Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் தீவகத்தில் சிறிலங்கா இராணுவத்தால் 6 அப்பாவி பொதுமக்கள் சுட்டுப் படுகொலை. யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் உள்ள வேலணை முடிப்பிள்ளையார் கோயிலடியில் சிறிலங்கா இராணுவத்தினரால் இன்று அப்பாவி பொதுமக்கள் 6 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வேலணை முடிப்பிள்ளையார் கோயில் தேர்முட்டியில் இருந்த 6 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிறிலங்கா இராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்தனர். அதன் பின்னர் கோயிலின் பூசகரை சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் சடலங்கள் யாழ். போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. -Puthinam-

    • 4 replies
    • 1.7k views
  2. செவ்வாய் 01-05-2007 23:00 மணி தமிழீழம் [கோபி] சித்தாண்டித் தாக்குதல் இனப் படுகொலை தான் - ஜெயானந்தமூர்த்தி மட்டக்களப்பு மாட்டத்திலுள்ள சித்தாண்டி பகுதியில் மூன்று பொதுமக்கள் சிறிலங்கா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் இப்படுகொலையைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது” மட்டக்களப்பு மாவட்டத்தில் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்த வண்ணமே உள்ளது. சிறிலங்கா படையினராலும் மற்றும் ஆயுத குழுக்களாலும் பொதுமக்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும் கண்மூடித்தனமான சூட்டுச் சம்பவங்களாலும் கொலை செய்யப்…

  3. செவ்வாய் 01-05-2007 20:05 மணி தமிழீழம் [செந்தமிழ்] வன்னியில் வான்தாக்குதல் வன்னியில் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான வான்கலங்கள் நேற்றுக் காலையும், பிற்பகலிலும் கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் வான்வழித்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. ஏ-9 வீதிக்கு சமீபமாகவே குண்டுவீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. விடுதலைப்புலிகள் மீதும் அவர்களது இலக்குகள் மீதும் தாக்குதல் நடாத்துவதாக கூறிக்கொண்டு பொதுமக்களின் இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக தெரியருகிறது. pathivu

  4. இடம்பெயர்ந்தோர் மூவரை படுகொலை செய்தது இராணுவம் [செவ்வாய்க்கிழமை, 1 மே 2007, 19:12 ஈழம்] [சி.கனகரத்தினம்] மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோர் மூவரை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்துள்ளது. ஏறாவூர் சிறிலங்கா காவல்துறை பிரதேசத்துக்குட்பட்ட சித்தாண்டியில் ஒரு பெண் உட்பட மூவரை ஞாயிற்றுக்கிழமையயன்று சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்தது. குடாவெட்டை இறால்குளத்தைச் சேர்ந்த பொன்னுசாமி செல்லதுரை (வயது 46), சித்தாண்டி பெருநாவேலியைச் சேர்ந்த நாகலிங்கம் திருச்செல்வம் (வயது 42) பூபாபல பிள்ளை பூமணி (வயது 30) ஆகியோர் தங்களது விவசாய செயற்பாடுகளை பார்க்கச் சென்றபோது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். மூவரின் உடல்களும் சிறிலங்கா இராணுவ காவலரண் அர…

  5. விமான தாக்குதல் பற்றிய அலசல் http://www.pathivu.com/?ucat=alasal&file=300407

  6. தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இல்லை: தமிழீழ விடுதலைப் புலிகள் விளக்க அறிக்கை [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 22:03 ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் 12 தமிழக உறவுகள் காணாமல் போனமைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 30.04.2007 தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கடலில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வெளிவருகின்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை தெள…

    • 5 replies
    • 1.6k views
  7. வேலனையில் இனந்தெரியாதோரால் கடற்படையினர் இருவர் வெட்டிக்கொலை. வேலனை முடிப்பிள்ளை கோயிலுக்கு அண்மையாக உள்ள பகுதியில் வைத்து கடந்த ஞாயிறு காலை இரண்டு கடற்படையினர் இனந்தெரியாதோரால் வெட்டிக்கொல்லப்பட்டதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சிவில் உடையில் ஈருளியில் சென்றுகொண்டிருந்த போதே மறைந்திருந்த இனந்தேரியாதோர் வாள்களால் கடற்படை சிப்பாய்கள் இருவரையும் சம்பவ இடத்தில் வெட்டிக் கொன்றதாக இப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தை தொடர்ந்து இப்பிரதேசத்தை சுற்றிவளைத்த படையினர் ஆறு அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்றதாகவும் பின்னர் இவ்வுடல்களை கொடூரமாக வெட்டி சிதைத்து இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. -Sankathi-

    • 1 reply
    • 1.4k views
  8. பெண்களை ரகசிய இடங்களில் வைத்து விசாரிக்கும் படையினர். Written by Ellalan - May 01, 2007 at 12:46 PM பண்ணை அல்லைப்பிட்டி சோதனைச்சாவடி ஊடாக பயணம் செய்யும் ஆண்களை படையினர் சோதனை என்ற பெயரால் சேட்டுகளை கழற்றி சோதனை செய்வதுடன் பெண்களை ரகசிய மறைவிடங்களுக்கு அழைத்துச்சென்று சோதனை செய்வதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் பெண்கள் உளவியியல் ரீதியாக பாதிக்கப்படுவதுடன் படையினரின் பாலியல் சேட்டைகளுக்கும் உள்ளாகுவதாகவும் அடையாள அட்டைகளை கேட்கும் படையினர் அடையாள அட்டைகளுடன் பெண்களின் கைகளை சேர்த்து பிடிக்கும் அநாகரிகமான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன்; பெண்கள் மீதான மீதான பாலியல் வன்முறைகளிலும், ஆண்களை அச்சுறுத்தும் செயல்பாடுகளிலும் ஈடுபட்ட இரு…

    • 1 reply
    • 1.5k views
  9. ராஜபக்ஷ அரசின் மீது நம்பிக்கை இல்லை புதிய ஆட்சியை அமைக்க அணிதிரள்வோம் [01 - May - 2007] [Font Size - A - A - A] * மே தினக்கூட்டத்தில் ஜே.வி.பி.அழைப்பு ப.பன்னீர்செல்வம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மூலம் உழைக்கும் வர்க்கத்தினருக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கப்போவதில்லையென்பது நிரூபணமாகியுள்ளதென ஜே.வி.பி.யின் தொழிற்சங்க மத்திய நிலையத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ரி.லால்காந்த தெரிவித்துள்ளதுடன் தொழிலாளர் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு ஆட்சியைக் கைப்பற்றி, எமது உரிமையை பெற்றுக் கொள்ளும் அரசாங்கத்தை உருவாக்கும் போராட்டத்துக்காக நாம் அணி திரளவேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார். ஜே.வி.பி.யின் மே தினக் கூட்டம் நேற்று திங்கட்கிழம…

  10. மலையக சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் [01 - May - 2007] பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் 90 சதவீதமான சிறுவர், சிறுமியர்கள் பல தரப்பட்ட துன்புறுத்தல்களுக்குள்ளாக்

  11. மே தினத்தை கொண்டாட அரசுக்கு அருகதையில்லை [01 - May - 2007] * அடைக்கலநாதன் எம்.பி. தற்போதைய அரசு தொழிலாளர் தினமான மே தினத்தைக் கொண்டாடுவதற்கு எவ்வித அருகதையும் அற்றது என்பது எனது கருத்தாகும். இலங்கை வாழ்மக்கள் யாவரும் நாளாந்தம் துன்பத்திற்குள்ளாகியிருக்க

  12. படுகொலைகள் மந்துவிலில்... யாழ்ப்பாணம், மே, 01 தென்மராட்சி மந்துவில் பகுதியில் நேற்றுமுன்தினம் நண்பகல் வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான நாகலிங்கம் தர்மகுலசிங் கம் (வயது48) என்பவரே உயிரிழந்தவராவார். சம்பவ இடத்திற்கு சென்ற சாவகச்சேரி நீதிவான் பூர்வாங்க மரண விசாரணைகளை மேற்கொண்டார். (சி) * * * மீசாலையில்... யாழ்ப்பாணம், மே 1 மீசாலை வங்களா வீதியில் நேற்றுக்காலை 6.15 மணியளவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மீசாலை மேற்கைச்சேர்ந்த இராசமுத்து கிரிதரன் (வயது25) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார். (சி) * * * நாரந்தனையில்... யாழ…

  13. சிறீலங்கா அரச புலனாய்வுப் படையினரால் யாழில் உதயன் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் செய்திகள் தெரிவிக்கின்றது

  14. கொலன்னாவவில் குண்டுகள் துல்லியமாகத் தாக்கியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கும்: முன்னாள் வான்படை அதிகாரி டிர்க்சி [செவ்வாய்க்கிழமை, 1 மே 2007, 10:18 ஈழம்] [அ.அருணாசலம்] கொலன்னாவ எண்ணெய்க்குதங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்குண்டுகள் துல்லியமாகத் தாக்கியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கும் என்று சிறிலங்காவின் முன்னாள் வான்படை அதிகாரியான விங் கொமாண்டர் சி.ஏ.ஓ டிர்க்சி எச்சரித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு "புலிகளின் வான்வழித் தாக்குதல்களை முறியடிப்பது" தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது: கட்டுநாயக்க மீதான வான்தாக்குதல் அதன்பின்னர் கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல பகுதிகள் மீது விடுதலைப் புலிகளால் நடத்தப…

  15. தமிழர்களின் உரிமைப் போராட்டம் நியாயமானது: பிரான்ஸில் இன்று மாபெரும் பேரணி. தமிழர்கள் பயங்காரவாதிகள் அல்ல எனவும், தமிழர்களின் உரிமைப் போராட்டம் நியாயமானது என்பதை வலியுறுத்தியும், பிரான்ஸில் இன்று மாபெரும் பேரணி இடம்பெறவுள்ளது. பிரான்ஸ் தமிழ் மாணவர் அமைப்பு ஒழுங்கு செய்துள்ள இந்தப் பேரணி, இன்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள இன அழிப்பு நடவடிக்கைளை பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு எடுத்து விளக்குவதுடன், அனைத்துலக ரீதியாக சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் பரப்புரையை முறியடிக்கவும் இந்தப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணியை பிரான்ஸ் தமிழ் மாணவர் அமைப…

    • 3 replies
    • 1.4k views
  16. பலத்தைக் காட்ட புலிகள் நடத்தும் வான்தாக்குதல்களுக்கு முடிவு கட்டுவோம்: சிறிலங்கா பிரதமர். தங்களது பலத்தைக் காட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தும் வான் தாக்குதல்களுக்கு முடிவு கட்டுவோம் என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணியின் மேதின கூட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குண்டு துளைக்காத கண்ணாடி கூட்டுக்குள் நின்று அவர் பேசியதாவது: நாட்டில் இன்று புதிய அரசாங்கம் ஒன்று இருக்கும் என்று கடந்த காலத்தில் கூறப்பட்டது. சிலர் புதிய அரசாங்கத்தை அமைப்போம் என்று கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் சிறிலங்காவில் நாடாளுமன்ற அரசியலமைப்பு முறைதான் இருக்கின்றது. அரசாங…

  17. தொடர் கதையாக நீளும் உதயன் மீதான கொடூரம் "உதயன்' பத்திரிகையின் மற்றொரு செய்தியாளர் சுட்டுக் கொல் லப்பட்டிருக்கின்றார். "உதயன்' அலுவலகத்துக்குள் ஆயுததாரிகள் குழுவொன்று முகங்களை மறைத்துக்கொண்டு இயந்திரத் துப்பாக்கிகளு டன் புகுந்து நாலாபுறமும் சரமாரியாக வேட்டுக்களைத் தீர்த்து, இரண்டு ஊழியர்களை அங்கேயே சுட்டுப் படுகொலை செய்து, பலரைக் காயப்படுத்தி, ஊடக உபகரணங்களை நாசப்படுத்தி, பெரும் அட்டூழியம் புரிந்த கொடூரத்தின் முதலாம் வருட நிறைவு நினைவு தினம் நாளையாகும். கடந்த வருடம் சர்வதேச ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் சமயத்தில் ஊடக அலுவலகம் மீதான இந்த அலங்கோலம் அரங்கேறியது. அடுத்த ஊடக சுதந்திர தினம் வருகின்ற இந்த ஒரு வருட காலப் பகுதிக்குள் மட்டும் பல்வேறு நெருக்கடிகளை உத…

  18. நோர்வே தூதர் பிரட்ஸ்கார் நாளை வன்னி சென்று புலிகளை சந்திப்பார் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார் நாளை 1 ஆம் திகதி வன்னி செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 23 ஆம் திகதி பிரட்ஸ்கார் வன்னிக்குச் செல்லவிருந்த போதிலும் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி கடைசி நேரத்தில் இந்த விஜயத்தை அரசு ரத்துச் செய்திருந்தது. எனினும், வன்னிக்கான பயணத்தை கைவிடுமாறு பிரட்ஸ்காரை தாங்கள் கேட்கவில்லையெனவும் அவராகவே இதனைக் கைவிட்டிருந்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை மறுத்த ஹான்ஸ் பிரட்ஸ்கார், வன்னிக்குச் செல்ல வேண்டாமெனவும் பாதுகாப்பு பிரச்சினைகளிருப்பதாகவும் அரசு கூறியதாலேயே தனது பயணம் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்திருந…

  19. நவீன தளபாடங்களைக் கொள்வனவு செய்ய முயற்சிக்கிறோம்: இராணுவப் பேச்சாளர் [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 14:45 ஈழம்] [செ.விசுவநாதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகளை எதிர்கொள்ள நவீன தளபாடங்களைக் கொள்ளவனவு செய்ய முயற்சிக்கிறோம் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க கூறியுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணல்: தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையானது புதிய பரிமாணமாகும். நாம் மேலதிகமான நவீன தளபாடங்களைக் கொள்வனவு செய்ய முயற்சிக்கிறோம். அவர்களை வானிலும் தரையிலும் அழிக்க அது தேவை. முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 14 விடுதலைப் புல…

  20. மேலதிக வான்வழித் தாக்குதல்கள் நிச்சயமாகத் தொடரும்: இளந்திரையன் எச்சரிக்கை- பங்கு வர்த்தகமும் சரிவு [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 14:51 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா மீதான வான்வழித் தாக்குதல்கள் நிச்சயமாக தொடரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து தொலைபேசியூடாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவித்த இளந்திரையன், சிறிலங்கா இராணுவமானது குறிப்பாக சிறிலங்கா வான்படையானது தாங்கள் எப்போதும் இராணுவ வழியில்தான் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனை நிரூபிக்க விடாப்பிடியாக முயற்சிக்கிறது. ஆகையால் எங்களுக்கு வேறு வழியில்லை. திருப்பித் தாக்குதவதைத் தவிர வேறு வழி ஏதும்…

    • 8 replies
    • 2.4k views
  21. கொழும்பு வடக்கை உலுக்கி வந்த பாதாளக் குழுத்தலைவர் சுட்டுக்கொலை [30 - April - 2007] -கே.பி.மோகன்- கொழும்பு வடக்கை உலுக்கி வந்த பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ெகாழும்பு -15, புளூமெண்டால் வீதியில், ரயில்வே திணைக்கள விடுதித் தொகுதிக்கு அருகாமையில் உள்ள அவரது வீட்டில் வைத்தே இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ரோலண்ட் பிரின்ஸ் கொலம்ஸ் (வயது 34) என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டதாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் அத்துல தெரிவித்தார். வாகனமொன்றில் வந்த இனந்தெரியாத ஆயுதக் குழுவொன்றே இவர் மீது சரமாரியாக துப்பாக்கி …

    • 7 replies
    • 3.6k views
  22. கொழும்புக்கான இரவு நேர வானூர்தி சேவையை சிங்கப்பூர் ஏயர்லைன்ஸ் நிறுத்தியது [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 16:44 ஈழம்] [செ.விசுவநாதன்] கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல்கள் தொடருவதால் சிறிலங்காவுக்கான இரவு நேர வானூர்தி சேவைகளை சிங்கப்பூர் ஏயர்லைன்ஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது. அந்நிறுவனம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு கொழும்புக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான நாளாந்த சேவைகளில் மாற்றம் செய்துள்ளதாகவும் இன்று நள்ளிரவு முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கதே பசுபிக் ஏயர்லைன்ஸ் நிறுவனம் முன்னரே கொழும்புக்கான வானூர்தி சேவைகளை இடை நிறுத்துவதாக அறிவித்தது. அதேபோல் …

  23. படையினருக்குள் பிரிவினையை உருவாக்கும் நடவடிக்கையில் ஐ.தே. கட்சி தலைவர் ஈடுபடுகிறார் [30 - April - 2007] * ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை பதவி விலக்கிவிட்டு ஜானக பெரேராவை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுப்பதற்கு காரணம் எமது படையினருக்குள் பிரிவினையையும் முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்குமேயாகும் எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இதன்மூலம் புலிகளுக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்திக் கொடுப்பதும் இதன் நோக்கமாகுமென்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க மேலும் தெரிவித்திருப்பதாவது; "திறமையின்மையினாலேயே பாதுகாப்புச் செயலாளரை ப…

    • 2 replies
    • 1.4k views
  24. சர்வதேச மன்னிப்புச் சபையின் அடுத்த நடவடிக்கை என்ன? உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு கிண்ணம் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது. இக்கட்டுரையை நீங்கள் படிக்கும்போது முடிவு தெரிந்திருக்கும். உண்மையிலேயே மெச்சப்படவும் பெருமைப்படவும் வேண்டிய விஷயமே. ஆனால், இலங்கை கிரிக்கட் அணிக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை செய்யும் பிரசாரம் நியாயமா என்ற வாதப் பிரதிவாதங்கள் காரசாரமாக நடந்து வருகின்றன. இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த மன்னிப்புச் சபையின் சீற்றம் கிரிக்கெட் அணி மீது சரியான தருணத்தில் திசை திருப்பப்பட்டிருக்கிறது. இலங்கை அரசு மன்னிப்புச் சபை மீது தாளாத ஆத்திரத்தில் கொதிக்கிறது. உலக சரித்திரம் தெரியாத பலரும் கிரிக்கெட்டும் அரசியலும் இருவேறு துருவங்கள்; …

  25. வான் புலிகளை எதிர்கொள்ள அரசு வகுக்கப் போகும் வியூகம் என்ன? வான் புலிகளின் மீள் வருகைக்காக காத்திருந்த படையினரால் வான் புலிகள் மீண்டும் வந்தபோது எதுவும் செய்ய முடியவில்லை. வான் புலிகளின் தாக்குதல் ஆற்றலை முறியடிப்பதற்காக வன்னியில் விமானப் படையினர் தொடர்ச்சியாக நடத்தி வந்த தாக்குதல்களும் படைத் தளங்களில் பொருத்தப்பட்டிருந்த வான் பாதுகாப்பு பொறி முறையும் பலனளிக்கவில்லை. கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது அதிரடித் தாக்குதலை நடத்தியது போல் பலாலி கூட்டுப் படைத்தளம் மீதும் வான் புலிகள் இரவு நேரத்தில் பலத்த தாக்குதலை நடத்திவிட்டு பாதுகாப்பாக தங்கள் தளத்திற்கு திரும்பியதுடன், கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது மீண்டுமொரு தாக்குதலை நடத்த முயற்சித்ததாகவும் கூறப்படு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.