ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142757 topics in this forum
-
கொழும்புத்துறை முகத்தில் தாக்குதல் முயற்சி ஒன்றைத் தாம் முறியடித்துள்ளதாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இணையத்தில் முழுமையான செய்தி இணைக்கப்படவில்லை. ஒரு வரியில் (ஓட விடப்பட்டுள்ள) செய்தியில் அதிகாலை ஐந்து மணியளவில் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் முயற்சியை கடற்படையினர் முறியத்துள்ளதாகவும், புலிகளின் படகு ஒன்று அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபரம் தெரிந்தவர்கள், வேறு செய்திகள் மூலம் இதனை அறிந்தவர்கள் இங்கே வந்து விபரங்களைக் கொட்டுங்கள்
-
- 27 replies
- 5.5k views
-
-
தமிழர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட வகையினர் உண்டு. அவர்கள் தங்களை நம்புவதை விட மற்றவர்களையே அதிகம் நம்புவார்கள். துன்பம் நேரும் போது வேறு யாராவது வந்து தங்களை கைதூக்கி விடுவார்கள் என்று காத்திருப்பார்கள். அந்த "வேறு யாராவது" என்பது "கடவுளாகக்" கூட இருக்கலாம். மொத்தத்தில் தங்களின் துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கு முயற்சி செய்யாது மற்றவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இவ்வாறான குணவியல்பு கொண்டவர்கள் தொகையளவில் மிக அதிகமானவர்களாக இருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் இவர்களின் "காத்திருப்புக்களை" காணக்கூடியதாக இருக்கிறது. போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் "இந்தியா வந்து பிரச்சனையை தீர்த்து வைக்கும், இந்தியா தமிழீழம் பெற்றுத் தரும்" என்று நம…
-
- 5 replies
- 2.1k views
-
-
'விடுதலைப் புலிகளை அழிக்கும் சிறிலங்கா அரசின் முயற்சி வெற்றி பெறுமா?': ரொய்ட்டர்ஸ் "திருகோணமலைத் துறைமுகத்தை சுற்றியுள்ள விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தளங்களை அப்புறப்படுத்த போவதாக கூறிய சிறிலங்கா அரசு, இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. ஆனால் தற்போது விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடுவதற்கு அது தீர்மானித்துள்ளது. ஆனால் யாருக்கும் வெற்றி இல்லை என்பது தான் தற்போதைய நிலை" என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தனது செய்தி ஆய்வில்: கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய நகரான வாகரையை கைப்பற்றிய சிறிலங்கா அரசு, போரைத் தொடர்ந்து முன்னெடுத்து விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டம…
-
- 10 replies
- 2.1k views
-
-
அம்பாறையில் அதிரடித்தாக்குதல் - 8 அதிரடிப் படையினர் பலி - 12 படுகாயம் - பாண்டியன் Saturday, 27 January 2007 20:14 அம்பாறை மாவட்டம், திருக்கோவிலில் உள்ள தங்கவேலாயுதபுரம் பகுதியில் வைத்து சிங்கள அதிரடிப் படையினர் மீது இன்று காலை 9.30 மணியளவில் நடத்தப்ப்பட்ட அதிரடித் தாக்குதலில் ஒன்பது அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்ட பகுதிகளில் தற்போது நிலைகொண்டுள்ள அதிரடிப் படையினருக்கான வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வாகனங்களை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்ட அதேவேளை துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. இதன்போது எட்டு அதிரடிப்படையினர் கொல்லப்…
-
- 0 replies
- 826 views
-
-
இன்று காலை 5.30 மணியளவில் கொழும்பு தறைமுகத்தின் வெளிச்ச வீடு வரை ஊடுருவிய இந்த படகுகள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கடற்படையினரின் தாக்குதலில் ஒரு படகு மூழகடிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.ஏனைய இரண்டு படகுகளும் அங்கிருந்து தப்பிச் சென்ற இரண்டு படகுகளையும் கடற்படை படகுகள் தாக்கி அழித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார் இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் பலத்தை முற்றாக முறியடிக்கும் தாக்குதல்களை தொடரவுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இடம்பெற்றுள்ள இந்த ஊடுருவல் நடவடிக்கையானது ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவான செய்தியை தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி சேவை கர…
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் அம்பாறை திருக்கோவில் தங்கவேலாயுதபுரப் பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் வாகனத்தின் மீது பகுங்கியிருந்து தாக்கியதில் 8 சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டும் 12 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் தொடர்பில் கிடைத்த ஆரம்பகட்ட தகவலின்படி விடுதலைப்புலிகளின் விசேட கரந்தடிப்படையிணி ஒன்று விசேட அதிரடிப்படையிளரின் விநியோக அணிமீது மேற்கொண்ட தாக்குதலிலே இவ்இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இதனைத்தொடர்ந்து கல்முனைப்பகுதியில் 41 கிலோமீற்றர் தெற்கில் அமைந்துள்ள தாக்குதல் இடம்பெற்ற இவ்இடத்தில் இருந்து தாக்குதலையடுத்து பலத்த எறிகணை, மற்றும் துப்பாக்கி சூட்டுதாக்குதல்களை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர். tha…
-
- 3 replies
- 1.4k views
-
-
இயந்திரக் கோளாறு காரணமாக, முல்லைத்தீவு கடலடிப் படுக்கையில் தரைதட்டி செயலிழந்து நிற்கும், ஜோர்டானிய சரக்குக் கப்பலை தகர்ப்பதற்கான முயற்சிகளில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன http://www.ibctamil.co.uk/index.php?subact...mp;ucat=20&
-
- 3 replies
- 1.8k views
-
-
29,30 ஆம் திகதிகளில் காலியில் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு 1.5 பில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்குமென அரசு நம்பிக்கை வீரகேசரி நாளேடு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு எதிர்வரும் 29,30 ஆம் திகதிகளில் காலி மாநகரில் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினை பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்று நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்தார்.இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா,ஜப்பான், நோர்வே,ஜரோப்பிய ஒன்றியம் உட்பட 50 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்வர். "மகிந்த சிந்தனை புதிய இலங்கைக்கான இலக்கு' என்னும் தொனிப்பொருளிலில் இந்த மாநாடு நடைபெறுக…
-
- 5 replies
- 1.6k views
-
-
சனி 27-01-2007 17:04 மணி தமிழீழம் [செந்தமிழ்] தமிழ் ஊடகவியளாளர் கைது – சுதந்திர ஊடக அமைப்பு விசனம் மௌனசாமி பரமேஸ்வரி என்ற தமிழ் ஊடகவியலாளரை நீண்டகாலமாக குற்றச்சாட்டு எதுவும் இன்றி தடுத்துவைக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டித்திருக்கும் சுதந்திர ஊடக அமைப்பு வெளியிட்டிருக்கும் பத்திரிகைக் குறிப்பு ஒன்றில் இது சிறீலங்கா இராணுவமயப்படுத்தப்பட்ட அரசாக மாறிவருவதையும் அத்துடன் இலங்கையில் பாரிய மனித உரிமைகள் மீறல் இடம்பெறுவதையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. இக் கைதும் தடுப்புக்காவலும் தங்களை மிகுந்த விசனத்துக்கு உள்ளாக்கியிருப்பதாக மேற்படி அமைப்பு கண்டணம் வெளியிட்டுள்ளது. pathivu.com
-
- 0 replies
- 686 views
-
-
சனி 27-01-2007 16:12 மணி தமிழீழம் [சிறீதரன்] தமிழ்தேசிய கூட்டமைப்பு நோர்வே தூதுவர் சந்தித்து பேச்சு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு தலைவர் இரா சம்பந்தர் நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிட்ஸகரை சந்தித்து பேசியுள்ளார் நேற்று நோர்வே தூதவரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா படைகள் மேற்கொண்டு வரும் வலிந்த தாக்குதல்கள் குறித்தும் இதன் காரணமாக அப்பாவி பொது மக்கள் தொடச்சியாக அனுபவித்து வரம் இன்னல்கள் குறித்தும் நோர்வே தூதுவருக்கு விளக்கி கூறப்பட்டுள்ளது இலங்கையின் தற்போதைய நிலை குறித்து தாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக கருத்து தெரிவித்த நோர்வே தூதுவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடனும் தமிழீழு விடுதலைப் புலிகளுடனும் தாங்கள் விரைவி…
-
- 0 replies
- 634 views
-
-
கொழும்பு துறைமுக தாக்குதல் முறியடிப்பு: சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் தகவல் சிறிலங்கா தலைநகரில் உள்ள கொழும்பு துறைமுகத்தைத் தாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முயற்சி ஒன்றைத் தாம் இன்று காலையில் முறியடித்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் கொழும்பில் தெரிவித்துள்ளன. அதிவேகப் படகுகள் மூலம் வந்து துறைமுகத்தைத் தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் முற்பட்டதாகவும், இவ்வாறு விடுதலைப் புலிகள் வந்த படகுகளில் ஒன்று கடற்படையினரது தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டதாகவும் படைத் தரப்பினர் தெரிவித்தனர். மூன்று படகுகளிலேயே விடுதலைப் புலிகள் வந்ததாகவும், அவற்றில் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏனைய இரண்டு படகுகள் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டதாகவும…
-
- 0 replies
- 881 views
-
-
கிழக்கு நிலை தொடர்பாக கண்காணிப்புக் குழு சிறப்பு அறிக்கை வெளியிடுகிறது [சனிக்கிழமை, 27 சனவரி 2007, 08:43 ஈழம்] [அ.அருணாசலம்] "கிழக்கு மாகாணத்தில் தற்போது தோன்றியுள்ள மிகவும் வன்முறையான சூழ்நிலை மற்றும் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வரும் கடுமையான மோதல்கள் குறித்து விரைவில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட உள்ளதாக" இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தோபினூர் ஓமர்சன் தெரிவித்துளதாவது: "கடந்த சில மாதங்களாக சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கிழக்கு மாகாணத்தில் பெரும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இம்மோதல்களினால் கிழக்கு மாகாணத்தில் தோன்றியுள்ள வன்முறை தொடர்பாக நாங்…
-
- 4 replies
- 1.2k views
-
-
தினக்குரலுக்கு வலை வீசும் அமெரிக்கா ...தினக்குரல் நிறுவுனர் எஸ்.பி.சாமி விழுவாரா ? Friday, 26 January 2007 இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்கத் தூதரகத்தின் பத்திரிகைத் தொடர்பு, கலாசார விவகார கவுன்சிலர் ரெறி ஜே.வைற் சகிதம் தினக்குரல் தலைமையகத்துக்கு நேற்று புதன்கிழமை விஜயம் செய்தார். அவர் தினக்குரல் நிறுவுனர் எஸ்.பி.சாமி, நிருவாக இயக்குநர் எஸ்.பி.கணேசராஜா, இயக்குநர் எஸ்.பி.கேசவராஜா, பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் மற்றும் ஊடக ஆலோசகர் ஈ.வீ.டேவிட் ராஜூ ஆகியோருடன் அளவளாவுவதைக் காண்கிறீர்கள். ... தினக்குரலுக்கு வலை வீசும் அமெரிக்கா ...தினக்குரல் நிறுவுனர் எஸ்.பி.சாமி விழுவாரா ? http://www.sooriyan.com/index.php?opt…
-
- 7 replies
- 3.1k views
-
-
அனல் மின் நிலையம் நிறுவும் ஏற்பாடு இந்தியக் குழு திருமலை சென்று ஆய்வு கொழும்புஇ ஜன. 27 சம்பூர் அனல்மின் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக நேற்றுமுன்தினம் இந்தியக் குழுவொன்று திருமலை சென்று ஆய்வு நடத்தியது. இத்திட்டத்திற்கென மூதூர் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் ஐந்நூறு ஏக்கர் நிலத்தை ஒதுக்க அரசு தீர்மானித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த ஐந்நூறு ஏக்கர் நிலம் அங்கிருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமானது என்றும் இந்த நிலச்சுவீகரிப்பால் இந்த இடங்களில் உள்ள அறுநூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களை நிரந்தரமாக இழப்பர் என…
-
- 0 replies
- 706 views
-
-
உண்மையை உணர்ந்து செயற்படுங்கள் - மக்கள், மாணவருக்கு படையினர் வேண்டுதல். சாவகச்சேரியிலும் மானிப்பாயிலும் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; மாணவர்கள் காயமுற்றனர். விடுதலை விரும்பிகள் எனக் கூறிக்கொள்ளும் புலிகளின் இலக்கு அப்பாவி மக்களா? மக்களும் மாணவர்களும் உண்மை என்ன என்பதை உணர்ந்து இவ்வாறான செயல்களுக்கு உடந்தையாக இருக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் அறிக்கை ஒன்றை யாழ்ப்பாணம் 51 ஆவது படைப்பிரிவு வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலி உறுப்பினர்களின் பாதகச் செயல்களால் குடாநாட்டில் பொதுமக்களின் உயிர்கள் பலிகொள்ளப்படுவதாகவும் அதனால் மக்கள் சொல்லொண்ணாக் கஷ்டங்களை அனுபவிப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. தமக்கு எதிரானவ…
-
- 1 reply
- 894 views
-
-
சமாதான முயற்சிகள் தோல்வியை தழுவியுள்ள நிலையில் இலங்கை தலைவர்களின் இந்திய விஜயம். இலங்கையில் சமாதானத்தைக் கொண்டுவரும் பல்வேறு நாடுகளின் முயற்சிகளும் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், இலங்கையின் ஆளுந்தரப்பினரும், எதிர்த் தரப்பினரும் இந்தியாவுக்கு வருகைதரவுள்ளனர். மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரக நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் அடுத்த வாரம் புது டில்லியில் நடைபெறவுள்ளன . இதற்கான ஏற்பாடுகளை ஆளுங் காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகின்றது. இதில் கலந்து கொள்ளும் வகையிலேயே பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோர் புதுடில்லி பயணமாகவுள்ளனர். இவர்களுடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித்த ஹோஹனவும் வருகைதரவுள்ளார்.. ஈவிரக்கமின்…
-
- 0 replies
- 680 views
-
-
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்ற ஐந்து வர்த்தகர்கள் நேற்று நீதிமன்றில் ஆஜர். யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் அரச அதிபரால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்த ஐந்து வர்த்தகர்கள் விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் சிக்கினர். இந்த வர்த்தகர்கள் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்களை நிர்ணயிக்கப்பட்ட விலைகளை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ். நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். இவர்களை விசாரணை செய்த யாழ். நீதிவான் இ.த.விக்னராஜா தலா 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்ததுடன், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட பொருள்களைப் பறிமுதல் செய்து பாதிக்கப்பட…
-
- 0 replies
- 611 views
-
-
பெண்ணை ஏமாற்றிப் பணம் வசூலித்த போலிச்சாமியார்கள் நையப்புடைக்கப்பட்டனர் வடமராட்சியில் சம்பவம். தனியாக வீட்டில் இருந்த பெண்ணிடம் கடவுள் பெயரைக் கூறி ஏமாற்றி ஒரு தொகைப் பணத்தை அபகரித்த போலிச் சாமியார்கள் இருவர் அவ்வூர் மக்களால் பிடித்து நையப்புடைக்கப்பட்டனர். பருத்தித்துறை ஆத்தியடிப் பகுதியில் கடந்தவாரம் இந்த ஏமாற்றுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று குறிப்பிட்ட வீட்டுக்குச் சென்ற இரண்டு போலிச்சாமியார்கள், அங்கு இருந்த பெண்ணிடம் நயினை நாகபூசணி அம்மனின் குறைபாடு உள்ளதாகவும் அதற்கான பரிகாரங்களைத் தாம் செய்வதாகவும் கூறி அவரிடமிருந்து 5 ஆயிரத்து 500 ரூபா பணத்தை வாங்கிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து மீண்டும் ஒருதடவை பஸ்தரிப்பிடம் ஒன்றில் அதே பெண்ணிடம் …
-
- 0 replies
- 1.1k views
-
-
நோர்வே தூதுவருடன் இரா.சம்பந்தன் சந்திப்பு. தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நோர்வே தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற இராணுவ நடவடிக்கைகள், மக்களின் இடம்பெயர்வுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் விளக்கிக் கூறியுள்ளார். அத்துடன் போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதேவேளை மேற்படி சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனிடம் கருத்து தெரிவித்த தூதுவர் ஹன்…
-
- 0 replies
- 605 views
-
-
உதவி வழங்கும் சமூகத்தின் மாநாடு காலியில் நடைபெறவுள்ள நிலையில் தென்பகுதியில் கடும் பாதுகாப்பு. சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் சமூகத்தின் மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காலியில் நடைபெறவுள்ள நிலையில் தென்பகுதியின் பாதுகாப்பு மிகப் பெருமளவில் பலப்படுத்தப்படவுள்ளது. தென்பிராந்திரயத்தில் குறிப்பாக காலி, மாத்தறை, அம்பாந்தோட்டைப் பகுதிகளில் முற்றுமுழுதாக அதிஉயர் பாதுகாப்புக்குள் கொண்டுவரப்பட்டு, முப்படையினரும் 24 மணி நேரமும் முழு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். காலி நகரில் 29 ஆம் நாள் ஆரம்பமாகும் இந்த இருநாள் மாநாட்டுக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமை தாங்குவார். இந்த மாநாட்டில் இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிக்கான …
-
- 0 replies
- 631 views
-
-
புலிகளுக்காக இராணுவ சீருடைகளை பாகிஸ்தானியர் கொண்டுவந்ததாக சந்தேகம் [26 - January - 2007] [Font Size - A - A - A] பாகிஸ்தான் நாட்டின் இராணுவத்தினர் அணிவது போன்ற இராணுவச் சீருடைகளுடன் பாகிஸ்தானியர் ஒருவரை புறக்கோட்டையிலுள்ள விடுதியொன்றில் வைத்து புறக்கோட்டைப் பொலிஸார் பிரிவினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு குறித்த பாகிஸ்தானியர் விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு கொடுப்பதற்காக அந்த இராணுவச் சீருடைகளை எடுத்து வந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் பொலிஸ் தரப்பில் கிளப்பப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவ்வாறு அவர் அந்தப் பெருந்தொகையான இராணுவச் சீருடைகளையும் புலிகளுக்காகத்தான் பாகிஸ்தானிலிருந்து கொண்டு வந்தாரா என்பது பற்றி புலன் விசாரணைகள் செய்யப்பட்டு வருவதாக புறக்கோட்டை பொலிஸ…
-
- 6 replies
- 2.4k views
-
-
வெள்ளி 26-01-2007 16:34 மணி தமிழீழம் [சிறீதரன்] சிறீலங்காவிற்கு மியன்மார் அரசாங்கம் ஆயுத உதவி சிறீலங்கா அரசாங்கத்திற்கு தேவையான ஆயுத தளபாடங்களை வழங்குவதற்கு மியன்மார் அரசாங்கம் உறுதியளித்துள்ளது சிறீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள மியன்மார் வெளிவிவகார அமைச்சர் நையான் வின் இதனை தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்திற்கு தேவைப்படும் சிறிய ரக ஆயுதங்களை தயாரித்து அவற்றை ஸ்ரீலங்காவிற்கு அனுப்பி வைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார் நேற்று சிறீலங்கா வெளிவிவகர அமைச்சர் மங்கள சமரவிரை சந்தித்து பேசிய போதே மியன்மாரின் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார் இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ம…
-
- 7 replies
- 2.2k views
-
-
பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான சக்தி படையினரிடமுள்ளது. கிழக்கில் இது நிரூபணம்: ஜனாதிபதி. பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான ஆற்றல், தேவைப்பாடு மற்றும் சக்தி என்பன எமது படையினரிடம் உள்ளன. கிழக்கில் அதனை படையினர் நிரூபித்துக் காட்டியுள்ளனர். நாட்டு மக்கள் முப்படையினர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அப்பாவி தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்வதே இனவாதத்தை ஒழிப்பதற்கான வழியாகும். இல்லையேல் கொடிய இனவாதம் இலங்கையில் உன்னதமான பாரம்பரியத்தை சிதைத்து சின்னாபின்னாமாக்கிவிடும். இதனை நாம் அனைவரும் உணர வேண்டும் என்றும் அவர் கூறினார் மொரகஹகந்த நீர்தேக்கத் திட்டத்தை நேற்று முற்பகல் ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே…
-
- 6 replies
- 1.8k views
-
-
இரு அமெரிக்க பிரஜைகளால் இந்த விண்ணப்பம் உருவாக்கப்பட்டுள்ளது இதில் கையொப்பமிட்டு ஜநா பொது செயலாளருக்கு அனுப்புங்கள் கையொப்பம் இட இங்கே கிளிக் செய்யுங்கள் குறிப்பு-இதைல் கையொப்பமிட நீங்கள் பணம் செலுத்த வேண்டியது இல்லை This petition has been created by two concerned U.S. citizens, Ellyn Shander, MD and Lisa Hanson. Sign the petition and add your voice: http://www.ipetitions.com/petition/srilankaunappeal/. (Please note that you do not have to make a donation to sign this petition). Copy of the petition is given below. [அவ்விண்ணப்பதின் பிரதி] Humanitarian Petition to the UN Secretary-General Ban Ki-moon United Nations Headquarters U…
-
- 3 replies
- 1.8k views
-
-
வாகரையை அதியுயர் வலயமாக்க முயற்சி சிறீலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பை அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கடந்த செப்ரம்பர் மாதம் சம்பூர் உள்ளடங்கலான மூதூர் கிழக்கு பகுதிகளை ஆக்கிரமித்து அவற்றை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்தமை போன்று தற்போது வாகரையையும் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்வதற்கான முயற்சியில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. வாகரையில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் பணி இன்னமும் நிறைவுபெறாததால் உடனடியாக அங்கு பிரதேசவாசிகள் குடியமர்வது சாத்திமில்லை என சிறீலங்கா அரசஊடகங்களில் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த சில நாட்களாக வாகரையில…
-
- 5 replies
- 1.5k views
-