ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
வவுனியாவில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் ஒருவர் பலி மற்றொருவர் காயம். வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்றுமாலை 6:30மணியளவில் காவலரணில் இருந்த சிறிலங்கா பொலிஸார் மீது இனந்தெரியாதோர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ்கான்ஸ்ரபிள் ஒருவர் கொல்லப்பட்டதோடு மற்றொருவர் காயமடைந்துள்ளார். வீடொன்றினுள் இருந்தே கைத்துப்பாக்கிள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் இதன்போது காயமடைந்த பொலிஸ்கான்ஸ்ரபிள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை நேற்று மாலை 7:45மணியளவில் வவுனியா மறவன்குளம் பகுதியில் வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படையினர் மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் பட…
-
- 0 replies
- 591 views
-
-
சிறீலங்கா இராணுவத்தால் நேற்று வியாழக்கிழமை முதல் யாழ்துடாநாட்டில் ஊரடங்கு மாலை 7 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முன்பு மாலை 9 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை இருந்தது தெரிந்ததே. குடாநாட்டில் சிறிய ரக மோட்டார் சைக்கிள்களில் மக்கள் பயணம் செய்வதற்கும் படையினர் நேற்று முதல் தடை விதித் துள்ளனர். "சூட்டி பப்', "ரி.வி.எஸ்49சிசி', "சாளி' போன்ற மோட்டார் சைக்கிள்களில் சென்ற பொதுமக்கள் மறிக்கப்பட்டு அந்த வாகனங்களில் பயணம் செய்வதை நிறுத்துமாறு படையினர் அறிவுறுத்தினர். இந்த நடைமுறை உடன் அமுலுக்கு வருவதாக அந்த வாகனங்களைப் பயன்படுத்துவோருக்குப் படையினர் நேற்று வீதிகளில் வைத்துத் தெரிவித்தனர். இந்த வகை வாகனங்களை இலகுவாகச் செலுத்தலாம் என்பதால் பெண்களே இவற்றை அ…
-
- 0 replies
- 730 views
-
-
கடந்த வருடம் ஒக்டோபர் 8 ஆம் நாள் காலி கடற்படைத்தளத்தின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியதற்காக காலி கடற்படைத் தளத்தின் கடற்படை அதிகாரிகள் பலர் 4 அங்கத்தவர்கள் கொண்ட இராணுவ நீதிமன்றின் முன்பா நிறுத்தப்பட உள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். படையினரின் உதவித் தலைமை அதிகாரி வசந்த தென்னகோன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இராணுவ நிதிமன்றம் கடமை தவறிய கடற்படை அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க உள்ளது. விடுதலைப் புலிகளால் காலித் துறைமுகம் தாக்கப்படலாம் என்று புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்ட பின்னரும் கடற்படையின் தென்பகுதி கட்டளை மையத்தின் அதிகாரிகள் அதை முறியடிக்கும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதால் இந்த நீதிமன்றம் கடற்படைத்தளபதி வ…
-
- 0 replies
- 833 views
-
-
நியூசிலாந்தில் விமானம் மூலம் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் ஏ-9, ஏ-15 பாதைகளை மூடி தமிழ் மக்களை பட்டினியால் சாகடிப்பதை கண்டித்து கடந்த சனிக்கிழமை (06.01.07) நியூசிலாந்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. நியூசிலாந்துக்கு வருகை தந்திருக்கும் சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர், துடுப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த போராட்டம் இடம்பெற்றது. கவனயீர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக விமானம் மூலம் "Sri Lanka stop killing Tamils" என்ற வாசகம் தாங்கிய கொடி மைதானத்தை சுற்றி வலம் வந்தது. இதனிடையே வாசக அட்டைகளை தாங்கிய வண்ணம் ஒக்கிலாந்து நகரத்தின் மத்தியில் தமிழ்மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சிறிலங்கா அரசாங்கம் தமிழ்மக்க…
-
- 16 replies
- 3.4k views
-
-
மட்டக்களப்பில் கருணா கும்பலின் முகாம் மீது தாக்குதல் - பாண்டியன் றுநனநௌனயலஇ 10 துயரெயசல 2007 22:47 மட்டக்களப்பு கல்லடியில் சாந்தி திரையரங்கிற்கு முன்பாகவுள்ள ஒட்டுப்படை கருணா கும்பலின் முகாம் மீது இரவு 11.10 முதல் தாக்குதல் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவி;க்கின்றன. தொடர்ந்து குண்டுச் சத்தங்கள் அப்பகுதியில் கேட்டவண்ணமிருப்பதாக அத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்த முழுமையான விபரங்கள் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை. நேற்று வாhழைச்சேனையில் கருணா கும்பலின் மூன்று முகாம்கள் அழிக்கப்பட்ட நிலையில் இன்று இத்தாக்குதல் இடம்பெறுவது என்பது குறிப்பிடத்தக்கது http://www.sankathi.org/news/index.php?opt...06&It…
-
- 7 replies
- 3k views
-
-
வல்வெட்டித்துறையில் ஒருவர் சுட்டுக்கொலை - சோழன் Friday, 12 January 2007 00:10 {சங்கதி} இன்று(வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஊரணி பகு தியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த 35 வயதான காங்கேசமூர்த்தி சண்முகராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். மீன்வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இவர் தொழிலின் நிமித்தம் வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் கடத்திச்செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
-
- 0 replies
- 732 views
-
-
வாகரையில் படையினர் எறிகணைத் தாக்குதல்: 3 பொதுமக்கள் பலி - 11 பேர் காயம். மட்டக்களப்பு வாகரை மருத்துவமனை சுற்றாடல் பகுதியை நோக்கி சிறிலங்காப் படையினர் நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் மூவர் பலியாகியுள்ளதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். கரடிக்குளம், வாழைச்சேனை மற்றும் கல்லாறு படை முகாம்களிலிருந்து இன்று திங்கட்கிழமை காலை முதல் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீது செறிவான எறிகணைத் தாக்குதலை படையினர் நடத்தினர். காயமடைந்தவர்களில் 5 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரின் வழித்துணையுடன் கடல்வழியாக மட்டக்களப்பு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். -Puthinam-
-
- 25 replies
- 4.4k views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பினர் பேசுவது ஒரு விபசாரி தனது கற்பைப் பற்றி புகழ்ந்து பேசுவது போன்றதென அமைச்சர் சி.பி.இரட்நாயக்கா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; யாழ்ப்பாணத்தில் மக்கள் பசி, பட்டினி என்றும் படிப்பதற்கு கொப்பி, பென்சில்கள் இல்லையென்றும் அவதியுறுவதாகக் கூறும் தமிழ்க் கூட்டமைப்பினர் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதிகளை விட்டு வெளியேறி கொழும்பில் இருந்தவாறு சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர். யாழ். குடாநாட்டு மக்களின் பிள்ளைகள் படிப்பதற்கு வசதியற்று இருக்கையில் புரட்சியாளர்களின் பிள்ளைகள் வெளிநா…
-
- 11 replies
- 3.2k views
-
-
ஒரு பாடசாலையின் அதிபர் வேறு ஒரு பாடசாலையின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட சம்பவம் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. பாடசாலைகளில் குண்டுப்புரளி என்ற வதந்தியால் கடந்த ஆண்டு முதல் நாட்டில் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்புப் பணிகளில் பெற்றோர். பழைய மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதன்படி அப்பாடசாலையில் கல்வி கற்கும் இரு மாணவர்களின் தந்தையான வேறு ஒரு பாடசாலையின் அதிபரும் ஒருநாள் அக்கடமையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர் பாடசாலை ஒன்றின் அதிபராக இருப்பதால் அவருக்குப் பதிலாக வேறு ஒரு தந்தையாரை அக்கடமையில் ஈடுபடுத்துமாறு பலரும் அந்த அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அந்த அதிபரோ அதனை ஏற்க மறுத்து கு…
-
- 1 reply
- 1.5k views
-
-
நிட்டம்புவ மற்றும் ஹிக்கடுவ பிரதேசங்களில் தொடர்சியாக இடம்பெற்ற இரு பஸ் குண்டு வெடிப்புகளையடுத்து, அரசாங்கத்தால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் பாதுகாப்புடன் கூடிய புதிய பல போக்குவரத்து விதி முறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்கக் கூடிய அளவில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த உத்தியோகத்தர்கள் இல்லையென விசனம் தெரிவிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து அமைச்சு ஏ.எச்.எம்.பௌஸியின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் பஸ், ரயில் போக்குவரத்துக்களின் போது பயணிகளின் பாதுகாப்பு கருதி சில புதிய விதிமுறைகளை அமுல்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. இதன் போது, பெரிய பொதிகளுடன் வரும் பயணிகளை பயணத்தின் இடைநடுவில் பஸ்ஸில் ஏற்றுவதில்லை…
-
- 0 replies
- 1k views
-
-
மாகாண மட்டத்தை' தாண்டாமல் ஐ.தே.க.வின் யோசனை சர்வகட்சி மாநாட்டு பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் திங்கட்கிழமை மாலை அமைச்சரும் பேராசிரியருமான திஸ்ஸ விதாரண சமர்ப்பித்த இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான (தனிநபர்) யோசனையில் பிரதமர் மக்களினால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதுடன் நிறைவேற்று அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருக்கும் அதேசமயம் ஐ.தே.க. சமர்ப்பித்த யோசனையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக 6 தொடக்கம் 8 வருடங்கள் இணைந்திருக்க வேண்டுமெனவும் பாதுகாப்பு, துறைமுகம், விமான நிலையம், நிதி உள்ளிட்ட பிரதான 7 அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன்வசம் வைத்துக் கொண்டு ஏனையவற்றை மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 950 views
-
-
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற சில குண்டு வெடிப்புகளின் பின்னணியில் அரசாங்கமே இருப்பதாக குற்றம்சாட்டிய ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, வத்தளை மின்மாற்றியை குண்டு வைத்து தகர்த்தவர்கள் யாரென்பதும் தமக்குத் தெரியுமெனக் கூறினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; அரசாங்கத்தின் கௌரவம், சமாதானம் இன்று வீதிகளில் பஸ்களில் குண்டுகளாக வெடிக்கின்றது. நாட்டில் இடம்பெறும் சில குண்டு வெடிப்புகளின் பின்னணியில் அரசாங்கமேயுள்ளது. இவ்வாறான குண்டு வெடிப்புகள் மூலம் நாட்டில் ஓர் யுத்த சூழல் ஏற்பட்டுவிட்டது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முனைகின்றனர். நாட்டின் பொரு…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையின் பெரும்பகுதி பொருளாதார வளங்களையும் கடல் பகுதிகளையும் கொண்ட வடக்கு, கிழக்கின் பயன்களை ஒரு இனம் மட்டும் அனுபவிக்க எவ்வாறு இடமளிக்க முடியுமென ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அவசர காலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; வடக்கிலிருந்து சிங்களவர்களும் முஸ்லிம்களும் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். இதேபோன்று இந்நாட்டின் எந்த மூலையிலிருந்தாவது தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனரா?புலிகளையோ, பிரபாகரனையோ நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாரில்லை. அதனால்தான், புலிகளின் பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் தப்பி அரச கட்டு…
-
- 0 replies
- 876 views
-
-
கெல உறுமய தேரே நாடாளுமன்றில் இப்படித் தெரிவிப்பு கிழக்கை நாம் புலிகளிடமிருந்து முற்றாகமீட்டுக் கொண்டோம். எனவே, இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்பொது புலிகளிடம் ஒரு முகாம் மீது கூட தாக்குதல் நடத்தும் பலம் இல்லை. அவர்களால் ஒரு பொலிஸ்காவலரண் மீது கூட தாக்குதல் நடத்த முடியாது. ஜாதிக கெல உறுமைய நாடாளுமன்றக குழுத் தலைவன் அதுரலியே ரத்ன தேரோ நேற்று நாடாளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார். வடக்குகிழக்கு இன்றைய நிலை மற்றும சமாதான முன்னெடுப்புக்கள் பற்றி சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் அவர் தொடர்ந்து பேசும் போது கூறியதாவது :- போரிட முடியாத நிலையில் தான் புலிகள் தெற்கில் பஸ்களில் குண்டுகளை வைத்து பொது மக்களைக் கொலை செய்கின்றனர். பொதுமக்கள் கொலை செய்யப்பட்டது குறித்துக் கூட…
-
- 2 replies
- 1.6k views
-
-
அண்மையில் அக்குறுகல கொடகம பிரதேசத்தில் பஸ் ஒன்று குண்டுவெடிப்புக்குள்ளாகிய சம்பவத்தில் உயிரிழந்த 11 நபர்களின் இறந்த உடல்களில் பெண்ணொருவரின் உடற்பகுதிகள் அடையாளம் காணப்படாத நிலையில் அதனைத் தற்கொலைக் குண்டுதாரிப் பெண்ணின் இறந்த உடல் என புலனாய்வுப் பிரிவு பொலிஸ் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் கடந்த 8 ஆம் திகதி மேற்படி பெண்ணின் இறந்த உடல் தெவிநுவர ரஸ்ஸன்தெரிய பிரதேசத்தைச் சேர்ந்த பறகஹவத்தேகெதர பகுதியில் வசித்து வந்த டெய்ஸி ஜயசிங்க எனப்படும் பெண்ணின் உடல் என அவருடைய உறவினர்களால் உடல் வைக்கப்பட்டிருந்த கறாப்பிட்டிய வைத்தியசாலையில் வைத்து அடையாளம் காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பெண் 69 வயதுடையவர் எனவும் இவருடைய உடலையே தற்கொலைக் குண்டுதாரிப் பெண் என முன்ன…
-
- 0 replies
- 679 views
-
-
யாழில் இருவேறு பகுதிகளில் கிளேமோர்த் தாக்குதல். யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மறவன் புலப் பகுதியில் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்காப் படையினரை இலக்குவைத்து இன்று காலை 7.15மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கிளேமோர்த் தாக்குதலில் இரண்டு சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்துள்ளனர். இதே வேளை இன்று காலை 6.30மணியளவில் வடமராட்சி திக்கம்பகுதியில் ரோந்து சென்ற படையினர் மீதும் கிளேமோர்த் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதலின் போது ஏற்பட்ட சேதவிபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. காயமடைந்த படையினர் இருவரையும் அவசரசிகிச்சைக்கா பலாலி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதா
-
- 0 replies
- 766 views
-
-
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைக்காக காத்திருக்கும் மகிந்த. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆதரவு வழங்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரவுக்காக காத்திருப்பதாகவும் அவர்களின் வரவால் நாடாளுமன்றத்தில் அரசின் பலம் 118 ஆக உயர்வடையும் என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தனது அமைச்சர்களிடம் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வரவு குறித்த ஏதேனும் தகவல்கள் உண்டா என மகிந்த கேட்டபோது, அப்படி எதுவும் தெரியாது எனவும் ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்வாங்குவதற்கு தங்கள் ஆதரவு உண்டு எனவும் அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும் அரசின் பக்கம் சார…
-
- 0 replies
- 741 views
-
-
எதிர்வரும் 15 ஆம் நாள் சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா. தீர்மானம்: லக்ஸ்மன் கிரியெல்ல. சிறிலங்கா அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை தீர்மானம் ஒன்றை எதிர்வரும் 15 ஆம் நாள் கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் அவர் கூறியதாவது: இலங்கை 1948 இல் சுதந்திரம் அடைந்ததில் இருந்து எந்த ஒரு சர்வதேச அமைப்புக்களோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானங்களை இதுவரையில் கொண்டு வந்தது இல்லை. பாதுகாப்புச் சபையின் அரசுக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக அரசு என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றது? 1988, 1989 ஆண்ட…
-
- 3 replies
- 1.2k views
-
-
9 நாட்களில் 17 பேர் குடாநாட்டில் கடத்தல் யாழ். குடாநாட்டில் கடந்த ஒன்பது நாட்களில் 17 பேர் காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. குடாநாட்டில் கடத்தப்படுவோரினது எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் காணாமல் போனவர்களில் ஐவர் வீடுகளுக்குள் புகுந்த ஆயுத பாணிகளாலேயே கடத்தப்பட்டிருக்கின்றார்கள
-
- 0 replies
- 775 views
-
-
காவல்துறை, இராணுவம் கூட்டாகத் தேடுதல் நவீன கருவிகளுடன் சோதனைக்கும் ஏற்பாடு. நாடளாவிய ரீதியில் கடந்த இரு தினங்களாக தேடுதல், சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, வீதிச்சோதனைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. காவல்துறையினரும், படையினரும் இணைந்து மேற்கொள்ளும் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சிவில் குழுக்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டது. சுவீடன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகள், உபகரணங்களைத் தருவித்து தாமதங்களைத் தவிர்த்துக்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இலத்திரனியல் உபகரணங்களை மறைத்து எடுத்துச் செல்வதை சமிஞ்ஞை அறிவிப்பு மூலம் வெளிப்படுத்தும் கருவிகளைக்கொண்டு கண்டுபிடிக்கவும் ந…
-
- 0 replies
- 702 views
-
-
அவுஸ்திரேலியாவில் விடுதலைப் புலிகளை தடை செய்ய அழுத்தம் கொடுக்கும் பாலித கோகன்ன [செவ்வாய்க்கிழமை, 9 சனவரி 2007, 21:10 ஈழம்] [காவலூர் சங்கீதன்] அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வமாக சென்றிருக்கும் சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன, சிறிலங்கா அரசு மிகுந்த அர்ப்பணிப்புடன் சமாதானப் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் விடுதலைப் புலிகள் அதற்கு ஒத்துழைப்பதில்லை என்று கவலை வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழியாக, அவர்களைத் தடை செய்வதுதான் சரியானது என்று தான் கருதுவதாகவும், அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிறப்பு ஆலோசகராகவும் பணியாற்றும் பாலித கோகன் கேட்டுக் கொண்டுள்ளார். வெளிநாட்டிலிர…
-
- 7 replies
- 1.8k views
-
-
அப்பாவி பொதுமக்கள் படுகொலை தொடர்பில் நடவடிக்கை தேவை: மனித உரிமைகள் அமைப்பு இலங்கையில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதை அனைத்துலக சமூகம் கண்டிக்க வேண்டும் என்று நியூயோர்க்கை தளமாகக்கொண்டு இயங்கும் ஹியுமன் றைட்ஸ் வோட்ச் அமைப்பான மனித உரிமைகள் அமைப்பு நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. சிறிலங்காப் படைகளாலும் விடுதலைப் புலிகளினாலும் அப்பாவி பொதுமக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கப்படுவதை தடுக்க அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு தேவை என்று அந்த அமைப்பின் ஆசியப் பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: மன்னாரில் இடம்பெற்ற தாக்குதலில் 50 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தெற்கில் அதற்கு எதிராக இடம்…
-
- 0 replies
- 737 views
-
-
தேசிய நாடக வருடத்தில் அரசியல் ஏமாற்று நாடகம் நாட்டின் நாடகத்துறையை மீள் எழுச்சிகொள்ள வைக்கும் நோக்குடன் இந்த ஆண்டைத் "தேசிய நாடக வருடம்' ஆகப் பிரகடனப்படுத்தியிருக்கின்ற
-
- 0 replies
- 872 views
-
-
சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் அமைச்சில் இரண்டாம் நிலைப் பதவியான வெளிவிவகாரத்துறைச் செயலாளர் வெற்றிடத்தை நிரப்ப, சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவின் சிறப்பு ஆலோசகரான பாலித கோகன்னவை நியமிக்கும் மகிந்தவின் யோசனையை மங்கள சமரவீர நிராகரித்துள்ளார். சிறிலங்கா அரச சமாதான செயலகப் பணிப்பாளராகவும், மகிந்தவின் சிறப்பு ஆலோசகராகவும் தற்போது பதவி வகித்து வரும் பாலித கோகன்னவை மகிந்தவின் பிரத்தியேக திட்டமிடலின்படி, புதிய வெளிவிவகாரத்துறை செயலாளராக நியமிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இருப்பினும் இந்த செய்தியில் உண்மை எதுவும் இல்லை என்று வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. மகிந்தவுடன் மங்கள சமரவீர கடந்த சனிக்கிழமை விரிவான பேச்சுக்களை நடத்திய போ…
-
- 1 reply
- 956 views
-
-
வியாழக்கிழமை, 11 சனவரி 2007, 04:15 ஈழம் (க.நித்தியா) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பின் வாகரைப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பெரும் மனித அவலங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான பணிகளுக்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான பணிகளுக்கான ஆணைக்குழுவின் தலைவர் ஜுலியன் வில்சன் நேற்று புதன்கிழமை இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது: வாகரைப் பகுதிக்கான போக்குவரத்து மிகக் கடினமாக உள்ளது. அங்கு உணவுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. அண்மைக் காலங்களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையினால் 20இ000 மக்கள் வாகரைப் பிரதேசத்திலிருந்து வெளியேறியுள்ள போதும் மேலும் 15,000 மக்கள் அங்கு வசித்து வருகின்றனர். வாகரையி…
-
- 1 reply
- 986 views
-