ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
மன்னார் காற்றாலை விவகாரம்: குற்றச்சாட்டை மறுத்த ஜனாதிபதி – மன்னிப்புக் கோரிய மின்சார சபைத் தலைவர்! கோப் குழுவின் முன்னிலையில் மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மன்னார் காற்றாலை மின் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்குவதற்கு சர்வாதிகார அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கோப் குழுவில் ஆஜராகியிருந்த…
-
- 1 reply
- 308 views
- 1 follower
-
-
தனிக் கட்சி அமைக்கும் பொன்சேகா – கூட்டணி அமைக்கும் டலஸ்! ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனிக் கட்சியொன்றை அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஏற்கனவே ஜனநாயக கட்சியை அமைத்திருந்த நிலையில், பின்னர் அவர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டு அந்தக் கட்சியை கலைத்தார். பின்னர் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பாராளுமன்றம் வந்தார். இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சிக்குள் நிலவும் அதிருப்திகள் காரணமாக அவர் தனிக் கட்சியை அமைக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஶ்…
-
- 4 replies
- 445 views
-
-
மே 9 போராட்டமும் தீவைப்பும் – 857 சம்பவங்களில் 1,083 பேருக்கு விளக்கமறியல்! June 12, 2022 மே மாதம் 9 ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில், ஒவ்வொரு நாளும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன எனத் தெரிவித்துள்ள காவற்துறை தலைமையகம். விபரமொன்றையும் வெளியிட்டுள்ளது. இன்று (12.06.22) காலை நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (11.06.22) கைதுசெய்யப்பட்ட 22 பேரில், 08 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மே.9 மற்றும் அதனை அண்மித்த நாட்களில் இடம்பெற்ற 857 வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 2,725 பேர் கை…
-
- 0 replies
- 136 views
-
-
ஒக்டோபர் மாதம் வரை... IMF நிதி கிடைக்காது: ரஷ்யா, சீனாவின்... உதவிகளை கோருகின்றார் பிரதமர் ! சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஒக்டோபர் மாதம் வரை இலங்கைக்கு கடன் கிடைக்க வாய்ப்பில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் ஏனைய நட்பு நாடுகளிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியானது தவறான நிர்வாகம், வரி குறைப்பு மற்றும் உரப்பிரச்சினை போன்றவற்றின் காரணமாக ஏற்பட்டது என பிரதமர் தெரிவித்தார். இருப்பினும் கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா – உக்ரேன் யுத்தம் காரணமாக இந்நிலைமை மிக மோசமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது ஏற்பட்…
-
- 7 replies
- 355 views
-
-
திங்கட்கிழமை முதல்... எரிபொருள், நெருக்கடி – தொழிற்சங்கம் நாட்டில் நாளை திங்கட்கிழமை முதல் எரிபொருள் நெருக்கடி மேலும் மோசமடையும் என தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே நாட்டில் டீசல் கிடைக்கும் என தொழிற்சங்க பிரதிநிதி ஆனந்த பாலித கூறியுள்ளார். எரிபொருட்கள் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும், நாளை முதல் பாரிய மக்கள் வரிசை காணப்படும் என்றும் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். 95 வீதமான மக்கள் மண்ணெண்ணெய் தேவையை பூர்த்தி செய்யத் தவறினால் மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என ஆனந்த பாலித எச்சரித்துள்ளார். https://athavannews.com/2022/1286651
-
- 0 replies
- 127 views
-
-
எதிர்வரும் நாட்களில்... மாற்றம், தேர்தலை... எதிர்கொள்ளவும் தயார் : ஆளும் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகள் எதிர்வரும் நாட்களில் மறுசீரமைக்கப்படும் என்றும் எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்க்கொள்ள தயார் என்றும் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்தமைதொடர்பாக வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சியை நாட்டு மக்கள் ஏற்படுத்தினார்கள் என கூறினார். ஆனால் கடந்த இரண்டு வருட க…
-
- 0 replies
- 255 views
-
-
அமெரிக்காவின் தேவைக்காக.. செயற்படுகிறார், ரணில் – பேராசிரியர் திஸ்ஸ விதாரன குற்றச்சாட்டு. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போதும் அமெரிக்காவின் தேவைக்காக செயற்படுகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் பிரச்சினைகளை குறிப்பிடுகிறதே தவிர நடைமுறைக்கு சாத்தியமான தீர்வினை முன்வைக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். சமகால அரசியல் நிலைவரம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்தமை பிறிதொரு அரசியல் நாடகம் என்றும் அவர் குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்ஷவின் கருத்துகளுக்கு ஜனாதிபதி அவதானம் செலுத்தாத காரணத்தினால் அரசியல் ரீதியில் பாரிய விளைவுகள் ஏற்பட்டது என்றும்…
-
- 0 replies
- 100 views
-
-
நெருக்கடிக்கு காரணமான... தரப்பினரை, அரசாங்கம் வெளிப்படுத்தாமல் பாதுகாக்கின்றது – அனுர நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு காரணமான தரப்பினரை வெளிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என தேசிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. பொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார். நெருக்கடி குறித்து அரசாங்கம் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வருகின்ற போதிலும், முக்கிய நபர்களை மக்களுக்கு அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்தார். உணவு நெருக்கடி, கடினமான காலங்கள் வரவுள்ளதாக ஆட்சியாளர்கள் எச்சரித்த போதிலும், நெருக்கடிகளுக்குப் பின்னால் உள்ள தனிநபர்கள் பாதுகாக்கப்படுவதாக…
-
- 0 replies
- 238 views
-
-
கௌரவமான முறையில்... பசில் இராஜினாமா செய்தமை, வரவேற்கத்தக்கது என்கின்றார் வாசுதேவ கௌரவமான முறையில் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்தமை வரவேற்கத்தக்கது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை விவகாரத்தை தோற்கடிக்க பஷில் ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும் குறிப்பிட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தவிர்த்து ஏனைய ராஜபக்ஷர்கள் அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இந்நிலையில் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்…
-
- 0 replies
- 96 views
-
-
எரிபொருள் விநியோகம், தடைப்படும் சாத்தியம். எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் விநியோகத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்படுமென இலங்கை பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு முன்பணம் செலுத்த வேண்டுமென பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளதாக அச் சங்கம் தெரிவித்துள்ளது. முற்பணம் செலுத்தும் போது காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படுமோ என்ற நிலைமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகையால் விநியோக நடவடிக்கைகள் சிக்கலடையும் நிலைமை காணப்படுவதாக பெற்றோலிய தாங்கி உரிமையாளர்கள் சங்கம் குறிபிட்டுள்ளது . https://athavannews.com/2022/1286629
-
- 1 reply
- 255 views
-
-
மத்தள விமான நிலையம், தனியார் மயமாக்கப்படாது – நிமல் சிறிபால டி சில்வா மத்தள விமான நிலையத்தின் ஊடாக மாதாந்தம் 100 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பொறுப்பதிகாரிகள் மத்தள விமான நிலையத்திற்கு விஜயம் செய்து தற்போதைய நிலைமையை பார்வையிட்டு ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார் . மேலும் மத்தள விமான நிலையம் தனியார் மயமாக்கப்படாமல் தொடர்ந்தும் புனரமைக்கப்படும் எனவும், விமான நிலையத்தில் ஏற்படும் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் . https://athavannews…
-
- 0 replies
- 85 views
-
-
நீர்கொழும்பில் இருந்து... அவுஸ்ரோலியாவுக்கு, படகில் சென்ற 36 பேர் கைது நீர்கொழும்பில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு இயந்திர படகு ஒன்றில் சட்டவிரோதமாக சென்ற 36 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்கள் . இன்று அதிகாலை குறித்த கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவுஸ்ரோலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த படகை கடற்படையினர் இடைமறித்து சோதனையிட்டபோது அதில் 6 சிறுவர்கள் 6 பெண்கள் உட்பட 36 பேர் சட்டவிரோதமாக சென்றமை தெரியவந்துள்ளது . இதனையடுத்து படகை வாழைச்சேனை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அதில் நீர்கொழும்பு, யாழ்ப்பாணம். மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்வர்கள் உள்ளடங்குறார்க…
-
- 0 replies
- 187 views
-
-
நூற்றுக்கணக்கான பிக்குகளின் பங்கேற்புடன் குருந்தூர்மலையில் நாளை புத்தர் சிலை பிரதிஷ்டை : எதிர்ப்பு போராட்டத்துக்கு தயாராகும் தமிழர்கள் கே .குமணன் இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் முல்லைத்தீவு குமுளமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டுவரும் குருந்தாவசோக புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும் நாளை (12)காலை ஒன்பது மணிக்கு நூறுக்கணக்கான பௌத்த பிக்குகளின் பங்கேற்புடனும் இராணுவம் பொலிஸ் ,விமானப்படை ,கடற்படையினரின் பங்கேற்புடனும் இடம்பெறவுள்ளது. இதேவேளை நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி மிக பெருமெடுப்பில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில் புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு …
-
- 3 replies
- 634 views
-
-
குடிவரவு, குடியகல்வு... திணைக்களத்தின் அறிவிப்பு. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமைக்காரியாலயம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய காரியாலயங்களும் எதிர்வரும் (திங்கட்கிழமை) திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை அரச பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்து எனினும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமைக்காரியாலங்களும் , பிராந்திய காரியாலயங்களும் திறக்கப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது . https://athavannews.com/2022/1286613
-
- 0 replies
- 295 views
-
-
தனியார் பேருந்து சேவைகள்... முழுமையாக, முடங்கும் அபாயம். நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, அடுத்த வாரத்தில் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபையினால் வழங்கப்படும் டீசல் தற்போது பற்றாக்குறையாக உள்ளதோடு டீசல் இன்மையால் இன்றைய தினம் பெருமளவான பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் அடுத்த வாரம் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கக்கூடும் எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார் . https://athavannews.com/2022/1286608
-
- 1 reply
- 206 views
-
-
மே 9 தாக்குதலுக்குப் பின்னால் பெளத்த விகாரைகளும் கிறிஸ்தவ தேவாலயங்களுமே இருந்துள்ளன : பிரசன்ன ரணதுங்க (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) மே மாதம் இடம்பெற்ற கலவரத்துக்குப் பின்னால் பெளத்த விகாரைகளும் கிறிஸ்தவ ஆலயங்களுமே இருந்துள்ளன. இந்த நாடு சிங்கள பெளத்த நாடு என்று கூறுவதற்கு மனமில்லை. ஏனெனில் எனது வீட்டுக்கு தாக்குதல் மேற்கொண்வர் தேரர் ஒருவராவார் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற காலம் சென்ற அமரகீர்த்தி அத்துகோரலின் மறைவு தொடர்பான அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், எமது நாடு சிங்கள பெளத்த நாடு என…
-
- 9 replies
- 488 views
- 1 follower
-
-
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 24,000 கிலோ கிராம் அப்பிள், தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிச் செய்த உரிமையாளர்கள், அதனை பெற்றுக் கொள்ளாமையால், துறைமுக அபிவிருத்தி விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வாவின் தீர்மானத்துக்கு மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகளிடம், அவை இன்று கையளிக்கப்பட்டன. கொழும்பு சர்வதேச துறைமுகத்தின் சி.அய்.சி.டி பகுதிக்கு, பெப்ரவரி மாதம் சீனாவில் இருந்து குறித்த அப்பிள் கொள்கலன்கள் (கென்டய்னர்கள்) வந்துள்ளனர். அந்த அப்பிள் கொள்கலன்களை, இறக்குமதி செய்தவர்கள் இதுவரையில் கொண்டு செல்லாமல் இருப்பது தொடர்பாக தனக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்தே, சி.அய்.சி.டி நிறுவனத்திடம் நடத்திய பேச்…
-
- 1 reply
- 408 views
- 1 follower
-
-
ஜனாதிபதி பதவி விலகினால் ஓராண்டு கடன் திட்டத்தின் கீழ் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியும் - மரிக்கார் (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் , மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து ஓராண்டாக்கு கடன் திட்டத்தின் எரிபொருளை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். அத்தோடு நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளைக் காரணமாகக் காண்பித்து தேசிய சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்க முடியாது. அதானி நிறுவனத்திற்கு வேலைத்திட்டங்களை வழங்கி , இந்தியாவிடம் கையேந்துவது தவறான விடயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கொழ…
-
- 0 replies
- 160 views
-
-
நாட்டிற்கு வரும் எரிபொருள் கப்பல்கள் எதிர்வரும் வாரங்களில் ஐந்து எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாளை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையான 12 நாட்களுக்குள் இவ்வாறு எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இருகப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எதிர்வரும் 16 ஆம் திகதி இந்திய கடன் திட்டத்தின் இறுதி டீசல் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் 22 ஆம் திகதி மற்றுமொரு பெட்ரோல் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதுடன் 20 ஆம…
-
- 2 replies
- 362 views
-
-
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கையிருப்பை அனைவரும் அறிய இணைத்தளம்! அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக விசேட இணையத் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இதனை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி மாகாணம், மாவட்டம் மற்றும் பிரதேசத்தை தெரிவு செய்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருக்கும் எரிபொருள் வகைகளின் இருப்பை அறிந்துகொள்ள முடியும். https://fuel.gov.lk/ இணையத்தளத்தில் அந்தத் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். http://www.samakalam.com/எரிபொருள்-நிரப்பு-நிலையத/
-
- 0 replies
- 293 views
-
-
யாழில்... மாற்றுப்பாலின, சமூகத்தினருக்கு எதிரான... ஒடுக்குமுறைகளை, கண்டித்து விழிப்புணர்வு பேரணி. மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) பேரணியொன்று இடம்பெற்றது. யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் யாழ் நகரப்பகுதிகளில் பேரணியாகச் சென்றனர். யாழ் திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் மாற்றுப்பாலின சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்குட்படுத்தாத வாழ்தலை நோக்கி குரல் கொடுப்போம் என்ற நோக்கில் வானவில் நடைபயண ஒருங்கிணைவு எனும் தலைப்பில் இந்தப் பேரணி இடம்பெற்றமை குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1286583
-
- 0 replies
- 210 views
-
-
சுற்றுலாப் பயணிகளை, கவர... திட்டங்களை கண்டறியுங்கள் – ஜனாதிபதி பணிப்பு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான புதிய அணுகுமுறைகளைக் கண்டறிய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சுற்றுலாத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா தொற்றுநோயால் முடங்கியிருந்த சுற்றுலாத் துறை, மீட்சியடைந்தாலும் நெருக்கடியில் தள்ளாடிக்கொண்டிருப…
-
- 3 replies
- 212 views
-
-
மனிதாபிமான... நெருக்கடி உருவாகலாம் – ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை. இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி தட்டுப்பாடு காரணமாக முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இலங்கையின் உடனடி மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை தமது உறுப்பு நாடுகளிடம் 47 மில்லியன் டொலர் நிதி உதவியை கோரியுள்ளது. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர்களில் ஒருவரான ஜென்ஸ் லெயிர்க்கி தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் ஏற்கனவே செலுத்த வேண்டிய நிதி நிலுவை 51 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அந்நிய செலாவணி பிரச்சினை காரணமாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி செயற்பாடுகளை மேற்கொள்…
-
- 1 reply
- 98 views
-
-
உணவுப் பாதுகாப்பிற்கு... முதலிடம் கொடுக்க வேண்டும் – விதுர விக்கிரமநாயக்க நாட்டில் உணவுப் பாதுகாப்பிறகு முதலிடம் கொடுக்க வேண்டும் என அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டிலே அல்லது உலகிலோ அனைத்து அம்சங்களும் உணவுப் பாதுகாப்பில் தங்கியுள்ளன சுட்டிக்காட்டினார். 90 களில் தொழில்மயமாக்கலை நோக்கி நகர்த்த முயற்சிகள் மூலம் உருவாக்கப்பட்ட திறந்த சந்தைக் கொள்கை காரணமாக உள்ளூர் விவசாயம் தோல்வியடைந்ததாகவும் அவர் கூறினார். பஞ்சம் வரவுள்ளதாக உலக உணவுத் திட்டம் அறிவித்துள்ளது என்றும் இது முழு உலகத்தையும் பாதிக்கும் என்றும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டார். விவசாயத்தி…
-
- 3 replies
- 209 views
-
-
இலங்கை வருகின்றார்... உலக உணவுத் திட்டத்தின், நிறைவேற்றுப் பணிப்பாளர் ! ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டேவிட் பீஸ்லி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். உலக உணவுத் திட்டத்தின் தலைவரை நாட்டிற்கு விஜயம் செய்யுமாறு தான் அழைப்பு விடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர், உலக உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அனைத்து ஆதரவையும் பாராட்டுவதாகவும் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1286557
-
- 0 replies
- 90 views
-