ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142738 topics in this forum
-
நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி ஆட்சி செய்யும் மகிந்த: கொழும்பு ஆங்கில நாளேடு சிறிலங்காவின் வரலாற்றில் மகிந்த ராஜபக்ச மட்டும்தான் உறுதியான நாடாளுமன்ற பெரும்பான்மை ஆதரவின்றி ஒரு வருடமாக ஆட்சி நடத்தி வரும் அரச தலைவர் என்று கொழும்பு ஆங்கில நாளேடொன்று தெரிவித்துள்ளது. கொழும்பு நாளேடு மேலும் தெரிவிக்கையில், ஜே.வி.பி. அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வருகின்றது. ஆனால் அவர்களுக்கு நன்மை கிட்டும் வரைக்கும் தான் அவர்களின் ஆதரவு தொடரும். எனவே மகிந்த ஒரு பெருன்பான்மை அரசை அமைக்க வேண்டுமாக இருந்தால் ஜே.வி.பி.யை அரசுக்குள் இழுக்க வேண்டும் அல்லது ஐ.தே.கவில் இருந்து 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்க வேண்டும். இந்த முயற்சிகள் தான் தற்போது மேற்கொள்ளப்பட…
-
- 0 replies
- 642 views
-
-
தமிழர் கூட்டமைப்பினருக்கு விசா வழங்க இலங்கையிலுள்ள கனடிய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.இதை திரு.சிவநேசன் அவர்களிடம் பெற்ற செவ்வியாக சங்கதி(www.sankathi.com) வெளியிட்டுள்ளது.இதை உடனடியாக கனடிய தமிழர் பேரவையிடமோ அல்லது கனடியன் தமிழ் காங்கிரஸிடமோ மனுச்செய்யலாம்.அவர்களால் தான் இதன் பின்ண்ணியை கண்டுபிடிக்கமுடியும்
-
- 1 reply
- 1.4k views
-
-
எறிகணை வீச்சில் சிப்பாய் ஒருவர் பலி, ஐவர் காயம். வெலிக்கந்தை பகுதி நோக்கி நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் சிறிலங்காப் படையினர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஐவர் படுகாயமடைந்தனர் வாகரை மதுரங்குளம் பகுதியிலிருந்து இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டதாகச் சிறிலங்கா படைத்தரப்புத் தலைமையகச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு இத்தாக்குதல் இடம் பெற்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. www.sankathi.com
-
- 1 reply
- 634 views
-
-
இலங்கைக்கு வருவாரா கருணாநிதி? [29 - December - 2006] இலங்கைப் பிரச்சினையில் `ராஜீவ் படுகொலை' பெரிய தடைக்கல்லாகவே கடந்த பல வருடங்களாக இருந்து வந்தது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்துமே அதை எப்படிச் சமாளிப்பது என்பது புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தன. `ராஜீவ் கொலை' செய்யப்பட்டதால் விடுதலைப் புலிகள் மீது தமிழகம் உட்பட ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட்ட கோபம்,இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசுவதற்கே முட்டுக்கட்டையாக மாறியது. ஏனென்றால், மற்ற தமிழீழப் போராட்டக் குழுக்கள் எல்லாம் பலம் இழந்துவிட்ட நிலையில், விடுதலைப் புலிகள் மட்டுமே `தனி ஈழம்' போராட்டத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். குறிப்பாக, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு இது பெரும்…
-
- 1 reply
- 1.2k views
-
-
சந்திரிகாவிற்கு ஒரு ஏ-9 மகிந்தருக்கு ஏ-15 -அருஸ் (வேல்ஸ்)- 'வாகரையில் இருந்து மிக விரைவில் தமிழீழ விடுதலைப் புலிகளை வெறியேற்றுவதுடன் கிழக்குப் பகுதியில் இருந்தும் புலிகள் முற்றாக வெளியேற்றப்படுவார்கள்" இது சிங்கள தேசத்து இராணுவ தளபதி அண்மையில் தெரிவித்த உளக்கிடக்கை. இராணுவ அதிகாரியின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல அரசின் ஆதங்கமும் அது தான். அண்மையில் தென்பகுதியில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகரும் அவரின் சகோதரருமான பசில் ராஜபக்ச கூறுகையில், அனைத்துக்கட்சி குழு தனது தீர்வுத்திட்ட அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னராக கிழக்கிலங்கையை படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். அதாவது கி…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த தீடீர் திருமலை விஐயம். சிறீலங்கா ஜனாதிபதி தீடீர் விஐயமாக திருமலை டொக் யார்ட் கடற்படை தளத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இன்று பகல் ஷிராந்தி ராஜபக்ஷ, தனது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஸ, கடற்படைத்தளபதி வசந்த கர்ணணகொட ஆகியோருடன் திருமலை டொக் யார்ட் கடற்படை தளத்திற்கு சென்ற ஜனாதிபதிக்கு கடற்படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. இதேவேளை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறீலங்கா கடற்படையில் இணைந்த ராஜபக்ஷவின் புதல்வல் யோசித்த ராஜபக்ஷ திருமலை டொக் யார்ட் கடற்படை தளத்தில் பயிற்சி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. www.pathivu.com
-
- 26 replies
- 4.2k views
-
-
பிரித்தானிய அரசாங்கத்தை புலிகளின் மீதான தடையை விலக்கக் கோரி மனு. பிரித்தானிய அரசாங்கத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரி ஆளும் தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு அலுவலர்களும் மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் Jeremy Corbyn, John McDonnellபோன்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் யுனிசன், ஆர்.எம்.ரி, சிடபிள்யு (UNISON, RMT and CWU)போன்ற பல வர்த்தக சங்கங்களும் இம்மனுவில் கையெழுத்திட்டுள்ளதாக அறியமுடிகிறது. சிறீலங்கா அரசாங்கம் தமிழ்மக்கள் மீதான பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தமிழ் மக்கள் இருதசாப்தங்களுக்கு மேலாக சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருவதாகவ…
-
- 2 replies
- 1.7k views
-
-
இனப்பிரச்சினைக்கு யுத்தம் தீர்வு அல்ல; புலிகளுடன் பேசுவது அவசியம் என்கிறார் ரணில் [29 - December - 2006] [Font Size - A - A - A] விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண முடியாதெனத் தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யுத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு ஏற்படப் போவதில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். போர் அச்சுறுத்தலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இலக்குடனேயே ஐக்கிய தேசியக் கட்சி ஆளும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொண்டிருப்பதாகவும் அந்த இலக்கை அடைவதற்கு சகல அரசியல் கட்சிகளும் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்க வேண்டுமெனவும் க…
-
- 0 replies
- 607 views
-
-
வெள்ளி 29-12-2006 12:58 மணி தமிழீழம் (செந்தமிழ்) வடக்குகிழக்கு இணைப்பை பிரிக்கும் நடவடிக்கைகள் காரணமாக தமது பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக விரைவில் கொழும்பில் கூடவுள்ளதாக குழுவின் பதில் பேச்சாளர் டோரி ஸ்டேஜோரி தெரிவித்துள்ளார். போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு வடக்குகிழக்கு மாகாணத்திற்கென பொதுவான பணித்திட்டங்களை மேற்கொண்டு வந்தது. எனினும் வடக்குகிழக்கு பிரிப்பின் பின்னர் இந்த திட்டங்களை மேற்கொள்வதில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்தநிலையில் திருகோணமலையில் பணியாற்றிய போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவின் உறுப்பினர்கள் ஏற்கனவே கொழும்பு த…
-
- 1 reply
- 892 views
-
-
தமிழ் மக்களின் அர்ப்பணிப்புத்தான் இறுதி வெற்றியைத் தீர்மானிக்கும்: கேணல் தீபன் [வெள்ளிக்கிழமை, 29 டிசெம்பர் 2006, 19:58 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தலைமையிலான எமது விடுதலைப் போராட்டம் இறுதிக் கட்டத்திற்கான நகர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளைத்தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். இம்ரான்- பாண்டியன் படையணியின் மேஜர் அகக்குமரன் - 01 பயிற்சிப் பாசறையின் இரண்டாம் தொகுதி போராளிகளின் பயிற்சி நிறைவு நிகழ்வில் சிறப்புரையாற்றிய போதே கேணல் தீபன் இதனை தெரிவித்தார். மேஜர் அகக்குமரன் - 01 பயிற்சிப்பாசறையின் முதலாவது தொகுதி போராளிகளின் நிறைவு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இ…
-
- 0 replies
- 712 views
-
-
ஒஸ்லோ பிரகடன அடிப்படையில் தீர்வு யோசனை முன்வைக்கப்படும் - ஐக்கிய தேசியக் கட்சிஇலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தமது யோசனைகளை அனைத்துக்கட்சி மாநாட்டுக்கு சமர்பிக்கவுள்ளது. இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான அனைத்து கட்சி மாநாடு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரண்டு வாரங்களுக்குள் நடைபெறவுள்ளது. இதன்போது தமது கட்சி டோக்கியோ மற்றும் ஒஸ்லோ பிரகடனங்களின் அடிப்படையில் யோசனைகளை முன்வைக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க தெரிவித்தார். எனினும் இந்த யோசனைகளில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் அவர் எதுவும் கூறவில்லை. இதேவேளை ஏற்கனவே நிபுணர் குழவினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு யோசனைகளை தமது கட்சி வரவேற்பதாகவும் அவர் குறிப…
-
- 0 replies
- 758 views
-
-
கடத்தப்பட்ட புளொட் உறுப்பினர் சடலமாக மீட்பு கடந்த புதன்கிழமை இரவு 8 மணிக்கு புத்தளம் பகுதியில் கடத்தப்பட்ட இரு மூத்த புளொட் உறுப்பினர்கள் வெள்ளி காலை சடலமாக குருநாகல மீடகம வீதியில் சூட்டுகாயங்களுடன் குருநாகல காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளது. மாமா என்றழைக்கப்படும் பாக்கியராஜா, கரிகாலன் ஆகியோரே சின்னக்குடியிருப்பு பகுதியில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டது தெரிந்ததே. இதேவேளை பாக்கியராஐ என்பவர் முன்பு புளொட் ஒட்டுக்குழுக்களின் மட்டக்களப்பு மாட்ட ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டவர் என அறியமுடிகிறது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 768 views
-
-
யாழில் சவர்காரம் ஒன்றை பெறுவதற்காக அரச பணிகள் ஸ்தம்பிதம். - பண்டார வன்னியன் குசனையலஇ 29 னுநஉநஅடிநச 2006 11:13 யாழ்ப்பாணத்தில் சவர்காரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சவர்காரம் ஒன்று 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன் நிலையில் நேற்று நல்லூர் ஆலய வீதியில் உள்ள படை முகாம் ஒன்றி;ல் சவர்காரங்கள் விநியோகிக்கப்படுவதாக வெளியான தகவலை அடுத்து.. யாழ்ப்பாண மாநகரசபை, கல்வித் திணைக்களம் உட்பட மூன்று திணைக்களங்களின் கடைமையாற்றும் 500 வரையிலா அரச பணியாளர்கள் குறித்த படை முகாமின் முன்னால் வரிசையில் சவர்காரத்தை பெறுவதற்க்காக காத்து நின்றிருந்தனர். இதன் காரணமாக காலை 9 மணியில் இருந்து சுமார் மூன்று மணித்தியாலங்களாக திணைக்களங்களின் பணிகள் யாவும் ஸ்தம…
-
- 1 reply
- 1.3k views
-
-
மட்டக்களப்பில் விடுதலைப்புலி உறுப்பினர் சுட்டு கொலை நிஷாந்தி மட்டக்களப்பில் இன்று வெள்ளி காலை முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் கே.சந்திரசேகரன்(29)என்பவர் விடுதலைப்புலிகளால் சுட்டுகொல்லப்பட்டுள்ளார்... இவர் கடந்த 10 வருடங்களாக விடுதலைப்புலி உறுப்பினராக இருந்தவர் எனவும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் இவர் அவ்வியக்கத்தை விட்டு விலகியவர் என்பது குறிப்பிடதக்கது... இவரது சடலம் டிசெம்பர் 27ம் திகதி களுவன்கேணி பகுதியில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடதக்கது. ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.என தேசிய பாதுகாப்பு ஊடகமத்தியநிலையம் தெரிவித்துள்ளது... http://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=3514
-
- 1 reply
- 1.2k views
-
-
மட்டக்களப்பு புணானி மற்றும் வாழைச்சேனை இராணுவ முகாம் மீது விடுதலை புலிகள் மோட்டார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். [Friday December 29 2006 11:29:18 AM GMT] [யாழ் வாணன்] இன்று வெள்ளி காலை மட்டக்களப்பு புணானி மற்றும் வாழைச்சேனை இராணுவ முகாம் மீது விடுதலை புலிகள் மோட்டார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் சில இராணுவ வீரர்கள் காயமடைதுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் பொலன்நறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் இராணுவத்தினர் இம்ம்மோட்டார் தாக்குதலை முறியடித்துள்ளனர் என ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்து. http://www.tamilwin.com
-
- 1 reply
- 1.1k views
-
-
வத்தளையில் வாகனத்தில் வெடிப்பு வீரகேசரி நாளேடு நிஷாந்தி வத்தளை அல்விஸ் ரவுனில் இன்று வெள்ளிக்கிழமை காலை தனியார் வாகனமொன்றில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் போது வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் வாகன வெடிப்பிற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. வத்தளை பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர் என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் செய்திவெளியிட்டுள்ளது.
-
- 1 reply
- 1.2k views
-
-
இத்தாலிய அரசினால் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாகரை வைத்தியசாலைக்குமருந்துகளை அனுப்பிவைக்குமாறு கொழும்பிலுள்ள தூதரகத்திடம் வேண்டுகோள் [ வீரகேசரி ] - [ Dec 29, 2006 05:00 GMT ] வாகரை வைத்தியசாலைக்கு வேண்டிய மருந்துகளையும் அம்புலன்ஸ் வண்டிகளையும் அனுப்பிவைக்குமாறு கொழும்பிலுள்ள இத்தாலிய தூதரக அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாகரை வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளை பாதுகாப்பான பிரதேசமாக பிரகடனப்படுத்தி தருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வாகரை வைத்தியசாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலிய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டதாகும். அத்துடன் அந்த வைத்தியசாலைக்கான பராமரிப்புக்களையும் இத்தாலிய அரசாங்கமே மேற்கொண்டு வருகிறது. ஆகவேதான் தற்போது …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஏ15 பாதையை திறக்க கோரி இன்று வாகரையில் கண்டனப்பேரணி - பண்டார வன்னியன் குசனையலஇ 29 னுநஉநஅடிநச 2006 12:16 வாகரை பள்ளிக்கூடத்தில் காலை 10:00மணியளவில் ஆரம்பமான கண்டனப் பேரணி வாகரை வைத்தியசாலையில் முடிவடைந்தது. இக்கண்டண பேரணி முடிவில் வெகுஜன அமைப்புகளின் ஒன்றிய தலைவர் திரு.நிக்சன் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. கண்டன அறிக்கை வருமாறு: வாகரையில் வாழும் மக்களின் அவசர வேண்டுகோள் 28.12.2006 தற்பொழுது வாகரைப்பிரதேசத்தில் நிரந்தரமாக வசித்து வருபவர்களும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுமாக 3000 குடும்பங்களைச்சேர்ந்த 15.000 பேர் வசித்து வருகிறோம். நாங்கள் இங்கு அனுபவித்து வரும் பிரச்சினைகளைத் தங…
-
- 0 replies
- 802 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் புகுந்து ஒட்டுக்கூலிக்குழு அடாவடித்தனம். உவர்மலை, கீழ்கரை வீதியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் அவர்களின் வீட்டிற்கு நேற்றுச்சென்ற ஒட்டுக்கூலிக்குழுவைச்சேர்ந
-
- 0 replies
- 905 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி ஊடக சுதந்திரத்தை முடக்க இடமளியோம் - ஐ.தே.க நாட்டில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை இனங்கண்டு அவர்களை கைது செய்து பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற நோக்கிலேயே ஐக்கிய தேசிய கட்சி, அரசாங்கம் கொண்டுவந்த பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு தனது முழுமையான ஆதரவை வழங்கியது. இந்த ஆதரவை பயன்படுத்தி அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை, தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்குவதற்கு முயற்சிசெய்தால் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் கொண்டுவந்தபோத…
-
- 0 replies
- 766 views
-
-
பனிச்சங்கேணி தாக்குதலில் இராணுவ வீரர் பலி; ஐவர் காயம் வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு வாகரைபனிச்சங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இராணுவ வீரர் ஒருவர் பலியானதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். நேற்று முற்பகல் வேளையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் பலியான இராணுவ வீரரின் சடலம் பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய்கள் ஐந்துபேரும் இவ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.. வாகரைபனிச்சங்கேணி பிரதேசத்தில் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த படையினரை இலக்கு வைத்து விடுதலைப்புலிகள் மோட்டார் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போதே படையினருக்கு இழப்பு ஏற்…
-
- 0 replies
- 898 views
-
-
வெளிநாட்டுச் சிங்களவரிடம் நிதியினைத் திரட்டி போரை முன்னெடுக்க மகிந்த திட்டம். சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களிடம் இருந்து பெருந்தொகை நிதியினைக் கோரியுள்ளார். இது தொடர்பான பரப்புரைகள் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் ஐரோப்பாவில் இயங்கும் சிங்கள சேவைத் தொலைக்காட்சியில் ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. சிங்கள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் இந்த அவசர நிதியினை கொடுத்துதவுமாறு வலியுறுத்தப்படுகின்றது. நிதியினை வழங்க வரும் சிங்கள் மக்கள் டொச் வங்கி மூலம் குறைந்த அனுப்பு கூலியைக் கொடுத்து நிதியினை வழங்க முடியும் என அப்பரப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த…
-
- 3 replies
- 1.5k views
-
-
Vehicle explosion at Alwis Town - Wattala A vehicle explosion took place at Alwis town, Wattala injuring the driver of the vehicle no: HW- 4522, on Friday the 29th of December at 08:30 a.m. The driver of the private van has been hospitalized immediately. The cause for the explosion is yet to be identified said the Wattala Police sources. More information will follow.
-
- 1 reply
- 1.4k views
-
-
ஊடகவியலாளர்களின் விருந்துபசாரத்தில் அழையா விருந்தாளியாக பங்கேற்ற மகிந்த [வெள்ளிக்கிழமை, 29 டிசெம்பர் 2006, 02:51 ஈழம்] [பா.பார்த்தீபன்] ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான வருட இறுதி விருந்துபசார நிகழ்வில் மகிந்த ராஜபக்ச திடீரென பங்கேற்றார். கிரான்ட் ஒரியன்டல் விடுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விருந்துபசார நிகழ்ச்சி நிரலில் மகிந்தவின் வரவு இருக்கவில்லை. சண்டே லீடர் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் மகிந்த விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.eelampage.com/…
-
- 0 replies
- 881 views
-
-
சம்பூரில் அவசர அவசரமாக மின் நிலையம்; அமைக்கும் அரசின் முயற்சி: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கண்டனம் - பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 28 னுநஉநஅடிநச 2006 12:04 சம்பூரில் அவசர அவசரமாக அனல் மின்நிலையத்தை நிறுவ அரசு மேற்கொண்டுவரும் முயற்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் அரசு எடுத்திருக்கும் இத்தீர்மானம் பிழையானது என்றும் தமிழ்ப் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்காகவே அரசு இவ்வாறு செயற்படுகிறது என்றும் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் கருத்துக் கூறுகை…
-
- 1 reply
- 1.1k views
-