ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142766 topics in this forum
-
தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளான ஆட்சியதிகாரத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் சிரேஷ்ட முக்கியஸ்தர்களிடையே தோன்றியுள்ள கருத்து முரண்பாடுகள் அமைச்சுப் பதவிகளுக்காக கட்சிதாவும் போக்குகள் என்பன தற்போதைய குழப்பகரமான அரசியல் நிகழ்வுகளாக விசுவரூபமெடுத்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு எதிராக அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடக்கைகள், கைது, காணாமல் போதல், ஆட்கடத்தல், கப்பம் பெறுதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் அனைத்தும் சாதாரணதொரு நிகழ்வாகிவிட்ட நிலைமையே மேலோங்கிக் காணப்படுகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாலைதீவுக்கான உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்கு…
-
- 0 replies
- 941 views
-
-
யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதை மூடப்பட்டு ஆறு மாதங்களைக் கடந்தும், குடாநாட்டுக்கான எந்தவிதமான ஒரு பொருளையும் யாழ். வர்த்தகர்கள் குடாநாட்டுக்கு எடுத்து வராத நிலையில், யாழ். செயலகம், யாழ் மாவட்டத்துக்கான பொருட்களின் உச்ச விலைப்பட்டியல் ஒன்றை வெளியிட்டு "பொதுமக்களை" கோமாளிகளாக மாற்றியுள்ளது. கொழும்பில் நிலை கொண்டுள்ள இரு வர்த்தகர்கள் ஒரு தடவைக்கு பத்துக் கோடி ரூபா இலாபம் என்ற நியதியில், பொருட்களைக் கொண்டு வந்து, அங்காடி வியாபாரிகள் மூலம் பொருட்களை விற்பனை செய்து வருவதும் உண்மையாகும். இந்த நிலையில் அத்தியாவசிய சேவைகள் நாயகத்தின் யாழ். விஜயம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான ஒரேயொரு தரை வழிப்பாதையை இராணுவத்தினர் தம்மிஷ்டப்படி மூடி ஆறுமாத…
-
- 0 replies
- 648 views
-
-
கனகரவி- போர் பல முனைகளினாலும் மக்களுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நாளாந்தம் துன்ப துயரங்களையே அனுபவித்து வருகின்றனர். 05-01-2007 அன்று வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியான புளியங்குளம் முள்ளியவளை வீதியின் நெடுங்கேணிக்கு தெற்குப் புறமாக சிவா நகரை அண்மித்த இடத்தில் உள்ள ஐயனார் கோவில் பகுதியில் வவுனியா மாவட்ட விவசாய திணைக்கள உத்தியோகஸ்தர்களின் பிக்கப் வாகனம் மீதான கிளைமோர் தாக்குலினால் இரண்டு உத்தியோகஸ்தர்கள் உயிரிழந்தனர். இவர்கள் இருவரின் உயிரிழப்பும் வெறுமனமே அவர்களின் குடும்பத்தினரிற்கும், உறவினர்களிற்குமான இழப்பாக நோக்க முடியவில்லை. காரணம் மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு தேவை. உணவ…
-
- 0 replies
- 882 views
-
-
அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த போது இலங்கை - இந்திய உறவுகள் பற்றி பல இந்திய புத்திஜீவிகளுடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. மகாத்மா காந்தியினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய காங்கிரஸ் கட்சியின் அழைப்பில் சென்றிருந்தேன். இந்த மகாநாடு பெரு வெற்றியில் முடிவடைந்திருந்தது. ஏறத்தாழ 300 உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். நோபல் பரிசு பெற்றவர்களான தென்னாபிரிக்காவின் பேராயர் டெஸ்மன் டுட்டு, பங்களாதேஷின் மொஹமட் யூனுஸ் மற்றும் தலைவர்களான லெச்வலீசா, கென்னத் கௌண்டா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் அரசியல் பிரமுகர…
-
- 0 replies
- 884 views
-
-
பீஷ்மர்- சென்ற வாரம் முழுவதும் நேற்று முன்தினம் மாலை வரை தென்னிலங்கையின் அரசியலை உலுக்கிக் கொண்டிருப்பது ஜனாதிபதி ராஜபக்ஷ மேற்கொண்ட அதிரடி `அமைச்சர்கள் பதவி நீக்கங்களாகும். கிழக்கில் கிடைத்த வெற்றிகளை தளமாகக் கொண்டு தனது ஜனரஞ்சகத் தன்மையையும் அதற்கு மேலாக தனது மேலாண்மையையும் நிலை நிறுத்திக் கொண்ட ஜனாதிபதி அவர்கள் வாகரை விஜயத்துடன் இந்த வெற்றிகளுக்கொரு மேலுமொரு கட்ட முத்தாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டார். அதற்கு முதல் வாரம் 18 யு.என்.பி. அதிருப்தியாளர்கள் யு.என்.பி.யுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மாறான முறையில் அமைச்சர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். வந்த அந்த வெள்ளத்தோடு வெள்ளமாக முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கொண்டது. ஏற்கனவே, ஆறுமுகம் தொண்டம…
-
- 0 replies
- 674 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். மாவிலாறு, சம்பூர், மற்றும் வாகரை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் பங்கு கொண்ட படையினருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் நன்றிகளை தெரிவிப்பதற்காகவே அவர்கள் அங்கு சென்றுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவினர் மாவிலாறு ஒயா பகுதியில் அமைந்துள்ள விஷேட அதிரடிப்படையினரின் முகாமுக்கும் , வெலிக்கந்தை 23 ஆவது படைத் தலைமையகத்திற்கும் விஜயம் செய்துள்ளனர். இப்பிரதேசங்களில் வாழும் பொதுமக்களுக்கு அவசியமான தேவைகளை நிறைவேற்ற துரித நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பாதுகாப்பமைச்சின் செயலாளர் உறு…
-
- 0 replies
- 724 views
-
-
தபால் மா அதிபர் சேர்வின் சேனாதீர யாழ்.குடாநாட்டிற்கு ஒரு கிலோவுக்கு மேற்படாத மருந்துப் பொருட்களை மாத்திரமே தபால் பொதியாக அனுப்பிவைக்க முடியுமெனத் தெரிவித்த தபால் மா அதிபர் சேர்வின் சேனாதீர, பொதுமக்கள் யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருட்களை தபால் பொதியாக அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். யாழ்.குடாநாட்டிற்கு தொடர்ச்சியாக தற்போது உணவுப்பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றமையால் அங்கு உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவவில்லையென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எமக்கு அறிவுறுத்தியுள்ளார். யாழ்.குடாநாட்டிற்கு அனுப்புவதற்காக பொதுமக்கள் 5 அல்லது 6 கிலோ பெறுமதியான உணவுப் பொருள் பார்சல்களை தபாலகங்களில் ஒப்படைக்கின்றனர். இப்பார…
-
- 0 replies
- 653 views
-
-
விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்கள் யாரென்பதை ஆதாரங்களுடன் எதிர்வரும் புதன்கிழமை நடத்தவிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அம்பலப்படுத்துவோம் எனத்தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி கட்சியினதும் தலைவரினதும் குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் `புலி' லேபல் ஒட்டப்படுவது நாகரிமாகிவிட்டதென்றும் தெரிவித்தார். இது தொடர்பாக ஸ்ரீபதி சூரியாராச்சி மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் புதன்கிழமை நடத்தவுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் புலிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியோரின் ஒலிநாடாக்களை வெளியிடுவோம். அத்தோடு, செய்து கொண்ட ஒப்பந்தங்கள் என்ன? அதில் யார் கையெழுத்து இட்டிருக்கின்றார்கள்? என்பதையும் வெளியிடுவோம். எம்மிடம் வீடியோ…
-
- 0 replies
- 819 views
-
-
போர்நிறுத்தத்தை விட்டு விலகவேண்டி விசேட ஆராதனைப் போராட்டம். கண்டி தலதாமாளிகையில் சிறீலங்கா அரசாங்கம் எதிர்வரும் பெப்ரவரி 22ம் திகதிக்கு முன் அதாவது போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியடைவதற்கு முன் அதனைகைவிட வேண்டும் எனகோரி பெருமளவிலான பௌத்த பிக்குமார் இணைந்து ஆராதனை போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளார்கள். தேசிய பிக்குகள் முன்னணி இவ்விசேட ஆராதனையை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை என்.ஐ.யு, ஜே.வி.பி ஆகியன இணைந்து எதிர்வரும் 22ம் திகதி போர்நிறுத்த ஒப்பந்தத்தை உடன் கைவிடவேண்டி கொழும்பு கைட்பாக் பகுதியில் பொதுகூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளார்கள் -Pathivu-
-
- 5 replies
- 1.5k views
-
-
யாழில் கிளைமோர் தாக்குதல் - 2 இராணுவம் பலி - 12 பேர்ககாயம். இன்று காலை 11.45 மணியளவில் ஏ-9 பாதையில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் யாழ்செயலகத்தில் இருந்து 300 மீற்றர் தொலைவில் வீதித்துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 12 பேர் காயமடைந்துள்ளனர். இதன்போது காயமடைந்த இராணுவத்தினரை பலாலி இராணுவ வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாக அறியமுடிகிறது.இத் தாக்குதலின் இராணுவத்தினர் சரமாரியாக சுட்டதில் போது ஒருபொதுமகன் கொல்லப்பட்டும் மற்றும் 3 வர் காயமடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது. காயமடைந்தவர்கள் அரியாலையை சேர்ந்த 24 அகவையுடைய ஏ.சந்திரா, 46 அகவையுடைய கே.மோகன், 55 அகவையுடைய …
-
- 17 replies
- 2.7k views
-
-
''வலை வீசும் அரசியலும் ஜே.வி.பியின் வீழ்ச்சியும்'' நா. யோகேந்திரநாதன்- அண்மையில் கொழும்பு அரசியலில் மிக வேகமாகவும் திடீர் திடீர் எனவும் ஏற்படும் மாற்றங்கள் பலருக்கு வியப்பை ஏற்படுத்தக்கூடும். சில சமயங்களில் இவை ஆரசியல் ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்ட செய்கைகளாகவும் தோன்றலாம். ஆனால் சிறீலங்காவின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினால் இது நடைமுறையில் காலம்காலமாக நிலவி வரும் ஒரு மூன்றாம் தர அரசியலின் தொடர்ச்சி என்பதை புரிந்து கொள்ள முடியும். அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் உட்பட பலர் அரசுபக்கம் தாவினர். இவர்களை தம்பக்கம் இழுக்கும் வலையாக திரு. மகிந்த ராஜபக்ஷ மந்திரிப்பதவிகளைப் பயன்படுத்திக் கொண்டார். இதன் பலனாக அரசியலிலே மி…
-
- 1 reply
- 983 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்று வரும் கடத்தல்களை உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா. சிறிலங்காவில் இடம்பெற்று வரும் கடத்தல்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகின்றது. எனினும் அங்கு மோதல்களை தணித்து அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கு உதவும் பொருட்டு ஒரு சிறப்புப் பிரதிநிதியை நியமிக்கும் முடிவை அமெரிக்கா இன்னும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அங்கு இடம்பெற்று வரும் படுகொலைகள், காணாமல் போதல், கடத்தல்கள் போன்றவற்றை சிறிலங்காவில் உள்ள இராஜதந்திரிகள் மூலம் அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. எனினும் உடனடியாக சிறிலங்காவிற்கு ஒரு சிறப்புப் பிரதிநிதியை நியமிக்கும் நோக்கம் அமெரிக்காவிற்கு இல்லை. அண்மையில் அமெரிக்காவின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், சிறி…
-
- 2 replies
- 955 views
-
-
சிறீலங்கா அரசை சூழும் மேற்குலக அழுத்தம் அமெரிக்காவின் ஐனநாயகக்கட்சியை சேர்ந்த (எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலுக்கான) ஐனாதிபதி வேட்பாளர் உட்பட்ட மிகபிரபலமான செனற்ரர்கள் இலங்கையில் நிகழ்ந்து வரும் பாரிய மனிதஉரிமை மீறல்களால் ஆழ்ந்த விசனமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஐனநாயகக்கட்சியின் செனற்றர்களான எட்வேட் கென்னடி. றிச்சேட் டேபின், ஜோன் கெரி, கிறிஸ்ரோபர் டொட் ஆகியோர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் நாளுக்குநாள் கேவலமடைந்துவரும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 14 ம்திகதி அமெரிக்காவிற்கான சிறீலங்கா தூதுவர் பேனாட் குணதிலகவிற்கு எழுதிய கடிதத்தில் இல…
-
- 2 replies
- 1.1k views
-
-
1970 களில் ஆபிரிக்க காங்கிரஸுடன் லண்டனில் ஏற்பட்ட தொடர்பிலிருந்து, 1995 ல் தென்னாபிரிக்காவில் பயிற்சி முகாம் நிறுவியது வரை, அதன் பின் தற்போதைய நிலை வரை விபரமாக, பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை விளக்குகிறது. எங்கட பொடியள் எங்கெல்லாம் எப்படியெல்லாம் கிளை விட்டிருக்கிறார்கள் என அறிய பெருமையாக இருக்கிறது. கட்டுரை ஆங்கிலத்தில்தான். படித்து பாருங்கள். ஈழம் கிடைத்தால் தென்னாபிரிக்கா எங்களை அங்கீகரிக்குமா? http://www.defence.lk/new.asp?fname=20070212_10
-
- 2 replies
- 1.4k views
-
-
மங்கள, சிறீபதி ஆகியோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: சு.க சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் அவரின் குடும்ப உறுப்பினர்களையும், அரசாங்கத்தையும் அவதூறாக விமர்சனம் செய்தமைக்காக முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் மீது சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மகிந்த ராஜபக்சவை அவரது சகோதரர்கள் வழிநடத்துவதாகவும், மகிந்த ராஜபக்சவின் சகோதரர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களை பொதுமக்களின் முன்னிலையில் அம்பலப்படுத்தப் போவதாகவும் முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். தமது கட்சியின் தலைமையை அவதூறாக பேசியதுடன் நாட்டின் தலைவருக்கு சேறு பூசும் நடவடிக்கைகளையும் மேற்கொண்ட மங்க…
-
- 2 replies
- 873 views
-
-
''சுதந்திரதினப் பிரகடனமும் எமது வரலாற்றுக்கடமையும்'' -சி.ஆதித்தன்- கடந்த பெப்ரவரி 04. 2007 அன்று சிறிலங்காவின் 59 வது சுதந்திர தினத்தில் மகிந்த ராஜபக்ச நாட்டின் தலைவர் என்ற வகையிலே ஆற்றியிருந்த உரை மூலம் இனவாதச் சிங்கள அடிப்படை வர்க்கத்தினரிடம் அவர் மீண்டும் தானொரு சிங்கள மேலாண்மை வாதத்தின் கதாநாயகன் என்பதை நிரூபித்துள்ளார். ‘இந்த மகத்துவம்மிக்க நாளில் நான் ஆற்றுகின்ற உரை சம்பிரதாய பூர்வமாக சுதந்திர தினத்தின் தேவைக்காக ஆற்றப்படுகின்ற ஓர் உரையல்ல என்பதையும்இ அதற்கு உறுதிப்பாடான அர்த்தமொன்று பெற்றுத்தரப்பட்டுள்ளது என்பதையும் நான் மிகப் பணிவுடன் குறிப்பிட விரும்புகிறேன்.” இவ்வாறு மகிந்த ராஜபக்ச அவர்களின் சுதந்திரதினப்பிரகடனம் சிங்களவர்களுக்கு உ…
-
- 0 replies
- 862 views
-
-
சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை ஏற்க நீண்ட நேரம் செல்லாது நாட்டுக்கு மிகவும் முக்கியமான தீர்மானமொன்றை நாளை சனிக்கிழமை அறிவிக்கப் போவதாக தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் தம்ரப அமில தேர் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். போர்நிறுத்த உடன்படிக்கையை அரசாங்கம் கிழித்தெறிய வேண்டுமென கொழும்பு விகாரமாதேவிப் பூங்காவில் தொடர்ச்சியான சுழற்சிமுறையான உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்திவரும் தேசிய பிக்குகள் முன்னணி, நாளை தலதாமாளிகையில் விசேட பூஜையொன்றை நடத்தவுள்ளது. விசேட பூஜையின் பின்னர் நாட்டுக்கு முக்கியமானதும், கடுமையானதுமான தீர்மானமொன்றை அறிவிக்க இருப்பதாகவும், இந்தத் தீர்மானது இனப்பிரச்சினைத் தீர்வு த…
-
- 13 replies
- 3k views
-
-
தமிழ்நாட்டில் புலிகளின் செயற்பாட்டுக்கு தி.மு.க உதவுகின்றது: சுப்பிரமணிய சுவாமி குற்றச்சாட்டு. தமிழ்நாட்டில் புலிகளின் செயற்பாட்டுக்கு கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க. ஆகியவை நேரடியாக உதவி வருகின்றன என்று குற்றம் சாட்டியுள்ள ஜனதாக் கட்சித்தலைவர் சுப்பிரமணிய சுவாமி, இதற்காக தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசை பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாகக் கலைக்கவேண்டும் எனக் கோரியிருக்கின்றார். இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் தி.மு.க. அரசு, தமிழகத்தைப் பாதுகாப்பான சொர்க்கமாக மாற்றியிருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாடு கரையோரப் பகுதியில் புலிகளின்…
-
- 10 replies
- 2.2k views
-
-
இந்திய இலங்கை கடற் பரப்பில் அண்மை நாட்களில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட சதி நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும் வெடிபொருட்களும் ஆயுதங்களும் கடத்தப்புடுவதான தோற்ப்பாட்டை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கமும் அதன் துணை இராணுவக் குழுக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன கடற்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய கடற்படையின் பூரண ஒத்துழைப்பை பெற வேண்டிய நிலைக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம் அண்மைக்காலமாக விடுத்த பாதுகாப்பு ஒத்துழைபபு ஒப்பந்தம் தொடர்பான வேண்டுகோள்கள் இந்…
-
- 2 replies
- 1.5k views
-
-
COLOMBO, Sri Lanka - In Sri Lanka's war-torn north and east, where killings happen every day and work is nearly nonexistent, it doesn't take much to entice a man to leave. So when an employment agency offered a steady paycheck for laboring amid Dubai's soaring glass and steel towers, 17 young Sri Lankan men paid their fee to the job brokers — $2,000, a small fortune on this tropical island — and signed up. But instead of going to work, they were locked in a room guarded by a man with a pistol. They had been sold to another agency, they were told, for $1,200 apiece. It took them two weeks to realize where they were: Iraq. "We knew Iraq was dange…
-
- 0 replies
- 832 views
-
-
யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு படையினர் எச்சரிக்கை. யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு படைத்தரப்பினர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் கடந்த புதன் கிழமை நண்பகல் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள இராணுவ காவலரன் மீது இனம் தெரியாதவாகள் கைக் குண்டுத் தாக்குதலை மேற் கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள் இதனைத் தொடாந்து கல்லூரி வளாகத்தில் அத்து மீறிப்பிரவேசித்த படையினர் கல்லூரி மாணவாகளுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளார்கள் குறிப்பிட்ட சம்பவம் சம்பந்தமான விபரங்களை தமக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அதவரை கல்லூரியை இயங்கவிடமாட்டம் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்கள் இத்தகைய எச்சரிக்கை காரணமாக மாணவாகளிடத்தில் பலத்த பதட்டமான ந…
-
- 9 replies
- 2.1k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 14-02-2007 அன்று ஒளிபரப்பாகிய காலக்கணிப்பு www.tamils.info/index.php?subaction=showfull&id=1171482638&archive=&start_from=&ucat=&
-
- 1 reply
- 1.7k views
-
-
யாழ்ப்பாணம் கரவெட்டியில் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று இரவு சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து செயற்படும் ஒட்டுக்கும்பலான ஈ.பி.டி.பியினரால் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்டவர் சுப்பரமணியம் இராமச்சந்தரன் (37) என்ற துன்னாலை வாசியாவார். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் இவர், கடந்த 5 வருடங்களாக தினக்குரல், வலம்புரி ஆகிய பத்திரிகைகளின் வடமராட்சி செய்தியாளராகவும் கடமையாற்றி வந்துள்ளார். கரவெட்டி அரசடியில் தனியார் கல்வி நிலையம் (Talent Institute, Kodikamam Road, Karaveddy) ஒன்றை வைத்திருக்கும் இவர், நேற்றிரவு கற்பித்தலை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், நேற்றிரவு முதல் காணவில்லை என நெல்லியடி சிங…
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறார் படைச்சேர்ப்பை சிறிலங்கா தடுக்காது போனால் அனைத்துலக ஆதரவை இழக்க நேரிடும்: ஹிம் ஹாவல். "சிறார் படைச்சேர்ப்பை சிறிலங்கா அரசு தடுக்காது போனால் அனைத்துலக ஆதரவை சிறிலங்கா அரசு இழக்க நேரிடும்" என்று பிரித்தானிய வெளிவிவகாரத்துறை மற்றும் கொமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சர் கலாநிதி கிம் ஹாவெல் தெரிவித்துள்ளார். ஆழிப்பேரலை பேரனர்த்த நிவாரணத்திற்கு என பிரித்தானியாவினால் வழங்கப்பட்ட நிதிமூலம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிட்ட ஹிம் ஹாவெல், சிறிலங்காவில் இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போர் தொடர்பாக அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார். சிறார்களை படையில் சேர்ப்பது தொடர்பான குற்றச்சாட்டு அரசின் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் ஹிம் ஹாவலுடனான நே…
-
- 0 replies
- 921 views
-
-
வவுனியாவில் பொலிஸார் மீது கிளேமோர்த் தாக்குதல் - பண்டார வன்னியன் Saturday, 17 February 2007 10:45 வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் வீதிச்சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா பொலிஸார் மீது இன்று காலை 9:45 மணியளவில் கிளேமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது ஏற்பட்ட சேத விபரம் பற்றித் தெரியவரவில்லை. http://sankathi.org/news
-
- 0 replies
- 798 views
-