ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142711 topics in this forum
-
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக் கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கைச் சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்ப டிக்கை முறிவடையும் நிலை ஏற்பட்டுள் ளதாக ஐ.தே. க. எம்.பி. லக்ஷ்மன் கிரி யல்ல தெரிவித்தார். நேற்றுக் கொழும்பில் உள்ள எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க வின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: சமாதான முயற்சிகளை முன்னெடுத்துச்செல்ல ஐ.தே.கவுடன் இணங்காமை, ஐ.தே.க. உறுப்பினர்களைப் பழிவாங் கும் நோக்குடன் அரசு செயற்படுகின் றமை ஆகிய காரணங்களினால் அரசுக் கும் ஐ.தே.கவிற்கும் இடையில் கைச்சாத் திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிவடையும் நிலைக்குச் சென்றிருக்கிறது. திஸ்ஸ விதாரணவினால் முன்வைக்…
-
- 0 replies
- 971 views
-
-
சிறிலங்காப் படையினரின் கெடுபிடிக்கும் இழுத்தடிப்புக்கும் மத்தியில் வாகரைக்கு ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டன. - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 29 ழேஎநஅடிநச 2006 12:04 மட்டக்களப்பு வாகரைப் பகுதிக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்கு தொடர்ந்து சிறிலங்காப் படையினர். அனுமதி மறுத்ததனால் அங்கு வாழும் மக்கள் பட்டினிச் சாவிலும் மருத்துவப் பிரச்சனைகளாலும் நாளாந்தம் பேரவலத்தைச் சந்தித்து வருகின்றனர். இந் நிலையில் மக்கள் பிரதிநிதிகள், தமிழீழ நிர்வாக சேவை, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்பன அரச அதிபரிடமும் இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு, ஐ.நா குழு (ரு N) ஆகியவற்றுக்கு மக்களின் நிலையை தொடர்ந்து எடு…
-
- 7 replies
- 1.4k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம். தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதல்கள், பொருளாதாரத் தடை மற்றும் பட்டினி அவலங்களைக் கண்டித்து ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்காவுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை நடைபெற்ற இந்த மாநாட்டில் சிறிலங்கா அரசுக்கு எதிராக காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. ஐப்பான், நியூசிலாந்து, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை முன்வைத்தனர். தமிழ் மக்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அவர்கள் உரிமைக…
-
- 10 replies
- 2.3k views
-
-
வடக்கு - கிழக்கு ஒரே அலகு இந்தியாவின் விருப்பம் இதுவே! பேச்சு மூலம் மோதலுக்கு முடிவுகட்டுமாறு மஹிந்தவிடம் மன்மோகன் சிங் வற்புறுத்தல். இலங்கையில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் செத்துச் செயலிழந்து, உக்கிப்போய் வெறும் தாளாகிக் கிடக்கின்றது என்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தமது மாவீரர் தின உரையில் பகிரங்கமாக அறிவித்திருப்பதில் அந்த உடன்படிக்கை முற்றாக கைவிடப்பட்டுவிட்டது என்று புலி களின் தலைவர் அர்த்தப்படுத்துகின்றாரா? இதனை உறுதிப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றது கொழும்பு அரசு. தலைவர் பிரபாகரனின் அறிவிப்பின் அடிப்படையில், புலிகளின் இயக்கம் யுத்த நிறுத்த உடன் பாட்டிலிருந்து விலகிவிட்டது என்று கொள்ளலாமா என்பதைப் புலிகளிடமே நேரடியாகக் கேட்ட றிந்து தெரிவிக்கும…
-
- 0 replies
- 954 views
-
-
யாழில் தாக்கிய வைரஸ் நோய் சிக்குன்குனியா. அண்மைக்காலமாக யாழ்பாணத்தில் பெருமளவிலான மக்களை தாக்கிய வைரஸ் நோயானது சிக்குன்குனியா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ் வைரஸ் காய்சலின் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் இரத்த மாதிரிகளை எடுத்து கொழும்பில் உள்ள இலங்கை மருத்துவ ஆராச்சி கழகத்திற்கு அனுப்பி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்நோயின் தாக்கத்திற்கு எண்ணாயிரத்துக்கும் மேற்பட்டோரை இந்நோய் தாக்கியுள்ளமை அறியவந்துள்ளது. www.pathivu.com
-
- 0 replies
- 901 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தை மூடியது சிறிலங்கா அரசு: இந்திய ஊடகம் தமிழ் மக்களின் கல்விப் பாதையை சிறிலங்கா அரசு மூடிவிட்டது. நாளுக்கு நாள் இலங்கை நிலை மோசமாகிக் கொண்டே செல்கிறது என்று இந்திய தொலைக்காட்சியான என்டிரிவி செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்புக் தளம் என சிறிலங்கா அரசினால் முத்திரை குத்தப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் சென்று வந்த என்டிரிவி தொலைக்காட்சி நிறுவனம் அங்குள்ள நிலைமை குறித்து சோகமான கட்டுரையை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு உணவு வழங்க முடியாத நிலையில் ஓகஸ்ட் மாதம் பல்கலைக்கழகம் மூடப்பட்டு விட்டது. ஏ-9 பாதையை அரசாங்கம் மூடி, மக்களுக்கான கல்விப் பாதையை அடைத்து விட்டார்கள். கிளிநோச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் இ…
-
- 1 reply
- 845 views
-
-
துணை இராணுவக் குழுவினருக்கு உதவுவதை உடன் நிறுத்த வேண்டும்: மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு [செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2006, 19:29 ஈழம்] [க.நித்தியா] சிறார்களையும் இளைஞர்களையும் கடத்துவதற்கு துணை இராணுவக் குழுவான கருணா குழுவுக்கு உதவுவதை சிறிலங்காப் படையினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஹியுமன் றைட் வோட்ச் அமைப்பான மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. கடத்தப்பட்டவர்களை அவர்களது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பதற்கு படையினர் உதவ வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சிறார்களைக் கடத்துவதில் சிறிலங்கா இராணுவமும் காவல்துறையினரும் உடந்தையாக செயற்பட்டுள்ளனர். சில சமயங்களில் கருணா குழுவுடன் நே…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஜெனீவாவில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் அதிகரித்து வருகிறது. இலங்கை ராணுவம் தமிழர் பகுதிகளில் விடுதலைப்புலிகள் முகாம்கள் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்கி வருகிறது. துண்டிக்கப்பட்ட யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல `ஏ-9′ பாதையை திறந்து விடும்படி புலிகள் விடுத்த கோரிக்கையையும் இலங்கை ராணுவம் ஏற்கவில்லை. இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் ராசையா இளந்திரையன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- நீண்ட காலமாக `ஏ-9′ பாதை மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் பட்டினி சாவை எதிர்நோக்கியுள்ளனர். `ஏ-9′ பாதையை மூடியிருப்பது போர் நிறு…
-
- 18 replies
- 5.5k views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தாம் தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் தம்மிடம் தெளிவுபடுத்தியிருப்பதாக யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் இன்று தெரிவித்திருக்கின்றனர். பி.பி.சி. தமிழோசையுடனான பிரத்தியேக பேட்டியின்போது கருத்து வெளியிட்ட இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோவினூர் ஓமர்ஸன், நேற்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற சந்திப்பின் போது விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன் இதனைத் தம்மிடம் தெரிவித்ததாக இன்று கூறினார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும், அதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் உறுதி கூறிய தமிழ்செல்வன் புலிகளின் இந்த உறுதிப்பாட…
-
- 0 replies
- 779 views
-
-
கைது செய்யப்பட்டுள்ள தமிழ் பெண் பத்திரிகையாளருடன் தொடர்பு கொண்டிருந்த பொலிஸார் மீது விசாரணை கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து அண்மையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் பெண் பத்திரிகையாளருடன் தொடர்புகளை வைத்திருந்த பொலிஸார் தொடர்பாக பொலிஸ் தலைமையக உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இதுவரை இப்பெண் பத்திரிகையாளருடன் தொடர்புகளை வைத்திருந்த மற்றும் அவருக்கு உதவிகள் செய்து வந்த உயர் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழுவொன்றினால் விசாரிக்கப்பட்டுள்ளனர். இதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர், பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியொருவரும் அடங்குவதாக பொலிஸ் தலைமையக உயர் பொலி…
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிவிட்டனரா? நோர்வேயிடம் இலங்கை அரசாங்கம் கேள்வி?தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகி விட்டனரா என்பது தொடர்பாக அறிய தருமாறு இலங்கை அரசாங்கம் நோர்வே ஏற்பாட்டாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக நோர்வே ஏற்பாட்டாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக அமைச்சர் கேலிய ரம்புக்வெல்ல கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்துவைத்திருக்கிறது. எனவே, இந்த விடுதலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென தாம் தீர்க்கமாக முடிவுசெய்திருப்பதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தெரிவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
புதிய திட்டம் தேவையில்லை: நோர்வே சமாதான முயற்சிகளில் பயன் எதுவும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அறிவித்திருக்கும் வேளையில், இலங்கையின் சமாதான முயற்சி தொடர்பாக நோர்வே புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை என்று நோர்வே அறிவித்துள்ளது. சிறிலங்கா அரசுடனும் விடுதலைப் புலிகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கப்போவதாகவும் இருதரப்பினருக்கும் உதவத் தயாராக இருப்பதாகவும் எரிக் சொல்ஹெய்மின் பேச்சாளர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்துக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் சிறிலங்கா அரசு நோர்வேக்கு எழுதிய கடிதத்தில், சமாதான முயற்சிகளில் பயனெதுவும் இல்லை என்று விடுதலைப் புலிகள் தரப்பு அறிவித்த பின…
-
- 1 reply
- 942 views
-
-
பொதுமக்கள் மீது சிறிலங்கா அரசு தாக்குதல் நடத்த முடியாது: இணைத்தலைமை நாடுகள் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் நடத்தும் தாக்குதல்களை சிறிலங்கா அரசு நடத்த முடியாது என்று இணைத் தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகள் தரப்பு மக்களைக் கவசமாகப் பயன்படுத்தினாலும் சிறிலங்கா அரசு மக்கள்மீது தாக்குதலை நடத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இணைத் தலைமை நாடுகள் சார்பில் ஜெர்மன் தூதுவர் ஜர்கன் விரீத் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு-கிழக்கில் எதிர்நோக்கும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து சிறிலங்கா மனித உரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடனும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவ…
-
- 0 replies
- 709 views
-
-
சுதந்திர தனியரசை எதிர்பார்க்கும் புலிகல் - ஏற்கனவே அவர்கள் தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும்- ஏஎப்பி [Wednesday November 29 2006 11:05:36 AM GMT] [யாழ் வாணன்] தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் மாவீரர் உரையினை தொடர்ந்து தென்னிலங்கை மற்றும் ஊடகங்களில் பல்வேறு விதமான சலசலப்பிணை எதிர்நோக்கியிருக்கும் இந்த வேளையில் ஏஎப்பி செய்தி வழங்கும் நிறுவனம் தனது ஆய்வறிக்கை ஒன்றில் விடுதலைப்புலிகள் தமக்கு சுதந்திர தனி நாடு என கோருகின்ற போதும் ஏற்கனவே அவர்கள் தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும் விடுதலைப்புலிகளின் தலைவரின் உரையில் பெரும்பாண்மையினை மக்களின் பிடிய்ல் இருந்த் சுதந்த…
-
- 1 reply
- 1.8k views
-
-
புலனாய்வுத் தகவல்களை பின்னரே தூதுவர்களையும் நாட்டுக்குள் அனுமதிப்போம் - சிறிலங்கா அரசாங்கம். ஆயுத பிணக்குகளில் பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு அண்மையில் சிறி லங்காவுக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுவர் அலன் றொக் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செயற்பட்டமையினால் இனிமேல் இத்தகையவர்கள் சிறி லங்கா வரும் முன்னர் அவர்கள் குறித்து புலனாய்வுத்தகவல்களை பெறவுள்ளோம். இதன் பின்னரே நாட்டுக்குள் அவர்களை அனுமதிப்பது குறித்து தீர்மானிப்போம் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இ…
-
- 1 reply
- 1.2k views
-
-
திருமலையில் நிலக்கரி மின்சார நிலையம் அமைக்க இலங்கை - இந்தியா விரைவில் உடன்படிக்கை. 500 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலக்கரி மின்மையம் ஒன்றை திருகோணமலையில் அமைப்பது தொடர்பாக இந்தியாவுடன் உடன்படிக்கை ஒன்று செய்துக்கொள்ளப்படவுள்ளது. இந்தியாவின் நிலக்கரி மின்மைய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபைகளுக்கு இடையில் இந்த உடன்படிக்கை அடுத்த மாதம் கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த உடன்படிக்கை தொடர்பாக வெற்றிகரமாக இடம்பெற்றுவருவதாக இந்திய நிலக்கரி மின்மைய கூட்டுத்தாபன தலைவர் டி.சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார். இதன் படி மின்மையத்தை இலங்கையில் அமைப்பதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது http://www.pathivu.com/index.php…
-
- 0 replies
- 885 views
-
-
ஐ.நா சபையின் சபையின் பல்கலைக் கழகங்கள் சபையின் பிரதிநிதியாக ஜயந்த தனபால நியமனம்.அரசாங்க சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிங்களத்தின் தலைசிறந்த ராஜதந்திரிகளில் ஒருவருமான ஜயந்த தனபால ஐக்கிய நாடுகள் சபையின் பல்கலைக் கழகங்கள் சபையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கான இறுதி வாக்கெடுப்பின் போது நமீபியாவின் ஜேர்மனிக்கான தூதுவராக செயற்பட்ட கட்ஜாவியை வெற்றிகொண்டு இந்தப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இலங்கை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் கடமையாற்றும் ஜயந்த தனபால ஈராக்கில் அணு ஆயுதங்கள் குறித்து ஆராய ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட குழுவிற்கும் தலைமை தாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள…
-
- 0 replies
- 716 views
-
-
மூடிய அறையில் ரவிராஜ் படுகொலை விசாரணை சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் ரவிராஜின் மரணம் தொடர்பான விசாரணைகளை மூடிய அறைக்குள் நடத்துவதற்கு கொழும்பு மேல திக நீதிவான் நீதிமன்றம் தீர்மானித்தது. குற்றப் புலனாய்வுப் பொலிஸார் விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த முடிவுக்கு நீதிமன்றம் வந்தது. இந்த விசாரணைகளுக்குப் பத்திரிகை யாளர்களையும் அனுமதிக்கக் கூடாது எனக் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் கோரியமையை அடுத்து, விசாரணை பற்றிய செய் தியைச் சேகரிக்கப் பத்திரிகையாளர்களுக் கும் தடை விதிக்கப்பட்டது. நேற்றுக் கொழும்பு மேலதிக நீதிவான் எம்.வை. மொஹமட் இஸ்ஸடீன் முன்னிலை யில் பகிரங்க நீதிமன்றத்துக்குப் பதிலாக நீதிவானின் அறையில் இந்த மரண விசா …
-
- 1 reply
- 1.1k views
-
-
ஏ9 பாதை பற்றிய மஹிந்தவின் புதிய அறிவிப்பு பொருள்களின் விலையை மேலும் அதிகரித்துள்ளது புலிகள் வன்முறையைக் கைவிடும் வரை ஏ9 பாதையை திறக்கப் போவதில்லை என இந்தியாவில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் நடைபாதை கடைகளில் பொருள் களின் விலைகள் இதுவரை இருந்ததைவிட பல மடங்காக அதிகரித்துள்ளது. நடைபாதைக் கடைகளில் முன்னர் ரூபா 120 இற்கு விற்பனை செய்யப்பட்ட நுளம்புத்திரி நேற்றுமுன்தினம் 200 ரூபா முதல் 250 ரூபா வரையும், டைமன் பால்மா 600 ரூபாவாகவும், அங் கர் 320 ரூபாவாகவும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதேசமயம் சிறிய ரக பற்றறிகள் 10 ரூபாவாலும் பெரிய பற்றறிகள் 20 ரூபாவாலும் அதிகரித்திருந்தது. முன…
-
- 0 replies
- 882 views
-
-
தமிழீழமே தீர்வு: பிரபாகரன்....! ---------------------------- தமிழீழமே தீர்வு. வேறு வழி யில்லை என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். தமிழ் ஈழத்திற்கு அனைத்துலக சமூகமும் தமிழ் நாடும் ஆதரவு தர வேண்டும் என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்தார். சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை. எனவே எமது விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரிக்குமாறு அனைத்துலக சமூகத்தினை யும், நீதியினை மதிக்கும் உலக நாடுகளையும் நாம் கேட்டுக் கொள்கின்றோம். தங்களது ஆதரவுக் குரலினை வழங்கி வரும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது முயற்…
-
- 4 replies
- 1.8k views
-
-
அடுத்த வருடம் தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்று, தமிழீழ தாயகப் பிரதேசங்கள் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு, தமிழீழ தனியரசை அமைக்கும் இலட்சியப் பாதையில் தமிழினம் வீறுநடைபோடும் என, தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். thanks to www.ibctamil.co.uk
-
- 1 reply
- 1.6k views
-
-
நோர்வேயின் விசேட தூதுவர் போவர் அவசரமாக நாளை கொழும்பு விரைவு நோர்வேயின் விசேட தூதுவர் ஹன்சன் போவர் அவசர அவசரமாக நாளை கொழும்புக்கு வருகிறார். அவர் கொழும்புக்கு விரையும் தகவலை நோர்வேயின் தூதரகப் பேச்சாளர் எரிக் நியும் பேக் ஊர்ஜிதம் செய்தார். நேற்றுமுன்தினம் மாவீரர் தின உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வெளியிட்டுள்ள கருத்துக்களினால் உரு வாகியுள்ள புதிய சூழ்நிலையை அடுத்து உருவாகியுள்ள தற்போதைய கள நிலைமை குறித்து ஆராயவே நோர்வேயின் விசேட தூதர் ஹன்சன் போவர் அவசரமாக இங்கு வருகிறார். யுத்தநிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கான அறிவிப்பாக பிரபாகரனின் உரையை நோர்வே கருதுவதாகவும் நிலைமையை நேரில் அறிய அவர் நாளை அவசர விஜயம் மேற்கொள்கின்றார் என்று…
-
- 0 replies
- 973 views
-
-
சர்வதேச சமூகத்தின் மீதும் வீழ்கிறது குற்றப் பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரை, தமிழர் தாயகத்தில் மட்டுமல்ல, இலங்கைத் தீவிலும், சர்வதேச மட்டத்திலும் பலத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தாலும் தமிழர் தரப்பில் இந்த அறிவிப்பு முன்னரே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். ""சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனி யரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக் களுக்குத் திறந்து வைத்திருக்கின்றது. எனவே, இந்த விடு தலைப் பாதையிற் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் தீர்க்கமான முடிவு செய் திருக்கின்றோம்.'' - என்று "வெட்டு ஒன்று துண்டு இரண் டாக' தலைவர் பிரபாகரன் போட்டுடைத்து அறிவிப்பார் என - …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத்தமிழர் பிரச்சினை: இந்தியாவின் நிலை என்ன? "ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமையும், இந்திய அரசின் கடமையும்" என்னும் தலைப்பில் கடலூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் உள்ள சிங்கள அரசு, அத்தீவில் வாழும் பூர்வீக மக்களான 30 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைப் பூண்டோடு அழிக்கும் படுகொலையில் திட்டமிட்ட வகையில் மூர்க்கத்தனமாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தப் படுகொலையை (ழுநnடிஉனைந)த் தடுக்க அய்.நா. உள்பட எந்த அமைப்பும் நடவடிக்கை எடுக்க வில்லை என்பது பெரும் வேதனைக்குரியதாகும். ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற உரிமை படைத்த இந்திய அரசும் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கைகளை எடுக்காததோடுஇ அதன் அணுகுமுறை இலங்கைப் பேரினவாத அரசுக…
-
- 2 replies
- 1.8k views
-
-
இலங்கையில் தனிநாடு ஒன்று அமைக்கப்படுவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்க போவதில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்தார். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரைத் தொடர்பாகவே அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினைத் தொடர்பில் இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை காணவேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு எனவும் அவர் கூறினார். விசேட தேவையுடையோருக்காக அமெரிக்க யு.எஸ் எய்ட் நிறுவனம் இங்கிலாந்தை தலைமையகமாக கொண்ட மோட்டிவேசன் சரிட்டபல் ட்ரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து நிதியுதவியளிக்கும் கட்டங்களுக்கான விசேச நிர்மாண உதவி திட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்தே போதே …
-
- 8 replies
- 2.1k views
-