ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143509 topics in this forum
-
ஐ.நாவின் அமைதிப் படையை உடனடியாக அனுப்பி தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றுக! கொழும்பு, மார்ச்.5 ஐ.நா. அமைதிகாக்கும் படை ஒன்றினை உடனடியாக இலங் கைக்கு அனுப்பி இலங்கைத் தமி ழர்களின் உயிர்களைக் காப்பாற்றுங் கள் அதன் மூலம் அமைதியை நிலை நாட்ட உறுதிப்படுத்துங்கள். இவ்வாறு வற்புறுத்திக் கேட் டுக் கொள்ளும் கடிதம் ஒன்றை இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சி யின் தலைவர் அப்பாத்துரை விநா யகமூர்த்தி ஐ.நா. செயலாளர் நாய கம் பான் கி மூனுக்கு அனுப்பி வைத் துள்ளார். வடக்கு, கிழக்கு, கொழும்பு மற்றும் மலையகத்திலுள்ள தமி ழர்கள் சட்டவிரோதமாகக் கொல் லப்படுவது, கைது செய்யப்படு வது மற்றும் கடத்தப்படுவது போன்ற சம்பவங்கள் நாளாந்தம் நடை பெற்று வருகின்றன. இவ்வாறு கடத்தப்படுபவர்கள் பூஸா என்ற தட…
-
- 14 replies
- 3.2k views
-
-
சிலாபம் நகரை அண்மித்த வீடொன்றிலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு சந்தேகத்தின் பேரில் வடபகுதி தமிழ் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து லப்டொப், கணினி இயந்திரம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் மானவகே தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவர் கடந்த இரண்டு வருடங்களாக சிலாபத்தில் வாழ்ந்து வந்துள்ளவர்களாவர். மற்றவர் கடந்த வாரம் வெளிநாடொன்றிலிருந்து வந்தவராவார். இம் மூவரும் இணைந்து வாடகைக்கு வீடொன்றை எடுத்து அங்கு தங்கி இருந்த நிலையிலேயே தகவல் ஒன்றின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களான இம் மூவருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்புகள் உள்ளனவா என்ப…
-
- 0 replies
- 596 views
-
-
அரசு மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவியை துறப்பேன் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனத் தெரிவிக்கும் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் டிலான் பெரேரா, இது தொடர்பாக அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அக்குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அரசை விட்டு தான் வெளியேறத் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் டிலான் பெரேரா மேலும் தகவல் தருகையில், இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பகவதி தலைமையிலான பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் குழுவினர் தற்போது இலங்கை வந்துள்ளனர். இவர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராயவே வந்துள்ள…
-
- 1 reply
- 847 views
-
-
மட்டக்களப்பு அரச கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி வந்து கொண்டிருப்பதால் இடம்பெயர்ந்து வரும் மக்களை பராமரிப்பதில் பெரும் சிரமங்கள் எதிர்கொள்ளப்படும் நிலையில் நாளை செவ்வாய்க்கிழமையிலிருந்து வாகரையில் மீள்குடியேற்றப் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதுளை வீதி, வவுணதீவு, கரையாக்கான் உள்ளிட்ட மற்றும் சில அரச கட்டுப்பாடற்ற பிரதேசங்களிலிருந்து கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களிலும் மர நிழல்களிலும் தங்கியுள்ளனர். சனிக்கிழமை காலையில் மாத்திரம் நூற்றுக்கணக்கானவர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை வந்தடைந்துள்ளனர். இவர்களுக்கு உலர் உணவுக…
-
- 0 replies
- 540 views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்த "மிஹின் எயார்" விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மிஹின் எயார் விமான சேவை தனது கன்னிப் பயணத்தை நேற்று ஆரம்பிப்பதென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய விசேடமாக அழைக்கப்பட்டிருந்த 50 பயணிகளுடனும் 8 பணியாளர்களுடனும் நேற்று காலை 11 மணிக்கு இந்தியாவின் திருவனந்தபுரம் நோக்கி விமானம் பயணத்தை ஆரம்பித்திருக்கிறது. பின்னர் விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. "பொக்கர்-27" எனும் சிறிய ரக…
-
- 8 replies
- 2.7k views
-
-
வவுனியாவில் இரு இளம் குடும்பஸ்தர்கள் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொலை [05 - March - 2007] [Font Size - A - A - A] வவுனியா கறுப்பஞ்சான்குளம் பகுதியில் இரு இளம் குடும்பஸ்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சனிக்கிழமை இரவு 7 மணிக்கும் 8 மணிக்குமிடையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. மகா இறம்பைக்குளத்திற்கு அருகில் கறுப்பஞ்சான் குளம் உள்ளது. இவ்விருவரும் வீட்டில் இருந்தவேளை ஆயுதங்களுடன் வந்த ஐவரினால் இவர்கள் கடத்திச் செல்லப்பட்டு வீட்டிலிருந்து சுமார் 200 யார் தொலைவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். கைகள் கட்டப்பட்ட நிலையில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதுரைவீரன் மகேந்திரன் (24 வயது) ப…
-
- 33 replies
- 6.4k views
-
-
அரசியல் தீர்வு காணுமாறு இந்தியாவும் சர்வதேசமும் இணைந்து இலங்கைக்கு அதி உச்ச ராஜீக அழுத்தம் கொடுக்கவேண்டும் பாண்டிச்சேரியில் மாவை சேனாதிராஜா பாண்டிச்சேரி,மார்ச் 5 இராணுவ உத்திகளை மேற்கொள்வதை நிறுத்தி, இனப்பிரச்சினைக்கு நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுமாறு இந்தியாவும் சர்வதேச சமூகமும் சேர்ந்து ராஜீக ரீதியான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவின் உப தலைவருமான மாவை சேனாதிராசா பாண்டிச் சேரியில் தெரிவித்தார். பாண்டிச் சேரி முதல்வர் என்.ரங்கசாமியைச் சந்திப்பதற்காக இங்கு விஜயம் செய்துள்ள மாவை சேனாதிராசா நேற்றுச் செய்தி யாளர்க…
-
- 0 replies
- 693 views
-
-
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆட்கடத்தல்கள், கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து ஐ.தே.கட்சி நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கும் முன்னாள் அமைச்சரும் ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளருமான எஸ்.பி.திஸாநாயக்கா இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏனைய அரசியல் கட்சிகளினதும் ஆதரவு பெற்றுக் கொள்ளப்படுமென்றும் தெரிவித்தார். இது தொடர்பாக ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் மேலும் தெரிவிக்கையில்; நேற்று முன்தினம் சனிக்கிழமை வத்தளைப் பகுதியில் ஐந்து ஆண்களின் சடலங்கள் அடையாளம் காணப்படாத வகையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இது போன்ற சம்பவங்கள் கொழும்பில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு மாகாணம் உட்பட ந…
-
- 1 reply
- 761 views
-
-
கொழும்பில் கடத்தப்பட்டோரது விவரங்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு! மக்கள் கண்காணிப்புக் குழு திரட்டி அனுப்புகிறது கொழும்பு,மார்ச் 5 இலங்கையில் கடத்தப்பட்டுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட் டுள்ள மக்கள் கண்காணிப்புக் குழு கடத் தப்பட்டவர்களின் விவரங்களைத் திரட்டி அவற்றை சர்வதேச மனித உரிமை அமைப் புகளிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கை நேற்று கொழும் பில் உள்ள மேலக மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு, புத்தளம் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் கடத்தப்பட்ட 75பேரினது உறவினர்கள் தங்களது முறைப்பாடு களை இந்த அலுவலகத்தில் பதிவுசெய்த னர். கொழும்பில் கடத்தப்பட்ட 35 பேரினது உறவினர்களும், கிழக்கில் கடத்தப்பட்…
-
- 1 reply
- 803 views
-
-
தூதர்களின் மட்டக்களப்பு விஜயம் குறித்து அமைச்சுகளிடையே கருத்து முரண்பாடு ஆளை ஆள் சாடும் வாதப்பிரதிவாதம் கொழும்பு,மார்ச்5 வெளிநாட்டுத் தூதுவர்கள் பலர் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்று கடந்த மாதம் 27ஆம் திகதி ஹெலிக்கொப்டர்கள் மூலம் மட்டக்களப்புக்குச் சென்று தரையிறங்கிய சமயம், விடுதலைப் புலி களின் மோட்டார்த் தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் இலங்கை அரசின் மூன்று அமைச்சுகளி டையே கருத்து முரண்பாட்டை உருவாக்கியிருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளி யிட்டிருக்கின்றன. இலங்கை வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இடர்முகாமைத்துவ, மனித உரிமைகள் விவகார அமைச்சு ஆகியவற்றின் உயர்மட்டத்தினரிடையிலேயே இந்த விவகாரம் கருத்து முரண்பாட்டை உருவாக்கியிருக்கின்றது. அமெரிக்கா…
-
- 0 replies
- 638 views
-
-
துணைபோகும் சர்வதேசம் மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் இலங் கையின் வண்டவாளம் இப்போது சர்வதேச சமூகத் தின் முன்னால் தண்டவாளம் ஏறிக்கொண்டிருக் கின்றது. ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசு எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் நிர்வாகத்தி னால் "சட்டத்தின் ஆட்சி' என்ற பெயரின் கீழ் மேற் கொள்ளப்படும் நடவடிக்கைகளின் சீத்துவம் என்ன வென்பது இப்போது வெளிப்படையாகவே தென் படத் தொடங்கியுள்ளது. "சட்டத்தின் ஆட்சி' நிலவுவதாகக் கூறப்படும் தென்னிலங்கையில் வீதிக்கு வீதி, சந்திக்குச் சந்தி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே ஆயுதங்களோடு சீருடையினர் நிறுத்தப்பட்டிருக் கும் தலைநகர் கொழும்பில் வெள்ளை வானில் நவீன ரக ஆயுதங்களோடு வரும் இனந்தெரியாத குழு வினர், சர்வ சாதாரணமாக, சாவகாசமாக, இந்…
-
- 0 replies
- 643 views
-
-
மிருசுவிலில் இன்று அதிகாலை ஏதோ பயங்கரமாக நடந்துள்ளது. படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர்கள் வெளியிட்ட தகவலில் ஒரு மணித்தியாலங்களாக கடும் மோதல்கள் நடைபெற்றதாக தெரிகிறது. அது தொடர்பான சங்கதியின் செய்தி: யாழில் புலிகள் - படையினர் கடும் மோதல்?? - பாண்டியன் Monday, 05 March 2007 11:16 இன்று அதிகாலை யாழ். தென்மராட்சியில் உள்ள மிருசுவில் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெற்றுள்ளதாக சிங்களப் படைத்தரப்பு வெளியிட்டுள்ள தகவலின் மூலம் அறியப்படுகிறது. இன்று அதிகாலையில் படையினரின் முகாம் ஒன்றின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே ஒரு …
-
- 4 replies
- 3.7k views
-
-
2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வாக்களிக்க விடாது தடுக்கப்பட்டமைக்கு மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் குழுவினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையி
-
- 0 replies
- 1k views
-
-
குடும்ப அரசியல் முடிவுக்கு வரவேண்டும் - சூரியாராச்சி. 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெருமளவிலான பாராளுமன்ற மற்றும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் மங்கள சமரவீரவிற்கு அதாவது எமது பக்கம் ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்கள். எமக்கு ஒரு குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டுவரவேண்டிய பொறுப்புள்ளது. இவ்வாறு முன்னாள் துறைகள் அமைச்சர் சூரியாராச்சி லங்கா தீப பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் திரு.ராஐபக்ஸவின் நடவடிக்கைகள் எம்மை போராட்ட முன்னெடுப்புக்களை கட்டாயப்படுத்தி மேற்கொள்ளச் செய்துள்ளன. இவை இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமான வரும் எனவும் அவர்கள் ஐக்கியதேசியக் கட்சியின் தலைவருடன் எதுவித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவ…
-
- 7 replies
- 1.7k views
-
-
நாடு பயங்கரமான சூழலை நோக்கி செல்கின்றது: ஐ.தே.க, த.தே.கூ [திங்கட்கிழமை, 5 மார்ச் 2007, 07:24 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா ஒரு தோல்வியடைந்த நாடு என்ற நிலையை நோக்கியும் பயங்கரமான காலத்தை நோக்கியும் நகர்ந்து கொண்டிருப்பதாக கந்தானையில் உள்ள முத்துராஜவெலவில் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன தெரிவித்திருக்கின்றன. மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பான மர்மங்கள் தொடர்வதுடன், அவை வேறு ஒர் இடத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு பின்னர் அந்த சதுப்பு நிலத்தில் போடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் …
-
- 2 replies
- 1k views
-
-
மூத்த பாதுகாப்பு அமைச்சு அதிகாரி, அரச சார்பற்ற நிறுவன தலைவர் கைது [திங்கட்கிழமை, 5 மார்ச் 2007, 07:06 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் உள்ளதாக கூறி மூத்த பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி, அரச சார்பற்ற நிறுவன தலைவர் ஆகியோர் சிறிலங்காவின் பயங்கரவாத விசாரணைப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி வெள்ளவத்தையில் உள்ள தமிழ் தொழிலதிபர் ஒருவரின் இல்லத்தில் இருந்தும், அரச சார்பற்ற தொண்டர் நிறுவனத்தின் தலைவர் டிவுலப்பிட்டிய இல்லத்தில் இருந்தும் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டிருப்பதாக பயங்கரவாத விசாரணைப்பிரிவு அதிகாரி ஒருவர் தெர…
-
- 0 replies
- 659 views
-
-
இரு கருணா கூலிக்குழு உறுப்பினர் காயம் நேற்று ஞாயிறு இரவு 7.05 மணியளவில் மட்டக்களப்பு மயிலம்பவே சிறீலங்கா இராணுவ முகாமிற்கு அடுத்திருக்கின்ற திருமலைவீதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருகருணா கூலிக்குழு உறுப்பினர்களும் மற்றும் அச்சமயம் பாடசாலை கட்டிடத்திற்கு அருகில் நின்ற நான்கு இடம்பெயர்ந்த பொதுமக்களும் காயமமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் ஆறுவரும் மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இக்கூலிக்குழு முகாமானது சிறீலங்கா இராணுவமுகாமிற்கு அப்பால் 100 மீற்றர் தொலைவில் ஒரு வீட்டில் இருந்ததாகவும் 15நிமிடநேர தாக்குதலில் அது முற்றாக தகர்க்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது. …
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ்பாணத்தில் வாகன விபத்தில் இரு இராணுவம் பலி கடந்த சனிக்கிழமை இரவு புன்னாலைக்கட்டுவன் குறும்பைசிட்டிப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் தொடரணியின் ஒரு அங்கமாக பயணித்த வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு மல்லாகம் நீதிபதி திருமதி. சறோஜினி இளங்கோவன் சென்று பார்வையிட்டுள்ளார். இராணுவத் தொடரிணி கிளைமோர் அச்சத்தில் வேகமாக பயணித்ததில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக குடிசார்தகவல்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவமானது ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது நடைபெற்றுள்ளது. நீதிபதி உடலங்களை கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியிடம் பிரேதபரிசோதனைக்காக கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subactio…
-
- 0 replies
- 981 views
-
-
விடுதலைப் புலிகளுடன் மகிந்த செய்து கொண்ட ஒப்பந்தத்தில் பிரதான பிரதிநிதியாக பசிலே பங்குபற்றியிருந்தார்: சிறீபதி [ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007, 08:47 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா அரச தலைவர் தேர்தலின் போது சுதந்திரக் கட்சிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒப்பந்தத்தின் போதான பேச்சுக்களில் என்னுடன் பிரதான பங்கை பசில் ராஜபக்சவே வகித்திருந்தார் என முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிறீபதி சூரியாராச்சி மேலும் தெரிவித்தாவது: அரச தலைவரின் ஆலோசகர் பசில் ராஜபக்சவே என்னுடன் முதற் சுற்றுப் பேச்சுக்களில் கலந்து கொண்டார். அதில் கருணாவை கையளிப்பது, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மீதான படுகொலை போன்ற விடயங்கள் கலந…
-
- 1 reply
- 843 views
-
-
3 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் [ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007, 21:11 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 3 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விவரம் வருமாறு: 27.01.07 இல் சிறிலங்கா கடற்பரப்பில் பல கடற்கலங்களை தாக்கியழித்த போது கடற் கரும்புலிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். கடற்கரும்புலி லெப். எழுகடல் என்று அழைக்கப்படும் வவுனியா மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் மா.சந்தனம் 2 ஆம் சந்தி பாடசாலை அருகாமை கனகராயன்குளத்தை தற்காலிக முகவரியாகவும் கொண்ட கதிர்வேல் மகேந்திரன், கடற்கரும்புலி மேஜர் தீக்கதிர் என்று அழைக்கப்படும் முள்ளியான் இடைக்காடு வடமராட்சி கிழக்கு யா…
-
- 0 replies
- 850 views
-
-
அன்று மகிந்தவின் முன்னோடிகளின் காலம்! இன்று மகிந்தவின் காலம் - சபேசன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தமிழீழ விடுதலைப்புலிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். மிக முக்கியமான அந்த அறிக்கையில் உள்ள சில விடயங்களைத் தர்க்கிப்பதன் மூலம், கருத்துக்கள் சிலவற்றை முன்வைப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்! சிறிலங்காவின் அரசுகளுக்கும், தமிழர் தேசத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில், ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றமை என்பதானது இதுதான் முதல் தடவையல்ல! இலங்கைத்தீவு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் அடைந்ததிலிருந்து, பல தடவைகள், இருதரப்பினரிடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இவ்வகையான பேச்சு வார்த்தைகள் …
-
- 0 replies
- 734 views
-
-
அமைதிக்கு உதவாத அவலம் விளைவிக்கும் போக்கு யாழ். குடாநாட்டில் இளம் தலைமுறையினர் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் இலக்கு வைத்துக் கொல்லப்படுவதும் கடத்தப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் பெரும் பீதியையும் அச்சத்தையும் பதற்றத்தையும் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன. அரசாங்கத்தின் அரச படைகளின்கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ். குடாநாட்டில் மனிதாபிமானமே இல்லாத ஈவிரக்கமற்ற கொடுமைகள் கட்டுமட்டில்லாமல் அரங்கேறிவருகின்றன. "புலிப் பயங்கரவாதத்தைப் பதில் பயங்கரவாதத்தால் வெற்றிகொள்ளுதல்' என்ற இராணுவப் போக்கிற்கு கொழும்பு அரசு காட்டிய "பச்சைக் கொடி" யின் விளைவுகளை யாழ். குடாநாடு இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்
-
- 0 replies
- 741 views
-
-
வடக்கு கிழக்கு விவகாரத்தில் வெளிநாட்டு தலையீடுகளுக்கு என்றும் நான் எதிரானவன் - கோத்தபாய வடக்கு கிழக்கு விவகாரங்களில் சம்மந்தப்படும் அனைத்துலக மற்றும் உள்ளுர் உதவு நிறுவனங்கள், வெளிநாட்டு தூதரகங்களுக்கு என்றும் நான் எதிரானவன் என்று சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலரும் மகிந்தவின் சகோதரருமான கோத்தபாய பிரகடனப்படுத்தியுள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் ‘நேசன்’ நாளிதழுக்கு கருத்து தெரிவித்த அவர் ‘எனது சகோதரர் (ஐனாதிபதி) தனது உயிரை துச்சமென மதித்து வாகரைக்கு சென்றார் அதேபோல அங்கு செல்ல விரும்பும் வெளிநாட்டவரும் ஆபத்துக்களை ஏற்க தயாராக இருக்கவேண்டும் அல்லது அங்கு செல்லக்கூடாது’ என தனக்கே உரித்தான பாணியில் தெரிவித்துள்ளார். இதேவேளை சிறீலங்கா அரசு தமிழர…
-
- 1 reply
- 898 views
-
-
யாழில் கிளேமோர்த் தாக்குதல் படையினரின் வாகனம் பலத்த சேதம். யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் நேற்று இரவு 8.45மணியளவில் சிறிலங்காப் படையினரின் வாகனத்தை இலக்குவைத்து ஆயுததாரிகள் மேற்கொண்ட கிளேமோர்த் தாக்குதலில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. அப்பகுதி மக்களின் கருத்தின்படி கிளேமோர்த் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இரத்தக்கறைகள் வீதியில் படிந்திருப்பதாகவும் வாகனத்தின் கண்ணாடிகள் சிதறுண்டுக்காணப்படுவதாகவும
-
- 1 reply
- 1k views
-
-
மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் நடாத்தப்பட்ட எறிகணைத்தாக்குதல் ஒளிப்படம்.(video) click
-
- 0 replies
- 1.4k views
-