Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. 2ஆம் சங்கிலியனின் 405வது சிரார்த்த தினம்! யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி சைவத் தமிழ் மன்னன், 2ம் சங்கிலியனின் 405வது சிரார்த்ததினம் இன்று யாழில் இடம்பெற்றது. இலங்கை சிவனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானத்தம் தலைமையில் யாழ் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலிய மன்னன் சிலையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது சங்கிலிய மன்னன் சிலைக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவர் ஆறுதிருமுருகன், யாழ் மாநகர ஆணையாளர், சமய பெரியோர்கள், வர்த்தகர்கள் ஊர் மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சங்கிலிய மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து யமுனா …

  2. “தங்கம்மா என்றால் தொண்டு தங்கம்மா என்றாற் பண்பு தங்கம்மா என்றாற் சக்தி தங்கம்மா என்றாற் பக்தி தங்கம்மா என்றாற் சைவம் என்றெல்லாந் தரணி காணும் தங்கம்மா தமிழர் பெற்ற தனிப்பெருஞ் செல்வி வாழி.” என்ற கவிஞர் வி.கந்தவனம் ஐயாவின் பாடல் வரிகளை இவ்விடத்தில் நினைவு கூர்கின்றேன். ஆம் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா ஞாபகார்த்தமாக இக்கட்டுரையை எழுத விளைகின்றேன். அன்னை சைவசமயத்துக்கும் தமிழ்மொழிக்கும், சமுதாயத்துக்கும் அளப்பரிய பணிகளை ஆற்றி சைவத்தமிழ் மக்களின் மனங்களில் இன்றும் நீங்காத இடத்தைப் பெற்று மிளிர்கின்றார் என்றால் மிகையில்லை. அன்பு நெறியை அடிப்படையாகக் கொண்டு அவர் வாழ்ந்த வாழ்வு தமிழுக்காகவும் சைவசமயத்துக்காகவும் அம…

  3. "பல்கலைக்கழக வாழ்வின் என் நினைவு" - 04/10 பேராதனை பல்கலைக் கழகம் சென்ற தினம்] / "My memory of University life" - 04/10, The day we entered the University of Peradeniya] "தேடிய இன்பம், ஆடிய நையாண்டி மடியில் கொட்டுது, ஆயிரம் பாடல்கள் வாடிய இதயம், பூக்குது மீண்டும் கூடிய எம்மிடம், குதித்து துள்ளுது" "ஆண்டு ஒன்று அஞ்சி கழிந்தது ஆண்டு இரண்டு நிமிர்த்தி சென்றது ஆண்டு மூன்று துணிந்து நின்றது ஆண்டு நான்கு அறிவால் மலர்ந்தது" "நிறைந்த படிப்பு, இடையில் காதல் குறைந்த கூத்து, மத்தியில் தேர்வு உறைந்தது நெஞ்சம்,முடிவு கண்டு திரையும் வீழ்ந்தது, சிமிட்டில் பறந்தது" "நினைவுகளை விட்டு, மறைந்தது பல்கலைக்கழகம் …

  4. "கனவு மெய்ப்படும்" / பாரதியாரின் நினைவாக, அவர் விரும்பிய தலையங்கத்தில் ஒரு சிறுகதை [நினைவிடத்தில் உள்ள கல் பலகை மற்றும் அவரது இறப்புச் சான்றிதழில் உள்ள தகவல்களின்படி, தமிழ்க் கவிஞர் செப்டம்பர் 12 ஆம் தேதி காலமானார். ஆனால், மாநில அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியை 'மகாகவி தினமாக' அறிவித்தது.] "மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்;" [பாரதியார்] கனவுகளின் அடித்தளம் விருப்பத்தின் விளைவு என்பது உளவியல் ஆய்வாளரான சிக்மண்ட் பிராய்டு [Sigmund Freud] என்பாரின் கரு…

  5. மூத்த பேரனுக்கு 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! / 🎂 Happy 12th birthday to our eldest grandson! 🎂 இனிய 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள், அருணன்! லண்டன் மண்ணில் உதித்த அழகன் கண்களில் மின்னும் புன்னகை நதி ஆண்டுகள் பறந்தாலும் மங்காத பாசம் விண்மீனாய் எங்கள் குடும்பத்தின் ஒளி!🌸 காழ்ப்புணர் வில்லா வாழ்க்கை கொண்டவனே ஆழ்ந்த அன்பின் மறு உருவமே தாழ்ந்த எண்ணம் அற்ற சுடரே யாழ்ப்பான வேரின் செடியே நீடூழிவாழ்க!🌸 அறிவும் ஆற்றலும் இணைந்து என்றும் அழகு தெய்வமாய் பிரகாசிக்கும் அருணனே அடக்கமும் பணிவும் இரண்டையும் கொண்டு அருமையான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்!🌸 பன்னிரண்டு ஆண்டுகள் சென்றது போலவே இன்பம் என்றும் உன்னச் சூழ சின்ன அனிகா சேர்ந்து விளையாட வான் எங்கும் பிறந்தநாள் ஒலிக்க…

  6. ஜனாதிபதியின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு! முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றதுள்ளது. இதில் இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஏராளமான இஸ்லாம் பக்தர்களும் இதில் கலந்து கொண்டதுடன், மேலும் இஸ்லாமிய சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த நிகழ்வு நடைபெற்றது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றியதுடன், தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலாபரும் நிகழ்வில் உரையாற்றினர். செயிட் அப்துல்லா செஹீத் மௌலவி “ரமழான் மாதத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் இந்நிகழ்வில்சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். சிறப்பு பிரார்த்தனைக்குப் பிறகு, மாலை 6.23…

  7. சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா இன்று (2) சனிக்கிழமை காலை இடம்பெற்றது. மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நவ நாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று சனிக்கிழமை காலை திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் மற்றும் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம் பெற்றதோடு, பக்தர்களுக்கு திருச்சொரூப ஆசியும் வழங்கப்ப…

  8. "Celebrate Mothers" [அன்னையர் நாள் / Mother's Day / 11th May, 2025] Mother are generally human beings great assets . If no mother , There is no human life - Even you and me - in the earth now! So in Sri Lanka and many other countries celebrate Mothers in mid of May, for example in 2022 , we celebrate on may 8 th and Next year, It will be on May 14 th , 2023. It is so natural that ,We celebrate Mothers each year as the days start lengthen and The weather begins to warm up as Mothers lengthen their love & affection and Warm up their relationship with additional care they take against their own kids as well as generally all children of the world! Here I am giving a re…

  9. 🎂 இனிய 6வது அகவை நாள் வாழ்த்துக்கள், 'கலை'! [25 மே 2025] 🎉 / 🎂 Happy 6th Birthday, 'Kalai'! 🎉 [25 th May 2025] ஒட்டாவா தென்றலில் மிதந்து வந்த மாணிக்கமே ஒளிகள் வீசி இதயம் கவர்ந்த மழலையே! ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த 'கலை'யே ஒளியார் முன் ஒள்ளியராய் வாழ்கவாழ்கவே! வசந்தம் பாடும் ஒரு பாட்டுப் போல வண்ண ஒளிகள் தரும் அழகு போல வலிமை மிக்க பெரும் தலைவன் போல வளமான வாழ்வு உனக்கு மகிழ்வு தரட்டுமே! அக்கா 'ஜெயா' அறிவில் உயர்ந்து ஓங்கி அன்போடு உன்னை என்றும் வழி நடத்த அகவை எட்டில் அன்பின் ஒரு தாயாக அவள் பாசம் உன்னை வழி காட்டுமே! இரண்டு அகவை உன் தம்பி 'இசை'க்கு இன்பம் கொண்டு அவன் பின் தொடருவான்! இந்திரா லோகம் நீ அருகில் இருந்தால் இறைவன் அவனுக்கு நீ…

  10. Published By: Vishnu 29 Aug, 2025 | 03:39 AM தமிழகத்தின், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது உலகப்பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம். இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டின் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.29) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி, வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலிக்கும் அன்னையின் ஆலயம். https://www.virakesari.lk/article/223647

  11. "புத்தாண்டுப் பரிசு" [ 26, டிசம்பர் 2004 சுனாமியின் நினைவாக] ஞாயிற்றுக் கிழமை 26, டிசம்பர் 2004 அன்று, நான் என் பெற்றோருடனும் சகோதரங்களுடனும் கொழும்பு கோட்டையில் இருந்து காலிக்கு காலை 6:50 மணிக்கு, குறைந்தது 1500 பயணிகளுடன் புறப்பட்ட புகையிரத வண்டியில் புத்தாண்டு பரிசுகளுடன் மாமா வீட்டுக்கு போய்க்கொண்டு இருந்தோம். மாமா காலியில் உள்ள சீமெந்து தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை பார்ப்பதுடன், தென்னிலங்கையில் தனிப்பெருந் தன்மையுடன் திகழும் ஒரே சிவாலயம் என பெருமை கொண்ட, 1850 ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட காலியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திலும் அதன் ஆலய பரிபாலன சபையின் ஒரு உறுப்பினராகவும் இருந்தார். இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண் பயணியும் ஆனா 'செங் க…

  12. மன்னாரில் ஆரம்பமான ‘மாற்குவின் கலை அம்பலம்’ காண்பியக் காட்சி adminMarch 13, 2025 இலங்கைத் தமிழர் மத்தியில் நவீன ஓவியத்தை பிரபலப்படுத்திய அ.மாற்கு அவர்களின் கலைப்படைப்புகளை ஒன்று திரட்டி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் காண்பியக் காட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை( 13)மன்னாரில் ஆரம்பமாகி உள்ளது. மன்னார் வயல் வீதி, சின்னக்கடை என்ற இடத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை 5 மணி வரை குறித்த கண்காட்சி இடம்பெறும். மாற்கு அவர்களின் மாணவர்கள் மற்றும் குடும்பத்தார் இணைந்து குறித்த காண்பியக் காட்சியை ஏற்பாடு செய்துள்ள நிலையில் மாற்கு அவர்களால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கு அதிகமான கலைப்படைப்புக்கள் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.எனவே குறித்த கண்காட்சி யை அனைவரும் வருக…

  13. ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்! விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14-04-2025 அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது. இதனை முன்னிட்டு இன்று ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றுவருவதுடன் பெருமளவான மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர். தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்கள் தல…

  14. 25 / 05 / 2024: பேரன் 'கலை' யின் ஐந்தாவது பிறந்த நாள் இன்று! "கலையின் பிறந்த நாள் இன்று கலை விழாவா பெரு விழாவாவென கண்கள் தடுமாறி வியந்து பார்க்க கலையின் பிறந்த நாள் இன்று !" "தில்லை கூத்தனின் பேரன் இவன் திசைமுகனை குட்டிய முருகன் இவன் திருந்தலரை கலக்கும் வீரன் இவன் திருமகள் அருள்பெற்ற செல்வன் இவன் !" "தித்திக்கும் இனிப்புகள் ஒரு பக்கம் தீஞ்சுவை பலகாரம் மறு பக்கம் திசை நான்கும் பேரிசை முழங்க திருநாள் இது இவனின் பொன்நாள் !" "திங்கட்குடையோன் இவனோ என மயங்க தினகரனும் முகிலில் மறைந்து நிழல்தர தீந்தமிழில் வாழ்த்துக்கள் எங்கும் ஒ…

  15. உண்மைக் கதை: "நிழலாக ஆடும் நினைவுகள்" [எங்கள் சிறிய அண்ணாவின் மகளின் பிறந்தநாள் நினைவு இன்று, 03 அக்டோபர்] இலங்கை தீவின், தலைநகரம் கொழும்பில், பொறளை என்ற இடத்தில் இருந்து நடக்கக் கூடிய தூரத்தில் அமைந்து இருந்த மன்னிங் டவுன் அரச விடுதியில் அண்ணா குடும்பம் இருந்த காலம் அது. நானும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு எழுதி விட்டு, மறுமொழி வந்து, பின் வேலை எடுக்கும் வரை, அவர்களுடன் இருந்தேன். அந்த காலத்தில் தான் அண்ணாவின் கடைசி மகளாக 'கலைமதி' பிறந்தார். பிறந்ததில் இருந்து அவருடனே நான் இருப்பதாலும், மற்றும் அவரை தூக்கி திரிவதாலும், விளையாடுவதாலும், அவர் என்னுடன் மிகவும் பிரியமாகவும் ஒட்டியும் இருந்தார். அவர் என் அறையிலேயே என்னுடனே…

  16. திரு. கந்தையா ஈஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு கூறலும் "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" யும் முடிக்கப்படாத வரலாற்றுப் புத்தகமான "இலங்கை வரலாறு" எனது மறைந்த நண்பரும், அர்ப்பணிப்புள்ள சுயாதீன ஆராய்ச்சியாளரும் மற்றும் கட்டிட பொறியியலாளருமான திரு. கந்தையா ஈஸ்வரனின் வாழ்நாள் படைப்பாகும். அவர் இதற்காக பல நாட்களையும் மணித்தியாலங்களையும் செலவழித்து, உலகம் முழுவதும் இருந்து அரிய நூல்கள், ஆவணங்கள், சான்றுகள் என்பவற்றைச் சேகரித்து, 10–12 ஆண்டுகள் மிகுந்த ஈடுபாட்டுடன் இதை எழுதியவர் ஆவார். நாங்கள் இருவரும் யாழ்ப்பாண மத்திய கல்லூரியிலும் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்திலும் இணைந…

  17. வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு நாள்! தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகளை இன்று நினைவுகூரப்படுகின்றார். அந்தவகையில் வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன் கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கருகிலும் குறித்த நிகழ்வானது இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. இதன்போது இளங்கோ அடிகளின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகரசபை உத்தியோகத்தர்கள், தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார்,சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1431661

  18. "எமது பெரிய அண்ணா "டாக்டர் கந்தையா யோகராசா"வின் எண்பத்தி ஏழாவது பிறந்த நாள் நினைவு கூறல் [22/06/2024]" "தீபாவளி தினம் தோறும் புது உடை தந்தாய் தீபமாய் எம் வாழ்விற்கு புத் துயிர் தந்தாய்" "தீதோ நன்றோ எதுவோ புது தெம்பு தந்தாய் தீபாவளி கதை பொய்த்ததோ? புனித மேனி எரிந்ததோ?" "தீபாவளி தினம் தோறும் உன்னை நாம் வணங்கி தீபமாய் உன்னைத் தான் உள்ளத்தில் நாம் ஏற்றுகிறோம்" "தீராத உன் கவலை உள்ளத்தில் எம்மை வாட்டுகையில் தீந்தமிழில் பாட்டு எழுதி உன்னை நாம் அழைக்கிறோம்" கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்ப…

  19. 💙 பேரன் ஆரினின் முதல் அகவைநாள் வாழ்த்துக்கள்! [29 அக்டோபர் 2025] இலையுதிர் விடியலில் அழுகை ஒலித்தது சொர்க்கத்தில் இருந்து பரிசு வந்தது காலைப்பனி போல சிறிய கைகளுடன் ஆரின் [Aarin], எங்கள் மகிழ்ச்சி, நனவானது! ஆண்டு ஒன்று கடந்த மகிழ்வில் அன்பு மலர் விரிவடையத் தொடங்க மழலைச் சிரிப்பு வீட்டில் ஒலிக்க மென் குரல் அனைவரையும் அணைத்தது! கருணை உள்ளம் பொங்கி வழிய அண்ணன் இருவரும் உன்னை அணைத்து திரென் [Dhiren] அமைதியாக புத்தியாக வழிகாட்டிட நிலன் சிரிப்பும் உற்சாகமும் கொடுப்பானே! உன்னைச் சுற்றி சுழலும் உலகில் உறக்கமற்ற இரவுடன் மகிழ்வான நாட்களுடன் பரந்த இதயத்துடன் பெற்றோர் பிரகாசிக்க பொன் கதிர்களால் வீட்டை நிரப்புவாயே! ஆனந்தக் கண்ணீருடன் கவனமாக பார்க்க தாத்தா என்…

      • Like
    • 2 replies
    • 147 views
  20. "ஆசிரியர்" [உலக ஆசிரியர் தினம் 2024 அக்டோபர் 5 சனிக்கிழமை / World Teachers' Day 2024 Saturday 5 October] "கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உயிர்பெறுவது போல கரும் பலகையில் கற்பிப்பவனே ஆசான்!" "மக்களின் அறியாமை நீக்கி அறிவுவேற்றும் மகத்தான இப்பணியே ஆசிரியர் அறப்பணி மகிழ்வுடன் வரவேற்று அறிவினை பகிர்ந்து மனசோர்பு அற்று அர்ப்பணிப்பவன் ஆசிரியர்!" "கவிதையை கவிஞனைப் போல் வாசித்து கணித சிக்கலை இலகுவாக போதித்து கருத்துக்களை சிறிதாக சிறப்பாக பதித்து கலக்கம் போக்கி மனிதனாக்குபவன் ஆசிரியர்!" "ஆசான் இன்று ஒருவருமான தொழிலாகி ஆயிரமாண்டுகளாக சேவை செய்ததை மறந்து ஆசையற்று கவனம…

  21. பிறந்த நாள் நினைவு கூறல்: 'திரு வீரகத்திப்பிள்ளை கணபதிப்பிள்ளை கந்தையா' (11/06/1907 – 18/02/2000) பிறந்த நாள் இன்று உங்களுக்கு அப்பா நெஞ்சினாலே உங்கள் நினைவு மலர்கிறதே! பிறந்தாலும் மறைந்தாலும் நீங்கள் வாழ்கிறீர்கள் எங்களுள் எப்போதும் தீபமாய் ஒளிர்கிறீர்களே! சாமக்கோழி கூவும் போது எழுந்தீர்கள் நல்லூர் கந்தனை வணங்க சென்றீர்களே! வெள்ளைவேட்டி கட்டி சால்வை அணிந்து நேர்கொண்ட பார்வையுடன் நிமிர்ந்து நடந்தீர்களே! சாவும் வரை சளைக்காமல் உழைத்தீர்கள் சாதாரண வாழ்க்கையையும் இனிமை ஆக்கினீர்களே! உண்மையைச் சொன்னீர் உன்னதமாய் வாழ்ந்தீர் ஒப்பில்லா மகத்துவம் உங்களிடம் இருந்ததே! சான்றோரை மதித்தீர் கற்றோரை போற்றினீர் சாமியாய் இன்று எம்மிடம் வாழ்கிறீர்களே! உங்கள் பெயரில் புகழு…

  22. தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா! தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது இதனையோட்டி வண்ணை வைத்தீஸ்வரன் கோவில் வழிபாட்டை தொடர்ந்து யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் வரை யானைகள் மீது திருமுறைகள் நகர்வலம் கொண்டுவரப்பட்டது. இதன்போது வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பழனி ஆதீன குருமகா சந்நிதானம் சாது சண்முக அடிகளார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, தென்னாடு முதல்வர் குணரத்தினம் பார்த்தீபன், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் அம்…

  23. "கார்த்திகை தீபம்" இன்று கார்த்திகை தீபம், 2023. மிளிரன் ஒரு இளம் பொறியியலாளர். தன் பணியை முடித்துவிட்டு, தான் தங்கி இருக்கும் ஊழியர்கள் குடியிருப்புக்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டு இருந்தான். அவனது எண்ணம் எல்லாம் தன் அம்மா, அப்பா, மூத்த அக்கா, அண்ணா மட்டுமே! "கார்த்திகை தீபம் எங்கும் ஒளிர்ந்து காலத்தின் வரலாற்றை இன்று சொல்லட்டும்! காரிருள் ஆக்கிய எமது வாழ்வு விழிப்பு பெற்று தீபமாய் ஒளிரட்டும்!!" அன்று கார்த்திகை மாதம் 2008, மிளிரன் பத்து அகவை, தன் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரர்களுடன், குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் பதுங்கு குழிக்குள் பாதுகாப்பு…

  24. 🌿 "Looking back on my birthday" / "பிறந்தநாளில் திரும்பிப் பார்க்கிறேன்" [01 / 11 / 2025] பிறந்தநாளில் என்னை திரும்பிப் பார்த்தேன் ஆண்டுகளை அல்ல, அனுபவங்களைக் கண்டேன்! பனைமரக் காடுகளின் மண்ணிலே பிறந்தேன் இன்னும் கடல்கள் என்பெயரை கிசுகிசுக்குது! வேலை முடித்து ஓய்வு எடுக்கிறேன் கடிகாரத்தின் கட்டளை மறந்து போனேன்! ஓய்வூதியம் அல்ல, நினைவுகளே என்செல்வம் அன்பும் இழப்பும் சேர்ந்தது என்ஊதியம்! தந்தையின் குரலும் தாயின் வருடலும் அக்காவின் புன்னகையும் மனதில் தெரியுது! மூன்று சகோதரர்கள் வாழ்வை முடித்தாலும் அவர்களின் நினைவுகள் இதயத்தில் ஒளிருது! காலங்கள் எல்லாம் ஆதரவளித்த மனையாள் காத்திருக்காமல் இடையில் மறைந்தது எனோ! ஒவ்வொரு விடியலிலும் அவள் புன்னகை உண்டு ஒவ்வொரு …

  25. ஆரம்பமானது ஆடிப்பிறப்பு! ஜூலை மாதம் 17ஆம் திகதியான இன்று தமிழர்கள் விமர்சையாக ஆடிப் பிறப்பினைக் கொண்டாடி வருகின்றனர். ஆடிப்பிறப்பு என்றதுமே முதலில் ஞாபகத்திற்கு வருபவர் தங்கத் தாத்தா என அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நவாலியூர் சோமசுந்த புலவர். அவர் ஆடிப்பிறப்பின் சிறப்பு மற்றும் ஆடிக்கூழ் காய்ச்சும் முறை தொடர்பாக எழுதிய ”ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே… கூடிப்பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுகட்டை தின்னலாம் தோழர்களே…” என்ற பாடல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானது. எமது முன்னோர்கள் சூரியனின் வட திசை மற்றும் தென் திசை நோக்கிய வருடத்தின் இருகாலப் பகுதியின் தொடர்புபடும் நாளை கணித்து ஆடிப் பிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.