ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
ஞாயிறு 17-09-2006 18:03 மணி தமிழீழம் [நிலாமகன்] கிழக்கு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய கப்பல் ஒன்றை தாக்கியழித்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினர், விமானப் படையினரின் உதவியுடன் இக்கப்பலை தாக்கியழித்ததாக தெரிவித்துள்ளனர். எனினும் இதனை எம்மால் உறுதி செய்யமுடியவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 100 replies
- 17.8k views
-
-
:arrow: [url=http://www.thinakkural.com/news/2006/9/19/images/news/front-S.jpg]முகமாலை மோதல்களின் போது லொறிகள் சேதமடைந்த நிலையில்... கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி முகமாலை பகுதியில் ஏற்பட்ட மோதல்களின் போது பொருட்களுடன் இராணுவ சோதனைச் சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாழ். வர்த்தகர்களுக்கு சொந்தமான லொறிகள் சேதமடைந்த நிலையிலும் தீக்கிரையாக்கப்பட்ட நிலையிலும் நிற்பதைக் காணலாம். ...
-
- 2 replies
- 1.5k views
-
-
மூதூர் மக்களின் நையப்புடைப்பிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார் விமல்வீரவன்ச இன்று காலை 11 மணியளவில் மூதூர் அல்ஹிலால் ஆண்கள் பாடசாலையில் ஜனாதிபதி செயலகத்தால் வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவம் ஏற்பாடாகியிருந்தது. மாவிலாறு அணை மீட்புப் போரில் மூதூரில் பலியான 56 பேருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் முகமாக ஜனாதிபதிபதியின் ஆலோசகர் பஷில் ராஜபக்ச தலைமையில் அமைச்சர் பௌசி, மேல்மாகாண ஆளுநர் அலரி மௌலானா, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிறேம்லால், மற்றும் அமீர் அலி, கூட்டுறவு அமைச்சர் மஜீத் ஏ மஜீத் மற்றும் விமல் வீரவன்ச, வடகிழக்கு மாகாண ஆளுனர் றியரத்ன றொஹான் விக்கிரம மற்றும் திருமலை அரச அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா ஆகியோர் சென்றிருந்தனர் அங்கு உரையாற்றிய விமல் …
-
- 2 replies
- 2k views
-
-
இலங்கை இராணுவ வீராங்கனையும் சகோதரியும் பலி! அவிசாவளையில் சம்பவம் அவிசாவளை, தெஹியோவிட்ட, தெபேகம பகுதியில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் இனந்தெரியாத நபரொருவர் வீடொன்றின் மீது மேற்கொண்ட கைக்குண்டு வீச்சுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தெஹியத்தக்கண்டி இராணுவ முகாமில் பணியாற்றும் பெண் இராணுவ வீரõங்கணையான நேகிலதா (வயது 28) மற்றும் அவரது சகோதரி சீதா பத்மினி (வயது 30) ஆகியோரே மேற்படி கைக்குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகிப் பலியானவர்களாவர். ஒரே அறையில் உறங்கிக்கொண்டிருந்த இவ்விருவர் மீதும் அங்கு வந்த இனந்தெரியாத நபரொருவர் கைக்குண்டை வீசிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளார். கைக்குண்டு கட்டிலில் வீழ்ந்து வெடித்ததில் இர…
-
- 0 replies
- 1.8k views
-
-
சிவராம் எழுதிய கட்டுரை தற்காலத்திற்கும் பொருந்தும் இராணுவத் தீர்வின் மீது மீண்டும் ஆசைகொள்ளும் சிங்களதேசம் டி.சிவராம் (தராக்கி) சிங்கள அரசியல்வாதிகள், கருத்தியலாளர்கள் பத்தி எழுத்தாளர்கள் எனப் பலரும் தற்போது ~உலகின் அரசியல் இராணுவச் சூழல் புலிகளுக்கு எதிரானதாகவே காணப்படுகிறது. எனவே அவர்கள் (புலிகள்) கட்டுப்படுத்தப்பட வேண்டும்| என பரவலாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். அண்மைக் காலங்களில் எந்தவொரு கிழமையிலும் சிங்கள, ஆங்கில செய்தித்தாள்களைப் புரட்டிப் பார்த்தால் புலிகள் மீது சிறிலங்கா அரசு கடும்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், கருணா குழுவின் செயற்பாடுகளால் புலிகள் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனவும், எந்த போரியல் நகர்வையும் மேற்கொள்ள முடியாதபட…
-
- 0 replies
- 1.2k views
-
-
போர் தீவிரமாகப் போகும் நாளும் அதனை ஒத்திவைப்பதற்கான பிரயத்தனங்களும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலும் தென்னிலங்கையிலுமாக ஒட்டுமொத்தமாக இலங்கைத்தீவு முழுவதும் நாளாந்தம் படுகொலைகளும் ஆட்கடத்தல்களும் இடையறாது நடந்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தொடரும் இந்த பயங்கரவாதத்தில் பலியாகிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் தமிழ் பேசும் மக்களேயாவர். இதில் இருந்து இதற்கான சூத்திரதாரிகள் யார் என்பதை தெளிவாக அடையாளம் கண்டுவிட இயலும். இதனைத் தமிழ் மக்கள் புரிந்துகொள்வதற்கு எந்த விசாரணைக்குழுக்களும் தேவையில்லை. நாளாந்தம் ஐந்து அல்லது ஆறு பேர் என்ற கணக்கில் தமிழினக் குறைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது கடந்த திங்களன்று அம்பாறையில் பத்து முஸ்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சம்பூரில் கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா திருகோணமலையின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இது தொடர்பாக சிறிலங்கா இராணுவ பேச்சாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், விமானப் படைத் தளபதி டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்டோர் நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை சம்பூர் மற்றும் மாவிலாறு பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி வரும் திருகோணமலையின் தென்பகுதியின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து இராணுவத்தினருடன் இக்குழு ஆராய்ந்தது. திருமலையின் பாதுகாப்பு நிலைமைகள் …
-
- 0 replies
- 1.3k views
-
-
உயிர் பிழைத்த நபரை சந்தித்தனர் கண்காணிப்புக் குழுவினர் அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நிகழ்த்திய படுகொலைச் சம்பவத்தில் உயிர்பிழைத்த நபரை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் நீண்ட போராட்டத்தின் பின்னர் நேற்று சந்தித்தனர். அம்பாறை பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரீம் மீரா மொகெய்தீன் என்கிற அந்நபருக்கு தொண்டையில் ஏற்பட்ட கடும் வெட்டுக்காயங்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வரும் மீரா மொகெய்தீன் வாக்குமூலம் கொடுத்ததாக கூறியதையடுத்து கண்காணிப்புக் குழுவினர் அவரை கடந்த புதன்கிழமை சந்திக்க முயற்சித்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து பலத்த சந்தேகம் எழுப்பப்பட்டது. இந்நிலையில் அந்நபர…
-
- 0 replies
- 1.1k views
-
-
மூதூரிலிருந்து முஸ்லிம்கள் உடன் வெளியேறுக - தாயக மண் மீட்புப் படை திருமலை இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு மூதூர் பகுதியிலிருந்து அனைத்து முஸ்லிம்களை வெளியேறுமாறு தாயக மண் மீட்புப் படை இன்று அறிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மூதூர்ப் பகுதிகளை கைப்பற்ற இருப்பதால் அனைத்து முஸ்லிங்களும் அப்பகுதிகளை விட்டு வெளியேறுமாறு தாயக மண் மீட்புப் படை வெளியிட்ட துண்டுப் பிரசுரத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 7 replies
- 2.5k views
-
-
லண்டனிலும் எல்லைமீறிய இலங்கை அரச பயங்கரவாதம் - பிரித்தானிய தமிழ் கவுன்சிலர் அமைப்பை தலமை தாங்கி தாயக பரப்புரையில் ஈடுபடும் பிரித்தானிய தமிழ் கவுன்சிலஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்கும் அதன் தலைவர் தயா இடைக்காடருக்கும் இலங்கை அரசு பகிரங்க மிரட்டலை விடுத்துள்ளது. http://nitharsanam.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரணில் முன்மொழிந்த புலிகளுக்கு எதிரான சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் மஹிந்த சிந்தனைக்குள் பின் கதவால் எப்படி வந்தது?
-
- 9 replies
- 2.6k views
-
-
பொத்துவில் படுகொலை தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை [வெள்ளிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2006, 05:50 ஈழம்] [கொழும்பு நிருபர்] அம்பாறை பொத்துவில் படுகொலை தொடர்பாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் விசாரணைகளை மேற்கொள்கிறது. இது குறித்து மனித உரிமைகள் ஆணையத்தின் கூடுதல் செயலாளர் நிகால் புஞ்சிகேவ கூறியதாவது: அம்பாறை மற்றும் கல்முனை பிரதேச மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் பொத்துவிலில் விசாரணைகளை நடத்த அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரு அலுவலகங்களுடன் இணைந்து முழு அளவில் விசாரணை நடத்தப்படும். இப்படுகொலை தொடர்பிலான சிறிலங்கா இராணுவம் மற்றும் பொதுமக்களின் செயற்பாடுகள் உள்ளிட்டவைகளை ஆராய்ந்து வருகிறோம் http://www.eelampage.com/?cn=28916
-
- 1 reply
- 1k views
-
-
யாழில் ஒரே நாளில் 5 பொதுமக்கள் படுகொலை யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 5 பொதுமக்கள் நேற்று வியாழக்கிழமை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வலிகாமம் பகுதியில் பேரம்பலம் நவக்குமார் (வயது 27), செல்லத்துரை கார்த்தீஸ்வரன் (வயது 36), ஐயாத்துரை குமாரகுலசிங்கம் (வயது 41) ஆகியோர் சந்தைக்கு ஈருருளியில் சென்றனர். ஆனால் மூவரும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து மூவரையும் உறவினர்கள் தேடியபோது கைவிடப்பட்ட நிலையில் அவர்களது ஈருருளிகள் காணப்பட்டன. அதன் பின்னர் அளவெட்டி பெரியவிளான் சிறிலங்கா முன்னரங்க காவலரண் பகுதியில் நேற்று மாலை மூவரது உடல்களும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன. மல்லாகம் மாவட்ட நீதிபதி சரோஜினி இளங்கோவன் சம்பவ இடத்துக்குச் சென்று உடல்களைப் பார…
-
- 1 reply
- 973 views
-
-
பனாமா, ஹொன்டூராஸ் நாடுகளில் பதிவு செய்யப்பட்ட புலிகளின் கப்பல் விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் தற்காலத்துக்கேற்ற அதிநவீன தொழில்நுட்பங்களுக்கேற்ப தயாரிக்கப்பட்ட 11 நவீன கப்பல்கள் உள்ளன எனவும் இவை சர்வதேச கடற்பிராந்தியங்களில் போக்குவரத்துச் செய்து வருவதாகவும் சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் காப்புறுதி ஸ்தானபமாகிய சர்வதேச லோயிட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும் லோயிட் லிஸ்ற் (Loyds List) அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது. ஆசிய ப் பிராந்திய நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பல்வேறு கப்பல் நிறுவனங்கள் தொடர்புடையவை எனவும் இந்த நிறுவனங்களின் சர்வதேச கப்பல் போக்குவரத்து செயற்பாடுகளின் கீழே மேற்படி விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான கப்பல்கள் சர்வதேச கடற்பிராந…
-
- 1 reply
- 2.3k views
-
-
யாழ். கிளைமோரில் இரு சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயம் யாழ். கிளைமோர் தாக்குதலில் இரு சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். வலிகாமம் கிழக்கில் நேற்று வியாழக்கிழமை காலை வீதி சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலைத் தொடர்ந்து அச்சுவேலி, நவக்கிரி, நிலாவரை ஆகிய பகுதியில் பாரிய தேடுதல் நடவடிக்கைகள நேற்று காலை முதல் பிற்பகல் வரை மேற்கொண்டனர். தேடுதல் நடவடிக்கையின் போது சிறிலங்கா இராணுவத்தினர் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தாக்குதல் நடத்தியோர் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய…
-
- 0 replies
- 889 views
-
-
"சம்பூரை ஆக்கிரமிக்க 2 ஆயிரம் பேர்- தக்க வைக்க 20 ஆயிரம் பேர்" சிறிலங்கா இராணுவத்தினர் 2 ஆயிரம் பேர் சம்பூரை ஆக்கிரமித்திருக்கலாம் ஆனால் அதனைத் தக்க வைக்க 20 ஆயிரம் இராணுவத்தினர் தேவைப்படுவர் என்று சிறிலங்காவின் ஓய்வுபெற்ற ஏர் மார்சல் ஒருவரை மேற்கோள்காட்டி "இந்துஸ்தான் ரைம்ஸ்" கட்டுரை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 25 ஆண்டுகாலமாக தமிழ் கிளர்ச்சியாளர்களுடன் நீடித்து வரும் இராணுவ ரீதியான யுத்தத்தால் சிறிலங்காவில் இருந்த அரசாங்கங்கள் அனைத்தும் தெற்காசியாவிலேயே பாரிய அளவில் இராணுவ மயமாக்கப்பட்ட ஒருநாடாக சிறிலங்காவை உருவாக்கி உள்ளன. இந்த நிலைமைக்கு சிறிலங்கா அரசாங்கங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்…
-
- 0 replies
- 935 views
-
-
வியாழன் 21-09-2006 13:44 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழில் சிறீலங்காப் படையினரால் பாகிஸ்தான் ஆயுதங்கள் பாவனையில். பலாலி படைத்தலைமையகம் உட்பட ஊரெழு யாழ்ப்பாணம் கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக ஏவப்படும் ஆட்லெறிகள் மற்றும் பல் குழல் ஏவுகனைகளின் சத்தம் வேறுபட்டுக் காணப்படுவதாக பொதுவாக பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். கடந்த வாரத்தில் பாகிஸ்தான் நாட்டில் இருந்த எடுத்து வரப்பட்ட ஆயுதங்களில் ஒரு பகுதியான ஆயுதங்களை படைத்தரப்பினர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்பதை இந்த சத்தத்தின் வேறுபாடுகள் எடுத்துக் காட்டுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். கடந்த இரண்டு நாட்களாக வழமைக்கு மாறாக பலத்த எறிகனை வீச்சுக்கள் இரவு முழுவதும் வன்னிப் ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
வியாழன் 21-09-2006 15:34 மணி தமிழீழம் [மயூரன்] ஈழத் தமிழர்களுக்கு பாதிப்பென்றால் அதனை தட்டிக்கேட்க 6 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் - வைகோ எந்த பாதிப்பு வந்தாலும் ஈழத்தமிழரை ஆதரிப்போம் அவர்களுக்கொன்று என்றால் அதைத் தட்டிக்கேட்பதற்கு ஆளில்லை என்று நினைக்க வேண்டாம். அவர்களுக்கா ஆறுகோடி தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்று ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார். கரூர் மாவட்ட ம. தி. மு. க. செயல் வீரர்கள் கூட்டம் கொங்கு திருமண மன்றத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் மா. கட்டையன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்டு ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது, இப்போது தமிழ்நாட்டில் நடைபெறுகிற தி. மு. க. அரசு மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. மாறாக…
-
- 0 replies
- 931 views
-
-
வியாழன் 21-09-2006 15:38 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்பில் கடத்தப்பட்ட வைத்தியர் கெக்கிராவ பகுதியில் விடுவிப்பு. கொழும்பு, புளூமென்டல் வீதியில் வைத்து கடந்த திங்கட்கிழமை இனந்தெரியாத நபர்களினால் கடத்திச்செல்லப்பட்ட தமிழ் வைத்தியரான முருகேசு குணாளன் (வயது 51) நேற்றுமுன்தினம் இரவு கெக்கிராவ பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்ததாவது: கடந்த திங்கட்கிழமை பகல் வேளையில் கொழும்பு 11, புதுச்செட்டித்தெருவிலுள்ள தனது மருத்துவ நிலையத்திலிருந்து கொட்டாஞ்சேனை, ஜோர்ஜ் ஆர். டி. சில்வா வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த மேற்படி வைத்தியர், ஆயிரம் ரூபாவிற்கு காருக்கு பெற்றோல் நிரப்பியுள்ளார். பின்னர், பு…
-
- 0 replies
- 772 views
-
-
வியாழன் 21-09-2006 14:21 மணி தமிழீழம் [மயூரன்] பயங்கரவாதத்திற்கான சில காரணங்களை இராணுவ ரீதியில் அழிக்கமுடியாதென ஜனாதிபதி தெரிவிப்பு. பயங்கரவாதத்திற்கான சில காரணங்களை இராணுவ ரீதியில் அழிக்கமுடியாதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தமிழிழ விடுதலைப்புலிகளுடன் நேரடியாகவோ அல்லது அணுசரணையாளர்களின் உதவியுடனோ பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொது அவையில் நேற்று உரையாற்றிய அவர். தமிழPழ விடுதலைப்புலிகள் ஜனநாயக வழிக்கு திரும்புவர் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழிழ விடுதலைப்புலிகள் தமது நலத்திற்காக தமிழ் மக்களின் நீதியான நிலைப்பாடுகளை பிழையான வழியில் முன்கொண்டு செல்வதாக அவர் …
-
- 0 replies
- 676 views
-
-
அம்பாறையில் தொடரும் முழு அடைப்புப் போராட்டம் [வெள்ளிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2006, 05:40 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து அம்பாறை மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமையும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் சம்பாந்துறை ஆகிய பிரதேசங்களில் முழு அளவிலான போராட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே சாஸ்திரவெளி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி எஸ்.என்.குணரத்னவும் மாற்றப்பட்டுள்ளார். http://www.eelampage.com/?cn=28913
-
- 0 replies
- 687 views
-
-
ஐ.தே.க.- சு.க.இணைந்து செயற்பட துணைக்குழு அமைப்பு [வெள்ளிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2006, 05:44 ஈழம்] [கொழும்பு நிருபர்] ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை இணைந்து பொதுச்செயற்திட்டத்தில் செயற்படுவதற்காக துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நியமனத்தை கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜி.எல்.பீரீஸ் நேற்று வியாழக்கிழமை அறிவித்தார். ஜி.எல்.பீரிஸ் கூறியதாவது: ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 3 பேர் வீதம் இக்குழுவில் மொத்தம் 6 பேர் இடம்பெற உள்ளனர். கடந்த செப்ரெம்பர் 19 ஆம் நாள் இரு கட்சிகளிடையேயான பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இத்துணை விவாதித்து ஒருமித்த கருத்தை உருவாக்கும். …
-
- 0 replies
- 794 views
-
-
தமிழ்ச்செல்வனுடன் இன்று பிறட்ஸ்கர் சந்திப்பு [வெள்ளிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2006, 05:48 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசுகிறார். கிளிநொச்சியில் நடைபெறும் இச்சந்திப்பில் அண்மைய இணைத்தலைமை நாடுகள் கூட்டத்தின் செய்தி தெரிவிக்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது. பிரசெல்ஸில் நடைபெற்ற இணைத் தலைமை நாடுகள் கூட்ட முடிவில் சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் நிபந்தனையற்ற பேச்சுக்கு தயாராக உள்ளதாகவும் ஒக்டோபரில் ஓஸ்லோவில் பேச்சுக்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இதனை நிராகரி…
-
- 0 replies
- 641 views
-
-
எம்.கே.நாராயணனுடன் த.தே.கூ. உறுப்பினர்கள் சந்திப்பு [வெள்ளிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2006, 00:22 ஈழம்] [ம.சேரமான்] இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று வியாழக்கிழமை புதுடில்லியில் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எம். சிவாஜிலிங்கம் புதுடில்லியிலிருந்து கூறியதாவது: தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் அடங்கிய குழுவினர் புதுடில்லியில் இந்திய வெளிவிவகார இணை …
-
- 0 replies
- 792 views
-
-
பாகிஸ்தான் இராணுவ உதவியால்தான் அமைதிப் பேச்சுக்களிலிருந்து சிறிலங்கா விலங்குகிறது: இந்திய அதிகாரிகள் பாகிஸ்தான் இராணுவ உதவியால்தான் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பான அமைதிப் பேச்சுக்களிலிருந்து சிறிலங்கா விலகிச் செல்லுகிறது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவிப்பதாக "ஏசியா ரைம்ஸ்" ஓன்லைன் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் தமிழ் வடிவம்: சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வரும் நிலையில் இலங்கையின் உள்நாட்டுப் போர் தொடர்பாக பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொழும்பில் தனது தூதரக அதிகாரியை கொல்ல இந்திய உளவு நிறுவனம் முயற்சி…
-
- 0 replies
- 714 views
-