Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கண்டியில் 183 மில்லியன் ரூபா செலவில் சிறுவர் பராமரிப்பு இல்லம்: ஆளுநர் அடிக்கல் நாட்டினார்! 03 Mar, 2026 | 09:35 AM கண்டி, பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் சிறுவர் பராமரிப்பு இல்லம் ஒன்றை 183 மில்லியன் ரூபா செலவில் அமைப்பதற்கு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் அடிக்கல் நாட்டி வைத்தார். மத்திய மாகாண சமூக நலன்புரி, நன்னடத்தை, சிறுவர் பராமதரிப்பு திணைக்களத்தினால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் மூடப்பட்ட ஒரு பாடசாலையே இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பெப்புல்வத்த என்ற இடத்தில் அமைந்துள்ளது. புதிதாக இருமாடிக்கட்டிடம் மற்றும் சுற்று மதில்கள் என்பன அமைப்பதற்கான அடிக்ல் நாட்டு விழாவில் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் பிரதம அதிதியாகக்…

  2. அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்! அயத்துல்லா அலி காமெனீ அவர்களின் மறைவையொட்டி சம்மாந்துறையில் நேற்று துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டன. உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட அவர்களின் இழப்பை நினைவுகூரும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.அப்னான் தலைமையில் இளைஞர்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் பல இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மறைந்த தலைவரின் சேவைகளையும் அவரின் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்து துக்கம் அனுசரிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அமைதியான முறையில் நடைபெற்ற இந்நிகழ்வு பிரதேச மக்களின் கவனத்தை ஈர்த்தது. https://athavannews.com/2026…

  3. மத்தியகிழக்கின் போர் நிலைமை காரணமாக கொழும்பில் இன்றும் 57 விமானங்கள் ரத்து! மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 28 விமானப் பயணங்களும், நாட்டிற்கு வருகை தரவிருந்த 29 விமானப் பயணங்களும் என மொத்தமாக 57 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, நாளை (04) தினத்திலும் 4 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய கிழக்கிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள், அதேபோன்று அந்தப் பிராந்தியத்தின் ஊடாக ஏனைய இடங்களுக்குப் பயணிக்கும் விமானங்கள் தொடர்ந்தும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர…

  4. இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் – தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு! கச்சதீவு திருவிழாவின்போது இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக பக்தர்களை தாக்கினார் எனவும் இதன்போது தமிழக இளைஞர்கள் தரையில் இருந்து “இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும், குறித்த கடற்படை அதிகாரியை தண்டிக்க வேண்டும்” என எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர் எனவும் அதன்பின்னர் கடற்படை உயர் அதிகாரி ஒருவர் வந்து மக்களை சமாதானம் செய்ததாக தமிழக, கச்சதீவு பாரம்பரிய திருப்பயண குழு ஒருங்கிணைப்பாளர் சே.நல்லதம்பி தெரிவித்துள்ளார். கச்சதீவு திருவிழா குறித்து அவர் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நாங்கள் ஆரம்பத்தில் கச்சதீவுக்குள் உள்நுளையும் போத…

  5. அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள கடற்பரப்பிற்கு கொண்டு சென்றது ஏன் என அரசாங்கத்துக்கு தெரியாதா? - முன்னாள் அமைச்சர் சம்பிக கேள்வி Published By: Vishnu 03 Mar, 2026 | 04:25 AM (எம்.மனோசித்ரா) அமெரிக்கா கடந்த ஜனவரி மாதத்திலேயே தனது பாரிய போர்க்கப்பல்களை ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள கடற்பரப்பிற்கு கொண்டு சென்றது. கோடிக்கணக்கான டொலர்களை செலவிட்டு அமைதியாக இருப்பதற்காகவா அந்தப் போர்க்கப்பல்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டன? அமெரிக்காவின் இந்த முன்னெடுப்புக்கள் குறித்து அரசாங்கத்துக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லையா என முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் பல பகுதிகளில் தற்போது எரிபொருள் நிரப்பு…

  6. நாட்டில் அவசரகால நிலைமை மீண்டும் நீடிப்பு ; ஜனாதிபதி செயலாளரால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு Published By: Vishnu 03 Mar, 2026 | 04:37 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் அமுலிலிருந்த பொது அவசரகால நிலைமையை மேலும் நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய பிப்ரவரி 28ஆம் திகதியிலிருந்து மீண்டும் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அவசரகால நிலைமை நீடிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு, பொது அமைதியைப் பேணுதல் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்விற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்கா…

  7. ஜனாதிபதி வெறும் கண்காட்சியை விடுத்து செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் - மனோகணேசன் 02 Mar, 2026 | 06:50 PM (நா.தனுஜா) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி செய்கிறார். மலையகத்துக்குச்சென்று பெருந்தோட்டத்தொழிலாளர்களின் கைகளைப்பிடித்துப் பார்க்கிறார். ஆனால் பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், அரசியல்கைதிகள் விடுதலை, மலையக மக்களுக்கான காணி உரித்து என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. எனவே ஜனாதிபதி வெறும் 'கண்காட்சியை' விடுத்து, ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் என தமிழ் முற்போக்குக்…

  8. தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன் ; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன் 02 Mar, 2026 | 06:48 PM (நா.தனுஜா) அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் எனக்கு நீதியமைச்சர் பதவியை வழங்குவதாகக் கூறினார். நாங்கள் சுயதேவைகளைப் பூர்த்திசெய்ய விரும்புபவர்களாக இருந்திருந்தால், நான் அந்த அமைச்சுப்பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமக்கென ஒரு சுயாட்சி அவசியம் என்ற தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்வது ஒன்றே எமது இலக்காக இருப்பதன் காரணமாகவே நான் அதனை நிராகரித்தேன் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகவிய…

  9. மட்டு. கொண்டையங்கேணி தமிழர்களின் பூர்வீக கிராமத்தை முஸ்லிம் கிராமம் என பெயர் சூட்டி அபகரிக்க முயற்சி - பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் நிர்மலன் கண்டனம் 02 Mar, 2026 | 06:46 PM தனித் தமிழ் மக்கள் வாழும் வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுடைய பூர்வீக கிராமங்களின் பெயர்களை தங்களுடைய கிராமங்கள் என தெரிவித்து எதிர்காலத்தில் இந்த கிராமத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என அபகரிப்பதற்காக செயற்படுகின்றனர். இதனை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் நிர்மலன் தெரிவித்தார். வாழைச்சேனை கிண்ணியடியில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்…

  10. புதிய அரசியலமைப்பு : தமிழ் மக்களின் ஒருமுக தீர்மானம் அவசியம் - தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திறந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு 02 Mar, 2026 | 10:16 AM அண்மைக்காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வடக்கு–கிழக்கில் தமிழ்தேசிய கட்சிகள் சந்தித்த பின்னடைவை கருத்தில் கொண்டு, மேலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதை அவதானித்தும், தமிழ் மக்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட அரசியல் தீர்மானம் காலத்தின் அவசியமாகியுள்ளது என வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்தேசியத்தை பலவீனப்படுத்தக்கூடிய அக மற்றும் புறச் சூழல்கள் பலமடைவதையும், கடந்த காலங்களில் அரசியல் தீர்வு தொடர்பில் பொத…

  11. பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை வென்றெடுப்போம்; முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாட்டில் அறைகூவல் Published By: Vishnu 02 Mar, 2026 | 04:04 AM (க.சிவலிங்கமூர்த்தி) இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக பாட்டாளி வர்க்கத்தை மையப்படுத்திய புதிய அரசியல் வேலைத்திட்டமொன்றை முன்னிறுத்தி முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாடு கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (1) எழுச்சியுடன் நடைபெற்றது. வர்க்கத்திற்கு அதிகாரம் - அதிகாரத்திற்கு கட்சி தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நவதாராளவாத பொருளாதார கொள்கைகள் மற்றும் சர்வதேச தலையீடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இலங்கையின் வடக்கு கிழக்கு தெற்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட …

  12. TIN இலக்கம் கட்டாயமாகிறது! Mar 2, 2026 - 03:46 PM தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்) சமர்ப்பிக்கப்படுவது அவசியமாகும். அதன்படி, பின்வரும் சேவைகளுக்கு இச்சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளது, ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல். கட்டிட வரைபடங்களுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல். மோட்டார் வாகனப் பதிவு மற்றும் வாகன அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல். காணி அல்லது காணி உரிமத்தைப் பதிவு செய்தல். வணிகப் பதிவுகளை மேற்கொள்ளுதல். இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் ப…

  13. காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! 02 Mar, 2026 | 02:22 PM காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் சேவையானது அசாதாரண காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இதன் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வழமைபோல் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் இந்த கப்பல் சேவையில் இயங்கும் என்றும் கூறப்படுகிறது. www.sailsubham.com என்ற இணைத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாகவோ அல்லது 0212224647, 0117642117 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புக…

  14. கொழும்பு போர்ட் சிட்டி கடலில் வல்வெட்டித்துறை இளைஞரின் சடலம் திங்கள், 02 மார்ச் 2026 07:45 AM கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து ஆணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வல்வெட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் கடந்த 28ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தவர் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் https://jaffn…

  15. மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் ; சுற்றாடல் அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் வலியுறுத்தல் 01 Mar, 2026 | 04:18 PM (எம்.நியூட்டன்) வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுற்றாடல் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். தேசிய சுற்றாடல் சட்டவரைவு திருத்தம் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கருத்துக்கேள் கலந்துரையாடல், சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக பதபெந்தி பிரசன்னத்துடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (1) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரைய…

  16. தமிழக இழுவைப்படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் ஒருபோதும் அனுமதியில்லை: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் 01 Mar, 2026 | 11:37 AM (கச்சத்தீவிலிருந்து இராஜதுரை ஹஷான்) இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்துள்ளோம். இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் மே மாதம் இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளேன். இந்திய மீனவர்களின் இழுவை படகு மீன்பிடிக்கு இலங்கை கடற்பரப்பில் ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது என கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். புனித கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்று சனிக்கிழமை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. திருவிழாவில் கலந்துக் கொண்ட இந்திய நாட்டுப்படகு மீ…

  17. பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குக: இலங்கை அரசாங்கத்திற்கு ஐநா உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் கடும் வலியுறுத்து! 01 Mar, 2026 | 10:04 AM (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறும், புதிதாக உருவாக்கப்படும் சட்டம் மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையவாறு அமைவதை உறுதிப்படுத்துவதற்கு சிவில் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (23) ஆரம்பமாகி, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்…

  18. முறையற்ற வகையில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை Mar 1, 2026 - 07:10 PM மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு, பொதுமக்கள் எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தி வைப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டுக்குள் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், இது தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு இருந்தபோதிலும், சில தரப்பினர் திட்டமிட்ட வகையில் கலன்கள் அல்லது வேறு கொள்கலன்களில் எரிபொருளைச் சேகரித்து வருவதால், அத்தகைய செயற்பாட…

  19. போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று முதல் அமுல் Mar 1, 2026 - 07:01 AM முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் "போதைப்பொருள் ஒழிப்பு வாரம்" இன்று (01) முதல் ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் வாரத்தை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு, போதைப்பொருள் அனர்த்தத்தை ஒழிப்பதற்கான முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பான 07/2026 ஆம் இலக்க அரச நிர்வாகச் சுற்றறிக்கை, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாரத்தின் ஊடாக போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தி ஒடுக்குதல், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களை மீட்டு, அவர்களை புனர்வாழ்விற்கு …

  20. சட்டத்தின் நுணுக்கங்களை பாமர மக்களுக்கும் புரியவைக்கும் கடமை சட்ட மாணவர்களுக்கு உண்டு நீதியரசர் குமாரரத்தினம் வலியுறுத்து 01 Mar, 2026 | 09:18 AM (க.சிவலிங்கமூர்த்தி) சட்டமும் மொழியும் ஒரு தேசத்தின் இரு கண்களைப் போன்றவை சட்டத்தின் நுணுக்கங்களை பாமர மக்களுக்கும் புரியவைக்கும் கடமை சட்ட மாணவர்களுக்கு உண்டு என்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரபாகரன் குமாரரத்தினம் தெரிவித்தார். கொழும்பு இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றத்தின் 2022 ஆம் ஆண்டு நிர்வாகக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த வித்தக விழா மற்றும் 57 ஆவது நீதி முரசு சஞ்சிகை வெளியீட்டு விழா சட்டக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (28) நடைபெற்றது. தமிழ் மன்றத்தின் 75 ஆவது ஆண்டு பவள விழாவினை முன்னிட்டு ‘ம…

  21. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 12 விமானச் சேவைகள் ரத்து written by admin March 1, 2026 வளைகுடா பிராந்தியத்தில் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் துபாய், ரியாத், தம்மாம் மற்றும் குவைத் உள்ளிட்ட நகரங்களுக்கான 12 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன் விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களின் விபரங்கள்: விமான இலக்கம் புறப்படும் இடம் – சேருமிடம் UL 231 கொழும்பு – துபாய் UL 232 துபாய் – கொழும்பு UL 225 கொழும்பு – துபாய் UL 226 துபாய் – கொழும்பு UL 217 க…

  22. கச்சதீவு இலங்கைக்கானது என்பதில் மாற்றமில்லை: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திட்டவட்டம் Published By: Digital Desk 1 01 Mar, 2026 | 08:31 AM (கச்சத்தீவிலிருந்து இராஜதுரை ஹஷான்) சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இந்தியாவில் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டால் கச்சத்தீவு பிரதான பேசுபொருளாகும். கச்சத்தீவு இலங்கைக்குரியது என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாதென கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். புனித கச்சத்தீவு அந்தோனியார் திருவிழாவில் நேற்று சனிக்கிழமை கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கைக்கும் இந்தியாவு…

  23. நிலக்கரிக் கொள்வனவுக்கு மீண்டும் விலைமனு கோரல்! Published By: Digital Desk 1 01 Mar, 2026 | 07:39 AM (நமது நிருபர்) நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்திற்காக 3 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரியை அவசரமாகக் கொள்வனவு செய்ய லங்கா நிலக்கரி நிறுவனம் விலைமனுக் கோரியுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், 2026 மார்ச் - ஏப்ரல் காலப்பகுதிக்காக அவசர நிலக்கரி கொள்வனவுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தரமற்ற நிலக்கரி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், லங்கா நிலக்கரி நிறுவனம் இவ்வாறு அவசர நிலக்கரி கொள்வனவுக்கான அறிவித்தல்க…

  24. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி! Published By: Digital Desk 1 01 Mar, 2026 | 07:48 AM (நா.தனுஜா) டித்வா சூறாவளியை அடுத்து ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் நாடு முகங்கொடுத்திருக்கும் மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு மேலும் ஒரு மில்லியன் யூரோ (சுமார் 370 மில்லியன் ரூபா) நிதியுதவியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதிலும், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிவாரண வழங்கல் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதிலும் தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை இந்த மேலதிக நிதியுதவி மூலம் மீளுறுதிப்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்நிதியுதவியானது மனிதாபிமான உதவி வழங்கல் அமைப்ப…

  25. மத்திய கிழக்கு போர் சூழல்: நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உறுதி Published By: Vishnu 28 Feb, 2026 | 07:48 PM மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.இலங்கை விளையாட்டு நிலவும் சர்வதேச சூழ்நிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு திரளுகின்ற நிலை காணப்படுகின்றது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் விநியோகத்தில் எவ்வித சிக்கலும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார். அவரது விளக்கத்தின் படி, 37 நாட்களுக்கு தேவையான பெற்றோல், 35 …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.