ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
[Tuesday April 03 2007 12:56:50 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையின் கிழக்கே நடைபெற்ற மோதல்களின் போது விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் இராணுவத் துருப்புகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் நான்கு நிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இலங்கை இராணுவத்தில் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த பல மாதங்களாக கிழக்குப் பகுதியில் தொடர்ந்து மோதல்கள நடைபெற்று வருகின்றன. அங்கு விடுதலைப் புலிகள் வசம் இருக்கும் பகுதிகளை விட்டு அவர்களை இலங்கை இராணுவம் வெளியேற்ற முயன்று வருகிறது. 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இருதரப்பினராலும் புறந்தள்ளப்ப…
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளுக்கு அவதூறை ஏற்படுத்தும் போலிப் பரப்புரையில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபடுகிறது - இளந்திரையன் விடுதலைப் புலிகள் மீது அவப் பெயரை ஏற்படுத்தும் பரப்புரைகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். மயிலாம்பாவெளியில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட 6 சிங்கள தொழிலாளர்கள் மற்றும் இன்று மதியம் கொண்டவெட்டுவான் பகுதியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுடனும் விடுதலைப் புலிகளைத் தொடர்பு படுத்தி சிறீலங்கா அரசாங்கம் விசமப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறதை அடுத்து விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் சிறீலங்கா அரசின் இக்குற்றச் சாட்டை முற்றாக நிராகரித்துள்ளார். தமது விடுதலை அமைப்புக்கு அவதூறு ஏற்படுத்தும் சதி முயற்சியில் ஒரு…
-
- 0 replies
- 717 views
-
-
சார்க் மாநாட்டில் ஆதரவைப் பெறும் திட்டமிட் குண்டு வெடிப்பே கொண்டைவெட்டுவான் பேரூந்துத் தாக்குதல் - சீராளன் கொண்டைவெட்டுவான் பேரூந்துக் குண்டு வெடிப்பானது சார்க் மாநாட்டில் ஆதரவைப் பெறும் சிறீலங்கா அரசாங்கம் ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இலண்டன் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அப்பாவிப் பொதுமக்களை கொன்று விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது அர்த்தம்மில்லாதவொன்று என சீராளன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீதான படுகொலைகளைச் மேற்கொள்ளுவதற்கு சிறீலங்காப் படையினர் தரப்பில் போதியளவு துணை இராணுவக் குழுவினர் இருக்கின்றனர். இவ்வாறு படை…
-
- 0 replies
- 728 views
-
-
அரசுடன் இணைந்த ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் மீண்டும் எதிர்கட்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எட்வாட் குணசேகர இன்று மீண்டும் பாராளுமன்றில் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றில் ஆற்றிய விசேட உரையை அடுத்தே எட்வேட் குணசேகர எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். இதேவேளை இவருக்கு வழங்கப்பட்டிருந்த புகையிரத விவகார பிரதியமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இவர் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்ததையடுத்து ஏற்பட்ட சர்ச்சையில் பாராளுமன்றம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஒத்தி வைக்கப்பட்டது. pathivu.com
-
- 0 replies
- 752 views
-
-
நோர்வே றேனா இராணுவ முகாமில் புலிகளுக்குப் பயிற்சி [03 - April - 2007] பயங்கரவாதத்திற்கு எதிரான நோர்வே நாட்டவர்கள் என்ற பெயரிலான ஒரு பிரபல சர்வதேச அமைப்பின் தலைவரான போல்க் றோவிக் எனப்படும் நோர்வே நாட்டவர் அண்மையில் கனடாவில் நோர்வேயில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளை பற்றிய பல தகவல்களை வெளியிட்டுள்ளார். இவ்வாறு நோர்வே அரசாங்கம் புலிகள் அமைப்பின் குழுவினரிற்கு நிதி உதவிகளைச் செய்து வருவதாகவும் மேலும் தமிழர் புனர்வாழ்வு அமைப்பு மூலமாக நோர்வே அரசு கொடுக்கும் அனைத்து நிதி உதவிகளும் புலிகள் இயக்கத்திற்கே போய்ச் சேருவதாகவும் அவர் ப கிரங்கமாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், நோர்வேயிலுள்ள றேனா (RENA)இராணுவ முகாமில் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு இராணுவப் பயிற்சி அழி…
-
- 0 replies
- 1.1k views
-
-
முஸ்லிம்களுக்கு தனியான ஆட்சி அதிகார அந்தஸ்து வழங்கப்பட்டால் வடக்கு, கிழக்கு இணைப்பை ஆதரிப்போம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு முஸ்லிம்களுக்கான தனியானதொரு ஆட்சி அதிகார அலகுடன்கூடிய அந்தஸ்தொன்று வழங்கப்படுமேயானால் தற்போது பிரிந்துள்ள வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைவதை ஒருபோதும் எதிர்க்கமாட்டோம் இவ்வாறு சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கல்முனைப் பிரதேச அபிவிருத்தி சம்பந்தமாக பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் சந்திப்பில் உரையாற்றிய அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எஸ்.எஸ். ஹமீட் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: இன்று தமிழ்க் கட்சிகளுள் ஒன்றான ஈ.பி.டி.பி. முஸ்லிம்களுக்கென ஒரு உப அலகு…
-
- 0 replies
- 765 views
-
-
வவுனியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட இரு இளைஞர்களும் அப்பாவிகள் வவுனியா திருநாவற்குளம் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்ட இரு இளைஞர்களும் அப்பாவிகளெனவும் அவர்களுக்கு எந்தவொரு இயக்கத்துடனும் தொடர்பில்லையென்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். திருநாவற்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மைதானத்தில் விளையாடிவிட்டு வந்த இரு இளைஞர்களை, மோட்டார் சைக்கிளொன்றில் வந்தவர்கள் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். கொல்லப்பட்ட இருவரும் வவுனியாவில் இயங்கும் தமிழ் அமைப்பொன்றின் உறுப்பினர்களெனவும் இருவரையும் விடுதலைப்புலிகளே சுட்டுக் கொன்றதாகவும் பொலிஸார் கூறியதுடன் இருவரது சடலங்களையும் வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். இ…
-
- 0 replies
- 898 views
-
-
யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா? விடுதலைப் புலிகளுடன் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை நீடிப்பதா? அல்லது ரத்துச் செய்வதா? என்பது தொடர்பாக அரசாங்கம் மக்கள் கருத்துக்கணிப்பை நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு அபிப்பிராயங்களை வெளியிட்டுள்ளன. 2002 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி அன்றைய அரசாங்கத்தில் பிரதமர் பதவி வகித்த ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையே நோர்வே அனுசரணையுடன் போர் நிறுத்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 5 வ…
-
- 0 replies
- 736 views
-
-
அரசியல் - இராணுவ வழிகள் இரண்டும் கலந்தே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் இந்தியாவும் இந்த அணுகுமுறையை ஆதரிப்பதாகப் புதுடில்லியில் போகொல்லாகம புதுடில்லி,ஏப்ரல் 3 எமது நாட்டின் இனப்பிரச்சினைக்கு, அரசியல் மற்றும் இராணுவ வழிகள் கலந்த அணுகுமுறையைக் கைக்கொண்டே தீர்வு காண்பதற்கு முடிவுசெய்துள்ளோம். மேற்படி அணுகுமுறை மூலமான எமது முயற்சியை இந்தியாவும் ஆதரிக்கிறது. இவ்வாறு இங்கு தெரிவித்தார் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம. நாளை ஆரம்பமாகும் "சார்க்' நாடுகளின் 14ஆவது உச்சிமாநாட்டை முன்னிட்டு இந்திய, இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் நேற்றுச் சந்தித்துப் பேசினர். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போதே இலங்கை அமைச்சர் முன்கண்டவாறு தெரிவித்தார்.…
-
- 1 reply
- 766 views
-
-
நாடாளுமன்றில் நாளை சிவாஜிலிங்கம் விசேட அறிக்கை சென்னை, ஏப்.3 தாம் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாளை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பாக சிவாஜிலிங்கம் இந்த விசேட அறிக்கையைச் சமர்ப்பித்து உரையாற்றுவார். இதேவேளை, நாளை பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகுமாறு, பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு சிவாஜிலிங்கத்தைக் கேட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த வெள் ளிக்கிழமை விசாரிக்கப்பட்ட பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 1.30மணிக்கு மீள ஆஜராக வேண்டும் என்று முன்பு ப…
-
- 0 replies
- 812 views
-
-
யுத்த நிறுத்தத்தைத் தொடர்வதா ? தெற்கே தீர்மானிக்க வேண்டும் ` இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டின் எதிர்காலம் குறித்துத் தீர்மானிப் பதற்காக, அது தொடர்பாக சர்வஜனவாக் கெடுப்பு ஒன்று நடத்தினால் என்ன என்பது பற்றி அரசுத்தலைமை ஆராய்ந்து வருவதாக ஒருபுறத் தில் செய்தி வெளியாக மறுபுறத்தில், ""யுத்த நிறுத்த உடன்பாட் டைப் பேணுவதற்கு அரசு விரும்பாவிட்டால், அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்க வாய்ப்பே யில்லை. அதேவேளை மோசமான போரும் வெடிக் கும்.'' என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பா ளர் சு. ப. தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார் என்ற தகவலும் வெளியாகியிருக் கின்றது. ""யுத்த நிறுத்த உடன்பாட்டின் அடிப்பட…
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழில் 2 வெள்ளை வான் கடத்தல்கள்- 3 பேரை காணவில்லை யாழில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் 2 பொதுமக்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதுடன், சனிக்கிழமை 3 பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர். இவர்களில் ஒருவர் கொழும்புத்துறையில் உள்ள சிவில் நிர்வாக காரியாலயத்திற்கு சென்ற பின்னர் திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்களால் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளை வானில் வந்த அடையாளம் ஆயுததாரிகளால் பாசையூரைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான பாலச்சந்திரன் என்று அழைக்கப்படும் சுவாக்கின்பிள்ளை வாயூரன் (வயது 39) சனிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவிலும், யாழ். நகரில் உள்ள கொய்யாத்தோட்டத்தை சேர்ந்த பிரான்…
-
- 0 replies
- 601 views
-
-
சிறப்புப் பார்வை. நன்றி பதிவு http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai&file=300307
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகளால் ஆபத்தில்லை: இந்திய விமானப்படை ஏப்ரல் 02, 2007 குவாலியர்: விடுதலைப் புலிகளின் விமானப் படையால் இந்தியாவுக்கு எந்தவிதமான மிரட்டலோ, ஆபத்தோ இல்லை என்று தென் பிராந்திய விமானப்படை தளபதி யஷ்வந்த் ராவ் ராேன கூறியுள்ளார். குவாலியரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் அவர்களது பலத்தைக் காட்டுகிறது. இருப்பினும் இதனால் இந்தியாவுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. இருப்பினும் நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து வகையிலுிம் நமது படைகள் தயாராகவே உள்ளன. என்ன நிலைமை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கக் கூடிய திறமை நம்மிடம் உள்ளது. போதிய அளவில் ரேடார் வசதிகள் நம்மிடம் உள்ளன. போர் விமானங்கள், நவீன சாதனங்கள் என நமது …
-
- 6 replies
- 1.8k views
-
-
திங்கள் 02-04-2007 21:50 மணி தமிழீழம் [முகிலன்] மகிந்த ராஜபக்ச மணிசங்கர் ஜயர் பஞ்சாயத்து முறைமை தொடர்பில் கலந்துரையாடல் இந்திய பஞ்சாயத்து அமைச்சர் மணிசங்கர் ஜயரை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று புதுடெல்லியில் அமைந்துள்ள மயூரா சராட்டன் விடுதியில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமைச்சர் மணிசங்கர் ஜயரின் பஞ்சாயத்து முறைமை கொண்ட அதிகாரப் பகிர்வு தொடர்பிலான ஆலோசனையைப் பெறுமுகமாகவே இச்சந்திப்பு இருவரும் கலந்துரையாடியுள்ளனர். பதிவு
-
- 9 replies
- 1.7k views
-
-
வன்னியில் விடுதலைப் புலிகள் தமது விமானங்களை பறக்க விட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக படையினர் மூலம் பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு தடவைகள் இரண்டு விமானங்கள் வானில் பறந்து பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதை அவதானித்துள்ள படையினரே இத்தகவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, பிற்பகலிலும் இரவிலும் புலிகள் தம்வசமுள்ள விமானங்களை வானில் பறக்க விடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வானில் பறக்கும் விமானங்கள் பயிற்சி முடிவடைந்த பின்னர் பொதுப்போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள அகலப் பாதையில் பாதுகாப்பான முறையில் இறக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விமானங்கள் எங்கிருந்து வானுக்கு ஏற்றப்பட்டுள்ளன என்பது குறித்து சரியாக …
-
- 4 replies
- 2k views
-
-
புலிகளின் விமானப்படை பற்றிப் பத்திரிகைகளும் செய்தி நிறுவனங்களும் ஆய்வாளர்களும் அடிக்கடி கதைத்து வருகிறார்கள். கொஞ்சக் காலத்தின் முன் ஓங்கி வீசிய அலை இப்போது ஓய்ந்துள்ளது. அவரவர் தமது கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டு, பிராந்திய அரசியல்களுடன் எங்காவது ஒரு இடுக்கைப் பார்த்துப் பொருத்தி ஆய்வுகள் செய்தார்கள். ஏதோ இப்போது தான் புலிகள் புதிதாக விமானம் செய்தார்கள், வாங்கினார்கள், ஓடுபாதையமைத்தார்கள் என்ற வகையில் அவ்வாய்வுகள் அமைந்திருந்தன. சிறிலங்கா அரசாங்கம்கூட தாம் ஆறு வருடங்களின்முன்பு புலிகளின் விமானப்படை பற்றிப் புலம்பியதையோ, கொழும்பு மாளிகைகளில் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் பொருத்தியதையோ மறந்தது போலப் பிதற்றியது. உண்மை என்னவெனில் புலிகள் தமது வான்படை பற்றி அதிகா…
-
- 27 replies
- 9.7k views
-
-
விடுதலைக்கு உழைத்த பேரறிவாளர் மாமனிதர் ஜெயக்குமார் அவர்கள். - பண்டார வன்னியன் Tuesday, 03 April 2007 12:08 கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக அவுஸ்ரேலிய மண்ணில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளராகச் செயற்பட்டு எமது போராட்டத்தை வலுவுள்ள ஒரு சக்தியாக மாற்றுவதில் அரும்பாடுபட்டு உழைத்த மாமனிதர் திரு.தில்லை ஜெயக்குமார் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி இடிபோல் அன்பும் பண்பும் ஆளுமையும் கொண்ட ஒரு உன்னதமான மாமனிதர் அமைதி ஆழ்ந்த சிந்தனை அயராத உழைப்பு அடக்கமான சுபாவம் அன்னாரது அருங்குணங்கள். அவரின் பிரிவினால் வாட்டமுறும் அனைத்துத் தமிழீழ மக்களுக்கும் குறிப்பாக அவர் அரும்பணியாற்றிய அவுஸ்ரேலியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கும் அனைத்துலகத் தொடர்பகம் தம…
-
- 0 replies
- 927 views
-
-
தாயக உறவுகளையும் புலம்பெயர்ந்தோரையும் இணைக்கும் ஒரு தொலைக்காட்சி சேவை [01 - April - 2007] * 3 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்.ரி.ரி. தொலைக்காட்சிச் சேவை - வெளிவாசல் பாலன்- தமிழ்க் காட்சியூடகப் பரப்பில் முற்றிலும் மாறுபட்டிருக்கின்றன இரண்டு தொலைக்காட்சிகள். ஒன்று தமிழீழ தேசியத் தொலைக்காட்சி. மற்றது மக்கள் தொலைக்காட்சி. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி வன்னியைத் தளமாகக் கொண்டு இயங்குகின்றது. தமிழகத்தில் சென்னையில் மையங் கொண்டியங்குகின்றது மக்கள் தொலைக்காட்சி. தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் பதினைந்துக்கு மேற்பட்ட தொலைக்காட்சிகளில் இருந்து வேறுபட்டிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி. மற்றத் தொலைக்காட்சிகளின் ஒத்த தன்மைகளில் இருந்து விலகி வேறுபட்டிருப்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
“சார்க்” நாடுகளின் ஆதரவைப்பெற அரசின் திட்டமிட்ட செயலே அம்பாறைக் குண்டுவெப்பு: சீராளன். - பண்டார வன்னியன் Tuesday, 03 April 2007 11:47 சிறிலங்கா அரசாங்கம் சார்க் மநாட்டில் கலந்து கொண்டு மேலும் ஆதரவைப் பெறும் முயற்றியாகவே பொதுமக்கள் மீதான கொலைகளை செய்வதாக நாங்கள் கருதுகின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறை துணைப்பொறுப்பாளர் சீராளன் தெரிவித்துள்ளார். பி.பி.சி தமிழோசைக்கு தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் இப்படியாக அப்பாவி மக்களைக் கொலை செய்வதன் மூலம் நாங்கள் இந்த விடுதலைப் போராட்டத்தை நடத்துவதில் அர்த்தமில்லை. இப்படியான படுகொலைகளைச் செய்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு போதிய ஆளணிகள் இருக்கின்றது.…
-
- 0 replies
- 887 views
-
-
அவுஸ்ரேலியாக் கிளைப் பொறுப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் தேசியத் தலைவரால் மாமனிதராக மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்ரேலியக் கிளையின் பொறுப்பாளர் தில்லைநடராஜா ஜெயக்குமார் அவர்கள் தமிழீழ விடுதலைக்கு அவர் ஆற்றிய பணியை மதிப்பளித்து தமிழீழத் தேசியத் தலைவரால் மாமனிதர் எனும் அதியுயர்ந்த கெளரவம் வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அவுஸ்ரேலியப் பொறுப்பாளராகவும் அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழ் மக்களை தமிழ்த் தேசியத்தின்பால் ஒன்றிணைத்து தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வியாழக்கிழமை இவர் தீடீர் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார். இவரின் இறுதிக் கிரிகைகள் அடுத்த வாரம் நடுப்பகுதியில் இடம்பெறும் என அறிவிக்கப்…
-
- 3 replies
- 1.4k views
-
-
சிங்களவர் பின்னும் சூழ்ச்சி வலைகள்! விடுதலை பெற்ற நாள் முதலாக, பாக்கு நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் தமிழரைக் கொலை செய்வதற்காகவே இலங்கையின் கடற்படை பயன்பட்டு வந்துள்ளது. தமிழ்நாட்டுத் தமிழரைச் சுட்டுக்கொன்று பழகியவர்கள் சிங்களக் கடற்படையினர். 1950களின் தொடக்கத்தில் தமிழ் நாட்டிலிருந்து வந்து இலங்கையில் வாழும் தம் உற்றார் உறவினரைச் சந்தித்து உறவு கொண்டாட வந்த தமிழகத் தமிழரே இலங்கைக் கடற்படையின் முதற்குறி, இவர்களைக் கள்ளத் தோணி என அழைத்துக் கொச்சைப்படுத்தினர், சுட்டுத் தள்ளினர். முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் உறவுகள் இன்றும் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் வாழ்கின்றனர். அவர்களுள் ஒருவர், கலைஞரின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் கலைமாமண…
-
- 4 replies
- 2.3k views
-
-
கஞ்சிகுடிச்சாறு விவசாயக் குளத்தின் அணைக்கட்டு குண்டுவைத்து தகர்க்கப்பட்டமைக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் விபரம் வருமாறு: அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்துவரும் அரசானது தற்போது எஞ்சியிருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தையும் சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் வெளிப்பாடாகவேதான் ஏப்ரல் 1ஆம் திகதி கஞ்சிகுடிச்சாற்று குளத்தை படையினர் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். கஞ்சிகுடிச்சாறு குளத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்தில் இடைப்போக, பெரும்போக நெற்செய்கைக்கான சுமார் பத்தாயிரம் ஏக்கர் நெற்செய்கை செய்ய முடியாமல் நாலாயிர…
-
- 1 reply
- 1k views
-
-
புலிகளின் வான்பலம் குறித்து குழப்பமடைய தேவையில்லை [30 - March - 2007] * இந்திய விமானப்படை புதுடில்லிக்கு தெரிவிப்பு விடுதலைப் புலிகளுக்குள்ள வான்வழி செயற்பாட்டு திறமை குறித்து அதிகளவு குழப்பமடையத் தேவையில்லையென இந்திய அரசாங்கத்துக்கு கூறியுள்ள இந்திய விமானப்படையினர் எதிர்காலத்தில் ஆகாய மார்க்க பாதுகாப்பு ராடார்களை வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்தால் அந்த வேண்டுகோள் சாதகமான முறையில் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளனர். இந்த ராடார்களுடன் தோளிலிருந்து ஏவும் ஏவுகணைகள் (ஐ.ஜி.எல்.ஏ) (IGLA shoulder- tired missiles), நிலத்திலிருந்து வானுக்குத் தாக்கும் ஏவுகணை (SAM) முறைமைகளையும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்ய முடியுமென இந்திய விமானப்ப…
-
- 5 replies
- 2.7k views
-
-
மாமனிதர் ஜெயக்குமார் மறைவுக்கு, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவனின் அறிக்கை --------------------------------------------------------- Jeyakumar left us soon and his death has left a huge void - Thamil Creative Writers Association The Thamil Creative Writers Association is in shock over the sudden death of Thillainadarajah Jeyakumar (54) who gave leadership to the Australian Thamils Co-coordinating Committee for the last two decades. The pain and devastation caused by his death are indescribable. He definitely left us soon and his death has left a huge void that will be difficult to fill. Jeyakumar was an embodiment of selfless-se…
-
- 1 reply
- 1.1k views
-