Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்கால இராணுவ நடவடிக்கை: வெலிக்கந்தையில் சிங்களப் படை அதிகாரிகள் ஆராய்வு. கிழக்கு மாகாணத்தில் அடுத்த கட்ட இராணுவ நடவடிக்கை தொடர்பாக வெலிக்கந்தையில் உள்ள 23 ஆம் படைப்பிரிவு கட்டளையகத்தில் கிழக்கு மாகாண படைத்தரப்பு அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நேற்று புதன்கிழமை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவும் முப்படைகளின் பிரதம அதிகாரியான ஏயார் மார்சல் டொனால்ட் பெரேராவும் வெலிக்கந்தையில் உள்ள 23 ஆம் படைப்பிரிவு கட்டளையகத்தில் சென்றனர். இச்சந்திப்பில் கிழக்குப் பிராந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய, 23 ஆம் படையணி கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் தயா ரட்ணாயக்க ஆகியோருடன் கிழக்குப் பிராந்திய உயரதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். …

  2. மன்னார் கரையோரப்பகுதி மக்கள் அச்சத்தில் முற்றாக இடம்பெயர்வு [வியாழக்கிழமை, 4 சனவரி 2007, 08:37 ஈழம்] [தாயக செய்தியாளர்] மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கரையோரப் பிரதேச மக்கள் விமானத் தாக்குதல் அச்சம் காரணமாக அப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மன்னார், இலுப்பைக்கடவை படகுத்துறைக் கிராமத்தின் மீது சிறிலங்கா விமானப் படையினர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடத்திய கண்மூடித்தனமான விமானத் தாக்குதலில் சுமார் 17 அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இப்பகுதி மக்கள் விமானத் தாக்குதல்கள் தொடரலாம் என்ற அச்சத்தால் இடம்பெயரத் தொடங்கியிருக்கின்றனர். முற்றுமுழுதாக கடற்றொழிலா…

  3. மருந்துகள் அற்ற கிளிநொச்சி மருத்துவமனை மன்னார் இலுப்பைக்கடவையில் சிறிலங்கா வான் படையினர் நடத்திய கொடூர வான் குண்டுவீச்சுத் தாக்குதலில் காயமடைந்த மக்கள் 50 கி.மீ. தூரத்தில் உள்ள கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு மருந்துப் பொருட்கள் தீர்ந்து போகும் நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் தீர்ந்து போகும் நிலையில் இருப்பதால் அவற்றை உடனடியாக அனுப்புமாறு பல மாதங்களாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றது. காயமடையும் மக்களுக்கு அடிப்படையாக தேவைப்படும் மருந்துப் பொருட்களின் கையிருப்பு கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இலக்கம் மருந்தின் பெயர் …

  4. புதன் 03-01-2007 23:14 மணி தமிழீழம் (பதிவு நிருபர்) இலங்கை இனப்பிச்சினை தொடர்பாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்திய எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அதன் தலைவர் லால் கிருஷ்ண அத்வானிஇ முன்னாள் பிரதமர் அடல் பியாரி வாஜ்பாய்இ ஜஸ்வந்சிங்இ முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிர்ஜேஸ் மிஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். அத்துடன் இந்திய பிரதமருடன் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிஇ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்இ இந்திய பிரதமரின் தலைமை செயலாளர் டி.கே.ஏ.நாயர் இவெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந…

  5. புதன் 03-01-2007 23:12 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] வடமராட்சி பருத்தித்துறையில் யுவதி சுட்டுக்கொலை. யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்திதுறை பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்டவர் வல்லிபுர பரியாரியார் ஒழுங்கையை சேர்ந்த 30 வயதான கணபதிபிள்ளை கமலினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரது வீட்டுக்கு உந்துருளியில் சென்ற இரண்டு பேர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை புலொலி பகுதியில் 53 வயதாக குடும்பஸ்தரான கார்த்திகேசு கிருஸ்ணதாஸ் என்பர் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் …

  6. விடுதலைப்புலிகளிடம் 3ஹெலிகொப்டர் இருப்பதாக கெகலிய அச்சம். விடுதலைப்புலிகளிடம் ஒற்றை இயந்திரம் கொண்ட மூன்று ஹெலிகொப்ரர்கள் இருப்பதால் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடும் போது கவனமாக இருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்கல இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஊடகமத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ரம்புக்கல இதனைத்தெரிவித்தார் சண்டே லீடர் ஆசிரியர் கைது செய்யப்படவில்லை. பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது அவதானமாக இருக்க வேண்டும் என அவர் சொன்னார். …

  7. அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க மஹிந்தவுக்கு இது இறுதிச் சந்தர்ப்பம்: ஜயலத் ஜெயவர்த்தன. தமிழ் மக்கள் படும் அவலங்களுக்கு முடிவு கட்டுவதற்கான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்தவே சுதந்திரக் கட்சியுடன் உடன்பாடு செய்தோம். ஒர் அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி மகிந்தவுக்கு இதுவே இறுதிச்சந்தர்ப்பம் ஆகும். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டொக்டர் ஜயலத் ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் தமிழர்கள் படும் அவதி, அவர்கள் தென்னிந்தியாவுக்கு அகதிகளாகச் செல்கின்றமை, யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களால் தெற்கிற்கு வரமுடியாமை, அவர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுகின்றமை மற்றும் கொழும்பில் ஆட்கடத்தல்களுக்கு ஆளாகின்றமை என்பன போன்ற தமிழர்…

  8. அரசின் கொடூரத் தாக்குதலை சர்வதேசம் இனியும் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது மன்னார் தாக்குதலுக்கு தமிழ்க் கூட்டமைப்பு வன்மையான கண்டனம். மன்னார் படகுத்துறை மீது விமானப்படையின் கிபீர் விமானம் மூலம் குண்டுகளை வீசி அப்பாவித் தமிழ் மக்களைக் கொலைசெய்தமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. இச்சம்பவத்தைச் சர்வதேச சமூகம் பார்த்துக்கொண்டிராமல் இனிமேல் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாதவாறு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், மன்னார் படகுத்துறை மீது இலங்கை விமானப்படையினர் கிபீர் விமானம் மூலம் குண்டுகளை வீசி அப்பாவி மக்களைக்…

  9. * சாத்தியம் இருப்பதாக கூறுகிறார் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க இராணுவ இரகசியங்களை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவ அதிகாரியொருவருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனையை வழங்கும் சாத்தியம் தென்படுவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள கிரிமோதய மண்டபத்தில் இயங்கும் தேசிய பாதுகாப்பு தகவல் மைய கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற பாதுகாப்பு செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு இராணுவ இரகசியங்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் மூன்று இராணுவ அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் ஒருவர்…

  10. சிறிலங்காப் படையினரால் தாக்கப்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் மந்திகை மருத்துவமனையில். யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வடக்கில் இன்று வீடுகளிற்குள் புகுந்த படையினர் பொதுமக்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் 5பேர் ஆபத்தான நிலையில் மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்காப் படையினரின் தாக்குதலுக்கு இலக்கானவர்களான ரி.ரட்ணம்(64) அல்வாய், வி.அகிலன்(36) அல்வாய், ஆர்.நிதர்சன்(19)அல்வாய் ஆர்.நிரோசன்(21),வி.வைகுந்தன்(23) நெல்லியடிகரவெட்டி என்பவர்களே சிறிலங்காப் படையினரால் கடுமையாக தாக்கப்பட்டு மிக ஆபத்தான நிலையில் மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -sankathi-

  11. நலிந்து அவதியுறும் யாழ். மக்களை வாட்டி வதைத்து முடக்கியசிக்குன் குனியா! யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவலங்களுக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் மற்றும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம்கொடுத்துவரும் இவ்வேளையில் எங்கிருந்தோ வந்து இங்கு பரவிய சிக்குன் குனியா அவர்களை வாட்டி வதைத்து பிழிந்தெடுத்து விட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தச் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் நிரம்பி வழிந்ததை தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் மூலம் பார்க்க அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், அதன் விபரீதம் குறித்து நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை பின்னர் இலங்கையிலும் இந்நோய் பரவியுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறி…

    • 0 replies
    • 920 views
  12. ஐ.தே.க.குற்றச்சாட்டு அரசாங்கம் புதிதாக ஆரம்பிக்க விருக்கும் `மிஹின்' விமான சேவைக்கு ஊழியர் சேமலாபநிதியிலிருந்து நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்திருப்பதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, பாராளுமன்றத்தின் அங்கீகாரமின்றி அரசு தவறான செயற்பாடுகளிலீடுபட்டு வருவதாகவும் விசனம் தெரிவித்திருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டார். அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; அரச துறை மற்றும் தனியார் ஊழியர்களின் வியர்வையாகக் கருதப்படும் அவர்களது ஊழியர் சேமலாபநிதியில் அரசு கைவைத்துள்ளது. அரசுக்க…

  13. விசாரணைக்கு கோருகிறது ஐ.தே.க. நிதியமைச்சின் செயலாளர் பாவிக்கும் கைக்கடிகாரத்தின் விலை 30 இலட்சம் ரூபாவெனவும் இவ்வளவு பெறுமதியான கைக்கடிகாரம் பெற்றுக் கொள்ளப்பட்ட முறை குறித்து விசாரிக்கப்பட வேண்டுமென்று ஐக்கிய தேசியக் கட்சி ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க நேற்று ஊடகவியலாளர் மாநாட்டில் அரசை வலியுறுத்தியுள்ளார். அரசில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகள் பற்றி ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்த ஊடகப் பேச்சாளர் நிதியமைச்சின் செயலாளர் பாவிக்கும் கைக் கடிகாரத்தின் பெறுமதி 30 இலட்சம் ரூபாவெனவும் அது எவ்வாறு பெறப்பட்டது? ஓர் அரச அதிகாரி இவ்வளவு பெறுமதி மிக்க கடிகாரத்தைப் பாவிப்பதன் மூலம் பலத்த சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டினார். இக் கைக்கடிகார விவ…

  14. பயங்கரவாதத்தை அடியோடு ஒழிப்பதன் மூலமே அமைதியை நிலைநாட்ட முடியும்: சரத் பொன்சேகா பிரிவினைவாதத்துக்கான பொது எதிரியை அழித்தொழிப்பதிலும் எமது தாய்நாட்டின் ஒருங்கிணைப்பைக் கட்டிகாப்பதிலும் நாங்கள் ஒன்று சேர்ந்து முன்வந்துள்ளோம் என்று சிறிலங்கா இராணுவத்தினருக்கான புத்தாண்டுச் செய்தியில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். இந்த நாட்டைப் பிரிக்கும் நோக்கில் பல பயங்கரவாதச் செயல்கள் அரங்கேறுகின்றன காட்டுமிராண்டித்தனமான பிரிவினை சக்திகளால் முடிவற்ற குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன வருகின்றன என்று கூறிய அவர் இந்நிலையில் கட்டுப்பாடுடனும் ஒழுங்கோடும் மனித உரிமையைக் காக்கும் வகையில் செயற்படும் தமது இராணுவத்தினரை அவர் பாராட்டினார். நாட்டின் அனைத்துக் குடிமக்க…

  15. இராணுவ வேட்டைக்கு மத்தியில் பாலாவின் தலைமறைவு வாழ்க்கை திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தினால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் அப்போது இலங்கைக்கான இந்தியத் தூதுவராகவிருந்த டிக்ஷித்தை யாழ்ப்பாணம் அனுப்பி நிலைமையை ஆராய வைத்தது. கடும்போக்கு வாதியான டிக்ஷித்தை சந்தித்து பிரபாகரன் - பாலா பேச்சில் ஈடுபட்டனர். நிலைமையை புரிய வைத்தனர். எச்சரிக்கைவிடுத்தனர். அலட்சியம் செய்தார் டிக்ஷித் திலீபன் தியாக மரணமடைந்தார். குமாரப்பா, புலேந்திரனுக்கு சயனைட் கொடுத்த பாலா இதையடுத்து புலிகளின் மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட 15 போராளிகளை இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை மீறி தமிழீழ கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்து இராணுவத்திடம் ஒப்படைத்தது. இவர்களை விடு…

  16. இலங்கை தமிழர்களை பாதிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம்: கலைஞர் கருணாநிதிக்கு மன்மோகன் சிங்க் உறுதி இலங்கை தமிழர்களை பாதிக்கும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதிக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்க் உறுதியளித்து கடிதம் எழுதியனுப்பியுள்ளார். இலங்கைப் பிரச்சினை குறித்து முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சில நாட்கள் முன்பு கடிதம் எழுதியனுப்பியிருந்தார். அதற்கு பிரதமர் மன்மோகன்சிங் பதில் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் மன்மோகன் சிங்க் கூறியிருப்பதாவது: இலங்கைப் பிரச்சினை குறித்து உங்கள் கவலையை நான் புரிந்து கொண்டேன். இலங்கையில் பொது மக்கள் …

  17. படகுதுறை பொதுமக்கள் படுகொலை ஐ.நா.கண்டனம். சமாதான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரிக்கை. (ஆங்கிலத்திலான அறிக்கை தமிழ் மொழிபெயர்ப்பு) மன்னார் படகுத்துறை கிராமத்தின் மீது ஸ்ரீலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் தாக்குதல் நடத்தி 14பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை ஐ.நா.சபை வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா.சபையின் உதவிச்செயலாளரும் மனிதாபிமான அலுவல்கள் மற்றும் இடர்கால உதவி வழங்கும் பிரிவின் இணைப்பாளருமான மார்கிரட் வேல்ஸ்ரேம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறு குழந்தைகள் உட்பட 14பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து ஐ.நா.சபை ஆழ்ந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை மக்கள் போரினால் தங்கள் வாழ்வை இழந்து தவிக்…

    • 3 replies
    • 1.8k views
  18. தமிழீழ குடிமக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் ஆரம்பத்தை ‘தமிழீழத்தை நோக்கிய தமது பயணத்தின் உறுதிப்பாட்டை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தும் புத்தாண்டின் முதல் முயற்சி’ என ஹிந்துஸ்தான் ரைம்ஸ் நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை நேற்று தமிழீழ ஆட்பதிவு திணைக்களம் தனது முதலாவது அடையாள அட்டையை தமிழீழ தேசியத் தலைவருக்கு வழங்கி தமது செயற்பாட்டை தொடங்கியிருந்தமை தெரிந்ததே. நன்றி : பதிவு

    • 0 replies
    • 1.5k views
  19. இயந்திரக்கோளாறு காரணமாக தமிழீழக் கடற்பரப்பில் கரையொதுங்கி நிற்கும் மேற்படி ஜோர்தானிய சரக்குக்கப்பலை மீளப் பெறுவதற்கு அதன் உரிமையாளர்களான ஜோர்தானிய கப்பல் கம்பனி சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கியிருப்பதாக தெரிகிறது. இக்கப்பலையும் அதில் ஏற்றப்பட்டுள்ள பெருமளவு அரிசியையும் எப்படியாவது சேதமின்றி மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை அக்கம்பனி முடுக்கிவிட்டிருக்கிறது. இராஜதந்திர ரீதியாக பார்க்கும்போது விடுதலைப்புலிகள் இத் தனியார்சரக்குக்கப்பலை சீரற்ற காலநிலைக்கும் இயந்திரக்கோளாறுக்கும் மத்தியில் மிகச் சாதுரியமான முறையில் செயற்பட்டு கப்பல்பணியாளர்கள் அனைவரையும் காப்பாற்றிப் பாதுகாப்பாகக் கரைசேர்த்தது மிகவும் வரவேற்கக்கூடியதே. அதேவேளை கப்பலிலிலிருந்து அனுப்பப்பட…

    • 0 replies
    • 1.5k views
  20. இன்று காலை 4.00 மணியளவில் வவுணதீவு படைமுகாமில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதியை நோக்கிய சிறீலங்கா இராணுவ முன்னகர்வு முறியடிக்கப்பட்டுள்ளது இம் முன்னகர்வு முயற்சியை விடுதலைப்புலிகளின் கடும் எதிர்ப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் கைவிட்டு சிறீலங்கா இராணுவத்தினர் காயமடைந்தவர்களை தூக்கிக்கொண்டு தப்பியோடியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சமரில் 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

    • 0 replies
    • 1.3k views
  21. எமது இனம் விடுதலையை வென்றெடுப்பது வரலாற்றில் தவிர்க்க முடியாதது: யோ.யோகி. எமது இனம் விடுதலையை வென்றெடுப்பது வரலாற்றில் தவிர்க்க முடியாதது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுத்துறைப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். இரண்டாம் லெப். ஜீவன் பயிற்சிப் பாசறையின் 23 ஆம் அணிக்கான பயிற்சி நிறைவு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. பயிற்சி ஆசிரியர் பொதிமைமலர் தலைமையில் முற்பகல் 11.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரை தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றுத்துறைப் பொறுப்பாளர் யோ.செ.யோகி ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் தமிழன்பனும், இரண்டாம் லெப். ஜீவனின் உருவப்படத்திற்கான பொதுச்சுடரினை மணலாறு ச…

  22. இந்தியப் பயணம் நம்பிக்கை அளித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவிப்பு. இந்தியப் பயணம் நம்பிக்கையையும், திருப்தியையும் அளித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழர்கள் அனுபவிக்கும் அவலநிலை குறித்து இந்தியத் தலைவர்கள் கவனம் செலுத்துகின்றனர் என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் அவலங்கள் தொடர்பான கவலையையும் இந்தியத் தலைவர்கள் தம்மிடம் வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். இந்தியாவிற்கு கடந்தமாதம் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

  23. ஜே.வி.பி.யின் லங்கா அச்சகம் தீப்பிடித்து முற்றாக எரிந்தது நாசமாகியுள்ளது. கோட்டே ரஜமஹா விகாரை முன்பாக அமைந்திருக்கும் அச்சகம் மூடப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று திங்கட்கிழமை தீப்பற்றி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த தீ விபத்துச் சம்பவத்தில் பத்திரிகை அச்சகம் முற்றாக எரிந்துள்ளதுடன் அருகிலிருந்த வாகன விற்பனை நிலைய கட்டிடத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இத் தீ விபத்து சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பது உடனடியாக தெரியவர வில்லையென தெரிவித்த தீயணைப்பு படையினர் அது தொடர்பாக மிரிஹானை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர் www.tamilwin.com

  24. ஈழப் பிரச்சினையில் மன்மோகன் சிங் அரசின் கொள்கை [02 - January - 2007] [Font Size - A - A - A] * இருட்டு வீட்டில் குருட்டுப் பூனையை தேடிய கதை ஈழப் பிரச்சினையில் மன்மோகன் சிங் அரசின் கொள்கை, இருட்டு வீட்டில் குருட்டுப் பூனையைத் தேடிய கதையாக இருக்கிறது. இலங்கை அரசும் ஈழப் போராளி களும் கூடிப்பேசி, பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று தொடர்ந்து உபந்நியாசம் செய்து வருகிறார்கள். அதே சமயத்தில், ஈழப் போராளிக ளுக்கு எதிராக இலங்கை அரசிற்கு எந்த அளவிற்கு ஆயுத உதவி, உணவுப் பொருள் உதவி அளிக்கவேண்டுமோ, அந்த அளவிற்கு உதவி செய்து வருகிறார்கள். அப்போதெல்லாம், இவர்களுடைய நடுநிலை நாடகம் அம்பலத்திற்கு வந்துவிடுகிறது. இந்த நாடகத்திற்கு, இப்போது ஐக்கிய முன்னணியின் த…

    • 2 replies
    • 1.6k views
  25. ஜே.வி.பி பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச மீது ஒழுக்காற்று நடவடிக்கை? ஜே.வி.பி கட்சியின் உள்வீட்டு சண்டை அம்பலத்திற்கு வந்துள்ளது. அந்த கட்சியின் பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச மீதான பாலியல் குற்றச்சாட்டக்களை சண்டே லீடரும் அதன் சகோதர பத்திரிகையான இருடினவும் வெளியிட்டதைத் தொடர்ந்து கட்சிக்குள் சலசலப்பு தொடங்கியுள்ளது. ஜே.வி.பியின் கீழ்மட்ட உறுப்பினர்களிடையே இந்த விவகாரம் விவாதங்களை ஏற்படுத்தியிருப்பினும் அதன் தலைமைப்பீடம் மௌனமாகவே இருந்து வருகின்றது. எனினும் கடந்த வாரம் இந்த பிரச்சினை புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது. கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு விமல் வீரவன்ச மீது ஓழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கட்சி அமைப்பாளர்களிடம் இருந்து ஏராளமான கட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.