Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. டேஸ்ட் இதுவரை நன்றாக வியாபாரம் நடந்துகொண்டு இருந்த ஸ்வீட் ஸ்டால், திடீரென சரிவு நிலைக்கு வந்தது எப்படி எனக் குழம்பினார் ஆறுமுகம்.பல வருடங்களாக அங்கே மாஸ்டராக இருப்பவர் மாசிலாமணிதான். ஒரே ஆள். அவரது கைப்பக்குவம்தான் கடையின் வியாபார வளர்ச்சிக்கு மூல காரணமாக இருந்தது. இப்பொழுதும் அவர்தான் மாஸ்டர். ஆனால் முன்பு இருந்த ஓட்டம், இப்போது இல்லை. இதை மகன் சந்துருவிடம் சொல்லி வருத்தப்பட்டபோது, ‘‘நீங்க வீட்ல இருங்கப்பா, நான் பார்த்துக்கிறேன்!’’ என்றான்.அதே மாஸ்டர்தான். ஒரே மாதம்தான். பழைய வியாபாரத்தைவிட அதிகமாகவே கொண்டு வந்துவிட்டான் சந்துரு. ஆறுமுகம் தன் மகனிடம் காரணத்தை கேட்டார். ‘‘அப்பா, நான் மாஸ்டர்கிட்ட பேசினேன். அவருக்கு இப்ப சுகர் …

  2. பலி அனோஜன் பாலகிருஷ்ணன் ரத்னசிங்க உணவுப் பொதிகளை எண்ணினான். எல்லாம் சரியாக இருந்தன. பேப்பரால் சுற்றப்பட்டுக் கட்டப்பட்ட உணவுப் பொதிகளை அகண்ட வாளிக்குள் வைத்து டிரக்டரில் ஏற்றினான். முகாமிலுள்ளவர்கள் இனிமேல்தான் சாப்பிடுவார்கள். வீதியில் காவல் பணியில் நிற்கும் சிப்பாய்களுக்கு உணவுப் பொதியை ஒவ்வொன்றாகக் கொடுத்துவிட்டு வர வேண்டும். வெயில் சுள்ளிட்டது. துவக்கை முதுகுப்பக்கம் தொங்கவிட்டவாறு டிரக்டரில் பாய்ந்து ஏறினான். தலையில் கொழுவியிருந்த இரும்புத் தொப்பி இடறியது. சரிப்படுத்திக்கொண்டு டிரக்டர் பெட்டிக் கரையில் அமர்ந்தான். இன்னும் நான்கு சிப்பாய்களும் அவனுடன் ஏறினார்கள். வரும் வழியில் தென்னம் குற்றிகளை ஏற்ற வேண்டும். குலுங்கிக்கொண்டு டிரக்டர் போனது. வீதிக்கரையில் க…

  3. திருவையாறு -எஸ். சங்கரநாராயணன் கண்மூடிக் கிடந்தாலும் சூட்சுமம் மெல்ல தாமரையாய் மலர்ந்தது. சூரியனை மனசு உள்வாங்கிக் கொண்டதோ. இது எந்த நாழிகை தெரியாது. ராம ராம என மனசில் துடிப்பு. கண்ணைத் திறக்கா விட்டாலும் மனம் முதலில் விழித்துவிட்டது. வெளியே எங்கோ பெயர் தெரியாத பறவை ஒன்று சிறகடித்து சிற்றொலி ஒன்றை எழுப்புவதைக் கேட்டார். ட்விட். தேன் சொட்டினாப் போல… என்ன ஸ்வரம் அது, என்று மனசு யோசித்தது. உலகின் ஒலிகள் ஸ்வரங்களால் ஆளப்படுகின்றன. வாழ்க்கை சுருதியிலும் ஸ்வரங்களிலுமாகப் பிரித்தாளப் பட்டு பிணைக்கப் பட்டுக் கிடக்கிறது. பகலைவிட இரவின் பிரத்யேக ஒலிகள் அற்புதமானவை. பிசிறற்ற அவற்றின் துல்லியம் கவிதைத் திவலைகள். மெல்ல எழுந்து உட்கார்ந்தார். கண்ணைத் திறக்கவில்லை. …

  4. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் பேச்சு ``வாட்ஸ்அப்ல அப்படி என்னதான் பேசிப்பீங்க” என்ற அம்மாவிடம், ``ஒன்லி வீடியோதாம்மா” என்றாள் பொன்னி. - கே.சதீஷ் இங்கிதம் சுமாரான புடவை, சிம்பிளான அலங்காரத்துடன் கிளம்பினாள், வேலைக்கார அம்மாவின் வீட்டு விசேஷத்துக்கு. - ராம்ஆதிநாராயணன் சிரிப்பு முதல்வரைப் பார்த்து, 32 எம்.எல்.ஏக்களும் தெரிய சிரித்தார் தலைவர். - கிணத்துக்கடவு ரவி சமையல் ``சாப்பாடு பிரமாதமா இருக்கு. சமைச்சவருக்குக் கை குடுக்கணும். மாஸ்டர் எங்கே இருக்காரு..?’’என்ற கஸ்டமரிடம், ``வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்காரு சார்..’’ என்றார் சர்வர்! - சி.சாமிநாதன் பில்டப் ``கார் பார்க்…

  5. சிவகங்கை மாவட்டம் சேர்ந்தவர் தா.கிருட்டிணன் இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும்,ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 20.5.2003-ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார். கொன்றது யார்? தா.கி ஏன் கொலை செய்யப்பட்டார்? நடந்த சம்பவங்கள் என்ன? குற்றவாளிகள் யார்? தொடரும்..

  6. தேக வலை - சிறுகதை சிறுகதை: தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம் அம்மாவின் கற்பைச் சந்தேகிப்பது அனிதாவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. தொடர்ச்சியான சில சம்பவங்கள், அம்மாவைப் பற்றி அப்படி யோசிக்க வைத்துவிட்டது. கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி முதல் நுகத்தடியைக் கழுத்தில் சுமக்கத் தொடங்கியிருந்தாள் அனிதா. கொஞ்சம் சரியான வேலை கிடைக்கும்வரை ரமேஷைக் காதலிக்கும் திட்டத்தைத் தள்ளிவைத்திருந்தாள். இந்த நேரத்தில்தான் அம்மாவின் புதிய நடவடிக்கைகளைக் கவனித்தாள். சந்தேகத்துக்கான காரணங்கள் சாதகமாக இருந்தன. அம்மாவின் கைப்பையில் இருந்த அந்த மருந்துச் சீட்டு. அது கருக்கலைப்புக்கான மருந்து என்பதை ‘நெட்’ உதவியால் அனிதா உறுதி செய்திருந்தாள். அடுத்தது, அம்மாவின் கார் டேஷ் போர்டில் இருந்…

  7. ஜோக் மகள் காயத்ரியின் குரல் போனில் உற்சாகமாய் ஒலித்தது.‘‘அம்மா... நான் எழுதுன ஜோக் ஒண்ணு பத்திரிகையில வந்துருக்கும்மா. படிச்சிப் பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லேன்!’’ - போனை வைத்துவிட்டாள். கமலாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை. ‘‘இது எவ்வளவு பெரிய பெருமை. இதுக்காகவே அவ புகுந்த வீட்டுல அவளைக் கொண்டாடுவாங்க. எனக்குத்தான் மருமகளா ஒண்ணு வந்து வாய்ச்சிருக்கே... ஒண்ணும் தெரியாது!’’ - எரிச்சலாய் சொல்லிக்கொண்டே சமையலறை பக்கம் திரும்பி குரல் கொடுத்தாள். மருமகள் வந்ததும் விஷயத்தைச் சொல்லி, தெருமுனைக் கடையில் அந்தப் பத்திரிகையை வாங்கி வரச் செய்தாள். ‘‘என் மகளைப் பார்த்து நீயும் இது மாதிரி விஷயத்தை எல்லாம் கத்துக்க. புரியுதா? எங்கே அந்த ஜோக்கை சட்டுன்னு உரக்கப் படி பா…

  8. வேலை ‘பேசாம வி.ஆர்.எஸ் கொடுத்துடப் போறேன்!’’ - வசந்தன் சொன்னான்.‘‘உங்களுக்கு இன்னும் நாலு வருஷ சர்வீஸ் இருக்கே?’’‘‘இருந்துட்டுப் போவுது. அந்த நாலு வருஷ சம்பளத்தையும் கம்பெனில மொத்தமா கொடுத்துடுவாங்க. நமக்கு லாபம்தானே?’’‘‘பெரிய தொகையா வருமே! அப்படியே சேமிப்பில போட்டா வட்டி வரும். இல்லீங்களா?’’‘‘அது மட்டுமில்ல... பென்ஷனும் வரும்!’’‘‘கேட்கவே சந்தோஷமா இருக்குங்க. நாளைக்கே வி.ஆர்.எஸ் கொடுத்துடுங்க!’’ என்றாள் வசந்தனின் மனைவி. சொன்னபடியே செய்தான் வசந்தன். கை நிறைய பணம் வந்தது. ‘‘அப்பாடா! இனிமே அதிகாலை எழுந்து அவசர அவசரமா கம்பெனிக்குப் போக வேண்டாம். ஜாலியா தூங்கலாம், டி.வி பார்க்கலாம்’’ என மகிழ்ச்சியாகத் தூங்கிப் போனான் வசந்தன்.‘‘என்…

  9. புதுப்பித்தல் ‘‘பரமு! நம்ம ரெண்டு பேர் பாஸ்போர்ட்டையும் புதுப்பிக்கணும். ஆன்லைன்ல அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்!’’ - வீட்டுக்குள் நுழைந்தபடி சொன்னார் சதாசிவம்.‘‘சரிங்க!’’‘‘அடுத்த மாசத்தோட என்னோட டிரைவிங் லைசென்ஸ் முடியப் போகுது. அதையும் புதுப்பிக்கணும்!’’ ‘‘சரிங்க!’’‘‘பரமு! டி.டி.ஹெச்சுக்கு பணம் கட்டாம விட்டுட்டோம். ஒரு சேனலும் தெரியலை. பணத்தைக் கட்டி கணக்கைப் புதுப்பிக்கணும்!’’ ‘‘சரிங்க!’’ ‘‘நான் ரிட்டயர் ஆனப்போ கிடைச்ச ஆறு லட்ச ரூபாயை ஒரு வருஷத்துக்குனு நிரந்தர சேமிப்பா பேங்க்ல போட்டேன் இல்லையா? வருஷம் முடியப் போகுது. அதையும் அடுத்த வாரம் புதுப்பிக்கணும்!’’‘‘சரிங்க!’’‘‘என்கூட ஸ்கூலில் ஒண்ணா படிச்சானே ராமசாமி... ஏதோ காரணத்துக்காக கோவிச்சுகிட்டுப் போனவனை ம…

    • 1 reply
    • 905 views
  10. இனுமு கொறடு... ‘‘ஒரேய் ஸ்ரீதர்! தோ ஒஸ்தானு. எக்கட... ஆ விசறக்கோலு! (விசிறிக்கம்பு) அப்படியே மண்டைல போட்டேனா பாரு...’’ அடிக்க வரும் சின்ன அம்மம்மாவிடமிருந்து தப்பித்து ஓடுவோம் நானும் தம்பி விஜயராகவனும். அம்மாவின் சித்தி அவள். அடுக்களையிலேயே கிடப்பவள். சமையல், பாத்திரம் அலம்புவது, துணி துவைப்பது, மாவாட்டுவது, மாடியில் வடாம் பிழிவது என எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள். எங்கள் பாட்டியின் தங்கையான அவளுக்கு வேறு யாரும் கிடையாது. நாகப்பட்டினம் ரயில்வேயில் இருந்த கணவர் அப்பாய் நாயுடு மாரடைப்பால் இளம் வயதிலேயே இறந்துவிட, சின்ன அம்மம்மா தன் அக்காவுடன் சேர்ந்து கடைசிவரை இருந்துவிட்டாள். காலை ஐந்து மணிக்கே எழுந்துவிடும் அவ…

    • 1 reply
    • 1.3k views
  11. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் கண்காணிப்பு “ஸ்கூல்ல பசங்க யாரும் செல்போன் கொண்டுவர்றாங்களா?” என வாத்தியாரிடம் வாட்ஸ்அப்பில் கேட்டார் ஹெச்.எம்! - பெ.பாண்டியன் கலைப்பு “இரண்டு நாள்ல கலைக்கப் போறாங்களாம் ஐயா...” பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் ஆளுங்கட்சி MLA, தோட்டக்காரன் காட்டிய குருவிக் கூட்டை. - கல்லிடை வெங்கட் விதி விதியை மீறி கட்டிய கட்டடத்தால் விதியை ஒன்றும் செய்ய முடியவில்லை. - நந்த குமார் வெள்ளைப்பூக்கள் சண்டை போட்டுக்கொண்டே குடும்ப அமைதிக்காகக் கோயிலுக்குப் புறப்பட்டனர் கணவனும் மனைவியும்! - கே.சதீஷ் நிறைவு “வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்த மகிழ்ச்சியில் முதியோ…

  12. 1911-யில் தஞ்சை ஜில்லாவில் நடந்த மர்மம்! | 21 அக்டோபர் 1911 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தஞ்சை ஜில்லாவில் நடந்த மிகப்பெரிய மர்ம சம்பவம் தான் தனபகாயம் மரணம்!. வைத்தியநாத பிள்ளையின் மருமகளான தனபகாயம் எப்படி படுகொலை செய்யப்பட்டார், கொலையாளி எப்படி சிக்கினார் தெரியுமா? தொடரும்..

  13. மதுவந்தி - சிறுகதை சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம் கடவுள் ஒரு நாள் எழுந்தார். அழகின் கோடி துளிகளை ஒரு கோப்பையில் ஏந்தினார். உலகிலுள்ள அனைவர் மீதும் அந்தத் துளிகளைத் தெளிப்பதற்காக விண்ணில் பறந்தார். கோப்பை கை தவறி கடவுளின் கையிலிருந்து நழுவி விழ…. அழகின் அத்தனைத் துளிகளும் ஷ்ரவந்தியின் கண்களில் விழுந்தது. இயக்குநர் ஜோவின் டைரியிலிருந்து... மாலையிலிருந்து ஆறாவது முறையாக, க்யூ நியூஸில் காண்பித்துக்கொண்டிருந்த எனது நேர்காணலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். டி.வி-யில் அந்த இளைஞன் என்னிடம், “டைரக்டர் ஜோவோட பொற்காலம் முடிஞ்சு போச்சுன்னு சொல்ற விமர்சனங்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்கிறான். சுள்ளென்று வந்த கோபத்தை அடக்க…

  14. பாட்டில் ‘மது பாட்டில்கள் வாங்குவதில்லை’ - ஒரு பழைய இரும்புக் கடையில் இந்த வாசகம் தாங்கிய போர்டைப் பார்த்து வியந்து போனான் வசந்த். பொதுவாக இம்மாதிரி கடைகளில் குவியல் குவியலாக காலி மது பாட்டில்கள்தான் இருக்கும். அதைப் பார்க்கும்போதெல்லாம் ‘நாட்டில் இவ்வளவு பேர் குடிக்கிறார்களா?’ என்று தோன்றும்.ஆனால் இங்கே... மதுவுக்கு எதிராக இப்படியும் ஒருவர் போராட முடியுமா?! அந்த முதலாளியைப் பார்த்து பாராட்டியே தீர வேண்டும் என்று கடைக்குள் நுழைந்தான் வசந்த். கல்லாவில் வெள்ளைச் சட்டை அணிந்து அமர்ந்திருந்தார் முதலாளி.‘‘குடியை ஊக்கப்படுத்தக் கூடாதுனு இப்படி ஒரு முடிவெடுத்து வியாபாரம் பண்றீங்க பாருங்க... நீங்க பெரிய மனுஷர்ங்க!’’ என்றான் அவரிடம்! ‘…

  15. சமையல் கடிகாரத்தைப் பார்த்தபடியே எழுந்த ‘சமையல் திலகம்’ சரஸ்வதி, அரக்கப் பரக்கக் குளித்து ஒரு வாய் காபி மட்டும் போட்டுக் குடித்தாள். நேற்று இரவு ஒரு சமையல் போட்டிக்கு நடுவராகச் சென்றவள் வீடு திரும்ப பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. இரவு சரியான தூக்கமில்லை. முகம் உப்பியிருக்க, மிதமான மேக்கப் போட்டுக்கொண்டு கிளம்பினாள். சரஸ்வதியின் கார் அந்த ஸ்டூடியோவுக்குள் நுழைந்தது. அவசர அவசரமாய் அடுத்த வார ‘நளபாகம்’ எபிசோடுக்கு ஆயத்தமானாள். கேமரா முன் சிரித்தபடியே, ‘மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி?’ என்று செய்து காட்டினாள். முடித்ததும் மணியைப் பார்த்தால் மதியம் பன்னிரண்டு. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாதது தலையைச் சுற்றியது. ஸ்டூடியோவில் கொடுத்த கா…

    • 1 reply
    • 1.1k views
  16. காட்சி பெட்டிக்கடை மணிக்கு அப்பாசாமியைப் பார்த்தாலே எரிச்சல்தான். தினமும் பஸ் ஏற வருபவர், ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து அன்றைய செய்தித்தாள், பத்திரிகைகள் என எல்லாவற்றையும் ஓசியிலேயே வாசித்துவிட்டுத்தான் கிளம்புவார். ஒரு நாள் கட்டு வர லேட்டானாலும், ‘‘ஏம்பா, இன்னைக்கு அந்தப் பத்திரிகை வரணுமே... வரலையா?’’ என முதல் போட்ட முதலாளி மாதிரி கேள்வி வேறு! ‘இது கடையா, இல்லை கண்காட்சியா? எல்லாரும் இப்படியே ஓசியில் படிச்சிட்டு படிச்சிட்டு போனா தொழில் என்னாகுறது?’ மனம் புழுங்குவான் மணி.ஆனால் அன்று அப்பாசாமி கடைப் பக்கமே திரும்பவில்லை. செய்தித்தாளையும் புரட்டவில்லை. சோகமாக எங்கோ பார்த்தபடி நின்றார். ‘‘என்ன சார்... ஒரு மாதிரியா இருக்கீங்க..?”…

    • 1 reply
    • 977 views
  17. பாஷை பிரபல இசை அமைப்பாளர் சந்துருவின் மகளுக்குத் திருமணம். அதற்கான ஏற்பாடுகளை அவர் மனைவி ரேணுகா மும்முரமாக கவனித்துக்கொண்டு இருந்தாள்.சமையல் பொறுப்பை ஒரு வட இந்திய கான்ட்ராக்டரிடம் ஒப்படைத்துவிட்டு அவரிடம் பாதி ஆங்கிலம் பாதி தமிழில் பேசி புரிய வைத்துக்கொண்டிருந்த மனைவியைப் பார்த்து திகைத்துப் போனார் சந்துரு. பந்தல் போட ஒரிசாக்காரர்களிடமும், மேடை அலங்காரத்துக்கு டெல்லியிலிருக்கும் ஒரு நிறுவனத்தின் நிர்வாகியிடமும் பாஷை புரியாமல் விளக்கிக் கொண்டிருந்த மனைவி மீது சந்துருவுக்கு ஆத்திரமே வந்துவிட்டது. மகளுக்கு மெகந்தி வைக்க மும்பையிலிருக்கும் யாரோ ஒரு நிபுணருடன் மொபைலில் தட்டுத்தடுமாறி பேசிக்கொண்டிருந்த ரேணுகாவிடம் இருந்து மொபைலைப் பிடுங்கினார். ‘‘எதுக்கு இப்பட…

    • 1 reply
    • 688 views
  18. அது ஒரு மிளாகாலம் நம்ம பெரிய மாமா, அம்மாவுக்கு அண்ணன், ராணுவ அதிகாரியாயிருந்தவர். மாமியின் அநியாயமான அகால மரணத்துக்குப் பின்னால் மாமா எல்லையை விட்டுவிட்டு சென்னைக்குக் குடிவந்து என்ஸிஸி அதிகாரியாய்ப் பதவி வகித்தார். கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் கார்டன் ஏரியாவில் மேஜர் ரஹீம் என்றால் ரொம்பப் பிரபலம். மேஜர் ரஹீம் மட்டுமல்லாமல், அவருடைய டீன் ஏஜ் மகள்கள் ரெண்டு பேரும் கூடப் பிரபலம். மேஜர் ரஹீம் லெஃப்ட்டினன்ட் கர்னல் ரஹீமாய் உயர்ந்துவிட்டிருந்த காலத்தில், ஒரு கோடை விடுமுறையில், பாளையங்கோட்டை அசோக் டாக்கீஸ் பஸ் ஸ்டாப்பில் மூணாம் நம்பர் பஸ் ஏறி, திருநெல்வேலி ஜங்ஷனில் ரயிலேறி, சென்னை எழும்பூரில் வந்து இறங்கியபோது தன்னுடைய லாம்பரெட்டா ஸ்கூட்டரோடு மாமா என்னை வரவேற்க வந்திரு…

    • 1 reply
    • 1k views
  19. யார் இந்த ஆட்டோ ஷங்கர்? தொடரும்...

  20. உதவி ‘‘பத்மா, இந்த ‘பேன்ட் ஷர்ட்டெல்லாம் பழசாயிடுச்சு.. அக்கம் பக்கத்து ஏழைங்களுக்குக் குடுத்துடு!’’‘‘என்ன பீரோவுல பழைய புடவை நிரம்பி வழியுது? ஒவ்வொண்ணா எடுத்து வேலைக்காரிக்குத் தந்துட வேண்டியதுதானே!’’ - இப்படித்தான் சொல்வார் கார்த்திகேயன். ஆனால் இன்று அவரே சொல்கிறார்... வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துணிமணிகள் கொடுக்க வேண்டாமாம்!பத்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘என்னாயிற்று இவருக்கு?’ கேட்டே விட்டாள். ‘‘என்னங்க... கட்டின துணியோட உயிர் பிழைச்சா போதும்னு நடுரோட்டுல வந்து ரத்தக் கண்ணீர் வடிக்கிறாங்க ஜனங்க. சாப்பாடு இல்ல... குடிக்கிற தண்ணி இல்ல... பலவீனப்பட்டு வேதனையோட நிக்கிறாங்க. எப்பவும் பழைய துணிகளைக் கொடுக்கச் சொல்ற நீங்க இப்ப வேண்டாம்ங்கறீங்களே ஏன்?’’ …

    • 1 reply
    • 1.6k views
  21. மீச - சிறுகதை தமயந்தி, ஓவியங்கள்: ஸ்யாம் வானம் இன்னும் அடைசலாகத்தான் இருந்தது. சில நேரம் மனதின் நிறங்களுக்குத் தக்க, சூழலின் நிறங்கள் மாறும் என இவள் திண்ணமாக எண்ணினாள். புதிதாக அரைத்த காபித்தூள் வாங்கி வந்து மணத்துடன் கொதிக்க வைக்கும்போது ஒரு ப்ரவுன் கலர் பூனை ஜன்னலில் கடக்கும். அது ஏன் ஒரு வெள்ளைப் பூனையாக இல்லாமல், காபி நிறத்திலான பூனையாக இருக்க வேண்டும். அப்படியானால் அந்த காபி நிறப் பூனைதான் கடவுளா? ஒருமுறை இதை செபாஸ்டியனிடம் சொன்ன போது அவன், அவள் நெற்றி முடியை ஒதுக்கியவாறு ``கர்த்தாவே... உனக்கு மட்டும் எப்படித் தோன்றுகிறது இப்படி. கொஞ்சம் எக்ஸ்ட்ரா உழைச்சிருக்கார் கர்த்தர் ஒன்ன படைக்கிறப்ப'' என்றான். அவன் நக்கல் அவளுக்கு விருப்பமாயில்லை. ஒ…

  22. ஒரு நிமிடக் கதை: மதிப்பெண் பாஸ்கரின் வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு ராகவன் கிளம்பிச் சென்றதும், மனைவி ரோகிணியிடம் வந்தார் பாஸ்கர். “பக்கத்து வீட்டுக்காரரான ராக வனோட நாம நல்லாத்தான் பழகு றோம். ஆனாலும் அவருக்கு நம்ம மேல அசூயையும் பொறா மையும்தான் இருக்குபோல!” சொன்னார் பாஸ்கர். “ஏன் அப்படி சொல்றீங்க? இவ்வளவு நேரம் நல்லாத்தானே பேசிட்டுப் போனார்” நிதானமாகக் கேட்டாள் ரோகிணி. “நல்லா பேசிட்டிருந்தாரா? இவ் வளவு நேரம் தன்னைப் பற்றியும் தன் தம்பிகளைப் பற்றியுமே கர்வமா பேசிட்டிருந்தாரு. கவ னிச்சல்ல?” “ஆமா கேட்டுட்டுத்தான் இருந் தேன். அவர் எப்படி மளிகை கடை நடத்தி முன்னுக…

    • 1 reply
    • 2.8k views
  23. துணிச்சல் நாங்கள் நான்கு பேர்... மூர்த்தி, வாசு, ராஜேந்திரன் மற்றும் நான். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். தினம் மாலை கடற்கரையில் சந்திப்போம். மூர்த்தி நான்கு நாட்களாக வரவில்லை. அவருடைய அண்ணன் மகன் மரணத்துக்குப் போயிருந்தவர் இன்றுதான் வந்தார்.‘‘ப்ச்... 35 வயசுதான். எந்த கெட்ட பழக்கமும் இல்லை. உடம்பு சரியில்லைன்னு படுத்ததும் இல்லை. ஆனாலும் திடீர் ஹார்ட் அட்டாக். பாவம், மூணு பொட்டப் புள்ளைங்க, பொண்டாட்டி எல்லாரையும் அம்போனு விட்டுட்டுப் போயிட்டான்!’’ - அவர் சொன்னதும் சாவின் நிதர்சனம் எங்களுக்கும் உறைக்க, நிசப்தம் நிலவியது. நான் மௌனம் கலைத்து, ‘‘ஓகே... என்னுடைய எல்லா கடமைகளும் முடிஞ்சுடுச்சு. நான் ரெடியாயிட்டேன். எ…

  24. மாங்குடி மைனர் - சிறுகதை சிறுகதை: பாக்கியம் சங்கர், ஓவியங்கள்: ஸ்யாம் `மாங்குடி மைனர் இறந்துவிட்டார்' என்றது பேட்டை வாழ் பெருமக்களுக்கு அத்தனை மகிழ்வானதொரு செய்தியாகத்தான் இருந்தது. முக்கியமாக மைனரின் மூன்று மனைவிகளுக்கும் நெஞ்சம் குளிர்ந்து, முகம் ஒருவிதப் பூரிப்படைந்திருந்தது. தனது எண்பத்திரெண்டு வயதில் இத்தனை ஆன்மாக்களை சந்தோஷமடையச்செய்த மாங்குடி மைனர், பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தபடி முறுக்கிய மீசையில் ஜபர்தஸ்தாக காட்சியளித்்தார், அகன்று விரிந்த முகத்தில் பட்டையைப் போட்டு நடுவில் வட்டமாகப் பொட்டு வைத்திருந்தனர். டுப்பு டுப்பு என்று ஒய்யாரமாக வலம் வந்துகொண்டிருந்த மைனரின் புல்லட்டை பேரன்களும் பேத்திகளும் ஏறிக்கொண்டு ஓட்டுவதாகப் பாவனை செய்து கொண்டிருந…

    • 1 reply
    • 4.1k views
  25. தொழிலதிபர் செல்வராகவனின் மகன் சங்கரை ஸ்கூலிலிருந்து கடத்தியவன் கரகர குரலில் பேசினான். ‘‘பணத்தை ரெடி பண்ணு. போலீஸ் உன் வீட்ல இருக்காங்கனு தெரியும். போனை டிராக் பண்ணி, நேரத்தை வீணடிக்க வேண்டாம்னு சொல்லு. கொஞ்சம் இரு... உன் பையன் பேசுறான்!’’ சில நொடிகள் கடந்த பிறகு சங்கர் பேசினான். ‘‘அப்பா! இவங்க கேக்குற பணத்தைக் கொடுத்துடுங்க. நான் நல்லாயிருக்கேன். இவங்க ரொம்ப நல்லவங்க. பசிக்குதுன்னு சொன்னதும் எனக்கு ருசியான பிரியாணி வாங்கிக் கொடுத்தாங்க. பிரியாணி ருசி பிரமாதம்!’’ - அதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஹெட்போனில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கோகுலின் முகம் பிரகாசமானது. உடனே கிளம்பியவர், இரண்டு மணி நேரத்தில் பையன் சங்கரோடு வந்தார். நடந்ததை செல்வராகவனிடம் விளக்கி…

    • 1 reply
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.