கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
காதலுக்கு ஒரு கும்பிடு சகுந்தலாவிடமிருந்து கடிதம் வந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. படித்த படிப்பு வீணாகக் கூடாது; இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்து, அப்பா, தன் படிப்புக்கு செலவு செய்த தொகையையேனும் கொடுத்து உதவ வேண்டும் என நினைத்து, சென்னையில் வேலை தேடிக் கொண்டாள், சகுந்தலா. அவளைப் பொறுத்த வரை, வரதட்சணைப் பிரச்னை இருக்கப் போவதில்லை. ஏனெனில், சிறு வயது முதலே, அவளை, அவள் அத்தை மகனுக்கு மணமுடித்து வைப்பது பற்றிய பேச்சு, இரு தரப்புக் குடும்பங்களிலும் உள்ளது. சொந்தத் தம்பியின் மகள் என்பதால், தம்பி தன் வசதிப்படி, எது செய்தாலும், அதை அன்புடன் ஏற்க, தயாராக …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆப்பிள் இ ப்போது பெய்கிற மழையை எதிர்பார்க்கவில்லை. வெயில் உச்சத்தைத் தொட்டுச் சரிந்த வேளையில் திறந்த வானின் மதகுகள் இன்னும் மூடாமல் பெய்கின்றன. ஊழிக்காலத்து உக்கிரம் இல்லை என்றாலும், நகரங்களில் பெய்கிற எந்தப் பெருமழையும் ஊழியை ஞாபகப்படுத்திவிடும். நகரத்தில் மழையை எதிர்பார்த்திருப்பவர் யார்? இருந்தாலும் பெய்து தொலைக்கிறது. உடை போட்டுக்கொண்டு தெருவில் நடமாட வாய்த்த ஜீவன்கள் அனைத்தும் நனைந்து, மழையின் துளிகளைச் சிறிதளவாவது உடையில் சேமித்துச் சென்றன. நனைந்ததால் கேசம் கற்றையாய் ஆகின. நாய்கள…
-
- 0 replies
- 1.1k views
-
-
மழை நண்பன் - சிறுகதை ஹேமி கிருஷ், ஓவியங்கள்: ஸ்யாம் மழை எப்போது நிற்கும்? பிரியாவுக்குச் சொல்ல முடியாத சங்கடம். வாசலில் நின்றபடி வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த மழையில் எப்படிப் போவது? சத்யாவிடம் சொன்னால் கோபித்துக்கொள்வான். 'ஏன் நான் வரலையா? நீயெல்லாம் அவ்ளோதான்!’ என்பான். ''15 நாள் இம்ப்ளிமென்ட் புரொகிராம். பெங்களூர் வர்றேன். உன் அட்ரஸ் சொல்லு'' - மாலை வேளை ஒன்றில் அலைபேசியில் அழைத்தான். ''முதல்ல உன் ஆபீஸ் எங்கேனு சொல்லு!'' ''பெலந்தூர்ல!'' ''அய்யோ நான் ஒயிட் ஃபீல்ட்ல இருக்கேன். அது ரொம்பத் தூரம். நீ அட்ரஸ் கண்டுபிடிக்கிறது கஷ்டம். ஒரு காமன் பிளேஸ்ல மீட் பண்ணலாமா?'' பெங்களூர் வந்ததும் சத்யா திரும்பவும் அழ…
-
- 0 replies
- 2.7k views
-
-
செயல்! அந்தக் காட்சி கீதாவின் மனசை உருக்கியது. சின்னஞ்சிறு பிஞ்சு, ஒரு வேளை உணவுக்காக எப்படியெல்லாம் தன் உடலை வில்லைப் போல் வளைக் கிறது. கணவன் விஷாலைப் பார்த்தாள். அவள் பார்வையைப் புரிந்துகொண்டு பக்கத்தில் இருந்த கடையில் பத்து ரூபாய் கொடுத்து பிஸ்கட் பாக்கெட் வாங்கினான். மனம் முழுதும் சந்தோஷமாக இருந்தது கீதாவுக்கு. திருமணமான ஆறு நாட்களுக்குள்ளே நம்மைப் புரிந்துகொண்டானே. ஆனால், அடுத்து அவன் செய்த செயல் அருவருப் பாக இருந்தது. பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து, இரண்டு பிஸ்கட்டுகளைத் தான் எடுத்துக்கொண்டு, பிரித்த பாக்கெட்டை அந்தச் சிறுமியிடம் கொடுக்கும்படி கீதாவிடம் நீட்டினான். …
-
- 0 replies
- 1.1k views
-
-
தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் - சிறுகதை இன்னமும் பொழுதுவிடியவில்லை. வடமேடு எஸ்டேட்டின் உள்ளாக அவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். குளிர்காலத்தின் விடிகாலைக்கென்றே தனியழகு இருக்கிறது. பெருகியோடும் நதிபோலப் பனிப்புகை. பனி ஈரம்படிந்த தேயிலைச்செடிகள். வழுக்கிவிடும் மண். சரிவில் தெரியும் கண்காணிவீட்டின் சிறிய மஞ்சள் வெளிச்சம். உயரம் மறைத்துக்கொண்ட மரங்கள். சாலை தெரியாத புகைமூட்டம். காக்கி பேன்ட்டும் உல்லன் ஸ்வெட்டரும் அணிந்து தலையில் மப்ளரைக் கட்டியிருந்தான் மூசா. நாற்பத்தைந்து வயதிருக்கும். ஆள் நாலரை அடிக்கும் குறைவான உயரத்திலே இருந்தான். பிறவியிலேயே வலதுகால் இடதுகாலைவிடச் சிறியது. ஆகவே இழுத்து இழுத்து நடக்கக் கூடியவன். பிலாத்து முதலாளி நல்ல உயரம…
-
- 0 replies
- 2.2k views
-
-
கண்கள் திறந்தன! பணி இட மாறுதலில் வந்திருந்தான், முரளி. சுறுசுறுப்பாக இருந்ததுடன், சீனியர் பத்மநாபனிடம், நல்ல பேரை சம்பாதிக்க, பவ்யமாகவும் நடந்தான். அதைக் கவனித்த பத்மநாபன், 'இங்க பாருப்பா... நீ, உன் வேலைய கவனமாக செய்தாலே போதும்; அதுவே, எனக்கு கொடுக்கிற மரியாதை. மற்றபடி, முகஸ்துதி செய்வதோ, கூழைக் கும்பிடு போடுவதோ வேணாம்...' என்று, 'பட்'டென்று சொல்லி விட்டார். ஆனாலும், மேலதிகாரி என்ற பந்தா இல்லாமல், சினேகமாக பழகிய பத்மநாபனை, முரளிக்கு பிடித்து விட்டது. மேலும், அவர் இலக்கிய ஆர்வம் உள்ளவர் என்பது தெரியவர, சந்தோஷமானான். 'எனக்கும் இதெல்லாம் பிடிக்கும் ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
பார்வை தழையத் தழைய புடவை கட்டி, நெற்றியில் குங்குமப் பொட்டுடன், மணக்கும் மல்லிகையை ஒரு கை மொத்தத்துக்கு தலையில் வைத்திருந்த பாவனாவை டிபார்ட்மென்டல் ஸ்டோரில் பார்த்து அதிர்ந்தாள் கமலா.‘‘போன வருஷம் கணவனை ஆக்ஸிடென்ட்ல பறிகொடுத்த பாவனா, இவ்வளவு அலங்காரத்தோட பந்தா பண்ணுறாளே!’’ - கணவனிடம் சொன்னாள். ‘‘இது 2017. இப்படிப்பட்ட பெண்களுக்கு சுமங்கலி போன்ற தோற்றம் பாதுகாப்பா இருக்கு. இதுல என்ன தப்பு?’’ என்றான்.‘‘இல்லைங்க! ஒண்ணு, அவ ரெண்டாவது கல்யாணம் பண்ணியிருக்கணும்! இல்லைன்னா யார் கூடயாவது லிவிங் டுகெதர்ல இருக்கணும்! இவ்ளோ அலங்காரம், ெராம்ப சந்தோஷமா குடும்ப வாழ்க்கை இருந்தா மட்டும்தான் வரும்!’’ - வாதாடினாள் கமலா. அடுத்த நாள் பாவனா, கமலாவின் வீட்டுக்கே வந்தாள். அலங்காரம் சற…
-
- 0 replies
- 1.1k views
-
-
சொர்க்கமும், நரகமும்! காலேஜுக்கு கிளம்பிய மகனுக்கு மதிய சாப்பாட்டை கட்டிக் கொடுத்தாள், சாரதா. பின், கணவனுக்கு கேரியரிலும், மாமியாருக்கு டேபிளில், ஹாட் - பேக்கிலும் சாப்பாடு எடுத்து வைத்து, குளித்து முடித்து, காட்டன் புடவையில் எளிமையாக வந்தவளைப் பார்த்து, ''என்ன... மகாராணி வெளியே கிளம்பியாச்சா...'' என்றான், கணவன், மாதவன். ''என் பிரண்டோட மாமியாருக்கு ஆபரேஷன் ஆகி, ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க. அவ கணவர், துபாயில இருக்குறதால, உதவிக்கு ஆள் இல்ல. ஆஸ்பத்திரியில் துணைக்கு இருக்க கூப்பிட்டா; சாயந்திரம், நீங்க ஆபீஸ் முடிஞ்சு வர்றதுக்குள் வந்துடுவேன்,'' என்றாள். ''முதல்ல, அவளோட மாமியாரை பாக்கச் சொல்லு; அப்ப…
-
- 0 replies
- 859 views
-
-
எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! இந்திரா பார்த்தசாரதி வா சல் கதவைத் தட்டிவிட்டுப் போய்விட்டான் எமன். நாடகத்துக்கு முதல் விசிலா? டாக்டர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்... ‘‘இவ்வளவு பெரிய அட்டாக்... நீங்கள் தப்பிச்சது மிராக்கிள்தான்!’’ தப்பித்தது எதற்காக என்று யோசித்தார் நடேசன். உலகத்தில் நடப்பன அனைத்த…
-
- 0 replies
- 938 views
-
-
க்ரைம் தொடர்கதை.... ஒன் + ஒன் = ஜீரோ - அத்தியாயம் 1 -ராஜேஷ்குமார் விவேக் கூகுளில் வலைவீசி 'ஸ்காட்லாந்து யார்ட்' போலீஸ் பற்றிய ஒரு தகவலைத் தேடிக் கொண்டிருக்க, ரூபலா கையில் அன்றைய நாளிதழோடு பக்கத்தில் வந்து நின்றாள். "என்னங்க?" "சொல்லு ரூபி" "இந்த பேப்பர்ல போட்டிருக்கிற செய்தி உண்மைதானா?" "என்ன போட்டிருக்கான்?" "நீங்களே படிங்க" ரூபலா நாளிதழை நீட்ட விவேக் வாங்கிப் படித்தான். "மீன் நல்ல உணவுதான். ஆனால் அந்த மீனும் இப்போது சிறிது சிறிதாக விஷத்தன்மை அடைந்து கொண்டிருக்கிறது. இதில் ஆபத்தானது கடல் மீன்கள். பூமியில் உருவாகும் அனைத்து விதமான கழிவுகளும் கடலில் போய் சேர்கின்றன. ஒரு லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு இருக்கிறது. எதையு…
-
- 41 replies
- 11.4k views
-
-
அவளது வீடு - சிறுகதை 'வீடு வாடகைக்கு விடப்படும்’ என்ற விளம்பரத்தைப் பேப்பரில் பார்த்ததும், அதன் தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொண்டாள் அகல்யா. அலுவலகம் முடிந்து போகும் வழியில், 'அந்த வீட்டைப் பார்த்துவிட வேண்டும்’ என்று நினைத்தபடியே, லன்ச் பாக்ஸையும் குடிநீர் பாட்டிலையும் எடுத்து ஹேண்ட்பேகில் வைத்துக்கொண்டு ஸ்கூட்டியில் கிளம்பினாள். அவள் வேலை செய்யும் ஆடிட்டர் அலுவலகம், மந்தைவெளியில் இருக்கிறது. மறைமலைநகரில் இருந்து கிளம்பி அலுவலகம் போவதற்கு எப்படியும் 1.30 மணி நேரத்துக்கு மேல் ஆகும். 'நேரத்துக்குள் போகாவிட்டால், அரை நாள் சம்பளத்தைப் பிடித்துக்கொள்வார்கள்’ என நினைத்தபடியே சாலையில் செல்லத் தொடங்கினாள். பேப்பர்களில் வெளியாகும் வாடகை வீடு பற்றிய விளம்பரங்களை, அக…
-
- 0 replies
- 4k views
-
-
டேம்ரூஸும் டிசம்பர் மாதமும்! ஹேமி கிருஷ் அதிகாலையில் ஜன்னல் திரையை விலக்கினேன்.பனிபடர்ந்த தோட்டத்தையும் ,பறவைகளின் சப்தங்களை கேட்கும்போதும் ,அந்த ரம்யமான பொழுது மிகவும் இனிமையாக இருந்தது.எனக்கு மிகவும் பிடித்த மாதம் இந்த டிசம்பர் மாதம்.ஏனோ டேம்ரூஸ் ஞாபகம் வருவதை என்னால் தவிர்க்க இயலவில்லை.இதே டிசம்பர் மாதத்தில்தான் தன் காதலை சொன்னான் டேம்ரூஸ். இள நிலை முடித்ததும் முது நிலை படிக்க விருப்பம்.ஆனால் அப்பா” என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அடுத்த வருடம் சேர்த்து விடுகிறேன் என்றார்.ஒரு வருடம் சும்மா இருக்க பிடிக்கவிலை.எங்கள் ஊர்லே ஒரு பள்ளியில் ஆசிரயையாக செல்லும் வாய்ப்பு கிடைத்தது.முதல் நாள் இன்டர்வியூ சென்றேன்.அந்த மேடத்திற்க…
-
- 0 replies
- 837 views
-
-
பாகுபலி 2 - ஜி.ஆர்.சுரேந்தர்நாத் அந்த வீட்டு வாசல் அருகேயிருந்த வேப்ப மரத்தடியில், காரை நிறுத்தினேன். காரிலிருந்து இறங்கியவுடன், எனது கிளிப்பச்சை நிற சில்க் சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டேன். வேட்டியை இறுக்கிக் கட்டியபடி கார்க் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தேன். கால்வாசி வளர்ந்து, பின்னர் தனது வளர்ச்சியை நிறுத்தியிருந்த மீசையை ஒரு முறை தடவி விட்டுக்கொண்டேன் கழுத்தில் மாட்டியிருந்த செயினிலிருந்த புலிநக(?) டாலரை எடுத்து வெளியே விட்டுக்கொண்டு, புரோக்கரிடம், “எப்படி இருக்கேன்?” என்றேன். “உங்களுக்கு என்னண்ணே... அப்படியே ‘வின்னர்’ வடிவேலு மாதிரியே இருக்கீங்க...” என்று கூறிய புரோக்கரை முறைத்தபடி, “இந்தப் பொண்ணுக்காச்சும் என்னைப் பிடிக்குமாய்யா?” …
-
- 1 reply
- 2.3k views
-
-
தூங்காத கண்ணென்று ஒன்று சிறுகதை: ஹேமி கிருஷ், ஓவியங்கள்: ஸ்யாம் அலுவலகத்தில் இருந்து இரவு வீட்டுக்கு வந்ததும் அம்மா ஆரம்பித்தாள்... ''எல்லாம் என் நேரம். நான் என்ன சொன்னாலும்...'' - அவள் மேற்கொண்டு சொன்ன எதையும் நான் காதில் வாங்கவே இல்லை. திருமணமான 30 வயதுப் பெண், கணவனுடன் சேர்ந்து வாழாமல் தனியே இருந்தால், அம்மாவின் புலம்பல்கள் எதுவாக இருக்கும் என உங்களுக்குத் தெரியும்தானே? இரவு உணவு சாப்பிட்டதும் அறைக்குத் திரும்பினேன். எட்வினின் நினைவு, கடந்த ஒரு வாரமாகவே மனதைப் போட்டுப் பிசைந்தது. இப்போது ஏன் அடிக்கடி அவன் ஞாபகம் வருகிறது... அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து? எங்கள் வீட்டில் இருந்து இரண்டு வீடு தள்ளி இருக்கும் வேதா அக்கா வீட்டின் மொட்டைமா…
-
- 1 reply
- 3.7k views
-
-
மீனுக்கும் கற்பு உண்டு! ரேகா ராகவன் ‘‘ச ரவணன் சார்... லைப்ரரி புக் கொண்டுவந்திருக்கேன்!’’ - எதிரே அழகுச் சிலையாக ரமா. காலேஜில் படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண். சரவணனிடம் அவளுக்கு அப்படி என்னதான் ஈர்ப்போ... லைப்ரரி புத்தகம் வாங்கிப் போகிற, பாடப் புத்தகத்தில் சந்தேகம் கேட்கிற சாக்கில் அடிக்கடி வீட்டுக்கு வந்து ஒட்டிப் பழகுகிறாள். ஆருயிர் மனைவி சித்ரா இறந்து ஒரு வர…
-
- 1 reply
- 967 views
-
-
ஒரு நிமிடக் கதை கடவுள் ஒரு கணக்கன்! கிழித்த நாராக ஆஸ்பத்திரி படுக்கையில் கிடந்தாள் உமா.…
-
- 0 replies
- 1.1k views
-
-
தர்மம்! செய்தித்தாளைப் படித்து முடித்ததும், குளிப்பதற்காக கிளம்பினார், அருணாசலம். அப்போது, மொபைல் போன் ஒலிக்க, எடுத்துப் பார்த்தார்; நண்பர், கதிரேசனிடமிருந்து அழைப்பு! ''கதிரேசா... ஏதாவது அவசர விஷயமா... மணி, 11:00 ஆகப் போகுது... குளிச்சுட்டு வந்து பேசட்டுமா...'' என்றார். 'சரி' என்று அவர் கூறியதும், குளியல் அறைக்குள் நுழைந்தார், அருணாசலம். அருணாசலமும், கதிரேசனும் நண்பர்கள். தங்கள் கடமைகளை எல்லாம் முடித்து, பணி ஓய்வு பெற்று, அமைதியான வாழ்க்கை வாழ்பவர்கள். குளித்து முடித்து, நெற்றியில் திருநீறு இட்டு வந்தவர், பின், மொபைல் போனை எடுத்து நண்பர் கதிரேசனை அழைத…
-
- 0 replies
- 1.3k views
-
-
10 செகண்ட் கதைகள் கெடுதல் ``எப்பப் பாரு டிவி பாத்தா கண்ணு என்னத்துக்குடா ஆகும்..?” எனச் சத்தம் போட்டார், வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டிருந்த அப்பா! - சி.சாமிநாதன் வீடு “தண்ணி வசதி இல்லாட்டியும் பரவாயில்ல.. கொசு இல்லாத வீடா பாருங்க’’ என்றான், தரகரிடம் ராகுல் . - எம். விக்னேஷ் கல்வி ``மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’’ எனக் கேட்ட மகனிடம் இரண்டுமே முக்கியம் இல்லை என்றார் தனியார் பள்ளி நடத்திவந்த அரசியல்வாதி! - கே.சதீஷ் அறிவுரை ``பேரன்டிங் ரொம்ப முக்கியம். குழந்தைகளைத் திட்டாதீங்க. அன்பா இருங்க’’ என்ற பள்ளி ஆசிரியை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த மகனை அடி பின்னியெடுத்தார். - கே.சதீஷ் ரகசியம் பஸ்சில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மஞ்சள் அழகி? சண்மூவின் உள்ளங்கை தவளையின் உட்புறத்தில் இருப்பதைப் போலவே எப்பொழுதும் வியர்வையின் ஈரத்தன்மையுடன் இருக்கும்... நான் கீத்துவிடம் சொல்வேன்... "சண்மூவோட உள்ளங்கையைப் பிடிச்சுப் பாரேன். லேப்ல தவளையைத் தொடற மாதிரியே இருக்கும்.' அவள் என்தலையில் செல்லமாக அடித்து, "ஏய் உனக்கு கம்பேர் பண்ண வேற ஒண்ணும் கிடைக்கலையா?' என்றாள். சண்மூவிடமே சொல்லி இருக்கேன்... முறைத்துக் கொண்டு அடிக்க வருவாள்…
-
- 3 replies
- 1.6k views
-
-
கறுப்பன் என்றொரு பூனைக்குட்டி தமிழ்நதி -கனடா மூத்த மகனுடைய கையால் கொள்ளி வாங்குவதற்காக அருணாசலத்தார் நடுக்கூடத்தில் காத்துக் கிடந்தார். மகன் கந்தசாமி செய்தி கேட்ட அன்றிரவே அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டார். வெள்ளைவேட்டி சால்வை, அருணாசலத்தாருடைய கறுப்பு நிறத்தை அடர் கறுப்பாக்கிக் காண்பித்தது. தலைமாட்டில் குத்துவிளக்கின் சுடர் காற்றின் திசைக்கேற்ப சாய்ந்து மாய்ந்து அழுதுகொண்டிருந்தது. நகரத்திற்குப் போகும்போது மட்டும் செருப்பு அணிந்துகொள்ளும் வழக்கமுள்ள அவருடைய கால்களில் வெள்ளைக் காலுறைகள் மாட்டப்பட்டு, இரண்டு பெருவிரல்களும் இழுத்துக் கட்டப்பட்டிருந்தன. ஆள் திடகாத்திரன்தான். இருந்துமென்ன… நெஞ்சுவலி சாய்த்துவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன் விடிகால…
-
- 2 replies
- 717 views
-
-
கி.ரா. கதைகள் கி.ரா. கதைகள் ஒரு தலை அவளைப் பார்த்தான் அவன். …
-
- 0 replies
- 1.6k views
-
-
பிங்க் - சிறுகதை அந்த மாலை நேரத்தில், நீங்கள் வீட்டுக்குச் செல்லும் பரபரப்பில் இருக்கலாம். உங்கள் இணையை, நண்பர்களை, சொந்தங்களைப் பார்ப்பதற்காக வேக வேகமாக என்னைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள். எப்படியிருந்தாலும், இம்மாநகரத்தின் முக்கியமான இடங்களில் ஒன்றான இந்த ரயில் நிலையத்தை ஒட்டி இருக்கிற கூவம் பாயும் பாலத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகக் கடக்கவே நீங்கள் விரும்புகிறீர்கள். நான் அங்கே வெகு நேரமாக நின்றுகொண்டிருப்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை வரவழைக்கவில்லை, சரியா? ஏதோ ஒரு தொழிற்சாலையோ, ஆய்வுக்கூடமோ இந்தக் கூவம் நீரில்... இல்லை இல்லை... சாக்கடையில் கலந்துவிடும் பிங்க் நிறச் சாயம் ஒட்டாமல் சென்றுகொண்டிருந்தது. நான் அதை வெகு நேரமாகக் கவனித்துக்கொண…
-
- 1 reply
- 2.5k views
-
-
உக்காந்து யோசிப்பாய்ங்களோ! பிரபல டைரக்டர் சந்திரனை மிகுந்த சிரமத்துக்குப் பின் சந்தித்துப் பேசினான் ரகு. ‘‘சார், நான் கற்பனை பண்ணி வெச்சிருந்த மாதிரியே அச்சு அசலா நிறைய ஸீன்கள் இப்ப வர்ற படங்கள்ல வருது’’ என்ற வன், தன் ரசனையும் ஐடியாக்களும் சமீபத்திய ரிலீஸ் சினிமாக்களில் இடம்பெற்ற சூப்பர் ஸீன்கள், கிராஃபிக்ஸ் உத்திகள், க்ளைமாக்ஸ் திருப்பம் எனப் பல விஷயங்களில் பொருந்தியிருப்பதை உதாரணங்களோடு சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டான். பின்பு, ‘‘சார், என்னை உங்க அசிஸ்டென்ட்டா சேர்த்துக்கிட்டீங்கன்னா ரொம்ப ‘யூஸ்’புல்லா இருப்பேன்...’’ என்றான். ‘‘ஸாரி பிரதர், எனக்கு …
-
- 1 reply
- 1.1k views
-
-
கேளடி கண்மணி! ''பாரதி... நான் இவ்வளவு சொல்றேன், ஏன் காது கொடுத்து கேக்க மாட்டேங்குற...'' என்றார், அப்பா ராகவன் சலிப்பாக! ''நீங்கதாம்பா என்னோட உணர்வுகள புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க...'' ''ஏண்டி... கல்யாணமாகி, ஆறு மாசம்கூட ஆகல; அதுக்குள்ள இப்படி பிடிவாதமா வந்து நிக்குற...'' என்றாள் ஆற்றாமையுடன், அம்மா. ''ஓ... அதுதான் உன் பிரச்னையா... உன் மக, வாழாவெட்டியா வந்து உட்கார்ந்துடுவாளோ, அக்கம்பக்கம் உள்ளவங்களுக்கு பதில் சொல்லணுமே... இதுதானே உன் பயம்...'' என்றாள், பாரதி. ''அம்மா சொல்றத விடு. விஜய் நல்ல பையன்; எந்த கெட்ட பழக்க வழக்கமும் கிடையாது. கல்யாணமான இந்த குறுகிய காலத்துல, அவரை, நீ …
-
- 2 replies
- 939 views
-
-
புத்திசாலிகள்! துபாயில் இறங்கிய பத்து நாட்களில் வாடகைக்கு வீடு பிடிக்க வேண்டும். வேலைக்கு சேர்ந்தாயிற்று. 10 நாட்களுக்குத்தான் கம்பெனி சார்பில் ஹோட்டலில் தங்க வைப்பார்கள். அதற்கு மேல் என் பாடு.அங்கு எனக்கு யாரையும் தெரியாது. ஆபீஸ் லன்ச் டைமின்போது ஒன்றாக அமர்ந்திருந்த ஒரு பன்னாட்டுக் கலவையான குரூப்பிடம் கேட்டேன். ‘‘எனக்கு வீடு தேட ஹெல்ப் பண்ண முடியுமா?’’ ஒருவன் கேட்டான், ‘‘கார் பார்க்கிங்குடன் வேண்டுமா?’’ என் பதில், ‘‘எனக்கு கார் வாங்கும் ஐடியாவே இல்லை!’’ அடுத்து பட்ஜெட், ஏரியா, ரூம் போன்ற வழக்கமான கேள்விகள். இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, லெபனான், ஆஸ்திரேலியா எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள். தாங்கள் தங்கியிருக்கும் பில்டிங்கிலேயே ஏதாவது வீ…
-
- 1 reply
- 1.4k views
-