ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
கொழும்புக்கான இரவு நேர வானூர்தி சேவையை சிங்கப்பூர் ஏயர்லைன்ஸ் நிறுத்தியது [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 16:44 ஈழம்] [செ.விசுவநாதன்] கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல்கள் தொடருவதால் சிறிலங்காவுக்கான இரவு நேர வானூர்தி சேவைகளை சிங்கப்பூர் ஏயர்லைன்ஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது. அந்நிறுவனம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு கொழும்புக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான நாளாந்த சேவைகளில் மாற்றம் செய்துள்ளதாகவும் இன்று நள்ளிரவு முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கதே பசுபிக் ஏயர்லைன்ஸ் நிறுவனம் முன்னரே கொழும்புக்கான வானூர்தி சேவைகளை இடை நிறுத்துவதாக அறிவித்தது. அதேபோல் …
-
- 2 replies
- 1.2k views
-
-
திங்கள் 30-04-2007 16:11 மணி தமிழீழம் [முகிலன்] விமான சேவைகள் இடைநிறுத்தம்: இரவு சேவைளை நிறுத்துவது குறித்து இறுதி முடிவு விரைவில் தென்னிலங்கையில் கட்டுநாயக்க மற்றும் கேந்திரமுக்கிய இலக்குகள் மீது விடுதலைப் புலிகள் வான்தாக்குதலையடுத்து சிறீலங்காவுக்கான சர்வதேச விமான சேவையை மேற்கொள்ளும் கத்தேபசுபிக் மற்றும் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனங்கள் தமது சேவையை காலவரையின்றி இடைநிறுத்தியுள்ளன. இந்த நிலையில் சிறீலங்காவுக்கான இரவு நேர விமான சேவைகள் நிறுத்துவது குறித்து மகிந்த ராஜபக்சவுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவெடிக்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. pathivu
-
- 1 reply
- 1.2k views
-
-
இன்று வன்னிப் பகுதியில் தாக்குதல் நடாத்த வந்த கிபீர் விமானம் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அது புகைந்து கொண்டு சென்றதை மக்கள் கண்டதாகவும் ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றது.
-
- 245 replies
- 74.5k views
-
-
மேலதிக வான்வழித் தாக்குதல்கள் நிச்சயமாகத் தொடரும்: இளந்திரையன் எச்சரிக்கை- பங்கு வர்த்தகமும் சரிவு [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 14:51 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா மீதான வான்வழித் தாக்குதல்கள் நிச்சயமாக தொடரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து தொலைபேசியூடாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவித்த இளந்திரையன், சிறிலங்கா இராணுவமானது குறிப்பாக சிறிலங்கா வான்படையானது தாங்கள் எப்போதும் இராணுவ வழியில்தான் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனை நிரூபிக்க விடாப்பிடியாக முயற்சிக்கிறது. ஆகையால் எங்களுக்கு வேறு வழியில்லை. திருப்பித் தாக்குதவதைத் தவிர வேறு வழி ஏதும்…
-
- 8 replies
- 2.4k views
-
-
தமிழ் - சிங்கள தம்பதிகள் கூட நிம்மதியாக வாழ முடியாதா?இத்தாலிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கேள்வி [30 - April - 2007] * இத்தாலிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கேள்வி -த. தர்மேந்திரா- காதலித்து திருமணம் செய்துகொண்ட தமிழ் - சிங்கள தம்பதிகள் கூட நிம்மதியாக வாழ முடியாதா? என்று இத்தாலிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். இத்தாலியிலுள்ள யாழ்ப்பாணத் தமிழ் இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்த சிங்களப் பெண் ஒருவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் பூஸா தடுப்பு முகாமில் சிங்களப் புலிகளில் ஒருவராக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இத்தாலியிலுள்ள கணவனுக்கும் புல…
-
- 0 replies
- 1.1k views
-
-
படையினருக்குள் பிரிவினையை உருவாக்கும் நடவடிக்கையில் ஐ.தே. கட்சி தலைவர் ஈடுபடுகிறார் [30 - April - 2007] * ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை பதவி விலக்கிவிட்டு ஜானக பெரேராவை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுப்பதற்கு காரணம் எமது படையினருக்குள் பிரிவினையையும் முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்குமேயாகும் எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இதன்மூலம் புலிகளுக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்திக் கொடுப்பதும் இதன் நோக்கமாகுமென்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க மேலும் தெரிவித்திருப்பதாவது; "திறமையின்மையினாலேயே பாதுகாப்புச் செயலாளரை ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
கொழும்பு வடக்கை உலுக்கி வந்த பாதாளக் குழுத்தலைவர் சுட்டுக்கொலை [30 - April - 2007] -கே.பி.மோகன்- கொழும்பு வடக்கை உலுக்கி வந்த பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ெகாழும்பு -15, புளூமெண்டால் வீதியில், ரயில்வே திணைக்கள விடுதித் தொகுதிக்கு அருகாமையில் உள்ள அவரது வீட்டில் வைத்தே இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ரோலண்ட் பிரின்ஸ் கொலம்ஸ் (வயது 34) என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டதாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் அத்துல தெரிவித்தார். வாகனமொன்றில் வந்த இனந்தெரியாத ஆயுதக் குழுவொன்றே இவர் மீது சரமாரியாக துப்பாக்கி …
-
- 7 replies
- 3.6k views
-
-
தயவை நாடியோர் தடம் புரள்கின்றனர் "இது எந்தப் பேயின் சட்டம்? இது என்ன சட்டம்? இதன் பலாபலன் தான் என்ன? உதுதானா ஜனநாயகம்? உதுதானா மனித உரிமை? இது தானா நீங்கள் கூறும் ஐந்து நட்சத்திர ஜனநாயகம்? தினமும் வானொலியில் போதிக்கும் தர்மம் இது தானா? சனிக்கிழமைகளில் ஓதும் வேதம் இதுதானா? இந்த நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக - இந்த நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக - கடவுளின் பெயரால் ராஜிநாமா செய்யுமாறு இந்த அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இது 5.01.1991 அன்று மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும். உண்மையில் அன்று மகிந்த ராஜபக்ஷ போன்றோர் மனித உரிமைகள் பற்றிப் பேசி சர்வதேச மனித உரிமை அமைப்பின் கவனத்தை இலங்கையை நோக்கி ஈர்…
-
- 0 replies
- 826 views
-
-
புலிகளினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை அனுமதிக்க முடியாது தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் முக்கிய பொருளாதார மையங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதல்களையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; எமது நாட்டின் பாதுகாப்பு நிலைமை நாளுக்குநாள் பாதுகாப்பற்ற தன்மையை நோக்கிச் செல்கிறது. புலிகளை கண்டிப்பதன் மூலம் இந்நிலையிலிருந்து மீள முடியாது. அத்தோடு புலிகளின் இலக்குகளைத் தாக்க முடியவில்லையே என்பதனை காரணம் காட்டி அரசியல் இலாபம் தேட முயல முடியாது. அத்தோடு …
-
- 0 replies
- 841 views
-
-
"வெசாக் வாரத்தை முன்னிட்டு மோதல் தவிர்ப்பை கடைப்பிடிக்க வேண்டுகோள்" வெசாக் வாரத்தினை முன்னிட்டு மோதல் தவிர்ப்பினைக் கடைப்பிடித்து அமைதி நிலவ வழிசெய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவசர கடிதங்களை சர்வமத தர்மசக்தி நிதியம் அனுப்பியுள்ளது. இந்நிதியத்தின் கூட்டம் நேற்று போருக்கெதிரான முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கிணங்க இக்கடிதத்தினை நிதியத்தின் இணைப்பு செயலாளர் வண.வெலிகம தம்மிஸ்வர தேரோ கையொப்பமிட்டு அனுப்பியுள்ளார். ஜனாதிபதியின் செய்தி அவரது செயலாளருக்கும் விடுதலைப் புலிகளுக்கான செய்தி சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஊடாக வும்அனுப்பிவைக்கப்பட்டுள்ள
-
- 7 replies
- 1.8k views
-
-
புலிகள் மீது தமிழக மீனவர்களே கூறாத குற்றச்சாட்டை தமிழக பொலிஸ் ஆணையர் கூறுவது யாரை பாதுகாக்க? விடுதலைப் புலிகள் மீது தமிழக மீனவர்களே கூறாத ஒரு குற்றச்சாட்டை திடீரென தமிழக பொலிஸ் ஆணையாளர் கூறுவது ஏன் எனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், எதையோ மூடி மறைக்க யாரையோ காப்பாற்ற பொலிஸ் ஆணையாளரை பயன்படுத்துவது அவரின் பதவிக்கே இழுக்கைத் தேடித் தருமெனவும் கூறியுள்ளார். குமரி மாவட்ட மீனவர்களை விடுதலைப் புலிகளே சுட்டதாக தமிழக பொலிஸ் ஆணையாளர் முகர்ஜி தெரிவித்த குற்றச்சாட்டைக் கண்டித்தே இவ்வாறு தெரிவித்த பழ.நெடுமாறன் மேலும் கூறியதாவது; தமிழக மீனவர்களைச் சுட்டது விடுதலைப் புலிகள் என்றும் காணாமல் போன 12 மீனவர்கள் விடுதலைப் புலிகளின் காவலில் …
-
- 24 replies
- 5.4k views
-
-
வெள்ளவத்தை கடலில் சந்தேகத்திற்கிடமான படகுகள் மீது படையினர் எச்சரிக்கை வேட்டு கொழும்பு, வெள்ளவத்தை கடற்பரப்பினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமான இரு சிறிய படகுகள் நுழைய முற்பட்டபோது, கடற்படையினர் எச்சரிக்கை வேட்டுகளை தீர்த்து அவற்றை பின்வாங்கச் செய்துள்ளனர். இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலைய அதிகாரியொருவர் தெரிவிக்கையில்; வெள்ளவத்தை பாதுகாப்பு வலய கடற் பிரதேசத்தினுள் இரு சிறிய படகுகள் நுழைய முற்பட்டுள்ளன. இதை அவதானித்த கடற்படையினர் எச்சரிக்கை வேட்டுகளைத் தீர்த்து படகுகளை பின்வாங்கச் செய்துள்ளனர். படகுகள் இரண்டும் மீன்பிடி படகுகளெனவே கருதப்படுகிறது. மீனவர்கள் பாதுகாப்பு வலய எல்லை தெரியாமல் நுழைந்திருக்க வேண்டும…
-
- 1 reply
- 1.1k views
-
-
நோர்வே தூதர் பிரட்ஸ்கார் நாளை வன்னி சென்று புலிகளை சந்திப்பார் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார் நாளை 1 ஆம் திகதி வன்னி செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 23 ஆம் திகதி பிரட்ஸ்கார் வன்னிக்குச் செல்லவிருந்த போதிலும் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி கடைசி நேரத்தில் இந்த விஜயத்தை அரசு ரத்துச் செய்திருந்தது. எனினும், வன்னிக்கான பயணத்தை கைவிடுமாறு பிரட்ஸ்காரை தாங்கள் கேட்கவில்லையெனவும் அவராகவே இதனைக் கைவிட்டிருந்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை மறுத்த ஹான்ஸ் பிரட்ஸ்கார், வன்னிக்குச் செல்ல வேண்டாமெனவும் பாதுகாப்பு பிரச்சினைகளிருப்பதாகவும் அரசு கூறியதாலேயே தனது பயணம் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்திருந…
-
- 11 replies
- 2.6k views
-
-
புலிகளின் எந்தச் சவாலையும் சந்திப்பதற்கு அரசு தயார்' விடுதலைப் புலிகளால் விடுக்கப்படும் எந்தவொரு சவாலையும் சந்திப்பதற்கு முழுஅளவில் தயாராகவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை கொழும்பிலும் அதனை அண்மித்த புறநகர்ப் பகுதியிலும் புலிகள் நடத்திய வான் தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே இந்த ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்; "விடுதலைப் புலிகளால் விடுக்கப்…
-
- 1 reply
- 1k views
-
-
பாதுகாப்புக்காக மின் துண்டிக்கும் சமயங்களில் ஜெனரேட்டர்களை இயக்காதீர் என அறிவுறுத்து உல்லாச விடுதிகளில் இதனால் பெரும் திண்டாட்டம் கொழும்பு, ஏப். 30 பாதுகாப்புக் காரணங்களுக்காக அரசு கொழும்பு நகரில் இருட்டடிப்பை (மின்வெட்டு) செய்யும் வேளைகளில் உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் உட்பட தொழில் நிறுவனங்களும் தமது ஜெனரேட்டர்களை இயக்கி வெளிச்சமேற்படுத்த முற்படக்கூடாது. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனால் உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் பலமணி நேரங்கள் இருளில் மூழ்கடிக்கப்படுவதால் உல்லாசப் பயணிகளுக்குப் பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி உள்ளதோடு, உல்லாசப் பிரயாணத் துறையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழீழ விடுதலைப் …
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன்: வைகோ. ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன் என்று வைகோ தெரிவித்து வரும் நிலையில் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருட்டிணசாமி வலியுறுத்தினார். அதேபோல் வைகோவை கைது செய்ய வேண்டும் என்று இந்திய அமைச்சர் இளங்கோவனும் கருத்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "மாலைமலர்" நாளிதழுக்கு வைகோ அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது: முதல்வரை கிருட்டிணசாமி சந…
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கை விவகாரத்தில் தீர்க்கமான முடிவெடுக்கும் வழிவகைகளை பரிசீலிக்கிறது புதுடில்லி. இலங்கை இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள இருதரப்பினரும் போர் மூலமே முடிவு காண்பது என்ற தீர்மானத்துக்கு வந்துள்ள இன்றைய இருள் சூழ்ந்த காலகட்டத்தில் என்ன விதமான நடவடிக்கையில் தான் இறங்க முடியும் என்பது பற்றி மிக விரைவில் இந்திய அரசு ஒரு முடிவுக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பல்வேறு விதமான யோசனைகள் தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று புதுடில்லிச் செய்தி வட்டாரங்கள் தகவல்வெளியிட்டிருக்கின்றன. இனப்பிரச்சினை விரிவடைந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் வெகுவாகப் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதில் இந்தியா அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிகின்றது…
-
- 1 reply
- 1.2k views
-
-
அமெரிக்காவின் ஆலோசனைகள் மூலம் வான்புலிகளை முறியடிக்க அரசு முயற்சி: கொழும்பு ஊடகம். சிறிலங்காவின் ஆயுதப்படைகளின் வலிமையை ஆராய்ந்த அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம் 2002 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையை தற்போது மகிந்த அரசு தேடி எடுத்து செயற்படுத்த முற்பட்டுள்ளதாக சன்டே ரைம்ஸ் வாரஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். சண்டே ரைம்ஸ் ஏட்டில் இக்பால் அத்தாஸ் எழுதியுள்ளதாவது: பாலாவியில் உள்ள பாதுகாப்பு அரனில் கடமையாற்றிக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் இனந்தெரியாத 3 விமானங்களை கண்டுள்ளனர். அவை தென்பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தன, ஒரு விமானம் வெளிச்சத்துடன் அதிக உயரத்திலும், இரு வி…
-
- 0 replies
- 922 views
-
-
பிரித்தானிய உள்துறைச் செயலர் தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு அண்மையில் பிரித்தானிய தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் பிரித்தானிய உள்துறைச் செயலர் மேன்மை தங்கிய Dr. ஜோன் றெய்ட் ஐ சந்தித்திருந்தனர். இச் சந்திப்பில் இலங்கைத்தீவின் நெருக்கடி நிலை தொடர்பில் விவாதித்த தமிழ் பிரதிநிதிகள் சிறீலங்கா அரசின் பிரித்தானிய தமிழர் மீதான விசமப் பிரச்சாரம் தொடர்பின் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். இது பற்றி கருத்து தெரிவித்த உள்துறைச் செயலர் பிரித்தானிய ஊடகங்களில் வெளியான கடனட்டை மோசடி தொடர்பான செய்திக்கும் பிரித்தானிய அரசுக்கும் தொடர்பெதுவும் இல்லை என்றும் இச் செய்தியை பிரபலப்படுத்தும் தலையீட்டு அழுத்தங்கள் எதனையும் அரசு பிரயோகிக்கவில்லை என்றும் தெட்டத்தெளிவாக தெரிவித்தார். இ…
-
- 0 replies
- 748 views
-
-
ஈழமுரசுப் பத்திரிகையில் வந்த ஆக்கம் வாசிக்காதவர்களுக்காக இங்கே இணைக்கப்படுகிறது. சிறிலங்காவின் புலனாய்வுக்கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படுகின்றது. -ச.சங்கரன்- உலகில் பெண்கள் சிறந்த ஒற்றர்களாக விளங்குகின்றனர் அவர்கள் ஆண்களிடம் இருந்து புலனாய்வு தகவலகளை தந்திரமாகப் பெறுகின்றனர் அந்த வகையில் இலங்கை அரச புலனாய்வு நிறுவனமும் பெண் உளவாளிகளின் எண்ணிக்கையினை மிக வேகமாக அதிகரித்துள்ளது. சிறிலங்காவில் பெண் புலனாய்வாளர்களின் பங்கு 1998ம் அண்டு மொத்தப்புலனாய்வு மனித வளத்தில் 12வீதமாக இருந்தது என்றும், இது 2007ம் ஆண்டு 33வீதமா அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகின்றது. சிறிலங்கா அரசாங்கம் தமது பெண் புலனாய்வாளருக்கான ஆட்கள் தெரிவினை …
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கை செய்தி ஆய்வாளர் டி.பி.எஸ். ஜேயராஜ் செவ்வி இதன் மூலம் புலிகள் சொல்ல வருவது ஓர் ஆணித்தரமான அரசியல் ராணுவ செய்தி. இலங்கை அரசாங்கம் சொல்லிவருவது போல நாங்கள் ஓரங்கட்டப்படவில்லை, ஓரங்கட்டப்படவும் மாட்டோம் என்பது தான் அந்தச் செய்தி என்கிறார் இலங்கை செய்தி ஆய்வாளர் டி.பி.எஸ். ஜேயராஜ். செவ்வி: ஆணித்தரமான ஒரு செய்தியை தென்னிலங்கை மக்களுக்கு வழங்குவதே புலிகளின் நோக்கம் டி.பி.எஸ். ஜேயராஜ் அரசாங்கம் கிழக்கில் படையினர் கண்ட வெற்றிகளை வைத்துக் கொண்டு தென்னிலங்கை மக்கள் மத்தியில் தாங்கள் புலிகளை ஓரங்கட்டி விட்டோமென்றும், புலிகள் வசம் ஓரிரு சிறு விமானங்கள் தான் உள்ளன, அவற்றை நாங்கள் விரைவில் இரண்டிலொன்று பார்த்து விடுவோம் என்றும் சொல்லி வரும் வ…
-
- 3 replies
- 1.9k views
-
-
விடுதலைப் புலிகளின் செயல்-கருணாநிதி அதிர்ச்சி ஏப்ரல் 29, 2007 சென்னை: கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 12 பேரை விடுதலைப்புலிகள் கடத்திக் கொண்டு போயிருக்கும் செயல் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சட்டசபையில் விடுதலைப்புலிகள் பற்றி காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, விடுதலைப்புலிகளை ஆதரித்து தான் தீருவோம், எங்களை எது வேண்டுமானாலும் செய்யுங்கள், ஒரு கை பார்க்கிறோம் என்ற அறை கூவல் பிரபலமான நாளிதழில் வந்திருந்தது. மேலும் அதில் விடுதலைப்புலிகளை நாங்கள் என்றும் ஆதரிப்போம், இலங்கை இறுதி போர் நடந்து வருகின்றது. அதை ஆதரிப்போம் என்றிருக்கிறது. அ…
-
- 0 replies
- 583 views
-
-
மங்களவை வீழ்த்திய மகிந்தவின் "இடியப்பம்- மது" [ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2007, 22:32 ஈழம்] [க.திருக்குமார்] அனைத்துலகத்திலும் உள்ளுரிலும் சிறிலங்கா அரசுக்கு தோன்றியுள்ள நெருக்கடிகள் காரணமாக பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரான மங்களவை வீட்டுக்கு அழைத்து இடியப்பமும் மதுவும் கொடுத்து அரவணைத்துள்ளார் மகிந்த ராஜபக்ச என்று கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது. சண்டே லீடர் வார இதழின் அரசியல் ஆய்வில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தான் எந்த நேரமும் வெடித்துச் சிதறும் எரிமைலை ஒன்றின் மீது இருப்பது போல் உணர்ந்துள்ளார். நாட்டின் பல பிரிவுகளில் தோன்றியுள்ள நிர்வாகச் சீர்கேடுகள், மனித …
-
- 0 replies
- 1.1k views
-
-
இரு வெளிநாட்டு பயணிகள் போக்குவரத்து விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம். இரண்டு வெளிநாட்டு பயணிகள் வான்போக்குவரத்து சேவை நிறுவனங்கள் கொழும்புக்கான சகல விதமான போக்குவரத்துகளையும் இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன. ஹொங் கொங்கை தளமாக கொண்டு இயங்கும் கத்தே பசுபிக், மத்திய கிழக்காசியாவை தளமாக கொண்டு இயங்கும் எமிரேற்ஸ் ஆகிய விமானங்களே மறு அறிவித்தல் வரை தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக இவ்நிறுவனங்கள் அறிவித்துள்ளன -Pathivu-
-
- 5 replies
- 2.2k views
-
-
யாழ் தீவகத்தில் சிறிலங்கா இராணுவத்தால் 6 அப்பாவி பொதுமக்கள் சுட்டுப் படுகொலை. யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் உள்ள வேலணை முடிப்பிள்ளையார் கோயிலடியில் சிறிலங்கா இராணுவத்தினரால் இன்று அப்பாவி பொதுமக்கள் 6 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வேலணை முடிப்பிள்ளையார் கோயில் தேர்முட்டியில் இருந்த 6 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிறிலங்கா இராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்தனர். அதன் பின்னர் கோயிலின் பூசகரை சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் சடலங்கள் யாழ். போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. -Puthinam-
-
- 4 replies
- 1.7k views
-