கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
வாய்க்கால் - வண்ணதாசன் ஓவியங்கள்: டிராட்ஸ்கி மருது தண்ணீர் கலங்காமல் தெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. அதிகமாக இன்றைக்கு வெயிலும் இல்லை. சுத்தமாக ஆனி முடிந்து ஆடி மாதம் பிறந்துவிட்டது. போன மாதம் பூராவும் மழையும் இல்லை; சாரலும் இல்லை. காற்று மட்டும் அடிக்கவா செய்தது? இன்றைக்கு என்னவோ மூடாக்குப் போட்டதுபோல இருக்கிறது. காற்றும் இருக்கிறது. எதிர்த்த அரச மரத்தடியில், இடுப்பில் சுற்றினவாக்கில் பெட்டிக் கடைக்காரி ராஜாமணி காயப்போட்டு நிற்கிற மஞ்சள் பூப்போட்ட சேலை லேசான படபடப்புடன் சுவர் மாதிரி. எப்போதும் ஒரு கிழட்டுச் சடைநாயைக் கூட்டிக்கொண்டு வருவாள். முதலில் அதைக் குளிப்பாட்டிவிட்டபிறகுதான் அவளுக்கு மற்றது எல்லாம். மற்றது என்பதில், உச்சிப்படை வெயிலாகிவிட்டால்கூட …
-
- 1 reply
- 881 views
-
-
அனந்தசயனபுரி சிறுகதை: சாம்ராஜ், ஓவியங்கள்: ஸ்யாம் அவன் திருவனந்தபுரம் போய் இறங்கும்போது நல்ல மழை. இந்தக் கற்கிடக மழை, தொடங்கினால் நிற்காது பெய்துகொண்டே இருக்கும். ரயில் குழித்துறையைத் தாண்டும்போதே, மழை தொடங்கிவிட்டது. முன்பு இதுபோல் மழை பெய்தால், ரயில் கதவின் அருகில் நிற்பான். மழைக் கேரளத்தைப் பார்ப்பது ஆன்மிகம். அதிகாலையில் பச்சை வெளிக்குள் சிறிய அம்பலமும் (கோயில்), அதில் ஏற்றப்பட்டிருக்கும் விளக்குகளின் மினுமினுப்பும், கசிந்துவரும் மலையாளப் பாடல்களும் மனதைக் கனியச்செய்யும். ஆனால், இன்று அப்படி நிற்க முடியவில்லை. அவன் ஜன்னலைப் பார்ப்பதையே தவிர்த்தான். ஒருகட்டத்தில் முடியாமல், மேலே ஏறிப் படுத்தான். திருவனந்தபுரம், பரபரப்பு இல்லாமல் இருந்தது. சிவ…
-
- 1 reply
- 2.5k views
-
-
1983: ஒரு சில்க் கதை - சிறுகதை சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி டைரி 1983 18. 1. 1983 `இன்று நானும் ஆனந்தும் மோகனும் சிவாவும் காலேஜ் கட்டடித்துவிட்டு, தஞ்சாவூர் சென்று சில்க் ஸ்மிதா நடித்த `கோழிகூவுது’ படம் பார்த்தோம்... வாழ்நாள் முழுவதும் என் கண்களில் வேறு காட்சி ஏதும் தெரியாமல், சில்க் ஸ்மிதா மட்டுமே நிரந்தரமாகத் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? படத்தின் டைட்டிலிலேயே சிலுக்கு வெள்ளை நிற தாவணியில், நூற்றாண்டுக்காலம் புதைத்துவைத்திருந்த ஒயினைப் போன்ற போதையூட்டும் கண்களால் பார்த்தபடி, உதட்டுக்குள் சிரித்தபோது, பவுர்ணமி நிலவைக் கன்னத்தில் அடக்கிக்கொண்டு சிரிக்கும் சிரிப்பில் அப்படி ஒரு வெளிச்சம். `பூவே..…
-
- 1 reply
- 2.9k views
-
-
பெண்ணாய் பிறந்தால் என்னவாம்? ''தீபா... ஜன்னல் பக்கத்துல நின்னு, பொம்பள பிள்ள தெருவ வேடிக்கை பாக்கக் கூடாதுன்னு எத்தினி வாட்டி சொல்றது... வா, வந்து இந்த மசாலாவ அரைச்சுக் குடு,'' என்று சமையற்கட்டிலிருந்து கூச்சல் போட்டாள், விமலா. உடனே, சமையற்கட்டிற்கு விரைந்து, அம்மியின் முன் உட்கார்ந்து, இறுகிய முகத்துடன் மசாலாவை அரைக்கலானாள், தீபா. ''என்னடி, உன் ஆத்திரத்த அம்மிக் குழவி மேல காட்டுறியா... மசாலா வழியுது பாரு...'' என்று அவள் தலையில் குட்டி,''நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு வாழப் போறவ நீ, இப்படி வீட்டு வேலை செய்தா, 'பொண்ணை சரியா வளர்க்கல'ன்னு என்னையதானே உன் மாமியார் கொறை…
-
- 0 replies
- 810 views
-
-
ஒரு நிமிடக் கதைகள் உக்காந்து யோசிப்பாய்ங்களோ?! ‘‘ரெண்டு மாசத்துக்கு மேலாச்சு. இன்னும் ஒரு தகவலும் வரலையே?’’ என்றார் பெருமாள். என் நண்பர் மாணிக்…
-
- 1 reply
- 1.1k views
-
-
அவளில்லை அவனில்லை - அழகிய பெரியவன் ஓவியங்கள் : செந்தில் சிலம்பு ஊருக்குத் திரும்பியபோது ஊரைச் சூழ்ந்திருக்கும் காட்டிலிருந்த மரங்கள் இலைகளை உதிர்க்கத் தொடங்கியிருந்தன. நாகத்தோப்பில் இருக்கிறவர்களிலேயே சிலம்பு ஒருவன்தான் இங்கு ஆறுமாதமும், ரெட்டித்தோப்பில் ஆறு மாதமும் இருப்பவன். நாகத்தோப்பில் உள்ள பலரும் பெங்களூருக்கும் திருப்பூருக்குமாக வேலை தேடிப் போய்வந்துகொண்டுதான் இருந்தார்கள். ஆனால், அவர்களில் யாருடைய போக்குவரத்திலும் சிலம்புவின் காலக்கிரமத்தையோ ஒழுங்கையோ பார்க்க முடிவதில்லை. அவன் ஊருக்குள் வருகிறான் என்றால், சனங்கள் அதைப் பங்குனி மாதம் என்று நிச்சயமாகச் சொல்லிவிடுவார்கள்.பிற்பாடு மீண்டும் ஆம்பூருக்குப் போவதற்கான தனது முஸ்தீபுகளை மேற்கொள்கிற…
-
- 0 replies
- 1.8k views
-
-
உறவுகள் "பார்த்தீங்களா...எங்கண்ணான்னா அண்ணாதான்...'' தேவகி அவள் கணவன் ஸ்ரீநிவாசனிடம் துள்ளலோடு சொன்னாள். கையில் அந்தச் சேலை பளபளத்துக் கொண்டிருந்தது. எவ்வளவு அற்புதமான டிசைன்...? புடவை தேர்வு செய்யவும் ஆழ்ந்த ரசனையுடன் கூடிய ஒரு கற்பனை வளம் வேண்டும்தான். நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் தேவகி. பெண்களுக்கு எத்தனை சேலை வாங்கினாலும் திருப்தியே வருவதில்லை. புதிது புதிதாய்க் கட்டிக் கொள்வதில் அப்படியொரு உற்சாகம். பீரோவைத் திறந்தால், காத்திருந்ததுபோல் ஒன்வொன்றாய் வழுக்கி வழுக்கிக் கீழே விழும் புடவைகளைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். ஸ்ரீநிவாசன், கண்ணாடி முன் நிற்கும் அவளைப் பார்த்தான். புடவையினால் அவளுக்கு அழகா? அவளால் புட…
-
- 0 replies
- 2.1k views
-
-
க்ளிஷே - போகன் சங்கர் ஓவியங்கள்: செந்தில் குளிமுறிக்குள் நுழைந்த அனில், “மரியம்மே” என்று அலறினான். “இது என்ன?” மரியம்மை எட்டிப் பார்த்தாள். பிறகு, “அய்யே” என்றாள். “நீ கொஞ்சம் வெளியே போ. க்ளீன் பண்ணிடறேன்.” அவன் “இதெல்லாம் பார்த்துப் பண்ண மாட்டியா?” அவள் “போடா போடா... எல்லாரும் இதிலிருந்துதான் வந்தீங்க.” கரகரவென்று தேய்க்கும் சப்தம். கிருஷ்ணமாச்சாரி வழக்கம்போல cognitive psychology in literature எடுக்கும்போது, வைஷ்ணவ தந்திர ஆகமங்கள் பற்றி எடுப்பதை விட்டுவிட்டு அதையே எடுத்துக் கொண்டிருந்தார். உடம்பு சரியில்லைபோல. நன்றாக உறக்கம் வந்தது. உறக்கத்தின் நடுவில் மரியம்மை வந்து `நீ ஒரு ரத்தக் கட்டி’ என்றாள். உடனே சிவப்பு சிவப்பாய்…
-
- 1 reply
- 1.4k views
-
-
நாளோடும், பொழுதோடும்! பாலக் கீரையை ஆய்ந்து கொண்டிருந்த மிருதுளா, 'டிவி'யில் ஒளிப்பரப்பான அந்த செய்தியை கேட்டு, அப்படியே கீரையை மேஜை மீது வைத்து, செய்தியை கவனிக்க ஆரம்பித்தாள். நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், பொது இடத்தில் இயற்கை உபாதையை கழித்தாள் என்று பீனிங் என்ற இளம் பெண்ணை பிடித்து கேஸ் போட்டு, 90 யூரோ அபராதம் விதித்து விட்டனர். அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடி விட்டாள். ஆண்களுக்கென்று, 30க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் இருக்கும் நகரத்தில், பெண்களுக்கு மூன்றே மூன்றுதான் இருக்கின்றனவாம். அதுவும், அப்பெண் இருந்த இடத்திலிருந்து, 2 கி.மீ., தாண்…
-
- 1 reply
- 897 views
-
-
இதோ எனது சரீரம் - நரன் ஓவியங்கள் : செந்தில் பாரிஸில் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்திலிருந்து நேர்க்கோட்டில் தொடங்கி இரண்டாகப் பிளவுறும் சர்ப்பத்தின் நாவைப் போன்ற வீதி அது. இடது பக்கமாகப் பிரியும் 7-ம் அவென்யுவில் சாலையோர உணவகம் ஓன்று இருக்கிறது. சமதளத்தில் இற்றுப்போன மரஉணவு மேசைகளும், இருக்கைகளும், கால் உடைந்த மர பெஞ்சுகளும் பழமையும், அழுக்கும், தூசியும் படிந்த மலிவான உணவகம். அந்த உணவகத்தைப்போன்றே கால்கள் அற்ற, அழுக்குப் படிந்த, மிகுக் கசப்பும், மலிவான விலையும் கொண்ட மதுவை அருந்துவதில் விரு ப்பம் கொண்டவர்களும், கடன் சொல்லி உணவு உண்பவர்களும்தான் பெருமளவு வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். ஏழைக் குடிகாரர் களிடையும், மூப்பிலும் வேலை தேடும் ஆண்களிட…
-
- 0 replies
- 3.2k views
-
-
இவன் - அகரமுதல்வன் ஓவியங்கள் : செந்தில் இவனுக்குச் சொந்தவூர் யாழ்ப்பாணம். இரண்டு காதுகளும் கேட்காது. இயக்கம் அடிச்சுத்தான் காது கேட்காமல் போனது. இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு நாட்டிலயிருந்து வெளியேறி சென்னையில இருந்திருக்கிறான். அடுத்த ரெண்டு வருஷம் கழிச்சு களவாய்க் கனடாவிற்குப் போய்த் திரும்ப ஒரு மாத லீவில இப்ப சென்னைக்கு வந்திருக்கிறான். இன்னும் பத்து நாளில கலியாணம். இது இவனுக்கு இரண்டாவது கலியாணம்தான். முதல் மனிசியும் பிள்ளையும் முள்ளிவாய்க்காலில செத்துப்போயிட்டினம். இந்தக் கதையை நான் முடித்துக்கொள்ள சரியாக ஏழரை நிமிடங்கள் ஆகும். கதை நிகழத் தொடங்கிற்று. பத்து நாள்களில் கலியாணப் பந்தலில் மாப்பிளை வேஷத்தோடு இருக்கப்போகிற இவன் சிறைச்சாலையில்தான் என…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒரு நிமிடக் கதைகள் நிழல் நிஜமாகுமா? அ ரசியல், கிரிக்கெட் என அரட்டையில் ஈடுபட்டு இருந்தது நண்பர்கள் குழு. ‘‘சே... சூப்பர் எட்டுக்குக்கூட இந்தியா வர முடியலேங்கிறது கேவலமா இருக்கு’’ என்றான் ஒருவன். “நல்லா விளையாடறவங்களை அணியில சே…
-
- 1 reply
- 1.6k views
-
-
கொடுக்கலும் வாங்கலும் எவ்வளவு நேரம்தான் ரோட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பது. எப்பவும் மெயின்ரோட்டில் காணும் கலவையான மனிதர்களும் விதவிதமான மோட்டார் சைக்கிள்களும் கண்ணையும் மனதையும் கவரும். ஆனால் தற்போதய மனநிலையில் சலிப்புத்தட்டியது. நேர் எதிரே எட்வர்டு மேல்நிலைப்பள்ளி, சாத்தூர் என்று சுவரில் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. இடப்பக்கம் வரிசையாய் பெண்கள் கூடைகளில் வெள்ளரிப்பிஞ்சுகளை அடுக்கி வைத்திருந்தார்கள். பஸ் வந்தால் வேகமாய் ஓடிச்சென்று வியாபாரம் பார்ப்பதும் மற்ற நேரங்களில் உட்கார்ந்திருப்பதுமாய் பகலெல்லாம் தொடரும் வியாபாரம். ஒருசிலர் கூடைகளில் பூம்பிஞ்சுகளாய் இருந்தது. பூவிருக்க பிடுங்கிய பிஞ…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஸ்துதி - சயந்தன் ஓவியம்: ரமணன் இலங்கைப் பிரதமரின் வாசஸ்தலமான அலரி மாளிகைக்குச் சற்றுத் தொலைவிலிருக்கின்ற ‘சிலோன் ஸ்பா’ என்ற நட்சத்திர மசாஜ் விடுதியின் வாசற்படியில் இந்தக் கதை தொடங்குவதால், இடையில் குண்டு வெடிப்பு எதுவும் நிகழும் என்று நீங்கள் கருதத் தேவையில்லை. நான் விடுதியின் வாசலோடு தரித்து நின்ற ஓட்டோவிற்குள் ஒரு குற்றவாளிக் கூண்டுக்குள் இருப்பதைப்போலக் காத்திருந் தேன். விடுதியின் கண்ணாடிகளாலான கதவினைத் தள்ளித் திறந்துகொண்டு சற்று முன்னர் உள்ளே சென்றிருந்த ஓட்டோக் காரன், எந்த நேரத்திலும் வந்து என்னை அழைத்துச் செல்வான். இவ்வாறான காரியங்களுக்கு ஓட்டோக்காரர்களை அணுகலாம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குத் தெரியவந்தது. அன்றைக்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
பிரதாப முதலியார்.ச - அ.முத்துலிங்கம் ஓவியங்கள் : ரமணன் அன்று அவனைச் சந்தித்திருக்காவிட்டால் இது நடந்திருக்காது. காலையில் கொக்குவில் ரயில் ஸ்டேஷனுக்கு வந்திருந்தான். வயது 12 இருக்கும். ஏதோ பெரிய ஆள்போல இவன் முன்னுக்கு நடந்துவர, பின்னால் தள்ளுவண்டியில் ஒரு மூட்டையைத் தள்ளிக்கொண்டு ஒருவன் வந்தான். இவன்தான் சொந்தக்காரன்போல இருந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் கொடுத்த படிவத்தைப் பெற்று, அதை ஆங்கிலத்தில் ஒருவிதப் பிரச்னையும் இல்லாமல் நிரப்பினான். பலநாள் இதைச் செய்தவன்போல காணப்பட்டான். இரண்டு தரம் என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தான். நானும் சிரித்தேன். ‘இவன் எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான்? என்னிலும் இரண்டு வகுப்பு கூடப் படிக்கலாம். நான் சந்தித்ததே இல்லை.’ …
-
- 1 reply
- 1.8k views
-
-
கூகிள் மப்பும் எனது கனவுகளும்....... ஒரு பதினாறு வருடங்களிருக்கும், எனது தாயகம் என்று மனது பதிந்த வீ திகளை இறுதியாகத் தரிசித்து. அயல் தேசம் வந்தபின்னும் , தாயகம் பற்றிக் கனவுகள் கண்டு, வேர் கொள்ளா ஒரு ஊரில் அடைக்கலமாகி, தமிழ் நெ ட்டும் , புதினமும் எம்வீரர் செயல் கூற, வெல்வோம் இனியென்று விறுமாப்பாய் இருந்துவிட் டேன். 2009 இல் பேரிடிச் செய்தியாய் முள்ளிவாய்க்கால் வீழ்ந்திட, தாயகம் பற்றிய கனவுகளைக் கலைத்தேன். ஆக்கிரமிக்கப்படட என் தேசமும், அடிமை வாழ்வில் என் உறவுகளும் எனக்கு வேண்டாச் செய்தியாக மனதை இறுக்கிக் கொண்டேன் . எதிரியிடம் தாயகம் கிடைக்க, மனம் புரண்டு அழுதது,ஏதாவது செய்ய வேண்டும் என்றது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்கிறார்கள், மகிழ்ச்சியாய்ப் போனேன…
-
- 8 replies
- 993 views
-
-
உயிர்ப்பு கட்டிலின் விளிம்பிலிருந்து தொங்கிய விரிப்பை இழுத்து உள்ளே செருகினான். அந்தச் சிறிய அசைவில் கண் விழித்த அம்மா, மெல்ல தனது சுருண்ட உடலை நகர்த்தி அவனது சீர் செய்யும் நடவடிக்கைக்கு இடம் கொடுத்தாள். அவளைப் பொறுத்தவரையில் நோயில் படுத்ததிலிருந்து தன் மகன் மாதவனுக்கு, தான் ஒரு பாரமாக ஆகிவிட்டோம் என்ற எண்ணம் விழுந்து விட்டது. ஆனால், இது குறித்த கவலை எதுவுமில்லாமல் மாதவன் பேச்சில் கிண்டலும் உற்சாகமும் குறையாமல் வளைய வந்து கொண்டிருக்கிறான். இது அவனுடைய இயல்பு. இந்த உற்சாகமும் அடுத்த பொழுதைப் பற்றிய கவலையின்மையும்தான் அவனை மட்டுமல்ல, அவன் தாயாரையும், மற்றும் இரண்டு…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஒரு வீடும், சில மனிதர்களும்! ''பால்காரரே... இன்னியிலிருந்து ஒரு மாசத்துக்கு, ரெண்டு லிட்டர் பால் சேர்த்து ஊத்துங்க...'' என்ற கோகிலாவின் முகத்தில், அப்படியொரு சந்தோஷம்! ''என்ன கோகிலாம்மா... பையனும், பொண்ணும் குடும்பத்தோட வெளிநாட்டிலிருந்து வந்துருக்காங்க போல...'' என்றார், பாலை ஊற்றியபடி, பால்காரர். ''மூணு வருஷம் கழிச்சு, அண்ணனும், தங்கச்சியும் ஒண்ணா லீவு போட்டு வந்திருக்காங்க... உங்களுக்குத் தான் தெரியுமே... கல்யாணமானதும், என் மக, மாப்பிள்ளையோட ஆஸ்திரேலியாவுக்கு போயிட்டாங்கிறது... என் மகன் சிவசு இருக்கிறதோ அமெரிக்காவுல... இந்த வருஷம் தான், ரெண்டு பேரும் சொல்லி வெ…
-
- 0 replies
- 1.3k views
-
-
மனசெல்லாம் மலர்விழி - சுப்ரஜா கிராமமே அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது. காரணம் வேறு ஒன்றும் இல்லை பக்கத்து டவுனில் புதியதாய் தொழில் தொடங்கியிருக்கும் பலசரக்கு மையம் ஒன்று கிராமத்தில் பொங்கல் கோலப் போட்டி நடத்துவதாக அறிவித்திருந்தது. லோக்கல் தொலைக்காட்சி, பத்திரிகைச் செய்திகள், துண்டு பிரசுரங்கள் போன்றவை பெண்கள் அனைவரையும் அதில் கலந்துகொள்ள அழைத்துக் கொண்டிருந்தது. பொங்கல் அன்று மாலை ஏழு மணிக்கு வரும் கலெக்டர் அவற்றை பார்த்து சிறந்த கோலங்களை தெரிவு செய்வார். ரொக்கப் பரிசுகளும், பல மாதங்களுக்கான இலவச மளிகை சாமான் கூப்பன்களும் உண்டு. புதுமையான போட்டி. கிராமத்து பெண்களுக்கு கேட்கவா வேண்டும். ஆளாளுக்கு வீட்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சரவணன் மனசுல சுகந்தி சிறுகதை: வா.மு.கோமு, ஓவியங்கள்: ஸ்யாம் நண்பர்களின் காதல் சோகக் கதைகளைக் கேட்டுக் கேட்டு, 'என் வாழ்வில் எப்போதும் காதல் எனச் சிக்கி அவஸ்தைப்படக் கூடாது’ என, கல்லூரியில் படிக்கும்போதே முடிவுக்கு வந்திருந்தேன். நண்பர்கள் பலர் அந்தச் சமயத்தில் காதலில் விழுந்திருந்தாலும், எப்படியோ சின்னச் சின்னக் காரணங்களால் அது தோல்வியில் முடிந்திருந்தது. 'ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு’ என்பதுபோல பிரகாஷ் என்ற நண்பன் மட்டும், தன் கல்லூரிக் காதலில் வெற்றி பெற்று, திருப்பூரில் மருந்துக் கடை ஒன்றில் மனைவியோடு நிற்கிறான். நான் சரவணன். ஊத்துக்குளிவாசி. ஊத்துக்குளி என்றால், உங்களுக்கு வெண்ணெய்தான் ஞாபகம் வரும். சில திரைப்படப் பாடலாசிரியர்கள் 'ஊத்துக்…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஊமை! – சிறுகதை ரமேஷுக்கு அன்று முதலிரவு. பால் செம்புடன் படுக்கையறைக்குள் நுழைந்த மனைவி பத்மாவை பாசத்தோடு அரவணைத்து தனது அருகில் உட்கார வைத்தான். தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தான். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்ப்பதாகவும், தனக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உண்டு என்றும், அப்பா ரயில்வேயில் வேலை பார்ப்பதாகவும், அம்மா கொஞ்சம் வாயாடியானாலும் அன்பாவனவர் என்றும் கூறினான். நீ குடும்பத்தில் மூத்த மருமகள் என்பதால் எல்லோரிடமும் அன்பாகவும் – பாசமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் குடும்பத்தை நல்ல முறையில் கவனித்து கொள்…
-
- 1 reply
- 3.7k views
-
-
சப்பாத்தும் ஓர் உயிரும்... - சிறுகதை சிறுகதை: மாத்தளை சோமு, ஓவியங்கள்: செந்தில் இருள் கலைந்து வெளிச்சம் வருவதைச் சொல்வதைப்போல் வெளியே சேவல் தன் சிறகுகளை அடித்து உரத்துக் கூவும் சத்தம், குடிசையில் படுத்துக்கிடந்த நாதனுக்குக் கேட்டது. ஒரு விநாடி, அந்தச் சேவலை தன் மனக்கண்ணால் மீட்டுப்பார்த்தான். வவுனியாவில் இருக்கும் மணியம், குஞ்சாகக் கொடுத்த சேவல். இன்று அது வளர்ந்து ஒரு குட்டி மயிலைப்போல் இருக்கிறது. அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மனைவி கௌரியைக் கேட்டபோது, ``ஆமிக்காரன் போட்ட குண்டுகளால கோழி, குருவி, ஆடு, மாடு, நாய், பூனை எல்லாம் செத்திட்டுது. மனுஷரே சிதறிப்போறப்ப பாவம் வாயில்லா ஜீவன்கள் என்ன செய்யும்? எத்தனை கோழிகள் இருந்த வீடு... இப்ப வெளியில வா…
-
- 2 replies
- 2k views
-
-
கற்பு! 'வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது...' என்று, 30 ஆண்டுகளுக்கு முன், லட்சுமி, தன்னிடம் சொன்ன இடத்தில், அவளுக்காக காத்திருந்தார், செல்வம். ''என்னோட வரவுக்காக, வழிமேல் விழி வெச்சு காத்திருக்கீங்க போல...'' என்ற குரலை நோக்கி, ஆர்வத்துடன் திரும்பிய செல்வத்தை பார்த்து, மென் முறுவல் பூத்தாள், லட்சுமி. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். முதிர்ச்சியின் அடையாளமாய், உருவம் மாறி, கேசம் நரை கண்டிருந்தது. ''ஆரம்பிச்ச இடத்துலேயே ஆரம்பிக்கலாமா...'' குழந்தையின் குதுாகலத்துடன் கேட்டார், செல்வம். முகவுரையையும், முடிவுரையையும் குழந்தைத்தனமாய்தான் படைத்திருக்கிறான், இறைவன். இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
காலம்தோறும் - சிறுகதை சிறுகதை: வாஸந்தி, ஓவியங்கள்: ஸ்யாம் இன்னும் இருள் பிரியவே இல்லை. ஆனால், அருகில் இருந்த பூங்காவிலிருந்து கூட்டுக்குரலாகச் சிரிப்பலை வெடித்தது. அவளுக்கு வழக்கம்போல எரிச்சல் ஏற்பட்டது. அவர்கள் சரியான பித்துகள் அல்லது அசாதாரணமானவர்கள். சந்தேகமில்லை. அவர்களது சிரிப்பை வைத்து அவளால் நேரத்தைக் கணிக்க முடியும். 6:30 மணி. கோடைக்காலம் என்றால் யாரும் குறைகாணத் தேவையில்லை. நடுங்கும் குளிர்காலமாக இருந்தாலும் அது நேரம் தப்புவதில்லை என்பதில்தான் இருக்கிறது விஷயம். டெல்லி குளிர். இருள் விலகாதபோது, `இன்னும் கொஞ்ச நேரம்’ என, கண்களைத் திறக்க மனமில்லாமல் ரஜாய்க்குள் சுருண்டிருக்கும் வேளையில் அந்தச் சிரிப்பு. பூங்காவில் நடக்கும் யோகா வகுப்புக்கு …
-
- 0 replies
- 2k views
-
-
மோன் (சிறுகதை ) அகரமுதல்வன் கிளிநொச்சி பாண்டியனுக்கு முன்னால இருந்த பாலைமரத்தில தான் ஜெயத்தானை கட்டி வைச்சு இயக்கம் சுட்டதடா என்று சொல்லிய அம்மாவின் சுவாசம் பெருமூச்சாகத் தான் வெளியேறியது. அந்தப் பெருமூச்சில் இழப்பின் பெயரிடாத சொல்லொன்றுமிருந்தது. இயக்கம் ஏன் மாமாவைச் சுட்டது என்று நான் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். ஆரம்ப காலங்களில் இயக்கத்தின் சூடுகள் அவசரமாகவும்,தவறாகவும் சிலரைக் கொன்றிருக்கிறது என்று பெரிய ஆக்கள் கதைப்பதைக் கேட்டிருக்கிறேன். தேங்காய் திருவிக்கொண்டிருந்த அம்மாவிடம் ஏன் சுட்டார்கள் என்று கேள்வியாய்க் கேட்டுவிட்டேன்.”அது நீளமான கதையடா ஆறுதலாய்ச் சொல்லுறன்” என்று சொல்லமறுத்துவிட்டாள். அம்மாவின் மூன்று தம்பிகளில் இப்ப உயிரோட இருக்…
-
- 4 replies
- 885 views
-