ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142766 topics in this forum
-
விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பு - இரு சிங்களவர்கள் கைது. இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைதான இரு சிங்களவர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பை வைத்திருந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கரவிட்ட என்ற சிங்களக் கிராமத்தில் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்ட இந்த இரு நபர்களும், இரகசியமாக காவல்துறையினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பின்னர் இவர்களது உறவினர்கள் தங்களது சட்டத்தரணி ஊடாக விசாரித்தபோது, இருவருக்கும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பதுடன், விடுதலைப் புலிகளிடம் பல்வேறு உதவிகளையும் இவர்கள் பெற்றிருப்பது தமது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த இருவரும் கிளிநொச்சி சென்ற…
-
- 1 reply
- 923 views
-
-
விமானத் தாக்குதல்களை முறியடிக்க புலிகளிடம் நவீன ஆயுதங்கள் கடந்த 12 ஆம் திகதி விடியற்காலை 4.30 மணியளவில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லாறு பிரதேசத்தை அண்டிய கடற்பிராந்தியத்தில் கடற்புலிகள் பிரிவுப் பயங்கரவாதிகளின் படகுகள் இரண்டு நடமாடுவதை அவதானித்த கடற்படையினர் அவற்றின் மீது மேற்கொண்ட தீவிர தாக்குதல்களின் போது கடற்புலிகளின் ஒரு படகு முற்றாக அழிக்கப்பட்டதாகவும் மற்றொரு படகு கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டதாகவும் இந்த படகில் விமானங்களைச் சுட்டு விழித்தும் நவீன ஆயுதாமாகிய `பைற் சீரோ' (Fight Zero) துப்பாக்கி பொருத்தப்பட்டிருந்ததுடன் அதி சக்திவாய்ந்த ஒலியலைத் தொழிநுட்பம் கொண்ட நவீன தகவல் பரிமாற்றக்கருவியும் மற்றும் ஆயுத உபகரணங்களும் கண்டுபிடிக…
-
- 1 reply
- 1k views
-
-
1996 இல் யாழ். குடாநாட்டில் பலர் காணாமற்போனதற்கு படையினரே காரணமென்பதற்கு போதிய ஆதாரங்களுண்டு - சாவகச்சேரி நீதிபதி தீர்ப்பு 1996 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல்களில் பலர் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல்போனதற்கு இராணுவத்தினரே காரணமென்பதற்கு போதிய ஆதாரங்களிருப்பதாக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிபதி நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரை தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணையின் முடிவிலேயே நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கினார். 1996 ஆம் ஆண்டு காலை 19 ஆம் திகதி, ஆகஸ்ட் 4 ஆம் திகதி மற்றும் அக்டோபர் 2 ஆம் திகதிகளில் தென்மராட்சியின் கைதடி, நாவற்குழி, கோயிலாக்கண்டி, தனங்க…
-
- 0 replies
- 676 views
-
-
கற்பிட்டியில் சந்தேகத்திற்கிடமான இரு படகுகள் மூழ்கடிப்பு கற்பிட்டி சிலாவத்துறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஸ்ரீலங்கா படையினர் சந்தேகத்திடமான இரு படகுகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்து இரு சந்தேகத்திற்கிடமான படகுகளையும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் நிறுத்துமாறு எச்சரித்துள்ளனர் . எனினும் படகுகள் நிற்காமல் சென்றதையடுத்து கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர் . இதனையடுத்து குறித்த இரு படகுகளிலும் இருந்த சந்தேக நபர்கர்கள் கடற் படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர் . இதற்கு பதில் தாக்குதல் நடத்திய கடற்படையினர் இரு படகுகளையு…
-
- 0 replies
- 715 views
-
-
22 ஆம் திகதிக்குப் பின் கருணாவை அரசதரப்பினரே கொலை செய்தாலும் ஆச்சரியப்பட முடியாது: சூரியாராச்சி. விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை எவர் வைத்திருக்கின்றனர் என்ற உண்மையை விரைவில் அம்பலப்படுத்துவோமென தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி, கிளிநொச்சி, முல்லைத்தீவுப் புலிகளின் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தாது கிழக்கில் நடத்தப்படும் புதுமைமிக்க யுத்தம் என்ன என்பதையும் விரைவில் வீடியோத் திரையில் காண்பிப்போமென்றும் தெரிவித்தார். பாராளுமன்றக் குழு அறையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ஸ்ரீபதி சூரியாராச்சி எம்.பி. இதனைத் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் புதுமையான யுத்தம் நடத்தப்படுகிறது. பாலைவனம் போன்…
-
- 11 replies
- 2.7k views
-
-
மன்னாரில் கழுத்து துண்டிக்கப்பட்ட சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. மன்னார், நடுக்குடா கடலோரத்தில், கழுத்து துண்டிக்கப்பட்ட சடலமொன்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை கரையொதுங்கியுள்ளது. கடந்த புதன்கிழமை தங்கள் தொழில் முடிந்து திரும்பிய மீனவர்கள், கடலில், நான்கு உடல்கள், பொலித்தீன் பைகளில் கட்டப்பட்டு மிதந்து கொண்டிருப்பதாக காவல்துறையிடம் புகார் கொடுத்தனர். வங்காலை, தாழ்ப்வுபாடு, தெற்குத்துறை போன்ற பல்வேறு பகுதி மீனவர்களும் இந்த முறைப்பாட்டை முன்வைத்த போதிலும், காவல்துறை அவற்றை உதாசீனம் செய்துவிட்டது. உடல் ஏதாவது கரையொதுங்கினால் மட்டும் தம்மிடம் முறையிடும்படி கூறி, காவல்துறை இந்த முறைப்பாட்டை ஏற்கவோ நடவடிக்கை எடுக்கவோ மறுத்து விட்டது. இந்நிலையில், தலை து…
-
- 0 replies
- 616 views
-
-
பாகிஸ்தான் இலங்கை பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும் ஒப்பந்தம் நேற்றுக் கைச்சாத்து. இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும். இதற்கான ஒப்பந்தம் நேற்று இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளின் வெளியுறப்புத்துறை அமைச்சர்களால் கைச்சாத்திடப்பட்டது. எந்த வடிவத்திலான தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் முறியடிப்பதற்கான எமது திடசங்கற்பத்தை நாம் மீண்டும் பகிர்ந்து கொண்டோம் என்று பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் குர்ஷிட் மஹ்மூத் கஷரி ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் தகவல் தெரிவித்தார். உலக சமாதானத்துக்கும் மனித இனத்தின் முன்னேற்றத்துக்குமான கோட்பாடுகளின் அடிப்படையில் நாம் இது விடயத்தில் ஒத்த கருத்துடையவர்களா…
-
- 0 replies
- 720 views
-
-
அமெரிக்காவைத் தளமாக வைத்து இயங்கும் ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் கருநாய்க் கும்பல் தமிழ்ச் சிறுவர்களை பிள்ளைபிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பது பற்றி விளக்கமான ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது யாவரும் அறிந்ததே! இதை மறுத்து ஹியூமன் ரைட்ஸ் வோட்சிக்கு தாம் நல்ல பிள்ளைகள், சூது, வாது அறியாத அப்பாவிகள் என கடிதம் எழுதும் பொறுப்பு கருநாயின் வே* பத்து-மினியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பத்து-மினி ஹியூமன் ரைட்ஸ் வோட்சின் ஜோ பெக்கருக்கு இவ்வாறு கடிதம் எழுதுகிறார்: தயவுசெய்து கவனிக்கவும், தாங்கள் எனக்கு கடைசியாக எழுதிய கடிதம் பிழையாக முகவரி இடப்பட்டுள்ளது. நீவிர் எமது கட்சியின் பெயரைத் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என முகவரியிட்டுள்ளீர். ஆனால், எமது கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் ப…
-
- 13 replies
- 3.8k views
-
-
வடமுன்னரங்க நிலைகளில் வான்வழி. கடும் ஆட்லெறி எறிகணைத்தாக்குதல் வெள்ளி 16-02-2007 12:41 மணி தமிழீழம் [மோகன்] சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான வான்கலங்கள் முகமாலை. கிளாலி மற்றும் வடமராச்சி கிழக்கு முன்னரங்க நிலைகளில் கடும் எறிகணைத் தாக்குதல்களை இன்று காலைமுதல் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நான்கு விமானப்படையின் வான்கலங்கள் 20 குண்டுகளை காலை 10 மணியில் இருந்து வீசியுள்ளதாக அறியமுடிகிறது
-
- 7 replies
- 2.5k views
-
-
எந்த ஊடகங்களும் முக்கியம் கொடுக்காத வெடிபொருட்களுடன் படகைப் கைப்பற்றிய செய்தியை எவ்வளவு விறுவிறுப்பாக தமிழோசை ரி.பி.சி ஊதித்தள்ளுகிறது. எவ்வளவு விழிப்பாக இருக்கிறார்கள் புலிகள் இந்தியா உறவு வளரக்கூடாது என்று .
-
- 3 replies
- 2k views
-
-
வெளிநாட்டவர் தலையீடு (தலையிடி) புனிதன் (அவுஸ்திரேலியா) வெளிநாட்டவர்களால் இலங்கைத்தீவில் அமைதியையும் சமாதானத்தையும் கொண்டுவர முடியாது என்றும், பிரித்தானியா தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசும் என்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த அதே கிம் ஹவல்ஸ் கூறியதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டும் ஒன்றோடு ஒன்று முரண்படுவது போலத் தோன்றுகிறது. எனவே, இதை ஆழமாகப் பார்க்க வேண்டியது அவசியம் ஆகிறது. திருமணம் பேசுகின்ற காலத்தில் படித்தவரா? எவ்வளவு உயரம்? எந்தச் சாதி? எந்த ஊர்? ஆள் கறுப்பா? வெள்ளையா? பொதுநிறமா? சாதகம் பொருந்தியதா? போன்ற மேலோட்டப் பார்வைகளிலிருந்து தமிழீழச் சமூகம் வெளியேறிவிட்டதா? புலம் பெயர்ந்த தமிழீழச் சமூகம் வெளியேறவில்லை. ஊறியிருக்கின்…
-
- 4 replies
- 2.2k views
-
-
3 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் [வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007, 19:29 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 3 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விவரம் வருமாறு: புல்மோட்டை கடற்பரப்பில் கடந்த திங்கட்கிழமை (12.02.07) சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த லெப். யாழ்தேவி என்றழைக்கப்படும் இராசேந்திரன் நவறாஜி என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார். மாவிலாற்றுப் பகுதியில் 21.01.07 அன்று சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். …
-
- 4 replies
- 1.6k views
-
-
வெள்ளி 16-02-2007 19:26 மணி தமிழீழம் [மயூரன்] வழிபாட்டிற்குச் சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள் இந்து மக்களின் முக்கியமான தினமான மகா சிவராத்திரியை ஒட்டி அன்று காலையில் கீரிமலை சிவன் கோவிலுக்கச் சென்ற பக்தர்கள் ஆலயத்திய்ற்கு செல்லவிடாது தடை செய்தமையால் பலத்த ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்கள் யாழ்ப்பாணம் படைகளின் கட்டளைத் தளபதி சிவராத்திரியை ஒட்டி மக்கள் தமது வழிபாட்டிற்கு தெல்லிப்பழை மற்றும் சேந்தான் குளம் ஊடாக செல்லலாம் என அறிவித்து இருந்தார் இதனை நம்பி தெல்லிப்பழை வழியாக கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்குச் செல்ல பலர் வந்த போதிலும் தெல்லிப்பழையில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் அவாகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை இதன் காரணமாக பக்தர்கள் பலத்த ஏமாற்…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப்புலிகள் மனித உரிமைகள் தொடர்பில் பேச்சாளர். தமிழீழ விடுதலைப்புலிகள் மனித உரிமைதொடர்பில் பேச்சாளர் ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை நியமித்திருப்பதாக சமாதான செயலகத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் வெளியாகியுள்ளன. தமிழர் தாயகப்பகுதியில் சிறீலங்கா படைகளாலும் துணை ஆயுதக்குழுக்களாலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுவருகின்றன எனவே இதனை மனித உரிமை அமைப்புகளுக்கும் மற்றும் வெளி உலகிற்கு கொண்டுவருவதற்காக எமது தலமை பேச்சாளர் உருவரை நியமித்திருப்பதாக விடுதலைப்புலிகளின் சமாதான செயலக அதிபர் எஸ்.புலித்தேவன் தெரிவித்துள்ளார். இப்பணிக்காக முன்னர் சமாதான செயலகத்தில் பணிபுரிந்த செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளில…
-
- 3 replies
- 1.7k views
-
-
மனோ கணேசன் எம்.பி. கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள தமிழர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு அழும் துயரத்தை கொச்சைப்படுத்தும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவின் கூற்று நகைப்புக்கிடமானது என்று மேல் மாகாண மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு வட,கிழக்கிலே கடத்தப்பட்டு காணாமல் போனவர்களதும், படுகொலை செய்யப்பட்டவர்களதும் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. இன்னும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் விபரங்களை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன. அதேபோல் கொழும்பிலும், தெற்கிலும் நடைபெற்றுள்ள சம்பவங்களை…
-
- 0 replies
- 909 views
-
-
* `இணங்கினால் ஒத்துழைக்கத் தயார்' -ப.பன்னீர்செல்வம் - அரச நிர்வாகத்தில் குடும்ப அதிகாரமே கோலோச்சுவதாகவும் நாட்டின் தலைமைத்துவம் சகோதரர்கள், உறவினர்களினதும் கைதியாக மாறிவிட்டதாகவும் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கைகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருப்பதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்திருக்கும் அமைச்சர், பதவியிலிருந்து நீக்கப்பட்ட மாத்தறை மாவட்ட எம்.பி.மங்களசமரவீர, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பத்து யோசனைகளை முன்வைத்திருப்பதாகவும் அவற்றுக்கு அரசின் தலைவர் இணங்கினால் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாது பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து ஆதரவு வழங்கத்தயாரெனவும் அறிவித்திருக்கிறார். மங்கள சமரவீரவுடன் அமைச்சரவையிலிருந்தும் நீக்கப்பட்ட கம்பஹ…
-
- 0 replies
- 844 views
-
-
தாயகத்தில் ஆள் அடையாள அட்டைகள் துரித விநியோகம் [வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007, 18:52 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ தேசிய ஆள் அடையாள அட்டையானது சமகாலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன. அத்தோடு குடும்ப அட்டை, பயண அனுமதி ஊர்திப்பதிவு உள்ளடங்கலாக அனைத்துப் பதிவு நடைமுறைகளிற்கும் தமிழீழ தேசிய ஆள் அடையான அட்டை முதன்மை ஆவணமாக கருதப்படுவதனால் இதுவரை காலமும் தமிழீழ தேசிய ஆள் அடையாள அட்டைக்கான வேண்டுகை மேற்கொள்ளாதவர்கள் விரைவாக வேண்டுகை செய்து தங்களிற்கான தமிழீழ அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர் என்று தமிழீழ ஆட்பதிவு திணைக்களம் தெ…
-
- 0 replies
- 949 views
-
-
வெளிநாட்டவர்களால் இலங்கையில் அமைதியினையும் சமாதானத்தையும் கொண்டு வர முடியாது இலங்கையில் அமைதியினையும் சமாதானத்தையும் வெளிநாட்டவர்களால் கொண்டு வர முடியாது என பிரித்தானிய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிகார மற்றும் பொது நலவாய அமைப்பு நாடுகளுக்கான இணை அமைச்சர் கிம் ஹொவல்ஸ் நேற்று காலை அமை;பாறைக்கு விஜயம் செய்துள்ளார் அம்பாறையில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் நேற்று முற்பகல் அம்பாயை மாவட்டம் காரை தீவில் உள்ள சன சுமூக நிலையத்தில் பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகப் பெரியார்களையும் பிரித்தானிய இணையமைச்சர் சந்தித்து பேசியுள்ளார் இதேவேளை அம்பாயை மாவட்டத்தில் உள்ள …
-
- 4 replies
- 1.6k views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கையை ரத்துச் செய்து, அதிலிருந்து, வெளியேறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பில் பாரிய பொதுக் கூட்டமொன்றை நடத்தவிருப்பதாக தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் அறிவித்துள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி சரியாக 5 வருடங்கள் பூர்த்தியாகும் தினத்தன்றே இந்த விசேட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக ஒன்றியத்தின் பிரதிநிதியான ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பிலுள்ள "ஹைட் பார்க்" மைதானத்தில் நடைபெற இந்த விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அன்றைய தினத்தை (பெப்ரவரி 22) "நாட்டை காட்டிக் கொடுத்த தினமாக" பிரகடனப்படுத்தி எதிர்ப்புத் தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக
-
- 0 replies
- 945 views
-
-
கோமாளிகளின் அரசியல் தென்னிலங்கையின் அரசியல் எவ்வளவு கோமாளித்தனமானது என்பதை மீள ஒரு தடவை நிரூபித்திருக்கின்றார் அனுரா பண்டாரநாயக்கா. அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து ""அந்தக் கோமாளிகளின் களியாட்டத் திருவிழாவிலிருந்து (ஞிச்ணூணடிதிச்டூ ணிஞூ ஞிடூணிதீணண்) வெளியே வந்தமைக்காக மிகவும் மகிழ்கிறேன்.'' என்று தெரிவித்திருந்த அனுரா பண்டாரநாயக்கா, திரும்பவும் ஐந்து நாட்களுக்குள் "அந்தர் பல்டி' அடித்து மீண்டும் அதே கோமாளிகளின் களியாட்டத் திருவிழாவுக்குள் போய் விழுந்து விட்டார். அனுரா பண்டாரநாயக்காவைப் பொறுத்தவரை இந்தக் குத்துக்கரணங்கள் ஒன்றும் புதியவை அல்ல. அவரது அரசியல் பாதையில் அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான் அது. என்றாலும் ஐந்து நாள்களுக்குள் இப்படி ஒரு முழுக் குத்துக்கர…
-
- 0 replies
- 883 views
-
-
வடக்கு,கிழக்கில். சிறிலங்கா அரசால் பத்திரிகை சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. - பண்டார வன்னியன் Friday, 16 February 2007 15:17 வடக்கு, கிழக்கிலுள்ள பத்திரிகை நிறுவனங்களுக்குத் தேவையான அச்சுப் பொருள்களை அனுப்பாமல் அங்குள்ள மக்களுக்கு செய்திகள் கிடைக்கப்பெறாமல் செய்வதானது பாரிய விளைவை ஏற்படுத்துமென பத்திரிகைச் சங்கம் தெரிவித்துள்ளது. தகவல் வறுமையோ, நம்பகமான அல்லது நடுநிலைமையான செய்திகளோ வடக்கு, கிழக்கு மக்களுக்குக் கிடைக்காமல் செய்யப்படுவதானது செய்யப்படுவது ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இதனைத் தடுப்பதற்கு வடக்கு, கிழக்கிலுள்ள பத்திரிகை நிறுவனங்களுக்கான அச்சுப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்;” என அந்தச் சங்கம் விடுத்…
-
- 0 replies
- 600 views
-
-
மீண்டும் இணைகிறார் அனுரா [வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2007, 02:25 ஈழம்] [காவலூர் சங்கீதன்] இன்று வியாழக்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்ற, அமைச்சிலிருந்து பலாத்காரமாக நீக்கப்பட்ட அனுரா பண்டாரநாயக்க, நேற்றுக்காலை 11:30 மணியளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தபோது, மீண்டும் அமைச்சரவையில் இணைவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. தினேஸ் குணவர்த்தன, அலவி மௌலானா போன்றவர்களின் விசேட சந்திப்புக்களைத் தொடர்ந்து, ஜனாதிபதியை நேரில் சந்தித்த அனுரா, மீண்டும் தனது தேசிய பாரம்பரிய அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு இணங்கியுள்ளார். பிறிதொரு தகுதிவாய்ந்த அமைச்சரவை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், முன்னர் வகித்த அமைச்சை ஏற்பதற்கு அனுரா இறங்கி வந்துள்ளார். …
-
- 17 replies
- 3k views
-
-
பாதையை நிபந்தனை அடிப்படையில் திறப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் யாழ் குடாநாட்டிற்கான தரை வழிப் போக்குவரத்து பாதையை நிபந்தனை அடிப்படையில் திறப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதன் முதல் கட்டமாக கொழும்பிலிருந்து யாழ் குடாநாட்டிற்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை மட்டும் ஏ 9 வீதி ஊடாக யாழ் குடாநாட்டிற்குள் அனுமதிப்பதற்கு அரசங்கம் ஆலாசித்து வருவதாக தெரியவந்துள்ளது குடாநாட்டில் தோன்றியுள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கான தடடுப்பாட்டை கப்பல் மூலமாக கொண்டு செல்லும் பொருட்கள் மூலம் நிவர்த்தி செய்ய முடியாதுள்ளதாக சம்பத்தப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் இதனை அ…
-
- 7 replies
- 2.7k views
-
-
இலங்கையில் நிலவுவது உள்நாட்டு யுத்தமல்ல - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச்ச இலங்கையில் நிலவுவது உள்நாட்டு யுத்தமல்ல இணப்பிரச்சினை தற்போது இதனை முறியடிப்பதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுள்ளன . ஆயுத மோதல்களில் தமிழர்களோ சிங்களர்களோ ஈடுபடவில்லை எனவே இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிலவுகின்றது என்பது தவறான கருத்தாகும் எனவே இப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மூலம் முடிவு காண எத்தனிக்கின்றது . எனவே அரசாங்கம் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண எத்தனிக்கின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச்ச தெரிவித்துள்ளார் . தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்திய விஜயம் குறித்து தமிழன் எக்ஸ்பிரஸ் வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்த்தார். இ…
-
- 5 replies
- 1.9k views
-
-
இலங்கை இன நெருக்கடிக்கு கருணாநிதியால் தீர்வு காண முடியும் 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.ஈழவேந்தன் அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டு விட்டு நாடு திரும்புகையில் சிங்கப்பூர், மலேசியாவுக்கு சென்றிருந்தார். அந்நாடுகளில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் ஈழவேந்தன் இலங்கை இன நெருக்கடியின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளித்திருந்தார். சிங்கப்பூரில் `தமிழ் முரசு' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்ததாவது; இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தற்போது உதவக் கூடியவர் தமிழக முதல்வர் மு.கருணாநிதிதான். அழுதாலும் பிள்ளையை நாங்கள் தான் பெற வேண்டும். எனினும்…
-
- 4 replies
- 2k views
-