Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – ஜனாதிபதி மன்னாரில் காணப்படும் காணி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடெல்ஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர். இதன் போது மன்னார் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கினார். மேலும் மடு யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது குறித்தும் இந்தபோது விசேடமாக கலந்துர…

  2. துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் – கஜேந்திரன் எம்.பி. வலியுறுத்து துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு, அதன் புனிதத்தை பாதுகாக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இந்த கோரிக்கையை விடுத்தார். யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் வவுனியா மற்றும் மட்டக்களப்பில் உள்ள பல துயிலும் இல்லங்களை இராணுவம் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சுட்டிக்காட்டினார். இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள துயிலும் இல்லங்களி…

  3. கனேடியத் தமிழர் பேரவை முன்வைத்துள்ள 10 கோரிக்கைகள் குறித்து அவதானம் – நீதி அமைச்சர் கனேடியத் தமிழர் பேரவை முன்வைத்துள்ள தமிழ் மக்கள் சார்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய 10 கோரிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என நீதி அமைச்சர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் தம்மோடு இணைந்து பணியாற்ற சர்வதேச நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அழைப்பும் விடுத்துள்ளார். குறித்த 10 கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்று கனேடியத் தமிழர் பேரவையினால் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் நேற்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது. இதுகுறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் நீதி அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்…

  4. வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் தெரிவித்த எதிர்ப்பை திசைத்திருப்ப நீதியமைச்சர் சபையில் தெரிவித்த விடயம் பொய்யானது - செல்வராஜா கஜேந்திரன் By VISHNU 16 NOV, 2022 | 10:36 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகத்திற்கு எதிராக வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் தெரிவித்த எதிர்ப்பை மறைத்து நாங்கள் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக நீதியமைச்சர் சபையில் குறிப்பிட்ட விடயம் முற்றிலும் பொய்யானது. இவரது கருத்தை முற்றாக கண்டித்து, நிராகரிக்கிறேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். தோல்வியடைந்த ஒற்றையாட்சி மு…

    • 0 replies
    • 137 views
  5. அதிகரிக்கின்றது கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் 16 NOV, 2022 | 10:37 PM கடவுச் சீட்டு கட்டணங்கள் நாளை வியாழக்கிழமை (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கடவுச் சீட்டுக்கான சாதாரண சேவைக் கட்டணம் 5,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு நாள் சேவை கடவுச் சீட்டுக்கான கட்டணம் 20,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கின்றது கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் | Virakesari.lk

    • 0 replies
    • 153 views
  6. பேச்சுவார்த்தைக்கான நாடகங்களை நடத்திக் கொண்டு காணிகளை சுவீகரிக்க முயற்சி Posted on November 16, 2022 by தென்னவள் 7 0 தென்னிலங்கையில் ரணில் – ராஜபக்ச அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கான நாடகங்களை நடத்திக் கொண்டு வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை சுவீகரிக்க முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார். வடக்கு ஆளுனர் அலுவலகம் முன் நேற்று இடம்பெற்ற முற்றுகைப் போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ் மக்களினுடைய விருப்பங்களை மீறி தமிழ் மக்களினுடைய காணிகளை சுவீ…

    • 0 replies
    • 119 views
  7. யாழில் வாகனங்களை வாடகைக்கு எடுத்து அடகு வைக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு! By DIGITAL DESK 5 16 NOV, 2022 | 04:52 PM யாழ்ப்பாண குடா நாட்டில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களிடமிருந்து இரண்டு மூன்று நாட்களுக்கென வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைக்கும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் சுன்னாகம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு பதினைந்துக்கும் மேற்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் எனினும் இன்று வரை நான்குக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமுன்தினம் நான்கு நாட்களுக்கென வாடகைக்கு எடுத்துச் செல…

  8. அரச நிறுவனங்களில் அச்சிடும் செலவைக் குறைக்க விசேட திட்டம் By T. SARANYA 16 NOV, 2022 | 10:51 AM அரச நிறுவனங்களின் அச்சிடும் செலவைக் குறைக்கும் வகையில் விடுமுறை (லீவு) விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்த பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான முன்னோடி திட்டம் உள்நாட்டு அமைச்சில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஆரம்ப செயற்றிட்டம் வெற்றியடையும் பட்சத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள அரச அலுவலகங்களுக்கு இது தொடர்பான முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் …

  9. முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு! By VISHNU 16 NOV, 2022 | 12:40 PM முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள 'கோத்தபாய கடற்படை கப்பல்' கடற்படை முகாமுக்காக 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு நடவடிக்கை இன்று (16) முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த காணி உரிமையாளர்கள் பலர் கடற்படை முகாமிற்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள். முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை அமைத்துள்ள கடற்படையினர் அந்த காணிகளை படை முகாமின் தேவைக்காக கடந்த …

  10. வசந்த முதலிகே விடுதலை - பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் - சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டுகோள் By RAJEEBAN 16 NOV, 2022 | 12:33 PM பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவது மற்றும் வசந்த முதலிகே கல்வேல ஸ்ரீதம்ம தேரர் விடுதலை ஆகிய விடயங்களில் இலங்கையில் உள்ள இராஜதந்திர தூதரகங்கள் மற்றும் அலுவலகங்கள் தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இது தொடர்பான கடிதங்களை தூதரகங்களிடம் கையளித்துள்ளனர். அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் ஒடுக்குமுறைகளை பயன்படுத்துவதை கைவிடவேண்டும் என தூதரகங்கள் வேண்டுகோள் விடுக்கவேண்டும் எனவும் மனித உரிமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். …

  11. பல்லைக்கழக மாணவர்கள் எப்போதும் நிபந்தனையின்றி மக்களுக்காகப் பாடுபடும் ஒரு குழுவினர் - பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் By T. SARANYA 16 NOV, 2022 | 11:59 AM (வத்துகாமம் நிருபர்) பல்கலைக்கழக மாணவர்கள் எப்போதும் நிபந்தனையின்றி மக்களுக்காகப் பாடுபடும் ஒரு குழுவினராகும் என்று பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அனுராதா வித்தாகே தெரிவித்தார். பேராதனைப் பல்கலைக்கழக வளவில் நேற்று (15) இடம் பெற்ற கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். அண்மையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் சங்க அமைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்ய வேண…

  12. இனப்படுகொலை இடம்பெறவில்லை - சரணடைந்தவர்கள் காணாமல்போகவில்லை- காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் தலைவர் By RAJEEBAN 26 OCT, 2022 | 05:56 PM முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த இராணுவத்தினர் 60,000 பொதுமக்களை மீட்டனர் என குறிப்பிட்டுள்ளார். 2009 இல் இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல்போயுள்ளனர் என தெரிவிக்கப்படுவதை இலங்கையின் காணாமல்போனவர்களிற்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த மறுத்துள்ளார். ரொய்ட்டருக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப…

  13. ஈஸ்டர் தாக்குதல்: காத்தான்குடியைச் சேர்ந்த 16 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் ! உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 16 பேருக்கு விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இவர்களை எதிர்வரும் 29 ம் திகதிவரை விளக்கமறியலில் வைத்து நீதவான் உத்தரவிட்டார். ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள், சஹரானின் சகோதரி மற்றும் அவரது கணவர் உட்பட 66 பேரை கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில்…

  14. வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம்- தேடும் பணி தீவிரம் வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 5 பேர் தப்பியோடியுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையில் போதைப் பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த புனர்வாழ்வு நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய தங்க வைக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களில் 5 பேர் தப்பியோடியுள்ளனர். விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட போதே குறித்த 5 பேரும் தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது. தப்பியோடிய 5 பேரும் வடபகுதியைச் …

  15. தமிழ் மக்களை புறக்கணிக்க மாட்டோம் – அரசாங்கம் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து வேலைத்திட்டங்களில் இருந்தும் தமிழ் மக்களை புறக்கணிக்கும் நோக்கம் இல்லை என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர், வடக்கு மாகாணத்தில் நிலவும் போதைப்பொருள் பிரச்சினை குறித்து ஆராய வடக்கு ஆளுநர் தலைமையில் செலயலணி அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதேபோன்று நாடளாவிய ரீதியிலும் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அடையாள அட்ட…

  16. முல்லைத்தீவில் குடிநீர் விநியோகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி உயரதிகாரிகளால் தென்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதால் அதனை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாந்தை கிழக்கு பிரதேசத்தின் கரும்புள்ளியான் ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் தமது பகுதிக்கே பெற்றுத் தருமாறு கோரி 07 பொது அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். உலக வங்கியின் உதவியின் கீழ் கரும்புள்ளியான் குடி நீர் திட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா நிதி தென்பகுதிக்கு மாற்றப்பட்டமை எமது பிரதேச மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பிப்பதற்கு ஜனவரி மாதம் பத்திரிகையில் கேள்வி கோரல் விளம்பரம் செய்யப்பட்டு …

  17. தென்னாபிரிக்க ஜனாதிபதி - அலி சப்ரிக்கிடையிலான சந்திப்பில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான உள்ளகப்பொறிமுறை தொடர்பில் ஆராய்வு By VISHNU 15 NOV, 2022 | 03:55 PM (நா.தனுஜா) தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷாவுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் 14 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற குறுகியநேர சந்திப்பின்போது தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான உள்ளகப்பொறிமுறை ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. பிறிதொரு நாட்டுக்கான விஜயத்தின் இடைநடுவே கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை 14 ஆம் திகதி வந்தடைந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா வெளிவிவகார அமை…

  18. ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிக்க வேண்டுமானால் வடக்கு - கிழக்கு ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும் - கலையரசன் By VISHNU 15 NOV, 2022 | 03:25 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு வருடத்திற்குள் தீர்வென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இதற்காக நாம் அவருடன் சேர்ந்து பயணிக்க வேண்டுமானால் அவர் முதலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும். பாதுகாப்பு துறைக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ள இந்த வரவு செலவுத் திட்டம் யுத்தக் கால பாதீடாக காணப்படுகிறது என தமிழ் தேசியக்கூட்…

  19. சிறையில் அரசியல் கைதி என எவரும் இருக்கக் கூடாது : அரசியல் கைதி பார்த்தீபனின் சகோதரி உருக்கமான வேண்டுகோள் By VISHNU 15 NOV, 2022 | 05:01 PM இருபத்தேழு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாக சிறையில் இருக்கின்ற எனது சகோதரனை விடுவிக்க வேண்டும் என அரசியல் கைதி விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் சகோதரி வாஹினி கோரிக்கை விடுத்ததுடன் சிறையில் அரசியல்கைதி என எவரும் இருக்க கூடாதென உருக்கமான கோரிக்கை விடுத்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எங்கள் அண்ணாவும் நானும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நீண…

  20. சிறுவர்கள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முறையிட தொலைபேசி இலக்கங்கள் By VISHNU 15 NOV, 2022 | 03:17 PM சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள், சிறுவர்கள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் செயற்படும் சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் பணியகம் ஆகியவை இணைந்தே இந்த இலக்கங்களை அறிமுகம் செய்துள்ளன. சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை 1929 என்ற இலக்கத்துக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகள் 1938 என்ற இலக்கத்துக்கும் தெரிவிக்கலாம். வேலை நாட்களில் காலை 8.30…

  21. காகத்தின் கூட்டில் முட்டையிட்ட குயிலுக்கு நேர்ந்த கதியே ஜனாதிபதிக்கும் ஏற்படும் - ஹர்ஷ டி சில்வா By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 02:45 PM (இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்) 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சமூக பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்படவில்லை. அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கும் மக்களை அடக்குவதற்காக பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வங்குரோத்து நிலை அடைந்துள்ள நிலையிலும் அமைச்சரவை அமைச்சுக்கள், இராஜங்க அமைச்சுக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ…

  22. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவி உட்பட மூவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 48மணி நேரத்தில் மாணவி உட்பட மூவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி,கொக்கட்டிச்சோலை,வவுணதீவு ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் 22வயதுடைய சுரேஸ் விதுசன் என்னும் இளைஞன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதேபோன்று கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் பாலி…

  23. 429 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் நெடுந்தீவில் கைது By VISHNU 10 NOV, 2022 | 03:12 PM (எம்.வை.எம்.சியாம்) காங்கேசன்துறை கடற்படை பிரிவினரால் நெடுந்தீவு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மீன்பிடி படகொன்றில் இருந்து 429 கிலோ 40 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரும் 09 ஆம் திகதி புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடல் பகுதியில் காங்கேசன்துறை கடற்படையினர் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே மீன்பிடி படகொன்றிலிருந்து 429 கிலோ 40 நிறையுள்ள கேரள கஞ்சா இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. க…

  24. ஹிருணிக்கா பிரேமச்சந்திர கைது By T. SARANYA 14 NOV, 2022 | 01:37 PM முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர பல குற்றச்சாட்டுக்களின் கீழ் கறுவாத்தோட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/139984

  25. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது தாக்குதல் - மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு By T. SARANYA 15 NOV, 2022 | 01:39 PM (எம்.வை.எம்.சியாம்) மாத்தளை, ரன்பிமகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது மேற்கொண்ட வாள் தாக்குதல் காரணமாக மூன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது இவ்வாறு வாள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது தாய் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் குறித்த ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த பெண் அவரது மகள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.