ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142722 topics in this forum
-
யுத்தநிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா அரசு செயலற்றதாக்கிவிட்டுள்ளது - சு.ப. தமிழ்ச்செல்வன். இலங்கை அரசினுடைய யுத்த வெறிப்போக்கையும் இனப்படுகொலை முயற்சியையும் தடுத்துநிறுத்த சர்வதேசசமூகம் முன்வரவேண்டுமென தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் நோர்வே தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகவிலாளர்களிற்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன்றைய சந்திப்பில் நோர்வே அனுசரணையாளர்களிற்கு எமது தலைமைபீடத்தின் உறுதியான நிலைப்பாட்டையும் இன்றைய நெருக்குவார சந்தித்துள்ள எமது மக்களின் மனிதாபிமானத் தேவைகள் குறித்தும் தெளிவாக எடுத்து விளக்கியுள்ளோம். அத்தோடு நோர்வே அனுசரனைப் பணிகளை சிறிலங்கா அரசு அழுத்தங…
-
- 0 replies
- 642 views
-
-
ஜான் ஹான்சன் பவர் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பயணம். இலங்கை அரசின் கோரிக்கைக்கேற்ப விடுதலைப் புலிகளின் தலைவர்களை வரும் வெள்ளிக்கிழமையன்று கிளிநொச்சியில் சந்திக்கத் நோர்வே சிறப்பு சமாதானத் தூதுவர் ஜான் ஹான்சன் பவர் திட்டமிட்டுள்ளதாக நோர்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இலங்கை அரசின் கோரிக்கைக்கேற்ப விடுதலைப் புலிகளின் தலைவர்களை வரும் வெள்ளிக்கிழமையன்று கிளிநொச்சியில் சந்திக்கத் நோர்வே சிறப்பு சமாதானத் தூதுவர் ஜான் ஹான்சன் பவர் திட்டமிட்டுள்ளதாக நோர்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். www.tamilwin.com
-
- 8 replies
- 1.9k views
-
-
இன முரண்பாடுகளை தீர்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் - சிறி ரவிசங்கர் இலங்கையில் கடந்த இரு தசாப்தங்களாக தொடரும் இன முரண்பாடுகளை தீர்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியாவின் ஆன்மீக தலைவர்களின் ஒருவரான சிறி ரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று தமிழகத்தில் நடைபெற்ற ஆத்மானந்த உற்சவம் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஸ்ரீரவிசங்கர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளும் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு முயற்ச்சியில் இந்தியா ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்ற போதிலும் இந்திய அரசாங்கம் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு முயற்ச்சியில் இருந்து விலகி இருப்பது ஏன் என்று தெரியவில்லை எ…
-
- 9 replies
- 1.7k views
-
-
போர்நிறுத்த கண்காணிப்பு குழுவிற்கு சிறீலங்கா அரசு விளக்கமளிக்கதேவையில்லை:-ரம்புக்வெல பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவிற்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள பயங்கரவாத தடைச்சட்டமானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 1.2 வது சரத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாக கண்காணிப்புக் குழு தெரிவித்திருந்தது இந்த விடயம் குறித்து அரசாங்கம் தமக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கண்காணிப்புக் குழு கோரிக்கை விடுத்திருந்தது இது குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கருத்து வெளியிட்டுள்ள…
-
- 2 replies
- 999 views
-
-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் வலுவான புதிய விதிகளுடன் அமுலுக்கு வந்தது சமாதானப் பேச்சு முயற்சிகளை பாதிக்காது என்கிறது அரசு. பாதுகாப்புப் படையினருக்கும், பொலிஸாருக்கும் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் "பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்' (Prevention of Terrorism Act) இலங்கைத் தீவு முழுவதும் நேற்று முதல் மீண்டும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கைது செய்வதற்கும், தடுத்து வைப்பதற்கும், சிறையில் அடைப்பதற்கும் பாதுகாப்புப் படையினருக்கு விசேட அதிகாரங்களை வழங்கும் இந்தச் சட்டம் புதிய பல துணை விதிகள் சேர்க்கப்பட்டு உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் அமுலுக்கு வந்திருப்பதாகப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற விசேட செய்தியாளர…
-
- 10 replies
- 2.7k views
-
-
அதிகாலையில் ஆயுதக் குழுவைக் கண்டு அஞ்சி ஓடிய சிறுமி மீது துப்பாக்கிச் சூடு! யாழ். கல்வியங்காடு பகுதியில் சம்பவம் [Friday December 08 2006 06:45:41 AM GMT] [யாழ் வாணன்] அதிகாலை வீட்டின் பின்புறம் இயற் கைக் கடன் கழிக்கச் சென்ற சிறுமி ஒருத்தி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் காய மடைந்தார். யாழ்ப்பாணம், கல்வியங்காடுப் பகுதியில் புதிய செம்மணி வீதியில் இந்தச் சம்பவம் நேற்று விடிகாலை 2 மணி யளவில் இடம்பெற்றது. இச் சூட்டில் காலில் காயமடைந்த சிறுமி யாழ். மருத் துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிகள், கத்திகள், பொல்லு களுடன் சுமார் 30 பேரடங்கிய கும்பல் ஒன்று இரவுவேளை அப்பகுதியில் நட மாடியது என்று கூறப்படுகிறது. குறிப…
-
- 0 replies
- 823 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் முடிவெடுத்த 24 மணி நேரத்துக்குள் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 13 பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர். வலிகாமம் கிழக்கில் உள்ள கல்வியங்காடு, கட்டப்பிராய், டச் வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 9 பேரை ஆயுததாரிகள் கடத்திச் சென்றுள்ளனர். கடத்திச் சென்றவர்கள் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர். அதே இரவில் வலிகாமம் வடக்குப் பகுதியில் இருந்து மேலும் நால்வரை இராணுவம் கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து யாழ். மனித உரிமை அமைப்பிடம் கடத்தப்பட்டவர்களது உறவினர்கள் புகார் செய்துள்ளனர். காணாமல் போனவர்களைத் தாங்கள் கைது செய்ததை இராணுவம் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டது என்றும் அந்த உ…
-
- 3 replies
- 1.2k views
-
-
இருபத்திஐந்து வருடத்துக்கு முன்பு புளட் அமைப்பின் உறுப்பினர்களாகிய இறைகுமாரன்,உமைகுமாரன் ஆகிய இருவரையும் பாலமோட்டை சிவம் மற்றும் சங்கதியாருடன் சேர்ந்து கொலை செய்த மாவலிராஜன் புலம்பெயர்ந்து வாழும் கனடியத்தமிழர்களின் புத்திக்கூர்மையான செயற்பாட்டால் அடயாளம் காணப்பட்டார் இவர் டி.பி.எஸ்.ஜெயராஜுக்கு அடுத்தபடியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.இ
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.nerudal.com/content/view/3370/70/
-
- 1 reply
- 1.5k views
-
-
அன்புக்குரிய சங்கதி வாசகர்களே.. சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக வாகரையிலும் யாழ்ப்பாணத்திலும் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள எம் தமிழ் உறவுகளுக்காக ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திற்கு உங்கள் ஒவ்வொருவரின் கையெழுத்துக்களும் வலுச்சேர்க்குமென எண்ணுவதால் அன்பான வாசகர்களே இவ்மனிதாபிமான உதவிசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மதிப்பக்குரிய கோபி அனான் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம்; அவர்களுக்கு சமாதானத்திலும் நீதியிலும் நம்பிக்கைகொண்ட தமிழ் மக்களாகிய நாங்கள் உங்களிடம் தாழ்மையாக கேட்டுக்கொள்வது இலங்கையில் உள்ள வடக்கு கிழக்குப் பிரதேசங்களான யாழ்ப்பாணம், வாகரை ஆகிய ப…
-
- 4 replies
- 2.2k views
-
-
கொழும்பில் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: தமிழ் இளைஞர் பலி கொழும்பு மட்டக்குளி காக்கைதீவுப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தமிழ் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. காக்கைதீவில் உள்ள கடற்படையினரது சோதனைச் சாவடியில் காவல் கடமையில் நின்ற மூன்று கடற்படையினர் இளைஞர்கள் இருவரை அழைத்து சோதனை நடத்தியதாகவும் அப்போது கடற்படையைச் சேர்ந்த ஒருவரின் துப்பாக்கியை இளைஞர் ஒருவர் பறிக்க முற்பட்ட போதே அவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும் முகத்துவார காவல்துறையினர் தெரிவித்தனர். இதேவேளை மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்…
-
- 1 reply
- 941 views
-
-
வாகரையில் படையினரின் போக்குவரத்து கெடுபிடியால் நோயாளிகள் மூவர் உயிரிழப்பு வாகரையிலிருந்து மட்டக்களப்பிற்கான போக்குவரத்துப் பாதையில் சிறிலங்காப் படையினர் கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதால் நோயாளர்கள் மூவர் கடந்த இரு வாரங்களில் உயிரிழந்துள்ளனர். குழந்தை உட்பட மூவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்தும், அப்பகுதியில் வாழ்ந்தும் வருகின்ற மக்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தொடர்ந்தும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் வாகரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் மூவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவேண்டிய நிலை ஏற்பட்ட போதும் படையினரின் அனுமதிக் கெட…
-
- 0 replies
- 730 views
-
-
இராணுவத்துக்கும் இடையில் கடும் மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வெருகல் பகுதியை நோக்கி இன்று வியாழக்கிழமை காலை சிறிலங்கா இராணுவம் பீரங்கித் தாக்குதலை நடத்தியது. அதேநேரத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வாகரையின் தென்மேற்குப் பகுதியான கட்டுமுறிவு பகுதியை நோக்கி இராணுவம் 5 கிலோ மீட்டர் தூரம் முன்னேறியுள்ளது. விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த்தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அங்குள்ள ஒரு பாடசாலையில் படையினர் முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே ஈச்சிலம்பற்றிலும் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்றதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். படையினர் தங்கள் நிலையில் இருந்து…
-
- 0 replies
- 2.1k views
-
-
அன்ரன் பாலசிங்கத்தின் முன்னாள் பெயர் எஸ்.பி. ஸ்ரனிஸ்லொஸ் இந்த நாட்டில் பயங்கரவாதத்துடன் மிகவும் நெருங்கிய பிரபலமான பெயர் தான் அன்ரன் பாலசிங்கம் என்பது. அரசாங்கத்திற்கும் புலிகள் அமைப்புக்குமிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது புலிகள் இயக்கத்தின் அரசியல் நியாயவாதி என்ற பெயரில் அறிமுகமான அன்ரன் பாலசிங்கம் தற்போது சுமார் 43 வருடங்களுக்கு முன் ஸ்ரீ லங்காவிலிருந்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஆங்கில, தமிழ் மொழி பெயர்ப்பாளராக சேர்ந்து பணி புரிந்தவர். அப்பொழுது இவருடைய பெயர் எஸ்.பி.ஸ்ரனிஸ்லொஸ் என்பதாகும். பிற்காலத்தில் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று இவர் இங்கிலாந்தில் குடியேறிய பின்னரே எஸ்.பி.ஸ்ரனிஸ்லொஸ் என்ற தனது சொந்தப் பெயரை அன்ரன் பாலசிங்கம் என மாற்றி…
-
- 2 replies
- 2k views
-
-
வெள்ளைவானில் வந்த இராணுவத்தினால் அப்பாவித் தமிழர்கள் கைது - ஓளிவடிவம் http://www.sooriyan.com/index.php?option=c...743&Itemid=
-
- 3 replies
- 2.2k views
-
-
இன்று வியாழக்கிழமை வெருகல், ஈச்சிலம்பற்று பகுதியை நோக்கி இராணுவத்தினர் நகர்வு ஓன்றை கடும் எறிகணை சூட்டாதரவுடன் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றை மோதலை விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் உறுதி செய்துள்ளார். மேலதிக தகவல்கள் விரைவில்..
-
- 0 replies
- 1.3k views
-
-
நாட்டின் கடற்பகுதியில் மூன்றில் இரண்டு பகுதிக் கடலில், புலிகளின் அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்த கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, புலிகள் தன்னுடன் தனிப்பட்ட உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட முன்வந்தால் தான் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கடற்றொழில் நீரியல் வள அமைச்சின் நிதியொதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; "மீனவர்களைப் பயன்படுத்தி இராணுவம் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாமென புலிகளிடம் தமிழ்க் கூட்டமைப்பினர் வலியுறுத்த வேண்டும். நாங்கள் சமாதானம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். புலிகள் மீ…
-
- 0 replies
- 1k views
-
-
டக்ளஸின் கோரிக்கையை நிராகரித்தார் பாலு இலங்கைக்கு உணவுப் பொருட்கள் அனுப்புவதற்காக இந்திய கப்பல்களை வழங்க வேண்டுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கையை இந்திய மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு நிராகரித்து விட்டார். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ வேண்டுமென பல தரப்பினரும் விடுத்த கோரிக்கையினை ஏற்று, மத்திய அரசு இலங்கைக்கு உணவுப் பொருட்களை அனுப்ப முடிவு செய்தது. ஆனால், அவ்வாறு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் யார் மூலம் அனுப்புவது என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை இலங்கை அரசிடம் வழங்கினால் அந்நாட்டு இராணுவத்திடம் தான் வழங்கியாக வேண்டும். அந்த இராணுவம் தான் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. எனவே, உணவுப் பொரு…
-
- 0 replies
- 1.3k views
-
-
கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பத்திரிகைகளை விநியோகம் செய்வதை சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழு தடுக்கிறது என பல தமிழ்ப் பத்திரிகைகள் சிறிலங்கா பிறஸ் கழகத்தில் முறையிட்டுள்ளன. வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளின் ஞாயிறு பதிப்புக்கள் கிழக்கு மாகாணத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. எனினும் ஏனைய நாட்களில் பத்திரிகைகளை விநியோகிக்க தடையில்லை. லேக் ஹவுசின் வெளியீடான தினகரன் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என தமிழ்ப் பத்திரிகையாளர்கள் குறை கூறியுள்ளனர். பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் விநியோகஸ்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக கிழக்கு மாகாணத்துக்கு சுடரொளி பத்திரிகை செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. வவுனியாவைத் தாண்டி வீரகேச…
-
- 0 replies
- 769 views
-
-
இனப்பிரச்சினை தீர்வுக்கான புதிய யோசனை முன்வைக்கப்பட்டது. வடக்கு கிழக்குக்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்க பரிந்துரை.10:02:45 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான கட்சிகளின் பிரதிநிதி நிபுணர்கள் குழு இனப்பிரச்சினை தீர்வுக்காக புதிய யோசனைகளை முன்வைத்துள்ளது. 37 பக்கங்களை கொண்ட இந்த பரிந்துரைகள் நேற்று சர்வகட்சி மாநாட்டு குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் குறித்த பரிந்துரைகள் சர்வகட்சி மாநாட்டு குழுவால் ஆராயப்படவுள்ளதாக அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். அதில் அடங்கியுள்ள யோசனைகளை வெளிப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும் இந்த பரிந்துரைகள் நேற்று இரவே இந்து ஆசிய செய்திசேவை இணையத்தளத்தில் வெளியிடப்பட…
-
- 0 replies
- 851 views
-
-
அமைச்சர் டக்ளஸ் - தமிழ் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் கடும் வாய்ச்சண்டை அமைச்சரும் ஈ.பி.டி.பி. அமைப்பின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் களுக்குமிடையே இடம் பெற்ற வாதப் பிரதிவாதங்களால் சுமார் 10 நிமிடங்கள் சபாமண்டபம் அதிர்ந்தது. பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற நிதியமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவாஜி லிங்கம் எழுந்த போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சபைக்குள் நுழைந்தார். அப்போது உரையாற்றிய சிவாஜிலிங்கம், அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் துரோகக் கும்பல் தமது இனத்துக்கு எதிராக செயற்படுகின்றது. பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது போல் எ…
-
- 1 reply
- 943 views
-
-
பொரலஸ்கமுவ பிரதான நீர்வழங்கல் குழாயில் பாரிய வெடிப்பு ஏற்பட்டதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. [Thursday December 07 2006 06:36:20 AM GMT] [யாழ் வாணன்] லபுகமவிலிருந்து கொழும்பிற்கு நீர் விநியோகிக்கும் பிரதான நீர்வழங்கும் குழாயில் நேற்று இரவு 11.30 மணியளவில் பாரிய வெடிப்பு ஏற்பட்டதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பொறலஸ்கமுவ பெலன்விலவிலுள்ள குழாயிலேயே வெடிப்பு சம்பவம் இஅடம்பெற்றுள்ளது.அதி சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் இவ் வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரும் குண்டு செயலிழக்கும் பிரிவினரும் தெரிவித்துள்ளனர்.. இதனையடுத்து பல்லாயிரக்கணக்கான வீடுகளிற்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.எனினும் இவ் வெடிப…
-
- 6 replies
- 1.8k views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்தும் முடிவை எடுத்த சில மணி நேரங்களில், பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப் புலிகள் உண்மையாக விரும்பினால் அதற்கு சிறிலங்கா அரசு தயாராக உள்ளது. அது நேர்மையானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என தமிழ் மக்களுக்கு அவர் நம்பிக்கை தெரிவித்தார். இச்சட்டத்தின் மூலம் மனித உரிமைகள் நசுக்கப்பட எவ்விதமான வாய்ப்பையும் தாம் வழங்கப்போவதில்லை என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். பயங்கரவாதத்தை ஒடுக்க மட்டுமே இந்தச் சட்டம் என்று அ…
-
- 2 replies
- 871 views
-
-
பாக்கிஸ்தான் அரசு பாகிஸ்தானின் முன்னாள் தூதுவர் Col.பஸிர் வாலியை இலக்கு வைத்ததென சிலரால் கூறப்படும் கொழும்பில் இடம்பெற்ற தாக்குதலில் இறந்த, காயமடைந்த சிறீலங்கா படையினரின் குடும்பங்களுக்கு அன்பளிப்பு செய்த நன்கொடைகளை நேற்று இடம்பெற்ற விழா ஒன்றில் சிறீலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராஐபக்ஸ அலரிமாளிகையில் குடும்பங்களிடம் கையளித்தார். இவ்விழாவில் பாக்கிஸ்தானின் முன்னாள் தூதுவர் Col. பாஸிர் வாலி பாக்கிஸ்தான் அரசின் சார்பில் பங்குபற்றியிருந்தார். இவர்களுடன் இப்போதைய தூதுவர் திரு.சேகம் அஸ்லாம் சவுத்திரி, Maj.Gen நந்த மல்லவராச்சியும் கலந்து கொண்டிருந்தனர். http://pathivu.com/index.php?subaction=sho...rom=&ucat=2&
-
- 0 replies
- 859 views
-
-
இந்த ஆண்டு முடிவதற்குள் கணனிமயப்படுத்தப்பட்ட புதிய தேசிய அடையாள அட்டைகளை வழங்க சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது. புதிய அடையாள அட்டைகள் அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படவுள்ளது. அதனால் போலி அடையாள அட்டைகளைத் தயாரிப்பது மிகக் கடினமானதாகும். தற்போது அடையாள அட்டையை வைத்திருப்பவர் அனைவரும் புதிய அடையாள அட்டைகளைப் பெறுவர். புதிய அட்டையில், உரியவரின் கைரேகையும் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும் விவரங்கள் மாற்றக்கூடியதாகவும் இருக்கும். உதாரணமாக கணனிமயப்படுத்தப்பட்ட இந்தப் புதிய அட்டையில் முகவரி மாற்றத்தை எளிதாகச் செய்யலாம். அதே நேரத்தில் போலி அட்டைகளைத் தயாரிக்க முடியாது. அடையாள அட்டை பெறுபவர்களின் முழு விவரங்களும் கணனியில் சேகரிக்கப்ப…
-
- 0 replies
- 724 views
-