நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
பச்சை பயறு தானியத்தை ஊற வைத்து, முளைகட்டிய பின்பு சுவையான பச்சடி தயார் செய்யலாம். தேவையான பொருட்கள் : பச்சை பயறு- 1 கப், கொத்தமல்லி – இலை, தேங்காய் துருவல் – தேவையான அளவு, கடுகு – அரை தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு – சிறிதளவு, உப்பு – தேவைக்கு செய்முறை:- * பச்சைபயறை இரவில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டிவிட்டு, ஒரு துணியில் கொட்டி கட்டி வைக்கவும். * அதற்கு அடுத்த நாள் காலையில் பார்த்தால், பயறு முளைகட்டி இருப்பதை அறியலாம். அதை எடுத்து பச்சடி தயார் செய்ய வேண்டும். * முளைகட்டிய பயறுடன் தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும். * பின்பு கடுகு, உளுந்தம் பருப்பு கொண்டு …
-
- 9 replies
- 1.5k views
-
-
மணமணக்கும் மதுரை மட்டன் மட்டன் உடலுக்கு குளிர்ச்சி தரும். எனவே வாரம் ஒருமுறை தவறாமல் மட்டனை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். அதிலும் விடுமுறை நாட்களில் மட்டனை விதவிதமாக சமைத்து பொறுமையாக உட்கார்ந்து சாப்பிட்டால் எவ்வளவு சூப்பராக இருக்கும். அதிலும் மட்டன் சுக்கா செய்து ரசம் சாதத்துடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மட்டன் - 200 கிராம் சின்ன வெங்காயம் - 1/4 கப் பூண்டு - 10 பற்கள் தக்காளி - 1 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் கெட்டியான தேங்காய் பால் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... சோம்பு - 1/2…
-
- 2 replies
- 993 views
-
-
-
பூண்டுப்பொடி.. செய்வது எப்படி? Posted By: ShanthiniPosted date: January 09, 2016in: தேவையானவை பூண்டு – 250 கிராம் காய்ந்த மிளகாய் – 10 உளுத்தம்பருப்பு – ஒரு கப் எண்ணெய் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன் மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும். குறிப்பு:- பூண்டு, வாயுத் தொல் லையை நீக்கும். இதய நோயாளி களுக்கு மிகவும் பயன்தரக் கூடியது. http://onlineuthayan.com/lifestyle/?p=…
-
- 0 replies
- 1.1k views
-
-
கத்திரிக்காய் பக்கோடா Posted By: ShanthiniPosted date: January 05, 2016in: தேவையான பொருட்கள் கத்திரிக்காய் – 2 கடலை மாவு – 4 மேசைக்கரண்டி அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மல்லி தூள் – 1/4 தேக்கரண்டி கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் கத்திரிக்காயை நன்கு நீரில் கழுவி, அதனை வட்டமாகவோ அல்லது நீளமாகவோ நறுக்கி நீரில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்பு கத்திரிக்காயை எடுத்து, …
-
- 2 replies
- 1.6k views
-
-
பனீர் டிக்கா தேவையான பொருட்கள்: 1. பனீர் - 10 துண்டுகள் 2. கெட்டி தயிர் - 1/4 கப் 3. பச்சை மிளகாய் - 2 அல்லது 3 4. பூண்டு - 2 பல் 5. கடுகு - 1/4 தேக்கரண்டி 6. சீரகம் - 1/2 தேக்கரண்டி 7. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி 8. பெருஞ்சீரகம் - 1/4 தேக்கரண்டி 9. உப்பு 10. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி 11. எண்ணெய் / வெண்ணெய் - 2 தேக்கரண்டி செய்முறை: 1.பச்சை மிளகாயை வெறும் கடாயில் வதக்கி பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும். 2.கடுகு, சீரகம், வெந்தயம், பெருஞ்சீரகம் எல்லாம் உப்பு சேர்த்து பொடிக்கவும். 3.தயிர், மஞ்சள் தூள், பொடித்த மசாலா, அரைத்த மிளகாய் பூண்டு விழுது எல்லாம் ஒன்றாக கலந்து இத்துடன் பனீர் துண்டுகள் சேர்த்து நன்றாக பிரட்டி 1 ம…
-
- 0 replies
- 649 views
-
-
தக்காளி உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக உருளைக்கிழங்கு மசாலா சூப்பராக இருக்கும். ஆனால் அந்த உருளைக்கிழங்கு மசாலாவையே சற்று வித்தியாசமாக தக்காளி அதிகம் சேர்த்து சமைத்தால் எப்படி இருக்கும்? உண்மையிலேயே சூப்பரா இருக்கும். வேண்டுமெனில் முயற்சித்துப் பாருங்கள். இங்கு தக்காளி உருளைக்கிழங்கு மசாலாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது) பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1/2 கப் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) …
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்து மீன் குழம்பு யாழ்ப்பாணத்தில் உள்ள அசைவ உணவுப் பிரியர்கள் வீடுகளில் பொதுவாக புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் கட்டாயமாக அசைவ உணவு சமைப்பார்கள்.ஆனாலும் பொதுவாக தாங்கள் வணங்கும் தெய்வங்களைப் பொறுத்தும், அத்தெய்வங்களின் திருவிழாக் காலங்களைப் பொறுத்தும் அவர்களின் உணவு முறையில் மாற்றம் உண்டாகும். மீன் குழம்புக்குத் தேவையான பொருட்கள் வெட்டிக் கழுவிய மீன் துண்டுகள் – 500 கிராம் உரித்து, கழுவி, வெட்டிய சிறிய வெங்காயம் – 100 கிராம் கழுவி, வெட்டிய பச்சை மிளகாய் – 4 யாழ்ப்பாணத்துத் தூள் – காரத்துக்குத் தேவையான அளவு உப்பு – தேவையான அளவு பழப்புளிக் கரைசல் – 1 கப் தேங்காய்ப்பால் – முதற்பால் 1 கப் – 2 ம் 3ம் பால் ஒ…
-
- 8 replies
- 2.2k views
-
-
நாட்டுக்கோழி ரசம் :செய்முறைகளுடன்..! தேவையானவை: நாட்டுக்கோழி - ஒரு கிலோ, தக்காளி - 300 கிராம், சின்ன வெங்காயம் - கால் கிலோ, மல்லித்தூள் - 4 டேபிள்ஸ்பூன், மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - 10 பல், சின்ன வெங்காயம் - 5, எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: நாட்டுக்கோழியை நடுத்தரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். தக்காளி, சின்ன வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக நசுக்கி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை தாளித்து... நறுக்கிய சின்ன வெங்காயம், த…
-
- 3 replies
- 1.7k views
-
-
வல்கனோ சிக்கன் தேவையான பொருட்கள் சிக்கன் ——– 1/2 கிலோ இஞ்சி நறுக்கியது ——-1டீஸ்பூன் பூண்டு நறுக்கியது ——1 டீஸ்பூன் பச்சை மிளகாய் நறுக்கியது —–2 சோயா சாஸ் —-1 டீஸ்பூன் பச்சை மிளகாய் விழுது —–1 டீஸ்பூன் தக்காளி சாஸ் ——2டீஸ்பூன் சில்லி ஃபிளேக்ஸ்—– 1டீஸ்பூன் முட்டை ——-2 செய்முறை;- சிக்கனை நீளமாக கட் செய்யவும்.(finger shape)அதனை கார்ன் மாவு முட்டை மைதா மாவு உப்பு சேர்த்துபிரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து தனியாக வைக்கவும். ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி பொடியாக்கிய இஞ்சி பொடியாக்கிய பூண்டு போடவும். நறுக்கிய பச்சை மிளகாய் போடவும்.சோயா சாஸ்…
-
- 1 reply
- 1.6k views
-
-
பரோட்டா செண்ட்விச் தேவையான பொருட்கள் பெரிய வெங்காயம் - ஒன்று (நான்கு பெரிய துண்டுகளாக நறுக்கியது) வெ.பூண்டு - 2 பற்கள் மிளகுத் தூள் - கால் டீஸ்பூன் சிக்கன் துண்டுகள் - 5 லெட்யூஸ் இலைகள் - கால் கட்டு (நறுக்கியது) மயோனைஸ் - 2 டீஸ்பூன் செய்முறை முதலில் பரோட்டாவை சூடுபடுத்தி எடுத்துக் கொள்ளவும். எண்ணெயில் சிக்கன் துண்டுகளை பொரித்து எடுத்து அதனை நீளமாக நறுக்கி வைக்கவும். அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், வெ.பூண்டை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பரோட்டாவின் ஒரு பாதியில் மயோனை…
-
- 2 replies
- 986 views
-
-
மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு கேரளா என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது புட்டு தான். ஆனால் மீன் குழம்பு கூட, கேரளாவில் சூப்பராக இருக்கும். அதிலும் மீன் மொய்லி இன்னும் அருமையாக இருக்கும். இந்த மீன் மொய்லி ரெசிபியானது தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் ஒரு மீன் குழம்பு. இந்த குழம்பிற்கு வாவல் மீன் அல்லது கிங்பிஷ் மீனைக் கொண்டு செய்யலாம். இங்கு அந்த கேரளா ஸ்டைல் மீன் குழம்பான மீன் மொய்லி ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வாவல் மீன்/கிங்பிஷ் - 4 துண்டுகள் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய - 2 (நீளமாக கீறியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் மிளகு தூள் -…
-
- 9 replies
- 2.6k views
-
-
அச்சாறு(ஊறுகாய்) Posted By: ShanthiniPosted date: December 28, 2015in: அறுசுவை தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் – 20 (நம்ம ஊர் வெங்காயம்) பச்சை மிளகாய் – 15 (நடுவில் கத்தியால் கீறிக் கொள்ளுங்கள்) கரட் – 2 (மெலிதான நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்) வினாகிரி – 2 கோப்பை கடுகு – 2 தேக்கரண்டி (நன்றாக அரைத்தெடுத்துக் கொள்ளுங்கள்) மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள் – சிறிதளவு உப்பு – தேவைக்களவானது செய்முறை முதலில் ஒரு கோப்பை வினாகிரியை சூடாக்கிக் கொள்ளுங்கள். அதனுள் வெங்காயத்தைப் பொட்டு சிறிது நேரம் மெலிதான சூட்டில் வேகவையுங்கள். பின்னர் வெங்காயத்தை வெளியே எடுத்து விட்டு மிளகாயைப் போட்டு அதேபோல் மெலிதான சூட்டில் வேகவைத்துக் கொள்ளுங்கள்.…
-
- 0 replies
- 1.3k views
-
-
மெக்சிகன் ரைஸ் தேவையான பொருட்கள்: முட்டைக்கோஸ் - 50 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று குடைமிளகாய் - ஒன்று பூண்டு - 2 பல் மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - 3 தேக்கரண்டி நெய் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு அரிசி - ஒரு கப் செய்முறை: முட்டைக்கோஸை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். ஒரு வெங்காயத்தை நீளமாகவும், மற்றொரு வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும். பூண்டு, தக்காளி இவற்றை பொடியாகவும், குடைமிளகாயை நீளமாகவும் நறுக்கவும். சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம…
-
- 2 replies
- 937 views
-
-
தக்காளி மீன் குழம்பு ஞாயிற்றுக் கிழமையானாலே பெரும்பாலான வீடுகளில் அசைவமாகத்தான் இருக்கும். அதிலும் மீன் என்றால் பலருக்கும் பிடிக்கும். ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான அசைவ உணவுகளில் மிக முக்கியமானது. அந்த வகையில் தக்காளி மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள் மீன் - 300 கிராம் தக்காளி - 6 சாம்பார் வெங்காயம் - 2 புளி - சிறிதளவு மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கடுகு - சி…
-
- 1 reply
- 1.6k views
-
-
வேர்க்கடலை சுண்டல்.. செய்வது எப்படி?? தேவையானவை: பச்சை வேர்க்கடலை ஒரு கப், காய்ந்த மிளகாய் 2, பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மல்லி (தனியா) ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 3 டீஸ்பூன், கறிவேப்பிலை 10 இலைகள், எண்ணெய், உப்பு தேவைக்கேற்ப. செய்முறை: வேர்க்கடலையை முதல் நாளே ஊறவைக்கவும். மறுநாள் காலை குக்கரில் சிறிதளவு நீர் விட்டு, வேர்க்கடலை, உப்பு சேர்த்து வேகவைக்கவும். காய்ந்த மிளகாய், மல்லியை (தனியா) வெறும் வாணலியில் வறுத்து, பொடித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை …
-
- 2 replies
- 3.3k views
-
-
வரகு போண்டா வாய்க்கு ருசியைத் தரும் வரகில், வற்றாத சத்துகள் உள்ளன. வரகின் தோலில் ஏழு அடுக்குகள் உள்ளன. கிராமங்களில் உரலில் போட்டு, வெகு நேரம் இடிப்பார்கள். வறண்ட பகுதிகளிலும் விளையக்கூடியது. பலன்கள் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் சீக்கிரத்தில் செரிக்கக்கூடியது. அரிசிக்குப் பதிலாக வரகில் இட்லி, தோசை செய்யலாம். அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது. உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும். வரகு போண்டா 300 கிராம் வரகு அரிசி மாவு, 200 கிராம் கடலை மாவு, 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள், 100 கிராம் சின்ன வெங்காயம், ஒரு டீஸ்பூன் இஞ்சி, பூ…
-
- 11 replies
- 2.7k views
-
-
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் வான்கோழி பிரியாணி கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்டது. இந்த பண்டிகையன்று உங்கள் வீட்டில் ஸ்பெஷலாக ஏதேனும் செய்ய நினைத்தால் வான்கோழி பிரியாணி செய்து சுவையுங்கள். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட. தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு... வான்கோழி - 2-4 பெரிய துண்டுகள் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (அரைத்தது) புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது) எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்) உப்பு - சிறிது மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் தயிர் - 1/4 கப் பிரியாணிக்கு... பாசுமதி அ…
-
- 0 replies
- 894 views
-
-
அவல் தேங்காய் சாதம் Posted By: ShanthiniPosted date: December 23, 2015in: தேவையான பொருட்கள் அவல் – 2 கப் தேங்காய் – 1 கப் (துருவியது) பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது) வேர்க்கடலைப் பருப்பு – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிது கறிவேப்பிலை – சிறிது செய்முறை முதலில் அவலை நன்கு நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதில் உள்ள நீரை வடிகட்டிக் கொள்ளவும். பின் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், வேர்க்கடலைப் பருப்பு, உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் விட்டு நன்கு பிசைந்துக் கொள்ளவும். பின்னர் ஒரு தட்டில் அவலை கொட்டி, அதில் பிசைந்து வைத்துள்ள தேங்காய் கலவையை போட்டு கலந்து, அதன் மேல் கொத்த…
-
- 1 reply
- 796 views
-
-
காரமான பெங்காலி மீன் குழம்பு பெங்காலியில் செய்யப்படும் மீன் குழம்பை 'மச்சல் ஜால்' என்று சொல்வார்கள். இது பெங்காலியில் மிகவும் பிரபலமான ஒரு மீன் குழம்பு. இந்த ரெசிபியானது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் முதலில் மீனை பொரித்து பின் குழம்பு வைப்பது தான். இங்கு அந்த பெங்காலி ஸ்டைல் மீன் குழம்பான மச்சல் ஜால் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: மீன் - 4 துண்டுகள் வெங்காயம் - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் தக்காளி - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூ…
-
- 2 replies
- 1.1k views
-
-
தேவையான பொருட்கள் கணவாய் மீன் - 10 இஞ்சி விழுது - 2 மேசைகரண்டி பூண்டு விழுது - 2 மேசைகரண்டி வெங்காயம் - 1 கறிவேப்பிலை - 15 தக்காளிப் பழம் - 1 புளி - 1 மேசைகரண்டி எண்ணெய் - 2 மேசைகரண்டி கொத்தமல்லி இலை - தேவையான அளவு சீரகம் - அரை ஸ்பூன் கடுகு - அரை ஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - அரை ஸ்பூன…
-
- 5 replies
- 2.4k views
-
-
பன்னீர் கிரேவி குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் பொருட்கள் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இவற்றில் தான் கால்சியம் அதிகம் உள்ளது. அதிலும் குழந்தைகள் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய பன்னீரை இரவில் கிரேவி போன்று செய்து சப்பாத்திக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள்: பன்னீர் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது) குடைமிளகாய் - 1 கப் (நறுக்கியது) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) …
-
- 0 replies
- 1.2k views
-
-
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ப்ரௌனி வீட்டிலேயே செய்யலாம் கிறிஸ்துமஸ் கேக்! என்னென்ன தேவை? மைதா - 100 கிராம் சரக்கரை, வெண்ணெய், டார்க் சாக்லேட் - தலா 100 கிராம் கோக்கோ பவுடர் - 10 கிராம் வால்நட் - 30 கிராம் பேக்கிங் பவுடர் - 3 கிராம் எப்படிச் செய்வது? ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். டார்க் சாக்லேட்டைத் துண்டுகளாக்கி, ஒரு சிறிய பாத்திரத்தினுள் போடுங்கள். இதை கொதிக்கும் தண்ணீரில் வைத்தால் அந்தச் சூட்டில் சாக்லேட் உருகிவரும். இதை டபுள் பாய்லிங் என்று சொல்வார்கள். சாக்லேட்டைப் பாத்திரத்தில் போட்டு நேரடியாக உருக்கினால் தீய்…
-
- 0 replies
- 719 views
-
-
இறால் பிரியாணி தேவையானவை: பாஸ்மதி அரிசி - அரை கிலோ இறால் - கால் கிலோ வெங்காயம் - கால் கிலோ தக்காளி - 3 பச்சை மிளகாய் - 4 பூண்டு - 10 பற்கள் இஞ்சி - 2 அங்குலத் துண்டுகள் மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி அளவு கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு புதினா - ஒரு கைப்பிடி அளவு உப்புத் தூள் - 2 தேக்கரண்டி பட்டை - 2 துண்டுகள் பிரிஞ்சி இலை - 2 செய்முறை: முதலில் பாஸ்மதி அரிசி உடன் பிரிஞ்சி இலை சேர்த்து உதிரி உதிரியாக வேக வைத்து வடித்துக் கொ…
-
- 9 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 814 views
-