ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142770 topics in this forum
-
இராணுவப் போர்க்கைதிகளுடன் உறவினர்கள் சந்திப்பு. தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறிலங்கா அரச படைகளைச் சேர்ந்த ஐந்து பேரைப் அவர்களது உறவினர்கள் பார்வையிட்டுள்ளனர். கைதிகளைச் சந்திப்பதற்காக அவர்களது உறவினர்கள் செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு ஊடாக இன்று கிளிநொச்சிக்கு அழைத்து வரப்பட்டு இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஒக்ரோபர் 11ஆம் திகதி முகமாலையில் இடம்பெற்ற சமரில் இராணு வத்தைச் சேர்ந்த ஒருவரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி வடமராட்சி கிழக்கு கடற்பகுதி யில் இடம்பெற்ற கடற்சமரின்போது நான்கு கடற்படையினரும் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர். முகமாலையில் இடம்பெற்ற சமரின் போது விடுதலைப்புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்…
-
- 21 replies
- 4.3k views
-
-
இதயபூமி சிறிலங்கா அரசின் இராணுவ மேலான்மை கனவை தகர்க்கும் -அருஸ் (வேல்ஸ்)- இராணுவ வழிகளில் விடுதலைப் புலிகளின் போரிடும் வலிமையை சிதைத்துவிட்டால், அரைகுறைத் தீர்வை தமிழ்மக்களின் தலையில் கட்டிவிடலாம் என்பது சில மேற்குலக நாடுகளின் சிந்தனை. ஆனால் இனப்பிரச்சனை என்ற ஒன்றே இங்கு இல்லை என வாதிடலாம் என்பது சிறிலங்கா அரசின் நப்பாசை. அது தான் தற்போதைய இராணுவ நடவடிக்கைகளின் சுருக்கம். அது மட்டுமல்லாது சிறிலங்காவில் தற்போது தோன்றியுள்ள நிலைமை அனைத்துலக நாடுகளின் போட்டியாளர்களையும் களத்திற்குள் இழுத்து விட்டுள்ளது. பாகிஸ்தான் ஆயுத விநியோகம், பயிற்சிகள் வழங்குதல், தாக்குதல்களுக்கு ஆலோசனை வழங்குதல், புலனாய்வுத் தகவல்களை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. …
-
- 14 replies
- 3.9k views
-
-
மூதூர் படுகொலைகள்: சிறிலங்கா அரசை சாடியுள்ளது அனைத்துலக சட்டவியலாளர் ஆணைக்குழு ஜளுயவரசனயல ஆயசஉh 10 2007 06:18:06 யுஆ புஆவுஸ ஜயாழ் வாணன்ஸ திருணோமலை மூதூரில் தொண்டர் அமைப்பின் பணியாளர்கள் 17 பேரை படுகொலை செய்தவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்பதை நாம் நம்புகிறோம். ஆனால் அதனை உறுதிப்படுத் முடியாது என அனைத்துலக சட்டவியலாளர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்டில் படுகொலை செய்யப்பட்ட பணியாளர்களின் வழக்கை விசாரித்த அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் போன்றவர்களை சந்தித்த பின்னர் அனைத்துலக சட்டவியலாளர் ஆணைக்குழுவின் அவதானிப்பாளரான மைக்கேல் பிரபாம் ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது:…
-
- 0 replies
- 782 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது மகன் சாள்ஸ் அன்ரனி தலைமையில் தகவல் தொழில்நுட்பத்துறையை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பிரித்தானியாவில் விமானப் பொறியியல்துறை பட்டப்படிப்பை நிறைவு செய்த சார்ள்ஸ் அன்ரனி, ஆறு மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சிக்கு திரும்பியுள்ளார். அதன் பின்னர் இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என தேசிய புலனாய்வுத்துறை அரசாங்கத்திற் அறிவித்துள்ளது. இந்த பிரிவின் மூலம் செய்மதிப் படங்கள், கணணியில் சேகரிக்கப்படும் தகவல்கள், ஏனைய கணணிகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் என்பவற்றை ஆராயமுடியும். தகவல் தொழில்நுட்பப் பிரிவில் ஆய்வு மையமும் உள்ளது. இது விமான எதிர்ப்…
-
- 10 replies
- 2.9k views
-
-
தொடர் தாக்குதல்களால் சுடுகாடாக மாறியுள்ள பச்சிலைப்பள்ளி பிரதேசம். சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் வான் மற்றும் எறிகணை வீச்சுத் தாக்குதல்களினால் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசம் சுடுகாடாக மாறியுள்ளது. பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் இருந்து கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மோதல்கள் வெடித்த பின்னர் மக்கள் முற்றாக இடம்பெயர்ந்தனர். இப்பிரதேசத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் பல வழிபாட்டு ஸ்தலங்கள் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் கட்டடங்கள் என்பன எறிகணை மற்றும் வான் தாக்குதல்களினால் அழிக்கப்பட்டுள்ளன. மக்கள் குடியிருப்புக்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. மக்கள் இடம்பெயர்ந்து இருப்பதன் காரணமாக பச்சிலைப்பள்ளி பிரதேசம் சிறிலங்காப் படையிர…
-
- 0 replies
- 741 views
-
-
[வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2007, 13:08 ஈழம்] [கிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்] "தமிழ் மக்களின் அவலங்களை சிறிலங்கா அரச தலைவர் கேக் வெட்டி கொண்டாடி வரும் நிலையில் தமிழர்கள் தமது அவலங்களை புறந்தள்ள ஓரணியில் போராடுவதை தவிர வேறு வழியில்லை." கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மாவீரர்களான மேஐர் வினோதரன், லெப். பிரியன் ஆகியோரின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: "உலகில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களில் மக்களுடைய முழுமையான பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்பவர்களாக போராளிகள் என்ற வரலாறு இல்லை. உலகில் நடைபெற்ற பல விடுதலைப் போராட்டங்களில் உச்ச நெருக்கடிகள் ஏற்படுக…
-
- 7 replies
- 1.6k views
-
-
இலங்கையின் சனத்தொகையில் பெண்கள் அதிக எண்ணிக்கை தீர்மானம் எடுக்கும் நிலையிலோ தாழ்ந்த மட்டத்தில் சுட்டிக் காட்டுகிறது மகளிர் சமாதான செயலகம் துஷ்யந்தி- இலங்கையின் சனத்தொகையில் பெண்கள் அதிகளவில் இருக்கின்றபோதும் அதிகாரமட்டத்தில் தீர்மானம் எடுக்கும் மகளிர் தொகை மிகக் குறைந்தளவிலேயே உள்ளதாக மகளிர் சமாதான செயலகம் சுட்டிக் காட்டியுள்ளது. சமாதானத்திலும், அபிவிருத்தியிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் மகளிர் சமாதான செயலகத்தை ஆரம்பித்து வைப்பதற்கான ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. அங்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 20 வருடகால இனப் பிரச்சினையால் பலர் காணாமல் ப…
-
- 5 replies
- 1.2k views
-
-
அதிகாரப்பகிர்வு அவசியம்: அமெரிக்கா. "சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து தனது கவலையை தெரிவிப்பதுடன், நீண்டகால தேசியப் பிரச்சனைக்கு அதிகாரப் பகிர்வு மூலமான தீர்வு காணப்பட வேண்டும்" என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. "சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது கடுமையான நிலைப்பாட்டை" அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்தாக சிறிலங்காவிற்கு சென்றிருக்கும் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் ஆசியப் பிராந்திய பிரதி அதிகாரியான ஷ்ரீவன் மான் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை சந்தித்த பின்னர் ஊடகத்துறையினருக்கு கருத்து தெரிவிக்கையில் …
-
- 0 replies
- 787 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு திட்டமிட்டரீதியில் மருந்துத் தடை. - பண்டார வன்னியன் Friday, 09 March 2007 11:42 சிறிலங்கா அரசாங்கம் தமிழர் தாயகப் பகுதிகள் மீது மேற்கொண்டு வரும் மருந்துத் தடைகளை அடுத்து வவுனியாவில் இருந்து மருந்துகள் வந்து சேராமையால் கிளிநொச்சி தருமபுரம் பிரதேச வைத்தியசாலையில் இருந்த மருந்துகள் முற்றாக முடிவடைந்துள்ளன. சுகாதார அமைச்சு வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை அனுப்பும் போது ஒவ்வொரு வருடத்தையும் நான்கு காலாண்டுகளாகப் பிரித்தே அதற்கேற்ப மருந்துப் பொருட்களை அனுப்புவது வழமையாகும். கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் அரசு வன்னிக்காக மருந்துப் பொருட்களை அனுப்பி வைப்பதில் புதிய கெடுபிடிகளை ஆரம்பித்துள்ளதுடன் மருந்துப் பொருட்களை அனு…
-
- 3 replies
- 1k views
-
-
புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவமும் சமதரப்பு அங்கீகாரமும் - சில குறிப்புக்கள பிரான்சிலிருந்து பரணி கிருஸ்ணரஜனி (ஆய்வாளர், ஊடகவியலாளர், விமர்சகர்) அண்மையில் பாரிஸ் பல்கலைக்கழக வளாகத்தில் எனது கற்கைநெறிக்குத் தொடர்பில்லாத போராசிரியர் ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. என்னுடைய துறை பெண்ணியம் (றழஅநn'ள யனெ பநனெநச ளவரனநைள) தொடர்பானது. இவர் அனைத்துலக போரியல் கற்கை நெறி (iவெநசயெவழையெட றயச ளவரனநைள) பேராசிரியர். இப்பேராசிரியர் குறித்தான எனது நண்பன் ஒருவனின் அறிமுகம் அவருடன் பேசவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. ஸ்பெயின் நாட்டவரான அவர் இன்னும் சில வாரங்களில் ஓய்வு பெற இருக்கிறார். விரிவுரைகள் முடிந்து அவர் வரும்வரை பொறுமையாகக் காத்திருந்து அவரைச் சந்தித்தோம். மேற…
-
- 8 replies
- 1.9k views
-
-
சனி 10-03-2007 00:45 மணி தமிழீழம் [தாயகன்] ச்ரீவன் மான் - மகிந்த ராஜபக்ஸ - கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோர் சந்திப்பு அமெரிக்க இராஜாங்க அமைச்சின் தெற்கு, மற்றும் மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான உதவி முதன்மைச் செயலாளர் ச்ரீவன் மான், சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். சமாதான முயற்சிகள், மனித உரிமை மீறல்கள், மற்றும் போர் நடைபெறும் பகுதிகளுக்கு இராஜதந்திரிகள் செல்வது உட்பட பல்வேறு விடயங்கள் இந்தச் சந்திப்புக்களில் ஆராயப்பட்டுள்ளன. சிறீலங்காவிற்கான இரண்டு நாட்கள் பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் உயர் மட்ட அதிகாரியான ச்ரீவன் மானுடன், கொழும்புக்கான அமெரிக்கத் தூதர் றொபேட் ஓ பிளே…
-
- 0 replies
- 778 views
-
-
அனுராபுதரம் - வில்பத்து பிராந்திய இராணுவத் தளபதி உட்பட 8 பேர் பலி [வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2007, 20:04 ஈழம்] [தாயக செய்தியாளர்] அநுராதபுரம் வில்பத்து பிராந்திய சிறிலங்கா இராணுவத் தளபதி கேணல் ஜயந்த சுரவீர உட்பட 4 இராணுவத்தினரும் 4 வன அலுவலர்களும் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு வில்பத்து வனச் சரணாலயத்துக்குரிய சிறிலங்கா இராணுவத் தளபதி கேணல் ஜெயந்த சுரவீர மேலும் பல இராணுவத்தினருடனும் வன அலுலர்களும் தேடுதல் நடவடிக்கைக்காக சென்ற போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா படைத்துறை தெரிவித்துள்ளது. இதன்போது கேணல் சுரவீர உட்பட 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் வன அலுவலர்கள் 4 பேரும் கொல்ல…
-
- 0 replies
- 1.2k views
-
-
தென்தமிழீழத்தில் புல்லுமலை நோக்கிய படை நடவடிக்கை ஒன்றை சிறீலங்கா படையினர் ஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்புச் படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று மதியம் இப்படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கனரக ஆயுதங்கள், எறிகணை, மற்றும் பல்குழல் சகிதம் முன்னேற்ற நகர்வு இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து கருத்துரைத்திருக்கும் தமிழீழ இராணுவப் பேச்சாளர் திருமலையின் களயதார்தம் கடந்த 25 வருடங்களாக கரத்தடிப் போர் முறையே முன்னெடுக்கப்பட்டதாகவும் தற்போது புல்லுமலைப் பகுதி நோக்கி முன்னேறும் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளின் போராளிகள் களமாடி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சம்பூர் மற்றும் வாகரை ஆக்கிரமிப்பு நடவடிக்கையை பெரும்வெற்றிச் செய்திய…
-
- 3 replies
- 2.3k views
-
-
சடலங்களுக்கு காரணமானோர் பெற்றதாயின் மார்பகங்களை கடித்துச் சாப்பிடும் காட்டு மிராண்டிகள் * அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார பெற்றதாயின் மார்பகங்களை கடித்து சாப்பிடும் காட்டு மிராண்டிகளே முகங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு காரணமானவர்களென அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார கடும் விசனம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன் கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், முகங்கள் எரிக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளவர்களி
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழர் தாயக மாணவர்களின் உரிமைகள், உயிர்கள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை * சிவனேசன் எம்.பி. சிறுவர் பாதுகாப்பு நிதிய அதிகாரிக்கு மகஜர் வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகத்து மாணவர்களின் மறுக்கப்படும் உரிமைகளும் பறிக்கப்படும் உயிர்களும் தடுக்கப்பட வேண்டும் என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கி. சிவனேசன் ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதிய யாழ்ப்பாண வதிவிடப் பிரதிநிதிக்கு அனுப்பியுள்ள அவசர மகஜரில் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஸ்ரீலங்காவில் உள்ள வட கிழக்கு பிரதேசம் தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. 1839 ஆம் ஆண்டிற்கு முன்பு வட, கிழக்கு பிரதேசம் தனித்துவமாக மதிக்கப்ப…
-
- 0 replies
- 880 views
-
-
மக்களை மீளக் குடியமர்த்துவதெனின் இராணுவ ஆயுதக்குழுக்களைக் கட்டுப்படுத்தவேண்டும் : ஜ.நா மட்டக்களப்பில் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருக்கும் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு முன்னர் அப்பகுதிகளில் செயற்பட்டுவரும் ஆயுதக்குழுக்களைக் கட்டுபடுத்தவேண்டும்.எனவும் மக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஜ.நா.மனித உரிமைகள் அமைப்பின் சர்வதேச முகவர் அமைப்பின் நிலையக்குழு தெரிவித்துள்ளது. மீளக்குடியமர இருப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும் எனவும் அத்துடன் சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள இடைத்தங்கள் முகாமிலுள்ள இளைஞர்கள் சிறிலங்கா இராணுவ ஒட்டுக்குழுவால் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றனர்;…
-
- 0 replies
- 649 views
-
-
வயாகரா' அருந்தியவர்போன்று ரணில் காரணம் தெரியும் என்கிறார் அளுத்கமகே - டிட்டோ குகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் - `வயாகரா' அருந்தியவர் போன்று ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதாக பிரதியமைச்சர் மகிந்தானந்த அளுத் கமகே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசர கால சட்டநீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒரு யுத்தவெறியர் அல்லர். அவர் சமாதானத்திற்கும் தயாராக உள்ளார். இராணுவம் ஈட்டிவரும் வெற்றிகளை கொச்சைப்படுத்துவதிலும், முப்படையினரின் தன்னம்பிக்கையினை சிதறடிப்பதிலும் ஐ.தே.க. திட்டமிட்டு செயற்பட்டு வர…
-
- 2 replies
- 943 views
-
-
படைப் பிரிவுகள் பல இருந்தும் ஒரு அரசியல் கொலையைத் தானும் துப்புத்துலக்க முடியாத நிலைமையில் அரசாங்கம் சிவநாதன் கிஷோர் சாடுகிறார் அரசாங்கத்திடம் படைகளும் புலனாய்வு பிரிவுகளும் இருக்கின்ற போதிலும் இதுவரை இடம்பெற்ற ஏதாவது ஒரு அரசியல் கொலையைப் பற்றிக்கூட துப்புதுலக்க முடியாமல் இருப்பது கவலையளிக்கிறதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே கிஷோர் எம்.பி. இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்; இந்த அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் தான் ஒவ்வொரு நாளும் எமது தமிழ் மக்கள் கொல…
-
- 0 replies
- 617 views
-
-
நெல்லியடியில் தாக்குதல் - ஒரு சிப்பாய் பலி - இருவர் காயம் இன்று மாலை 3 மணியளவில் நெல்லியடி-வதிரி பகுதியில் நிகழ்ந்த தாக்குதலில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டும் மற்றும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் பருத்தித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கைக்குண்டு தாக்குதலா அல்லது கிளைமோர் தாக்குதலா என யாழ்பாண இராணுவ மையம் உத்தியோக பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.கொல்லப்
-
- 0 replies
- 652 views
-
-
சரக்கு விமானம் மூலம் குடா நாட்டிற்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உலக உணவு திட்டம் எண்ணியுள்ளது உலக உணவுத்திட்டம் யாழ் குடா நாட்டிற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை விமானம் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தெற்குத் தேவையான சரக்கு விமானத்தினை உள்ளுரிலோ பெற்று மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை யாழ் குடாநாட்டிற்கு அனுப்ப எண்ணியுள்ளோம் . இதற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கும் வரை காத்திருப்பதாக உலக உணவுத் திட்ட இலங்கைக்கான பணிப்பாளர் ஜெப் ரப்ட் டிக் ஏ.எப்பிக்கு தெரிவித்துள்ளர் http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews
-
- 0 replies
- 664 views
-
-
ஹெலஉறுமயவின் மேதானந்த தேரர் கூறுகிறார் -டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- வடக்கு- கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் அப்பாவி சிங்கள மக்களை விடுதலைப் புலிகள் படுகொலை செய்துவரும் நிலையில் கொழும்பிலுள்ள 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் சிங்கள மக்களே அடைக்கலம் வழங்கி பாதுகாப்பளித்து வருவதாக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மேதானந்த தேரர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்நாட்டிலுள்ள பயங்கரவாதம் மேலும் விரிவடையாமலிருக்க அவசரகால சட்டம் அவசியமாகும…
-
- 0 replies
- 809 views
-
-
பவள் மீது கிளைமோர் தாக்குதல் - 3 படையினர் பலி - 13பேர் படுகாயம் - பாண்டியன் குசனையலஇ 09 ஆயசஉh 2007 16:21 மட்டக்களப்பு - பதுளை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மகா ஓயாப் பகுதியில் வைத்து சிங்களப் படையினர் பயணித்த 'பவள்" கவச ஊர்தி இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலின்போது மூன்று படையினர் கொல்லப்பட்டும், 13பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தோர் சிங்கள அதிரடிப் படையினர் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை. http://sankathi.org/news/index.php?option=...09&Itemid=1
-
- 1 reply
- 1.3k views
-
-
Tamil Tiger bases 'are captured' By Roland Buerk BBC News, Colombo The army denies any major operation is taking place Sri Lanka's military says it has overrun four Tamil Tiger rebel bases in the north-east of the country after three days of fighting. Military spokesman Brig Prasad Samarasinghe said the surviving rebels had run away. Meanwhile, 18,000 people have fled more fighting further south near the town of Batticaloa. Some 4,000 people have died in growing violence since December 2005 despite a ceasefire still officially holding. 'Threatened' Ground troops backed by artillery captured the Tamil Tiger bases before da…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பில் தமிழ் வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளார். - பண்டார வன்னியன் Friday, 09 March 2007 15:53 கொழும்பு கொள்ளுப்பிட்டியில் மருந்தகம் ஒன்றினை நடாத்திவரும் நடேசன் வேலாயுதம் (73) எனும் தமிழ் வர்த்தகர், நேற்றிரவு முச்சக்கரவண்டி ஒன்றில் தெகிவளையிலுள்ள தனது இருப்பிடத்திற்கு சென்று கொண்டிருக்கையில் இனம் தெரியாத ஆயுதபாணிகளால் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள பொஸ்வெல் வீதியருகே கடத்திச்செல்லப்பட்டுள்ளார் விசாரணை மேற்கொள்ளவேண்டும் எனக்கூறியே இவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக முச்சக்கரவண்டி ஓட்டுனர் தெரிவிக்கின்றார். இக்கடத்தல் தொடர்பாக தெகிவளை பொலிஸில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளத
-
- 0 replies
- 898 views
-
-
மணலாற்றின் புலிகளின் இலங்குகள் மீது பீரங்கி தாக்குதல் வீரகேசரி இணையத்தளப்பிரிவு மணலாறு பகுதியில் விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்கு மீது இராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல் நடத்தியுள்ளனர் . விடுதலைப் புலிகள் ஒன்று கூடும் இடங்களிஅ இலக்கு வைத்தே நேற்று மாலை இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது எனினும் இத்தாக்குதல் போது ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னும் தெரிய வரவில்லை
-
- 0 replies
- 1.3k views
-