ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142867 topics in this forum
-
வன்முறைச் செயல்களில்... ஈடுபட வேண்டாம் – பாதுகாப்புச் செயலாளர் வன்முறைச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் நாயகம் கமல் குணரத்ன அனைத்து மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். விசேட அறிக்கையொன்iற வெளியிட்டுள்ள அவர், ஜனநாயக ரீதியில் போராட்டம் வெற்றிபெற இளைஞர்கள் உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில், பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவிக்கையில், “இவர்கள் அனைவரும் நமது நாட்டின் குடிமக்கள், இலங்கையர்கள், அதாவது, எங்கள் மக்கள், எனவே அவர்கள் அனைவரும் இலங்கையர்கள். எத்தகைய அரசியல் கருத்துக்களைக்கொண்டிருந்த போதிலும் எத்தகைய அரசியல் கட்சியை சார்ந்திருந்த போதிலும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள்.எனவே இன்று இந்த போராட்டத்தில் ஈடு…
-
- 0 replies
- 141 views
-
-
எந்தவொரு தேவாலயத்தின் மீதும்.... தாக்குதல், மேற்கொள்ளப்படவில்லை – நீர்கொழும்பு பதற்றம் குறித்து அருட்தந்தை தகவல்! எந்தவொரு தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என நீர்கொழும்பு பொலவலனா பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்த விதான தெரிவித்துள்ளார். சிலர் குறித்த பகுதிகளிலுள்ள தேவாலயங்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என போலியான செய்திகளை பரப்பி வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இவ்வாறானா போலியான செய்திகளைக் கண்டு மக்கள் ஏமாறக்கூடாது எனவும் நீர்கொழும்பு பொலவலனா பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்த விதான தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் வகையில் சிலர் இவ்வாறான போலியான செய்திகளை பரப்பி வருவதாகவும் அவர் ச…
-
- 0 replies
- 151 views
-
-
மீண்டும்... நீடிக்கப்பட்டது, ஊரடங்கு உத்தரவு! நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12ஆம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது https://athavannews.com/2022/1281212
-
- 1 reply
- 184 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களின்... பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட்டதன் பின்னரே, நாடாளுமன்றம் கூட்டப்படும் – சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேட நாடாளுமன்ற அமர்வுகளை கூட்டாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாளை(புதன்கிழமை) நடைபெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே நாடாளுமன்றம் கூட்டப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281234
-
- 0 replies
- 242 views
-
-
நாட்டை... யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை... மஹிந்த, ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்! நாட்டை யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலை தொடர்ந்து சர்வமத தலைவர்கள் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிடும் போதே ஓமல்பே சோபித தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் காலி முகத்திடல் அமைதி வழி போராட்ட…
-
- 0 replies
- 110 views
-
-
மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களினால்.... இதுவரை 8 பேர் உயிரிழப்பு – சேத விபரங்களும் வெளியாகின! நாடளாவிய ரீதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 41 வாகனங்களும், 65 வீடுகளும் சேதமடைந்துள்ளன. அத்துடன், நேற்றைய வன்முறை சம்பவங்களால் 38 வீடுகளும், 47 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த 8 பேரில் ஆறு பேர் மேல் மாகாணத்திலும், இருவர் தென் மாகாணத்தில் நடந்த வன்முறையின்போதும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன். மேல் மாகாணத்தில் மாத்திரம் …
-
- 0 replies
- 150 views
-
-
இன்றும்... 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு, மின்வெட்டு! நாட்டில் இன்றும்(புதன்கிழமை) 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. https://athavannews.com/2022/1281254
-
- 0 replies
- 147 views
-
-
களுவாஞ்சிகுடியில் பொதுஜனப் பெரமுன கட்சியின் பதாகைகள் உடைத்து தீயிட்டு எரிப்பு By Sayanolipavan ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்திருந்த பட்டிருப்புத் தொகுதிக் காரியாலயத்தின் பதாகைகள் அப்பகுதி மக்களால் உடைத்து எரியூட்டப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதிக்குரிய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் காரியாலயம் ஒன்று களுவாஞ்சிகுடியில் தனியார் வீடு ஒன்றில் வாடகைக்கு பெறப்பட்டுச் செயற்பட்டு வந்துள்ளது. அதில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, உள்ளிட்டோரின் புகைப்படம் தாங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிரு…
-
- 1 reply
- 302 views
-
-
ஜனாதிபதி கோட்டாவின் கீழ், இடைக்கால அரசு – ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்கின்றது... ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் அமையும் இடைக்கால அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது என்றும் அவர் கூறியுள்ளார். இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தனது பதவியை இராஜினாமா செய்தார். இதேநேரம் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க பதவிகளை ஏற்குமாறு ஜனாத…
-
- 1 reply
- 201 views
-
-
கோட்டா கமவை, தாக்குவதற்காக... கைதிகளும் அழைத்து வரப்பட்டனர்? கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தாக்குவதற்காக கைதிகளும் அழைத்து வரப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கமவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களை தாக்குவதற்காக அரசாங்கத்துடன் இணைந்த குழுக்கள் பல்வேறு சிறைகளில் இருந்து சிறைக் கைதிகளையும் அழைத்து வந்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட பின்னர் பல கைதிகள் சிறைபிடிக்கப்பட்ட காணொளிகள் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1281011
-
- 7 replies
- 495 views
-
-
வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை... நிறுத்துங்கள் – ஜனாதிபதி கோட்டா, பகிரங்க கோரிக்கை. மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பலவேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் வன்முறைகளில் ஈடுபடாமல் பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார். https://athavannews.com/2022/1281198
-
- 4 replies
- 442 views
-
-
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன்,பிள்ளையானின் ஆதரவுடன் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்க வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார். எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்துடன் திருகோணமலை இராணுவ முகாமில் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்கள் இன்றிரவு கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேற உள்ளதாகவும், ஜெட் விமானம் ஒன்றின் மூலம் நாட்டை விட்டு வெளியேற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பில் மக்கள் வெளியிட்ட பலத்த எதிர்ப்புக்கு மத்தியில்…
-
- 1 reply
- 383 views
-
-
பொதுமக்களின்... சொத்துக்களுக்கு, சேதங்களை விளைவிப்போர் மீது... துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு! பொதுமக்களின் சொத்துக்களை திருடுவோர், சேதங்களை விளைவிப்போர் மீது முப்படையினர், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான உத்தரவு பாதுகாப்பு அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அவர்களது வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை அழித்து பதிலடி …
-
- 0 replies
- 217 views
-
-
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், தேசபந்து தென்னகோன் மீது... தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், இருவர் கைது! மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுபிட்டிய பொலிஸாரினால் இன்று(செவ்வாய்கிழமை) குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு – கங்காராம விஹாரைக்கு அருகில் இன்று மாலை சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது, கூட்டத்தை கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற…
-
- 0 replies
- 199 views
-
-
யோஷித நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் – முக்கிய பிரமுகர்கள் ஜெட் விமானம் மூலம் வெளிநாட்டுக்கு May 10, 2022 முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ நேற்று (9) அதிகாலை நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவித்துள்ளன. யோஷிதவும் அவரது மனைவியும் சிங்கப்பூர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவா்களது தனிப்பட்ட வாகனத்தில் விமான நிலையத்துக்கு சென்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.. அதேவேளைஅரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் திருகோணமலை படைத்தளம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ,அவர்கள் அங்கிருந்து ஜெட் விமானம் ஒன்றின் மூலம் வெளிநாட…
-
- 4 replies
- 543 views
-
-
https://www.facebook.com/dinakarannews/photos/a.420417614663044/5349417278429695
-
- 22 replies
- 983 views
- 1 follower
-
-
மஹிந்த ராஜபக்ச... நாட்டை விட்டு, வெளியேற மாட்டார் – நாமல் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேற மாட்டார் என்று அவரது மகன் நாமல் ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். தாங்கள் வெளியேறப் போகிறோம் என்று நிறைய வதந்திகள் உள்ளன என தெரிவித்த அவர், எனினும் நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என தெரிவித்துள்ளார். மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்றும், தனக்குப் பின்வருபவரைத் தெரிவு செய்வதில் தீவிரப் பங்கு வகிக்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும் “எனது தந்தை பாதுகாப்பாக இருக்கிறார், அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். அவர் குடும்பத்துடன் தொடர்புகொள்கிறார்” என்றும் நாமல் கூறி…
-
- 1 reply
- 322 views
-
-
கலவரபூமியான கொழும்பும் அதன் இன்றைய நிலையும் ! அதிகாலை அலரிமாளிகையில் இருந்து வெளியேறிய மஹிந்த கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமாக மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்று மே மாதம் 9 ஆம் திகதி காலை ஒரு மாதம் நிறைவடையும் வரை அமைதியாகவும் சாத்வீகமாகவும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வந்தது. இந்நிலையில், நேற்றையதினம் அலரிமாளிகையில் மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாப்போம் என்ற தோரணையில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் பலர் ஒன்றுகூடி கூட்டமொன்றை ஏற்பாடு செய்ததுடன் ஆர்ப்பாட்டமொன்றையும் மேற்கொண்டனர். இதன் பின்னர் அலரிமாளிகைக…
-
- 3 replies
- 418 views
- 1 follower
-
-
அமைதியான போராட்டம் மீதான... தாக்குதல்களுக்கு, ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் கடும் கண்டனம் இலங்கையில் மேலும் வன்முறைகள் இடம்பெறாத வகையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட் கோரியுள்ளார். நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் குறைகளை தீர்க்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கொழும்பில் அமைதியான முறையில் போராடியவர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலை அடுத்து ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் கவலை அடைவதாகவும் அவர் கூறினார். ஆகவே இடம்பெற்ற அனைத்து தாக்குதல்கள் குறித்தும் சுதந்திரமாகன, முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை…
-
- 0 replies
- 128 views
-
-
முழுமையான விசாரணைகளை, நடத்துமாறு... சட்டமா அதிபர் பணிப்பு ! கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலான முழுமையான விசாரணையை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆலோசனை வழங்கியுள்ளார். சம்பந்தப்பட்ட விடயங்களின் தீவிர தன்மையைக் கருத்திற்கொண்டு, அரசியலமைப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறும் வகையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்துதியுள்ளார். அதன்படி இந்த வன்முறை சம்பவங்களுக்கு தலைமை தாங்கியவர்கள் மற்றும் அதன் பின்னனியில் இருந்தவர்கள் குறித்து கண்டறிந்து அவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார். …
-
- 0 replies
- 278 views
-
-
கட்சி சாராத... பிரதமர் தலைமையில், 15 பேர் அடங்கிய... சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க, ஜனாதிபதி இணக்கம் – ஓமல்பே சோபித தேரர் கட்சி சாராத பிரதமர் ஒருவரின் தலைமையில் 15 பேரடங்கிய சர்வகட்சி அமைச்சரவையை நியமித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். சர்வ மதத் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1281148
-
- 0 replies
- 147 views
-
-
கோட்டா கோ கம... ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் – CID விசாரணை காலி முகத்திடலில் உள்ள கோட்டா கோ கம போராட்ட தளத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான டி.ஐ.ஜி.க்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. நேற்றைய மோதல்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 231 பேர் காயமடைந்துள்ளனர். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொ…
-
- 0 replies
- 144 views
-
-
இலங்கையின்... மோசமான நிலைமை குறித்து, உலக வங்கி கவலை! இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது. மேலும் பொறுப்புக்கூறல் இருந்தாலே நெருக்கடி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என உலக வங்கி அறிவித்துள்ளது https://athavannews.com/2022/1281089
-
- 0 replies
- 188 views
-
-
தேர்தலுக்குச் செல்வது.... சாத்தியமற்றது, அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்திற்கு இணங்குங்கள் – மைத்திரி நாடு தற்போது எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தம்மோடு கைகோர்க்குமாறு ஜே.வி.பிக்கு சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன இந்த அழைப்பை விடுத்தார். இந்தத் தருணத்தில் தேர்தலுக்குச் செல்வது சாத்தியமற்றது என்பதால், இடைக்காலத்தை அமைக்க ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர், ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு …
-
- 0 replies
- 104 views
-
-
4 மாதத்தில்... ஒரு இலட்சம் பேர், நாட்டைவிட்டு வெளியேற்றம்! இலங்கையைவிட்டு இந்த வருடத்தில் இதுவரையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைக்காக வெளியேறியுள்ளதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதோடு, எதிர்வரும் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் வளர்ச்சியடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் செயலாளர் எம்.எப்.எம்.அர்ஷாத் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் 2021 வருடாந்த அறிக்கையின் பிரகாரம், கடந்த வருடம் வேலைக்காக வெளிநாடுச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 795ஆக பதிவாகியுள்ளதாகவும் இது முந்தைய ஆண்டை வ…
-
- 0 replies
- 147 views
-