Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. புதியதோர் உலகம் செய்வோம் - சிறுகதை விஜி, ஓவியங்கள்: ஷ்யாம் 06-11-2028 அனைவரின் உதடுகளும் `நிவேதா’ என்று ஏன் முணுமுணுக்க வேண்டும்? எல்லாத் தொலைத்தொடர்புச் சாதனங்களிலும் ஒரே நிகழ்ச்சி. உலக மக்கள் அனைவரது கவனமும் ஒன்றின் மீதே இருந்தது. கைப்பேசி, கணினி, தொலைக்காட்சி அனைத்தும் ஒரே நிகழ்ச்சியைப் பற்றியே கூறின. அனைவரின் சிந்தனைகளும் நிவேதாவைப் பற்றியதாகவே இருந்தன. ஒட்டுமொத்த உலகமும் சாதி மத இன பேதமின்றி நிவேதாவின் பெயரை உச்சரித்துக்கொண்டிருந்தது. மனிதகுலம் முழுவதற்கும் இது ஒரு முக்கியமான சவாலாக இருக்கும்போது ஒன்றுகூடியிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. கடந்த மூன்று மாதங்களில் கூகுள் தேடலில் முதல் இடத்தைப் பிடித்தது நிவேதாவின் பெயரே! புலனம், முகநூல், முத்…

  2. உடலின் அலைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் ஓவியம் : செல்வம் பழனி மலாய் சந்தேஷ் என்ற பெங்காலி ஸ்வீட்டை உங்களுக்குப் பிடிக்குமா? நான் அதைச் சாப்பிடுவதே இல்லை. என் மனைவி ஸ்வீட் ஸ்டாலுக்குப் போகும்போது எல்லாம் ‘அது நன்றாக இருக்கும், வாங்கலாம்’ என்பாள். எப்படி அவளிடம் சொல்வது, மலாய் சந்தேஷ் என்பது வெறும் இனிப்பில்லை... அதன் பின்னே சொல்ல முடியாத நினைவுகள் சேர்ந்திருக்கின்றன என்று. அப்போது நான் கரக்பூரில் வேலையில் இருந்தேன். அது ஒரு தொழிற்சாலை நகரம். இந்தியாவின் புகழ்பெற்ற ஐ.ஐ.டிகளில் ஒன்று கரக்பூரில் இருக்கிறது. அது ஒரு தனி உலகம். கரக்பூர், ரயில்வேயின் முக்கியக் கேந்திரம். நூறு ஆண்டுகளுக்கும் முன்பே அங்கே ரயில் நிலையம் அமைக்கப்பட்டுவிட்டது என்றார்கள். கரக்பூர் …

  3. காமிய தேசத்தில் ஒரு நாள் - ஆதவன் தீட்சண்யா ஓவியம் : ரமணன் அதிகாலை 2.31 மணி. அதிகாரபூர்வமாக கண் விழிப்பதற்கான அலாரம் ஒலிப்பதற்கு இன்னும் 29 நிமிடங்களிருந்தன. அதற்குள்ளாகவே அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது. விழித்ததுமே அவனுக்கு எழுந்த முதல் சந்தேகம், தூங்கினோமா என்பதுதான். இமைகளின் உட்புறத்தில் கங்கு மூட்டித் தீய்ப்பதுபோல கண்களில் அப்படியொரு எரிவு. தூக்கத்தின் போதாமை, உடலெங்கும் அணுவணுவாக நகரும் நோவாகித் தன்னைப் பெரிதும் வதங்கச் செய்திருப்பதாக உணர்ந்தான். நள்ளிரவு 12 மணிக்கு வேலை முடிந்ததும் விர்ரென வண்டியை முறுக்கிக்கொண்டு வந்தும்கூட வீடு சேரும்போது இன்றைக்கும் 12.32 மணி ஆகிவிட்டிருந்தது. நாடு முழுவதும் வேலை முடிவது அந்நேரம்தான் என்பதால், சாலைகளில் ம…

  4. இதுவும் ஒரு காதல் கதை! நான் பாரதி; வயது, 35. இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், வெட்டியாக வீட்டில், 'டிவி' தொடர் பார்த்தோ, அக்கம் பக்கத்து வீடுகளில் வம்பளப்பவளோ அல்ல! ஐ.டி., நிறுவனத்தில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அதிகாரியாக வேலை பார்த்து வருபவள். நிறைய வேலை; அதிகப் பணம்; பல்வேறு ஊர் மற்றும் நாடுகளுக்கு விஜயம். சற்று நெருக்கடியாக இருந்தாலும், வாழ்க்கை எனக்கு சுவையாக தான் இருக்கிறது. பின், ஏன் கல்யாணம் ஆகவில்லை என்கிறீர்களா? எனக்கு அப்பா இல்லை; அம்மா மட்டும் தான்! மாமா, சித்தப்பா போன்ற உறவினர்கள் உள்ளனர். ஆனால், அவரவர் குடும்பம் அவரவருக்கு! அவர்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம், 'என்ன பாரதி..…

  5. Started by நவீனன்,

    வாய்க்கால் - வண்ணதாசன் ஓவியங்கள்: டிராட்ஸ்கி மருது தண்ணீர் கலங்காமல் தெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. அதிகமாக இன்றைக்கு வெயிலும் இல்லை. சுத்தமாக ஆனி முடிந்து ஆடி மாதம் பிறந்துவிட்டது. போன மாதம் பூராவும் மழையும் இல்லை; சாரலும் இல்லை. காற்று மட்டும் அடிக்கவா செய்தது? இன்றைக்கு என்னவோ மூடாக்குப் போட்டதுபோல இருக்கிறது. காற்றும் இருக்கிறது. எதிர்த்த அரச மரத்தடியில், இடுப்பில் சுற்றினவாக்கில் பெட்டிக் கடைக்காரி ராஜாமணி காயப்போட்டு நிற்கிற மஞ்சள் பூப்போட்ட சேலை லேசான படபடப்புடன் சுவர் மாதிரி. எப்போதும் ஒரு கிழட்டுச் சடைநாயைக் கூட்டிக்கொண்டு வருவாள். முதலில் அதைக் குளிப்பாட்டிவிட்டபிறகுதான் அவளுக்கு மற்றது எல்லாம். மற்றது என்பதில், உச்சிப்படை வெயிலாகிவிட்டால்கூட …

    • 1 reply
    • 883 views
  6. அனந்தசயனபுரி சிறுகதை: சாம்ராஜ், ஓவியங்கள்: ஸ்யாம் அவன் திருவனந்தபுரம் போய் இறங்கும்போது நல்ல மழை. இந்தக் கற்கிடக மழை, தொடங்கினால் நிற்காது பெய்துகொண்டே இருக்கும். ரயில் குழித்துறையைத் தாண்டும்போதே, மழை தொடங்கிவிட்டது. முன்பு இதுபோல் மழை பெய்தால், ரயில் கதவின் அருகில் நிற்பான். மழைக் கேரளத்தைப் பார்ப்பது ஆன்மிகம். அதிகாலையில் பச்சை வெளிக்குள் சிறிய அம்பலமும் (கோயில்), அதில் ஏற்றப்பட்டிருக்கும் விளக்குகளின் மினுமினுப்பும், கசிந்துவரும் மலையாளப் பாடல்களும் மனதைக் கனியச்செய்யும். ஆனால், இன்று அப்படி நிற்க முடியவில்லை. அவன் ஜன்னலைப் பார்ப்பதையே தவிர்த்தான். ஒருகட்டத்தில் முடியாமல், மேலே ஏறிப் படுத்தான். திருவனந்தபுரம், பரபரப்பு இல்லாமல் இருந்தது. சிவ…

    • 1 reply
    • 2.5k views
  7. பெண்ணாய் பிறந்தால் என்னவாம்? ''தீபா... ஜன்னல் பக்கத்துல நின்னு, பொம்பள பிள்ள தெருவ வேடிக்கை பாக்கக் கூடாதுன்னு எத்தினி வாட்டி சொல்றது... வா, வந்து இந்த மசாலாவ அரைச்சுக் குடு,'' என்று சமையற்கட்டிலிருந்து கூச்சல் போட்டாள், விமலா. உடனே, சமையற்கட்டிற்கு விரைந்து, அம்மியின் முன் உட்கார்ந்து, இறுகிய முகத்துடன் மசாலாவை அரைக்கலானாள், தீபா. ''என்னடி, உன் ஆத்திரத்த அம்மிக் குழவி மேல காட்டுறியா... மசாலா வழியுது பாரு...'' என்று அவள் தலையில் குட்டி,''நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு வாழப் போறவ நீ, இப்படி வீட்டு வேலை செய்தா, 'பொண்ணை சரியா வளர்க்கல'ன்னு என்னையதானே உன் மாமியார் கொறை…

  8. 1983: ஒரு சில்க் கதை - சிறுகதை சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி டைரி 1983 18. 1. 1983 `இன்று நானும் ஆனந்தும் மோகனும் சிவாவும் காலேஜ் கட்டடித்துவிட்டு, தஞ்சாவூர் சென்று சில்க் ஸ்மிதா நடித்த `கோழிகூவுது’ படம் பார்த்தோம்... வாழ்நாள் முழுவதும் என் கண்களில் வேறு காட்சி ஏதும் தெரியாமல், சில்க் ஸ்மிதா மட்டுமே நிரந்தரமாகத் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? படத்தின் டைட்டிலிலேயே சிலுக்கு வெள்ளை நிற தாவணியில், நூற்றாண்டுக்காலம் புதைத்துவைத்திருந்த ஒயினைப் போன்ற போதையூட்டும் கண்களால் பார்த்தபடி, உதட்டுக்குள் சிரித்தபோது, பவுர்ணமி நிலவைக் கன்னத்தில் அடக்கிக்கொண்டு சிரிக்கும் சிரிப்பில் அப்படி ஒரு வெளிச்சம். `பூவே..…

    • 1 reply
    • 2.9k views
  9. ஒரு நிமிடக் கதைகள் உக்காந்து யோசிப்பாய்ங்களோ?! ‘‘ரெண்டு மாசத்துக்கு மேலாச்சு. இன்னும் ஒரு தகவலும் வரலையே?’’ என்றார் பெருமாள். என் நண்பர் மாணிக்…

    • 1 reply
    • 1.1k views
  10. அவளில்லை அவனில்லை - அழகிய பெரியவன் ஓவியங்கள் : செந்தில் சிலம்பு ஊருக்குத் திரும்பியபோது ஊரைச் சூழ்ந்திருக்கும் காட்டிலிருந்த மரங்கள் இலைகளை உதிர்க்கத் தொடங்கியிருந்தன. நாகத்தோப்பில் இருக்கிறவர்களிலேயே சிலம்பு ஒருவன்தான் இங்கு ஆறுமாதமும், ரெட்டித்தோப்பில் ஆறு மாதமும் இருப்பவன். நாகத்தோப்பில் உள்ள பலரும் பெங்களூருக்கும் திருப்பூருக்குமாக வேலை தேடிப் போய்வந்துகொண்டுதான் இருந்தார்கள். ஆனால், அவர்களில் யாருடைய போக்குவரத்திலும் சிலம்புவின் காலக்கிரமத்தையோ ஒழுங்கையோ பார்க்க முடிவதில்லை. அவன் ஊருக்குள் வருகிறான் என்றால், சனங்கள் அதைப் பங்குனி மாதம் என்று நிச்சயமாகச் சொல்லிவிடுவார்கள்.பிற்பாடு மீண்டும் ஆம்பூருக்குப் போவதற்கான தனது முஸ்தீபுகளை மேற்கொள்கிற…

  11. Started by நவீனன்,

    உறவுகள் "பார்த்தீங்களா...எங்கண்ணான்னா அண்ணாதான்...'' தேவகி அவள் கணவன் ஸ்ரீநிவாசனிடம் துள்ளலோடு சொன்னாள். கையில் அந்தச் சேலை பளபளத்துக் கொண்டிருந்தது. எவ்வளவு அற்புதமான டிசைன்...? புடவை தேர்வு செய்யவும் ஆழ்ந்த ரசனையுடன் கூடிய ஒரு கற்பனை வளம் வேண்டும்தான். நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் தேவகி. பெண்களுக்கு எத்தனை சேலை வாங்கினாலும் திருப்தியே வருவதில்லை. புதிது புதிதாய்க் கட்டிக் கொள்வதில் அப்படியொரு உற்சாகம். பீரோவைத் திறந்தால், காத்திருந்ததுபோல் ஒன்வொன்றாய் வழுக்கி வழுக்கிக் கீழே விழும் புடவைகளைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். ஸ்ரீநிவாசன், கண்ணாடி முன் நிற்கும் அவளைப் பார்த்தான். புடவையினால் அவளுக்கு அழகா? அவளால் புட…

  12. க்ளிஷே - போகன் சங்கர் ஓவியங்கள்: செந்தில் குளிமுறிக்குள் நுழைந்த அனில், “மரியம்மே” என்று அலறினான். “இது என்ன?” மரியம்மை எட்டிப் பார்த்தாள். பிறகு, “அய்யே” என்றாள். “நீ கொஞ்சம் வெளியே போ. க்ளீன் பண்ணிடறேன்.” அவன் “இதெல்லாம் பார்த்துப் பண்ண மாட்டியா?” அவள் “போடா போடா... எல்லாரும் இதிலிருந்துதான் வந்தீங்க.” கரகரவென்று தேய்க்கும் சப்தம். கிருஷ்ணமாச்சாரி வழக்கம்போல cognitive psychology in literature எடுக்கும்போது, வைஷ்ணவ தந்திர ஆகமங்கள் பற்றி எடுப்பதை விட்டுவிட்டு அதையே எடுத்துக் கொண்டிருந்தார். உடம்பு சரியில்லைபோல. நன்றாக உறக்கம் வந்தது. உறக்கத்தின் நடுவில் மரியம்மை வந்து `நீ ஒரு ரத்தக் கட்டி’ என்றாள். உடனே சிவப்பு சிவப்பாய்…

    • 1 reply
    • 1.4k views
  13. நாளோடும், பொழுதோடும்! பாலக் கீரையை ஆய்ந்து கொண்டிருந்த மிருதுளா, 'டிவி'யில் ஒளிப்பரப்பான அந்த செய்தியை கேட்டு, அப்படியே கீரையை மேஜை மீது வைத்து, செய்தியை கவனிக்க ஆரம்பித்தாள். நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், பொது இடத்தில் இயற்கை உபாதையை கழித்தாள் என்று பீனிங் என்ற இளம் பெண்ணை பிடித்து கேஸ் போட்டு, 90 யூரோ அபராதம் விதித்து விட்டனர். அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடி விட்டாள். ஆண்களுக்கென்று, 30க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் இருக்கும் நகரத்தில், பெண்களுக்கு மூன்றே மூன்றுதான் இருக்கின்றனவாம். அதுவும், அப்பெண் இருந்த இடத்திலிருந்து, 2 கி.மீ., தாண்…

    • 1 reply
    • 897 views
  14. இதோ எனது சரீரம் - நரன் ஓவியங்கள் : செந்தில் பாரிஸில் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்திலிருந்து நேர்க்கோட்டில் தொடங்கி இரண்டாகப் பிளவுறும் சர்ப்பத்தின் நாவைப் போன்ற வீதி அது. இடது பக்கமாகப் பிரியும் 7-ம் அவென்யுவில் சாலையோர உணவகம் ஓன்று இருக்கிறது. சமதளத்தில் இற்றுப்போன மரஉணவு மேசைகளும், இருக்கைகளும், கால் உடைந்த மர பெஞ்சுகளும் பழமையும், அழுக்கும், தூசியும் படிந்த மலிவான உணவகம். அந்த உணவகத்தைப்போன்றே கால்கள் அற்ற, அழுக்குப் படிந்த, மிகுக் கசப்பும், மலிவான விலையும் கொண்ட மதுவை அருந்துவதில் விரு ப்பம் கொண்டவர்களும், கடன் சொல்லி உணவு உண்பவர்களும்தான் பெருமளவு வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். ஏழைக் குடிகாரர் களிடையும், மூப்பிலும் வேலை தேடும் ஆண்களிட…

  15. ஒரு நிமிடக் கதைகள் நிழல் நிஜமாகுமா? அ ரசியல், கிரிக்கெட் என அரட்டையில் ஈடுபட்டு இருந்தது நண்பர்கள் குழு. ‘‘சே... சூப்பர் எட்டுக்குக்கூட இந்தியா வர முடியலேங்கிறது கேவலமா இருக்கு’’ என்றான் ஒருவன். “நல்லா விளையாடறவங்களை அணியில சே…

    • 1 reply
    • 1.6k views
  16. கொடுக்கலும் வாங்கலும் எவ்வளவு நேரம்தான் ரோட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பது. எப்பவும் மெயின்ரோட்டில் காணும் கலவையான மனிதர்களும் விதவிதமான மோட்டார் சைக்கிள்களும் கண்ணையும் மனதையும் கவரும். ஆனால் தற்போதய மனநிலையில் சலிப்புத்தட்டியது. நேர் எதிரே எட்வர்டு மேல்நிலைப்பள்ளி, சாத்தூர் என்று சுவரில் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. இடப்பக்கம் வரிசையாய் பெண்கள் கூடைகளில் வெள்ளரிப்பிஞ்சுகளை அடுக்கி வைத்திருந்தார்கள். பஸ் வந்தால் வேகமாய் ஓடிச்சென்று வியாபாரம் பார்ப்பதும் மற்ற நேரங்களில் உட்கார்ந்திருப்பதுமாய் பகலெல்லாம் தொடரும் வியாபாரம். ஒருசிலர் கூடைகளில் பூம்பிஞ்சுகளாய் இருந்தது. பூவிருக்க பிடுங்கிய பிஞ…

  17. இவன் - அகரமுதல்வன் ஓவியங்கள் : செந்தில் இவனுக்குச் சொந்தவூர் யாழ்ப்பாணம். இரண்டு காதுகளும் கேட்காது. இயக்கம் அடிச்சுத்தான் காது கேட்காமல் போனது. இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு நாட்டிலயிருந்து வெளியேறி சென்னையில இருந்திருக்கிறான். அடுத்த ரெண்டு வருஷம் கழிச்சு களவாய்க் கனடாவிற்குப் போய்த் திரும்ப ஒரு மாத லீவில இப்ப சென்னைக்கு வந்திருக்கிறான். இன்னும் பத்து நாளில கலியாணம். இது இவனுக்கு இரண்டாவது கலியாணம்தான். முதல் மனிசியும் பிள்ளையும் முள்ளிவாய்க்காலில செத்துப்போயிட்டினம். இந்தக் கதையை நான் முடித்துக்கொள்ள சரியாக ஏழரை நிமிடங்கள் ஆகும். கதை நிகழத் தொடங்கிற்று. பத்து நாள்களில் கலியாணப் பந்தலில் மாப்பிளை வேஷத்தோடு இருக்கப்போகிற இவன் சிறைச்சாலையில்தான் என…

  18. ஸ்துதி - சயந்தன் ஓவியம்: ரமணன் இலங்கைப் பிரதமரின் வாசஸ்தலமான அலரி மாளிகைக்குச் சற்றுத் தொலைவிலிருக்கின்ற ‘சிலோன் ஸ்பா’ என்ற நட்சத்திர மசாஜ் விடுதியின் வாசற்படியில் இந்தக் கதை தொடங்குவதால், இடையில் குண்டு வெடிப்பு எதுவும் நிகழும் என்று நீங்கள் கருதத் தேவையில்லை. நான் விடுதியின் வாசலோடு தரித்து நின்ற ஓட்டோவிற்குள் ஒரு குற்றவாளிக் கூண்டுக்குள் இருப்பதைப்போலக் காத்திருந் தேன். விடுதியின் கண்ணாடிகளாலான கதவினைத் தள்ளித் திறந்துகொண்டு சற்று முன்னர் உள்ளே சென்றிருந்த ஓட்டோக் காரன், எந்த நேரத்திலும் வந்து என்னை அழைத்துச் செல்வான். இவ்வாறான காரியங்களுக்கு ஓட்டோக்காரர்களை அணுகலாம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குத் தெரியவந்தது. அன்றைக்க…

  19. கூகிள் மப்பும் எனது கனவுகளும்....... ஒரு பதினாறு வருடங்களிருக்கும், எனது தாயகம் என்று மனது பதிந்த வீ திகளை இறுதியாகத் தரிசித்து. அயல் தேசம் வந்தபின்னும் , தாயகம் பற்றிக் கனவுகள் கண்டு, வேர் கொள்ளா ஒரு ஊரில் அடைக்கலமாகி, தமிழ் நெ ட்டும் , புதினமும் எம்வீரர் செயல் கூற, வெல்வோம் இனியென்று விறுமாப்பாய் இருந்துவிட் டேன். 2009 இல் பேரிடிச் செய்தியாய் முள்ளிவாய்க்கால் வீழ்ந்திட, தாயகம் பற்றிய கனவுகளைக் கலைத்தேன். ஆக்கிரமிக்கப்படட என் தேசமும், அடிமை வாழ்வில் என் உறவுகளும் எனக்கு வேண்டாச் செய்தியாக மனதை இறுக்கிக் கொண்டேன் . எதிரியிடம் தாயகம் கிடைக்க, மனம் புரண்டு அழுதது,ஏதாவது செய்ய வேண்டும் என்றது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்கிறார்கள், மகிழ்ச்சியாய்ப் போனேன…

  20. ஒரு வீடும், சில மனிதர்களும்! ''பால்காரரே... இன்னியிலிருந்து ஒரு மாசத்துக்கு, ரெண்டு லிட்டர் பால் சேர்த்து ஊத்துங்க...'' என்ற கோகிலாவின் முகத்தில், அப்படியொரு சந்தோஷம்! ''என்ன கோகிலாம்மா... பையனும், பொண்ணும் குடும்பத்தோட வெளிநாட்டிலிருந்து வந்துருக்காங்க போல...'' என்றார், பாலை ஊற்றியபடி, பால்காரர். ''மூணு வருஷம் கழிச்சு, அண்ணனும், தங்கச்சியும் ஒண்ணா லீவு போட்டு வந்திருக்காங்க... உங்களுக்குத் தான் தெரியுமே... கல்யாணமானதும், என் மக, மாப்பிள்ளையோட ஆஸ்திரேலியாவுக்கு போயிட்டாங்கிறது... என் மகன் சிவசு இருக்கிறதோ அமெரிக்காவுல... இந்த வருஷம் தான், ரெண்டு பேரும் சொல்லி வெ…

  21. பிரதாப முதலியார்.ச - அ.முத்துலிங்கம் ஓவியங்கள் : ரமணன் அன்று அவனைச் சந்தித்திருக்காவிட்டால் இது நடந்திருக்காது. காலையில் கொக்குவில் ரயில் ஸ்டேஷனுக்கு வந்திருந்தான். வயது 12 இருக்கும். ஏதோ பெரிய ஆள்போல இவன் முன்னுக்கு நடந்துவர, பின்னால் தள்ளுவண்டியில் ஒரு மூட்டையைத் தள்ளிக்கொண்டு ஒருவன் வந்தான். இவன்தான் சொந்தக்காரன்போல இருந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் கொடுத்த படிவத்தைப் பெற்று, அதை ஆங்கிலத்தில் ஒருவிதப் பிரச்னையும் இல்லாமல் நிரப்பினான். பலநாள் இதைச் செய்தவன்போல காணப்பட்டான். இரண்டு தரம் என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தான். நானும் சிரித்தேன். ‘இவன் எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான்? என்னிலும் இரண்டு வகுப்பு கூடப் படிக்கலாம். நான் சந்தித்ததே இல்லை.’ …

    • 1 reply
    • 1.8k views
  22. சரவணன் மனசுல சுகந்தி சிறுகதை: வா.மு.கோமு, ஓவியங்கள்: ஸ்யாம் நண்பர்களின் காதல் சோகக் கதைகளைக் கேட்டுக் கேட்டு, 'என் வாழ்வில் எப்போதும் காதல் எனச் சிக்கி அவஸ்தைப்படக் கூடாது’ என, கல்லூரியில் படிக்கும்போதே முடிவுக்கு வந்திருந்தேன். நண்பர்கள் பலர் அந்தச் சமயத்தில் காதலில் விழுந்திருந்தாலும், எப்படியோ சின்னச் சின்னக் காரணங்களால் அது தோல்வியில் முடிந்திருந்தது. 'ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு’ என்பதுபோல பிரகாஷ் என்ற நண்பன் மட்டும், தன் கல்லூரிக் காதலில் வெற்றி பெற்று, திருப்பூரில் மருந்துக் கடை ஒன்றில் மனைவியோடு நிற்கிறான். நான் சரவணன். ஊத்துக்குளிவாசி. ஊத்துக்குளி என்றால், உங்களுக்கு வெண்ணெய்தான் ஞாபகம் வரும். சில திரைப்படப் பாடலாசிரியர்கள் 'ஊத்துக்…

  23. ஊமை! – சிறுகதை ரமே­ஷுக்கு அன்று முத­லி­ரவு. பால் செம்­பு­டன் படுக்­கை­ய­றைக்­குள் நுழைந்த மனைவி பத்­மாவை பாசத்­தோடு அர­வ­ணைத்து தனது அரு­கில் உட்­கார வைத்­தான். தன்­னைப் பற்­றி­யும் தனது குடும்­பத்தை பற்­றி­யும் விரி­வாக எடுத்­து­ரைத்­தான். நான் ஒரு தனி­யார் நிறு­வ­னத்­தில் மேனே­ஜ­ராக வேலை பார்ப்­ப­தா­க­வும், தனக்கு ஒரு தம்­பி­யும் ஒரு தங்­கை­யும் உண்டு என்­றும், அப்பா ரயில்­வே­யில் வேலை பார்ப்­ப­தா­க­வும், அம்மா கொஞ்­சம் வாயா­டி­யா­னா­லும் அன்­பா­வ­ன­வர் என்­றும் கூறி­னான். நீ குடும்­பத்­தில் மூத்த மரு­ம­கள் என்­ப­தால் எல்­லோ­ரி­ட­மும் அன்­பா­க­வும் – பாச­மா­க­வும் நடந்து கொள்ள வேண்­டும் என்­றும் குடும்­பத்தை நல்ல முறை­யில் கவ­னித்து கொள்­…

    • 1 reply
    • 3.7k views
  24. சப்பாத்தும் ஓர் உயிரும்... - சிறுகதை சிறுகதை: மாத்தளை சோமு, ஓவியங்கள்: செந்தில் இருள் கலைந்து வெளிச்சம் வருவதைச் சொல்வதைப்போல் வெளியே சேவல் தன் சிறகுகளை அடித்து உரத்துக் கூவும் சத்தம், குடிசையில் படுத்துக்கிடந்த நாதனுக்குக் கேட்டது. ஒரு விநாடி, அந்தச் சேவலை தன் மனக்கண்ணால் மீட்டுப்பார்த்தான். வவுனியாவில் இருக்கும் மணியம், குஞ்சாகக் கொடுத்த சேவல். இன்று அது வளர்ந்து ஒரு குட்டி மயிலைப்போல் இருக்கிறது. அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மனைவி கௌரியைக் கேட்டபோது, ``ஆமிக்காரன் போட்ட குண்டுகளால கோழி, குருவி, ஆடு, மாடு, நாய், பூனை எல்லாம் செத்திட்டுது. மனுஷரே சிதறிப்போறப்ப பாவம் வாயில்லா ஜீவன்கள் என்ன செய்யும்? எத்தனை கோழிகள் இருந்த வீடு... இப்ப வெளியில வா…

    • 2 replies
    • 2k views
  25. மனசெல்லாம் மலர்விழி - சுப்ரஜா கிராமமே அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது. காரணம் வேறு ஒன்றும் இல்லை பக்கத்து டவுனில் புதியதாய் தொழில் தொடங்கியிருக்கும் பலசரக்கு மையம் ஒன்று கிராமத்தில் பொங்கல் கோலப் போட்டி நடத்துவதாக அறிவித்திருந்தது. லோக்கல் தொலைக்காட்சி, பத்திரிகைச் செய்திகள், துண்டு பிரசுரங்கள் போன்றவை பெண்கள் அனைவரையும் அதில் கலந்துகொள்ள அழைத்துக் கொண்டிருந்தது. பொங்கல் அன்று மாலை ஏழு மணிக்கு வரும் கலெக்டர் அவற்றை பார்த்து சிறந்த கோலங்களை தெரிவு செய்வார். ரொக்கப் பரிசுகளும், பல மாதங்களுக்கான இலவச மளிகை சாமான் கூப்பன்களும் உண்டு. புதுமையான போட்டி. கிராமத்து பெண்களுக்கு கேட்கவா வேண்டும். ஆளாளுக்கு வீட்…

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.