Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புதிய வெளிவிவாகரத்துறைச் செயலாளர் நியமனம்: மகிந்த - மங்கள முறுகல் [ஞாயிற்றுக்கிழமை, 24 டிசெம்பர் 2006, 05:39 ஈழம்] [பா.பார்த்தீபன்] புதிய வெளிவிவகாரத்துறைச் செயலாளரை நியமிப்பது தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. வெளிவிவகாரத்துறைச் செயலாளர் பதவிக்கு இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவரான ரொமேஷ் ஜயசிங்கவின் பெயரை மங்கள சமரவீர கடந்த வாரம் மகிந்தவிடம் பரிந்துரை செய்திருந்தார். எனினும் ஜயசிங்கவை அப்பதவிக்கு நியமிக்கப்போவதில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் மகிந்த தெரிவித்ததே முறுகலுக்கான காரணம் என தெரியவருகிறது. தற்போது வெளிவிவகாரத்துறைச் செயலாளராக பணியாற்றும…

    • 0 replies
    • 720 views
  2. 5 பேர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று வெள்ளி 22 மார்கழி பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20694 தழிழீழ - இந்தி உறவில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்.

  3. பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகரின் மகனைக் காணவில்லை. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த ஆலோசகரின் மகனைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த ஆலோசகரான எம்.டி.பெர்னாண்டோவின் மகன் மயூரா பெர்னாண்டோ கடந்த வியாழக்கிழமை மாலை முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. பம்லப்பிட்டி பாதுகாப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அவர், அங்கிருந்து வெளியேறிய பின்னர் காணாமல் போனதாகத் தெரிகிறது. www.puthinam.com

    • 3 replies
    • 1.6k views
  4. 'மகிந்த சதுக்கம்" அமைப்பதற்கென சூழவுள்ள முக்கிய இடங்கள் அபகரிப்பு! 'மகிந்த சதுக்கம்" ஒன்றை நிறுவுவதற்காக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை சூழவுள்ள இடங்கள் சுவீகரிக்கப்படுமென அப்பிரதேசத்திலுள்ள பிரதான சொத்துகளின் உரிமையாளர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்தல் விடுத்துள்ளார். நகர அபிவிருத்திக்கு பொறுப்பாகவிருக்கும் அமைச்சரின் சிபாரிசுகளின் பேரிலேயே ஜனாதிபதி இந்த உத்தரவை விடுத்திருக்கிறார். ஜனாதிபதி மாவத்தை, சதாம் வீதி, சேர் பரோன் ஜயதிலக மாவத்தை, முதலிகே மாவத்தை மற்றும் வைத்தியசாலை வீதி என்பவற்றை எல்லைகளாகக் கொண்ட 4 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு மகிந்த சதுக்கத்துக்கு அவசியமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கோட்ட…

  5. புதுவருடம் முதல் வடக்கு, கிழக்கு தனித்தனி மாகாண சபைகளாக இயங்கும். எதிர்வரும் புதுவருடம் தொடக்கம் வடக்கும், கிழக்கும் இருவேறு மாகாண சபைகளாக இயங்க ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்காக தனித்தனி நிதியொதுக்கீடுகள் நடைபெற்றிருந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுநராக ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். வடக்கு, கிழக்கு இணைப்பு வலுவற்றதென்றும் சட்டவிரோதமென்றும் உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்தே எதிர்வரும், ஜனவரி மாதம் தொடக்கம் வடக்கும், கிழக்கும் இருவேறு மாகாண சபைகளாக செயற்பட ஆரம்பிக்குமென தெ…

  6. இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா தேவையான நடவடிக்கை எடுக்கும்:- பிரதமர் மன்மோகன் சிங். பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 22இல் சந்தித்துச் சுமார் 45 நிமிடங்கள் தங்கள் வேண்டுகோளை முன் வைத்தனர். இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா தேவையான நடவடிக்கை எடுக்கும் என அப்பொழுது பிரதமர் அவர்களுக்கு உறுதி கூறினார். பேச்சு வார்த்தை வெற்றிகரமாகவும், சுமூகமாகவும் நடைபெற்றதெனவும், தங்கள் கருத்துக்களைப் பிரதமர் கவனமாகக் கேட்டுக் கொண்டதாகவும் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். இலங்கைப் பிரச்சினையில் தேவையான நடவடிக்கை எடுப்பதாக அப்பொழுது பிரதமர் உறுதியளித்தார். பிரதமரிடம் சொல்லப்பட்ட செய்திகள் …

  7. நத்தார் தினத்தினை முன்னிட்டு யாழில் இன்றும் நாளையும் ஊரடங்கு முற்றாக நீக்கம். நத்தார் தினத்தை ஒட்டி இன்றும் நாளையும் ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்படுவதாக யாழ்ப்பாணம் சிவில் நிர்வாக அலுவலகம் நேற்றிரவு அறிவித்துள்ளது. நள்ளிரவு ஆராதனைகளில் மக்கள் ஈடுபட்டுக்கொள்ள வசதியாகவும், நத்தார் தினத்தைக் கொண்டாட உதவும் வகையிலும் ஊரடங்கு முழுமையாக நீக்கப்படுவதாக மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.sankathi.com

  8. ஈழத்தமிழர்களுக்கு நிம்மதி வாழ்வு ஏற்படுகிறவரை இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் - திராவிடர் கழகத் தலைவர் அறிவிப்பு. ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழுகிற நிலை ஏற்படுகின்றவரை இந்தப் போராட்டம் ஓயாது, தொடரும் என்று திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சென்னையில் நேற்று நடைபெற்ற “மனித சங்கிலி’’ போராட்டத்தின் போது ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். ஈழத்திலே நடக்கும் கொடுமைகள் மிக அநாகரிகமான கொடுமைகளாகும். சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீச்சு. சொந்த நாட்டு மக்கள் பட்டினியால் சாகவேண்டும் என்பதற்காக உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லாமல் தடுப்பதற்காக அங்குள்ள முக்கிய சாலைகளை சிங்கள இனவெறி அரசு மூடிவைத்துள்ளது. தொடர்ந்து குண்டுமழை அங்கு முகாம்களி…

  9. தமிழர் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஜோர்ஜ் பெனான்டஸ். முன்னாள் மத்தியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜோர்ஜ் பெனான்டஸ் அவர்கள் மத்தியில் சிறீலங்காவில், சிறீலங்கா அரசாங்கத்தால் தமிழர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஜோர்ஜ் பெனான்டஸ் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் தான் முன்னரும் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாகவும் இனிமேலும் அவ்வாறு செயற்படுவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதே வேளை இந்தியாவின் பிரதமமந்திரி மன்மோகன் சிங் அவர்கள் தமிழ் கூட்டமைப்பினரை சந்தித்தபோது இறையாண்மையுள்ள இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாகவும் கண்ணியமாக வாழ உதவிசெய்வதாக உறுதியளித்தமை தெ…

  10. புதிய வெளிவிவாகரத்துறைச் செயலாளர் நியமனம்:- மகிந்த - மங்கள முறுகல். புதிய வெளிவிவகாரத்துறைச் செயலாளரை நியமிப்பது தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. வெளிவிவகாரத்துறைச் செயலாளர் பதவிக்கு இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவரான ரொமேஷ் ஜயசிங்கவின் பெயரை மங்கள சமரவீர கடந்த வாரம் மகிந்தவிடம் பரிந்துரை செய்திருந்தார். எனினும் ஜயசிங்கவை அப்பதவிக்கு நியமிக்கப்போவதில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் மகிந்த தெரிவித்ததே முறுகலுக்கான காரணம் என தெரியவருகிறது. தற்போது வெளிவிவகாரத்துறைச் செயலாளராக பணியாற்றும் பாலிகக்ஹாரவின் பதவிக்காலம் எதிர்வரும் 31 ஆம் நாளுடன் முடிவடைக…

  11. யாழ்குடாநாட்டில் ஆயுதமுனையில் கொள்ளை. யாழ்ப்பாண குடநாட்டில் பொது மக்களுக்கான உப உணவு பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் யாழ் நகரின் பிரதான வீதியின் மடத்தடி யாழ் மாவட்ட விவசாய நுகர்ச்சி கூட்டுறவு சமாசத்தின் அலுவலகம் மற்றும் களஞ்சிய திறப்புகள் பொது முகாமையாளரிடம் இருந்து ஆயுத முனையில் நேற்று பறிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த முகாமையாளரை நல்லூர் பகுதியில் வைத்து இடைமறித்த ஆயதபாணிகள் திறப்புகளை பறித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கான தரைவழி பாதை துண்டிக்கப்பட்ட பின்னர் ஒரு பகுதி உப உணவுப் பொருட்கள் இந்த அமைப்பின் ஊடாகவே விநியோகம் செய்யப்பட்டது. எனினும் இந்த அமைப்பினால் போதிய அளவில் சீராக உப உணவுப் பொர…

  12. இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் சர்வதேச சமூகம் கடுமையாகக் கையாள வேண்டும் என்று யாழ் ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் தனது நத்தார் செய்தியில் வலியுறுத்தியுள்ளார். யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அவர்கள் இன்று வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் தின செய்தியில் மக்கள் அனைவருக்கும் அமைதியையும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும் விழாவாக இந்த கிறிஸ்மஸ் விழா அமைய வேண்டும் என வாழ்த்தியுள்ளார். அதேவேளை, சமாதான முயற்சிகளின் அனுசரணையாளர்களான நோர்வேயும் மற்றும் இணைத்தலைமை நாடுகளும் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் கடின போக்குடன் கையாள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். சுனாமி பேரலைகளினால் உயிரிழந்தவர்கள் மற்றும் துன்ப…

  13. இலங்கை பிரச்னையில் நேரடியாக இந்தியா தலையிட மறுப்பு சென்னை: "இலங்கை பிரச்சனையில் இந்தியா நேரடியாக தலையிடாது. இது தான் இந்தியாவின் நிலைப்பாடு. அதே நேரத்தில் அங்கு அமைதி நிலவ வேண்டும்; தமிழர்கள் நிம்மதியுடன் வாழ தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது,"என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக அறிவித்தார். நாடு முழுவதும் உள்ள பாஸ்போர்ட் அதிகாரிகளின் ஆண்டு மாநாடு சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை பிரச்னை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து திட்டவட்ட பதில் அளித்தார். அவர் அளித்த பேட்டி; போலீஸ் விசாரணையின்றி பாஸ்போர்ட் வழங்குவதால் பாதுகாப்புத் தன்மை இருக்காதே? 'தட்கல்' திட்டத்தின் கீழ் …

  14. சிறிலங்கா இராணுவ பயிற்சி நிறைவு விழாவில் மகிந்த. தியத்தலாவை இராணுவப் பயிற்சிக்கல்லூரியிலிருந்து 60 சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் இன்றையதினம் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர். இந்நிகழ்விற்கு சிறிலங்காவின் ஜனாதிபதியும் முப்படைகளின் பிரதம தளகர்த்தருமாகிய மகிந்த ராஜபக்ச பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத்தளபதி உட்பட பெருமளவு உயர்நிலை அதிகாரிகளும் தளபதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதாக சிறிலங்கா இராணுவத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. www.sankathi.com

  15. யாழ்ப்பாணத்தில் கைத்தொலைபேசிகள் இயங்கின? யாழ்குடா நாட்டின் சிலபகுதிகளில் நேற்றுமுன்தினம் கைத்தொலைபேசிகள் அச்சுவேலி, புத்தூர், ஆவரங்கால், இடைக்காடு, பத்தமேனி, வளளாய், நவக்கிரி போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் நண்பகலுக்கு பின் இயங்கியதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. www.pathivu.com

  16. பாலசிங்கம் புதைக்கப்படவில்லை- விதைக்கப்பட்டிருக்கிறார்: கருணாநிதி மகள் கனிமொழி தமிழீழத் தேசத்தின் குரலான அன்ரன் பாலசிங்கம் புதைக்கப்படவில்லை- விதைக்கப்பட்டிருக்கிறார் என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளும் கவிஞருமான கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரும் தமிழீழத் தேசத்தின் குரலுமான அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்கு தமிழ்நாட்டின் தென்னவன் கலைமன்றம் சார்பில் இரங்கல் கூட்டம் திராவிடர் கழகத் தலைமையககமான பெரியார் திடலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளும், கவிஞருமான கனிமொழி கலந்துகொண்டு பேசியதாவது: ஈழத்தமிழர்களது சோகங்களின் குரலாக, மொழியாக விளங்கியவர் பாலசி…

    • 7 replies
    • 1.8k views
  17. கல்லாறு, கரடிக்குளம், மாங்கேணி முகாம்களில் இருந்து ஒரேதடவையில் வாகரைக்கிராமங்களை நோக்கி சிறீலங்கா படையினர் பாரிய ஆட்டிலறி தாக்குதலை 8 மணிநேரத்திற்கு மேலாக மேற்கொண்டுள்ளனர். வாகரை வைத்தியசாலைக்கு மிக அண்மையாகவும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. வாகரையை சிறீலங்கா படையினர் கிறீஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக இருநாட்களுக்குள் கைப்பற்றிவிடுவோம் என்று ஊடகத்தினர் மத்தியில் சிறீலங்கா இராணுவத்தளபதி லெப்.nஐனரல் சரத்பொன்சேகா சூளுரைத்திருந்தமை தெரிந்ததே.

  18. வடக்கு கிழக்கை பிரித்து திருகோணமலையினை மேலும் தனியாக பிரிக்கவும் நடவடிக்கை! வடக்கு, கிழக்கை பிரிக்குமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கை மூன்று நிர்வாக அலகாக பிரிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது இந்த நடவடிக்கையில் வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கமைய வடக்கு, கிழக்கு மற்றும் திருகோணமலையென நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டு வட மாகாணத்துக்கான நிர்வாக மையம் வவுனியாவிலும் கிழக்கு மாகாணத்துக்கான நிர்வாக மையம் கல்முனையிலும் திருகோணமலை தனியொரு நிர்வாக மையமாகவும் செயற்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. திருகோணமலையின் நிர்வாகச் செயற்பாடுகளை ஓய்வு…

  19. கிழக்கு மாகாண ஆளுநராக ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம நியமனம்.கிழக்கு மாகாணத்திற்கான ஆளுநராக ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கரம நேற்று ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மொஹான் விஜயவிக்கிரம வடக்குகிழக்கு மாகாண ஆளநராக இதுவரை பதவி வகித்து வந்தார். இந்தநிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு இணங்க வடக்குகிழக்கு மாகாணங்களை தனித்தனியாக பிரிக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே கிழக்கு மாகாணத்திற்கான ஆளநர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் வடக்கு மாகாணத்திற்கான பதில் ஆளநராகவும் விஜயவிக்கிரம நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கிடையில் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வடக்கு கிழக்கில் மூன்று நிர்வாக அலகுகளை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள…

    • 0 replies
    • 616 views
  20. வாகரையில் இடம்பெயர்ந்த மக்கள் சென்ற வாகனம் விபத்து 7 பேர் காயம்வாகரையில் இடம்பெயர்ந்த மக்கள் பிரயாணம் செய்த வாகனம் காத்தான்குடியில் விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயம். வாகரையில் இடம்பெற்றுவரும் கடுமையான தாக்குதல்கள் காரணமாக அங்கிருந்து பெருவாரியான மக்கள் இடம் பெயர்ந்துவரும் நிலையில், மட்டக்களப்பு நகரில் பல்வேறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களில் அவர்கள் தங்கிவருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வாகரைப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து வாழைச்சேனைக்கு வந்து பின்னர் அங்கிருந்து ஆரயம்பதியில் உள்ள முகாமொன்றுக்கு சிற்றூர்தி ஒன்றில் செல்லும்போது காலை 9.30 மணியளவில் காத்தான்குடி மத்திய பிரதேச பிரதான வீதியில் அவ்வாகனம் விபத்துக்குள்ளானதாக …

    • 0 replies
    • 728 views
  21. தென்னாசிய நாடுகள் வரிசையில் மனித உரிமையை மீறும் நாடுகளில் இலங்கை 6வது இடம் தெற்காசிய நாடுகளிடையே மனி உரிமைமீறல்கள் விடயத்தில் இலங்கை 6 வது இடத்தை பெற்றுள்ளதாக தெற்காசிய மனித உரிமைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய அமைப்பில் 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் மனித உரிமை மீறல் விடயத்தில் 6 இடத்தை இலங்கை வகிப்பதாக அந்த அறிக்கையில் குறி;ப்பிடப்பட்டுள்ளது. புதுடில்லியில் நேற்று நடைபெற்ற இந்த அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றிய மனித உரிமைகள் ஆசிய நிலையத்தின் தலைவர் சுஹாஸ் சக்மா, இலங்கையில் 2002 ஆம் செய்துக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை மீறப்படுதல் காரணமாக தமிழர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் அப்பாவி மக்கள் ஆகியோர் காணாமல் போகும் சம…

    • 0 replies
    • 3.3k views
  22. யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் புதிய மருத்துவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு கட்டாய சேவை - பண்டார வன்னியன் ளுயவரசனயலஇ 23 னுநஉநஅடிநச 2006 11:16 யாழ்ப்பாணத்தில் புதிதாக நியமனம் பெறும் வைத்தியர்கள் அங்கு 2 வருடங்கள் பணியாற்றவேண்டுமென்பது கட்டாயமென சுகாதார அமைச்சு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக சுகாதார பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் மேலும் தெரிவிக்கையில்; பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சுகாதார அமைச்சு குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து வைத்தியர்களாக பட்டம் பெற்று வெளியேறுபவர்களில் அநேகர் அங்கு பணியாற்ற விரும்புவதில்லை. இதனால் யாழ…

    • 0 replies
    • 599 views
  23. யாழ் வடமராட்சியில் படைமுகாம் மீது துப்பாக்கிப் பிரயோகம். - அச்சத்தில் மக்கள் இடப்பெயர்வு. - பண்டார வன்னியன் ளுயவரசனயலஇ 23 னுநஉநஅடிநச 2006 17:49 யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் மானாண்டிப் பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா படையினரின் முகாம் மீது இனம்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் 10நிமிடங்கள் வரைநீடித்துள்ளது. இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஓரு படைச்சிப்பாய் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ள

    • 0 replies
    • 740 views
  24. அடுத்த வருட ஆரம்பத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு - மகிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வு காணமுடியுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பொது வைபவம் ஒன்றில் பேசும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வருட முற்பகுதியில் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அடுத்த வருட முற்பகுதியில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆலோசனையைச் சமர்ப்பிக்கும். ஜனவரி அல்லது பெப்ரவரியில் இத்தீர்வு ஆலோசனை வரைவை சர்வகட்சி மாநாடு முன்வைக்கும். எப்படியிருந்தும் அரசு புலிகளுக்கு எதிரான பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும். நாங்கள் சமாதானத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். எனினும், ஆயுத வன்முறையி…

    • 2 replies
    • 1.4k views
  25. * ஐ.நா.பொதுச்சபையில் நிறைவேற்றம் தமக்கு எதிரிகள் என்று கருதப்படுவோரை பலவந்தமாக கடத்திச் சென்று அவர்களை இரகசிய சிறைச் சாலைகளில் அடைத்து வைக்கும் அல்லது கொன்றுவிடும் நாடுகளைத் தடை செய்யும் புதிய உடன்படிக்கையொன்றை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை உருவாக்கியுள்ளது. பலவந்தமாக காணாமற்போதலிலிருந்து சகலரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனம் என்ற இந்த உடன்படிக்கைக்கு 192 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா. பொதுச் சபை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. இந்த உடன்படிக்கையில் உறுப்பு நாடுகள் கைச்சாத்திடும் ஆரம்ப வைபவம் எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இடம்பெறவுள்ளது. பலவந்தமாக ஆட்கள் காணாமல் போதல் உலகளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிறது. இந்த புதிய உடன்படிக்…

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.