Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 19 Sep, 2025 | 03:12 PM யாழ். நகர்ப் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பேருந்து நிலையம் அமைத்துத் தருமாறு நாங்கள் யாரிடமும் கோரிக்கை முன்வைக்கவில்லை என தெரிவித்த இ.போ.சபையின் வட மாகாண பிரதிப் பொது முகாமையாளர், எந்த முடிவானாலும், தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியே எடுக்க முடியும் என தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை (18) யாழ். மாவட்ட செயலகத்தில் துறைசார் அமைச்சர் பிமல் ரட்நாயக்க தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து மற்றும் வீதி விருத்தி தொடர்பான கலந்துரையாடலின்போது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ். நகரை அபிவிருத்தி செய்வதாயின், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து நிலையத்தை பிறிதொரு இடத்திற்கு மாற்றவேண்டுமெனக் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு தெ…

  2. Published By: Digital Desk 1 19 Sep, 2025 | 10:17 AM வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இதய மற்றும் குருதிக்குழாய் உட்செலுத்துகை ஆய்வு கூடம் (Cath Lab) இன்று முதல் செயற்பாட்டில் உள்ளது. வவுனியா பொது வைத்தியசாலையில் ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டிருந்த இதய மற்றும் குருதிக்குழாய் ஆய்வுகூடம் இன்றைய தினம் தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது. நெதர்லாந்து அரசின் நிதிப்பங்களிப்போடு இருதய மற்றும் குருதிக்குழாய் ஆய்வுகூடம் அதற்கான உபகரணங்களோடு அமைக்கப்பட்ட நிலையிலும் மனிதவளப் பற்றாக்குறை காரணமாக இயங்காநிலையில் காணப்பட்டது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த வருடம் திறந்து வைக்கப்பட்ட குறித்த ஆய்வுகூடம் வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் பல்…

  3. முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது பூர்வீக மானாவாரி விவசாய நிலங்களில் பெரும்போக நெற்செய்கைக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபடும்போது வனவளத் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தடுத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த எல்லைக்கிராம மக்களின் விவசாய நடவடிக்கைக்கு இடையூறுகள் ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்ந்தும் தடைகள் ஏற்படுத்தப்பட்டால் தடைகளை உடைத்தெறிந்து விவசாய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். குறித்த எல்லைக்கிராமத் தமிழ் மக்களின் அழைப்பையேற்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை ஆர…

  4. உரும்பிராயில் வைத்தியர் மீது தாக்குதல் நடாத்திய இருவர் கைது! Published By: Vishnu 19 Sep, 2025 | 05:36 AM யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இருவர் வியாழக்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், புதன்கிழமை (17) கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் வீதியால் வைத்தியர் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். இதன்போது மதுபோதையில் இருந்த ஒரு குழுவினர் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதியில் நின்றனர். இதன்போது குறித்த வைத்தியர் தான் செல்வதற்கு வ…

  5. காங்கேசன் துறைமுகத்தை வணிகத்துறைமுகமாக அபிவிருத்தி செய்ய முடியாது - அமைச்சர் பிமல் ரத்நாயக்க! யாழ். காங்கேசன் துறைமுகத்தை வணிகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய மாட்டோம் என தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தியா ஒதுக்கிய பணமும் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு போதாது என தெரிவித்தார். நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போக்குவரத்து துறைமுகங்கள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கினார். குறித்த கலந்துரையாடலில் காங்கேசன் துறைமுத்தின் அபிவிருத்திகள் துரிதப்படுத்தப்படுவதோடு யாழ். பலாலி விமான நிலைய பாதுகாப்புக்காக சுபிகரித்து வைத்துள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எ…

  6. 19 Sep, 2025 | 06:19 PM ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு இந்நாட்டு மக்களின் சொத்துகளை சூறையாடிய அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. சட்டத்தின் பிடிக்குள் இருந்து அவர்கள் தப்பவே முடியாது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். கொழும்புத்துறை இறங்குதுறையின் புனரமைப்பு பணிகள் இன்று (18) ஆரம்பமாகியது. இதற்குரிய ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பங்கேற்றிருந்தனர். அத்துடன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கோலித்த கமல் ஜினதாச, தேசிய மக்…

  7. யாழில். டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு! adminSeptember 19, 2025 ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவிற்கு இணங்க GovPay என்ற அரசின் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வு துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலும் பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரது பங்கேற்புடன் நடைபெற்றது. நாட்டை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வழியாக சாதாரண மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வெளிப்படையானதும் சிக்கனமானதுமான மற்றும் நம்பிக்கையை மேம்…

  8. நுண்கடன் காரணமாக மண்முனை பகுதியில் 22 பேர் தற்கொலை! நுண்கடன் காரணமாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் அனுமதியின்றி செயற்பட்ட நுண்கடன் நிதி நிறுவனங்களை மூடும் செயற்பாடுகள் பிரதேசசபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு ஆகிய பகுதிகளில் தவிசாளரினால் நேற்றையதினம் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பிரதேசசபையின் வியாபார பதிவுச்சான்றிதழ்பெறாத நுண்கடன் நிறுவனங்களை மு…

  9. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச வெளியிட்ட சொத்துக்கள் தொடர்பில் சந்தேகம் இருக்குமானால் இலஞ்சஊழல் ஆணைக்குழுவினரும் குற்றத்தடுப்பு புலனாய்வுபிரிவினரும் அதற்கான அடுத்தகட்ட விசாரணையை நோக்கி நகர்வார்கள் என்று அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 100 மில்லியன் சொத்துக்கள் தொடல்பில் நாமல் ராஜபக்ச வெளியிட்டிருந்த கருத்தானது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியிருந்தது. இதற்கமைய, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எவ்வாறு ஒரு கோடீஸ்வரராக வரமுடியும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அமைச்சர் சந்திரசேகரனின் கருத்தை தொடர்ந்து நாமலின் சொத்துக்கள் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. TamilwinTamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Late...Tamilwin provides all the latest Sri Lankan Tamil …

  10. Published By: Vishnu 18 Sep, 2025 | 06:55 PM (எம்.மனோசித்ரா) மாகாணசபைத் தேர்தலை ஜனநாயக ரீதியில் விரைவாக நடத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தேர்தலை நடத்த சகல அரசியல் கட்சிகளும் ஒருமித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா புதன்கிழமை (17) பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹர்ஷண ராஜகருணா, தயாசிறி ஜயசேகர மற்றும் நளின் பண்டார ஆகியோர் கலந்…

  11. 18 Sep, 2025 | 03:14 PM மட்டக்களப்பு ஏறாவூர் பற்று புல்லு மலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு பிரதேச சபையின் கட்டிட அனுமதியோ வியாபார அனுமதியோ வழங்கப்படாது எனவும் குறித்த தண்ணீர் தொழிற்சாலைக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கக் கூடாது என ஏறாவூர் பற்று பிரதேச சபையின் இன்றைய அமர்வில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏறாவூர் பற்று பிரதேச சபையின் அமர்வு இன்றைய தினம் நடைபெற்றபோது பெரிய புல்லுமலை வட்டார உறுப்பினர் சிவானந்தன் பெரிய புல்லு மலையில் அமைக்கப்படவுள்ள தண்ணீர் தொழிற்சாலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பிரேரணையை சபைக்கு கொண்டுவந்ததன் பிரகாரம் அது குறித்த விவாதம் சபையில் நடைபெற்றது. இதன்போது சிரேஸ்ட ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப…

  12. 18 Sep, 2025 | 11:47 AM மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்ட கிணறுகளை அகழ்ந்து, அது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் வழக்கினை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு…

  13. Published By: Vishnu 18 Sep, 2025 | 02:56 AM நினைவேந்தல்களை வைத்து தேர்தல் கணக்கு அரசியல் செய்யும் முன்னணியின் செயல் எப்போது நிறுத்தம் காணும் என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபன் அண்ணனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க வந்த அமைச்சர் சந்திரசேகருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையைத் தடுப்பது, தமிழ்க் காங்கிரஸ் முன்னணியின் செயல் எனில் – அது அயோக்கியத்தனத்தின் உச்சமே ஆகும். யாரும் யாரையும் அஞ்சலிக்கலாம்; அதுதான் மனித மாண்பு. திலீபன் அண்ணன் போராடிய காலத்தில் அவருக்கு எதிராக நின்ற பலர் இன்று நினைவேந்தல்களில் பங்கேற்கின்றனர். அவர்களை முன்னணியே த…

  14. Published By: Vishnu 18 Sep, 2025 | 02:52 AM மின்சக்தி சுயாதீனத்துவம் நாட்டின் வளர்ச்சிக்காக அத்தியாவசியமானது. மின்கட்டணத்தை குறைப்பதற்கு முன்னர் அதற்குரிய நிலையான மற்றும் சாத்தியமான திட்டங்களை செயற்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மெகாவோட் 350 கொள்ளவுடன் கூடிய கெரவலபிட்டிய சொபாதனவி மின் உற்பத்தி நிலையமானது பிரதமர் தலைமையில் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்பட்டது. தற்போதைய மின்சாரத் தேவையின் 12 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடிந்துள்ளது. இலங்கைப் பொறியியல் அறிவு, கட்டமைப்பு மற்றும் திறன்கள் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 2030 ஆம் ஆண்டிற்குள் தேசிய தேவையின் 70 சதவீதம் புதுப்பிக…

  15. திருகோணமலைக்கு வடகிழக்கே கடற்பகுதியில் நிலநடுக்கம்! 18 SEP, 2025 | 05:39 PM திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கி.மீ தொலைவில் கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை (18) பிற்பகல் 4.06 மணியளவில் 3.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இருப்பினும், இலங்கைக் கடற்கரைக்கு எந்தவிதமான சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) ஆகியன தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/225445

  16. சீனோர் பணிகள் ஆரம்பித்து வைப்பு adminSeptember 18, 2025 யாழ். காரைநகர் பகுதியில் சீ நோர் படகு திருத்துமிடத்தை அனைத்து வசதிகளுடனும் மீள இயங்க வைப்பதற்குரிய ஆரம்ப பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டது. சீ நோர் படகு திருத்துமிடம் நெடுநாளாக இயங்கா நிலையில் இருந்தது. இதனால் படகு திருத்த பணிகளை மேற்கொள்வதில் மீனவர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இது தொடர்பில் அமைச்சர் சந்திரசேகரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இலங்கை மற்றும் இந்திய அரசின் 330 மில்லியன் நிதி உதவியின் கீழ் இன்றைய தினம…

  17. மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை adminSeptember 18, 2025 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் பேராசிரியர் துரைராஜாவிற்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு இடமொன்றினை ஒதுக்குவது தொடர்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் தவிசாளர் ப. மயூரனால் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பில் தவிசாளர் சபையில் தெரிவிக்கையில்., போலிகள் மலிந்து விட்ட இன்றைய தேசத்தில் போலியின்றி வாழ்ந்து தேசப்பற்றோடும் மக்கள் மனித நேயத்தோடும் தமிழ் மண்ணுக்கு மக்களுக்கும் அவர் ஆற்றிய மகத்தான த…

  18. செம்மணி புதைகுழி – மூன்றாம் கட்ட அகழ்வுக்கான பாதீடு மன்றில் சமர்ப்பிப்பு adminSeptember 18, 2025 செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான பாதீடு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் , நீதவான் நீதிமன்றத்தில் , சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் சமர்ப்பித்துள்ளார். செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது. அதன் போது, மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான செலவீன பாதீட்டை சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மன்றில் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 01ஆம் திகதிக்கு மன்று ஒத்திவைத்தது. செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் , முதல் கட்டமாக 09 நாட்களும் , இரண்டாம் கட்ட…

  19. ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் எமக்கெதிராக புலம்பெயர் தமிழர்கள் செயற்படுவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத காரணியாகும் என முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார். இணையத்தள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டின் முழுமையான நோக்கம் ஐரோப்பாவின் ஆதிக்கத்தில் இலங்கையை உள்ளடக்க வேண்டும் என்பதாகும்.அதற்காக ஐரோப்பா பயன்படுத்தும் கருவியாக புலம்பெயர் தமிழர்கள் காணப்படுகிறார்கள். அதாவது இந்திய பெருங்கடலில் தங்களின் ஆதிக்கம் மேலோங்க இலங்கை ஒரு மர்மஸ்தானமாக இருப்பதாலாகும்.இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 2009ஆம…

  20. செம்மணி மனிதபுதைக்குழி விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில், மண்டைதீவு மனிதபுதைக்குழி விவகாரமும் துளிர்விட ஆரம்பித்துள்ளது. 1990களில் மண்டைதீவு பகுதியில் மிகப்பெரிய பேரவலம் அரங்கேறியுள்ளது. 50ற்கும் மேற்பட்பட்டோர் புதைக்கபட்ட மண்டைதீவு செம்பாட்டு தோட்டம் கிழக்கு தெருவில் அமைந்திருக்ககூடிய ஒரு கிணற்றின் ஊடாகத்தான் பல செய்திகள் வெளிவர காத்திருக்கின்றன. யாழ்.தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மண்டைதீவானது 1990களின் பின்னர் இலங்கையின் உள்நாட்டு போரின் இருண்ட சாட்சியமாக மாறியுள்ளது. போர்ச்சூழல் காரணமாக மண்டைதீவு விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும் இலங்கை இராணுவத்திற்குமிடையில் அடிக்கடி கைமாறியுள்ளது. மண்டைதீவு பல தசாப்தங்களாக நடந்த போர் மற்றும் அரசியல் வன்முறையின் சோக கதைகளில் ஒன்றா…

  21. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அவரது கும்பலுக்கு விரைவில் நிரந்தர ஓய்வு கிடைக்கும் என மட்டக்களப்பு கல்குடா தொகுதியின் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் திலீப்குமார் தெரிவித்துள்ளார். அநுர அரசுக்கு ஆரம்பத்தில் வாக்களித்த மக்கள் இன்று பிழையானவர்களைத் தெரிவு செய்துவிட்டோம் என வருத்தப்படுவதாக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இட்ட முகநூல் பதிவிலேயே திலீப்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த முகநூல் பதிவில் மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இனிக் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியில்லா வாகன இறக்குமதி அனுமதி பத்திரம் கிடையாது. நிரந்தர அரசியல் ஓய்வு சிங்கள பௌத்த பேரினவாத அரசியலை அநுர அரசு செய்வதில்லை என்பத…

  22. நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள்! உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட இலங்கையின் மூன்றாவது சிறிய செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ளதாக மொரட்டுவையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. ‘BIRDS-X Dragonfly’ என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள், ஆகஸ்ட் 24 அன்று நாசாவால் ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ்-33 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக, 2019 ஆம் ஆண்டில், இலங்கை தனது முதல் சிறிய-செயற்கைக்கோளான ‘ராவணன்-1’ ஐ வெற்றிகரமாக ஏவியது. மேலும் 2022 ஆம் ஆண்டில், ஐந்து சர்வதேச கூட்டாளர்களை உள்ளடக்கிய பன்னாட்டு தொழில்நுட்ப ஒத்துழைப்பி…

  23. ஹெரோயினுடன் பிக்கு உள்ளிட்ட மூவர் கைது! ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இதன்போது அவரிடம் இருந்து 10.3 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு அலவ்வ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விகாரையொன்றில் சேவையாற்றிய 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. அவருடன் கைதான ஏனைய இரண்டு பேரும் 29 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து 17 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கைதான மூன்று சந்தேக நபர்களும் நேற்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 7 நாட்கள்…

  24. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மிரிஹான, கல்வல வீதியில் ஒரு வீடு இருப்பதாக அவரது உறவினரும் ரஷ்யாவிற்கான முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். இந்த வீட்டை மகிந்த ராஜபக்ச, 1980ஆம் ஆண்டு வாங்கியதாக உதயங்க வீரதுங்க தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து உதயங்க வீரதுங்கவின் முகநூல் பதிவில் மேலும் குறிப்பிடுகையில், “முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதம் சட்டம் கொண்டுவரப்பட்டு, விஜேராம மாவத்தை, எண். 117 இல் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு மஹிந்த ராஜபக்ச செல்லும் கடைசி நாள். செப்டம்பர் 10ஆம் திகதி ஆகும். அன்று, முன்னாள் ஜனாதிபதியுடன் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு விருந்தில் கலந்து கொண்ட ஒரே நபர் நான்தான். உண்மையில், விஜேராம உ…

  25. அரசியலமைப்பு மாற்றத்தில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமை(நிறைவேற்று அதிகாரம் கொண்ட) ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் புதிய முறைமை உருவாக்கப்படும் என பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஐந்து வருடகால திட்டத்தில் குறித்த அரசியலமைப்பு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் உரையாற்றிய அவர், தேர்தல் விஞ்ஞாபனம் "எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் ஐந்து வருடங்களுக்குள் நிறைவேற்ற உள்ளோம். அதில் அரசியலமைப்பு மாற்றமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மாற்றத்தில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு நாடாளுமன்றத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.