ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது குறித்து பரிசீலிப்பதற்கு, மூன்று நிபந்தனைகளை சிறீலங்கா அரசாங்கம் விதித்துள்ளது. இது குறித்து சமாதான முன்னெடுப்புக்களுடன் தொடர்புடைய சிறீலங்கா அரசாங்க உயர்மட்டத்தினரை மேற்கோள் காட்டி, இன்று செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டிருக்கும் சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு, பயங்கரவாதத்தைக் கைவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டு, படையணிகளில் இருந்து சிறுவர்களை விலக்கும் போது மட்டுமே, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு, அதிபர் ராஜபக்சவால், ரோக்கியோ இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்களிடம்…
-
- 3 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் முடிவடையும் பொதுமன்னிப்புக் காலத்திற்குள் சரணடையாத சேவையிலிருந்து தப்பியோடிய கடற்படையினரை கைது செய்வதற்கென நாடளாவிய ரீதியில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா கடற்படை அதிகாரி சோமதிலக்க திசாநாயக்க தெரிவித்துள்ளார். சேவையை விட்டுச் சென்றமைக்காக எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்காது அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் கால அவகாசத்தை மேலும் நீடிக்கப் போவதில்லை என்பதால் இந்தக் காலப்பகுதியில் சேவையில் இணைந்து கொள்வதே மதிநுட்பமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.eelampage.com/?cn=28398
-
- 3 replies
- 1.4k views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இன்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைகின்றன. அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் இரு கட்சிகளுக்கும் அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவுள்ளன. அரசாங்கத்துடன் இணையும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு ஒரு அமைச்சர் பதவியும் இரு பிரதி அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவுள்ளன. இதேபோன்று மலையக மக்கள் முன்னணிக்கு அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளது. இ.தொ.கா. சார்பில் அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இளைஞர் விவகார, சமூக, அபிவிருத்தி அமைச்சராகவும் முத்து சிவலிங்கம் பிரதி தேசிய அபிவிருத்தி அமைச்சராகவும் எம்.சச்சிதானந்தன் பிரதிக்கல்வி அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளனர். மலையக மக்கள் முன்னணியின் சார்பில் அ…
-
- 1 reply
- 936 views
-
-
உலக கல்வித் தலைமையகம், செஞ்சோலை வளாக படுகொலையைக் கண்டித்துள்ளது [வெள்ளிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2006, 01:09 ஈழம்] [காவலூர் கவிதன்] கிட்டத்தட்ட 166 நாடுகளின் கல்விச் சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 29 மில்லியனுக்கும் அதிகமான ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்விச்சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய, உலக கல்விவளர்ச்சிக்கான அமைப்பு, முல்லைத்தீவில் இடம்பெற்ற மாணவிகள் படுகொலையை வன்மையாகக் கண்டித்துள்ளது. உலக நாடுகளில் கல்விபெறும் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசான்களின் உரிமையையும் பாதுகாப்பதற்கான அமைப்பாக, ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகள் உட்பட, உலகின் பல்வேறு நாடுகளிலும் அலுவலகங்களைக் கொண்டு இயங்கும் இந்த கல்வி அமைப்பு, பாடசாலை மாணவிகளை திட்டமிட்டு படுகொலை செய்த சி…
-
- 0 replies
- 798 views
-
-
தொடரும் `படகு அகதிகளின்' அவலம் * முதல்நாள் திருமணம், மறுநாள் மனைவியை கடலில் பலிகொடுத்த இளைஞனின் பரிதாபம் தலையில் பயணப் பெட்டியுடனும் கையில் பிளாஸ்ரிக் பையுடனும் தமது தாய் நாட்டிலிருந்து மோதிச் சிதறும் அலைகளூடாக கடும் சிரமத்துடன் இலங்கை அகதிகள் இந்தியக் கரைகளை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் அலைகள் மத்தியில் அவர்களை ஏற்றி வந்த மங்கலான சிறிய மீன்பிடிப் படகு நிற்கிறது. இலங்கையரை சுமந்துவரும் படகுகள் தென்னிந்தியக் கரையோரங்களுக்கு ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு வருபவர்கள் தமது பயணத்திற்கு நகைகளை விற்று பணம் செலுத்தியதுடன் தமது நிலங்களையும் மீன்பிடிப் படகுகளையும் விட்டு விட்டே வருகின்றனர். மோதலின் காரணமான பயத்த…
-
- 0 replies
- 808 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத் தடை பாரதூரமான தவறு: உல்ப் ஹென்றிக்சன் சாடல் [வியாழக்கிழமை, 24 ஓகஸ்ட் 2006, 16:37 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறை சூழ்நிலைக்கு விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையே காரணம் என்று ஓய்வுபெற்றுச் செல்லும் யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் குற்றம்சாட்டியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரேத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: "விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் மே மாதம் தடை செய்வதாக அறிவித்திருந்தது. அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே நாம் ஐரோப்பிய ஒன்றியத்துக…
-
- 0 replies
- 745 views
-
-
புலிகளுடன் பேச்சுக்களை நடத்த 3 நிபந்தனைகள் அரசாங்கத்தால் முன்வைப்பு. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது குறித்து பரிசீலிப்பதற்கு, மூன்று நிபந்தனைகளை சிறீலங்கா அரசாங்கம் விதித்துள்ளது. இது குறித்து சமாதான முன்னெடுப்புக்களுடன் தொடர்புடைய சிறீலங்கா அரசாங்க உயர்மட்டத்தினரை மேற்கோள் காட்டி, இன்று செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டிருக்கும் சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு, பயங்கரவாதத்தைக் கைவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டு, படையணிகளில் இருந்து சிறுவர்களை விலக்கும் போது மட்டுமே, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் …
-
- 0 replies
- 1.2k views
-
-
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி - கட்டைக்காடு ஆகிய பகுதிகளில், சிறீலங்கா வான்படையின் கிபீர் மிகையொலி விமானங்கள் அரக்கத்தனமான குண்டு வீச்சுக்களை மேற்கொண்டுள்ளன. இன்று காலை 8:50 மணிக்கு, வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி - கட்டைக்காடு ஆகிய வான்பரப்புக்களில் அத்துமீறி பிரவேசித்த கிபீர் விமானங்கள், மூன்று தடவைகள் குண்டுகளை வீசிச் சென்றன. இதனை தொடர்ந்து, மீண்டும் காலை 10:50 மணிக்கு குறிப்பிட்ட வான்பரப்புக்களில் பறப்புக்களில் ஈடுபட்ட சிறீலங்கா வான்படை விமானங்கள், இரண்டு தடவைகள் குண்டு வீச்சுக்களை மேற்கொண்டன. திட்டமிட்ட வகையில் பொதுமக்களையும், குடியிருப்புக்களையும் குறி வைத்து, இன்றைய வான்வழிப் பயங்கரவாதத் தாக்குதல்களை சிறீலங்கா அரசாங்கம் நிகழ்த்தியுள்ளனர். …
-
- 1 reply
- 1.3k views
-
-
பளையில் வீடுகள் மீது கடும் விமானத் தாக்குதல் பளை மற்றும் பச்சிலைப் பள்ளி பகுதிகளில் நேற்று புதன்கிழமை நண்பகல் விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. நண்பகல் 12 மணியளவில் பளை மற்றும் பச்சிலைப் பள்ளி பகுதிகளில் `கிபிர்' விமானங்கள் நடத்திய மிகக் கடும் தாக்குதலில் பல வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. படையினரின் தொடர்ச்சியான தாக்குதல்களையடுத்து மக்கள் வெளியேறிய வீடுகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் பல வீடுகள் அழிந்தன. இதேநேரம், வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளிலிருந்து பளை மற்றும் பச்சிலைப் பள்ளி பகுதிகளை நோக்கி ஆட்லறி ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
-
- 0 replies
- 903 views
-
-
இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல உணர்வின்பால் உந்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் சிலர் செய்த செயலே அமெரிக்காவில் ஆயுத விற்பனை என்ற செய்தியாக திரிவு படுத்தப்பட்டது. [வியாழக்கிழமை, 24 ஓகஸ்ட் 2006, 20:43 தமிழீழம்] [கனடா சுதாகினி] இலங்கை அரசின் பயங்கரவாதச் செயற்பாடுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்காகவே அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள உணர்வின்பால் உந்தபட்ட சில தமிழர்கள் இணைந்து செய்த செயலை ஆயுத விற்பனையாகவும் ஆயுதக் கொள்வனவாகவும் உலக ஊடகங்களும் அமரிக்க ஊடகங்களும் திரிவு படுத்த முனைந்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் உலகத்தில் 4 நாடுகளில் மட்டுமே கிபிர் விமானம் பாவனையில் உள்ளது. இந்த நான்கு நாடுகளுக்கும் அமெரி…
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னார் பேசாலையில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீது இன்று வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பேசாலை - தலைமன்னார் வீதியில் இலங்கை மீன்பிடிக்கூட்டுத்தாபனத்தி
-
- 0 replies
- 943 views
-
-
வவுனியா நாவற்குளம் பகுதி ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதியை நோக்கி முன்னேற முற்பட்ட சிறிலங்காப் படையினரின் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. பீரங்கி குண்டுத் தாக்குதல்களை இன்று வியாழக்கிழமை நண்பகல் நடத்தியவாறு படையினர் முன்னேற முற்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தியதை அடுத்து படையினர் தமது நடவடிக்கையினைக் கைவிட்டுப் பின்வாங்கியுள்ளனர்.
-
- 0 replies
- 948 views
-
-
எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் முடிவடையும் பொதுமன்னிப்புக் காலத்திற்குள் சரணடையாத சேவையிலிருந்து தப்பியோடிய கடற்படையினரை கைது செய்வதற்கென நாடளாவிய ரீதியில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா கடற்படை அதிகாரி சோமதிலக்க திசாநாயக்க தெரிவித்துள்ளார். சேவையை விட்டுச் சென்றமைக்காக எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்காது அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் கால அவகாசத்தை மேலும் நீடிக்கப் போவதில்லை என்பதால் இந்தக் காலப்பகுதியில் சேவையில் இணைந்து கொள்வதே மதிநுட்பமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். puthinam.com
-
- 1 reply
- 943 views
-
-
உலகின் முதலாவது தரை கரும்புலியும் தமிழீழத்தின் முதலாவது கரும்புலியுமான கப்டன் மில்லரின் சிலை இண்று அவர் வீரகாவியமான நெல்லியடி மத்தியமகா வித்தியாலயத்தில் இராணுவத்தால் உடைத்து சேதமாக்கபட்டது. இதற்குரிய விலையை சிங்கள தேசம் எண்றோ ஒருநாள் செலுத்தும் முதற்கரும்புலி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கரும்புலி கப்டன் மில்லரின் நினைவுருவச் சிலை சிங்களப் படைகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. பாடசாலை வளாகத்திற்குள் நேற்று புதன்கிழமை இரவு 11 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த சிங்களப் படைகள் நினைவுருவச் சிலையின் ஒரு பகுதியினை உடைத்துவிட்டுச் சென்றனர். மீண்டும் இன்று காலை நுழைந்த படையினர் ஏனைய பகுதிகளையும் அடித்து உடைத்தத…
-
- 11 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை ஆயுதக்குழுவினரால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் யாழ். கிளை அலுவலகம் நேற்று இரவு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தவேளை அடித்து நொறுக்கி எரியூட்டப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு 11 மணியளவில் அலுவலக வளாகத்திற்குள் புகுந்த சுமார் ஆறு ஆயுதபாணிகள் அங்கு கடமையிலிருந்த காவலாளியை மிரட்டி வெளியேற்றிவிட்டு அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த கணனிகள், உபகரணகங்கள், ஆவணங்கள், தரவுகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியுள்ளன. சுமார் இரண்டு மணிநேரமாக அலுவலகத்தின் அனைத்து பொருட்களையும் அழித்து நாசமாக்கிவிட்டு இறுதியில் எரியூட்டிவிட்டு சென்றுள்ளனர். அலுவலகம் எரிவதைக் கண்ட அருகாமையில் உள்ள இன்னொரு அரச சார்பற்ற அமைப்பு அலுவலகத்தினர் தீயணை…
-
- 1 reply
- 1k views
-
-
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டிற்கு, முன்னாள் அரச தலைவரும் கட்சித் தலைவியுமான சந்திரிகாவுக்கு அழைப்பு விடுக்காதமை தொடர்பாக, அனுரா பண்டாரநாயக்க, காட்டமான கடிதமொன்றை கட்சியின் பொதுச்செயலாளருக்கு எழுதியிருந்தார். கடிதத்தைப் படித்த அரச தலைவரும், கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச, கடும் கோபமடைந்ததுடன், பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறீசேனவிடம், கூச்சல் போட்டுள்ளார். கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான அனுரா பண்டாரநாயக்க எழுதிய கடிதத்திற்கு, உடனடி விளக்கம் கோரும்படி செயலாளரைக் கேட்டுள்ள மகிந்த ராஜபக்ச, எதிர்காலத்தில் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறும் யார் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
53 ஆவது படைப்பிரிவுக்கு ஏற்படும் இழப்பு சிங்களத் தரைப்படைக்கு ஏற்படும் பின்னடைவு -வேலவன்- சிங்கப்பூர் பாதுகாப்பு நிறுவனத்தின் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாத நிகழ்ச்சித்திட்டத்தின் தலைவர் கலாநிதி றொகான் குணரத்னவை 'ஐலண்ட்" நாளிதழ் 2003 இறுதியில் செவ்விகண்டது. அதில் அவர் வலுவான ஓர் இராணுவக்கட்டமைப்பு, வலுவான ஒரு புலனாய்வுச் சமூகம் ஆகியவற்றைக் கட்டியெழுப்ப முடியுமானால் இலங்கை எதிர்காலத்தில் ஒரு ஐக்கியப்பட்ட நாடாக இருக்க முடியும் எனத் தெரிவித்திருந்தார். சிறிலங்கா அரசு கொமாண்டோ தாக்குதல்கள் மற்றும் விசேட நடவடிக்கைகள் ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்பட்ட உயர்தர திறன் வாய்ந்த போர் வீரர்களை உருவாக்க முதலீடு செய்யவேண்டும் என அவர் ஆலோசனை கூறியிருந்தார். சிறிலங…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈழநாதம் நாளேட்டில் 24.08.06 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம் சிறப்புரிமை? உலகின் பல்வேறு நாடுகளிலும் பகுதிகளிலும் சில துறை சார்ந்தவர்கள் சிறப்புரிமை பெற்றவர்களாகவுள்ளனர். இதில் செஞ்சிலுவைச்சங்கத்தினர், மருத்துவத்துறையினர், மனிதாபிமான நிவாரணப் பணிகளில் ஈடுபடுபவர்கள்;, ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள், எனப் பலதுறை சார்ந்தவர்கள் உள்ளனர். ஆனால் சிறிலங்கா அரசோ அன்றி அதன் ஆயுதப்படைத்தரப்போ இத்தகைய சிறப்புரிமை எதையும் அத்துறை சார்ந்தோருக்கு வழங்குவதாக இல்லை. அதிலும் குறிப்பாகத் தமிழர் தாயகத்தில் உள்ளோருக்கு இச்சிறப்புரிமை வழங்கப்படுவதாக இல்லை. மாறாகச் சிறப்புரிமை பெறவேண்டியவர்களில் ஒரு தரப்பிரான ஊடகவியலாளர்களே சிறிலங்கா அரசினதும் ஆயுதப்படைத் தரப்பினரதும் முதல் இலக்காக…
-
- 0 replies
- 990 views
-
-
அதியுயர் பாதுகாப்பு முன்னரங்க நிலைகளில் ஒருவாரகால மோதல் -ஜெயராஜ்- தென்னாசியாவில் அதியுயர் பாதுகாப்பு முன்னரங்க நிலை எனக் கொள்ளத்தக்க பகுதியில் கடந்த 11 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரையிலான ஒருவார காலப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற மோதல்களில் இதுபோன்று ஒழுங்கமைக்கப்பட்டதும், பலப்படுத்தப்பட்டதுமான முன்னரங்கப்பகுதியில் மோதல்கள் இடம்பெற்றதி;ல்லை எனக்கூறின் மிகையாகாது. சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பல முன்னரங்க நிலைகளில் கடும் சமர்கள் இடம்பெற்றதுண்டு இதில் 1998 இல் கிளிநொ…
-
- 0 replies
- 1k views
-
-
விமானக் குண்டுகளை வீசியோ அல்லது பல்குழல் பீரங்கியால் தாக்கியோ அல்லது பட்டினி போட்டோ தமிழர்களை அடக்கி ஒடுக்கி விடலாமென அரசு நினைத்தால் அது பகற்கனவாகவே முடியும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. மாவை சேனாதிராஜா நேற்று சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தை ஆரம்பித்து வைத்துப் பேசும்போது தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் கூடியது. விவாதத்தைத் தொடக்கி வைத்துப் பேசு கையில் அவர் கூறியதாவது: வடக்கு கிழக்கில் இப்போது மனித அவலங்கள் மலிந்து விட்டன. ஒரு லட்சத்து 58 ஆயிரம் தமிழ், முஸ்லிம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என ஐ.நா. மனித உரிமை நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 8 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரைப…
-
- 0 replies
- 959 views
-
-
சமாதானச் செயற்பாடுகளில் பிரபாகரனால் முன்வைக்கப்படும் நேரடி உத்தரவாதத்தினையே முதன்மையாகக் கருதப்போவதாகவும் புலிகளின் ஏனைய தலைவர்களின் உத்தரவாதங்களைப் பெரிதுபடுத்தப்போவதில்லை என்றும் அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் சபையில் தெரிவித்தார். இஸ்ரேலில் படையினர் இருவர் கடத்தப்பட்டதற்காக லெபனானில் போர் வெடித்தது. ஆனால் இலங்கையில் படையினர் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர். இருப்பினும் நாம் பொறுமையாகவே இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார். வடக்கு கிழக்கு நிலைவரம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது: சிறார்களைப் படையில் இணைத்து ஆயுதப்பயிற்சியை வழங்குவதை மறைக்கவே புலிகள் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றனர். …
-
- 2 replies
- 1.4k views
-
-
யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கள் தொலைத் தொடர்பு இணைப்புகளை அரசாங்கமே துண்டித்துள்ளதாக தெரிவித்துள்ள `டயலொக்' நிறுவனம் மீளவும் தொடர்புகள் வழங்கப்படுவது அரசாங்கத்தை பொறுத்தது எனவும் தமது தொலைத்தொடர்பு கட்டமைப்பினூடான சம்பாசனைகளை புலனாய்வுத் துறையினர் ஒட்டுக்கேட்க முடியுமெனவும் தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் குடாநாட்டுக்கான சகல செல்லிடத் தொலைபேசி இணைப்புகளும் முற்றாக செயலிழந்துள்ளன. இது குறித்து `டயலொக்' நிறுவனத்தை முன்னதாக தொடர்பு கொண்டு கேட்ட போது, தமது தொலைத்தொடர்பு கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறே அங்கு இணைப்புகள் செயலிழந்தமைக்கான காரணமென தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று புதன்கிழமை இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் நலன்…
-
- 0 replies
- 785 views
-
-
யாழ்ப்பாண குடாநாட்டில் தற்போது எற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தவிர்த்து இயல்பு நிலையை எற்படுத்துவது குறித்து யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. பலாலி இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மாவட்டச் செயலக அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,யாழ் பொற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டததை தளர்த்துதல்,எரிபொருள் விநியோகத்தை சுமுகமாய் மேற்கொள்வது,கப்பல் மூலம் எடுத்து வரப்படும் பொருட்களின் விநியோகம்,மற்றும் பிரதேசத்தில் தடைப்பட்டுள்ள போக்குவரத்து நடவடிக்கைகளை சீராக்குதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ள…
-
- 0 replies
- 769 views
-
-
எமது மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் எம்மைச் சுதந்திரமாக செல்லவிடுங்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். திருகோணமலை துறைமுகத்திற்கு சம்பூரால் ஆபத்து என்ற சிறிலங்கா அரச தலைவரின் கூற்றை ஏற்கமுடியாது. திருகோணமலை துறைமுகத்தை பாதுகாப்பதில் ஏனையவர்களை விட தமிழர்களுக்கே அதிக அக்கறை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு-கிழக்கு நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: அரசாங்கத்தால் வடக்கு-கிழக்கு மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் கூற…
-
- 0 replies
- 775 views
-
-
இலங்கையில் இடம்பெறும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை கண்காணிக்க சர்வதேசகுழுவை அனுப்ப வேண்டும் - அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பு கோரிக்கை. இலங்கையில் இடம்பெறும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை கண்காணித்து அவற்றை கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் "ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்' எனப்படும் மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே ஹொங்கொங்கை தளமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் அமைப்பு கடந்த 17ஆம் திகதி வெளியிட்ட தமது விசேட அறிக்கையில்; பாரிய மனித படுகொலைகளும்,ஆட்கடத்தல்களும
-
- 0 replies
- 679 views
-