ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
ஜப்பானிய பண விவகாரம்: ஆணையாளரை கண்டித்து... யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள், வெளிநடப்பு! யாழ்ப்பாண மாநகர சபையில் சபை நடவடிக்கைகளில் சபை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தாமல் நடந்த சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் அணி உறுப்பினர்களைத் தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரியாமல் ஆணையாளர் எதேச்சையாக ஒரு கோடியே 43 லட்சத்து 26 ஆயிரத்து 466 ரூபா தொடர்பில் முடிவெடுத்தமையைக் கண்டித்த சபை உறுப்பினர்கள் சிலர் ஆணையாளர் தவறை ஏ…
-
- 0 replies
- 165 views
-
-
அரச ஊழியர்கள், சமூக வலைதளங்களில்... கருத்து, வெளியிடத் தடை ! சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடுவது குறித்து அரசாங்க ஊழியர்களுக்கு பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிறுவன சட்ட விதிகளை பின்பற்றாமல் அரசாங்க ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 04/2015 பொது நிர்வாக சுற்றறிக்கையின் பிரிவு 03ஐ மேற்கோளிட்டு பொது நிர்வாக அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. https://athavannews.com/2022/1301632
-
- 0 replies
- 203 views
-
-
இலங்கையில்... 10% தள்ளுபடியுடன், டொலர்களுக்கு... விற்கப்படும் வீடுகள் !! நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் முதலாவது வீட்டை கொள்வனவு செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடுகளை இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு டொலர் செலுத்தி கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு பெற்றுக்கொண்டால் 10% தள்ளுபடி வழங்கவும் முடிவு செய்யப்பட்ட நிலையில் 40,000 டொலர்களை செலுத்தி குறித்த வீட்டை கொள்வனவு செய்துள்ளார் என நகர்ப்புற அபிவிருத்தி …
-
- 0 replies
- 784 views
-
-
இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு இஸ்லாமிய வழிபாடுகள் By DIGITAL DESK 5 27 SEP, 2022 | 10:26 AM இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் திங்கட்கிழமை (26) இராணுவ அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இஸ்லாமிய மத முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இராணுவத்திற்கு ஆசி வேண்டி சிறப்பு இஸ்லாமிய மத வழிபாடுகள் இடம்பெற்றன. பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியன பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் அல்-ஹாஜ் மொஹமட் கலீல், செயலாளர் மற்றும் கொள்ளுபிட்டிய ஜும்மா பள்ளி வாசல் நிர்வாக சபை சபையின் உறுப்பினர்கள் , இராணுவ முஸ்லீம் சங்க தலைவர் பிரிகேடிய…
-
- 8 replies
- 512 views
- 1 follower
-
-
கோழிகளின்.... இறக்குமதி, குறைவடைந்துள்ளதால்... முட்டைகளுக்கு தட்டுப்பாடு. கோழிப் பண்ணைக்கு தேவையான, கோழிகளின் இறக்குமதி குறைவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது பண்ணைகளுக்கு சொந்தமான கோழிகளும் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். இதேநேரம், கோழிப்பண்ணை உற்பத்திக்குத் தேவையான கோழிகளின் இறக்குமதி 80,000 இலிருந்து 10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் கோழிப்பண்ணை தொழிலின் எதிர்காலம் குறித்து தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அமைச்சர…
-
- 31 replies
- 1.8k views
-
-
கொழும்பின் பல முக்கிய பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனம் : சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவிப்பு By Digital Desk 5 24 Sep, 2022 | 09:28 PM (நா.தனுஜா) கொழும்பின் பல முக்கிய இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டிருக்கும் உத்தரவு தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், 1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின் 2 ஆவது பிரிவு பரந்தளவிலான பொது இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கான அதிக…
-
- 3 replies
- 290 views
- 1 follower
-
-
2 கோடி ரூபா பெறுமதியான தங்கங்களை கடத்த முயன்ற விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது By T. SARANYA 27 SEP, 2022 | 05:22 PM கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோகிராம் எடையுள்ள 08 தங்க பிஸ்கட்டுகளை கடத்திச் செல்ல முயற்சித்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் இன்று (27) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த அதிகாரி கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்றுள்ளார். சுங்க ப…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
இலங்கை மின் தடை: தரமற்ற கச்சா எண்ணெயால் தத்தளிக்கும் நாடு - மின்சார உற்பத்தி பாதிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PUBLIC UTILITIES COMMISSION படக்குறிப்பு, இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் தரமற்றதினால், மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு, நாளொன்றுக்கு 3 மணி நேரம் மின் தடை நீடிக்கப்பட்டதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார். ''கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் போது, பெற்றுக்கொள்ளப்படும் ஃபேர்னஸ் எண்ணெய்யை, வெஸ்கொஸ்ட் மின் உற்பத்தி நிலையத்திற…
-
- 8 replies
- 832 views
- 1 follower
-
-
நாடு முழுவதும்... சுமார் 2,000 பேக்கரிகள் மூடல் ! மா மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் சுமார் 2,000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. பேக்கரி தொழிலுக்கு தேவையான பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக கிராமப்புறங்களில் உள்ள அனைத்து பேக்கரிகளும் மூடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கூறினார். இதன் காரணமாக இத் தொழிலை நம்பியுள்ள சுமார் 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2022/1301436
-
- 3 replies
- 663 views
- 1 follower
-
-
அதியுயர் பாதுகாப்பு வலயங்களை, பிரகடனப்படுத்திய... வர்த்தமானியை, இரத்து செய்ய ஜனாதிபதி தீர்மானம்? கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. உயர்பாதுகாப்பு வலயங்கள்... வர்த்தகங்களுக்கு, பாதகமான பாதிப்பை ஏற்படுத்துவதாக... சில பொருளாதார நிபுணர்கள் தெரிவித்ததையடுத்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக... ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயங்க…
-
- 3 replies
- 622 views
-
-
மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த 54 வயதுடைய நபரொருவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு உள்ளே இந்த சம்பவம் (25) இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் மட்டுமல்லாது, மதுபான போத்தல்களின் விலையும் அதிகரித்துள்ளது. மதுபானம் வாங்க முடியாத நிலையில், இவர் தொடர்ச்சியாக ஓடிகலோன் குடித்து வந்த…
-
- 0 replies
- 228 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தால் நிராகரிப்பு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூன்று பேரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டன. வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு தொடர்பான உண்மை விளம்பல் விசாரணை இடம்பெற்ற போதே, பிரதிவாதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட்டன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் 16 ஆவது சரத்தின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தரப்பிலான உயர் அதிகாரிகளால், மூன்று பிரதிவாதிகளிடமிருந்து தனித்தனியாக குற்ற ஒப்புதல் வாக்கும…
-
- 0 replies
- 195 views
-
-
இனியும் பொறுமை காக்க முடியாது; ரணிலை சுற்றிவளைப்போம் – மரிக்கார் எம்.பி. எச்சரிக்கை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை 2024 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருக்க ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், நாட்டில் நிலவும் பட்டினி நிலை மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறினால் ஜனாதிபதி விக்ரமசிங்கவை அவர் எங்கிருந்தாலும் சுற்றி வளைக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். . “நாங்கள் இன்னும் சில நாட்கள் மட்டுமே காத்திருப்போம், அவர் வசிக்கும் பகுதியை சுற்றி வளைப்போம், அவரை நகர அனுமதிக்காமல் ஒரு இடத்தில் அடைத்து வைப்போம்” என்று மரிக்கார் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். குட…
-
- 0 replies
- 216 views
-
-
ஜனாதிபதி ரணில் ஜப்பானில் பேச்சுவார்த்தை... ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை (Yoshimasa Hayashi) இன்று காலை டோக்கியோவில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி வரவேற்றார். அத்துடன் இலங்கைக்கான கடன் வழங்குனர்களுடன் நடத்தப்படும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் ஜப்பான் முன்னணி பங்கை வகிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கையின் கடந்த ஆட்சியில் பல முதலீட்டுத் திட்டங்களை இரத்துச் செய்ததைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது குறித்து ஜனாதிபதி விக்ரமசி…
-
- 0 replies
- 506 views
-
-
ரணிலுக்கு எதிராக... ஜப்பானில், போராட்டம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஜப்பானில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தங்கியிருக்கும் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலுக்கு முன்பாக இலங்கையர்கள் இந்த அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1301544
-
- 1 reply
- 225 views
-
-
வடக்கில்... சிறுவர் இல்லங்களுக்கு, தமது குழந்தைகளை அனுப்பவர்களின் எண்ணிக்கை... அதிகரிப்பு ! பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக, வடமாகாணத்தில் சிறுவர் இல்லங்களுக்கு தமது குழந்தைகளை அனுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022 ஜூன் மாதம் வரையில், 246 சிறுவர்கள், சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கில் உள்ள குழந்தைகள் சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்படுவதற்குப் பின்னால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார நெருக்கடி இருப்பதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை ஆணையாளர் குருபரன் இராஜேந்திரன் தெரிவித்தார். அரசாங்கம் எதிர்க…
-
- 0 replies
- 166 views
-
-
பல மணிநேர மின்வெட்டை அமுல்படுத்தும் சாத்தியம் ! By T. SARANYA 27 SEP, 2022 | 10:02 AM நாடளாவிய ரீதியில் இன்று (27) முதல் பல மணிநேர மின்வெட்டை அமுல்படுத்தும் சாத்தியம் காணப்படுகின்றது. நுரைச்சோலை அனல் மின்னிலையத்தின் 3வது அனல் மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மின்னிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நுரைச்சோலையின் 900 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்தி ஆலையின் அலகு ஒன்று இவ்வாறு பழுதடைந்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்ததுடன் மற…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
"தேசிய பேரவை" நாளை மறுதினம், முதல் தடவையாக.. கூடவுள்ளது – சபாநாயகர். தேசிய பேரவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் தடவையாக கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தேசிய சபைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அண்மையில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. சபாநாயகர் தேசிய சபையின் தலைவராக செயற்படுவார் என்றும் பிரதமர், அவைத்தலைவர், எதிர்க்கட்சி தலைவர்,அரசாங்கக்கட்சியின் பிரதம அமைப்பாளர் ஆகியோருடன் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த தேசியசபையில் செயற்படுவார்கள் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார். இதன்படி, டக்ளஸ் …
-
- 0 replies
- 231 views
-
-
ஈஸ்டர் தாக்குதலின், சூத்திரதாரி... சஹரான் ஹாசிமின் சாரதி உட்பட, நால்வர் பிணையில் விடுதலை. ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹரான் ஹாசிமின் சாரதி உட்பட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகநபர்களை தலா 35 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அத்தோடு, அவர்கள் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு – வவுனாதீவு பொலிஸ் நிலையத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்த…
-
- 0 replies
- 120 views
-
-
கோட்டாவினால் அறிமுகப் படுத்தப்பட்ட... ‘போராட்டத் தளம்’ தவறான இடத்தில் உள்ளது – பாதுகாப்புச் செயலாளர். இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘போராட்டத் தளம்’ தவறான இடத்தில் உள்ளது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனம் செய்தல் மற்றும் சட்டவிரோத போராட்டங்களுக்கு எதிராக பலத்தை பிரயோகிப்பது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘போராட்ட தளம் தவறான இடத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது என்பதை தாங்…
-
- 0 replies
- 174 views
-
-
24 Sep, 2022 | 09:27 PM தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில், சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமையானது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை களுத்துறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான இந்த நிகழ்வில் ந…
-
- 8 replies
- 617 views
-
-
குருந்தூர்மலை பிரதேசம், தமிழர்களுடையதல்ல. – கொழும்பில் ஆர்ப்பாட்டம். முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல, அது முழுமையாக பௌத்தர்களின் பிரதேசம் என தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் தமது சுயலாப அரசியலுக்காக பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2022/1301320
-
- 6 replies
- 794 views
-
-
கோட்டாவின் மனைவியிடம் தொலைபேசியில் மிரட்டி கப்பம் கோரியவர் கைது By T YUWARAJ 26 SEP, 2022 | 09:25 PM (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவி அயோமா ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் அழைத்து,மிரட்டி 10 இலட்சம் ரூபா கப்பம் கோரிய நபரை சி.ஐ.டி. எனும் குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது. கொலன்னாவை பகுதியில் அழகு கலை நிலையம் ஒன்றில் சேவையாற்றும் இளைஞர் ஒருவரையே சி.ஐ.டி.யினர் இவ்வாறு கைது செய்துள்ளனர். சந்தேக நபரை கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் சி.ஐ.டி.யினர் ஆஜர் செய்ததையடுத்து அவரை பொலிஸ் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலர் சு…
-
- 4 replies
- 408 views
- 1 follower
-
-
பிறந்து 7 நாட்களேயான கைக்குழந்தையை 50,000 ரூபாவுக்கு விற்பனை செய்த இருவர் கைது By T YUWARAJ 26 SEP, 2022 | 09:54 PM பிறந்து ஏழு நாட்களேயான கைக்குழந்தை ஒன்றை 50,000 ரூபாவுக்கு விற்பனைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுராதபுரத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த குழந்தை குழந்தையின் தந்தையால், விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குழந்தையின் தாய் மேற்கொண்ட முறைப்பாட்டுகமைய, சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குழந்தையை விற்பனை உதவியதாக கூறப்படும் தாதி ஒருவரின் கணவரும், அதனை விலைக்கு வாங்கிய பெண்ணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக…
-
- 0 replies
- 429 views
- 1 follower
-
-
தனியார் வங்கியில்... கொள்ளை : இரு சந்தேக நபர்கள், ஆயுதங்களுடன் கைது. தனியார் வங்கியொன்றில் 5 மில்லியன் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள வங்கியில் இடம்பெற்ற இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக துப்பாக்கியுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். https://athavannews.com/2022/1301382
-
- 0 replies
- 191 views
-