ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142586 topics in this forum
-
இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து தமிழ்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம்: சிறிலங்கா நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!! தமிழர் தாயகத்தில் தொடரும் சிறிலங்கா இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இதனால் இன்றைய சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. 2006ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்களைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்து வருவதைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இணைந்து கண்டனக் குரல் எழுப்பி…
-
- 11 replies
- 1.8k views
-
-
இது தொடர்பில் புனர்வாழ்வுக் கழகம் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையின் வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் கடந்த மார்கழி 2005 இன் முற்பகுதியில் வன்செயல்கள் அதிகரித்து காணப்பட்டன. யாழ்ப்பாணக் குடாநாட்டிலிலுள்ள பெரும் பகுதியான மக்கள் அங்கு நடைபெறும் வன்செயல்களினால் தங்கள் உயிருக்கு பேராபத்து ஏற்படலாம் என்று உணர்ந்து வன்னிக்கு இடம்பெயர்நது வந்துள்ளனர். இத்தகைய வன்செயல்களை சிறிலங்கா இராணுவமும் அதன் கூட்டாகச் செயற்படும் ஆயுதக் குழுக்களுமே மேற்கொள்வதாக அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் முறையிட்டுள்ளது. இடம்பெயரும் மக்கள் தங்களுக்கு வன்னிப் பெருநிலமே பாதுகாப்பு என நினைத்து தொடர்ந்தும் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். 3,325 குடும்பங்கள் (16.01.2006 வரை சுமார் 14,500 …
-
- 0 replies
- 1k views
-
-
வட, தென் தமிழீழத்தில் ஒரே காலத்தில் யுத்தம் தொடங்கப்படும்: துணைத் தளபதி றமணன் வட, தென் தமிழீழப் பகுதிகளில் ஒரே நேரத்தில் யுத்தம் தொடங்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி றமணன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட மற்றும் தாயகத்தின் ஏனைய பகுதிகளில் பொதுமக்களுக்கான தற்காப்பு பயிற்சிகள் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (17.01.06) நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்க விழாவில் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி றமணன் ஆற்றிய உரை: உலகத்திலே இருக்கின்ற எந்த சக்தியாலும் வெல்ல முடியாத இராணுவமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயார் நிலையில் இருக்கின்றார்கள். எங்களது போராட்டத்தை பொறியிலே சிக்க வை…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடக்கு கிழக்கு ஆளுனராக கடற்படை முன்னாள் அதிகாரி தெரிவு! ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் அதிகாரியான ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவை நியமிப்பதற்கு ஸ்ரீலங்காவின் அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸ தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய ஆளுனரும், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி வெளிவிவகார அமைச்சருமான டிரோன் பெனாண்டோ தற்போது வெளிவிவகார அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்றும் தெரியவருகின்றது. கடற்படைத் தளபதிக்கு அடுத்த நிலையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியர் அட்மிரல் மொஹான் விஜய விக்கிரமசிங்க. கடற்படைத்தளபதி நியமனத்தில் ஏற்பட்ட கசப்புணர்வினை அடுத்து அவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் மூலம்- சங்கதி
-
- 3 replies
- 1.5k views
-
-
அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்குரிய வழிவகைகளை ஆராய்வதற்காக நோர்வே அனுசரணைக்குழுவின் பொறுப்பாளரும், அந்த நாட்டு அமைச்சருமான எரிக்சொல்ஹெய்ம் நாளைமறுதினம் கொழும்பு வருகின்றார். சொல்ஹெய்முக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் இடையில் வன்னியில் நடைபெறக்கூடிய உத்தேச சந்திப்பின்போது தலைவர் பிரபாகரனுக்கு உதவுவதற்காக புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமும் அதேநாள் அதா வது நாளைமறுதினம் இலங்கை வருகின்றார். இந்த இருவரின் வருகையையும் ஒட்டி அமைதி முயற்சிகளில் நல்ல திருப்பம் கிட்டும் என்றும் சமாதான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்களை முறியடிக்கும் திடீர் நகர்வு இந்த வருகையை ஒட்டி ஏற்படும் என்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட் டிருக…
-
- 0 replies
- 1.1k views
-
-
நவீன புலிகளாக இன்று உருவெடுத்துள்ளோம்: சிறப்புத்தளபதி நகுலன் சிறிலங்காவின் அனைத்து படைப்பலத்தையும் வெல்லக்கூடிய சக்திவாய்ந்த படைக்கட்டமைப்புக் கொண்ட நவீன புலிகளாக இன்று உருவெடுத்துள்ளோம் என சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத்தளபதி நகுலன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான இராணுவப் பயிற்சி ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது, அன்புக்குரிய மக்களே, நாங்கள் கடந்தகால வரலாறுகளை மறந்துவிட முடியாது எங்களுடைய விடுதலைப் போராட்டத்தையும், எங்களுடைய உண்மையான நிலைப்பாடுகளையும் சர்வதேச சமூகம் எங்களுக்கு முன்னால் வந்து நின்று கொண்டு நீதியாக தீர்க்குமென்…
-
- 2 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மீது கைக்குண்டு வீச்சு இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் மீது நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இத்தாக்குதலில் அலுவலகம் முன்பாக நிறுத்தி வைக்கப்படடிருந்த 3 வாகனங்களில் ஒரு வாகனம் முற்றாகச் சேதமடைந்துள்ளது. அலுவலகத்தின் ஜன்னல்இ கதவுகளும் குண்டுவெடித்து சிதறியதில் சேதமடைந்துள்ளது. மட்டக்களப்பு நகரில் உயர் பாதுகாப்பு வலயம் என கருதப்படும் லேக் வீதியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. 3 சோதனைச் சாவடிகள் அமைந்துள்ள இந்த வீதியிலேயே ஈ.பி.ஆர்.எல்.எஃப். வரதர் அணியின் அலுவலகம் அமைந்துள்ளதோடு போர் நிறுத்த …
-
- 5 replies
- 1.5k views
-
-
போரைத் தொடங்க ஆணையிடுங்கள்: தேசியத் தலைவருக்கு மட்டக்களப்பு பிரகடனம் வேண்டுகோள்! எதிரி வலிந்து போரைத் தொடங்க முனைகின்ற நிலையில் இனியும் பொறுத்திருக்காமல் போரைத் தொடங்க ஆணையிடுங்கள் என்று தமிழீழத் தேசியத் தலைவருக்கு மட்டக்களப்பு கண்டன எழுச்சிப் பிரகடனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மட்டக்களப்பு அம்பிலாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்டன எழுச்சி நிகழ்வில் வெளியிடப்பட்ட பிரகடன விவரம்: சிறிலங்கா அரசு எம்மீது வலிந்து போர் தொடுக்க கங்கணம் கட்டி நிற்கின்றது. சர்வதேசத்தின் மத்தியில் எமது இனத்துக்கு களங்கம் ஏற்படும் வகையில் பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்கிறது. தற்போதைய அரசும், இனவெறிக் கூட்டமும் எமது உயிரினும் மேலான விடுதலையைப் பய…
-
- 0 replies
- 1.1k views
-
-
உடத்தலவின்ன வழக்கில் 5 பேருக்கு மரணதண்டனை- உடத்தலவின்ன படுகொலை வழக்கிலிருந்து முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை, அவரின் இரு புதல்வர்களான லொஹான் ரத்வத்தை, சானுக ரத்வத்தை ஆகியோர் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 5 பேருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் தீபானி விஜேசுந்தர, சுனில் ராஜபக்ச ஆகியோர் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் நாள் பொதுத் தேர்தலின் போது கண்டி உடத்தலவின்ன பிரதேசத்தில் வானில் பயணித்த 10 முஸ்லிம் வாலிபர்களை சுட்டுக் கொன்றமை மற்றும் பலரைக் காயப்படுத்தியமை, கொலைக்குத் திட்டமிட்டமை, அதற்கு ஆதரவளித்தமை, கள…
-
- 2 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவருடன் ஐரோப்பிய ஒன்றியக் குழு அடுத்த மாதம் சந்திப்பு? ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையாளர் தலைமையிலான இணைத் தலைமை நாடுகளின் குழுவினர் பெப்ரவரி மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்திக்க உள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ஐரோப்பிய ஒன்றியப் பேச்சாளர், விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் ஏற்படாத நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவருடன் நேரடியாக பேச ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது என்றார். இதனிடையே ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் இலங்கை அமைதி முயற்சிகள் தொடர்பாக உறுப்பினர் சஜ்ஜித் கரீம் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் லஸ்லொ கோவக்ஸ்…
-
- 0 replies
- 894 views
-
-
ஜோசம் எ.பி - ஜந்து மாணவர் படுகொலைக்கு படையினரே காரணம் ஜனாதிபதி நம்புவதாக தெரிவிப்பு http://www.virakesari.lk/VIRA/html/index.asp http://www.virakesari.lk/VIRA/html/index.asp http://www.virakesari.lk/VIRA/html/index.asp http://www.virakesari.lk/VIRA/html/index.asp http://www.virakesari.lk/VIRA/html/index.asp http://www.virakesari.lk/VIRA/html/index.asp http://www.virakesari.lk/VIRA/html/index.asp
-
- 0 replies
- 1.1k views
-
-
இன அழிப்பு நோக்கி திரும்பியுள்ள சிங்கள அரசின் நிழல் யுத்தம் -ஜெயராஜ்- யுத்த நிறுத்த மீறல் என்பது தற்பொழுது சிறிலங்கா இராணுவத்தரப்பிற்கும்- விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதல்; யுத்த நிறுத்த உடன்பாட்டின்படி விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரங்கள,; அனுமதிகள் என்பனவற்றிற்கும் அப்பால் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை என்ற வடிவத் தினை முற்றுமுழுதாகப் பெற்றுக்கொண்டு விட்டது. இவற்றிற்குத் தொடர்ச்சியான பல சம்பவங்களைச் சுட்டிக்காட்டமுடியும். அதாவது விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா அரசிற்கும் இடையிலான நிழல் யுத்தத்திற்கு அப்பால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன ஒடுக்குமுறைகள் அண்மைக்காலத்தில் மிகத் தீவிரம்பெற்று இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள…
-
- 0 replies
- 1.1k views
-
-
தாக்குதல்களில் இருந்து தப்ப இராணுவம் புதிய உத்தி பகடைக்காயாகும் அப்பாவி மக்கள் யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகன அணிகள் பிரதான வீதிகளில் செல்லும் போது பொது மக்களையும் அதனுடன் இணைத்துக் கொண்டு செல்ல நிர்ப்பந்திப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இராணுவத்தினரின் வாகன அணிகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்தகைய இராணுவத்தினரின் வாகன அணிகள் பிரதான வீதிகளில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒருமித்து வருகின்றன. இந்த நேரத்தில வீதியால் வரும் வாகனங்கள் மற்றும் மோட்டார் சையிக்கள்கள் சையிக்கள்கள் என்பனவற்றை மறிக்கும் படையினர் அவர்களை தமது வாகன அணியுடன் இணைந்து செல்லுமாறு நிர்ப்பந்திக்கின்றனர். இராணுவத்தினர் இதன் மூலம் தம்மைப் பாதுகாக்கும் செயல்பாட்டிற்க…
-
- 11 replies
- 2k views
-
-
தமிழர்களின் எதிர்ப்பு நிராகரிப்பு: அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! சிறிலங்காவில் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அவசரகால சட்டம் நீட்டிப்புக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தச் சட்ட நீட்டிப்பைத் தடுக்கும் வகையில் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்கு பண்டாரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனர். இருப்பினும் எதுவித வாக்கெடுப்பும் நடத்தாமலேயே அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அவசரகால சட்ட நீட்டிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "வடக்கு - கிழக்குப் பிர…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழத்தமிழர் தொடர்பான தார்மீக கடமையை செயற்படுத்த தயாராகின்றன தமிழகக் கட்சிகள் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவிப்பு ஈழத்தமிழர் போராட்டம் புதுவடிவம் எடுத்திருக்கின்ற இந்நேரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் தார்மீக கடமையை செயற்படுத்த தயாராகி வருகின்றோம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரனுடனான சந்திப்பின்போதே டாக்டர் ராமதாஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர் போராட்டத்தில் அக்கறை கொண்டுள்ள தமிழக அமைப்புகள் மட்டுமல்லாது, முழு இந்தியாவிலும் உள்ள சகல அமைப்புகளையும் அணிதிரட்ட வேண்டிய கட்டாயத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். இலங்கை இனப்பிரச்சினை என்பது வடக்கு, கிழக்கு என்ற எல்ல…
-
- 2 replies
- 1.3k views
-
-
உலகம் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் என்பதே புலிகளின் விருப்பம்' எங்களுக்கும் இராஜதந்திரம், புவிசார் அரசியல் பற்றி நன்கு தெரியும் கா.வே.பாலகுமாரன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லான்ஸ்டெட் அண்மையில் ஆற்றிய உரை தொடர்பாக கடந்த சனிக்கிழமை புலிகள் குரல் வானொலியின் அரசியல் அரங்கம் நிகழ்வில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது; விடுதலைப் போராட்டம் என்பது சர்வதேச நிலைப்பாட்டோடு சம்பந்தப்பட்டவை என்பதும் அது தவிர்க்க இயலாதது என்பதும் எல்லோரும் அறிந்ததே. எங்களுடைய விடுதலைப் போராட்டம் கூட சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலினூடாகத் தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. எங்களுடைய விடு…
-
- 1 reply
- 1.2k views
-
-
மானிப்பாயில் மாவீரர் குடும்பம் மீது சிங்களப் படை வெறியாட்டம் - தாயும், இரு மகள்களும் பலி, தந்தையும், மகனும் படுகாயம் யாழ். மானிப்பாய்ப் பகுதியில் இன்று அதிகாலை ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினரும், ஈபிடிபி தேசவிரோதக் கும்பலைச் சேர்ந்த காடையர்களும், மாவீரர் ஒருவரின் குடும்பத்தினர் மீது மேற்கொண்ட வெறியாட்டத்தில், தாயும் இரு மகள்களும் கொல்லப்பட்டுள்ளதுடன், தந்தையும், மகனும் படுகாயமடைந்துள்ளனர். மானிப்பாய் இந்துக் கல்லூக்கு அண்மையில் உள்ள முதலியார் கனகசபை வீதியில் உள்ள வீடொன்றில் இவர்கள் தங்கியிருந்தவேளை அதிகாலை 12.15 மணியளவில் வீட்டினுள் புகுந்த ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவினரும், ஈபிடிபி தேசவிரோதிகளும், இவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கி;ச் சூடு நடத்தியுள்ளனர…
-
- 32 replies
- 5.2k views
-
-
புல்மோட்டையிலிருந்து திருமலை நோக்கிச் சென்ற மக்கள் பேருந்து ஜானோயா ஆற்றில் பாய்ந்தது - ஐவர் உயிரிழப்பு திருமலை இ.போ.சபைக்குச் சொந்தமான மக்கள் பேருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு புல்மோட்டையிருந்து திருமலைக்குச் சென்ற போது ஜானோயா ஆற்றைக் கடக்க படகுப் பாதையில் ஏற்றிய போது பேருந்தின் உராய்வு விசையின்மையால் நேராக ஆற்றில் பாய்ந்தது நிரில் மூழ்கியது. இதனால் இரண்டு ஆண்களும், 3 சிறுவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டனர். பேருந்தின் ஓட்:டுனரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு புல்மோட்டை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். படையினரும், காவல்துறையினரும் குறித்த இடத்திற்கு எவரையும் செல்ல விடவில்லை. ஆனால் மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செ…
-
- 2 replies
- 1.2k views
-
-
லெப் கேணல் குட்டிசிறீயின் நினைவுத்தூபி பரந்தனில் திரைநீக்கம் செய்யப்பட்டது இன்று காலை 7மணியளவில் பரந்தன் சந்தியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி லெப்.கேணல். குட்டிசிறீ அவர்களின் உருவச்சிலை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத்தளபதி நகுலன் ஏற்றிவைத்தார்.தமிழீழத் தேசியக் கொடியினை குட்சிறீ படையணியின் சிறப்புத்தளபதி கோபால் அவர்கள் ஏற்றிவைத்தார்.இந்த நினைவுத்தூபியினை வடபோர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார். ;.இந்நிகழ்வில் சிறப்புரையினை தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர். க.வே பாலகுமாரன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் அங்கு …
-
- 1 reply
- 1.2k views
-
-
நடைமுறைக்கு வந்தது தமிழீழக் கட்டட கட்டுமானச் சட்டம் தமிழீழக் கட்டட கட்டுமானச் சட்டம் இம் மாதம் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்று தமிழீழ சட்டவாக்கல் செயலகம் அறிவித்துள்ளது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் தொடக்கம் கட்டடங்கள் கட்டுவதற்கும், கட்டுமான ஒப்பந்தங்கள், நிறுவனங்களை நடத்துவதற்கும் கட்டத் தொழிலாளர்களை அங்கீகரிப்பதற்கும் இச் சட்டத்தினூடாகவே நடவடிக்கைகளை இச்சட்டத்தைப் பின்பற்றி மேற்கொள்ளுதல் வேண்டும். இதனை மீறுவோர் மீது இச் சட்டத்திற்கிணங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் தமிழீழ சட்டவாக்கல் செயலகம் அறிவித்துள்ளது. தகவல்மூலம்;- புதினம்
-
- 0 replies
- 1.1k views
-
-
வவுனியா செட்டிக்குளத்தில் தாக்குதலில் 2 காவல்துறை வீரர் பலி. வவுனியா செட்டிக்குளம் 17 வது காவல்துறை சோதனை சாவடியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுசம்பவத்தில் காவல்துறை உறுப்பினர்கள் இருவர் பலியாகினர். சேவைக்கு சமுகமளிக்காத காவல்துறை உறுப்பினர் அது தொடர்பில் தமது பரிசோதகரான உயரதிகாரியுடன் முரண்பட்டமை காரணமாக காவல்துறை உறுப்பினர் உயரதிகாரியின் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். இதனையடுத்து அவர் தமக்கு தாமே துப்பாக்கி சூட்டை நடத்தி தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தகவல் மூலம்- பதிவு
-
- 0 replies
- 990 views
-
-
தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் - விடுதலைப்புலிகள் கொக்கட்டிச்சோலையில் நேற்று கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையி
-
- 0 replies
- 1.2k views
-
-
நோர்வே தூதுவர் ஊடாக அரசு புலிகளுக்கு விசேட தகவல் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமரச பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கான இடம் குறித்து அரசாங்கம் விஷேட தகவல் ஒன்றை புலிகள் இயக்கத்திற்கு நோர்வே தூதுவர் ஊடாக அனுப்பி வைத்துள்ளது. அரசாங்கத்தின் விசேட தகவலை வன்னி சென்ற இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹென்ஸ் பிரஸ்கர் புலிகளுக்கு தெரிவித்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதியை பொறுத்தவரையில் சமரச பேச்சுவார்த்தையை ஐரோப்பிய நாடு ஒன்றில் அல்லது புலிகள் இயக்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நோர்வே நாட்டில் நடத்த விருப்பம் கொண்டுள்ளார். அதனை நோர்வே தூதுவர் ஊடாக புலிகளுக்கு தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் கொலை…
-
- 1 reply
- 1.2k views
-
-
பாடங்கள் நிறையவே உண்டு! யாழ். மானிப்பாயில் தாயும், இரு மகள்மாரும் படுகொலை செய்யப்பட்டமையும், தந்தையும், மகனும் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டமையும் சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்பும், தேச விரோதக்குழுவான ஈ.பி.டி.பியும் மேற்கொண்ட மிலேச்சத்தனமான செயல் என்பதில் சந்தேகம் கொள்ள எதுவுமே இல்லை. இதற்குச் சிறிலங்கா அரச தரப்போ அன்றி ஆயுதத்தரப்போ தமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதோ அன்றி இதற்குத் தாம் பொறுப்பு ஏற்பதற்கு இல்லை என்பதோ சிறுபிள்ளைத்தனமானது. இதேவேளை சிறிலங்கா அரசும், அதன் ஆயுதப்படைத்தரப்பும் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் என்றோ, இதற்கு நீதி கிட்டுவதற்கான நடவடிக்கைகளை அது மேற்கொள்ளும் என்றோ எதிர்பார்ப்பதற்குத் தமிழர் தரப்பும் ஒன்றும் சிறுபிள்ளைத்தன…
-
- 0 replies
- 1.1k views
-
-
சுனாமியில் கணவனை இழந்தவர் குழந்தைகளுடன் அகதியாக வந்தார் ராமேஸ்வரம்: சுனாமியில் கணவனை இழந்த பெண், 3 குழந்தைகள் உட்பட 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். ஐந்து நாட்களில் அகதிகளின் வருகை 53 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை ராணுவத்திற்கும் புலிகள் அமைப்பிற்கும் உள்நாட்டு சண்டை நடப்பதால் அகதிகள் தமிழகம் வருவது அதிகரித்துள்ளது. ஜன.12ம் தேதி 24 பேர், 13ல் 9 பேர், 14ல் 5 பேர், 15ல் 10 பேர், என 48 பேர் வந்துள்ளனர். அவர்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இலங்கை பேசாளையிலிருந்து சுனாமியின் போது கணவரை இழந்த கல்யாணி(29) குழந்தைகள் விஷாந்தினி(7), கிஷன்(5), சசுஷியா(2) உட்பட 4 பேர் தங்கச்சிமடத்திற்கு படகில் வந்தனர்.மேலும் மன்னார் முல்லைத்…
-
- 3 replies
- 3.3k views
-