Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [Thursday March 22 2007 06:28:04 AM GMT] [uthayan.com] சிறுபான்மையினரின் நிலைமை கடந்த ஆண்டில் மிக மோசமான அளவு சீர்கெட்டுப்போன நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் முன்னணி இடம் கிடைத்திருக்கின்றது. "சிறுபான்மையினரின் உரிமைக் குழுமம் சர்வதேசம் என்ற அமைப்பு உலகின் சிறுபான்மையினர் நிலைமை குறித்து வெளியிட்ட அதன் வருடாந்த அறிக்கையிலேயே இந்த விவரம் அம்பலமாகியிருக்கின்றது. இனப்பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. அதற்கு முதல்நாள் மார்ச் 20 ஆம் திகதி நியூயோர்க்கில் ஐ. நாவில் வைத்து இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது. ஆனால் இந்தச் சர்வதேச மதிப்பாய்வு பற்றிய அறிக்கைக்கு இலங்கை ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமே, இந்த நா…

    • 3 replies
    • 1.1k views
  2. பாக்கு நீரிணையில் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளை கையாள்வதற்கும் மீனவர் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்தியாவும் இலங்கையும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளன. இதனை கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார். வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவின் புதுடில்லி விஜயத்தின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் ரம்புக்வெல குறிப்பிட்டிருக்கிறார். பாக்கு நீரிணையில் இந்திய, இலங்கைக் கடற்படையினர் கூட்டாக ரோந்து செல்வதற்கு இந்த இணக்கப்பாடு வழி வகுக்குமா? என்று கேட்கப்பட்டபோது, இந்த நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் இன…

    • 7 replies
    • 1.4k views
  3. இலங்கையில் 1.50 லட்சம் தமிழர்கள் பட்டினியால் வாடல்: உணவு அனுப்ப தில்லிக்கு ராமதாஸ் வலியுறுத்தல் சென்னை, மார்ச் 22: இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் பட்டினியால் வாடுகின்றனர். அவர்களுக்கு உடனடியாக உணவு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் போரினால் வீடு, வாசல்களை விட்டு விட்டு மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் பட்டினிச் சாவின் விளிம்பில் உள்ளனர். அவர்களைக் காப்பாற்ற உடனடியாக உணவுப் பொருள்களையும் முக்கிய மருந்துப் பொருள்களையும் அவசரமாக உலக நாடுகள் வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவுத் திட்ட அமைப்பின் ஆசியப் ப…

  4. வெள்ளி 23-03-2007 02:16 மணி தமிழீழம் [தாயகன்] வவுனியாவில் தியாகி திலீபன் மருத்துவமனை வவுனியா வடக்கு நயினாமடுவில் மக்களின் தேவைக்காக திலீபன் மருத்துவமனை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. திலீபன் மருத்துமனை மருத்துவர் இறையொளி தலைமையில் நேற்று கலை 10.00 மணியளவில் இந்தத் திறப்பு விழா நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து திலீபன் மருத்துமனைக்கான புதிய கட்டடடத்திற்கான கல்வெட்டினை, திலீபன் மருத்துமனை மருத்துவர் புலிமறவன் திரைநீக்கம் செய்து வைத்தார். தொடர்ந்து புதிய கட்டடத்தினை மருத்துவர் திலகன் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மருத்துமனை விடுதியும் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்புரைகளை வவுனியா மாவட்ட தளபதிகளில் ஒருவரான றெஜி, மாவட்ட அரசியல…

  5. கோட்டாபய ராஜபக்ஷ மீதான தாக்குதல்: வெளிநாட்டிலிருந்து வந்த தமிழ்ப்பெண் கைதானார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜ பக்ஷவைக் கொலைசெய்யும் நோக்கோடு நடத்தப் பட்ட தாகக் கூறப்படும் தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சத்தியவாணி என்ற தமிழ்ப்பெண் ஒருவர் கைதுசெய்யப் பட்டிருக்கின்றார். சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து வந்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இறங்கிய சமயம் இவர் கைது செய்யப்பட்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப் பட்டிருக்கின்றார். இத்தகவலை பயங்கரவாதச் செயல்களை விசாரிக்கும் பொலிஸ் பிரிவு நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கின்றது. மேற்படி தற்கொலைத் தாக்குதலை…

    • 1 reply
    • 1.2k views
  6. "உலகில் காணாமல் போவோர்" ஐ.நாவின் அறிக்கையில் இலங்கை இரண்டாவது இடம்: தமிழர் மனித உரிமைகள் மையம் [வியாழக்கிழமை, 22 மார்ச் 2007, 18:07 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] இலங்கைத் தீவு ஓரு சிறிய தீவு என சிறிலங்கா அரசாங்கம் கூறிவரும் இவ்வேளையில், இதே சிறிய தீவு, உலகில் காணாமல் போனோர் விடயத்தில் இராண்டவது இடத்தை அடைந்துள்ள வெட்கட்கேடான விடயம் பற்றி, எந்தவித அக்கறையும் கொள்வதில்லை என பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் நான்காவது கூட்டத்தொடரில் சுவிற்சர்லாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் "சர்வதேச சர்வ நம்பிக்கை" சபையின் சார்பில் கலந்து கொண்டு …

  7. ஜெயசிக்குறு காலத்திற்கு திரும்பும் வவுனியா வடக்குப் பிரதேசம்: வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜவியாழக்கிழமைஇ 22 மார்ச் 2007இ 17:10 ஈழம்ஸ ஜகிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்ஸ "ஜெயசிக்குறு காலத்தில் வவுனியா வடக்குப் பிரதேசம் எப்படி இருந்ததோ அந்த நிலைக்கு தற்போது மாறியுள்ளது என்று வவுனியா மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ஞானம் தெரிவித்துள்ளார். சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சுகள்இ கிளைமோர் தாக்குதல்கள்இ மக்கள் இடப்பெயர்வுகள் தொடர்பாக 'புதினம்' இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நெடுங்கேணிஇ கனகராயன் குளம்இ புளியங்குளம் என்பன தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகு…

  8. தெற்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தம்புள்ள வர்த்தக மத்திய நிலையம் [22 - March - 2007] தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் என அழைக்கப்படும் புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய வர்த்தக சங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுடனான வர்த்தகத்தைச் செய்து வந்த இரண்டு முக்கிய நிலையங்களாக கந்தளாயும் கிளிநொச்சியும் இருந்தன. வடக்கில் யுத்தம் தீவிரப்படுத்தப்பட்ட பின்னர் இந்த இரண்டு நகரங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வந்த வடக்கு, கிழக்கு சம்பந்தப்பட்ட வர்த்தகச் செயற்பாடுகள் தம்புள்ளவுக்கு மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து தம்புள்ள பிரதான வர்த்தக நகரமாக மாறியது. தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் என அழைக்கப்பட்ட இந்த நிலையம் நூற்றுக்கு மேற்பட்ட வர்த்தக…

    • 3 replies
    • 2.4k views
  9. பாராளுமன்ற செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டிய நேரம் உதயமாகியுள்ளது: மகிந்த ராஜபக்ஷ - பண்டார வன்னியன் Thursday, 22 March 2007 12:54 பாராளுமன்ற செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாராளுமன்ற அதிகாரத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரத்தில் மாற்றங்களை கொண்டுவரவேண்டிய காலமும் உதயமாகியுள்ளது என்று சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் உருவப்படத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: பாராளுமன்றத்தின் அதிகாரங்களையும் செயற்பாடுகளையும் நாம் பலப்படுத்தவேண்டும். பாராளுமன்ற அதிகா…

  10. தற்போதைய நிலைமை தொடருமானால் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கலாம் [22 - March - 2007] -ஆர்.ஹரிஹரன்- தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தை எதிர்த்து அண்மையில் சென்னையில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் தி.மு.க.வினால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் முடிவில் அக் கட்சியின் முக்கியஸ்தர்களான ஆற்க்காடு வீராசாமி, மு.க.ஸ்ராலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து சென்னையிலுள்ள இலங்கைக்கான பிரதித் தூதுவரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர். இந்தப் பேரணியில் கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள் ஆற்றிய உரைகளில் இந்திய மீனவர…

  11. நன்றி சங்கதி http://sankathi.org/news/index.php?option=...43&Itemid=1 வீரகாவியமான கண்மணிகளுக்கு வீரவணக்கம்

  12. அரசிற்கும் கருணா குழுவுக்கும் தொடர்புகள் உள்ளன: புலனாய்வுத்துறை அதிகாரியின் மனைவி சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பிற்கு சென்று கருணாவை சந்தித்து வருமாறு தனது கணவரை அரசாங்கம் அனுப்பியதாக சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை அதிகாரியான லெப். கொமாண்டர் றோகண கமெகேயின் மனைவி ராசிக பிரியதர்சினி நேற்று தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் உள்ளதாக கூறி சிறிலங்கா கடற்படையின் புலனாய்வுத்துறையின் அதிகாரியான லெப். கொமாண்டர் றோகண கமெகே கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அ…

    • 4 replies
    • 1.9k views
  13. செவ்வாய் 20-03-2007 04:46 மணி தமிழீழம் [மகான்] நெதர்லாந்து அரசின் வெளிநாட்டமைச்சின் இணையத்தளத்தில் சிறீலங்கா செல்வதை தவிர்க்குமாறு தனதுநாட்டு மக்களிற்கு நெதர்லாந்து அரசானது எச்சரிக்கையினை விடுத்துள்ளது. கடந்த மாதங்களிலிருந்து தமிழீழவிடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களி

    • 3 replies
    • 1.5k views
  14. ஐ.நா. சமாதானக் குழுவின் பிரசன்னத்தில் ஏ-9 பாதையைத் திறக்க வழிசெய்யவும் செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு மனு. யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு தரப்பான விடுதலைப் புலிகள் ஏ9 தரைவழிப் பாதையைத் திறப்பதற்குத் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்துள்ள நிலையில் ஐ.நா. சமாதானக் குழுவின் பிரசன்னத்தில் அந்தப் பாதையைத் திறப்பதற்கு வழி செய்யுமாறு வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு அனுப்பிய கடிதத்தில் கோரியுள்ளது. அந்தக் கடிதத்தில் இலங்கைத்தீவின் சமாதான நடவடிக்கைகள் பல காரணங்களுக்காகத் தடைப்பட்டுள்ளமையால் எழுந்துள்ள அவல நிலை குறித்து எமது செயலகம் தனது ஆழ்ந்த கரிசனையைத் தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறது. இச்…

  15. எண்ணெய்வள அகழ்வில் பரிந்துரைகள் இல்லை: சிறிலங்கா அரசாங்கம் ஜவியாழக்கிழமைஇ 22 மார்ச் 2007இ 05:59 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ மன்னாரில் நோர்வேயின் எண்ணெய்வள அகழ்வுத் திட்டத்திற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் கேள்விப்பத்திரங்கள் கோரல் முறையில் பரிந்துரைகள் இடம்பெறவில்லை என பெற்றோலியத்துறை அமைச்சு நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத்துறை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.பி.ஏ குணசேகர தெரிவித்ததாவது: இது முற்றிலும் தவறானதுஇ புவியியல் ஆய்வுத் தகவல்களின் படி 1.0 பில்லியன் பரல்கள் அளவான எண்ணெய்ப்படிவுகள் மன்னாரில் உள்ள காவிரிப் படுக்கைக்கு அருகிலான வடமேற்கு கரையில் உள்ளது. அமைச்சரவை குழுவின் பெற்றோலிய வளத்தின் மாதிரி வடிவ…

    • 2 replies
    • 1.1k views
  16. யாழ்பாணத்தில் சிறீலங்கா மினிமுகாமில் தீ யாழ்பாணம் வலிகாமம் சுழிபுரம் பகுதியில் புதன்கிழமை சிறீலங்கா இராணுவத்தின் மினி முகாம் ஒன்றை அவர்கள் ரோந்து நடவடிக்கைக்கு சென்றபின் இனம்தெரியாத நபர்களால் தீயிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து மேலதிக படையினரை அவ்இடத்துக்கு அனுப்பியுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட படையினர் பொதுமக்களை அடித்தும் துன்புறுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/

  17. கிழக்கில் யு.என்.எச்.சி.ஆரின் மீள்குடியேற்றப் பணி இடைநிறுத்தம் இடம்பெயர்ந்த மக்களை பலவந்தமாக மீளக்குடியேற்றுவதில்லை என சிறீலங்கா அரசால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை கிழக்கில் அரசு உதாசீனம் செய்ததை தொடர்ந்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் தனது மீளக்குடியேற்றும் பணிகளை மட்டக்களப்பு மற்றும் திருமலை மாவட்டங்களில் இடைநிறுத்தியுள்ளது. இது தொடர்பாக அதன் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்புவதானது அந்த பிரதேசங்களின் பாதுகாப்பு, அமைதி ஆகியன தொடர்பான சில விதிமுறைகளின் படியே சாத்தியமாகும். யு.என்.எச்.சி.ஆர் அல்லது வேறு அமைப்புக்களோ வாகரைப் பகுதியின் நிலைமை தொடர்பாக தமது ஆய்வுகளை மேற்கொள…

    • 0 replies
    • 660 views
  18. பாராளுமன்ற சபைக்குள்ளும் சிங்கள புலிகள் இருக்கின்றனரா? அமைச்சர் நிமலுக்கு எழுந்த சந்தேகம் பாராளுமன்ற சபைக்குள்ளும் சிங்கள புலிகள் இருக்கின்றனரா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது என்று சபை முதல்வரும் சுகாதார அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்தார். ஜனாதிபதி நேற்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்தமையினால் அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐக்கிய தேசியக்கட்சியினர் சபையில் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஏற்பட்ட சர்ச்சையின்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு சந்தேகம் வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது: தற்போது நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான சிங்கள புலிகள் செயற்படுகின்றனர். அந்த வகையில் ஜனாதிபதி ப…

    • 0 replies
    • 876 views
  19. இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் மக்கள் பயப்பீதியில் வாழ்கின்றனர் - த.தே.கூ சிறீலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்கள் மரண பயத்துடன் வாழ்ந்து வருவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச பாடசாலைகளின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் இதனைத் தெரிவித்தார். மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிப்பதற்கு கல்விசார் சமூகம் மேற்கொள்ள வேண்டி நடவடிக்கைகள், விமானக் குண்டுத் தாக்குதலில் இருந்து மாணவர்களைக் காப்பாற்றுதல் போன்ற விடயங்கள் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன. இந்த நிகழ்வில் தமிழீழ கல்விப் பிரிவுப் பொறுப்பாளர் சஞ்சீவி, யாழ் மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் இளம்பருதி…

    • 0 replies
    • 672 views
  20. பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டாக செயற்பட வேண்டியது அவசியம் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு எடுத்துக்கூறிய அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, சமாதான செயற்பாடுகளில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களையும் விளக்கியுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவின் இந்திய விஜயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ரோகித்த போகொல்லாகம தனது விஜயத்தின்போது இந்திய முன்னாள் பிரதமர் ஏ.பி.வாஜ்பேய், வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, விவசாய அமைச்சர் ஷரத்பவார், பாதுகாப்…

    • 3 replies
    • 1k views
  21. : கேகலிய ரம்புக்வெல ஜசெவ்வாய்க்கிழமைஇ 20 மார்ச் 2007இ 12:41 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்பரப்பில் தரித்து நிற்கும் ஜோர்தானிய கப்பலான பாராஃ - 03 தொடர்பாக மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் எந்த முடிவுகளும் எடுக்ப்படவில்லை எனவும்இ ஜோர்தானிய அதிகாரிகளுடன் விவாதங்கள் தொடர்வதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜோர்தானிய அதிகாரிகளின் இறுதி முடிவுக்காக நாம் காத்திருக்கின்றோம்இ அதன்பின்னர் கப்பல் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாம் தீர்மானிப்போம் என சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்புத் தொடர்பாக கலந்துரையாடுவதற…

    • 3 replies
    • 1.6k views
  22. புலிகளின் படைத்துறை ஆளுமை - சில புரிதல்கள் -பிரான்சிலிருந்து பரணி கிருஸ்ணரஜனி 01. நோர்வேயைப் பொறிக்குள் மாட்டி விட்ட புலிகள். - சம்பூரிலிருந்து புலிகள் பின்வாங்கியது குறித்து அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன். 02. களமுனையில் முன்னேறுதலும், பின்வாங்குதலும், தந்திரோபாய ரீதியிலானதான நடவடிக்கைகளாகவே பெரும்பாலும் இருப்பதுண்டு. ஆனால் சிதறி ஓடுதலும் திக்குத் தெரியாமல் ஓடுவதும் தோல்வியின் வடிவமாகவே இருக்கும். - பனிச்சங்கேணி, முகமாலை முறியடிப்புச் சமர்களை முன்வைத்து ஈழநாதம் ஆசிரியர் ஜெயராஜ். 03. மோதவேண்டிய களத்தையும்;, தவிர்க்க வேண்டிய களத்தையும் நன்கு அறிந்தவர்கள் புலிகள். வாகரையில் இருந்து புலிகள் ஏன் விலகிச்சென்றார்கள் என்பதில் தெளிவாக வேண்டுமா…

  23. இந்தியஇலங்கை உடன்படிக்கை அன்று உரியமுறையில் அமுலாகியிருந்தால் இன்றைய பிரச்சினை எழுந்திருக்காது இனப்பிரச்சினையை யுத்தத்தினால் ஒருபோதும் தீர்க்கமுடியாது என்ற நிலைப்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன செயற்பட்டார். அந்தவகையில் சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கிலேயே இந்தியஇலங்கை உடன்படிக்கையை இந்தியாவின் உதவியுடன் அவர் உருவாக்கினார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் உருவப்படத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையில் ரணில் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: முன்னாள் …

    • 1 reply
    • 817 views
  24. கப்பல்கள் மூழ்கடிப்பு - ஒரு நாடகம்! கடந்த சில மாதங்களாக சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை தகர்த்து வருவதாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் கல்முனைக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றை மூழ்கடித்தாக சிறிலங்கா அரசு கூறியது. ஒரு கப்பல் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்படும் வீடியோக் காட்சியையும் வெளியிட்டது. அதன் பிறகு பல தடவைகள் கற்பிட்டிக் கடற்பரப்பில் ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு வந்த விடுதலைப்புலிகளின் படகுகளை மூழ்கடித்ததாக கூறியது. இந்த ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி மாத்தறைக் கடற்பரப்பில் ஒரு ஆயுதக் கப்பலை மூழ்கடித்ததாக சிறிலங்கா அரசு கூறியது. இம் முறையும் ஒரு கப்பல் தாக்கப்படும் வீடியோக் காட்சியை வ…

    • 14 replies
    • 4.5k views
  25. சிறீலங்கா இராணுவத்தின் புதிய பாஸ் நடைமுறை யாழ்பாணத்தை விட்டு வெளிமாவட்டத்திற்கு செல்லும் யாழ் மக்கள் அனைவரும் சிறீலங்கா யாழ் கட்டளை மையத்தில் யாழ்பாணத்திற்கு திரும்பி வருவோம் என்ற உத்தரவாதம் வழங்கிய பின்னரே வெளிசெல்வதற்குரிய அனுமதியை பெறக்கூடியதாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் குடிமக்கள் பெரும் விசனம் அடைந்துள்ளதாகவும் சுதந்திரமாக யாரும் எங்கும் செல்லமுடியாதுள்ளதாலும் ஏற்கனவே கொலைகள், ஆட்கடத்தல்கள், பாலியல் வன்புணர்வுகள், உணவுப்பற்றாக்குறை போன்ற பலவேறு இன்னல்களை அனுபவித்துவரும் மக்கள்களை பெரும் இக்கட்டுக்குள் உட்படுத்தியிருப்பதாகவும் மேலும் தெரியவருகிறது. கடந்த 2006 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து 40000 பொதுமக்கள் கப்பல் மூலமாகவும்,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.