ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
''பணம் பறிக்கும் ஒட்டுபடைகள்....'' வவுனியாவில் சில நாட்களாக மக்களை விரட்டி பணம் பறிக்கும் நிலையில் பல ஒட்டுகுழுக்கள் ஈடு பட்டுள்ளதாக அந்த நகர வாசிகள் எமக்கு தெரிவித்தனர். அதன் விபரம் வருமாறு.... வெளிநாடுகளில் இருந்து தமது உறவுகளின் தேவைக்காக பணம் அனுப்பும் அந்த உறவினரது வங்கிகணக்கை வங்கி அதிகாரிகள் ஊடாக பெற்று அதன் அடிப்படையில் அந்த பணத்தை பெற்று கொண்டவர்களிடம் சென்று இன்று உனக்கு பணம் வந்துள்ளது எனவே நீ எமக்கு பணம் தர வேண்டும் இல்லை என்றால் உனக்கு தண்டனை எதுவோ அது அளிக்கப்படும் எனமிரட்டி பண பறிப்புகளில் ஈடுபடுவதாக அந்த பணத்தொகையை இழந்த அயலவர்களில் சிலர் எமக்கு தெரிவித்தனர். அத்துடன் நிற்காது வெளிநாட்டில் உள்ள உறவுகளிற்கு தொலைபேசி எ…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கையில் யாழ் நகரப் பகுதியில் திருட்டுக்கள் அதிகரிப்பு. நேற்று நள்ளிரவுவேளை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கையில் நல்லூர்க் கோயிலின் முன்றலிலுள்ள நாவலர் மணிமண்டபத்தின் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள் அங்கு பெறுமதியான பொருள்கள் ஏதும் இல்லாததால் தமது முயற்சி களைக் கைவிட்டுச் சென்றுள்ளனர். இதேவேளை கொய்யாத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஆலயப் பூசகர் வீட்டுக்குள் நேற்றுமுன்தினம் உட்புகுந்த திருடர்கள் அங்கு தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். நள்ளிரவு 12.30 மணியளவில் வானொன்றில் வந்திறங்கிய கொள்ளைக் கோஷ்டி ஆலயப் பூசகரின் மனைவியின் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இவர்களிடம் கத்தி, பொல்லு, வாள்கள் போன்ற ஆயுதங்கள் இருந்ததாகவும் முகத்தைக் கற…
-
- 0 replies
- 616 views
-
-
யாழில் வெள்ளை வான் கும்பலினால் குடும்பஸ்தர் கடத்தல். யாழ்ப்பாணம் காங்கேசன் துறைவீதியில் சுண்ணாகம் பகுதில் வெள்ளை வானில் வந்த சிறிலங்கா படையினரின் துணை இராணுவக்குழுவினரால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இவர் கடந்தகால போர் நடவடிக்கையினால் காலொன்றை இழந்து அங்கவீனமுற்றவருமானவர். கடத்தப்பட்டவர் ஏழாலை மயிலங்காட்டுப் பகுதியைச் சேர்ந்தவரான டனியல் சாந்தரூபன் (30) என்பவராவார். இவர் தனது சொந்த விடயம் காரணமாக 11.00 மணியளவில் சுண்ணாகம் றெட்டிஆலையடியூடாக ஈருளியில் பயணித்துக்கொண்டிருக்கையில் அவ் வீதியால் சென்ற மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். இவரது செயற்கைக் காலும் ஈருளியும் அநாதரவாக வீதியோரத்தில் கிடப்பதை அவரத…
-
- 0 replies
- 695 views
-
-
18 வயதுக்குக் குறைந்த சிறுவர், சிறுமியரை, அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதியில் வலுக்கட்டாயமாகக் கைது செய்து கொழும்புக்குக் கொண்டுவந்துள்ள சிறிலங்கா அரசு, அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் சேரவிருந்ததாகவும், தாம் காப்பாற்றி விட்டதாகவும் ஊடகங்களிடம் பொய்த் தகவல் பரப்பியுள்ளனர். விடுதலைப் புலிகளின் முகாமிலிருந்து இவர்களைக் காப்பாற்றினோம் என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த சிறார்களிடம் நிருபர்கள் நேரடியாகக் கேள்வி கேட்டபோது, தாம் எந்தப் பயிற்சியிலும் ஈடுபடவில்லை, விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையவும் இல்லை, அவர்கள் எம்மைக் கடத்தவும் இல்லை, நாம் வீடு செல்ல விரும்புகிறோம் என்று தெரிவித்தனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியின் எல்லைப்புற…
-
- 0 replies
- 771 views
-
-
புலிகளையும் பொதுமக்களையும் இனம்காணும் திறன் படையினருக்கு இல்லை: மகிந்த ராஜபக்ச. புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி அப்பாவி மக்களை ஸ்ரீலங்கா படைகள் படுகொலை செய்து வருவதை ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார் நேற்று கொழும்பில் நடைபெற்ற கஜபா இராணுவ படையணியின் விருத வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா ஜனாதிபதி இது குறித்து ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார் புலிகளையும் சாதாரண மக்களையும் இனம் காணும் திறன் ஸ்ரீலங்காவின் முப்படைகளுக்கும் இருக்க வேண்டியது அவசியம் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி நேற்று தெரிவித்துள்ளார் இதன் மூலம் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி அப்பாவிகளை ஸ்ரீலங்காவின் முப்படைகளும் படுகொலை செய்வதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவதானி…
-
- 2 replies
- 1.6k views
-
-
அரசின் ஒத்துழைப்பின்மையால் வெறுங்கையுடன் திரும்பும் அவுஸ்திரேலிய விசாரணைக் குழு [வியாழக்கிழமை, 18 சனவரி 2007, 01:36 ஈழம்] [காவலூர் சங்கீதன்] கிழக்கில் இயங்கி வந்த, பட்டினிக்கெதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோர்வே மனிதநேய நிறுவனத்தின் 17 ஊழியர்களை சிறீலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்தமை தொடர்பாக விசாரணை நடாத்த, விசேட பிரேத பரிசோதனை ஆய்வுக் குழுவொன்று சிறீலங்கா வந்திருந்தது. சர்வதேசத்தை ஏமாற்றும் நோக்குடன் சிறீலங்காவுக்கு அழைக்கப்பட்ட இந்த விசேட விசாரணைக் குழுவினர், 20 நாட்கள் தங்களது முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், சிறீலங்கா அரச தரப்பிலிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. விசாரணை செய்யும் நபர்கள் மற்றும் சாட்சியம் சொல்ல முன்வரும் நபர்களின் முழு விப…
-
- 0 replies
- 910 views
-
-
புரிந்துணர்வு உடன்படிக்கையிலிருந்து இருகட்சிகளும் விலக வேண்டாம் - இந்தியாவும் அமெரிக்காவும் அழுத்தம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து இரண்டு கட்சிகளையும் வில வேண்டாம் என இந்தியாவும் அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்துள்ளன ஐக்கிய தேசிய கட்சியின் மாற்று குழுவை சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து சுதந்திர கட்சிகும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி விலகும் என எதிர்வு கூறப்பட்டிரந்தது ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டால் ஒப்பந்தம் கிழத்தெறியப்படும் எ…
-
- 0 replies
- 1.1k views
-
-
பெப்ரவரி 9-க்கு முன்னர் அலன் றொக் அறிக்கை சமர்ப்பிக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் சிறிலங்கா தொடர்பான அலன் றொக்கின் அறிக்கை சமர்ப்பிக்கப்படாததற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என்றும் அதற்கு எந்த அழுத்தங்களும் காரணமல்ல என்று ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. எனினும் பெப்ரவரி 9 ஆம் நாள் நடைபெற உள்ள கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கு என றொக் தனது இறுதிக்கட்ட அறிக்கையை தயார் செய்து வருவதாக ஐ. நாவின் போச்சாளர் ஓலா கிளிங்டன் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் சிறப்பு ஆலோசகரும், சிறுவர் மற்றும் ஆயுத மோதல்களுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான அலன் றொக் 10 நாள் பயணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் சிறிலங்கா வந்தபோது அவரால் அறியப்பட்ட விடயங்…
-
- 1 reply
- 1.2k views
-
-
வெல்லாவெளியில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு. மட்டக்களப்பு வெல்லாவெளிப்பகுதியில் சிறிலங்காப் படையினர் மற்றும் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரின் முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இம்முறியடிப்பில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.00 மணியளவில் வெல்லாவெளி, காக்காச்சிவெட்டை மாலையர்கட்டு 39 ஆம் கிராமப் பகுதியூடாக துணை இராணுவக்குழுவினர் சகிதம் முன்னேற்ற முயற்சியினை படையினர் மேற்கொண்டனர். முன்னேற்ற முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த ஒரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
அப்பாவி மக்கள் யுத்தத்தின் விளைவுகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எம்மைப் போலவே ஐநாவும் சிந்தித்து யுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நோக்கி ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளது..! இதனை சம்பந்தப்பட்டவர்கள் மதித்து நடவடிக்கைகள் எடுக்க அனைத்துத் தரப்பினரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்..! ************************ பாதுகாப்பு வலயமாக்க ஐநா சபையின் செயலர் கோரிக்கை. புதிதாக நியமிக்கப்பட்ட ஐக்கியநாடுகள் சபையின் செயலர் பன் கி மூன் சிறிலங்கா அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், கோவில்கள் போன்றன தாக்கப்படாதிருக்கும் அனைத்துலக விதிகளுக்கமைவாக இவற்றை ‘பாதுகாப்பான வலயங்கள்’ ஆக பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் மாதத்தி…
-
- 0 replies
- 1k views
-
-
அரசுடன் இணையும் எண்ணம் யாருக்கும் இல்லை: சுரேஸ் பிரேமச்சந்திரன் [Wednesday January 17 2007 06:05:44 AM GMT] [யாழ் வாணன்] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளலாம் என வெளியாகியிருக்கும் செய்திகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் திட்டவட்டமாக மறுத்திருக்கின்றார். இவ்வாறான தகவல்கள் எதனையும் தான் அறியவில்லை எனவும் தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன், இது தொடர்பாக வெளியாகியிருக்கும் செய்தி, பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கேகலிய ரம்புக்வெலவினால் அவிழ்த்து விடப்பட்டுள்ள மற்றொரு கட்டுக்கதையே தவிர வேறொன்றுமல்ல எனவும் தெரிவித்தார். …
-
- 0 replies
- 746 views
-
-
புத்தளம் நகரிலுள்ள நகைக்கடையொன்றில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு ஈரான் நாட்டவர்களையும் இன்று புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேலதிக நீதிவான் உத்தரவு பிறப்பித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இவர்களை புத்தளம் பொலிஸார் நீதிமன்றில் ஆஜர் செய்தனர். ஆஜர் செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் உள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் நகரில் கொள்ளையில் ஈடுபட்ட இந்த வெளிநாட்டவர்கள் அநுராதபுரத்திலும் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. http://www.thinakkural.com/news/2007/1/17/...s_page19413.htm
-
- 1 reply
- 1.5k views
-
-
யாழ். குடாநாடு நோக்கிச் சென்ற கப்பலில் விமான உதிரிப்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் முடியும் வரை கப்பலை நகர்த்த வேண்டாம் என சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. அதேவேளை கப்பலின் உரிமையாளரான ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான தியாகராஜா மகேஸ்வரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அத்தியாவசிய சேவைகள் ஆணையகத்தின் ஆணையாளரால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட இந்த கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசியப் பொருட்களுடன் யாழ்பாணம் செல்லவிருந்த வேளை தடுத்து நிறுத்தப்பட்டது. எனினும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர், விசாரணைகளை குழப்புவதாகவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த கப…
-
- 17 replies
- 3.5k views
-
-
ஈழநாதம் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளார் காலமானார் நிஷாந்தி மூத்த பத்திரிகையாளர் வல்லிபுரம் அருள்ஜோதி நாதன் (56) நேற்று செவ்வாய் கிழமை மாலை 3 மணியளவில் வன்னியில் காலமானார். கான்சர் நோயினால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13 ந் திகதி கிளிநொச்சியில் அனுமதிக்கப்பட்டார். திரு அருள்ஜோதி நாதன் 1993ம் ஆண்டு ஈழநாதம் பத்திரிகையின் ஊடகவியலாளராக இணைந்து பணியாற்றினார். இவர் 5 பிள்ளைகளின் தந்தையுமாவார். இவர் சிறந்த ஒரு சமூக ஆர்வலராகவும் திகழ்ந்துள்ளார். தேசத்தின் விடிவிற்க்கு, ஈழநாத பத்திரிகையின் வளர்ச்சிக்கு பாடுபட காலஞ்சென்ற வல்லிபுரம் அருள்ஜோதிநாதனிற்க்கு தமிழீழ "விடுதலைப்புலிகள் நாட்டுப்பற்றாளர்" விருதளித்து கெளரவித்துள்ளது. …
-
- 0 replies
- 862 views
-
-
* மேல் மாகாண மேல்நீதிமன்றம் நடவடிக்கை ஹெரோயின் வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு பிணை பெற்றுக்கொடுக்க முன்வந்த மூவர் வெலிக்கடைச் சிறைச்சாலையிலுள்ள மேல் மாகாண மேல்நீதிமன்றத்தால் தண்டனைக்குள்ளாகினர். இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபா தண்டப்பணத்திற்கு இருவரும், 18 மாத கடூழிய சிறைத்தண்டனை, 5 ஆயிரம் ரூபா தண்டப்பணத்திற்கு ஒருவருமாக இவர்களுக்கு நீதிமன்ற தண்டனை கிடைத்திருக்கிறது. இத்தண்டனைகளைப் பெற்றுக்கொண்ட மூவரும் ஹெரோயின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சந்தேக நபர்களுடன் எந்த வித தொடர்போ, அறிமுகமோ இல்லாதவர்களாவர். இவர்கள் வீதியிலிருந்து பணம் கொடுத்து அழைத்து வந்தவர்கள் என்று தெரியவந்ததையடுத்து, நீதிவான் இத்தண்டனையை இவர்களுக்கு …
-
- 0 replies
- 987 views
-
-
* சிரேஷ்ட அமைச்சர்கள் சிலருக்கு பதவி பறிபோகலாம் அமைச்சரவை மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள் சிலரிடம் தமது பதவி பறிபோகலாமென்ற அச்சமேற்பட்டுள்ளதாகவும் மற்றும் சிலரிடம் அமைச் சுப் பதவிகளை விட்டுக் கொடுக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸ் என்பன அரசுடன் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டிய நிலைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தள்ளப்பட்டுள்ளார். ஏற்கனவே, சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் அமைச்சருமான டி.எம். ஜயரட்ன கட்சியின் மூத்த உறுப்பினர்களை அமைச்சரவை மாற்றத்தின் போது ஒதுக்கிவிட முடியாதெனத் தெரிவித்திருந்தார். எனினும், அமைச…
-
- 0 replies
- 839 views
-
-
திருமலை சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்க, இலங்கை அரசு கடும் பிரயத்தனம் மேற்கொள்கிறது. 2005 ஆம் ஆண்டு இதை நிறுவுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, டிசெம்பர் 29 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்திய அமைதிப் படையின் பிரசன்ன காலத்திலேயே பல இடங்கள் புள்ளியிடப்பட்டு, எதிர்கால முதலீடுகளுக்கான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. 500 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் நிர்மாணிக்கப்படவிருக்கும் இவ்வனல் மின் நிலையம், 2010 ஆம் ஆண்டு செயற்படத் தொடங்குமெனக் கணிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 500 மெகாவாட் (ஆறு) மின்சார உற்பத்தியை, 1000 மெகாவாட் வரை அதிகரிக்கும் திட்ட வரைவொன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஊடகவாயிலாக வெளிவந்த தகவல்கள். இதன்…
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளுடன் தொடர்புடைய `சோஆ' நிறுவனத்தை நாடுகடத்த நடவடிக்கை [17 - January - 2007] [Font Size - A - A - A] கிழக்கு மாகாணத்திலுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் முகாம்களில் மிக முக்கியமானதாகவும், பலம் வாய்ந்ததாகவும் கருதப்படுவதும் அம்பாறையில் கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்திருப்பதுமான "ஸ்ரான்லி பேஸ்" எனப்படும் புலிகளின் முகாமுக்காக அனைத்து வைத்திய உபகரண வசதிகளும் கொண்ட வைத்தியசாலை தொகுதியை நெதர்லாந்தைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனமாகிய "சோஆ" (ZOA) வழங்கியதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது. அத்துடன், இந்த "சோஆ" நிறுவனம் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருங்கிய சம்பந்தமுடைய ஏனைய நிறுவனங்களுடனும் தொடர்புகளை வைத்திருந்தது பற்றிய தகவல்களும் வெளியாகின. மேற்படி தகவ…
-
- 0 replies
- 1k views
-
-
ரணில் நினைத்தால் அரசாங்கத்துடன் இணையும் 20 எம்.பி. க்களையும் இன்றே தடுத்து நிறுத்தலாம்: எஸ்.பி. திஸாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நினைத்தால் கட்சியிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ள 20 பாராளுமன்ற உறுப்பினர்களையும் இன்றே தடுத்து நிறுத்திவிடலாம். ஆனால் ரணில் தனது தலைமைப்பதவியை தக்க வைத்துக்கொள்வதில் மட்டுமே குறியாக இருக்கின்றார் என்று ஐ.தே.க.வின் முன்னாள் தேசிய அமைப்புச்செயலாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து 18 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக வெளிவரும் செய்திகள் குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது. …
-
- 3 replies
- 972 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 4 உறுப்பினர்கள் அரசில் இணைய ஆர்வம்: கேகலிய ரம்புக்வெல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அரசாங்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசில் இணைய ஆர்வம் கொண்டுள்ள 18 ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நடைபெறுகின்றது. அவர்கள் அரச தலைவருக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளனர். முஸ்லிம் காங்கிரசும் அரசில் இணையும் தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளது. இவை தான் தற்போது எம்மிடம் உள்ள தகவல்கள். இதன் முடிவுகள் அடுத்து வரும் சில வாரங்…
-
- 5 replies
- 1.4k views
-
-
நீர்கொழும்பு நீதிமன்றிலிருந்து கைதி தப்பியோட்டம் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம் வீரகேசரி நாளேடு நீர்கொழும்பு மேல்நீதிமன்றத்திலிருந்து கைதி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை தப்பிச்சென்றுள்ளார். நேற்றுக்காலை 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கைதி தப்பிச்செல்வதற்கு உதவிய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயத்திற்குள்ளாகி நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வத்தளையைச்சேர்ந்த வேலாயுதம் முரளீதரன் (வயது 35) என்ற கைதியே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார். போதைவஸ்து தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேற்படி கைதி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட இருந்த வேளையில்…
-
- 0 replies
- 719 views
-
-
யாழில் 15 வயது சிறுமி உட்பட மூவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தஞ்சம். யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழக்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டு இரண்டு வயோதிபர்கள் உட்பட 15 வயது சிறுமி ஒருவருமாக மூவர் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இதேவேளை சரணடைந்துள்ள வயோதிபப் பெண் கடந்த வெள்ளிக்கிழமை தனது கணவன் தாக்கப்பட்டும் தனக்கு கொலையச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த பெண் சில நாட்களுக்கு முன் ஒட்டுக்குழுக்களின் சூட்டுக்கிலக்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் இராணுவத்தினராலும் ஒட்டுக்குழுவினராலும் கொலை அச்சுறுத்தல் காரணமாக 38 பேர் யாழ். மனித உர…
-
- 0 replies
- 682 views
-
-
புதன் 17-01-2007 10:07 மணி தமிழீழம் [செந்தமிழ்] கிழக்கில் செலய்படும் துணை ஆயுதக் குழுவான கருணா குழுவின் ஆயுதங்களை களையுமாறு முஸ்லீம் காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கையினை அரசாங்கம் நிராகரித்துள்ளது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு துணை ஆயுதக் குழுவினர் அவசியம் என தெரிவித்துள்ள அரசாங்கம் அவர்களிடம் இருந்து ஆயுதங்களை களைய முடியாது என திட்டவட்டமான அறிவித்துள்ளது இதேவேளை முஸ்லீம்களுக்கு எதிரான அவர்களது செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது நன்றி : பதிவு
-
- 0 replies
- 885 views
-
-
யாழ் குடாநாட்டில் கடந்த வருடம் 368 பேர் காணாமல் போயுள்ளனர் மனித உரிமை ஆணைக்குழு அதிகாரி தகவல். யாழ். குடாநாட்டில் கடந்த வருடம் 368 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 31 பேர் யாழ். சிறைச்சாலையில் அடைக்கலம் புகுந்துள்ளதாகவும் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,368 பேரில் பெரும்பான்மையானோர் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னரே காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. வெள்ளை வானில் வந்தோர் சீருடை அணிந்தோர் மற்றும் ஆயுதக் குழுவினரே தமது குடும்ப அங்கத்தவர்களை கடத்திச் சென்றதாக முறைப்பாடுகளில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உறவினர்களின் தகவலின்படி விசாரணைகள் மேற்கொண்டபோது காணாமல் போனோர் எவரையும் கண்டு பிடிக்க முடியவில்…
-
- 0 replies
- 532 views
-
-
பாதிக்கப்பட்ட பிரதேசத்தைப் பாதுகாப்பு வலயமாக்க ஐநா சபையின் செயலர் கோரிக்கை. புதிதாக நியமிக்கப்பட்ட ஐக்கியநாடுகள் சபையின் செயலர் பன் கி மூன் சிறீலங்கா அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், கோவில்கள் போன்றன தாக்கப்படாதிருக்கும் அனைத்துலக விதிகளுக்கமைவாக இவற்றை ‘பாதுகாப்பான வலயங்கள்’ ஆக பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் மாதத்தில் இலங்கைத்தீவில் சிறுவர்களின் அவலம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கபடவிருக்கும் நிலைமையில் மனிதாபிமான பணியாளர்கள் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சுதந்திரமாக சென்று பணியாற்றவும் உதவித்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் எவ்வித இடையூறையும் விதிக்கவேண்டாம் என்…
-
- 0 replies
- 771 views
-