ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142722 topics in this forum
-
யாழ். பயங்கரவாத நகரமாகிவிட்டது: உள்ளூர் அமைப்புக்கள் [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 16:48 ஈழம்] [பூ.சிவமலர்] வெள்ளை வானில் வந்து ஆட்களைக் கடத்திச் செல்லும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் யாழ். நகரம் பயங்கரவாத நகரமாகியுள்ளது என உள்ளூர் அமைப்புக்கள் தெரிவித்தன. அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் யாழ். மாவடத்தின் வழமை நிலை முற்றாகச் சீர்குலைந்து விட்டது என்று மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பு (CHA) அண்மையில் வெளியிட்ட "விரைவான அமைதியும் பிரச்சினையும் குறித்த ஆய்வு" என்ற அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆயுததாரிகளின் அச்சுறுத்தல் காரணமாக வேறு வழியின்றி யாழ். மாவட்டத்திலிருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என அவ்வறிக்கை க…
-
- 0 replies
- 636 views
-
-
நாட்டின் எந்தப் பகுதியிலும் விடுதலைப் புலிகளுக்கு உரிமையில்லை: சிறிலங்கா இராணுவம் [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 18:00 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையின் எந்தப் பகுதியிலும் விடுதலைப் புலிகளுக்கு சிறுதுளி உரிமையும் இல்லை என்பதை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு நினைவில் வைத்திருக்க வேண்டும் என அதன் தலைவருக்கு சிறிலங்கா இராணுவம் அறிவுறுத்தியுள்ளது. போர்நிறுத்த உடன்பாட்டை மீறி, முன்னரங்க நிலைகளைத் தாண்டி சிறிலங்கா இராணுவத்தினர் முன்னகர்வதாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழு விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் முகமாக இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது. மேலும் போர்நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா இராணுவம் மீறியுள்ளதாக கண்காணிப்புக் குழு கூறியிருப்பதையும் இரா…
-
- 0 replies
- 778 views
-
-
பொது மக்கள் மீது தாக்குதல்: ஐநா கண்டனம்! ----------------------------------------------------------------- இலங்கையின் கிழக்குப் பகுதியில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. நேற்றும் இலங்கை இராணுவம் மட்டக் களப்பில் மக்கள் வசிப்பிடங்கள் மீது எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை உடனடி யாக நிறுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது. பொதுமக்களைத் தாக்குவது மனித உரிமைகளை மீறுவதாகும் என இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வாகரைப் பகுதியில் சென்ற சனிக்கிழமை முதல் இராணுவம் நடத்திவரும் கடும் தாக்குதலால் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளன…
-
- 1 reply
- 889 views
-
-
சிங்களக் கிராமங்களில் பதுங்கு குழிகள்! ஹொரவப்பொத்தான, சேருநுவர உட்பட பல்வேறு சிங்கள குடியேற்ற கிராமங்களில் வீட்டுக்கு வீடு பதுங்கு குழிகளை அமைக்குமாறு சிறிலங்காப் படையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஹொரவப்பொத்தான பிரதேசத்திலுள்ள சிங்களக் கிராமங்களான, கல்லாறு, சேருநுவர, சிறீமங்களபுர, றைற் லிங் வன், றைற் லிங் ரூ, லெப்ட் லிங் ரூ, மேதகம உட்பட, பல்வேறு எல்லைக் கிராமங்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. சில சிங்களக் கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட கிராமிய விவசாய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, இதற்கான முன்னெடுப்புக்களை உடன் மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாகத் தெரிகிறது. சிங்கள கிராம மக்கள் தற்போது இடம்பெயர்ந்து வரும் நிலையில…
-
- 3 replies
- 1.6k views
-
-
இலங்கையில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்கு சுயாதீன விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என அம்னஸ்ரி இன்ரநசனல் எனப்படும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது சர்வதேச மன்னிப்புச் சபையின் குளிர் பருவகால அறிக்கை வெளியாகியுள்ளது அந்த அறிக்கையில் உலகில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வரும் மூன்று நாடுகளில் ஒன்றாக இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது ஈரான் மற்றும் கொங்கோ குடியரசு ஆகிய நாடுகளுடன் இலங்கையும் மனித உரிமை மீறல் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாடுகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நீண்டகால போரினால் அப்பாவி மக்களே அதிகம் பாதிக்கப்பட…
-
- 0 replies
- 843 views
-
-
சிறீலங்கா கடற்படைக்கு ஆயுதவிற்பனையில் பிரித்தானியா இஸ்ரேல் மும்மரம் UK backed Israeli deal to enhance Lanka’s firepower - Presidential probe on shady arms transactions By: Shamindra Ferdinando Courtesy: The Island - December 13, 2006 The controversy over the alleged irregularities in a multi-million US dollar deal, to upgrade the firepower of Fast Attack Craft (FACs), has taken a shocking turn with the revelation that the British Government assured Sri Lanka that the transaction was above board.Britain also offered the Sri Lankan government an opportunity to inspect the 30 mm KCB cannons at a US government bonded store in St. Louis. The British High…
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு- திருமலையில் வன்முறைகள் மோசம்: போர்நிறுத்த கண்காணிப்புக் குழு எச்சரிக்கை. மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் வன்முறைகள் மோசமடைந்து வருவது குறித்து இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் வன்முறைகள் மோசமடைந்து வருவது குறித்து இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கில் கிளர்ந்துள்ள வன்முறை, போர்நிறுத்த உடன்படிக்கையை முறித்ததோடு மட்டுமல்லாமல் பெரும் அபாயத்துக்குள் சென்றுள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் குறிப்பாக வாகரையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது என்று அதன் அறிக்கை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலி…
-
- 0 replies
- 721 views
-
-
உதயன்' பணிமனைக்குள் புகுந்துபொலிஸ் அலுவலர் மீது சூடு! ஆயுதபாணிகள் இருவர் நேற்றுக்காலை கைவரிசை யாழ். நகரில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருக்கும் "உதயன் சஞ்சீவி' பத்திரிகை நிறுவன வளாகத்தினுள் நேற்றுக்காலை தீடீரெனப் பிரவேசித்த ஆயுதபாணிகள் இருவர் அங்கு காவல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைச் சுட்டு விட்டுத் தப்பிச்சென்றனர். பத்திரிகை நிறுவனத்தில் கடமையில் இருந்த பணியாளர்கள் வேட்டுச் சத்தங்க ளால் பீதியடைந்து பாதுகாப்புத்தேடி ஓடினர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட் டது. முற்பகல் 10.50 மணியளவில், அலு வலகத்தின் நுழைவாயில் வழியாக திடீ ரெனப் பிரவேசித்த அடையாளம் தெரியாத இந்த இரு நபர்களும் அலுவலகத்தின் பாது காப்புப் பிரிவில் காவல் கடமையில் ஈடு பட்டிருந்த பொலிஸ் அலு…
-
- 0 replies
- 852 views
-
-
கடத்திச் சென்றபோது தப்பிஓடிய இளைஞர் கருணாகுழுவினரால் சுட்டுக்கொலை. கல்முனை- பாண்டிருப்பில் இளைஞர் ஒருவர் கருணாகுழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார் பாண்டிருப்பு காளிகோவிலடியைச் சேர்ந்த தங்கராஜா காந்தன் (வயது16) என்ற இளைஞனே கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டவராவார். இச்சம்பம் நேற்று இரவு 9.00மணியளவில் தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது - கல்முனையிலுள்ள கருணாகுழுவினரின் அரசியல் துறை அலுவலகத்திலிருந்து 2மோட்டார் சைக்கிளில் வந்த கருணாகுழு உறுப்பினர்கள் நால்வர் வீட்டுக்குள் நுழைந்து ஆயுதமுனையில் குடும்பத்தினரை அச்சுறுத்தி இவரைக் கடத்திக்கொண்டு சென்றுள்ளனர். பாண்டிருப்பு -எல்லைவீதி வழியாக இவரைக் கடத்திக்கொண்டு சென்றப…
-
- 0 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதில் இருந்து நாங்கள் பின்வாங்கி விட்டோம் என சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் மக்கள் வசிப்பிடங்களில் இருந்து தாக்குதல்களை நடத்துவதால் நாங்கள் தாக்குதலை நிறுத்தியுள்ளோம் என இராணுவம் இன்று செவ்வாய்க்கிழமை கூறியுளள்து. "விடுதலைப் புலிகள் வாகரை மருத்துவமனைக்கு அருகில் இருந்து தாக்குதலை நடத்துகிறார்கள் என்று நிச்சயமான தகவல் கிடைத்த பின்னர் இன்று எங்களால் எதிர்த்துத் தாக்குதலை நடத்த முடியவில்லை" என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார். விடுதலைப் புலிகள் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்கள், விட…
-
- 12 replies
- 3.2k views
-
-
இலங்கை ராணுவ தாக்குதலில் 23 தமிழர்கள் பலி டிசம்பர் 11, 2006 கொழும்பு: தமிழர் பகுதியில் இலங்கை ராணுவத்தின் குண்டுவீச்சு தாக்குதலில் 23 அப்பாவி தமிழர்கள் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படையினர் வெறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரையில் கடந்த 2 நாட்களாக நடந்த மோதலில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்நிலையில் இலங்கை ராணுவம் தொடர்ந்து தமிழர்களின் குடியிருப்புகள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த பொதுமக்களை செஞ்சிலுவை சங்கத்தினர…
-
- 6 replies
- 2.4k views
-
-
விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாப் பயன்படுத்துவதில்லை - அரசின் குற்றச்சாட்டுக்கு இளந்திரையன் மறுப்பு. விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக சிறீலங்கா அரசாங்கம் கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். இவ்வாறு விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டுவதற்கு சிறீலங்கா அரசுக்கு எதுவித அருகதையும் இல்லை. யுத்த நிறுத்தத்தை கண்காணிப்பதற்கு, யுத்த சூழலைக் கண்காணிப்பதற்கு என சர்வதேச சமூகத்தின் ஒப்புதலின் பேரிலும் இரு தரப்பினரும் ஏற்றக் கொண்டதற்கு அமைய இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் இருக்கின்றார்கள். கண்காணிப்புக் குழுவினரை நடுநிலமையாளர்கள் என அனைவராலும் ஏற…
-
- 1 reply
- 723 views
-
-
மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம் கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல் உற்றார் உலகத்தவர் - ஒளவையார்: நல்வழி UK backed Israeli deal to enhance Lanka’s firepower - Presidential probe on shady arms transactions By: Shamindra Ferdinando Source: The Island - December 13, 2006 The controversy over the alleged irregularities in a multi-million US dollar deal, to upgrade the firepower of Fast Attack Craft (FACs), has taken a shocking turn with the revelation that the British Government assured Sri Lanka that the transaction was above board.Britain also offered the Sri Lankan government an opportunity to inspect…
-
- 0 replies
- 1.1k views
-
-
கைநழுவிப் போகும் நோர்வேயின் சமாதான முயற்சிகள் பயங்கரவாத தடைச் சட்டத்துடன் முற்றாக செயலிழந்து போகும் போர் நிறுத்த உடன்படிக்கை பயங்கரவாதத் தடைச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து இல்லாது போன அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் தற்போது மீண்டும் அமுலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் போர் நிறுத்த உடன்பாடு முற்று முழுதாகவே செயலிழந்து போயுள்ளது. நாட்டில் இயல்பு நிலையை உருவாக்கி சுமுகமானதொரு சூழ்நிலையை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வொன்றைக் காண்பதற்காகவே போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. அமைதியும் சுமுக நிலையும் ஏற்படுவதற்கு தடைகளாயிருந்த அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் நீக்…
-
- 0 replies
- 822 views
-
-
போர் மூளுவதைத் தடுக்க தெற்கில் புதிய கூட்டணி? தேசியப் பிரச்சினைக்குப் பேச்சு மூலமே தீர்வு காணப்பட முடியும் என்று நம்புகிற அந்நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கு கின்ற மிதவாதப் போக்குடைய அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக் கப்படுகிறது. நாட்டில் மீண்டும் முழு அளவிலான யுத்தம் ஒன்று வெடிக்கலாம். மனித உரிமைகள் பெருமளவில் மீறப்படலாம் என்று உணர்ந்த சில மிதவாத அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் அந்நிலைமை உருவாவதைத் தவிர்ப்பதற்காகக் கூட்டணி ஒன்றை உருவாக்குவது தொடர்பாகக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. தற்போது அரசில் இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சிகளின் பிரமுகர்களால் உரு…
-
- 1 reply
- 850 views
-
-
[Tuesday December 12 2006 12:57:50 PM GMT] [virakesari.lk] ஓடு பாதையை விட்டு விலகி விமானப்படை விமானம் விபத்து இரத்மலானையில் சம்பவம் விமானப்படைக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று நேற்று திங்கள் மாலை இரத்மாலனை விமான நிலையத்தில் வைத்து விபத்திற்குள்ளாகியதையடுத்த
-
- 0 replies
- 1.2k views
-
-
5,000க்கும் மேற்பட்ட மக்கள் ஊரைக் காலி செய்தனர். ---------------------------------------------------------------------------- திரிகோணமலை வட்டாரத் தின் வடகிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவத்தினரும் சனிக்கிழமை இரவு கடுமையாக மாறி மாறித் தாக்கிக்கொண்டனர். இந்த வட்டாரத்தில் வசிக்கும் மக்களில் ஐயாயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்ட அந்த வட்டாரத்தைக் காலி செய்து வேறு பாதுகாப்பான இடம் நோக்கிச் செல்லத் தொடங்கி விட்டனர். இவர்களில் அதிக மானோர் சிங்கள மக்கள் என்று கூறப்படுகிறது. மூன்று கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த 800 குடும்பங்கள் தற்போது திரிகோணமலையின் தென்மேற்கில் அமைந்துள்ள கந்தலே என்னும் கிராமத்தில் உள்ள இரண்டு புத்த கோய…
-
- 2 replies
- 2.2k views
-
-
பட்டினிச் சாவிலிருந்தும் படுகொலைகளிலிருந்தும் தமிழரைப் பாதுகாக்க ஐ.நாவுக்கு அவசர வேண்டுகோள். தமிழ்மக்களைப் பட்டினிச் சாவிலிருந் தும் அரச பயங்கரவாதப் படுகொலைகளி லிருந்தும் பாதுகாக்குமாறு ஐக்கிய நாடு கள் சபைக்கு அவசர வேண்டுகோள் விடுக் கப்பட்டுள்ளது. வாகரையில் அரசாங்கம் நடத்திவரும் படுகொலைகளைக் கண்டித்தும் ஏ9 வீதி மூடப்பட்டுள்ளதால் உண்டாகியுள்ள மனி தப் பேரவலத்துக்குக் கண்டனம் தெரிவித் தும் ஐக்கிய நாடுகள் சபைக்கு விலாசமிட்டு கிளிநொச்சி வெகுசன அமைப்புகளின் ஒன் றியம் கையளித்த மகஜரிலேயே மேற்கண்ட அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட் டுள்ளதாவது சிறிலங்காவில் தமிழ் பேசும் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட…
-
- 5 replies
- 1.4k views
-
-
இலங்கையிலிருந்து வந்த மின்னஞ்சல் (கவனம்:அதிர வைக்கும் படங்கள்!) திசம்பர் 11, 2006 என் அன்பிற்குரிய சகோதரனுக்கு, மட்டக்களப்பிலிருந்து உனக்கு அன்பு. இங்கிருக்கும் இப்போதைய நிலவரத்தைப் பற்றி உனக்குக் கொஞ்சம் சொல்கிறேன். இந்த மின்னஞ்சலைத் தட்டச்சிக்கொண்டிருக்கும்போ
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆய்வறிக்கையை வெளியிட்டதால் மகிந்த ஆத்திரம். தமது அதிகாரத்தை மீறி, இலங்கைப் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் ஆய்வறிக்கையை ஊடகத்துக்கு வெளியிட்டதால் அனைத்துக்கட்சி நிபுணர் குழு மீது சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மிகுந்த ஆத்திரமடைந்துள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சி கடந்த வெள்ளிக்கிழமை மகிந்தவுடன் அவசரக்கூட்டம் நடத்தியது. நிபுணர் குழுவினரது நான்கு ஆய்வறிக்கைளில் ஒன்று அக்கட்சியின், அனைத்துக் கட்சியின் பிரதிநித்துவ குழுவிடம் முன்னரே கொடுக்கப்பட்டிருந்தது. எனவே அறிக்கை அரசாங்கத்தினுடையதுதானா என ஜாதிக உறுமய கேள்வி எழுப்பியுள்ளது. நான்கு அறிக்கைகளும் பரிசீலனைக்குரியவை. அரசாங்கத்தின் அறிக்கை அல்ல என மகிந்த அதற்குப் பதிலளித்தார். வெவ்வேறு அறிக்கைளின் …
-
- 0 replies
- 903 views
-
-
அன்பான சொந்தங்களே..... மட்டக்களப்பு 12.12.2006 அன்பான சொந்தங்களே! எல்லாப் பேருக்கும் வணக்கம். எல்லாரும் சுகமாக் கிடக்கோணும் எண்டு தான் நான் நெடுகிலும் கையெடுத்து கும்பிடுற பாருங்க. ஆனா நாம நெனக்கிற மாதிரியா எல்லாம் நடக்குது? நாங்க நெனக்கிறது நடக்காமப் போறது வேற. ஆனா நாட்டு ஜனாதிபதி நெனக்கிறது கூட நடக்காமப் போகுது. வாகரயில இரிக்கிற நம்மட சனங்களுக்கு உணவுச்சாமான் அனுப்ப வேணுமெண்டு மகிந்தரய்யா சரியாக் கஸ்ரப்பட்டாராம். ஆனா அவரு சொல்றதக் கூட மாங்கேணியில இரிக்கிற ஆமிக்காறனுகள் கேக்கிறானுகள் இல்லயாம். உண்மயில மாங்கேணியில என்ன நடந்ததெண்டு விசயம் தெரிஞ்ச ஒராளிட்டக் கேட்டன் பாருங்க. அவரு சொன்னாரு.. ஆமிப்பெரியவனுகள் சாப்பாட்டுச்சாமான் கொண்டு போக அ…
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு மக்கள் குடியிருப்பு பகுதியில் கிபிர் குண்டுத் தாக்குதல். இன்று காலை 10 மணியளவில் மக்கள் குடியிருப்பு பகுதியான கட்டுமுறிவு, கதிரவெளி, பலாச்சேனை பகுதிகளில் சிறீலங்கா இராணுவத்தின் வான்படைக்கலங்கள் குணடுத் தாக்குதல்கள் நிகழ்த்தியுள்ளன. இவ் வான்கலங்கள் நான்கு தடவைகளில் 8 குண்டுகளை வீசியுள்ளன. இத்தாக்குதலில் நான்கு வீடுகள் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை கடந்த மூன்று நாட்களாக இப்பிரதேசங்களில் சிறீலங்கா இராணுத்தின் எறிகணைத் தாக்குதலால் மக்கள் வாகரை வைத்தியாசாலை பகுதில் இடம்பெயர்ந்தமையால் பெருமளவில் மக்கள் உயிரிளப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. www.pathivu.com
-
- 1 reply
- 808 views
-
-
மன்னார் முருங்கனில் கிளேமோர்த் தாக்குதல்:- 2 படையினர் பலி. மன்னார் முருங்கனில் இன்று காலை வீதிச்சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிறிலங்காப் படையினரை இலக்குவைத்து கிளேமோர்த் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இக் கிளேமோர்த் தாக்குதலில் இரண்டு சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் ஒரு படைச்சிப்பாய் படுகாயமடைந்துள்ளதாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களின் பின்னர் குறிப்பிட்ட பிரதேசங்களை சுற்றிவளைத்த படையினர் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. www.sankathi.com
-
- 0 replies
- 720 views
-
-
பாரம்பரியமான உடப்பு தமிழ்க் கிராமம் பயங்கரவாத பிரதேசமாக மாற்றப்படுகிறது * மாகாண சபை உறுப்பினர் இராதாகிருஷ்ணன் உடப்பு கிராமம் நூற்றுக்கு நூறு வீதம் தமிழ் மக்கள் வாழும் கிராமமே. இங்குள்ளவர்கள் கடற்றொழலைச் செய்கின்றனர். இது ஒரு மீன்பிடிக் கிராமம். ஆனால், இக்கிராமத்தைப்பற்றி சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இங்குள்ள அப்பாவித் தொழிலாளர்களைப் பற்றியும் தவறான கருத்து வெளியிடப்படுகிறது. உடப்பு பிரதேசத்தை பயங்கரவாத சூனிய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வடமேல் மாகாண சபையின் உறுப்பினர் கே. இராதாகிருஷ்ணன் சபையின் கடற்றொழில் அமைச்சு நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றும்போது இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய மாகாண சபை உறுப்பினர் கே…
-
- 3 replies
- 2.1k views
-
-
க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்ற முடியாதெனக் கோரி கந்தளாயில் மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வாகரையிலும் பரீட்சைகள் நடைபெறவில்லை [Monday December 11 2006 06:53:10 PM GMT] [virakesari.lk] கந்தளாய் அஃரபோதி வித்தியாலய பரீட்சை மத்திய நிலையத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற விருந்த சுமார்200 பரீட்சார்த்திகள் நேற்று பரீட்சைக்கு தோற்றாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக பெற்றோர்களும் பிரதேசவாசிகளும் இணைந்து கொண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற கடுமையான மோதல் சம்பவங்களை அடுத்து மஹிந்த புரம், சோமபுரம், சேருநுவர,ஸ்…
-
- 0 replies
- 726 views
-