கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3082 topics in this forum
-
வாங்கிய பொருட்கள் யாவும் சரியாக வாங்கினேனா? என மீண்டும் சரிபார்த்துக் கொண்ட சிவா பொருட்கள் எல்லாவற்றையும் காரில் ஏற்றி விட்டு காரை எடுத்துக் கொண்டு வீடு நோக்கி விரைந்தான். நாளைய பொழுதும் விடிந்தால் முதலாளியின் மகள் ராதாவின் நிச்சயதார்த்தம். அந்த வீடே குதூகலத்தில் மூழ்கிக் கிடந்தது. முதலாளியின் இரண்டு ஆண் பிள்ளைகளும் தங்கை ராதாவின் நிச்சயதார்த்தத்துக்காக வெளியூரிலிருந்து வந்திருந்தார்கள். பெண் பிள்ளை இல்லையென்று பல வருடங்கள் தவமாய்த் தவமிருந்து அதன் பின் பிறந்தவளே ராதா. ம் அந்த வீட்டு குலவிளக்கான அழகும், அறிவுமுடைய ராதாவின் நிச்சயதார்த்தம் என்றால் சும்மாவா என்ன? ம் ஒரே கொண்டாட்டம்தான். அவர்கள் வீட்டில் மட்டுமா கொண்டாட்டம்? இல்லை இல்லை. …
-
- 2 replies
- 1.6k views
-
-
அந்த சன சந்தடியற்ற வெளியில நீண்ட றோட் நீண்டு கொண்டே போகிறது இவர்களும் றோட் முழு வதையும் சொந்தம் ஆக்கியபடி அடைத்த படி சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறார்கள் ஏதோ தங்களுக்குள் கதைத்து கதைத்தவற்றில் ஏதோ கண்டு சிரித்து சிரிக்க அதில் நகைச்சுவை இல்லா விட்டாலும் சும்மா சிரித்து அந்த முழு பிரதேசத்தை அதிரவைத்தபடி போகிறார்கள் http://sinnakuddy.blogspot.com/2007/09/blog-post.html
-
- 26 replies
- 5.5k views
-
-
[01] அந்தக் கடற்கரையில் அன்றைக்கு அலைகள் கொஞ்சம் அதிகமாகவே கரைதொட்டன. பெளர்ணமி நாளின் நிலவினை அவைகளும் ரசித்தன போல்! பரந்து கிடந்த மணற்பரப்பில் 'குட்டிப்பவுண்' அண்ணர் வலை பின்னிக் கொண்டிருந்தார்! ஐம்பத்தெட்டு வயசானாலும், நிலவு வெளிச்சத்தில் வலை பின்ன முடியாத அளவுக்கு கண் பார்வை மட்டுமல்ல அவர் உடலும் வலுவிழந்து போகவில்லை. அவரின்ர உண்மையான பெயர் சூசைப்பிள்ளை. சொந்த இடம் மயிலிட்டி. சம்மாட்டியாரா..... கைவிரல் முழுக்க மோதிரம் , கழுத்தில பெரிய சங்கிலி........ என அவர் வலம் வந்ததைப் பார்த்திட்டு அவரின்ர ஊர்ச்சனம் செல்லமா வைச்ச பெயர்தான் "குட்டிப்பவுண்". இவரின்ர மனிசிக்காரி தங்கராணி. அவவின்ர பெயரிலயே தங்கம் இருந்ததால்.... இந்தமாதிரி செல்லப்பெயரில் இருந்து அவ கொஞ்ச…
-
- 21 replies
- 2.5k views
-
-
ஸ்ராலின் மரணமடைந்ததும் குருசேவ் பிரதம மந்திரியானார். கட்சியின் உயர் அதிகாரக்குழுவின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். “ஸ்ராலின் ஒரு கைதேர்ந்த கிரிமினல் என்பதை நான் இப்போது ஒப்புக்கொண்டாக வேண்டும். நீங்கள் அவருடைய ஆதரவாளரா, எதிரியா என்ற ஒரே விடயம்தான் அவருக்குத் தெரியவேண்டும். எதிரியாக இருந்தால் மரணத்தைத் தவிர எதுவும் கிடையாது.” என்று குறிப்பிட்டார். அந்தக் கூட்ட அரங்கத்தில் பின்பக்கத்தில் இருந்து யாரோ ஒருவர் இப்படிக் கத்தினார், “இந்த நாற்பது வருடங்கள் முழுவதும் நீங்கள் அவருடன் இருந்து வந்தீர்கள். ஏன் வாய் திறக்காமல் இருந்தீர்கள்?” குருசேவ் சிரித்துக்கொண்டே சொன்னார், “இந்தக் கேள்வியை எழுப்பிய மதிப்பிற்குரிய அந்தத் தோழரை நான் பார்க்க விரும்புகிறேன். அவர் கொஞ்ச…
-
- 2 replies
- 969 views
-
-
தங்கமயில் – சிறுகதை -சி.புஷ்பராணி- வெளியிலே நாய்கள் குரைக்கும் சத்தம் அமளியாகக் கேட்டது. தட …தடவென்று யாரோ ஓடிவரும் ஓசை. ‘இது வழக்கமான ஒன்றே… ‘ திரும்பிப் படுத்தேன். எங்கள் வீட்டு ஜெஸியும் குரைக்கும் சத்தம் காதை அறுத்தது. யாரோ கதவைப் பலமாக இழுப்பது போல் இருந்தது… சிறு சத்தமென்றாலே உடனே எழும்புவது நான்தான். தூக்கம் கண்ணைத் திறக்கவிட மறுக்க ”யாரது” என்று குரல் கொடுத்துப் பார்த்தேன்…..பதில் வராததால் கையில் டோர்ச்சை எடுத்துக் கொண்டு கதவடிக்குப் போனேன். ஜெஸியும் பின்னாலேயே வந்தாள். இணைப்புச் சங்கிலியைத் திறந்து பார்த்தால், மகளைத் தோளில் சாய்த்துக்கொண்டு மிரட்சியுடன் தங்கமயில…
-
- 1 reply
- 940 views
-
-
ஐந்தாவது மருந்து - ஜெயமோகன் எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடித்தவன் இருக்கும் ஊரில் கொக்கோகோலா கிடைக்கவில்லை. வழியெங்கும் அடர்த்தியான தென்னந்தோப்புகளில் இளநீர்க்குலைகள்தான் தொங்கின. சரியான தாகம். பிரதாப் ‘பேசாமலிரு. போய் நல்ல கிணற்றுத் தண்ணியே சாப்பிடலாம் ‘என்றான். ஊருக்கும் ஒரு மலையாள நெடி இருந்தது, பெயரில் தொடங்கி . அச்சன்குளத்துக்குக் கார்கள் வருவதே அதிகமில்லை போலும். மாட்டுவண்டிப் பாதையில் இரு செம்மண் குழிகள் இணைஓடைகள் போல உருவாகியிருந்தன. அடிக்கடி தென்பட்ட குளங்களிலெல்லாம் தாமரைகள். அபூர்வமாக நீலத்தாமரையைக்கூடப் பார்த்தேன். ‘ஒரு கிராக்கைப்பாக்க இத்தனைதூரம் வரணுமாண்ணு இருந்தது. ஆனா ஊரைப்பாக்கிறப்ப வரவேண்டிய ஊர்தான்னு படுது ‘என்றேன். ‘தளவாய் கிராக்…
-
- 1 reply
- 730 views
-
-
வேட்டையன்– சித்தாந்தன் ஆத்மார்த்தனுக்கு அன்றைய பொழுது எரிச்சலுடனேயே விடிந்தது. அறையின் மூலைக்குள் இருந்து தவளை ஒன்று கத்துவதைப்போல அவன் மனைவியின் குரல் ஒலித்தது. ‘எழும்புங்கோ உங்களை யாரோ தேடி வந்திருக்கிறார்’ இந்தக் காலை வேளையில் தன்னை யார் தேடி வந்திருப்பார்கள்? அதுவும் இன்று விடுமுறை நாள். மிக்க அலுப்பும் சோர்வும் படர கட்டிலிலிருந்து எழுந்து கொண்டான். நீண்டதோர் பெருமூச்சு. காலை எழுந்தவுடனேயே வாயலம்பாமல் தேநீர் பருகும் பழக்கத்தைக் கொண்டவன் ஆத்மார்த்தன். ஆனால் சில நேரங்களில் இந்த வழக்கத்தை மறுதலிப்பது போலவும் அமைந்து விடுவதுண்டு. இரவு முழுக்கவும் தன்னுடைய பண்ணையின் கணக்குகளைப் பார்த்து முடித்துவிட்டுத் தாமதமாகத்தான் படுத்தான். இரண்டோ அல்லது ம…
-
- 0 replies
- 1.5k views
-