Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்து 29 June 2025 வட மாகாணத்திலுள்ள உரிமை கோரப்படாத 5,941 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானியை அறிவித்தலை ரத்து செய்வதாக நேற்று முன்தினம் வர்த்தமானி பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, முன்னைய வர்த்தமானி அறிவித்தல் அரசின் கொள்கை முடிவுக்கு அமைய, ரத்து செய்யப்படுவதாக புதிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காணிகள் உள்ள பகுதிகளில் நிலவும் குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டும், இந்தக் காணிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் …

  2. செம்மணி படுகொலைகளிற்கு காரணமானவர்கள் என சோமரத்ன ராஜபக்ச குற்றம்சாட்டிய இராணுவ அதிகாரிகள் தொடர்ந்தும் உயர் பதவிகளில் - ரஜீவ்காந் Published By: RAJEEBAN 29 JUN, 2025 | 11:25 AM கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல்வல்லுறவு படுகொலை குற்றவாளி சோமரத்ன ராஜபக்ச தனது வாக்குமூலத்தில் செம்மணி படுகொலைகளிற்கு காரணமானவர்கள் என குறிப்பிட்ட இராணுவஅதிகாரிகளில் பலர் இன்னமும் உயர்பதவிகளை வகிக்கின்றனர் என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் இவர்களிற்கு எதிராக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கையில் இன்று பேசுபொருளாக இருக்கின்ற விடயம் செம்மணி படுகொலைகள் மற்று…

  3. ஜூலை 1 ஆம் திகதி முதல் பேருந்து சாரதிகளின் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயமாக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சீட் பெல்ட்களை அணியாத சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் பி.ஏ.சந்திரபால தெரிவித்தார். மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி, வாகன சாரதிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் 2011 ஒக்டோபர் 1 முதல் அமுலில் உள்ளது. இந்தச் சட்டம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டிருந்தாலும், பல சாரதிகள் சீட் பெல்ட் அணியாததால் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விடயத்தினை கருத்திற்கொண்டு, ஜூலை முதலாம் திகதி முதல் இந்தச் சட்டத்தை கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்…

  4. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் 'clean srilanka' திட்டம் ஆகியவை இணைந்து தனியார் துறையின் ஆதரவுடன் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் ‘Dream Destination’ திட்டத்தின் தொடக்க விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (27) கலந்துகொண்டார். தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார். மேலும், தற்போதைய அரசியல் கலாசாரத்தை மாற்றம் செய்து தற்போதைய அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் என்றவகையில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அது நிலையானதாக முன்னேற்றப்பட வேண்டும் என்றும் க…

  5. 28 JUN, 2025 | 06:19 PM (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) மன்னார் உயிலங்குளத்தில் இயங்கும் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் (ATI) மாணவர்களின் ஏற்பாட்டில், “வீதி விபத்துக்களை தவிர்ப்போம்” எனும் தலைப்பில் ஒரு விழிப்புணர்வு நாடகம் இன்று சனிக்கிழமை (28) காலை மணிக்கு மன்னார் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது வீதி விபத்துக்களுக்கான முக்கியமான காரணங்கள், அதன் தீவிர விளைவுகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த நாடகம், பாடல்களை மாணவர்கள் நிகழ்த்தினார்கள். மேலும், வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தும் முக்கியத்துவம், போக்குவரத்து விதி முறைகளை கடைப்பிடிக்கும் அவசியம் மற்றும் அவற்றை மீறுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்…

  6. 27 JUN, 2025 | 05:20 PM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கையின் இறையாண்மையை காட்டிக்கொடுக்கும் வகையில் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் எதிர்காலத்தில் சட்டத்துக்கு முன் இருக்கவேண்டிவரும் என கலாநிதி கயான் ஜயதிலக்க தெரிவித்தார். தனியார் தொக்காட்சி நிகழ்ச்சின்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் பாராளுமன்றத்துக்கோ மக்களுக்கோ தெரிவிக்காமல் வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதில்லை. ஆனால் அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து கைச்சாத்திடுவத…

  7. 27 JUN, 2025 | 07:21 PM யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு பரந்தளவில் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்தார். தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர், தென்னை பயிர்ச் செய்கை சபையின் பொதுமுகாமையாளர் விஜயசிங்க, தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27) கலந்துரையாடிய பொதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டத்துடனேய…

  8. போர்க்குற்றங்கள் தொடர்புடைய பொறுப்புக்கூறல்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்த அமெரிக்கா முடிவு! adminJune 28, 2025 பல்வேறு நாடுகளில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்புடைய பொறுப்புக்கூறல் தொடர்பில் செயற்படுத்தப்பட்டு வந்த சுமார் 24 திட்டங்களுக்காக அமெரிக்க நிதி வழங்கல் நடவடிக்கையை நிறுத்துவதற்கு வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது. நிதியுதவியை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ள திட்டங்களில் ஈடுபட்டுள்ள நாடுகளில் இலங்கை, ஈராக், சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் அடங்குவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. https://globaltamilnews.net/2025/217444/

  9. 27 Jun, 2025 | 02:24 PM அச்சுவேலி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த சின்ன வெங்காய உற்பத்தியாளர்கள், நாட்டில் சின்ன வெங்காய இறக்குமதியை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஸ்ரீ மோகனிடம் மகஜர் ஒன்றை வெள்ளிக்கிழமை (27) கையளித்தனர். இது தொடர்பாக, யாழ். மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள், போராட்டத்தைத் தொடர்ந்து தங்களது கோரிக்கையை மகஜராக வழங்கினர். தொடர்ச்சியாக சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் வெங்காயத்திற்கு நிர்ணய விலை வழங்கப்படாததால் அதிக இழப்பை சந்திக்க நேரிட்டதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை, சின்ன வெங்காயத்தை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் வரையிலா…

  10. வடமாகாணத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை June 27, 2025 3:50 pm தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த காலங்களில் பல்வேறு திணைக்களங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் போதியளவு முன்னேற்றம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இது தொடர்பில் ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். வடக்கு மாகாண உள்ளூராட்சித் திண…

  11. காணி சுவீகரிப்பு வர்த்தமானி குறித்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவு! காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று (27) விசாரணைக்கு எடுக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தகமானியை தற்காலிகமாக பலமற்றதாக்கும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளநிலையில், குறித்த வர்த்தமானியை மீள கைவாங்குவதற்கான வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டால் அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உயர் ந…

  12. தனது சொந்த சகோதரனின் பாலர் பாடசாலை மகளை இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக 68 வயதுடைய ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவிதான 60 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ. 30,000 அபராதம் விதித்தார், மேலும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 1 மில்லியன் இழப்பீடு வழங்கவும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். குற்றத்தின் மனிதாபிமானமற்ற தன்மை மற்றும் கொடூரத்தை வலியுறுத்தி, "இது ஒரு குழந்தைக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, மனிதகுலத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செயல்" என்று நீதிபதி கூறினார். என்ன நடக்கிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு இளமையாக இருந்த குழந்தை, ஒரு முறை தன…

  13. இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற கால அட்டவணைக்கு முரணான சேவை ஒன்றால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச தரப்பினரிடையே குழப்ப நிலை ஏற்பட்டது. இதையடுத்து சில நிமிடங்கள் வாகன நெரிசல் ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கருத்துத்தெரிவ…

  14. 27 Jun, 2025 | 12:35 PM யாழ்ப்பாணம் பலாலியில் அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு, மக்கள் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரமாக சென்று வழிபட இராணுவ அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (27) முதல் அமலுக்கு வந்துள்ளது. 1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி, உள்நாட்டு யுத்தம் காரணமாக பலாலி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வெளியேறியிருந்தனர். அதன் பின்னர், பலாலி பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு, இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது. இதில் ஆலயம் இருந்த பகுதியும் அடங்கும். இராணுவம், ஆறு மாதங்களுக்கு முன்பு சுதந்திரமாக ஆலயத்துக்கு செல்வதற்கான அனுமதியை அறிவித்திருந்தாலும், கடந்த காலங்களில் மக்கள் விசேட நாள்களில் மட்டுமே கடுமையான பாதுகாப்பு க…

  15. 27 Jun, 2025 | 04:10 PM யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கன்னி அமர்வு ஞாயிற்றுக்கிழமை (27) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தவிசாளர் தனது தலைமை உரையில் தெரிவித்ததாவது, எங்களுடைய மக்கள் இன்னும் 2400 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் மீள் குடியேற்றப்படாமல் இருக்கின்றார்கள், அவர்களை மீள்குடியேற்றுவதற்காக எங்களுடைய சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதற்காக அனைவருடைய ஒத்துழைப்பும் தேவையாக இருக்கின்றது. எங்களுடைய பல உறுப்பினர்கள் கூட தமது சொந்த நிலங்களுக்கு திரும்பாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் தமது சொந்த நிலங்களுக்கு சென்று இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு நாங்கள் அவர்களுக்கான நிலங்களை பெற்…

  16. 27 Jun, 2025 | 05:04 PM படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல்செய்யவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் புதல்வர் ஜோசப்பரராஜசிங்கம் டேவிட் 20வருடங்களுக்கு பின்னர் வெள்ளிக்கிழமை (27) மட்டக்களப்புக்கு வருகைதந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசிங்கத்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதன்போது தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,மட…

  17. Published By: Digital Desk 3 27 Jun, 2025 | 05:18 PM செயற்கை முழங்கால் மாற்று உபகரணங்கள் மற்றும் பிற அறுவை சிகிச்சை கருவிகள் போன்ற முக்கியமான மருத்துவப் பொருட்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கி வருமாறு சொல்வது, தற்போது பல அரச வைத்தியசாலைகளில் வழக்கமான விடயமொன்றாக மாறிவிட்டது. ஏனெனில் அவைகள் அதிகளவில் கையிருப்பில் இல்லை என சுகாதார தொழில் வல்லுநர்களின் தேசிய அமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இந்தப் பொருட்கள் பின்னர் அறுவை சிகிச்சைக்காக நேரடியாக அறுவை சிகிச்சை அறைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் உபகரணங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட விசேட வைத்திய …

  18. 27 JUN, 2025 | 02:04 PM சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். வீட்டிலிருந்து சம்பாதிக்க முடியும் என கூறி Face book, Whatsapp, Telegram, Skype, We Chat போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாம் முறைப்படி; விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் சிறிய பணத்தொகையை முதலீடு செய்தால் அதன் ஊடாக இலாபம் பெறலாம் என சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி, சிறிய பணத்தொகையை முதலீடு செய்த நபர்களுக்கு பெருமளவிலான பணத்தை வழங்கி அதிகளவிலான இலாபத்தை பெற்றுக்கொடுத்து அவர்களின் நம்பிக்கையை வென்ற பின்னர் விளம்பர…

  19. உறுப்பினரிடையே ஒருமித்த கருத்தின்மை – யாழ் மாநகர சபையின் விசேட அமர்வில் குழப்பம்! யாழ்.மாநகரின் நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தின்மையால் யாழ் மாநகர சபையின் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது அமர்வின் தொடர்ச்சியாக, விசேட அமர்வுக்காக இன்றையதினம் (27) திகதியிடப்பட்டிருந்தது. இதனடிடையில் இன்று காலை(27) முதல்வர் மதிவதனி தலைமையில் சபையின் விசேட அமர்வு ஆரம்பமானது. கூட்டம் ஆரம்பமான நிலையில் கடந்த வாரம் ஏற்பட குழப்பத்தால் ஒத்திவைக்கபட்ட சுகாதாரக் குழுவுக்கான உறுபினர்கள் தெரிவு இன்று நடைபெற்றது. அதன் பின்னர் மேலும் சில குழுக்களுக்கான உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். குழுக்களுக்கா…

  20. கடந்த 23ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளாக நேற்றைய தினம் பெருந்திரளான மக்களின் வருகையுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த, அணையா விளக்கு போராட்டத்தில் பங்கேற்பதற்காக போராட்ட களத்திற்கு சென்ற, அமைச்சர் சந்திரசேகரன், இரா.சாணக்கியன் மற்றும் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் மக்களால் அடித்து துரத்தப்பட்டனர். அத்துடன், செம்மணியில் நேற்று இடம்பெற்ற அணையா விளக்கு போராட்ட இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனையும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து விரட்டியடித்தனர். இது தொடர்பில் இளங்குமரன் எம்.பி இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதுடன் செம்மணியில் குழப்பத்தை ஏற்படுத்திய ஒருவரையும் விட்டு வைக…

    • 4 replies
    • 277 views
  21. 01 JUN, 2025 | 10:57 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் இந்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன எனினும் மனித உரிமை ஆணையாளரின் விஜயத்திற்கான திகதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என அவை தெரிவித்துள்ளன. அரசாங்கம் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஒருவர் ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது - இறுதியாக 2016 பெப்ரவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை செய்த் ராத் அல்ஹ_சைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். சர்வதேச சமூகத்தினால் மு…

  22. இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை ஆதரிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு June 27, 2025 இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது இந்தக் கருத்தை வெளியிட்டார். இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், வ…

  23. நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்! பயங்கரவாதத் தடை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார். தமது விஜயத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக கொழும்பில் நேற்று மாலை ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, நீண்டகாலமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் கைதிகள் குறித்து விரைவாக மதிப்பாய்வு செய்து அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1437333

  24. குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் அமெரிக்கா செல்ல வேண்டாம் : கொழும்பு தூதரகம் அறிவித்தல்! கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, தங்கள் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக, குழந்தை பிரசவிக்கும் நோக்கத்துடன் சுற்றுலா விசாக்களில் அமெரிக்காவுக்கு பயணம் செய்பவர்களுக்கு எதிர்காலத்தில் விசாக்கள் மறுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நோக்கத்துக்காக அமெரிக்கா செல்லும் பயணிகள் பெரும்பாலும் அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் மருத்துவ உதவியை நம்பியிருப்பதாகவும், இது அமெரிக்க வரி செலுத்துவோர் மீது நிதிச் சுமையை சுமத்துவதாகவும் தூதரகம் கூறியுள்ளது. எனவே, விண்ணப்பதார் …

  25. 26 Jun, 2025 | 03:01 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி , மூன்று மகள்கள் மற்றும் மருமகனுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (26) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் 43 குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கெஹெலியவின் குடும்பத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் | Virakesari.lk கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் 26 Jun, 2025 | 05:15 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.