Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பின் நுழைவாசல்களை வழிமறித்து தீவிர சோதனை - வெடிகுண்டுடன் வாகனம் வந்திருப்பதாக சந்தேகம் கொழும்பு மாநகரின் சகல நுழைவாயில்களும் நேற்று சனிக்கிழமை அதிகாலை முதல் வழிமறிக்கப்பட்டு தலைநகருக்குள் நுழைந்த அனைத்து வாகனங்களும் பயணிகளும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டதால

  2. "மனிதஉரிமை மீறல்களை கட்டுப்படுத்தாமல் சர்வதேசத்திடம் உதவிகளை எதிர்பார்க்கும் சிறிலங்கா'' -சி.ஆதித்தன்- இலங்கைத்தீவில் சமாதான புரிந்துணர்வு ஒப்பந்தம் விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டு தமிழ் சிங்களப் புத்தாண்டு தினத்துடன் 1878 நாட்களாகின்றன. இந்த நீண்ட காலப்பகுதியில் தமிழ் மக்கள் சமாதானப் முன்னெடுப்பில் நம்பிக்கை வைத்து புதிய வசந்தத்திற்காக எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருந்தவைகள் யாவும் நிறைவேறியனவா? இழந்துவிட்ட வசந்த காலத்தை, காணாமல் போன கணவனை, தூக்கிச் செல்லப்பட்ட பிள்ளைகளை, இழந்துவிட்ட பூர்வீக நிலத்தை, சொத்துக்களை, சுகங்களை, யுத்த மோகத்தால் நிறைவேறாத கனவுகளையென தமிழ் மக்கள் ஏராளமான வேதனைகளை மனதில் சமந்து புரிந்துணர்வு ஒப…

    • 0 replies
    • 554 views
  3. ''இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள்'' -நா.யோகேந்திரநாதன்- இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையிலான கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அடிக்கடி இடம் பெறுவது ஒரு போர்கால நடைறையாகத் தொடர்ந்து வருகிறது. இவற்றிற்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்துவதும், தமிழக அரசு மத்திய அரசுக்கு முறைப்பாடு செய்வதும், நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு வாக்களிப்பதும் வழமையான சம்பவங்கள். ஆனால், மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படவில்லை அது மட்டுமன்றி அண்மைக்காலத்தில் இடம் பெற்ற தாக்குதல்களில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுமளவிற்கு நிலைமைகள் மோசமடைந்தன. இதன் காரணமாக தமிழகமே கொதித்தெழுந்தது. மத்திய அரசு கூட உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டிய அளவிற்…

    • 0 replies
    • 949 views
  4. ''விடுதலைப்புலிகளை இலகுவாக கையாள முடியாமலிப்பதே சிங்கள அரசுகளுக்குள்ள பிரச்சினை'' -மனோகரன்- அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தீர்மானிக்க முடியாத ஒரு இறுக்கமான சூழல் இப்போது சிறிலங்காவின் அரசியலில் ஏற்பட்டுள்ளதாக அரசியல் பத்தி எழுத்தாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது தெரிவித்தார். இன்றைய சூழலில் அவர் சொல்வது ஒருவகையில் சரிதான். சிறிலங்காவில் இப்பொழுது அரசியலும் தேக்கத்துக்கு உள்ளாகித்தானிருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளும் தேக்கத்துக்கு உள்ளாகித்தானிருக்கிறது. ஏன் இராணுவ நடவடிக்கைகளும் தேக்கத்துக்கு உள்ளாகித்தானிருக்கின்றது. அரசியலைப் பொறுத்து இந்த மாதிரித் தேக்கங்கள் சிலபோது ஏற்படுவது உண்டு. ஆனால், அது நாட்டைப் பாதிக்காத வகையில் ஒரு இடைமா…

    • 0 replies
    • 1k views
  5. வான்புலிகளின் தாக்குதலால் கட்டுநாயக்கவிலிருந்து வான்படைத் தளம் மாற்றம்? தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வர்த்தக வானூர்தி நிலையத்தை அண்மித்த வான்படைத் தளத்தை வேறுபகுதிக்கு சிறிலங்கா அரசாங்கம் மாற்றக்கூடும் எனத் தெரிகிறது. கொழும்பு ஆங்கில ஊடகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி விவரம்: கட்டுநாயக்கா வான்படைத்தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் வான்தாக்குதலை மேற்கொண்டு ஒரு மாதம் சரியாக கடந்த நிலையில் மீண்டும் கட்டுநாயக்கவில் கடந்த வியாழக்கிழமை தாக்குதல் அச்சம் ஏற்பட்டிருந்தது. மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை பலாலி உயர் பாதுகாப்பு தளத்தையும் வான்புலிகள் தாக்கிவிட்டு திரும்பியுள்ளனர். இந்…

    • 1 reply
    • 1.7k views
  6. பிடுங்கி எடுப்பதைத் தவிர தமிழருக்கு வேறு ஏது வழி? தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் இரு பிரதான சிங்களக் கட்சிகளுமே "ஒரே குட்டையில் ஊறிய மட்டடைகள் தாம்" என்று சில வாரங்களுக்கு முன்னர் இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தோம். அதை உறுதிப்படுத்துவது போல இருகட்சிகளுமே செயற்படுகின்றன. பௌத்த சிங்களப் பேரினவாதிகளை அணி திரட்டி, அவர்களின் ஐக்கியத்தைத் தனது வலிமையாக்கிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி காலங்காலமாகத் தான் பின்பற்றி வரும் சிங்களத் தேசியவாத இரும்புப் பிடியில் இருந்து சற்றேனும் விலகுவாதாக இல்லை. அதன் சிங்களத் தேசியக் கடுங்கோட்பாட்டுப் பிடிக்கு மேலும் வலுச் சேர்த்திருக்கின்றது மஹிந்த ராஜபக்ஷவின் திமிர்த்தனத் தலைமை. இ…

  7. விடுதலைப் புலிகளின் டிவி, ரேடியோ முடக்கம் ஏப்ரல் 28, 2007 கொழும்பு: விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலி, ஒளி பரப்பை அமெரிக்காவின் இன்டல்சாட் செயற்கைக்கோள் நிறுவனம் முடக்கிவிட்டது. படை பலத்துடன் திகழும் விடுதலைப் புலிகள் தங்களுக்கென வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பையும் வைத்துள்ளனர். இவற்றின் மூலம் ஈழம் குறித்த செய்திகளையும், போர் குறித்த செய்திகளையும் ஒலி, ஒளிபரப்பி வந்தனர். ஆண்டுதோறும் மாவீரர் தினத்தின்போது பிரபாகரன் உரையாற்றுவதை நேரடியாகவும் ஒலி, ஒளிபரப்பி வந்தனர். அமெரிக்காவின் இன்டல்சாட் செயற்கைக்கோள் நிறுவனத்தின் செயற்கைக்கோள் மூலமாக இந்த ஒளி, ஒலிபரப்பு நடந்து வந்தது. இவற்றை முடக்க வேண்டும் என இலங்கை அரசு…

  8. இறுதிச் சுற்றில் சிறிலங்கா நுழைந்தால் மகிந்த மேற்கிந்திய தீவு பயணம். மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் துடுப்பாட்ட போட்டிகளில் சிறிலங்கா அணி இறுதிச் சுற்றுக்கு தெரிவானால் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மேற்கிந்திய தீவுகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். பார்படோஸ்ன் ஹென்சிங்ரன் ஓவல் மைதானத்தில் இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற உள்ளது. நான்கு நாள் பயணமாக இத்தாலி சென்றுள்ள மகிந்த எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நியூசிலாந்திற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் நடைபெறவுள்ள துடுப்பாட்டப் போட்டிகளின் முடிவுகளை பொறுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு பயணத்தை மேற்கொள்வார் இதனிடையே சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று…

  9. மகிந்த முகம் கொடுக்கும் யுத்தங்கள் -வேலவன்- சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு சட்டத்தரணி. 1994 ஆம் ஆண்டுக்கு முன் அதாவது அவர் ஆளும் கட்சி பா.உ. ஆக முன் 17 வருடங்கள் மனித உரிமை அமைப்புக்களுடன் பலமான தொடர்புகளைக் கொண்டிருந்தவர். அதாவது ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக் காலத்தில் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தரணிகள் மையத்தின் இயக்குநர். காணாமல் போனோரின் பெற்றோர் சங்கத்தலைவர். ஆனால் முன்னாள் சனாதிபதிகள் ஜே.ஆர். ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரிலும் அதிகமாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அவர் மீதுதான் எழுந்துள்ளன. அதிலும் இது தொடர்பில் ஏனையோர் சந்தித்த சர்வதேச அழுத்தங்களை விட அதிகமான அழுத்தங்கள் இவர் மீது போடப்படுகின்றன. முன்னாள…

  10. வான்படையினரின் வான் எதிர்ப்புத் தாக்குதலால் அனைத்துலக வானூர்தி நிலையத்தில் இடம்பெற்ற அவலம் [சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2007, 21:42 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா வான்படைத் தளத்தின் மீது கடந்த வியாழக்கிழமை இரவு விடுதலைப் புலிகள் வான் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் காரணமாக அதன் அருகில் இருந்த அனைத்துலக வானூர்தி நிலையம் அவசரமாக மூடப்பட்டது. அப்போது வான்படையினரின் சரமாரியான வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி வேட்டுக்களால் அங்கிருந்த பயணிகள் அச்சமடைந்து சிதறியோடியுள்ளனர். பயணிகள் செல்லும் பகுதியில் பெரும் சத்தங்களும், நெருக்கடிகளும் ஏற்பட்டதுடன் பெண்களும், ஆண்களும், சிறுவர்களும் வானூர்தியில் ஏறும் பகுதிகளில் இருந்து சிதறி ஓடி பயணிகளை பரிசோதனை செய்யும் பகுதிக்கு செ…

  11. இனந்தெரியாத விமானங்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கொழும்பு நகரத்தில் மின்தடையும் சர்வதேச விமானநிலையமும் மூடப்பட்டுள்ளது. http://www.alertnet.org/thenews/newsdesk/COL109803.htm

  12. புலிகளின் வானூர்திகளை தாக்கியழிப்பதற்கு எந்நேரமும் தயாராகவே இருக்கின்றோம்: சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் [சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2007, 06:42 ஈழம்] [ந.ரகுராம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தக்கியழிப்பதற்காக சிறிலங்கா வான்படையினர் எந்நேரமும் தயாராகவே இருக்கின்றனர் என்று சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். வான்தாக்குதல் எச்சரிக்கையடுத்து கட்டுநாயக்க வானூர்தி நிலையம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணிநேரம் செயலிழந்தது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகளிடம் இருப்பதாக கூறப்படுகின்ற இலகு ரக வானூர்திகளை தாக்கியழிப்பதற்கு சிறிலங்கா வான்படையினர் எந்நேரமும் தயாராகவே இருக்கின்றனர்…

    • 0 replies
    • 589 views
  13. தமிழீழக் கொள்கை வலுப்பெறுகிறது அரசுதான் அதற்கு தென்பூட்டுகிறது! ஐக்கிய தேசியக் கட்சி சாடல் ஐக்கிய தேசியக் கட்சியால் தோற்கடிக்கப்பட்ட புலிகளின் தமிழீழக்கொள்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது. மஹிந்த ராஜ பக்ஷவின் அரசு அந்தக் கொள்கைக்குத் தென்பூட்டி வளர்த்து வருகிறது. விடுதலைப் புலிகள் தொடர்ந்து நடத்திவரும் விமா னத் தாக்குதல்கள் இதனையே தெளிவுபடுத்துகின்றன. இவ்வாறு நேற்று அரசைச் சாடியிருக்கின்றது எதிர்க்கட்சி யான ஐக்கிய தேசியக் கட்சி. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நேற்று எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்த தாவது: புலிகள் தற்போது விமானத் தாக்குதல்களை மேற்கொள்ளத் த…

  14. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்மாதிரியை பின்பற்ற ஜனாதிபதி ராஜபக்ஷ முன்வருவாரா? [28 - April - 2007] உலகக் கிண்ணத்திற்கான ஒன்பதாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று பாபடோசில் நடைபெற இருக்கின்றது. இதில் இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் களத்தில் இறங்குகின்றன. இலங்கை அணியை உற்சாகப்படுத்தி வெற்றி பெறச் செய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே நேரில் அங்கு சென்றுள்ளார். அத்துடன் பல அமைச்சர்கள், அதிகாரிகள், பிரமுகர்கள், விளையாட்டுத் துறை அமைச்சின் செலவில் அங்கு ரசிகர்களாகச் சென்றுள்ளனர். இலங்கையின் அரசியல் ஆடுகளம், பிரச்சினைகள் நிறைந்து எதிர்விளைவுகள் மேலோங்கி சாதகமற்ற நிலையில் இருந்து வரும் வேளை உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் ஆடுகளம் இலங்கைக்குச் சாதகமான…

  15. இலங்கை வாழ் முஸ்லிம்களின் இனவிகிதாசாரத்தை விட வெலிக்கடை சிறையிலுள்ள முஸ்லிம்களின் விகிதாசாரம் அதிகம்' [28 - April - 2007] * கவலையளிக்கும் விடயம் என்கிறார் தென் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் -கம்பளை நிருபர்- இலங்கை வாழ் முஸ்லிம்களின் இன விகிதாசாரத்தை விடவும் வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள முஸ்லிம்களின் விகிதாசாரம் அதிகம் என்பது மிகவும் வருந்தத்தக்கதாகும். இது சமூகத்தின் உயர்வையன்றி வீழ்ச்சியையே சுட்டிக் காட்டுகின்றது என்று தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் ஏ.ஜி.ஹுசைன் இஸ்மாயில் தெரிவித்தார். கெலி ஓயா, நியுஎல்பிடிய அஷ்-ஷம்ஸ் வித்தியாலயத்தில் மஷாயிகுமார் சந்தூரிக் கமிட்டியால் நிறுவப்பட்டுள்ள கணினி நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு…

  16. பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் போர்வையில் மனித உரிமை மீறல் [28 - April - 2007] * குரோஷியா சர்வதேச ஜனநாயக சங்க மாநாட்டில் ரணில் -எம்.ஏ.எம்.நிலாம்- நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் நாளாந்தம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டில் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜனநாயகமும் மனித உரிமைகளும் அரசாங்கத்தால் படுமோசமாக மீறப்பட்டு வருவதாகவும் ரணில் விக்கிரமசிங்க விசனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் மனித உரிமை மீறலுக்கு எதிராக வாய் திறந்தால் அவர்கள் சிறையில் தள்ளப்படக் கூடிய அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்கின்றது எனவும் அவர் குறிப்…

  17. வான்வெளியில் நான்கு விதமான நடவடிக்கையை மேற்கொள்ளும் ஆற்றலை விடுதலைப் புலிகள் பெற்றுள்ளனர் - பி.ராமன் சரியான இலக்குகளை தேர்வு செய்து நேர்த்தியான வான்தாக்குதல்களை நடத்தும் ஆற்றல்களை விடுதலைப் புலிகள் பெற்றுள்ளனர் என முன்னாள் றோ அதிகாரியான பி.ராமன் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மற்றும் பலாலி கூட்டுப்படைத் தளம் மீதான வான்புலிகளின் குண்டுவீச்சுகள் வானோடிகளின் ஆற்றலைப் வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். இலகு விமானங்களை யுத்த விமானங்களாக மாற்றி குண்டுவீச்சுக்களை நடத்தும் வல்லமையும் நேர்த்தியான குண்டு வீச்சுகளை நடத்தும் அனுபவம் உள்ள வானோடிகளை புலிகள் பெற்றுள்ளனர் என பி.ராமன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேநேரம் வான் காப்பு, வான் தாக்குத…

    • 2 replies
    • 2.1k views
  18. ஸ்ரீலங்காப் படைகளின் மனிதவுரிமை மீறல்களுக்கு எதிராக தென்னாபிரிக்கத் தமிழ் அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர் ஈழத் தமிழர்களிற்கு மீது ஸ்ரீலங்கா அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதவுரிமை மீறல்களுக்கு எதிராக தென்னாபிரிக்கத் தமிழ் அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்காவின் சமூகசேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பிலேயே இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று, ஸ்ரீலங்காவின் அரசாங்கத்தின் சார்பாக சென்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பயணம் பலத்த முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதாக தென்னாபிரிக்க ஒளிபரப்பக்கூட்டுத்தாபனத்தி

  19. போரியலின் பரிணாம வளர்ச்சியில் சூழ்ச்சிகர நகர்வுத் தந்திரோபாயத்தின் தாக்கம் இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியர்களினால் பயன்படுத்தப்பட்ட பிலிட்ஸ்ரீக் (Blitzkrieg) என்ற மின்னல் வேகத் தாக்குதல் நடவடிக்கையானது சூழ்ச்சிகர நகர்வுத் தந்திரோபாயத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியாகவும் பயன்பாடாகவும் கருதப்படுகின்றது. இது தொடர்பாக படைத்துறை மூலோபாய வல்லுனரும் வரலாற்றாசிரியருமான லிட்டெல் ஹாட் கூறுவதாவது: மின்னல் வேக நடவடிக்கையின் தந்திரோபாயமானது நீரால் நிரம்பிய பாரிய குளத்தின் அணைக்கட்டை நீரானது தள்ளுவது அல்லது அமுக்குவது போன்றது. அதாவது நீரானது குளத்தினது அணைக்கட்டின் எல்லா பகுதிகளுக்கும் அமுக்கத்தை பிரயோகிக்கும். எங்கு சிறிய இடைவெளி அல்லது பலவீனம் இருக்கின்றதோ அங்…

  20. ஆயுதம் தாங்கிய குழுவினர் பதுங்கியிருந்து தாக்கியதில் 3 கடற்படையினர் பலி. வெள்ளிக்கிழமை காலை திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய குழுவொன்று பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் 3 கடற்படைச் சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 3 SLN troopers killed in gunfire ambush in East A group of armed men waiting in ambush Friday morning shot and killed three Sri Lanka Navy (SLN) troopers who were on a road patrol in Kuchchaveli in Trincomalee, according to Sri Lankan military officials in Colombo. Further details are not available. -Tamilnet-

  21. வெள்ளி 27-04-2007 14:44 மணி தமிழீழம் [முகிலன்] புலிகளின் வான்படையை தாக்கியழிக்க உடன் நடவடிக்கை எடுங்கள் - ஜாதிக ஹெல உறுமய விடுதலைப் புலிகளின் வான்படையை உடன் அழித்திட சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுதுள்ளது. இதுகுறித்து ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகச் செயலாளர் நிஷாந்த ஷ்ரீ வர்ணசிங்க தெரிவிக்கையில் ..... விடுதலைப் புலிகள் வான்படையை கட்டியெழுப்ப உதவியது ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரபாகரன் இடையே செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையே. எனவே தேசத்திற்கு துரோகமிழைத்து ரணில் தனது பதவியைத் துறந்து நாட்டுமக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் எனவும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.…

  22. 12 தமிழர்கள் கொழும்பில் கைது வெள்ளவத்தை, கொகுவல பொலீஸ் நிலையப் பிரிவுகளில் பொலீஸார் நேற்று மேற்கொண்ட தேடுதலில் 12 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கைச் சேர்ந்த இவர்கள் தமது அடையாளத்தை நிரூபிக்கத்தவறியதால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றனர் என்று பொலீஸார் தெரிவித்தனர். (அ1) உதயன்

  23. ஐந்து மென்ரக விமானங்கள் புலிகளிடம் இருப்பதாக சந்தேகம். தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் ஐந்து மென்ரக விமானங்கள் இருக்கலாம் என்றும் இவை வெளிநாடுகளிலிருந்து உதிரிப்பாகங்களாக படகுகளில் கொண்டுவரப்பட்டு இங்கு பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.இதேவேளை புலிகளின் விமானத்தாக்குதல்கள் சர்வதேச பயணிகள் விமான சேவையில் ஈடுபட்டிருக்கும் விமானசேவை நிறுவனங்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இலங்கை நோக்கி வந்து கொண்டிருந்த விமானசேவைகள், தமிழ்நாட்டுக்கு திருப்பிவிடப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவ…

    • 3 replies
    • 1.2k views
  24. புலிகளின் விமானப்படை நாட்டுக்கு பெரும் தலைவலி எப்போதும் அனர்த்தம் நேரலாம் என்ற அச்சத்தில் மக்கள் வீரகேசரி நாளேடு நாடு மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருக்கிறது. தேசிய பாதுகாப்பு மோசமான முறையில் கேள்விக்குறியாகியுள்ளது. மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். கட்டுநாயக்கவை அண்மித்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட விமானத் தாக்குதல் அச்சத்தினால் மக்கள் பிரதேசமெங்கும் சிதறி ஓடினர். தமது வீடுகளை விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றுவதற்காக அங்குமிங்கும் ஓடினர். வெடிப்புச் சத்தங்களால் கட்டுநாயக்கப் பகுதியே அதிர்ந்தது என்று ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். அரசாங்கத்தைகொண்டு நடத்தமுடியாவிட்டால் தகுதியானவர்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.