Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் முன்னிரங்க நிலைகளில் படைக்கலக் குவிப்பு யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப் படையினர் கடந்த சில நாட்களாக முன்னரங்க நிலைகளை நோக்கி மிக அதிகளவிலான படைக் குவிப்பையும், படைக்கல நகர்த்தலையும் மேற்கொண்டு வருகின்றனர். யாழ் குடாநாட்டின் மூன்று பிரதான வீதிகளை காலையும், மாலையும் மக்கள் போக்குவரத்துக்குத் தடை செய்யும் படையினர், இந்தப் படைக்கல நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றனர். முன்னரங்க முகாம்களில் அளவுக்கு அதிகமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால், அருகிலுள்ள மக்களின் வீடுகளுக்குச் செல்லும் படையினர் தொல்லை கொடுத்து வருகின்றனர். இதேவேளை, தென்மராட்சி, வலிகாமம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் முகாம்களுக்கு அருகிலுள்ள மக்கள், சிறீ…

  2. யாழில் கடந்த வாரம் 9 இராணுவத்தினரைக் காணவில்லை யாழ் குடாநாடு மந்துவிலில் கடந்த வாரத்தில் மட்டும் 9 சிறீலங்கா இராணுவத்தினர் காணாமல்ப் போயிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 6 சிறீலங்கா இராணுவத்தினரும், புதன்கிழமை 3 இராணுவத்தினரும் காணாமல்ப் போயுள்ளனர். இவர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மந்துவில் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், மக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.pathivu.com/

  3. ஞாயிறு 15-04-2007 02:16 மணி தமிழீழம் [தாயகன்] புலிகளின் வலையமைப்பு - இந்திய மத்திய புலனாய்வுத்துறை தகவல் சேகரிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாடுகளிலுள்ள வலைப் பின்னல் தொடர்பான விபரங்களை இந்திய மத்திய புலனாய்வுத்துறை சேகரித்து வருகின்றது. ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் உட்பட உலகின் 17 நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் வலைப் பின்னல்கள், மற்றும் தொடர்பாடல்கள் குறித்தே தகவல் சேகரிக்கப்படுகின்றது. இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கு பற்றிய இறுதிக்கட்ட விசாரணைகளை மேற்கொள்ளும் குழுவினரே இந்தத் தகவல் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல நாடுகள் விடுதலைப் புலிகள் பற்றிய தகவலை வழங்க மறுத்திருப்பதுடன், தமது தகவ…

  4. தமிழருக்கு சர்வ சித்திகளும்தரட்டும் சர்வசித்து ஆண்டு! எக்கணமும் தரிப்பின்றி, முன்னோக்கிச்சீரா கச் சுழன்று கொண்டிருக்கின்றது நேரச் சக்கரம். தங்கு தடையின்றி ஓடிக்கொண்டிருக்கின்றது காலநதி. காலதேவனின் இந்த நெறி தவறா இடை யறா அசைவியக்கத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக நியதி; தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம்; மாறாத யதார்த்தம். மனித இருப்பு என்பதும் வாழ்வு என்பதும் காலத்தின் பாதையில் இடம்பெறும் ஒரு பயணம். ஜீவனுள்ள அசைவியக்கம். இந்தப் பயணத்தில் ஒரு கணமும் தரித்து நிற்க முடியாதவாறு மனிதனை நகர்த்திச் செல்கிறது காலம். காலத்தில் மிதந்து கொண்டு நமது வாழ்வுப் பயணம் நகர்கிறது. நடந்து முடிந்தது இறந்தகாலமாகவும், நடக்கப்போவது எதிர்காலமாகவும், நடப்பது நிகழ்காலமாகவும் நம…

  5. திருமலையில் 23 பேர் கைது. திருமலை நகரப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களில் போது 23 பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் செய்யப்பட்டு வருவதாகவும், அவர்கள் தமது அடையாளங்களை நிரூபிக்கத் தவறியிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். தமிழ் - சிங்கள புதுவருடத்தின் போதான பாதுகாப்பை முன்னிட்டே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் முடிவில் இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் குற்றம் புரிந்திருந்தால் நீதிமன்றத்தில்…

  6. ‘பொடா’ விடுதலைக்குப்பின் மனம் திறக்கிறார் பழ.நெடுமாறன்... ‘‘புலிகளை சிறுமைப் படுத்தாதீர்கள்!’’ தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ.நெடுமாறன் முகத்தில் விடுதலையின் சிரிப்பு! போராட்டங்களும் தண்டனைகளும் அவருக்குப் புதிதில்லை. கனவில் சுமந்த லட்சியங்களுக்குப் பரிசாக யதார்த்தம் தந்த காயங்களுக்கு கணக்கே இல்லை. ஆனாலும், பக்குவத்தின் புன்னகையை தன்னுடனேயே வைத்திருக்கிறார்... நிதானத் தால் நம்பிக்கையை விதைக்கிறார் மனிதர். கண் களிலோ தீராமல் திமிறும் வேங்கையின் கூர்மை. பொடா வழக்கிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அவரைச் சந்தித்தோம். ‘‘ ‘பொடா’ வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கபட்டு இருக்கிறீர்கள்? ஆனால், இதே சட்டத்தில் வழக்குப் போடப…

  7. செங்கலடியில் சிறிலங்காப் படையினரால் 3 வயது குழந்தை உட்பட 5 தமிழர்கள் சுட்டுப்படுகொலை. மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில் சிறிலங்காப் படையினரால் 3 வயது குழந்தை உட்பட 5 அப்பாவி தமிழ் பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். செங்கலடி கணபதிப்பிள்ளை நகர் என்ற மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.15 மணிக்குச் சென்ற படையினர், அப்பகுதி வீடு ஒன்றுக்குள் சென்று அவ்வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே வருமாறு மிரட்டியுள்ளனர். அப்போது, தமது குழந்தையுடன் வீட்டுக்கு வெளியே வந்தவர்களை நோக்கி படையினர் சரசமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர். இதில் குழந்தையும் மேலும் இருவரும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். ஏனையோர் இன்று காலை சடலங்களாக ம…

  8. நாம் வர்த்தக செய்மதிகளை தவறாக பயன்படுத்தவில்லை: விடுதலைப் புலிகள் அனைத்துலக நாடுகளில் தமது ஒளிபரப்புக்களை நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வர்த்தக செய்மதிகளை தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர். 'நாம் சட்டபூர்வமாகவே அவற்றைப் பயன்படுத்துகின்றோம், திருட்டுத்தனமாக அல்ல' என இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் விடுதரலப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார். உலகின் பெரிய வர்த்தக செய்மதி நிறுவனமான இன்ரல்சற்றின் பேச்சாளர் விடுதலைப் புலிகள் தமது ஒரு செய்மதியை தவறாக பயன்படுத்துவதாக நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். யூரோப் ஸ்ரார் - 1 என்ன…

  9. "சிறிபதிக்கு நேர்ந்த கதியே உனக்கும்" ஜோன்ஸனுக்கு தொலைபேசி வழியாக கொலை மிரட்டல். ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸன் பெர்னாண் டோவிற்கு தொலைபேசி வழியாக தொடர்ந்தும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன என்று அவரே தெரிவித்திருக்கிறார். கோத்தபாய ராஜபக்ஷவை விமர் சிப்பதை நிறுத்தாவிட் டால், சிறிபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் ஏற்படும் என்றும், இல்லாவிட்டால் கொலைசெய்து புதைத்து விடுவோம் என்றும் தொலைபேசி மூலம் தன்னுடன் பேசிய ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஜோன்ஸன் உதயனுக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் குரு நாகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சபா நாயகருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இது குறித்து அ…

  10. ஆட்சிக்கு வந்தால் தமிழ் அகதிகள் உள்ள 'நௌரு' தடுப்பு நிலையம் மூடப்படும்: அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர். ஆட்சிக்கு வந்தால் தமிழ் அகதிகள் உள்ள 'நௌரு' தடுப்பு நிலையம் மூடப்படும் என்பதே எமது கட்சியான தொழிற்கட்சியின் நிலைப்பாடாகும் என அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் கெவின் றட் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளாக வந்துள்ள 83 பேரையும் அகதிகளாக ஏற்க உதவ வேண்டும் எனக்கோரி பிறிஸ்பேர்ன் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அனுப்பிய கடிதத்துக்கு அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அளித்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவுஸ்திரேலியா எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெவின் றட் பிறிஸ்பேர்ன் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்திற்கு…

  11. வெள்ளி 13-04-2007 21:52 மணி தமிழீழம் [மகான்] ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் படையினரால் உழப்பட்டு தென்னமரங்கள் நாட்டப்படுகின்றன வாகரை ஆக்கிரமிப்புக்கு பின்னர் வாகரை ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிறீலங்காப் படையினரால் உடைக்கப்பட்டு நிலம் உழப்பட்டு அங்கு படையினரால் தென்னமரங்கள் நாட்டப்படுவதாக தெரியவருகிறது. இதேநேரம் வாகரையில் பழைய விகாரை ஒன்று இருந்ததாகத் தெரிவித்து படையினர் வெள்ளரசம் மரம் ஒன்றை அங்கு கொண்டுவந்து நாட்டியுள்ளதாக திருமலைச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. சிறீலங்காவின் ஆக்கிரமிப்புப் படைகள் தற்பொது தமிழர்ர் தாயகத்தை ஆக்கிரமித்து சிங்கள மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருதை அவதானிக்கக்கூடியதாக தெரியவருகிறது. மூலம் - பதிவு

  12. உள்ளுர் படையதிகாரிகளுடன் யாழ்மாவட்ட கட்டளையதிகாரி இரகசியச் சந்திப்பு. யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினரின் பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள அச்சநிலை காரணமாக உள்ளுர்மட்ட அரிகாரிகளுடனான சந்திப்பொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரகசியமாக பலாலி படைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ் குடாநாட்டில் சிறிலங்காப் படையினர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மனரீதியான பாதிப்புக்கள் மற்றும் படையதிகாரிகளின் கட்டுப்பாடுகளை படையினர் ஏற்கமறுப்பதுடன் சில இடங்களில் படையினருக்கும் அதிகாரிகளுக்கிடையேயும் முரண்பாடுகள் தோன்றி துப்பாக்கிசூட்டில் முடிந்திருப்பதால் ஏற்பட்டுள்ள படைப்பிளவை அடுத்து உள்ளுர்மட்டஅதிகாரிகளை யாழ்மாவட்ட கட்டளை அதிகாரி சந்திரசிறி சந்தித்து படை…

  13. வெள்ளி 13-04-2007 18:12 மணி தமிழீழம் [செந்தமிழ்] தென்தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் வெற்றிகள் விரைவில் அரங்கேறும் - சு.ப.தமிழ்ச்செல்வன் சிறீலங்கா அரசாங்கம் போர்முனைகளில் இராணுவ வெற்றிகளை பெற்றுவருவதாக முன்னெடுக்கும் பரப்புரைகளுக்கான பதில் விரைவில் வழங்கப்படும் என விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று ஏ.எவ்.பி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே தமிழ்ச்செல்வன் இதனைத் தெரிவித்துள்ளார். களமுனைகளில் சிறீலங்கா அரசாங்கம் வெற்றியை ஈட்டியுள்ளதாக அரசாங்கம் முன்னெடுக்கும் பரப்புரைகளுக்கு விடுதலைப் புலிகள் செயற்பாடுகள் மூலம் பதில் வழங்குவார்கள் எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் மீது இ…

  14. வெள்ளி 13-04-2007 17:00 மணி தமிழீழம் [தாயகன்] கிழக்கு மாகாணத்தில் பணிகள் இரட்டிப்பு - உலக உணவுத் திட்ட அமைப்பு கிழக்கு மாகாணத்தில் தமது பணிகள் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்ட அமைப்பு அறிவித்துள்ளது. பல்லாயிரக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, இதுவரை இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு மூவாயிரம் தொன் அரிசியை நிவாரண உதவியாக வழங்கியிருப்பதாகவும், உலக உணவுத் திட்ட அமைப்பு அறிவித்துள்ளது. ஜப்பான் அரசாங்கம் அன்பளிப்புச் செய்த 17 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவியில் இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டதாக, உலக உணவுத் திட்ட அமைப்பின் அறிக்கையில் க…

  15. வெள்ளி 13-04-2007 16:59 மணி தமிழீழம் [தாயகன்] 5 மனித நேய அமைப்புகளுக்கு அவுஸ்திரேலியா நிதியுதவி சிறீலங்காவிலுள்ள 5 மனித நேய அமைப்புகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் 40 இலட்சம் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளதாக, கொழும்பிலுள்ள அதன் தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான நிகழ்வு ஒன்று சிறீலங்காவிற்கான அவுஸ்திரேலிய பதில் தூதர் மத்தியூ தலைமையில் தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை, கண்டி, அநுராபுரம் மாவட்டங்கள், மற்றும் ஊவா மாகாணத்திலுள்ள சிங்கள, முஸ்லீம் அமைப்புகளுக்கே இந்த நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மூலம் -பதிவு

  16. கடத்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க சர்வதேசம் உண்மையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் - செ.கஜேந்திரன். - பண்டார வன்னியன் Friday, 13 April 2007 17:10 யாழ்குடாநாட்டில் தொடரும் ஆட்கடத்தல்களையும் கொலைகள், பாலியல்வல்லுறவுகள் போன்ற சம்பவங்களைத் தடுத்துநிறுத்தக் கோருவதுடன் கடத்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க சர்வதேசம் உண்மையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்குடாநாட்டில் ஏப்ரல் மாதம் 01ம் திகதிக்குப் பின்னர் 10நாட்களில் மட்டும் 05பேர் கொலைசெய்யப்பட்டுள்ளதுடன் 06பேர் கடத்தப்பட்டுமுள்ளனர். இவை அனைத்தும் சிங்கள இராணுவத்தினராலும் துணைஇராணுவக்குழுவினரான ஈ.பி.டி.பி யினராலுமே மேற்கொள்ளப்பட்ட…

  17. வான்புலிகள் வீசியது 6 குண்டுகள்: சிறிலங்கா அரசாங்கம். கட்டுநாயக்க சிறிலங்கா வான்படை தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையின் 6 குண்டுகளை வீசியதாக சிறிலங்கா அரசாங்க ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், 6 குண்டுகள் வீசப்பட்டதாகவும் அவற்றில் 5 வெடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறிலங்கா வான் படையினரோ முன்னர் 4 குண்டுகளையே வான்புலிகள் வீசியதாகத் தெரிவித்திருந்தனர். வான் புலிகளின் தாக்குதல் தொடர்பான வான்படை மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணை அறிக்கைகள் விரைவில் வெளியிடப்படக்கூடும் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. -Puthinam

    • 4 replies
    • 2.4k views
  18. வெள்ளி 13-04-2007 14:23 மணி தமிழீழம் [மோகன்] யாழில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை வியாழக் கிழமை மாலை 6.30 மணியளவில் உந்துருளியில் சென்ற இனம் தெரியதா ஆயுததாரிகளால் சாந்தை பகுதி சங்கானையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் இவருடன் இருந்த நண்பர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இதன் போது கொல்லப்பட்டவர் 24 அகவையுடைய தவராசா மூர்த்தி எனவும் தனது நண்பனின் மனைவிக்கு முதலாவது குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட குருதியிழப்பை ஈடுசெய்ய குருதி வழங்கிவிட்டு வரும் வழியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது காயமடைந்தவர் தையல் தொழில் புரியும் 21 அகவையுடைய மாணிக்கம் தவராசா எனவும் இனம் காணப்பட்டுள்ளார். மூலம் - பதிவு

  19. வத்திக்கான் செல்கிறார் மகிந்த [வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2007, 14:01 ஈழம்] [சி.கனகரத்தினம்] வத்திக்கானில் பாப்பரசர் பெனடிக்ட்டை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச உள்ளார். வத்திக்கானுக்கு எதிர்வரும் வாரம் மகிந்த் ராஜபக்ச பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பாப்பரசர் விடுத்திருந்த ஈஸ்டர் திருநாள் செய்தியில், தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் வன்முறைகளை நிறுத்தி பேச்சுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் சிறிலங்கா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கத்தோலிக்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு பாப்பரசரை மகிந்த சந்திக்க உள்ளார். இக்குழுவில் வெளிவிவகார அ…

  20. கடற்படையினரால் பத்து வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு. - பண்டார வன்னியன் Friday, 13 April 2007 11:31 தீவகத்தில் உள்ள மண்கும்பான் பகுதியில் சிறுமி மீது கடற்படையினர் பாலியல் வல்லுறவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். வீட்டிலிருந்து வெளியே விளையாடச் சென்ற பத்து வயது சிறுமி மீது அப்பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரே இந்தப் பாலியல் வன்செயல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனை இரண்டு கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். கடற்படையினரின் கட்டுபாட்டில் உள்ள மண்கும்பான் பகுதியில் இருந்து இந்த குறிப்பிட்ட சம்பவத்தின் பின்னர் சிறுமியின் பெற்றோர்கள் தமது வீட்டிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணத்திற்கு வர முயற்சித்த போதிலும் கடற்படையினர் அவர்களை பயமுறுத்தி யாழ்ப்ப…

  21. மக்கள் குடியிருப்புகள் மீது தொடர் கிபிர் விமானத் தாக்குதல். - பண்டார வன்னியன் Friday, 13 April 2007 11:11 மூன்று தடவைகள் புதுக்குடியிருப்பு பிரதேச வான் பரப்பிற்குள் நேற்று பிரவேசித்த சிறிலங்கா விமானப் படையின் மிக் -27 யுத்த விமானங்கள் மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து பத்து குண்டுகளை வீசியது. முதற் தடவையாக காலை 8.00 மணிக்கு மூன்று குண்டுகளை வீசியது இதனைத் தொடர்ந்து காலை 8.45 இற்கு மீண்டும் வந்த விமானங்கள் நான்கு குண்டுகளை வீசியது பின்னர் மூன்றாவது தடவையாக 11.10 இற்கு வந்த மிக் விமானங்கள் மூன்று குண்டுகளை வீசியது. இதனால் நேற்று புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ளவர்களும் அதனை அண்டிய பகுதியைச் சேர்ந்தவர்களும் பெரும் அச்சத்தில் காணப்பட்டனர். இத…

  22. கிழக்கைப் பறித்தெடுக்கும் பாதகம் ` கிழக்கு மாகாணத்தை, மிகக் குறிப்பாக திரு கோணமலையை, முற்றுமுழுதாகச் சிங்கள மயப் படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் முழு மூச் சில் செயற்பட்டு வருகிறது. எல்லோரும் அறிந்த இந்த விடயத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரின் இந்தியாவின் கவ னத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். 1987ஆம் ஆண்டில் கைச்சாத்தான இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு, ஒரே மாகாண சபை நிர்வாகம் கொண்டுவரப்பட்டது. தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் மூலம் கிடைத்த சொற்ப விளைச்சலாக, பத்தொன்பது வருடங்களாக அது துளி அளவான அதிகாரப் பகிர்வு முறைக்கு வழி செய்தது. நிர்வாக அதிகா…

  23. சர்வதேச மன்னிப்புச் சபைக்கு எதிராக ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம். சர்வதேச மன்னிப்புச் சபையையும் அரச சார்பற்ற நிறுவனங்களையும் எதிர்த்து ஜே.வி.பி.யினர் வியாழக்கிழமை காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பி. யின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். சர்வதேச மன்னிப்புச் சபையை விரட்டவேண்டும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை தோற்கடிக்கவேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டதின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய…

  24. மாமனிதர் ஜெயக்குமாரின் இறுதி மரியாதையில் கலந்து கொண்ட கவுன்சிலர் ஒருவருக்கு சிங்களவர்கள் சிலர், கவுன்சிலர் கலந்து கொண்டது தவறு என்றும் பகிரங்க மன்னிப்பு கேக்கவேண்டும் என்றும் மின்னஞ்சலில் கேட்டிருந்தார்கள். அதற்கு கவுன்சிலரின் பதில் A TRIBUTE by the Greater Dandenong mayor to a community leader whose opponents say supported a terrorist group has outraged a sector of the city’s Sri Lankan residents. Mayor Youhorn Chea last week thrust council into an ongoing fray between Sri Lanka’s two main ethnic groups – the Tamils and Sinhalese – when he attended a memorial service of a deceased Tamil community leader and sent a wreath to the Tamil community on behalf of …

  25. திருமலையை சிங்கள மயமாக்கும் தீவிர முயற்சியில் அரச நிர்வாகம் இந்தியத் தூதரை நேரில் சந்தித்து தமிழ்க் கூட்டமைப்பினர் முறைப்பாடு கிழக்கு மாகாணத்தை குறிப்பாகத் திருகோணமலைப் பிரதேசத்தை முற்று முழுதாகச் சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கையில் அரச நிர்வாகம் முழு மூச்சில் ஈடுபட்டிருக்கின்றது எனக் குற்றம் சுமத்தியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்புக்கான இந்தியத் தூதரை நேரில் சந்தித்து இது தொடர்பாக முறைப்பாடு செய்தனர். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், எம். பிக்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே நேற்று கொழும்பில் இந்தியத்தூதர் அலோ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.