்கள் கண்ட வானூர்திகள் விடுதலைப் புலிகளின் வானூர்திகளாக இருக்கலாம் என்ற சந்தே…
-
- 8 replies
- 2.6k views
-
-
இன்றைய சன்டே டைம்ஸ் ஆசிரியர் தலையங்கத்தில் கீழ் கண்டவாறு எழுதி உள்ளார்கள்: "Not since that fateful Easter Sunday in World War 11 - April 5, 1942, has Sri Lanka been bombed by air as happened last Sunday night" - Sunday Times of Sri Lanka - Editorial (1/4/2007) தமிழாக்கம்: "இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, 1942 ஏப்ரல் 5ம் திகதி ஒரு ஈஸ்டர் ஞாயிறு அன்று ஸ்ரீலங்கா விமான குண்டுகளால் தாக்கப்பட்ட பிறகு கடந்த ஞாயிறு அன்று (26/3/2007) தான் மீண்டும் விமான குண்டுகளால் தாக்கப்பட்டு இருக்கிறது" - ஸ்ரீலங்கா சன்டே டைம்ஸ் - ஆசிரியர் தலையங்கம் (1/4/2007) ஆக, ஸ்ரீலங்கா விமானப் படைகளின் கிபீரும், மிக் விமானங்களும் குண்டு போட்டு பெண்கள், சிறார்கள் உட்பட பல்லாயிரக் கணக்கான …
-
- 6 replies
- 3.1k views
-
-
கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீது நடத்தப்பட்ட வான் வழித் தாக்குதல் மூலம் தமிழ் பிரதேசங்களில் கண்மூடித்தனமாக விமானப்படை விமானங்கள் நடத்தி வரும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென இலங்கை அரசுக்கு தெளிவானதொரு செய்தி சொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீதான புலிகளின் வான் வழித் தாக்குதல் குறித்து கிளிநொச்சியில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில்; கடந்த 6 மாதங்களில் மட்டும் 90 நாட்கள் இரண்டு தடவைகளென தமிழர் தாயகப் பகுதியில் விமானத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இந்தத் தாக்குத…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையுடன் இனி பேச்சு கிடையாது: புலிகள் ஏப்ரல் 01, 2007 கொழும்பு: இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கவில்லை. அதை முழுமையாக கைவிட தீர்மானித்துள்ளது. எனேவ இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச் செல்வன் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்காமல், போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இலங்கை அரசு திட்டமிட்டால், இலங்கையுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பே இல்லை. முழு அளவிலான போருக்கான அழைப்பே இது. மிகப் பெரிய அளவிலான போருக்கு அரசு விரும்புவதாகவ…
-
- 2 replies
- 2k views
-
-
இலங்கையில் நடைபெற்றுவரும் போரில் புதிய பரிமாணமொன்று ஏற்பட்டுள்ளது. இதுவரை தரையிலும் கடலிலும் மட்டுமே முனைப்புப் பெற்றிருந்த போர், வான்புலிகளின் வருகையுடன் புதியதொரு தளத்திற்குள் செல்கிறது. இதன் மூலம் உள்நாட்டுப் போரில் பெரும் திருப்பங்களும் அதிர்ச்சிகரமான சம்பவங்களும் நிகழும் நிலைமை உருவாகியுள்ளது. வான் புலிகளின் தோற்றம் 1998 காலப் பகுதியில் உருவானது. அதற்குப் பல வருடங்களுக்கு முன்பே வான் புலிகள் பற்றிய சிந்தனை புலிகளிடம் ஆழ வேரூன்றியிருந்த போதும் 1990 களின் பிற்பகுதியிலேயே அது முனைப்புப் பெற்று 2000 இன் முற் பகுதியில் முழு அளவில் உதயமானது. கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீதான புலிகளின் வான் வழித் தாக்குதலுடன் `பறக்கும் புலிகள்' பற்றி முழு உலகமும் அறிந்துள்ளது…
-
- 0 replies
- 1.3k views
-
-
விரைவில் யாழ்.- மட்டக்களப்பில் கண்காணிப்புக் குழுவினர்: தோர்பினூர் ஓமர்சன் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அனைத்துலக கண்காணிப்பாளர்களை விரைவில் அனுப்ப உள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோபினூர் ஓமார்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்த இரு மாவட்டங்களிலும் வன்முறைகள் அதிகரித்ததால் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் விலக்கிக்கொள்ளப்பட்டனர். எனினும் தற்போது மீண்டும் அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள நிலைமைகள் மேலும், மேலும் மோசமடைந்து வருகின்றன. கண்காணிப்புக் குழு உறுப்பினர்களின் பணியும் மிகவும் ஆபத்தாகவும், கடினமாகவும் மாறியுள்ளது. இன்றைய நாட்களில் நாம் மே…
-
- 5 replies
- 1.5k views
-
-
வடக்கு கடற்கரையில் இராணுவத்தினர் உசார்நிலையில் சிறீலங்கா பாதுகாப்பு படையினர் வடக்கு கடற்கரையான வல்வெட்டித்துறை தொடக்கம் பருத்தித்துறை முனை வரை அதி உச்ச உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விடுதலைப்புலிகளின் கடற்படையினர் தாக்குதல் நடாத்தக்கூடும் என்ற புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாகவும் இதனையடுத்தே இவ்வாறு உசார்நிலையில் வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது. மீனவர்கள் காலை 8 மணிதொடக்கம் 1 மணிவரை மீன்பிடிப்பதற்கு வழமையாக அனுமதியளிக்கும் படையினர் இன்று காலை 9.30 மணிக்கே கரைதிரும்புமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மீனவர் சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/
-
- 4 replies
- 1.7k views
-
-
மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து எம்.ஐ.-24 உலங்குவானூர்திகள் தாக்குதல். வவுனியா புளியங்குளம் பாலமோட்டைப் பகுதிகளில் நேற்று இரவு சிறிலங்கா விமானப் படையினரின் எம்.ஐ - 24 ரக் உலங்குவானூர்தி மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து தாக்குதல்கள நடாத்தியுள்ளன. இத் தாக்குதலில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார். வன்னிக்கு உணவுப் பொருட்களை ஏற்றிவந்த சுமையுந்து ஒன்று முற்றாகச் சேதமடைந்துள்ளது. இதே வேளை சிறிலங்காப் படையினரின் உலங்குவானூர்தி இன்றும் பாலமோட்டைப் பகுதியில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -Sankathi-
-
- 0 replies
- 663 views
-
-
வியாழன் 29-03-2007 12:25 மணி தமிழீழம் [செந்தமிழ்] வான் புலிகள் பிரச்சனை சார்க் மாநாட்டில் பிரச்சாரப்படுத்த திட்டம் நாளை தொடக்கம் எதிர்வரும் புதன்கிழமைவரை இடம்பெறும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக் கவுன்சிலின் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் வான்படையால் தெற்காசியப்பிராந்தியத்திற்
-
- 2 replies
- 1.5k views
-
-
வான்புலிகள் போரின் வியூகத்தை மாற்றுவார்கள் -அருஸ் (வேல்ஸ்)- கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றி வருகிறோம், உலகக் கோப்பை துடுப்பாட்டப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து விட்டோம் என்ற ஆனந்தத்தில் தென்னிலங்கை மூழ்கியபோதும், தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் மீதான வான் தாக்குதல்களையும் அரசு தீவிரப்படுத்தியே வந்தது. கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுடன் பேரில் அரசின் கைமேலோங்கியதான தோற்றப்பாடானது அனைத்துலக மட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசின் ஆனந்தத்திற்கும், சில மேற்குலக நாடுகளின் தவறான கணிப்புக்களுக்கும் கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீதான விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் ஒரு அதிர்ச்சி வைத்தியம் ஆகிவிட்டது. விடுதலைப்…
-
- 2 replies
- 1.7k views
-
-
கட்டுநாயக்கா விமான தாக்குதல் கொழும்பின் தெற்கே, அமைந்திருக்கும் நுகேகொட வரை கேட்டது என்று சன்டே டைம்ஸின் இராணுவ ஆய்வாளர் தன் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். நுகேகொட என்பது கிட்டத்தட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிரதேசமாகும். சன்டே டைம்ஸ் இக்பால் அத்தாசின் இந்த கூற்றில் இருந்து ஒன்று தெளிவாகிறது. விடுதலை புலிகளின் விமான குண்டுவீச்சு குறி தவறாது கிபீர் மீதோ மிக் மீதோ விழுந்து இரண்டாம் நிலை குண்டு வெடிப்புகளை (Secondary Explosions) தோற்றுவித்து இருக்கிறது. குண்டுகள் இணைக்கப்பட்ட மிக் அல்லது கிபீர் வெடித்து சிதறாமல் இலகுரக விமானங்களின் குண்டுவீச்சு வெடிச்சத்தம் 50 கிலோ மீட்டருக்கு கேட்க வாய்ப்பே இல்லை. ஊடகவியலாளர்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா மீதான ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம் மீண்டும் ஒத்திவைப்பு சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தால் கொண்டுவரப்பட இருந்த தீர்மானம் மூன்றாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஜெனீவாவில் முடிவடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபைக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இக்கூட்டத் தொடரில் அரசாங்கம், மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை விளக்கியிருந்தது. இதில் சாட்சிகளை பாதுகாக்கும் திட்டமும் அடங்கும். விசாரணை ஆணைக்குழுக…
-
- 0 replies
- 799 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் பல முனைகளில் போரிடும் வலுவை உடையவர்கள் கிழக்கில் கெரில்லாக்களாகவும் வடக்கில் மரபுவழிப் படைகளாகவும், தெற்கை ஒரு பயப்பீதியில் வைத்திருக்கும் தாக்குதல்களையும் அவர்களால் நடத்தமுடியும் போரியலில் தற்கொலைத் தாக்குதலே மிகவும் ஆபத்தான ஆயுதம், ஆனால் விடுதலைப் புலிகள் புதிய வியூகத்திற்கு நகர்ந்துள்ளனர். தற்போது அவர்களிடம் வான்படையும் உண்டு. கடந்த மார்ச் 26 ஆம் நாள் விடுதலைப் புலிகள் தமது வான்படை மூலம் சிறிலங்காவின் பிரதான வான்படைத் தளத்தை தாக்கியுள்ளனர். அவர்கள் தமிழ் மக்களுக்கு ஒரு தனிநாடு வேண்டி 25 வருடங்களாக சிறிலங்கா அரசாங்கத்துடன் போராடி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் வான்படை வலு இடம்பெற்று வரும் போரில் பயங்கரமான புதியவ…
-
- 0 replies
- 834 views
-
-
[31 - Mஅர்ச் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தம்முடைய விமானப் படையைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பிரதிபலிப்புகள் முரண்பாடானதாகவே அமைந்துள்ளன. வான் புலிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் அதேவேளை நாளையே பேச்சுவார்த்தைக்கு தயார் என வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம அறிவித்திருக்கின்றார். அரசின் பிரதிபலிப்புகள் இவ்விதம் வெளிவரும் அதேவேளையில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் யுத்தகளத்தில் ஏற்பட்டுள்ள புதிய பரிமாணத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் தங்களுடைய அரசியல் நலன்களுக்கேற்ற வக…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மீது சிறீலங்காவின் பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் கடும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர் [சனிக்கிழமை, 31 மார்ச் 2007, 23:58 ஈழம்] [க.திருக்குமார்] யாழ்மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சிறீலங்காவின் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டுள்ளதாக கூறிய படையினர் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியில் இருந்து தொடர்ந்து 10 மணிநேரங்கள் அவரை கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விடுதலைப்புலிகளுக்கு வாகனம் வாங்குவதற்கு உதவிபுரிந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மீது பயங்கரவா…
-
- 1 reply
- 756 views
-
-
13 போராளிகள் - 1 தமிழீழ தேசிய துணைப் படை வீரரின் வீரச்சாவு அறிவித்தல்கள். தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 13 போராளிகளினதும் தமிழீழ தேசியத் துணைப்படை வீரர் ஒருவரினதும் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விபரம் வருமாறு: 23.03.07 இல் மன்னார் தம்பனைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையின் போது இடம்பெற்ற நேரடி மோதலின் போது கப்டன் சோழன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். 23.03.07 இல் மன்னார் தம்பனைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையின் போது இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். கப்டன் சோழன் என்று அழைக்கப்படும் மன்னா…
-
- 3 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பில் சிறிலங்கா அதிரடிப்படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: ஒருவர் பலி. மட்டக்களப்பில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். தாழங்குடாவுக்கும் களுவாஞ்சிக்குடிக்கும் இடையில் சென்று கொண்டிருந்த அவர்களின் வாகனம் மீது இன்று சனிக்கிழமை மாலை பிற்பகல் 4.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதனிடையே வவுனியா தவசிக்குளம் பகுதியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் இருவர் படுகாயமடைந்துள்னர். இத்தாக்குதல் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் இடம்பெற்றது. இதில் இராணுவ வாகனம் சேதமடைந்ததுடன் இரு இராணுவத்தினரும் படுகாயமடைந்துள்ளனர். …
-
- 0 replies
- 665 views
-
-
பளையில் சிறிலங்கா வான்படை வான்தாக்குதல்: 12 வீடுகள் சேதம். பளை இயக்கச்சிப் பகுதி மீது சிறிலங்கா வான்படையினரின் கிபீர் ரக வானூர்திகள் இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. மக்கள் வெளியேறிய நிலையில் இருந்த வீடுகளின் மீது வானூர்திகள் வீசிய குண்டுத் தாக்குதலில் 12 வீடுகள் சேதமாகியுள்ளன. இப்பகுதியில் வசித்து வந்த மக்கள் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற சிறிலங்காப் படையினரின் படை நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து விட்டனர். -Puthinam-
-
- 0 replies
- 861 views
-
-
வான்பகுதியால் வருவதற்கு முன்னர் தரையில் விடுதலைப் புலிகளை முறியடிப்போம்: பிரசாத் சமரசிங்க. "தமிழீழ விடுதலைப் புலிகள் வான்பகுதியால் வருவதற்கு முன்னர் அவர்கள் தரையில் முறியடிக்கப்படுவார்கள்" என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஊடகத்துறையினர் மத்தியில் கருத்துத் தெரிவித்த போதே இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். "விடுதலைப் புலிகளை தரையில் அழித்த பின்னர் வான்புலிகள் தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை" எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பங்குபற்றிய விமானப் படையின் பேச்சாளர் குறுப் கப்டன் அஜந்த குரே தெரிவித்ததாவது: "விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இருந்து நாட்டைப் பாதுக…
-
- 11 replies
- 3k views
-
-
வவுனியா தவசிபுரத்தில் இன்று மதியம் 1.15 மணியளவில் இராணுவத்தினருக்கு உணவுர் பாசல் எடுத்துக் கொண்டு சென்ற வாகனம் கண்ணிவெடியில் சிக்கி இரு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக இராணுவ பாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது. காயமடைந்த இராணுவத்தினர் வவுனியா வைதியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
-
- 0 replies
- 987 views
-
-
விமானத் தாக்குதலும் கட்சி அரசியலும் [31 - March - 2007] கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தம்முடைய விமானப் படையைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பிரதிபலிப்புகள் முரண்பாடானதாகவே அமைந்துள்ளன. வான் புலிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் அதேவேளை நாளையே பேச்சுவார்த்தைக்கு தயார் என வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம அறிவித்திருக்கின்றார். அரசின் பிரதிபலிப்புகள் இவ்விதம் வெளிவரும் அதேவேளையில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் யுத்தகளத்தில் ஏற்பட்டுள்ள புதிய பரிமாணத்தை சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் தங்களுடைய அரசியல் நல…
-
- 0 replies
- 917 views
-
-
மனித உரிமைகள் தொடர்பான குழப்பங்கள் [31 - March - 2007] இலங்கையில் பெரிய அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் குற்றம் சுமத்தப்படுகிறது. அண்மையில் ஜெனீவா நகரில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான மகாநாட்டில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகள் என்ற விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை சார்பில் அந்த மகாநாட்டில் கலந்து கொண்டார். ஆனால், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அவர் படாதபாடுபட நேர்ந்தது. இலங்கையில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் மிகைப்படுத்திக் கூறப்படும் தகவல்களா? அல்லது உண்மையான …
-
- 0 replies
- 751 views
-
-
விமானப்படைத் தளத்தில் ராடர் கழற்றியதை புலிகளுக்கு அறிவித்தது யார்? [31 - March - 2007] இலங்கையில் பெரிய அளவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் குற்றம் சுமத்தப்படுகிறது. அண்மையில் ஜெனீவா நகரில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான மகாநாட்டில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகள் என்ற விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை சார்பில் அந்த மகாநாட்டில் கலந்து கொண்டார். ஆனால், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த அவர் படாதபாடுபட நேர்ந்தது. இலங்கையில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் மிகைப்படுத்திக் கூறப…
-
- 0 replies
- 772 views
-
-
விமான குண்டுவீச்சின் உண்மைகளை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி கட்டுநாயக்க விமானப் படை தளத்தின் மீது விடுதலைப்புலிகள் அண்மையில் மேற்கொண்ட இலகு ரக விமான குண்டுவீச்சு தொடர்பான உண்மைகளை அரசாங்கம் மூடி மறைப்பதற்கு முயற்சி செய்கின்றது. அதனால் தான் பாராளுமன்றத்தை கூட்டுமாறு விடுக்கப்பட்ட கோரிகையை அரசாங்கம் நிராகரித்துள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். உண்மைகளை மூடி மறைப்பதற்காகவே சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐவர் கொண்ட குழுவை நிமித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளது. இவ்விரண்டின் மீதும் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதுடன் சம்பவ இடத்திற்கு ஊடகங்கள் மற்றும…
-
- 1 reply
- 885 views
-