ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142770 topics in this forum
-
செய்தியாளர்களுக்குப் பயந்து ஓடி ஒளித்த இலங்கை அமைச்சர். பத்திரிகையாளர்களுக்குப் பயந்து சென்னை விமான நிலையத்தில் இலங்கை அமைச்சர் ஓடி ஒளிந்தார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. இத்தகவலை சென்னைப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. தமிழக மீனவர்களை இலங்கை இராணுவத்தினர் அடிக்கடி சுட்டுக்கொன்று வருகின்றனர். இலங்கை இராணுவத்தின் செயலைக் கண்டித்து நேற்றுமுன்தினம் தமிழக அமைச்சர்கள் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் இலங்கையின் தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார நேற்றுமுன்தினம் காலை 9 மணிக்கு இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவர் எழும்பூரில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு பிற்ப…
-
- 0 replies
- 895 views
-
-
எல்லைதாண்டிச் சென்ற மீனவர்களின் 140 கட்டுமரங்கள் பறிமுதலாகின. குடாக்கடலில் தொழில் செய்வதற்கு படையினர் அனுமதித்த பிரதேசத்திற்கு அப்பால் சென்று, மீன்பிடித்த தாக 140 மீனவர்களது கட்டுமரங்கள் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் இத்தகவலை உதயனுக்குத் தெரி வித்தார். இதேவேளை, அவர்களது தொழில் அனுமதிக்கென வழங்கப்பட்ட "பாஸ்' களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தாகக் கூறப்பட்டுள்ளது. கட்டுமரங்கள் பறிமுதல் செய்யப் பட்டதால் கொழும்புத்துறை, பாசையூர், குருநகர் ஆகிய இடங்களைச் சேர்ந்த 140 மீனவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடலில் தொழில் செய்வதற்குரிய எல்லை நிர்ணயிக்கப்பட்டு, அங்கே வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்ப…
-
- 0 replies
- 721 views
-
-
விரிசல் நிலையை நோக்கி இந்திய இலங்கை உறவு ` ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்ன ரான கடந்த பதினாறு மாத காலத்தில் இலங்கைக்கும் அயல் வல்லாதிக்க நாடான இந்தியாவுக்கும் இடையி லான நல்லுறவில் பெருமளவு விரிசல் ஏற்படத் தொடங்கி யிருப்பதை அரசியல் நோக்கர்கள் மேம்போக்காக வேனும் அவதானிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்குப் பல்வேறு காரணங்கள் பின்னணியாக அமைந்தாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்ற தனிநபரின் ஆளுமை, சிந்தனைப்போக்கு, செயலாற் றும் பாங்கு, நம்பகத்தன்மை ஆகியவை தொடர்பாக புதுடில்லிக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியும், அதன் காரண மாக ""நான் இந்தியாவின் ஆத்மார்த்த நண்பன்'' என்று இந்தியத் தலைவர்களிடம் நேரடியாகவே ஜனாதிபதி மஹிந்தர் அடிக்கடி கூறும் வாசகத்தின் இதயபூர்வ தன்மை குறித்து புது…
-
- 3 replies
- 1.4k views
-
-
கொழும்பு வர்த்தகர்களிடம் 50 லட்சம் ரூபாய் கோரும் கருணா குழு: பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணன் [புதன்கிழமை, 14 மார்ச் 2007, 04:02 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினர் தமிழ் வர்த்தகர்களிடம் மிகப்பெரும் பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிற்கும், காவல்துறையினருக்கும் தொழில் வாய்ப்பு தொழில்நுட்ப பயிற்சி பிரதியமைச்சர் பி.இராதாகிருஸ்ணன் முறைப்பாடு செய்துள்ளார். பெருமளவான தமிழ் வர்த்தகர்களின் முறைப்பாடுகளை அடுத்தே அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். கடந்த ஜனவரி, பெப்ரவரி, மற்றும் மார்ச் மாதத்தின் முற்பகுதியிலும் கருணா குழுவினர் என தம்மை அறிமுகப்படுத்திக் …
-
- 0 replies
- 654 views
-
-
செவ்வாய் 13-03-2007 23:45 மணி தமிழீழம் [மகான்] சிறீலங்காவின் மனித உரிமை நிலமைகள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது – சுவிஸ் அரசு சிறீலங்காவில் தற்போது நிலவும் மோதல்கள் அங்கு நிலவும் மனித உரிமை மீறல்கள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் நேற்று ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சுவிஸ் அதிபர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஏனைய நாடுகளில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு முறைகளை ஆய்வு செய்வதற்கு முன்வருமாறும் சிறீலங்கா அரசாங்கத்தை கேட்டுக்கnhண்டுள்ளார். இதேவேளை சுவீடனை சேர்ந்த அமைச்சர் கார்ல் பில்ட் மிக மோசமாக அதிகரித்துச் செல்லும் மனித உரிமை மீறல்களுக்கு முடிவு கட்டுவதற்க…
-
- 2 replies
- 945 views
-
-
இந்திய இலங்கை கடற்பகுதியில் கூட்டுக் கண்காணிப்பு குறித்து கருணாநிதி விளக்கம் இந்தியா-இலங்கைக்கிடையிலான கடற்பகுதியில் இரு நாடுகளும் இணைந்து கூட்டுக் கண்காணிப்பு பணியை நடத்துவதற்கு தாம் ஒப்புதல் தந்துவிட்டதாக வெளியான செய்திகள் தவறு என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி இன்று செவ்வாய்க்கிழமை விளக்கமளித்துள்ளார். இத்தகைய கூட்டுக் கண்காணிப்பு என்பது, இந்திய அரசு ஒப்புதல் தந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்று கூறியிருக்கும் கருணாநிதி, இது இந்திய நடுவணரசின் முடிவைப் பொறுத்தது என்றும் தெரிவித்திருக்கிறார். தம்மைப் பொறுத்த வரையில், மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் தமது கவலை என்றும் அவர் கூறியிருக்கிறார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச…
-
- 0 replies
- 668 views
-
-
13-march-2007 -மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்இ மட்டக்களப்பு கல்லாறு முதல் வாழைச்சேனை வரை சுமார் 60 கிலோ மீற்றர் தூரத்திற்கு பரவி இருப்பதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி பாரிய படைநகர்வுகள் ஆரம்பமானதையடுத்து இதுவரைஇ புலிகளின் பிரதேசங்களைச் சேர்ந்த ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர். தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி நடைபெறும் ஆட்லறி ஷெல் தாக்குதல்இ பல்குழல் ரொக்கட் தாக்குதல் மற்றும் விமானத் தாக்குதலையட…
-
- 0 replies
- 647 views
-
-
கஜேந்திரன் எம் பீ இன் அவசர கோரிக்கை - காணாமல் போனவர்களின் விபரம் தேவை http://www.sooriyan.com/index.php?option=c...081&Itemid= கஜேந்திரன் எம் பீ இன் அவசர கோரிக்கை - காணாமல் போனவர்களின் விபரம் தேவை
-
- 1 reply
- 943 views
-
-
விசாரணை, விடுதலையை வலியுறுத்தி வெலிக்கடைக் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம். - பண்டார வன்னியன் Saturday, 10 March 2007 15:45 கொழும்பு வெலிக்கடைச் சிறையில் உள்ள 42 தமிழ்க்கைதிகள் இன்று காலை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். விசாரணைகளை துரிதமாக நடத்தி தம்மை விடுதலைசெய்ய வேண்டும் எனவும் தம்மீதான விசாரணைகள் தாம் கைதுசெய்யப்பட்ட மாவட்டத்திலேயே நடத்தப்படவேண்டும். என்ற இரு கோரிக்கைகள் இவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் தம்மீதான விசாரணைகள் நடத்தப்படும்போது சாட்சிகள் கொழும்புக்கு வருவதில் பெரும் இடர்பாடுகளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இருப்பதை உண்ணாவிரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பாக சிறிலங்க…
-
- 6 replies
- 1.2k views
-
-
திருகோணமலையில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை விருப்பத்துக்கு மாறாக குடியேற்ற முயல்வதாகக் குற்றச்சாட்டு மட்டக்களப்பில் தங்கியிருக்கும் திருகோணமலை அகதிகள் பலர் பாதுகாப்புக் காரணமாக சொந்த இடம் திரும்ப மறுத்து விட்டதால், மிகக் குறைவானவர்களே இன்று அங்கு திரும்பியதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. அதேவேளை தம்மை பலவந்தமாக மீளக்குடியமர்த்த முயல்வதாக சில அகதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலிருந்து யுத்த அகதிகளாக இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இடைத்தரிப்பு முகாம்களில் தங்கியுள்ளவர்களை சொந்த இடங்களில் மீளக் குடியமரத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். …
-
- 1 reply
- 864 views
-
-
5 வருட கால போர் நிறுத்தம்: எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் இலங்கைத் தீவில் சுமார் 3 தசாப்தங்களாக நிலவுகின்ற இனமோதுகைக்கு தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முதல் நிலையானதும் பிரதானமானதுமான போர் நிறுத்த ஒப்பந்தம் 5 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. குறித்த 5 ஆண்டுகளுக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் சாதித்ததை விட அது உண்டாக்கிய எதிர்பார்ப்புகள் அதிகம். இதில் அதிகமான எதிர்பார்ப்பு மக்களிடமிருந்தே வெளிப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இன்றைய நிலையால் பெரிதும் ஏமாற்றம் அடைந்திருப்பவர்கள் சகல இனக்குழுமங்களையும் சார்ந்த பொதுமக்களே. இதற்கான அடிப்படை காரணங்களில் ஒன்றாக பொது மக்களிடம் காணப்படுகின்ற அரசியல் மற்றும் சர்வதேச சமூகத்தின் பல்பரிமாண நடவடிக்கைகள் …
-
- 1 reply
- 1.1k views
-
-
வடமராட்சியில் நிர்வாகச் செயற்பாடுகள் மிகவும் மோசமடைந்துள்ளன சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்கிறார் நீதிவான் வடமராட்சியின் நிர்வாகச் செயற்பாடு கள் மிகவும் மோசமடைந்து வருகின்றன. இவ ற்றுக்கு அரச நிர்வாக அதிகாரிகளும், ப.நோ.கூ சங்க நிர்வாகிகளுமே காரணமாவார். இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் பருத் தித்துறை நீதிவான் க.அரியநாயகம். இந்த நிலையைப் போக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுக்கநேரிடும் என்றும் நீதிவான் தெரிவித்தார். பருத்தித்துறை நீதிமன்றத்தில் நேற்றுக்காலை நடந்த அவசர கூட்டம் ஒன்றிலேயே நீதிவான் இப்படி எச்சரிக்கை விடுத்தார். இக்கூட்டத்தில் அரச அதிகாரிகள், ப.நோ. கூ.சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அங்கு நீதிவான் சுட்டிக்காட்டிய விடயங்க…
-
- 0 replies
- 714 views
-
-
மஹிந்தபுலி உடன்படிக்கை குறித்து விசாரிப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படவேண்டும் ஜே.வி.பி. மக்களுக்கு உண்மையை அறியும் உரிமை உள்ளது என்கிறது ஜே.வி.பி. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது உடன்படிக்கையொன்று செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த அனைத்துக் கட்சிகளும் அடங்கிய பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து நாட்டு மக்களுக்கு உண்மையை öவளிப்படுத்தவேண்டும். பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படுமிடத்து நாங்கள் அதற்கு முழுமையான ஆதரவினை வழங்குவோம் என்று ஜே.வி.பி. யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக…
-
- 0 replies
- 702 views
-
-
சாவகச்சேரியில் இருவர்மீது சூடு சாவகச்சேரி,டச்சுவீதியில் நேற்றுமாலை 6.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் காயம்அடைந்தனர். மட்டுவில் தெற்கைச் சேர்ந்த கே.ஜெயக்குமார் (வயது 32), என்.ஈஸ்வரநாதன் (வயது 42) ஆகியோரே காயமடைந்த நிலையில் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இவர்களை இனந்தெரியாதவர்கள் மறித்து அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் எனக் கூறப்பட்டது http://www.uthayan.com/pages/news/today/12.htm
-
- 0 replies
- 689 views
-
-
சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைக்கு பதிலளித்து கெஹலிய உரை சவுதி அரேபியாவில் அண்மையில் சிரச்சேதம் செய்யப்பட்ட 4 இலங்கையர்களை அந்தத் தண்டனையிலிருந்து மீட்க இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்ற குற்றச் சாட்டையும் மறுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலனோம்பு அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல, அந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு ஏற்பவே மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற சவுதி அரேபியாவில் சிரச்சேதம் செய்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் இறுதியில் பதிலளிக்கும் போதே அமைச்சர் ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார். லக்ஷ்மன் …
-
- 1 reply
- 916 views
-
-
வடக்கு கிழக்கில் மோசமான சூழ்நிலை மக்கள் அச்சத்துடனேயே வாழ்கின்றனர் - இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு வடக்கு கிழக்கு பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வன்முறைகள், எறிகணை வீச்சுக்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள்காரணமாக அங்கு மோசமான சூழ்நிலை நிலவுகின்றது இந்நிலைமை நீடித்தால் அபாயகரமான நிலை ஏற்படும் என்று இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு பிரதேசத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த கண்காணிப்புக்குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது,இப்பகுதிகளில் ஒரு பதற்றமான நிலை காணப்படுகின்றது. மக்கள் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்கின்றனர். வன்முறைகள் மற்றும் எறிகணை வீச்சுக…
-
- 0 replies
- 523 views
-
-
யாழ்ப்பாணம் முகமாலை முன்னரங்கப் பகுதிகளில் இராணுவத்தினரால் இரு புதிய ரக மிதி வெடிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதா
-
- 0 replies
- 712 views
-
-
வில்பத்து காட்டுக்குச் சென்றபோது காணாமல் போன இராணுவத்தினர், வனவள அதிகாரிகள் உட்பட 8 பேரினது சடலங்களும் நேற்று மீட்கப்பட்டன. அநுராதபுரம்- சாலியபுர இராணுவ முகாமைச் சேர்ந்த கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஜயந்த சுரவீர, நகர கட்டளை அதிகாரி மேஜர் அஜித் ஜயரத்ன, கோப்ரல் கபிலகுமார மற்றும் சுரங்க வன வள திணைக்களத்தின் வில்பத்து சரணாலய பொறுப்பதிகாரி வசந்த புஸ்பானந்த, வனவள பரிசோதகர் மஹேஸ் வித்தானகே, வழிகாட்டும் உத்தியோகஸ்தர்களான சந்தன பிரதீப் மற்றும் கெலும் ஜயவர்தன ஆகிய எட்டுப்பேருமே சடலங்களாக நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இவர்கள் அனைவரும் பயணம் செய்த வாகனமும் மீட்கப்பட்டுள்ளது. அதில் துப்பாக்கி சூட்டு சேதங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காட்…
-
- 0 replies
- 567 views
-
-
கடல்ப் பயணம் குறித்து பொதுமக்களுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளோம் : அரச சமாதானச் செலயகம் திருகோணமலைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கப்பல் பயணத்தில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாமென தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்திருக்கும் எச்சரிக்கையானது நாட்டின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படுத்தியிருப்பதுடன், போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயல் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினர் மீது கடல்வழியாகத் தாக்குதல்களை ஆரம்பிக்க இருப்பதால் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான கடல்வழிப் போக்குவரத்தில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாமென விடுதலைப் புலிகள் அண்மையில் எச்சரித்திருந்தனர். இந்த எச்சரிக்கை தொடர்பாக அரசாங்…
-
- 1 reply
- 737 views
-
-
கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் இதுவரை விடுக்கவில்லை-துரைரட்ணசிங்கம் திருகோணமலையில் பொலிஸாரும், கடற்படையினரும் இணைந்து நடத்திய தேடுதலின் போது கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்தார். நேற்று அதிகாலை முதல் பொலிஸாரும், கடற்படையினரும் இணைந்து திருகோணமலை ஆனந்தபுரி, தேவநகர் ஆகிய பகுதிகளில் பாரிய தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன் போது சந்தேகத்தின் பேரில் பல தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். கைதுசெய்யப்பட்டு உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் நேற்றையதினமே விடுவிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகிய…
-
- 0 replies
- 595 views
-
-
'இலக்கத் தகடற்ற வெள்ளை வான் என்னைப் பின் தொடர்கின்றது': சிறீபதி சூரியாராச்சி "கடந்த சில நாட்களாக இலக்கத் தகடற்ற வெள்ளை வான் என்னைப் பின்தொடர்கிறது, எனவே எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது" என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாவது: "மங்கள சமரவீரவையும் என்னையும் அமைச்சர் பதவிகளில் இருந்து வெளியேற்றிய பின்னர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய எமது பாதுகாப்புக்களும் விலக்கப்பட்டிருந்தன. எமது உயிர்களுக்கு விடுதலைப் புலிகளால் மட்டுமல்லாது வேறு சிலராலும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நோக்குடன் தான் இவை செய்யப்பட்டுள்ளன. ந…
-
- 10 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பில் 1,27,707 பேர் இடம்பெயர்வு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஷெல் தாக்குதலையடுத்து நேற்று மாலை வரை 35,001 குடும்பங்களைச் சேர்ந்த 1,27,707 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் பெரும் நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளது. மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்துள்ளமையினால் படுவான்கரையில் அனைத்து சிவில் நிர்வாக நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.. போரதீவு, பட்டிப்பளை, வவுணதீவு, கிரான் ஆகிய பிரதேச செயலகங்கள் எதுவும் இயங்கவில்லை. போரதீவு, பட்டிப்பளை, வவுணதீவு கோட்டக்கல்வி அலுவலகங்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள், பிரதேச சபைகள் மற்றும் மண்டபத்தடி, படுகாமம், பக்கி எல்ல, உன…
-
- 0 replies
- 615 views
-
-
இராணுவ தளபாடங்கள் மயிலிட்டி, காரைநகர் பகுதியில் இறக்கப்படுகின்றன. வன்னியின் மீது பாரிய இராணுவ நடவடிக்கைக்கு இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் ஒரு கட்டமாக காங்கேசன்துறை முகத்தில் பாரிய கப்பல்களில் இருந்து இராணுவ தளபாடங்கள் இறக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு கப்பல்கள் மூலம் எடுத்துவரப்படும் பொருட்கள் மயிலிட்டி காரைநகர் பகுதிகளில் வைத்து இறக்கப்பட்டு வருகின்றன. காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கப்பல் பயணிகள் எடுத்துச் செல்லப்படும் போது கூட பேரூந்துகள் வெளியில் தெரியா வண்ணம் மூடப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டு இருட்டான நிலையில் கப்பலில் பொது மக்கள் ஏற்றப்பட்டு வருகின்றார்கள். இதே நேரம் காங்கேசன்துறை வீதி வழியாக கடந்த மூன்று…
-
- 11 replies
- 2.8k views
-
-
[திங்கட்கிழமை, 12 மார்ச் 2007, 06:02 ஈழம்] [அ.அருணாசலம்] இந்திய மீனவர்கள் மீது தாம் தாக்குதல்களை நடத்தவில்லை என சிறிலங்கா கடற்படையினர் மறுத்துள்ளதுடன், இரு தரப்பு கடல் எல்லைகளின் இருபுறமும் மீனவர்களை கண்காணிப்பதற்கு இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து செயற்படும் திட்டம் ஒன்றையும் சிறிலங்கா அரசு முன்வைத்துள்ளது. இரு தரப்பும் இணைந்து கடல் எல்லைகளை கண்காணிப்பதுடன், மீனவர்களின் நகர்வுகள் தொடர்பாக தகவல்களையும் பரிமாறிக் கொள்ளும் திட்டம் ஒன்றை செய்து கொள்ள சிறிலங்கா அரசு விரும்புவதாக அதன் வெளிவிவகார அமைச்சு நேற்று ஞாயிற்றக்கிழமை தெரிவித்துள்ளது. அண்மையில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய மீனவர்களுக்கு காயங்களும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெ…
-
- 4 replies
- 1.1k views
-
-
வெலிக்கடையில் 21 கைதிகள் மயக்கம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களில் 21 பேர் நேற்றிரவுவரை மயக்கமுற்றுள்ளனர். இரண்டு பிரதான கோரிக்கைளை முன்வைத்து இன்று நான்காவது நாளாகவும் 42 இளைஞர்கள் உணவு, மற்றும் நீர் அருந்தாது உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
- 3 replies
- 1k views
-