நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
[size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]சௌசௌ - 1 கப் (நீளமாக நறுக்கியது) உருளைக்கிழங்கு - 1 கப் (நீளமாக நறுக்கியது) கேரட் - 1 கப் (நீளமாக நறுக்கியது) பூசணிக்காய் - 1 கப் (நீளமாக நறுக்கியது) வாழைக்காய் - 1 கப் (நீளமாக நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) தேங்காய் - 1/2 கப் பச்சை மிளகாய் - 2 தயிர் - 1/2 கப் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை :[/size] [size=4]முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அனைத்து காய்கறிகளையும் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 20 நிமிடம் மூடி வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். …
-
- 0 replies
- 791 views
-
-
ஈரல் மிளகு சாப்ஸ் என்னென்ன தேவை? ஆட்டு ஈரல் – கால் கிலோ சின்ன வெங்காயம் – 10 உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை வதக்கி அரைக்க: இஞ்சி - சிறிய துண்டு மல்லி – ஒரு டீஸ்பூன் பூண்டு பல் - 4 மிளகு – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 தாளிக்க: வெண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – அரை டீஸ்பூன் கறிவேப்பிலை, மல்லித் தழை – சிறிதளவு எப்படிச் செய்வது? ஈரலை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். வாணலியில் வெண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை தாளித்த…
-
- 0 replies
- 526 views
-
-
மட்டன் ரோகன் ஜோஷ் என்னென்ன தேவை? தயிர் - 20 கிராம், வெங்காயம் - 50 கிராம், மட்டன் - 200 கிராம், சோம்புத்தூள் - 1/4 டீஸ்பூன், குங்குமப்பூ - 1 சிட்டிகை, இஞ்சி பவுடர் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன், காஷ்மீர் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியா தூள் - 2 டீஸ்பூன், பிரிஞ்சி இலைகள் - 1, கருப்பு ஏலக்காய் - 2, ஏலக்காய் - 5, மட்டன் வேகவைத்த தண்ணீர் - 100 மி.லி., நெய் - 20 மி.லி. எப்படிச் செய்வது? மட்டனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டி, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், கருப்பு…
-
- 0 replies
- 588 views
-
-
காளான் பஜ்ஜி தேவையான பொருட்கள்: பட்டன் காளான் - 15 கடலை மாவு - 100 கிராம் சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன் அரிசிமாவு - 1 டேபிள் ஸ்பூன் மைதா - 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள் - 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் தேவைக்கேற்ப உப்பு, எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். செய்முறை: காளானை சுத்தம் செய்து கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். காளானை ஒவ்வொன்றாக அதில் நனைத்து எடுத்து எண்ணையில் பொரித்து எடுக்க சுவையான பஜ்ஜி ரெடி. காலிஃப்ளவரையும் துண்டுகளாக்கி உப்பு நீரில் சுத்தம் செய்து, அரை வேக்காடாக வேக வைத்து, நீரை வடித்து விட்டு, இதேபோல் …
-
- 0 replies
- 972 views
-
-
செட்டிநாடு பக்கோடா குழம்பு இன்று பெரும்பாலான மக்கள் சாப்பிடும் ஓர் ஆரோக்கியமான உணவுப் பொருள் தான் சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான குருமா, மசாலா செய்து சுவைத்து போர் அடித்திருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால், சற்று வித்தியாசமாக விடுமுறை நாட்களில் அல்லது இரவில் செட்டிநாடு பக்கோடா குழம்பு செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) புளி - நெல்லிக்காய் அளவு (1/4 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) உப்பு - …
-
- 0 replies
- 766 views
-
-
கோஸ்டல் ஃபிஷ் மாங்காய் கறி என்னென்ன தேவை? மீன் துண்டுகள் - 500 கிராம், தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், தேங்காய் - 1/2 மூடி, துண்டுகளாக நறுக்கிய மாங்காய் - 1, நறுக்கிய தக்காளி - 1, துருவிய இஞ்சி - 1 இஞ்ச், பூண்டு பல் - 3, கறிவேப்பிலை - 1 கொத்து, நறுக்கிய பச்சைமிளகாய் - 4, தேங்காய் எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? தேங்காயைத் துருவி முதல் மற்றும் இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும். இரண்டாம் தேங்காய்ப்பாலில் தனியாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் இஞ்…
-
- 0 replies
- 339 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
உருளைக்கிழங்கு மசாலா என்னென்ன தேவை? உருளைக்கிழங்கு - 1/4 கிலோ, கடுகு - 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், வெங்காயம் - 1, மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன், தனியா தூள் - 1/4 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், அதன்பின், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கரம் மசாலா தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். குறிப்பு : வெ…
-
- 0 replies
- 677 views
-
-
நாங்க சின்ன பிள்ளையா இருக்கேக்க எங்க அம்மம்மா முருங்கைக்காயும் இறாலும் போட்டு நல்ல பிரட்டல் கறி ஒண்டு வைப்பா, வாங்க இண்டைக்கு எப்பிடி அந்த பிரட்டல் கறி செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் செய்து பாருங்க பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 457 views
-
-
சிறுதானியங்களில் நிறைந்துள்ள சத்துக்கள் தற்போது சிறுதானிய உணவுகளை உண்ணும் ஆர்வம் அதிகரித்திருக்கின்றன. சிறுதானியங்களில் என்னென்ன சத்துகள் நிறைந்திருக்கின்றன என்று பார்க்கலாம். தற்போது சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வும், சிறுதானிய உணவுகளை உண்ணும் ஆர்வமும் அதிகரித்திருக்கின்றன. ஆனால் சிறுதானியங்களில் என்னென்ன சத்துகள் நிறைந்திருக்கின்றன என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதோ, விவரம்... கம்பு: ‘டைப் 2’ சர்க்கரைநோய் வராமல் தடுக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு, நாவற…
-
- 0 replies
- 733 views
-
-
மாங்காய் பச்சடி செய்வது எப்படி சாதம், தோசையுடன் சாப்பிட மாங்காய் பச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த மாங்காய் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மாங்காய் - 2 உப்பு - ஒரு துளி, எண்ணெய் - ஒரு டீஸ்பூன் வெல்லம் - ஒரு பாதி மாங்காய் அளவு கடுகு - சிறிது பச்சை மிளகாய் - 2 நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் செய்முறை : முதலில் மாங்காயை சுத்தம் செய்து, தோலைச் சீவி, சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தை பொடித்து கொள்ளவும். பாத்திரத்தில் சிறிது தண்ணீருடன் மாங்காயை…
-
- 0 replies
- 655 views
-
-
-
- 0 replies
- 960 views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க ரொம்ப ரொம்ப இலகுவா மாலை நேரத்தில செய்ய கூடிய முட்டை கட்லெட் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து பிள்ளைகளுக்கு குடுத்து பாருங்க ஒவ்வொரு நாளும் வேணும் எண்டு கேப்பாங்க அவ்வளவு ருசியா இருக்கும். செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 708 views
-
-
வாங்க இண்டைக்கு இலகுவா முட்டைய மட்டும் வச்சு இலகுவா ஒரு உறைப்பான மாலை உருண்டை செய்வம், இத நீங்க மாலைநேரத்துக்கு செய்து தேத்தண்ணியோடையும் சாப்பிட நல்லா இருக்கும். நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 465 views
-
-
பொதுவாக புடலங்காயை கூட்டு, பொரியல் என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் குளிர்காலத்தில் மாலை வேளையில் டீ/காபி குடிக்கும் போது இதமாக ஏதேனும் மொறுமொறுவென்று சாப்பிட நினைத்தால், புடலங்காயை பஜ்ஜி செய்து சாப்பிடலாம். இது உண்மையிலேயே வித்தியாசமான சுவையுடன் இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது புடலங்காய் பஜ்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: புடலங்காய் - 1 எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு பஜ்ஜி மாவிற்கு... கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 1/2 கப் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர்…
-
- 0 replies
- 436 views
-
-
அதிசய உணவுகள் 1 - தவளை சூப்! கடல் உணவுகள் விற்கும் கடையின் முன்னால் சாந்தகுமாரி சிவகடாட்சம் ‘உலகத்தில் உண்மையான காதல் என்பது வேறு எதிலுமே இல்லை. அது உண்ணும் உணவின் மீதுதான் இருக்கிறது!’ - ஜார்ஜ் பெர்னாட் ஷா இரண்டாயிரத்தில் இருந்து பத் தாயிரம் வரையிலான சுவை மொட்டுகளை (Taste Buds) தன்ன கத்தே கொண்ட ஒரு மனிதனுடைய நாக் கின் நீளம் வெறும் 4 அங்குலங்கள் தான். இந்தச் சிறிய நாக்குக்காக படைக் கப்பட்டிருக்கிற பலவகையான உணவு வகைகளை எல்லாம் உலகெங்கிலும் வாழும் மனிதர்கள்கண்டுபிடித்து வைத் திருப்பது உலக மகா அதிசயமாக எனக்குத் தோன்றும். நாக்கின் சுவை என்பது இந்த நாலு அங்குலங்களைத் தாண்டினால் காணாமல் போய்விடும். இதற்குத்தான் மனிதன…
-
- 0 replies
- 1.2k views
-
-
வித்தியாசமான சுவையில் இறால் தொக்கு!#WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான இறால் தொக்கு அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: இறால்(சுத்தம் செய்து குடல் நீக்கியது) - 250 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 100 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 கறிவ…
-
- 0 replies
- 839 views
-
-
நெட்டிசன்களை லட்சக்கணக்கில் கட்டிப்போடும் கொங்குநாட்டு சமையல் வலைதளம்! பெங்களூரில் வசிக்கும் சுகுணா வினோத், `www.kannammacooks.com’ என்ற வலைதளத்தை நிர்வகிக்கும் தமிழ்ப் பெண். கொங்குநாட்டு ஸ்பெஷல் சமையல் குறிப்புகளைப் பதிவிட்டு இரண்டாண்டுகளுக்குள் எக்கச்சக்கமானவர்களின் கவனத்தை ஈர்த்தவர். ஒவ்வொரு மாதமும் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இவரது வலைதளத்தைப் பார்வையிடுகிறார்கள். தன் சமையல் ஆர்வம் பற்றி பேசுகிறார் சுகுணா... ``கொங்கு நாட்டுக்கே உரிய பாரம்பர்ய சமையலில் கைதேர்ந்தவர் என் அம்மா. என் அப்பா, அலுவலக வேலை காரணமாக பல நாடுகளுக்கும் பயணம் செய்வது வழக்கம். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வித்தியாசமான ரெசிப்பிகளை அறிந்து அவற்றை வீட்டில் செய்து பரிமாறுவார…
-
- 0 replies
- 1k views
-
-
மீன் - உருளைக்கிழங்கு குருமா இந்த குருமாவிற்கு முள் அதிகமில்லாத மீன் துண்டுகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மீன் துண்டுகள் - 500 கிராம் உருளைக்கிழங்கு - 2 சிறியது பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 2 கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தேவைக்கு சோம்பு - அரை டீஸ்பூன் பட்டை - மிகச் சிறிய…
-
- 0 replies
- 529 views
-
-
-
ஹாங்காங் சிக்கன் என்னென்ன தேவை? சிக்கன் - 1/2 கிலோ, சோள மாவு - 1/4 கப், வெங்காயம் - 1, தக்காளி - 1, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், அஜினோமோட்டோ - சிறிது, மிளகுத்தூள் - சிறிது, குடைமிளகாய், கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் - சிறிது, எண்ணெய், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள், உப்பு, மிளகுத்தூள், இஞ்சி, பூண்டு விழுது, சோள மாவு சேர்த்து கலந்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் 2…
-
- 0 replies
- 452 views
-
-
நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு காய்கறிகளின் தோலைச் சமையலுக்குப் பயன்படுத்துகிற பலரும் பழங்களின் தோலைத் தூக்கிஎறிந்துவிடுவார்கள். ஆனால், அவற்றில் தேர்ந்தெடுத்த சில பழங்களின் தோலைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. ஆரஞ்சுப் பழத் தோலில் தொக்கு செய்யக் கற்றுத்தரும் இவர், வேறு சில சுவையான உணவு வகைகளையும் செய்யக் கற்றுத் தருகிறார். ஆரஞ்சுப் பழத் தோல் தொக்கு என்னென்ன தேவை? ஆரஞ்சுப் பழத் தோல் (பொடியாக நறுக்கியது) - 2 கப் இஞ்சி (பொடியாக நறுக்கியது) - அரை கப் வறுத்துப் பொடித்த வெந்தயப் பொடி …
-
- 0 replies
- 524 views
-
-
சிறுதானிய முளைகட்டிய சத்தான பயறு சாலட் சிறுதானிய முளைகட்டிய சத்தான பயறு சாலட் millets-Sprout-moong-dal-salad தினமும் சாலட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிறுதானியங்கள், முளைக்கட்டிய பயறு சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வரகு - 2 தேக்கரண்டி பனி வரகு - 2 தேக்கரண்டி தினை - 2 தேக்கரண்டி முளைகட்டிய பாசிப்பயறு - 3 தேக்கரண்டி முளைகட்டிய ராகி - 2 தேக்கரண்டி முளைகட்டிய வேர்க்கடலை - 1 தேக்கரண்டி துருவிய கேரட் - 2 தேக்கரண்டி உப்பு - 1 சிட்டிகை, எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி மிளகு சீரகப் பொடி - 1/4 தேக்கரண்டி …
-
- 0 replies
- 659 views
-
-
சிறுதானிய கார அடை (தினம் ஒரு சிறுதானியம்-5) குழந்தைள்கள் முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிட உகந்தவை சிறுதானிய உணவுகள். கேழ்வரகு, கம்பு, தோசை, வரகரிசிச் சோறு, தினை உருண்டை, சோள கொழுக்கட்டை, கேப்பை களி என சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை. எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யும் அடை சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்களைக் கூட்டலாம். செய்முறை: கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப் பயறு, குதிரைவாலி, சாமை அரிசி, வரகரிசி ஆகியவற்றை தலா கால் கிலோ எடுத்துக்கொள்ளவும். இதனுடன், தோலுடன்கூடிய முழு கறுப்பு உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை தலா 4 டீஸ்பூன் அளவுக்குச் சேர்க்கவும். இவற்றை காலை முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்…
-
- 0 replies
- 903 views
-