ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
மக்களுக்கு சிரமமாக இருந்தாலும் மின் கட்டண உயர்வு கட்டாயம்: காஞ்சன விஜேசேகர Digital News Team 2022-08-29T14:36:26 மின்கட்டண அதிகரிப்பு மக்களுக்கு சிரமமாக இருந்தாலும், சபையின் செலவுகளை பார்க்கும் போது இது செய்யப்பட வேண்டிய ஒன்று என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் மற்றும் தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்காக மின்சார சபைக்கு 7600 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொக…
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
யானை தாக்கி சிறுமி பலி! Digital News Team 2022-08-29T12:53:28 ஹசலக்க, கங்கேயாய, பஹே எல பகுதியில் மாணவி ஒருவர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று (28) காலை உயிரிழந்துள்ளார். ஹசலக்க, கங்கேயாய, பஹே எல குதியைச் சேர்ந்த அனுத்தரா இந்துனில்(16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி இன்று (29) நடைபெறும் செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றவிருந்தார். இறந்த சிறுமியின் ஒரே மூத்த சகோதரர் 14 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அண்ணன் இறந்த 14 வது நாளில், காலையில் விகாரைக்கு அன்னதானம் எடுத்துச் சென்றபோது மாணவி யானை தாக்கியதால் உயிரிழந்தார். …
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
இந்தியா செல்லும் இலங்கையரைத் தடுக்க நடவடிக்கை! இலங்கையில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் நோக்குடன் இந்தியா செல்லும் இலங்கை அகதிகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை இந்திய கடலோர காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். இலங்கையில் இருந்து மக்கள் இந்தியாவிற்குள் பிரேவேசிக்காமல் இருப்பதை உறுதி செய்வதாக இந்திய கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் வீரேந்திர சிங் பதானியா தெரிவித்துள்ளார். இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் இருந்து பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை 160 ற்கும் மேற்பட்டவர்கள் தமிழ் நாட்டை சென்றடைந்துள்ளனர். …
-
- 0 replies
- 389 views
-
-
யாழில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட முக்கிய நபர் கைது By VISHNU 29 AUG, 2022 | 11:43 AM யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கோண்டாவில் புகையிரத பகுதியில் குறித்த நபர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் 27 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் பெற்றுக்கொண்ட 75 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் குறிப்பி…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
நாளாந்த மின் விநியோக துண்டிப்பினை ஒரு மணித்தியாலமளவில் குறைக்க முடியும் - இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு By T. SARANYA 29 AUG, 2022 | 10:20 AM (இராஜதுரை ஹஷான்) நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கி தொகுதி திருத்தப்பட்டுள்ளதால் நாளாந்த மின் விநியோக துண்டிப்பினை இனி ஒரு மணித்தியாலமளவில் மட்டுப்படுத்த முடியும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் செயலிழக்கப்பட்ட முதலாவது மின் பிறப்பாக்கி தொகுதி தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதால் தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பில் 300 மெகாவாட் மின் இணைக்கப்ப…
-
- 0 replies
- 104 views
- 1 follower
-
-
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான... விமான சேவை, மீள ஆரம்பம்! யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை ஆரம்பிக்க எயார் இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய... எயார் இந்தியா நிறுவனம், அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு... இரண்டு முறை பலாலிக்கு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1296502
-
- 2 replies
- 241 views
-
-
கோட்டாவிற்கு... உத்தியோகபூர்வ இல்லமொன்றை, வழங்குவதில்... சட்ட சிக்கல் !! தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்குவதற்கு சட்ட சிக்கல்கள் இருப்பதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பதவிக்காலத்தை நிறைவு செய்யாமல் பதவியை இராஜினாமா செய்து தனது பொறுப்பை கோட்டாபய ராஜபக்ச கைவிட்ட நிலையில் அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான சிறப்புரிமைகள் கிடைக்காது என தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படுமாயின் அதனை நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்த நேரிடலாம் என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ச இல…
-
- 0 replies
- 165 views
-
-
பிரித்தானியாவின் முயற்சியால்... புதிய, பிரேரணை: சுமந்திரனும்... பிரேரணை தயாரிப்பில்! எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரித்தானியாவின் முயற்சியால் புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மலாவி போன்ற நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பிரேரணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 46 கீழ் 1 தீர்மானம் காலாவதியானதையடுத்து, புதிய தீர்மானத்தை…
-
- 0 replies
- 215 views
-
-
தடை நீக்கப்பட்ட, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன்... கூட்டமைப்பு பேச்சுநடத்தவில்லை- ஸ்ரீதரன். வடக்க – கிழக்கு இடைக்கால நிர்வாகம் தொடர்பாக அரசினால் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பேச்சுக்களில் ஈடுபடவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இடைக்கால நிர்வாகம் குறித்து தற்பொழுது பல்வேறு தரப்பினரும் பல்வேறான கருத்துக்களை கூறி வருகின்றனர். இடைக்கால நிர்வாகம் என்பதற்கு நாங்கள் பல்வேறு அனுபவங்களைக்கொண்டவர்கள். ஏற்கனவே 1987ம் ஆண்டில் தம…
-
- 0 replies
- 277 views
-
-
நாடளாவிய ரீதியில்... இரண்டாயிரத்திற்கும் அதிகமான, பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன! தற்போதைய சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளது. மொத்த சந்தையில் தற்போது 50 கிலோகிராம் கோதுமை மா 17 ஆயிரம் ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1296468
-
- 0 replies
- 172 views
-
-
பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களை தேசிய மட்டத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை By VISHNU 28 AUG, 2022 | 04:06 PM K.B.சதீஸ் யுத்தத்திற்குப் பின்னர் சமூகத்தில் பெண் தலைமைக் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சவால்களை மக்கள் திட்டம் ஒன்றியத்தின் பிரநிதிகளால் தேசிய மட்டத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியா எழுதுவினைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மக்கள் திட்ட ஒன்றியத்தின் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் வடக்கில் மக்கள் திட்ட ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் வே…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
யாழில் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது By T YUWARAJ 28 AUG, 2022 | 06:46 PM யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் போதைப்பொருளுடன் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 80 கிராம் ஹெரோயின், திருடப்பட்ட 7 துவிச்சக்கர வண்டிகள், 4 மின் மோட்டார்கள் , 02 எரிவாயு சிலிண்டர்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளான குப்பிளான் , புன்னாலைக்கட்டுவன் பகுதிகளில் அண்மைய நாட்களில் மின்…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
யாழில் எலிக்காய்ச்சலால் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு ! By DIGITAL DESK 5 28 AUG, 2022 | 04:45 PM யாழ்ப்பாணம் கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் குறித்த சிப்பாய் கடந்த 22ஆம் திகதி எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் , முன்னதாக பலாலி இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அங்கிருந்த மேலதிக சிகிச்சைக்காக கடந்த 25 ஆம் திகதி யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறுநாள் 26ஆம் திகதி சிகிச்சை ப…
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
கலப்பு பொறிமுறை -இராணுவ அரசியல் தலைமைக்கு எதிரான ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது - மனித உரிi பேரவை பிரநிதிகளிடம் இலங்கை தெரிவிப்பு By RAJEEBAN 28 AUG, 2022 | 01:30 PM - செப்டம்பர் பத்தாம் திகதிக்கு ஓரிரு நாட்களிற்கு முன்னர் மனித உரிமை ஆணையாளரின் நகல் அறிக்கையை ஜெனீவாவில் உள்ள இலங்கை பிரதிநிதிகளுடன் பகிர்ந்துகொள்வதற்கு முங்கொவன் இணங்கியுள்ளார். - ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51வது அமர்விற்கு முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மனித உரிமை பேரவையின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ரொரி முங்கொவன…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
எங்கே செல்வார் ரணில்? By DIGITAL DESK 5 27 AUG, 2022 | 03:36 PM ஹரிகரன் “சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் அரசாங்க இறுதிச் சடங்கு, வரும் செப் டெம்பர் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கத் திட்டமிட்டிருக்கிறார்” “பொருளாதார நெருக்கடிகளை அடுத்து இலங்கையில் 12திட்டங்களை ஜப்பான் இடைநிறுத்தி வைத்திருக்கிற நிலையில் அதனிடம், 3.5பில்லியன் டொலர் கள் உதவிக் கோரிக்கையை இலங்கை விடுத்திருந்த போதும், அது இறுதி செய்யப்படவில்லை” இலங்கையில் அரச தலைவர்களாகப் பதவியேற்றுக் கொள்பவர்கள் முதலில் இந்தியாவுக்கும், அடுத்து சீனாவுக்கும் அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொள்வது …
-
- 0 replies
- 448 views
- 1 follower
-
-
இலங்கையில் சீனத் தூதர் கட்டுரைக்கு கடுமையாக பதிலடி தந்த இந்தியா - என்ன நடந்தது? 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,YUVAN WANG 5 இலங்கைக்கான சீனத் தூதர் இலங்கை பத்திரிகை ஒன்றில் அமெரிக்காவையும், பெயர் குறிப்பிடாமல் இந்தியாவையும் விமர்சித்து எழுதிய கட்டுரை ஒன்றுக்கு இந்தியத் தூதரகம் கடும் பதிலடி தந்து ட்வீட் செய்துள்ளது. சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசி தைவான் வருகை புரிந்ததையும், சீனாவின் யுவான் வாங் 5 ஆய்வுக் கப்பலை இந்தியாவின் எதிர்ப்பை மீறி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட இலங்கை அனுமதித்த செயலையும் ஒப்பிட்டு இலங்கைக்கான சீனத் தூதர் சே ஜெ…
-
- 2 replies
- 270 views
- 1 follower
-
-
150 பில்லியன் ரூபாவினை, செலுத்த... அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு. அரசாங்க வேலைத்திட்டங்களுக்காக நிர்மாணவியல் துறைக்கு செலுத்த வேண்டிய 150 பில்லியன் ரூபாவினை அரசாங்கம் செலுத்த தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை தேசிய நிர்மாணவியல் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். கடந்த ஒரு வருடக் காலத்திற்கு செலுத்த வேண்டிய இந்த தொகையை அரசாங்கம் செலுத்தாது தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நிதி செலுத்தமையினால் 4 ஆயிரம் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 100 பாரிய நிறுவனங்கள் என்பன பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியு…
-
- 2 replies
- 331 views
-
-
யாழ். மாநகர சபைக்கு... வழங்கிய நிதியை, மீள கோரும் ஜப்பான். தம்மால் முன்மொழியப்பட்ட சீரமைக்கப்பட்ட நான்கு கழிவு சேகரிப்பு மீள்சுழற்சி பாரவூர்தி உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தாதன் காரணமாக, அதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை மீள ஒப்படைக்குமாறு ஜப்பானிய தூதரகம் யாழ்ப்பாண மாநகர சபையிடம் கோரியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஜப்பானிய இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம், ஜப்பானிய உள்ளூராட்சி மன்றங்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட நான்கு கழிவு சேகரிப்பு மீள்சுழற்சி வாகனங்களை வழங்குவதற்காக, யாழ் மாநகர சபையுடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டது. அதன்படி, நான்கு வாகனங்களை கொள்வனவு செய்தல், இறக்குதல், சுங்க அனுமதி மற்றும் உள்நாட்டுப் போக்குவரத்து தொடர்பான…
-
- 14 replies
- 805 views
-
-
கோட்டாபய ராஜபக்ஷ போன்று... செயற்படுமாறு, ஜனாதிபதியிடம்... முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் கோரிக்கை. இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செய்த விடயங்களை கடைப்பிடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமக்கான நிறுவனங்களையும் நோக்கங்களையும் வர்த்தமானியில் வெளியிட்டு இராஜாங்க அமைச்சர்களை நியமிக்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். அவ்வாறு செய்வதன் மூலம் அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் ஏற்படக்கூடிய முரண்பாடுகள் பெருமளவில் குறைக்க முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள…
-
- 2 replies
- 200 views
-
-
”ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராக ரஞ்சன் நியமிக்கப்படுவார்” ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிரஜாவுரிமையோ, அரசியல் செய்யும் உரிமையோ, தேர்தலில் போட்டியிடும் உரிமையோ இன்னும் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஓரளவு விடுதலையே வழங்கப்பட்டுள்ளதாகவும் அது அரசியலமைப்பின் 34 வது உறுப்புரையின் 1ஈ பிரகாரம் வழங்கப்பட்டுள்ள விடுதலை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதன்பிரகாரம் அவர் சிறையில் கழிக்க வேண்டிய எஞ்சிய காலம் மாத்திரமே நீக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 34 வது உறுப்புரையின் இரண்டாவது பிரிவின் கீழ் அவருக்கு விடுதலை வழங்கப்பட வேண்டும் என்றாலும் அது ந…
-
- 0 replies
- 165 views
-
-
அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை... மீறியுள்ளார், சீனத் தூதுவர் : இந்திய உயர் ஸ்தானிகராலயம் குற்றச்சாட்டு. அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறும் வகையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கையின் இறையாண்மை, சுயாதீனம் மற்றும் ஒருமைப்பாடு மீறப்படுவதை சீனா எந்தச் சந்தர்ப்பத்திலும் சகித்துக்கொள்ளாது என இலங்கைக்கான சீனத் தூதுவர் கூறியிருந்தார். தாய்வான் நீரிணையின் இராணுவ மயமாக்கல் மற்றும் சீனாவின் யுவான் வங் 5 கப்பலின் ஹம்பாந்தோட்டை வருகை ஆகியவற்றை தொடர்புபடுத்தி அவர் இந்த கருத்தை வெளியிட்டமைக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வடக…
-
- 0 replies
- 150 views
-
-
தேசிய பாதுகாப்புச் சட்டம்... இன்னும், ஆரம்ப கட்டத்திலேயே இருக்கின்றது !! பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக அரசாங்கம் கொண்டுவர திட்டமிட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் இன்னும் ஆரம்ப கட்ட பணிகளிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாவதியான சட்டங்களை எவ்வாறு புதுப்பித்தல் மற்றும் சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப எப்படி சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருவது என்பதை ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டம் அதிகாரிகளினால் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து சர்வதேச நாடுகள் உட்பட பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு அமைச்சர் பந்துல குணவர்தனவின் அண்மை…
-
- 0 replies
- 141 views
-
-
எதிர்வரும் 30ஆம் திகதி... கொழும்பில், மீண்டும் போராட்டம்? எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பில் போராட்டத்தை நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. அத்துடன், நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தினை முன்வைத்து உரையாற்றவுள்ளார். இந்தநிலையிலேயே அன்றைய தினம் கொழும்பிற்கு வந்து போராட்டம் நடத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் ஏற்கெனவே தீர்மானித்துள்ளதாக புலனாய்வு பிரிவு, அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது. https://athavannews.com/2022/1296322
-
- 0 replies
- 273 views
-
-
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்ற ஒன்றே இல்லாத நிலையில் அதன் பெயர் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டமை நியாயமானதே என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார். அண்மையில் இது பற்றி கல்முனை தமிழ் மக்கள் தரப்பிலிருந்து எழுப்பப்பட்டுள்ள பிரசுரம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவித்ததாவது, கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கக்கூடிய வகையில் உப பிரதேச செயலகம் 1989ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது ஒரு தனியான பிரதேச செயலகம் அல்ல, மாறாக உப செயலகமாகும். ஆனால் யுத்த காலத்தில் இதற்கான பெயர் கல்முனை தமிழ் செயலகம் என்றும்…
-
- 1 reply
- 166 views
-
-
இலங்கையில்... சராசரி குடும்பத்திற்கு, மாதம் 110,000 ரூபாய் தேவை – ஆய்வு. பணவீக்கம் அதிகரிப்பு காரணமாக இலங்கையில் சராசரி குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வுச் செலவு 110,000 ஆக அதிகரித்துள்ளததாக பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் ஒரு சராசரி குடும்பத்தின் மாதாந்த நுகர்வுச் செலவு 63,000 ஆக இருந்த நிலையில் அது இன்று 47,000 ரூபாயினால் அதிகரித்துள்ளது என பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்தார். 2019 இல் 14,500 ஆக இருந்த வறுமையில் வாடும் குடும்பத்தின் மாதாந்த நுகர்வுச் செலவு, பணவீக்கம் காரணமாக 11,000 ஆயிரத்தால் அதிகரித்து தற்போது 25,500 ரூபாயாக உயர்ந்துள்ளது என பேராசிரியர் அத்துகோரள தெரிவித்தார். பண…
-
- 0 replies
- 153 views
-