ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
சர்வதேச மன்னிப்புச் சபையின் அடுத்த நடவடிக்கை என்ன? உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு கிண்ணம் கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது. இக்கட்டுரையை நீங்கள் படிக்கும்போது முடிவு தெரிந்திருக்கும். உண்மையிலேயே மெச்சப்படவும் பெருமைப்படவும் வேண்டிய விஷயமே. ஆனால், இலங்கை கிரிக்கட் அணிக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை செய்யும் பிரசாரம் நியாயமா என்ற வாதப் பிரதிவாதங்கள் காரசாரமாக நடந்து வருகின்றன. இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த மன்னிப்புச் சபையின் சீற்றம் கிரிக்கெட் அணி மீது சரியான தருணத்தில் திசை திருப்பப்பட்டிருக்கிறது. இலங்கை அரசு மன்னிப்புச் சபை மீது தாளாத ஆத்திரத்தில் கொதிக்கிறது. உலக சரித்திரம் தெரியாத பலரும் கிரிக்கெட்டும் அரசியலும் இருவேறு துருவங்கள்; …
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழ்ப் பிரச்சினைத் தீர்வுக்கு ஜனாதிபதிக்கு உதவும் வகையில் தமிழ் அபிப்பிராய உருவாக்கம் தொடங்கியுள்ளதா? -(பீஷ்மர்) [29 - April - 2007] ஜனாதிபதி அவர்களுக்கு நிச்சயமாக இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று, அவர் சிங்களத்துவத்தின் ஏகோபித்த முன்வைப்பு என்பதாகும். இன்றும் தான் ஜே.வி.பி., ஹெல உறுமயவின் எதிர்க்கப்பட முடியாத ஜனாதிபதியாவார். அதாவது சிங்களத்துவ நிலை பாடுகளுக்கு அடிப்படையில் அவர் முரண்படமாட்டார் என்பதற்கு சார்பான அபிப்பிராயமுண்டு. மற்றைய முகம், அவர் தமிழர்களின் பிரச்சினையையும் உணர்ந்தவர் என்ற நிலைப்பாடாகும். அமைச்சரவை நிலையில் ஒரேயொரு வட, கிழக்கு தமிழ் அமைச்சர் தான் இருந்தாலும் அவர் விடுதலைப் புலிகளை சாராத வட, கிழக்கு கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ளவர். இந்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியத் தமிழர்களை பிச்சைக்காரர்போல் நடத்துகிறார் மகிந்த: தொண்டமான் குற்றச்சாட்டு [ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2007, 11:35 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் உள்ள இந்திய வம்சாவழித் தமிழர்களான மலையகத் தமிழர்களை பிச்சைக்காரர்களைப் போல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நடத்துவதாக மகிந்தவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் குற்றம்சாட்டியுள்ளார். அரச தலைவராக சந்திரிகா குமாரதுங்க பொறுப்பில் இருந்த போது ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின்படி மலையக பாடசாலைகளில் 300 ஆசிரியர்களை நியமனம் செய்து அதற்கான நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு மகிந்தவின் அலரி மாளிகையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வு நடைபெறுவது குறித…
-
- 14 replies
- 2.3k views
-
-
சேது சமுத்திரக் கால்வாய்த்திட்டம் முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்தே இந்தியாவின் சுற்றுச்சூழல் அக்கறையாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இலங்கையில் அத்திட்டம் பற்றிய கவலைக்கான காரணங்கள் பல. எனினும், ஒரு தமிழ் இடதுசாரிப் பத்திரிகையில் மட்டுமே அது பற்றிய சமூக அக்கறை மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்பட்டது. சில ஆங்கில ஏடுகளிலும் சூழலியல் பற்றிய அக்கறையுள்ள சிலர் ஒரு சில கட்டுரைகளை எழுதியிருந்தனர். கடற்படையினரின் தலைமைப்பீடத்தில் இலங்கையின் இறைமைக்கு இக் கால்வாய் ஒரு மிரட்டலாக அமையும் என்ற கவலையைத் தெரிவித்திருந்தாலும், அது பற்றிப் போதிய அழுத்தம் இல்லாததாலோ என்னவோ, இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் காத்திரமான எதிர்ப்பு எதையுமே தெரிவிக்கவில்லை. கண்துடைப்பாக இங்கே, இலங்கை…
-
- 1 reply
- 1.3k views
-
-
வான் புலிகளை எதிர்கொள்ள அரசு வகுக்கப் போகும் வியூகம் என்ன? வான் புலிகளின் மீள் வருகைக்காக காத்திருந்த படையினரால் வான் புலிகள் மீண்டும் வந்தபோது எதுவும் செய்ய முடியவில்லை. வான் புலிகளின் தாக்குதல் ஆற்றலை முறியடிப்பதற்காக வன்னியில் விமானப் படையினர் தொடர்ச்சியாக நடத்தி வந்த தாக்குதல்களும் படைத் தளங்களில் பொருத்தப்பட்டிருந்த வான் பாதுகாப்பு பொறி முறையும் பலனளிக்கவில்லை. கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது அதிரடித் தாக்குதலை நடத்தியது போல் பலாலி கூட்டுப் படைத்தளம் மீதும் வான் புலிகள் இரவு நேரத்தில் பலத்த தாக்குதலை நடத்திவிட்டு பாதுகாப்பாக தங்கள் தளத்திற்கு திரும்பியதுடன், கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது மீண்டுமொரு தாக்குதலை நடத்த முயற்சித்ததாகவும் கூறப்படு…
-
- 9 replies
- 3.2k views
-
-
படுவான்கரையில் இடம் பெயர்ந்த மக்களின் வீடுகள் உடைக்கப்பட்டு உடைமைகள் சூறை மட்டக்களப்பு, படுவான்கரைப் பகுதியில் இராணுவ நடவடிக்கையால் மக்கள் இடம் பெயர்ந்த அனைத்துப் பகுதிகளிலும் அவர்களது வீடுகள் உடைக்கப்பட்டு உடமைகள் முற்றாகச் சூறையாடப் பட்டுள்ளதுடன் சகல அரச அலுவலகங்களும் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வெல்லாவெளி பிரதேச செயலர் பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ள மீள் குடியேற்ற நடவடிக்கை தொடர்பாக வெள்ளிக்கிழமை படுவான்கரைப் பகுதிக்குச் சென்று திரும்பிய அரச அதிகாரிகளே இதனைத் தெரிவித்துள்ளனர். மாவட்ட மேலதிக அரச அதிபர் மகேசன் தலைமையில் சென்ற உயர் மட்ட அதிகாரிகள் அங்குள்ள நிலமைகளை பார்வையிட்டுள்ளனர். படுவான்கரையில் பாலையடிவெட்டை, வெல்லாவெளி கண்டுமணி வித்த…
-
- 0 replies
- 757 views
-
-
கரவெட்டியில் இளைஞர் கடத்தல் கரவெட்டி குஞ்சர்கடைப் பகுதியில் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட வெள்ளைவான் கும்பல், காயமடைந்த குறித்த இளைஞனை கடத்திச் சென்றுள்ளது. நேற்றுக்காலை 7.30 மணியளவில் குறித்த நபர் யாழ்.பருத்தித்துறை வீதியூடாக துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, இது தொடர்பாக தமக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லையென யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தினக்குரல்
-
- 0 replies
- 677 views
-
-
வங்காலைப் பகுதியில் கைதான 2 மீனவர்களை காணவில்லை மன்னார் வங்காலைப் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் படையினரால் கைது செய்யப்பட்ட இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இவ்விருவரும் மோட்டார் சைக்கிளொன்றில் வங்காலை - நானாட்டான் வீதியில் வங்காலையிலிருந்து மாவிலங்கேணி நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் தோமஸ்புரி பகுதியிலுள்ள இராணுவ முகாமில் வழிமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இது பற்றி கேள்வியுற்ற இருவரதும் உறவினர்கள் உடனடியாக இராணுவ முகாமுக்குச் சென்று விசாரித்த போது, அது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாதெனவும் தாங்கள் எவரையும் கைது செய்யவில்லையென்றும் கூறியுள்ளனர். இதேநேரம், வங்…
-
- 0 replies
- 681 views
-
-
தடை தளர்த்தப்பட்ட சிறிது நேரத்தில் கடலுக்கு சென்ற மீனவர் மீது ஷெல் தாக்குதல் - யாழ். கடல் நீரேரியில் ஒருவர் பலி யாழ். கடல் நீரேரியில் நேற்று சனிக் கிழமை காலை பெருமளவு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி நடத்தப்பட்ட பலத்த ஷெல் தாக்குதலில் மீனவரொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 11 நாட்களுக்கு முன் கடல் நீரேரிப் பகுதியில் இடம்பெற்ற மோதலொன்றையடுத்து நேற்று வரை மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்றுக்காலை மீண்டும் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து கொழும்புத்துறை, பாஷையூர் மீனவர்கள் பெருமளவானோர் தொழிலுக்குச் சென்றிருந்தனர். கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே கரையோர பகுதிகளிலிருந்து கடல் நீரேரி நோக்கி …
-
- 0 replies
- 645 views
-
-
பலாலி வான் தாக்குதல் குறித்து அரசாங்கம் கண்காணிப்புக் குழுவிடம் முறையிடவில்லை -பேச்சாளர் ஒமர்ஸன் கூறுகிறார் `பலாலி படைத்தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலையடுத்து அரசாங்கம் சம்பவம் பற்றி எங்களிடம் முறையிடவுமில்லை. நாங்கள் அங்கு செல்ல அனுமதி கேட்கவுமில்லை' என இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோபினூர் ஒமர்ஸன் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலின் பின்னர் பலாலி படைத்தளம் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததாவென கேட்ட போதே ஒமர்ஸன் இவ்வாறு கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை புலிகள் நடத்திய இத் தாக்குதலினால் மயிலிட்டி பகுதியில் 6 படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 13 பேர் காயமடைந்ததாகவ…
-
- 0 replies
- 551 views
-
-
கொழும்பின் நுழைவாசல்களை வழிமறித்து தீவிர சோதனை - வெடிகுண்டுடன் வாகனம் வந்திருப்பதாக சந்தேகம் கொழும்பு மாநகரின் சகல நுழைவாயில்களும் நேற்று சனிக்கிழமை அதிகாலை முதல் வழிமறிக்கப்பட்டு தலைநகருக்குள் நுழைந்த அனைத்து வாகனங்களும் பயணிகளும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டதால
-
- 0 replies
- 585 views
-
-
சிறீலங்கா அரச புலனாய்வுப் படையினரால் யாழில் உதயன் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் செய்திகள் தெரிவிக்கின்றது
-
- 12 replies
- 2.9k views
-
-
"மனிதஉரிமை மீறல்களை கட்டுப்படுத்தாமல் சர்வதேசத்திடம் உதவிகளை எதிர்பார்க்கும் சிறிலங்கா'' -சி.ஆதித்தன்- இலங்கைத்தீவில் சமாதான புரிந்துணர்வு ஒப்பந்தம் விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டு தமிழ் சிங்களப் புத்தாண்டு தினத்துடன் 1878 நாட்களாகின்றன. இந்த நீண்ட காலப்பகுதியில் தமிழ் மக்கள் சமாதானப் முன்னெடுப்பில் நம்பிக்கை வைத்து புதிய வசந்தத்திற்காக எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருந்தவைகள் யாவும் நிறைவேறியனவா? இழந்துவிட்ட வசந்த காலத்தை, காணாமல் போன கணவனை, தூக்கிச் செல்லப்பட்ட பிள்ளைகளை, இழந்துவிட்ட பூர்வீக நிலத்தை, சொத்துக்களை, சுகங்களை, யுத்த மோகத்தால் நிறைவேறாத கனவுகளையென தமிழ் மக்கள் ஏராளமான வேதனைகளை மனதில் சமந்து புரிந்துணர்வு ஒப…
-
- 0 replies
- 555 views
-
-
''இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள்'' -நா.யோகேந்திரநாதன்- இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையிலான கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அடிக்கடி இடம் பெறுவது ஒரு போர்கால நடைறையாகத் தொடர்ந்து வருகிறது. இவற்றிற்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்துவதும், தமிழக அரசு மத்திய அரசுக்கு முறைப்பாடு செய்வதும், நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு வாக்களிப்பதும் வழமையான சம்பவங்கள். ஆனால், மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படவில்லை அது மட்டுமன்றி அண்மைக்காலத்தில் இடம் பெற்ற தாக்குதல்களில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுமளவிற்கு நிலைமைகள் மோசமடைந்தன. இதன் காரணமாக தமிழகமே கொதித்தெழுந்தது. மத்திய அரசு கூட உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டிய அளவிற்…
-
- 0 replies
- 950 views
-
-
''விடுதலைப்புலிகளை இலகுவாக கையாள முடியாமலிப்பதே சிங்கள அரசுகளுக்குள்ள பிரச்சினை'' -மனோகரன்- அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தீர்மானிக்க முடியாத ஒரு இறுக்கமான சூழல் இப்போது சிறிலங்காவின் அரசியலில் ஏற்பட்டுள்ளதாக அரசியல் பத்தி எழுத்தாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது தெரிவித்தார். இன்றைய சூழலில் அவர் சொல்வது ஒருவகையில் சரிதான். சிறிலங்காவில் இப்பொழுது அரசியலும் தேக்கத்துக்கு உள்ளாகித்தானிருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளும் தேக்கத்துக்கு உள்ளாகித்தானிருக்கிறது. ஏன் இராணுவ நடவடிக்கைகளும் தேக்கத்துக்கு உள்ளாகித்தானிருக்கின்றது. அரசியலைப் பொறுத்து இந்த மாதிரித் தேக்கங்கள் சிலபோது ஏற்படுவது உண்டு. ஆனால், அது நாட்டைப் பாதிக்காத வகையில் ஒரு இடைமா…
-
- 0 replies
- 1k views
-
-
வான்புலிகளின் தாக்குதலால் கட்டுநாயக்கவிலிருந்து வான்படைத் தளம் மாற்றம்? தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வர்த்தக வானூர்தி நிலையத்தை அண்மித்த வான்படைத் தளத்தை வேறுபகுதிக்கு சிறிலங்கா அரசாங்கம் மாற்றக்கூடும் எனத் தெரிகிறது. கொழும்பு ஆங்கில ஊடகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி விவரம்: கட்டுநாயக்கா வான்படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் வான்தாக்குதலை மேற்கொண்டு ஒரு மாதம் சரியாக கடந்த நிலையில் மீண்டும் கட்டுநாயக்கவில் கடந்த வியாழக்கிழமை தாக்குதல் அச்சம் ஏற்பட்டிருந்தது. மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை பலாலி உயர் பாதுகாப்பு தளத்தையும் வான்புலிகள் தாக்கிவிட்டு திரும்பியுள்ளனர். இந்…
-
- 1 reply
- 1.7k views
-
-
பிடுங்கி எடுப்பதைத் தவிர தமிழருக்கு வேறு ஏது வழி? தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் இரு பிரதான சிங்களக் கட்சிகளுமே "ஒரே குட்டையில் ஊறிய மட்டடைகள் தாம்" என்று சில வாரங்களுக்கு முன்னர் இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தோம். அதை உறுதிப்படுத்துவது போல இருகட்சிகளுமே செயற்படுகின்றன. பௌத்த சிங்களப் பேரினவாதிகளை அணி திரட்டி, அவர்களின் ஐக்கியத்தைத் தனது வலிமையாக்கிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி காலங்காலமாகத் தான் பின்பற்றி வரும் சிங்களத் தேசியவாத இரும்புப் பிடியில் இருந்து சற்றேனும் விலகுவாதாக இல்லை. அதன் சிங்களத் தேசியக் கடுங்கோட்பாட்டுப் பிடிக்கு மேலும் வலுச் சேர்த்திருக்கின்றது மஹிந்த ராஜபக்ஷவின் திமிர்த்தனத் தலைமை. இ…
-
- 0 replies
- 1.4k views
-
-
Colombo in dark following airstrike alarm [TamilNet, Saturday, 28 April 2007, 20:11 GMT] Power supply was cut off in Colombo at 1:15 a.m. when the city was watching the Cricket world cup final match. Sri Lanka Air Force personnel opened fire on the air. Details are not available at the moment. Meanwhile, at least two Sri Lanka Air Force bombers had dropped bombs in Visuvamadu area in Vanni at 1:15 a.m. Casualty details were not available. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22020 கொழும்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாவும் துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. உண்மை நிலை தெரியவில்லை.
-
- 70 replies
- 22.1k views
-
-
மகிந்த முகம் கொடுக்கும் யுத்தங்கள் -வேலவன்- சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு சட்டத்தரணி. 1994 ஆம் ஆண்டுக்கு முன் அதாவது அவர் ஆளும் கட்சி பா.உ. ஆக முன் 17 வருடங்கள் மனித உரிமை அமைப்புக்களுடன் பலமான தொடர்புகளைக் கொண்டிருந்தவர். அதாவது ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக் காலத்தில் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தரணிகள் மையத்தின் இயக்குநர். காணாமல் போனோரின் பெற்றோர் சங்கத்தலைவர். ஆனால் முன்னாள் சனாதிபதிகள் ஜே.ஆர். ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரிலும் அதிகமாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அவர் மீதுதான் எழுந்துள்ளன. அதிலும் இது தொடர்பில் ஏனையோர் சந்தித்த சர்வதேச அழுத்தங்களை விட அதிகமான அழுத்தங்கள் இவர் மீது போடப்படுகின்றன. முன்னாள…
-
- 0 replies
- 1k views
-
-
வான்படையினரின் வான் எதிர்ப்புத் தாக்குதலால் அனைத்துலக வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற அவலம் [சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2007, 21:42 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா வான்படைத் தளத்தின் மீது கடந்த வியாழக்கிழமை இரவு விடுதலைப் புலிகள் வான் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் காரணமாக அதன் அருகில் இருந்த அனைத்துலக வானூர்தி நிலையம் அவசரமாக மூடப்பட்டது. அப்போது வான்படையினரின் சரமாரியான வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி வேட்டுக்களால் அங்கிருந்த பயணிகள் அச்சமடைந்து சிதறியோடியுள்ளனர். பயணிகள் செல்லும் பகுதியில் பெரும் சத்தங்களும், நெருக்கடிகளும் ஏற்பட்டதுடன் பெண்களும், ஆண்களும், சிறுவர்களும் வானூர்தியில் ஏறும் பகுதிகளில் இருந்து சிதறி ஓடி பயணிகளை பரிசோதனை செய்யும் பகுதிக்கு செ…
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளின் வானூர்திகளை தாக்கியழிப்பதற்கு எந்நேரமும் தயாராகவே இருக்கின்றோம்: சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் [சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2007, 06:42 ஈழம்] [ந.ரகுராம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தக்கியழிப்பதற்காக சிறிலங்கா வான்படையினர் எந்நேரமும் தயாராகவே இருக்கின்றனர் என்று சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். வான்தாக்குதல் எச்சரிக்கையடுத்து கட்டுநாயக்க வானூர்தி நிலையம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணிநேரம் செயலிழந்தது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகளிடம் இருப்பதாக கூறப்படுகின்ற இலகு ரக வானூர்திகளை தாக்கியழிப்பதற்கு சிறிலங்கா வான்படையினர் எந்நேரமும் தயாராகவே இருக்கின்றனர்…
-
- 0 replies
- 590 views
-
-
இலங்கை வாழ் முஸ்லிம்களின் இனவிகிதாசாரத்தை விட வெலிக்கடை சிறையிலுள்ள முஸ்லிம்களின் விகிதாசாரம் அதிகம்' [28 - April - 2007] * கவலையளிக்கும் விடயம் என்கிறார் தென் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் -கம்பளை நிருபர்- இலங்கை வாழ் முஸ்லிம்களின் இன விகிதாசாரத்தை விடவும் வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள முஸ்லிம்களின் விகிதாசாரம் அதிகம் என்பது மிகவும் வருந்தத்தக்கதாகும். இது சமூகத்தின் உயர்வையன்றி வீழ்ச்சியையே சுட்டிக் காட்டுகின்றது என்று தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் ஏ.ஜி.ஹுசைன் இஸ்மாயில் தெரிவித்தார். கெலி ஓயா, நியுஎல்பிடிய அஷ்-ஷம்ஸ் வித்தியாலயத்தில் மஷாயிகுமார் சந்தூரிக் கமிட்டியால் நிறுவப்பட்டுள்ள கணினி நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு…
-
- 0 replies
- 995 views
-
-
பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் போர்வையில் மனித உரிமை மீறல் [28 - April - 2007] * குரோஷியா சர்வதேச ஜனநாயக சங்க மாநாட்டில் ரணில் -எம்.ஏ.எம்.நிலாம்- நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் நாளாந்தம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டில் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜனநாயகமும் மனித உரிமைகளும் அரசாங்கத்தால் படுமோசமாக மீறப்பட்டு வருவதாகவும் ரணில் விக்கிரமசிங்க விசனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் மனித உரிமை மீறலுக்கு எதிராக வாய் திறந்தால் அவர்கள் சிறையில் தள்ளப்படக் கூடிய அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்கின்றது எனவும் அவர் குறிப்…
-
- 0 replies
- 568 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்மாதிரியை பின்பற்ற ஜனாதிபதி ராஜபக்ஷ முன்வருவாரா? [28 - April - 2007] உலகக் கிண்ணத்திற்கான ஒன்பதாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று பாபடோசில் நடைபெற இருக்கின்றது. இதில் இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் களத்தில் இறங்குகின்றன. இலங்கை அணியை உற்சாகப்படுத்தி வெற்றி பெறச் செய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே நேரில் அங்கு சென்றுள்ளார். அத்துடன் பல அமைச்சர்கள், அதிகாரிகள், பிரமுகர்கள், விளையாட்டுத் துறை அமைச்சின் செலவில் அங்கு ரசிகர்களாகச் சென்றுள்ளனர். இலங்கையின் அரசியல் ஆடுகளம், பிரச்சினைகள் நிறைந்து எதிர்விளைவுகள் மேலோங்கி சாதகமற்ற நிலையில் இருந்து வரும் வேளை உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் ஆடுகளம் இலங்கைக்குச் சாதகமான…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஸ்ரீலங்காப் படைகளின் மனிதவுரிமை மீறல்களுக்கு எதிராக தென்னாபிரிக்கத் தமிழ் அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர் ஈழத் தமிழர்களிற்கு மீது ஸ்ரீலங்கா அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதவுரிமை மீறல்களுக்கு எதிராக தென்னாபிரிக்கத் தமிழ் அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்காவின் சமூகசேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பிலேயே இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று, ஸ்ரீலங்காவின் அரசாங்கத்தின் சார்பாக சென்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பயணம் பலத்த முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதாக தென்னாபிரிக்க ஒளிபரப்பக்கூட்டுத்தாபனத்தி
-
- 0 replies
- 727 views
-