ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
புத்தளம் நகரிலுள்ள நகைக்கடையொன்றில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு ஈரான் நாட்டவர்களையும் இன்று புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேலதிக நீதிவான் உத்தரவு பிறப்பித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இவர்களை புத்தளம் பொலிஸார் நீதிமன்றில் ஆஜர் செய்தனர். ஆஜர் செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் உள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் நகரில் கொள்ளையில் ஈடுபட்ட இந்த வெளிநாட்டவர்கள் அநுராதபுரத்திலும் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. http://www.thinakkural.com/news/2007/1/17/...s_page19413.htm
-
- 1 reply
- 1.5k views
-
-
* சிரேஷ்ட அமைச்சர்கள் சிலருக்கு பதவி பறிபோகலாம் அமைச்சரவை மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள் சிலரிடம் தமது பதவி பறிபோகலாமென்ற அச்சமேற்பட்டுள்ளதாகவும் மற்றும் சிலரிடம் அமைச் சுப் பதவிகளை விட்டுக் கொடுக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸ் என்பன அரசுடன் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டிய நிலைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தள்ளப்பட்டுள்ளார். ஏற்கனவே, சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் அமைச்சருமான டி.எம். ஜயரட்ன கட்சியின் மூத்த உறுப்பினர்களை அமைச்சரவை மாற்றத்தின் போது ஒதுக்கிவிட முடியாதெனத் தெரிவித்திருந்தார். எனினும், அமைச…
-
- 0 replies
- 847 views
-
-
திருமலை சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்க, இலங்கை அரசு கடும் பிரயத்தனம் மேற்கொள்கிறது. 2005 ஆம் ஆண்டு இதை நிறுவுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, டிசெம்பர் 29 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்திய அமைதிப் படையின் பிரசன்ன காலத்திலேயே பல இடங்கள் புள்ளியிடப்பட்டு, எதிர்கால முதலீடுகளுக்கான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. 500 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் நிர்மாணிக்கப்படவிருக்கும் இவ்வனல் மின் நிலையம், 2010 ஆம் ஆண்டு செயற்படத் தொடங்குமெனக் கணிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 500 மெகாவாட் (ஆறு) மின்சார உற்பத்தியை, 1000 மெகாவாட் வரை அதிகரிக்கும் திட்ட வரைவொன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஊடகவாயிலாக வெளிவந்த தகவல்கள். இதன்…
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளுடன் தொடர்புடைய `சோஆ' நிறுவனத்தை நாடுகடத்த நடவடிக்கை [17 - January - 2007] [Font Size - A - A - A] கிழக்கு மாகாணத்திலுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் முகாம்களில் மிக முக்கியமானதாகவும், பலம் வாய்ந்ததாகவும் கருதப்படுவதும் அம்பாறையில் கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்திருப்பதுமான "ஸ்ரான்லி பேஸ்" எனப்படும் புலிகளின் முகாமுக்காக அனைத்து வைத்திய உபகரண வசதிகளும் கொண்ட வைத்தியசாலை தொகுதியை நெதர்லாந்தைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனமாகிய "சோஆ" (ZOA) வழங்கியதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது. அத்துடன், இந்த "சோஆ" நிறுவனம் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருங்கிய சம்பந்தமுடைய ஏனைய நிறுவனங்களுடனும் தொடர்புகளை வைத்திருந்தது பற்றிய தகவல்களும் வெளியாகின. மேற்படி தகவ…
-
- 0 replies
- 1k views
-
-
நீர்கொழும்பு நீதிமன்றிலிருந்து கைதி தப்பியோட்டம் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம் வீரகேசரி நாளேடு நீர்கொழும்பு மேல்நீதிமன்றத்திலிருந்து கைதி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை தப்பிச்சென்றுள்ளார். நேற்றுக்காலை 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கைதி தப்பிச்செல்வதற்கு உதவிய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயத்திற்குள்ளாகி நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வத்தளையைச்சேர்ந்த வேலாயுதம் முரளீதரன் (வயது 35) என்ற கைதியே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார். போதைவஸ்து தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேற்படி கைதி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட இருந்த வேளையில்…
-
- 0 replies
- 725 views
-
-
யாழில் 15 வயது சிறுமி உட்பட மூவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தஞ்சம். யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழக்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டு இரண்டு வயோதிபர்கள் உட்பட 15 வயது சிறுமி ஒருவருமாக மூவர் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இதேவேளை சரணடைந்துள்ள வயோதிபப் பெண் கடந்த வெள்ளிக்கிழமை தனது கணவன் தாக்கப்பட்டும் தனக்கு கொலையச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த பெண் சில நாட்களுக்கு முன் ஒட்டுக்குழுக்களின் சூட்டுக்கிலக்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் இராணுவத்தினராலும் ஒட்டுக்குழுவினராலும் கொலை அச்சுறுத்தல் காரணமாக 38 பேர் யாழ். மனித உர…
-
- 0 replies
- 692 views
-
-
வவுனியாவில் அறுவர் பலி.... கடந்த இரவு நடந்ததாக கூறப்பட்டது. மிகுதி செய்தியினை அறிய முடியவில்லை அந்த தகவல்களை வழங்கியவர்களின் தொலைபேசி துண்டிக்கப் பட்டுவிட்டது... மேலதிக செய்திகள் எதுவும் தெரியவில்லை.... -வன்னி மைந்தன்.
-
- 2 replies
- 1.5k views
-
-
புதன் 17-01-2007 10:07 மணி தமிழீழம் [செந்தமிழ்] கிழக்கில் செலய்படும் துணை ஆயுதக் குழுவான கருணா குழுவின் ஆயுதங்களை களையுமாறு முஸ்லீம் காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கையினை அரசாங்கம் நிராகரித்துள்ளது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு துணை ஆயுதக் குழுவினர் அவசியம் என தெரிவித்துள்ள அரசாங்கம் அவர்களிடம் இருந்து ஆயுதங்களை களைய முடியாது என திட்டவட்டமான அறிவித்துள்ளது இதேவேளை முஸ்லீம்களுக்கு எதிரான அவர்களது செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது நன்றி : பதிவு
-
- 0 replies
- 902 views
-
-
ரணில் நினைத்தால் அரசாங்கத்துடன் இணையும் 20 எம்.பி. க்களையும் இன்றே தடுத்து நிறுத்தலாம்: எஸ்.பி. திஸாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நினைத்தால் கட்சியிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ள 20 பாராளுமன்ற உறுப்பினர்களையும் இன்றே தடுத்து நிறுத்திவிடலாம். ஆனால் ரணில் தனது தலைமைப்பதவியை தக்க வைத்துக்கொள்வதில் மட்டுமே குறியாக இருக்கின்றார் என்று ஐ.தே.க.வின் முன்னாள் தேசிய அமைப்புச்செயலாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து 18 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக வெளிவரும் செய்திகள் குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது. …
-
- 3 replies
- 979 views
-
-
யாழ் குடாநாட்டில் கடந்த வருடம் 368 பேர் காணாமல் போயுள்ளனர் மனித உரிமை ஆணைக்குழு அதிகாரி தகவல். யாழ். குடாநாட்டில் கடந்த வருடம் 368 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 31 பேர் யாழ். சிறைச்சாலையில் அடைக்கலம் புகுந்துள்ளதாகவும் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,368 பேரில் பெரும்பான்மையானோர் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னரே காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. வெள்ளை வானில் வந்தோர் சீருடை அணிந்தோர் மற்றும் ஆயுதக் குழுவினரே தமது குடும்ப அங்கத்தவர்களை கடத்திச் சென்றதாக முறைப்பாடுகளில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உறவினர்களின் தகவலின்படி விசாரணைகள் மேற்கொண்டபோது காணாமல் போனோர் எவரையும் கண்டு பிடிக்க முடியவில்…
-
- 0 replies
- 539 views
-
-
பாதிக்கப்பட்ட பிரதேசத்தைப் பாதுகாப்பு வலயமாக்க ஐநா சபையின் செயலர் கோரிக்கை. புதிதாக நியமிக்கப்பட்ட ஐக்கியநாடுகள் சபையின் செயலர் பன் கி மூன் சிறீலங்கா அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், கோவில்கள் போன்றன தாக்கப்படாதிருக்கும் அனைத்துலக விதிகளுக்கமைவாக இவற்றை ‘பாதுகாப்பான வலயங்கள்’ ஆக பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் மாதத்தில் இலங்கைத்தீவில் சிறுவர்களின் அவலம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கபடவிருக்கும் நிலைமையில் மனிதாபிமான பணியாளர்கள் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சுதந்திரமாக சென்று பணியாற்றவும் உதவித்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் எவ்வித இடையூறையும் விதிக்கவேண்டாம் என்…
-
- 0 replies
- 779 views
-
-
ஆரையம்பதியிலிருந்து துணை இராணுவக்குழுவினர் இடமாற்றம். மட்டக்களப்பு காத்தான்குடியில் முஸ்லிம் மக்களுக்கும் சிறிலங்கா இராணுவ துணை இராணுவக்குழுவான கருணா குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து தமது பிரதேசத்தின் ஊடாக ஆயுதங்களுடன் கருணா குழுவினர் செல்வதற்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். முஸ்லிம் மக்களின் எதிர்ப்பினை அடுத்து உருவான பதற்றத்தை தணிக்கும் முகமாக இராணுவத்தின் 23-3 ஆவது பிரிகேட்டின் கட்டளை அதிகாரி கேணல் சுபசிங்காவினால் அரையம்பதியில் உள்ள கருணா குழுவின் முக்கிய உறுப்பினரும் அவரது குழுவினரும் வேறிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து புதிதாக வரவழைக்கப்பட்ட உறுப்பினர்கள் அரையம்பதி சிறப்பு அதிரடிப்படைருடன் முகாம் அமைத்…
-
- 0 replies
- 752 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 4 உறுப்பினர்கள் அரசில் இணைய ஆர்வம்: கேகலிய ரம்புக்வெல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அரசாங்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசில் இணைய ஆர்வம் கொண்டுள்ள 18 ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நடைபெறுகின்றது. அவர்கள் அரச தலைவருக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளனர். முஸ்லிம் காங்கிரசும் அரசில் இணையும் தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளது. இவை தான் தற்போது எம்மிடம் உள்ள தகவல்கள். இதன் முடிவுகள் அடுத்து வரும் சில வாரங்…
-
- 5 replies
- 1.4k views
-
-
மகிந்த - ரணில் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவு. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது பூதாகாரமாக வெடித்துக் கிளம்பியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் தரப்புக்குத் தாவும் கொந்தளிப்பான விடயம் தொடர்பாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றது. தேசிய நலனைக் கருத்திற்கொண்டு இரு பிரதான கட்சிகளும் கடந்த வருடம் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை பாதுகாக்க வேண்டுமென்றால், தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை தனது தரப்பினர் உள்வாங்கக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரச …
-
- 0 replies
- 579 views
-
-
விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலுக்கு தயாராகின்றனர்: கண்காணிப்புக்குழு [புதன்கிழமை, 17 சனவரி 2007, 05:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் மிகப்பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர். தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து அவர்களின் தாக்குதல்கள் ஆரம்பமாகலாம் என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. தென்னிலங்கையில் பெரும் சம்பவங்கள் நடைபெறும் போது கிளிநொச்சி பதற்றமாக காணப்படுகின்றது. எதிர்வரும் வாரங்களில் பெரும் சமர்கள் மூளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இது தென்னிலங்கையில் ஏற்படும் முன்னேற்றகரமான சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும் என அது மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள கண்காணிப்புக்குழுவின் ப…
-
- 35 replies
- 6.8k views
-
-
புதன் 17-01-2007 02:43 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஆயுததாரிகளினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் 2 வயோதிபர்கள் உட்பட மூவர் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இவர்களில் உடுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரும் அடங்கியுள்ளார். அடைக்கலம் புகுந்துள்ள வயோதிப பெண் முன்னர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் உயிர்தப்பியிருந்தார்.இந்த நிலையில் கடந்த வெள்ளி கிழமை தனது கணவர் தாக்கப்பட்டு தனக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக இதுவரை 38 பேர் யாழ் மனித உரிமைகள் ஆணையகத்தில் அடைக்கலம் புகுந்தள்ளதாக கூறுப…
-
- 0 replies
- 639 views
-
-
[புதன்கிழமை, 17 சனவரி 2007, 03:35 ஈழம்] [காவலூர் கவிதன்] கடந்த பல மாதங்களாக, பல்வேறு தாக்குதல்களிலும் பலத்த இழப்புக்களைச் சந்தித்து வரும் சிறிலங்காப் படையின் 'கஜபாகு' படையணி, தற்போதைய கிழக்கின் தாக்குதல்களில் எதிர்பார்த்ததை விட அதிக படையினரையும் இழந்துள்ளது. இதனால் அந்தப் படையணிக்குள் எழுந்துள்ள விரக்தி நிலையையும் மன உளைச்சலையும் போக்கவும், இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது உருவாகியுள்ள வெறுப்புணர்வைப் போக்கவும், திடீரென அரச தலைவர் தரத்தின் அதியுயர் விருதான 'பிரசிடன்ட் கலர்ஸ்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா ஏற்பாடு செய்த இந்த கௌரவிப்பு நிகழ்விற்கு, இராணுவப்படை தலைமைத் தளபதி என்ற பதவியிலுள்ள மகிந்த ராஜபக்ச, பிரதம விருந்…
-
- 0 replies
- 1k views
-
-
காலம் கடத்தும் போக்கில் அரசு செயற்படுவது ஏன்? ` அலை அடங்கக் குளிப்போம் என்று கடற்கரையில் காத் திருந்தவன் கதை போல இருக்கின்றது மஹிந்த அரசின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சி. இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட யோசனையை முன்வைப் பதை இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தள்ளிப் போட்டிருப்பதாக மஹிந்தரது அரசு, எனச் செய்திகள் வெளி யாகி இருக்கின்றன. அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் அரசு இப் போது முக்கியமான சில விடயங்களைக் கவனிக்க வேண்டி யிருப்பதால், தீர்வு யோசனையைத் தயாரிப்பதில் உடனடியா கக் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அரசு கருதுவதாகவும் கூறப்படுகின்றது. நல்ல வேடிக்கை இது. நாட்டின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண…
-
- 0 replies
- 686 views
-
-
புதன் 17-01-2007 02:31 மணி தமிழீழம் [செந்தமிழ்] காத்தான்குடியில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் உடலம் மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை காவல்துறையினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.சடலம் மீட்கப்படும் போது துண்டிக்கப்பட்ட உடலும் தலையும் வேறாக காணப்பட்டுள்ளன. சடலமாக மீட்கப்பட்டவர் நாவற்குடா பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான பிரகாஷநாதன் சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.கடந்த சனிக்கிழமை இவர் மட்டக்களப்பு வன்னியர் வீதியில் வீடொன்றில் தங்கியிருந்த போது கடத்திச் செல்லப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது நன்றி- பதிவு
-
- 0 replies
- 807 views
-
-
புதன் 17-01-2007 02:26 மணி தமிழீழம் [செந்தமிழ்] கல்பிட்டி பாலகுடாவில் மீன்பிடிக்கச் சென்ற இருவரை காணவில்லை கல்பிட்டி பாலகுடா கடலில் மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை என காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மீனவர்கள் கடந்த ஞாயிற்று கிழமை ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்று கரை திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவே
-
- 0 replies
- 681 views
-
-
புதன் 17-01-2007 01:08 மணி தமிழீழம் [சிறீதரன்]பதிவு யாழ்பாண பல்கலைக்கழகம் மீளதிறப்பதில் தாமதம் யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் பதில் துணைவேந்தர் பேராசிரியர் குமாரவடிவேல் நேற்று செவ்வாய் கிழமை ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் யாழ்பல்கலைக்கழகம் எதிர்வரும் திங்கட்கிழமை 22ம் திகதி மீள ஆரம்பிக்கப்படமாட்டாது எனவும் இன்னமும் சிலவாரங்களுக்கு மீள ஆரம்பிப்பது பிற்போடப்படுட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வந்து கற்கைநெறிகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வதிவிடங்கள் மற்றும் இதரவசதிகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதுவும் பல்கலைக்கழகத்தை மீளஆரம்பிப்தில் தாமதமாவதற்கு முக்கிய காரணமாகும் எனபதில் துணைவேந்தர் மேலும் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 812 views
-
-
ஜ.தே.க. உறுப்பினர்களை அரசுடன் இணைக்கும் முயற்சிக்கு ஜனாதிபதியிடம் ரணில் அதிருப்தி வீரகேசரி நாளேடு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷவிடம் நேரடியாக அதிருப்தி தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்தின் பக்கம் மாற்றும் முயற்சியானது இரு தரப்புக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை சீர்குலைத்து விடும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. 10.30 மணிக்கு ஆ…
-
- 0 replies
- 651 views
-
-
LTTE response to the accusation "Torture chambers, Cannabis, and illegal logging by LTTE" http://www.ltteps.org/?view=1836&folder=2 Sri Lanka says captures Tiger frontline, kills 30 rebels http://www.alertnet.org/thenews/newsdesk/COL212183.htm TNA MPs to join govt. claims Minister http://www.bbc.co.uk/sinhala/news/story/20...defectors.shtml பிரச்சாரங்களை நோக்காகக் கொண்ட அசம்பாவிதங்கள் கூட பல நடந்தேறலாம். இவை பற்றி தமிழ் ஊடகங்களின் நடத்தையும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
-
- 0 replies
- 963 views
-
-
வவுனியாவில் கிளைமோர் 5 இராணுவம் பலி இருவர் காயம் வவுனியா புதுக்குளம் பகுதியில் வவுனியா மன்னார் வீதியில் இன்று மதியம் 5.10 மணியளவில் இராணுவ தொடரணியை இலக்கு வைத்துஇடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 5 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 2 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவபாதுகாப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை காயமடைந்த இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 832 views
-
-
அம்பாறையில் சில தினங்களுக்கு முன்னர் புலிகளின் பெரும் முகாம் கைப்பற்றப்பட்டது குறித்து பெரிதாகப் பிரச்சாரம் செய்தது சிறீலங்கா அரசு. அந்த முகாமில் சித்திரவதைக் கூடங்கள் இருந்ததாகவும் முகாம் பகுதியில் போதைப் பொருள் உற்பத்திக்குப் பயன்படும் செடிகள் காணப்பட்டதாகவும் யானைகளின் உடற்பாகங்கள் இருந்ததாகவும் சொல்லி பெரிய ஒரு கதையே அளந்து புலிகளைப் சிறிய பயங்கரவாதக் குழுவாகக் காட்ட பகீரத முயற்சி செய்துள்ளது. அவை அதிரடிப்படை அமைத்துக் கொடுத்த கருணா குழு முகாம்கள் போல் தெரிகிறது. மூன்னர் இந்திய அமைதிப்படை யாழ் நகரில் ஒட்டுக்குழுக்கள் தங்க சித்திரவதை செய்ய அசோகா கொட்டல் பகுதியில் இப்படி ஒரு முகாமைப் பரிகரித்து வந்தது. இது குறித்து ரெயிட்டருக்கு விளக்கிய இளந்திரையன் அப்படி முக…
-
- 0 replies
- 891 views
-