ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
* 600 குடும்பங்கள் இருப்பிடங்களை இழந்து விடும் அபாயம் மூதூர் கிழக்கில் அனல்மின் நிலையத்தை அமைப்பதற்காக அரசு தமிழர்களுக்கு சொந்தமான சுமார் ஐந்நூறு ஏக்கர் நிலத்தை சுவீகரிக்கவுள்ளதாகத் தெரிய வருகிறது. மூதூர் கிழக்கில் சம்பூர் பகுதியில் மிக விரைவில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்பப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதியில் இடம்பெற்ற பாரிய இராணுவ நடவடிக்கையால் 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் மூதூர் கிழக்கில் 12 க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது சம்பூர் பகுதியில் 500 ஏக்கர் நிலத்தை இந்த அனல்மின் நிலையம் அமைப்பதற்காக சுவீகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மூதூர் கிழக்கு மக்கள் தற்போது…
-
- 0 replies
- 623 views
-
-
வாகரைப் பகுதியில், 17 கிளேமோர் குண்டுகள் பொருத்தப்பட்ட நிலையில் கடற்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகொன்றை படையினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த 17 கிளேமோர்களை விட சுமார் 30 கிலோ ரி.என்.ரி. ரக வெடி மருந்தும் அந்தப் படகினுள் வைக்கப்பட்டிருந்ததாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது. மேற்படி 17 கிளேமோர்களும் 30 கிலோ வெடி மருந்தும் ஒரே நேரத்தில் வெடிக்கும் விதத்தில் வயர்கள் மூலம் இணைப்புகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாரிய தாக்குதலொன்றுக்காக கடற்கரும்புலிகள் இந்தப் படகைத் தயார் நிலையில் வைத்திருந்த போதே படையினர் வாகரையை கைப்பற்றியதன் மூலம் அங்கிருந்து இந்தப் படகையும் கைப்பற்ற முடிந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வாகரைப் …
-
- 0 replies
- 987 views
-
-
மூவர் பொலிஸாரால் கைது - கே.பி. மோகன் - கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள மறைவிடமொன்றிலிருந்து சட்ட விரோதமான முறையில் மறைத்து வைத்திருந்த பொருட்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, இப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர்களென சந்தேகிக்கப்படும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். டோர்ச்லைட்டுகள், பற்றறிகள், இறுவெட்டுகள், கையடக்க தொலைபேசிகள், பெற்றோல், மருந்து வகைகள், பன்டேஜ் ஆகியனவே பெருந்தொகையில் கைப்பற்றப்பட்டுள்ளன. இப்பொருட்கள் கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர்களிடமிருந்து இரகசியங்களை பெற்றுக் கொள்ள தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் …
-
- 0 replies
- 772 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சி செய்துகொண்ட நல்லாட்சிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை காலாவதியாகிவிட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த ஐ.தே.கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ருக்மன் சேனாநாயக்க உடன்படிக்கையின் நகலை கிழித்தெறிந்ததோடு இனிமேல் அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான எதுவிதமான ஒத்துழைப்பையும் தமது கட்சி வழங்காதென்றும் அறிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே ருக்மன் சேனாநாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில், கட்சி எதுவிதமான அறிவித்தலையும் வழங்காது, செயற்குழுவின் அனுமதியின்றி அரசாங்கத்துடன் இணைந்து பதவிகளை …
-
- 0 replies
- 833 views
-
-
பிரிந்து சென்றோரின் கட்சி அங்கத்துவத்தை பறிப்பதற்கு ஐ.தே.கட்சி சட்ட நடவடிக்கை. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டவர்களின் கட்சி அங்கத்துவத்தைப் பறிப்பதற்கும் அவர்களின் தொகுதிகளுக்குப் புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்குமான நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க நேற்றுத் தெரிவித்தார். கட்சியைவிட்டு பலர் பிரிந்து சென்றார்கள் என்பதற்காக கட்சி பலமிழந்து விட்டது என்று அர்த்தமல்ல. கட்சியைப் பலமிழக்கச் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையையும் தகர்த்தெறியும் மாற்றுத் திட்டம் எம்மிடம் உள்ளது. எமது பலம், கட்சி உறுப்பினர்கள் அல்லர்; கட்சிக்கு வாக்களித்த மக்கள்தான். கட்சிய…
-
- 0 replies
- 641 views
-
-
(தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய "விடுதலை" என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் இருந்து சில பகுதிகள் - நன்றி: பெரியார் முழக்கம் வார ஏடு) விடுதலைப்புலிகள் தலைமை தாங்கி முன்னெடுத்து வரும் தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் நல்கிய உதவி அளப்பரியது. எல்லாவற்றையுமே முழுமையாக இங்கு ஆவணப்படுத்த முடியாதபோதும், ஒரு சில முக்கிய சம்பவங்களையாவது பதிவு செய்வது வரலாற்று ரீதியாகப் பயன்படும் எனக் கருதுகிறேன். இப்பொழுது தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் என்ற சொல்லை உச்சரிப்பதே சட்ட விரோதமான ஒரு குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் வளர்த்து விட்ட அ.தி.மு.க. கட்சியும், அதன் தலைமையும் இன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த…
-
- 0 replies
- 1k views
-
-
உதவி வழங்கும் சமூகம் இராணுவத் தீர்வுக்கு எதிர்ப்பு [செவ்வாய்க்கிழமை, 30 சனவரி 2007, 08:06 ஈழம்] [கொழும்பு நிருபர்] இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வை நாடுவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கும் சிறீலங்காவுக்கு உதவி வழங்கும் சர்வதேச சமூகம், விடுதலைப் புலிகளுடன் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது அவசியம் எனவும் வலியுறுத்தியிருக்கின்றது. மோதலுக்குத் தீர்வைக் காண்பதற்கான எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் ஜப்பான், அமெரிக்கா, உலக வங்கி என்பன கடுமையாக எதிர்த்திருக்கின்றன. ''இந்தப் பயங்கரமான மோதலுக்கு இராணுவ வழியில் தீர்வைக்காண முடியாது என்பது எமது உறுதியான நம்பிக்கை'' என்று அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளேக் காலியில் நடைபெறும்…
-
- 0 replies
- 617 views
-
-
இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதுடன் கவனமும் செலுத்துகிறோம். இலங்கை சமாதானமும் அமைதியும் நிலவுமேயாயின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வர் என உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பிரதி தலைவர் பிரபல் பட்டேல் இன்று தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதானத்தை நிலை நிறுத்துவதை தவிர வேறு தேர்வு இல்லை. இலங்கையின் அபிவிருத்தி, புணரமைப்பு பணிகள் சமாதானத்தினை உண்டாக்குவதிலேயே தங்கியுள்ளது. முழு இலங்கையில் அண்மைய மோதல்களால் மக்கள் இடம்பெயர்ந்து வீடுகளை,கல்வி மற்றும் போதியளவு சுகாதார வசதியின்றி சிரமப்படுகிறார்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் போதியளவு பாதிப்பில்லாத போதும் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ள…
-
- 15 replies
- 2.2k views
-
-
செவ்வாய் 30-01-2007 00:35 மணி தமிழீழம் [மயூரன்] கடந்த சனிக்கிழமை வன்னி விசுவமடுப் பகுதியில் எதிர்பாராத வெடிவிபத்தில் போராளி ஒருவரும் ஒன்பது உதவிப்படை வீரர்களும் வீரச்சாவை தழுவிக் காண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். தமிழீழ போர் உதவிப்படை வீரர்களான யாழ் மாவட்டத்தை சேர்ந்த சின்னப்பா தவராசா, துரைசாமி தவராசா, செல்லத்துரை பிரமானநடதம், தம்பிராசா அருணோதயன், சபாரத்தினம் றஜிந்தன், விசுவமடுவைச்சேர்ந்த மகேந்திரன் றஜிவன், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த யோகரத்தினம் நிசாந்தன், செபமாலை நரேஸ்காந்தன்,சிவஞானம் விஜிதரன் ஆகியோரே வீரச்சாவடைந்துள்ளனர். இவர்களுடன் லெப்.கேணல் மலரவன் என்றழைக்கப்படும் யாழ்மாவட்டத்தை சேர்ந்த நவரத்தினராசா சுரேஸ்குமார் என்ற போராள…
-
- 4 replies
- 1.2k views
-
-
US backs Sri Lanka, urges talks and access for humanitarian agencies [TamilNet, Monday, 29 January 2007, 14:23 GMT] The United States, reiterating its strong support for Sri Lanka's efforts "to combat terror," Monday called on Sri Lankan President Mahinda Rajapakse's government to also forge a power-sharing proposal as the basis for negotiations with the LTTE. Pointing out development can only take place amid peace, U.S. Ambassador to Sri Lanka Robert Blake told a meeting of Sri Lanka's donor community that 'transparency, good governance, and respect for human rights and the rule of law are essential preconditions for economic development and indispensable prerequ…
-
- 0 replies
- 691 views
-
-
அரசுடனும் விடுதலைப்புலிகளுடனும் நோர்வே விரைவில் தொடர்புகொள்ளும் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து நோர்வே அவதானித்து வருகின்றது. அது விரைவில் அரசுடனும், விடுதலைப்புலிகளுடனும் தொடர்புகொள்ளும். இவ்வாறு கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தனிடம் கூறினார்என அறியப்படுகின்றது. தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாகக் கொழும்பிலுள்ள நோர்வே தூதுவரை இரா. சம்பந்தன் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். நோர்வே தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகள், மக்களின் இடப் பெயர்வுகள்குறித்து தூதுவரிடம…
-
- 1 reply
- 994 views
-
-
இந்தியாவால் சிறீலங்காவிற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி சிறீலங்காவின் தெற்குபிராந்திய தொடரூந்து இணைப்பை அபிவிருத்தி செய்வதற்கு 100 மில்லியன் அமெரிக்கடொலர் கடனுதவி அளிப்பதாக இன்று இந்தி அலுவலகர்கள் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை கடந்த நான்கு வருடங்களில் 281 மில்லியன் அமெரிக்க டொலர்; கடனுதவியாக வழங்கியுள்ளதாகவும் இவை கோதுமைஇ பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தியதாகவும் இந்தியதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இந்தியாவால் சிறீலங்காவிற்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பம்இ மற்றும் எண்ணை அகழ்வு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் சிறீலங்காவின் உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 847 views
-
-
கிளிநொச்சியில் போராளி அணிகளின் போர்ப் பயிற்சி நிறைவு நிகழ்வு நேற்று முன்தினம் கிளிநொச்சியில் குட்டிசிறி மோட்டார் படையணிஇ படைய தொடக்கப் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த போராளி அணிகளின் போர்ப்பயிற்சி நிறைவு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது உரையாற்றிய புலிகளின் குரல்வானொலியின் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றின் முக்கிய காலகட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு நிற்கும் வேளையில்இ போராளிகளாக நிமிர்ந்து நிற்கும் பிள்ளைகள் விடுதலையின் பாதையில் உறுதியுடன் பயணிப்பார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை பட்டினியால் வதைத்தும்இ படுகொலை செய்தும் இளையதலைமுறையினரை கடத்திக் கொன்றும் தமிழிழ மண்ணை ஆக்கிரமிப்பதில் சிறீலங…
-
- 0 replies
- 1.2k views
-
-
தஞ்சமடைந்தாலும் சுட்டுக் கொல்கிறார்கள்!" - கலங்குகிறார் எஸ்.எம்.கோபாலகிருஷ்ணன் சமாதானத்துக்கான எல்லா சாத்தியங்களும் அறுந்துவிட, இலங்கையில் யுத்த அரக்கனின் ரத்த தாகம் மீண்டும் தலைவிரித்து ஆட ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், போரின் காரணமாக ஊருக்குப் போக முடியாமல் தமிழகத்தில் தஞ்ச மடைந்திருக்கிறார் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலகிருஷ்ணன். இவர் இந்திய ராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில் இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டவர். அதே காலத்தில் ‘ஈழ மண்ணில் ஒரு இந்தியச் சிறை’ என்கிற தொடரை ஜூனியர் விகடன் இதழில் எழுதியவர். ‘‘ஈழத்தில் வாழும் தமிழர்களின் நிலைக்கு நானே ஒரு எடுத்துக்காட்டு. ஐம்பதாண்டு காலம் இலங்கையின் மிக முக்கிய பத்…
-
- 2 replies
- 1.1k views
-
-
'சமரச முயற்சிகளை புலிகளும், அரசும் தொடங்க வேண்டும்'- கொடையாளி நாடுகள் இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியாகத் தீர்வினைக் காணமுடியாது என்றும், அரசும் புலிகளும் மோதல்களைத் தவிர்த்து, நிரந்தர சமாதான தீர்வினைக் காண அமைதிப் பேச்சுக்களில் ஈடுபடவேண்டும் என்றும் இன்று இலங்கையின் தென் மாவட்டமான காலியில் ஆரம்பமான இலங்கைக்கான அபிவிருத்திச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் கொடையாளி நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ''புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவோம்'' என்ற கருப்பொருளினை அடிப்படையாகக் கொண்ட, இந்த இரண்டு நாள் மாநாட்டினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தொடங்கிவைத்தார். இங்கு கலந்துகொண்டுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட கொட…
-
- 1 reply
- 869 views
-
-
[Monday January 29 2007 08:49:24 AM GMT] [tharan] Tamilwin.com இராணுவத் தளபதி வன்னிக்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இராணுவத்தினரை உஷார் நிலையிலிருக்கும்படி கட்டளையிட்டுள்ளார். வவுனியாவிலுள்ள வன்னிக்கான படைத் தலைமையகத்தில் வன்னி இராணுவக் கட்டளைத் தளபதி டபிள்யூ.ஈ.எதிரிசிங்க தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட இராணுவ மாநாட்டிலேயே இவர் இக்கட்டளையை விடுத்திருக்கின்றார். இந்த மாநாட்டில் வன்னிப் பகுதியிலுள்ள படைமுகாம்களின் அனைத்து கட்டளை அதிகாரிகளும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். இச்சந்திப்பின்போது முகாம் பொறுப்பதிகாரிகளுக்கு முகாம்களை பாதுகாத்துக் கொள்ளவும் எந்தவொரு தாக்குதலுக்கும் முகம் கொடுக்கும் வகையில் தயார் நிலையில் இருக்கும்படியும் பணித்த…
-
- 4 replies
- 2.1k views
-
-
செவ்வாய் 30-01-2007 02:27 மணி தமிழீழம் [செந்தமிழ்] யாழ்காவல் நிலையத்தில் பாதுகாப்பு தேடி இளைஞன் சரண் யாழ்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் சிறீலங்கா காவல்நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை அச்சத்தின் காரணமாக இளைஞர் ஒருவர் சரண்புகுந்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் இனம்தெரியாத ஆயுததாரிகள் இவரை அச்சுறுத்தியதாகவும் இதற்கு அஞ்சியே இவர் அங்கு சரண்புகுந்தள்ளார். இவரை யாழ்மாவட்ட நீதவான் விக்கினராஐh முன்னிலையில் கையளித்தபோது இவரை எதிர்வரும் 9ம் திகதி வரை யாழ் சிறைச்சாலையில் பாதுகாப்பாக வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இவ் அச்சுறுத்தலுக்கு உள்ளான இளைஞன் 22 அகவையுடைய ரமேஸ் பாபு எனவும் இவரது உயிருக்கு பலதடவை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அற…
-
- 0 replies
- 602 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பருத்து உப்பி ஊதிப் பெருத்த இராட்சத அமைச்சரவை பதவியேற்று விட்டது. "போரும் சமாதானமும்' என்ற இரட்டைவேட அணுகுமுறையோடு நாட்டின் தேசிய இனப்பிரச்சினையைக் கையாண்டு வரும் மஹிந்தரின் அரசின் போக்கில், இப்போது இடம்பெற்றிருக்கும் அரசியல் குத்துக்கரணங்கள் என்ன மாற்றத்தைக் கொண்டுவரப்போகின்றன என்பதுதான் தமிழர் தரப்பின் அங்கலாய்ப்பாக இருக்கின்றது. கூண்டோடு இடம்பெற்ற அரசியல் குத்துக்கரணங்கள், அணி மாற்றங்கள், அதிரடிப் பாய்ச்சல்கள் காரணமாக நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை தொடர்பான அட்சரகணிதத்தில் தனது நிலையை ஸ்திரப்படுத்தி, வலுப்படுத்தியுள்ள இந்த அரசு இனி எந்த வழியை நாடப்போகின்றது? பௌத்த சிங்களப் பேரினவாதத்திலும் மேலாதிக்க மமதையிலும் மூழ்கி, இனவாதத்…
-
- 1 reply
- 1.4k views
-
-
கொழும்பில் தற்காலிகமாக மூடப்படவுள்ள வீதிகள் வீரகேசரி நாளேடு சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை நடைபெறவுள்ள ஒத்திகை நடவடிக்கைகளுக்காக கொழும்பிலுள்ள சில வீதிகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன.இந்த நடைமுறை காலை 6 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைமுறையில் இருக்குமென கொழும்பு போக்குவரத்து பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1. தற்காலிகமாக மூடப்படும் வீதிகள் அ)காலி மத்தியவீதி; கொள்ளுப்பிட்டியில் காலி வீதியில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாகவுள்ள வீதி மூடப்படுவதுடன், காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தினூடாக காலி மத்தியவீதிக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. ஆ)ஸ்ரீமத் மாகன் மாகார் மாவத்தை தாஜ்…
-
- 3 replies
- 1.3k views
-
-
முஸ்லிம் காங்கிரஸுக்கு 5 அமைச்சுப் பதவிகள்! தபால், தொலைத் தொடர்பு அமைச்சராக ஹக்கீம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் நேற்று அரசில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. தபால், தொலைத் தொடர்புகள் அமைச்சராக அவர் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஸீர் சேகு தாவூத்துக்கு அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உள்ளூராட்சி அமைச்சராக அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களில் மூவருக்குப் பிரதி அமைச்சுப் பொறுப்புகள் கிடைத்திருக்கின்றன. கே. அப்துல் பாய…
-
- 3 replies
- 1.3k views
-
-
கொலை அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு தப்பியோடும் ஊடகவியலாளர்கள் [29 - January - 2007] [Font Size - A - A - A] * கருத்து வேறுபாட்டை ஓரம்கட்டி ஊடகங்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் அரசாங்க படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் என்றுமில்லாதவாறு உக்கிரமடையவே சுதந்திரமாக செயல்பட முடியாத ஊடகவிலாளர்கள் கொலை அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதால் நாட்டிலிருந்து தப்பியோட ஆரம்பித்துள்ளார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல், யுத்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு உதாரணமாக ஒரு சம்பவம் இடம்பெற்றது. எதிரணி அரசியல் கட்சிகளினால் நிறுவப்பட்ட யுத்த எதிர்ப்பு கூட்டமைப்பான ஐக்கி…
-
- 2 replies
- 1.4k views
-
-
[ உதயன் ] - [ Jan 29, 2007 05:00 GMT ] இந்த யுத்த நிறுத்த காலத்தில், யுத்தநிறுத் தத்தைப் பேணுவதாகக் கூறிக்கொண்டே, பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை கிழக்கில் முன் னெடுத்து வெற்றிகரமாக முடித்திருக்கின்றது அரசு. அதுமட்டுமல்ல. அந்த இராணுவ நட வடிக்கை வெற்றியை பெரும் இறுமாப்பு அறி விப்பாக பகிரங்கமாக வெளியிடவும் அரசுத் தலைமை தவறவில்லை. மாத்தளை மாவட்டத்தில் நீர்த்தேக்கத்திட் டம் ஒன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்று கையிலேயே நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இந்த வெற்றி மமதை அறிவிப்பை வெளியிட்டார். அந்த வெற்றி மிதப்புக்கு மத்தியிலும் தமி ழர்களின் உரிமைக்கான போராட்டத்தைப் "பயங் கரவாதமாக' சித்திரிக்கும் வழமையான சிங்களத் தலைமைகளின் புறணியைத் தாமும் பாட ஜனா திபதி மஹிந்த…
-
- 0 replies
- 999 views
-
-
யாழ். குடாநாட்டில் இரவு வேளையில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நேரத்தில் நடமாடுபவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவேண்டும். இதற்கான பணிப்புரையை பிரதம நீதியரசர் சரத் என். சில்வா பலாலி படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நேரத்தில் கொள்ளைகள், கொலைகள், கைதுகள், ஆட்கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதாகத் தனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு விதிகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்தி இந்த நடவடிக்கையில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தமது அறிவுறு…
-
- 2 replies
- 1.2k views
-
-
1) ரட்ணசிறி விக்ரமநாயக்க உள்நாட்டு நிர்வாகம் 2) அநுர பண்டாரநாயக்க தேசிய மரபுரிமைகள் 3) டி.எம்.ஜயரட்ண பெருந்தோட்டக் கைத்தொழில் 4) நிமால் சிறிபால டி சில்வாசுகாதாரம் மற்றும் போஷாக்கு 5) மங்கள சமரவீரதுறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து 6) ஏ.எச்.எம்.பௌசிபெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத் துறை 7) ஜெயராஜ் பெர்னாண்டோப்புள்ளே நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி 8) மைத்திரிபால சிறிசேன விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் 9) சுசில் பிரேமஜயந்த கல்வி 10) கரு ஜயசூரிய பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் 11) ஆறுமுகம் தொண்டமான் இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி 12) ரவூப் ஹக்கீம்தபால் தொலைத் தொடர்பு 13) தினேஷ் குணவர்த்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
இன்று வவுனியாவில் சூசைப்பிள்ளையார் குலம் பகுதியில் காலை 10 மணியளவில் இனம்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டு தாக்குதலில் இருகாவல்துறையினர் மற்றும் பொதுநபர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பொதுமகன் தனபால எனவும் வவுனியா செயலகத்தில் ஓட்டுனராக பணிபுரிபவர் எனவும் காயமடைந்த காவல்துறையினரை வவுனியா வைத்;தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவம் அறியமுடிகிறது THANKS:WW.PATHIVU.COM
-
- 0 replies
- 921 views
-