விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7832 topics in this forum
-
2026 ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட நேபாளம், ஓமான் தகுதி 16 Oct, 2025 | 08:10 PM (நெவில் அன்தனி) இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருடம் கூட்டாக நடத்தப்படவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்கு நேபாளம், ஓமான் ஆகிய நாடுகள் தகுதிபெற்றுள்ளன. ஆசிய பிராந்தியத்திலிருந்து மூன்றாவது நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் தகுதிபெறுவதற்கான வாயிலை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஓமானின் அல் அமீரத்தில் நடைபெற்றுவரும் ஆசிய - கிழக்கு ஆசிய பசுபிக் பிராந்திய ரி20 உலகக் கிண்ண தகுதிகாணின் சுப்பர் 6 சுற்று நிறைவடைவதற்கு முன்னரே நேபாளமும் ஓமானும் ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டுள்ளன. இந்த இரண்டு அணிகளும் சுப்பர் 6 சுற்றில் முதல் மூன்று இடங்களுக்…
-
-
- 14 replies
- 532 views
- 2 followers
-
-
இந்தியாவில் கடினமான டெஸ்ட் தொடரை சந்திக்கவுள்ள உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா Published By: Vishnu 13 Nov, 2025 | 07:51 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட சுதந்திரக் கிண்ணத்துக்கான இருதரப்பு டெஸ்ட் தொடரும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரும் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது. இந்தியாவில் மிகவும் கடினமான தொடர் தென் ஆபிரிக்காவுக்கு காத்திருக்கிறது என்று கூறினால் அது தவறாகாது. கடந்த 10 வருடங்களில் இந்தியாவுக்கு இரண்டு தடவை டெஸ்ட் கிரிக்கெட் விஜயம் செய்த தென் ஆபிரிக்கா, அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் படுதோல்விகளை சந்தித்தது. 2015இல் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட தொடரில் 0 - 3 என இளம…
-
-
- 38 replies
- 1.2k views
- 1 follower
-
-
சிம்பாவே, நபீபியா நாட்டில் நடைபெற இருக்கும் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரின் பெற்றோர் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாக கொண்டவர்கள். https://www.icc-cricket.com/news/peake-to-lead-as-australia-unveil-under-19-world-cup-squad
-
- 2 replies
- 102 views
-
-
தமிழ் யூனியன் வீரர்கள் ஷாருஜன், வியாஸ்காந்த் அபார ஆற்றல்கள் Published By: Digital Desk 3 09 Dec, 2025 | 03:16 PM (நெவில் அன்தனி) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) நடத்தப்பட்டுவரும் முதல்தர கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் 2025-26 ஆரம்பப் போட்டியில் தமிழ் யூனியன் வீரர்களான சண்முகநாதன் ஷாருஜன் துடுப்பாட்டத்திலும் விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். தமிழ் யூனியன் அண்ட் அத்லெட்டிக்ஸ் க்ளப் அணிக்காக இந்த வருடத்திலிருந்து முழுமையாக விளையாட ஒப்பந்தமாகியுள்ள 19 வயதுடைய சண்முகநாதன் ஷாருஜன் அக் கழகத்துக்கான தனது முதலாவது போட்டியிலேயே முதல் தர கிரிக்கெட்டுக்கான சதத்தைக் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார். இதில் விசேஷம் என்னவெ…
-
- 0 replies
- 263 views
- 1 follower
-
-
ட்ரவிஸ் ஹெட் அசத்தலான சதம், முதலாவது ஆஷஸ் டெஸ்டில் 2 நாட்களில் அவுஸ்திரேலியா வெற்றி; கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியாவுக்கு வருவாயில் பெரு நட்டம் Published By: Digital Desk 3 23 Nov, 2025 | 11:47 AM (நெவில் அன்தனி) பேர்த் விளையாட்டரங்கில் இரண்டே நாட்களில் நிறைவுக்கு வந்த முதலாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ட்ரவிஸ் ஹெட் குவித்த ஆட்டம் இழக்காத அதிரடி சதத்தின் உதவியுடன் இங்கிலாந்தை 8 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது. இந்த டெஸ்ட் போட்டியின் ஆரம்ப நாளான வெள்ளிக்கிழமையன்று பலம் வாய்ந்த நிலையில் இருந்த இங்கிலாந்து மிக மோசமாக தோல்வி அடைந்தது. மிச்செல் ஸ்டார்க் மிகத் துல்லியமாக பந்துவீசி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து (58 - 7 விக…
-
- 3 replies
- 183 views
- 1 follower
-
-
வரலாற்றில் மிகப் பெரிய பீபா உலகக் கிண்ணத்துக்கான அணிகளுக்குரிய பகிரங்க குலுக்கல் இன்று 05 Dec, 2025 | 08:17 PM (நெவில் அன்தனி) கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக 48 நாடுகள் பங்குபற்றும் மிகப் பெரிய FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி அமெரிக்க கண்டத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. உலகக் கிண்ணப் போட்டிக்கான அணிகளைக் குழுநிலைப் படுத்தும் பகிரங்க குலுக்கல் வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ள கென்னடி நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) இரவு நடைபெறவுள்ளது. ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் கூட்டாக உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடத்தவுள்ளன. உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் மூன்று நாடுகள் கூட்டு சேர்ந்து நடத்துவது இதுவே முதல் தடவையாகும். 2…
-
- 1 reply
- 771 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சஞ்சய் கிஷோர் பதவி,மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர், பிபிசி ஹிந்தி 11 ஜூன் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியது. டி20யில் இந்தியா இதுவரை இல்லாத மிகக் குறைந்த ஸ்கோரைப் பெற்ற போதிலும் வெற்றி பெற்றது. அதேசமயம் பாகிஸ்தான் அந்த சிறிய இலக்கை கூட துரத்த முடியாமல் தோல்வியுற்றது. கடினமான 22 யார்டு ஆடுகளத்தில், 22 வீரர்களுக்கு மத்தியில், இந்த ஆச்சரிய வெற்றிக்கும் எதிரணியின் எதிர்பாராத தோல்விக்கும் ஒருவர் தான் காரணம் : அது `ஜஸ்பிரித் பும்ரா’. பாகிஸ்தானுக்கு எதிராக பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 3 பெரிய விக்கெட்டுகளை வீ…
-
-
- 6 replies
- 493 views
- 1 follower
-
-
வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை மொண்டோ டுப்லான்டிஸ், சிட்னி மெக்லோலின் வென்றனர் 02 Dec, 2025 | 03:11 PM (நெவில் அன்தனி) சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் உலக சம்பியன்களான மொண்டோ டுப்லான்டிஸ் மற்றும் சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன் ஆகிய இருவரும் இந்த வருடம் நிலைநாட்டிய சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்கள் இருவரையும் வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களாக வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் நிறுவனம்) தெரிவுசெய்து உயர் விருதுகளை வழங்கியது. மொனோக்கோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற உலக மெய்வல்லுநர் விருது விhழவின்போது இந்த உயர் விருதுகளுடன் இன்னும் சில விருதுகள் வழங்கப்பட்டன. சுவடு, மைதானம், மற்றும் வெளிக்களம் ஆகிய மூன்று பிரிவுகளில் ஆண், பெண் இருபாலா…
-
- 0 replies
- 69 views
- 1 follower
-
-
விளையாட்டுகளில் சுவாரஸ்யமான சம்பவங்கள்......! சீடனின் திறமையான சில கோல்கள்..... சூட் த பால் இன் த கோல்......! 🏀
-
-
- 698 replies
- 100.2k views
- 1 follower
-
-
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ்கள், ஷஹித் அப்றிடியின் 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்தார். Published By: Vishnu 30 Nov, 2025 | 10:06 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ரன்ச்சி சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஷஹித் அப்றிடியின் அதிக சிக்ஸ்களுக்கான 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார். அப் போட்டியில் 3 சிக்ஸ்களை அடித்த ரோஹித் ஷர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 352ஆவது சிக்ஸை அடித்து அதிக சிக்ஸ்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். இதன் மூலம் பாகிஸ்தான் வீரர் ஷஹித் அப்றிடிக்கு 15 வருடங்கள் சொந்தமாக இருந்த 351 சிக்ஸ்கள் என…
-
- 0 replies
- 112 views
- 1 follower
-
-
பரபரப்பை ஏற்படுத்திய மும்முனை ரி20 தொடரின் ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வேயை வென்றது பாகிஸ்தான் Published By: Vishnu 18 Nov, 2025 | 11:25 PM (நெவில் அன்தனி) ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (18) மிகவும் பரபரப்பை எற்படுத்திய மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வேயை 4 பந்துகள் மீதம் இருக்க 5 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றிகொண்டது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது. பிறயன் பெனெட் (49), டடிவான்ஸே மருமணி (30) ஆகிய இருவரும் 48 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெ…
-
- 7 replies
- 374 views
- 1 follower
-
-
19 Nov, 2025 | 04:04 PM பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் மும்முனை ரி20 கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கையின் ரி20 அணித் தலைவர் சரித் அசலன்க ஓசையின்றி நீக்கப்பட்டபோது ஆரம்ப கிசுகிசுக்கள் சுகவீனம் என முணுமுணுத்தன. ஆனால், அதற்கு அப்பால் ஒரு கீறல் வீழ்ந்துள்ளதுடன் ஒரு வித்தியாசமான தோற்றம் வெளிப்படுகிறது. பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர்வதில் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தின்போது அணித் தலைவர் வெளிப்படுத்திய அதிருப்தியானது விரிசல்கள் நிறைந்த ஆடுகளத்தில் ஒரு மோசமான எகிறிபாயும் பந்து போன்று அவரைத் திருப்பித் தாக்கியுள்ளது.. தாயகம் திரும்பத் துடித்த மற்றொரு பிரதான வீரரான வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோவும் இதே போன்ற ஒரு இக்கட்டான நிலையை சந்தித்துள்ளார். இவர்கள் இருவரின் க…
-
- 1 reply
- 173 views
- 1 follower
-
-
Published By: Vishnu 16 Nov, 2025 | 01:41 AM (நெவில் அன்தனி) கத்தார், தோஹா வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (15) நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகள் ரி20 கிரிக்கெட்டின் ஏ குழு போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியிடம் 3 விக்கெட்களால் இலங்கை ஏ அணி தோல்வி அடைந்து ஏமாற்றம் அடைந்தது. யாழ். மைந்தன், மத்திய கல்லூரியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சில் 3 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து பிரகாசித்தபோதிலும் அது பலனற்றுப் போனது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. மிலன் ரத்நாயக்க (41), நுவனிது பெர்னாண்டோ (39), அணித் தலைவர் துனித் வெல்லாலகே (33), விஷேன் ஹலம்பக…
-
- 2 replies
- 172 views
- 1 follower
-
-
இந்தியா எப்படி தோற்றது? சுப்பர் ஓவர் என்றால் 6 பந்துகள். இரண்டு பந்தில் இருவர் அவுட் ஆகினால் சுப்பர் ஓவர் முடிவடைந்திடுமா?
-
-
- 10 replies
- 381 views
- 2 followers
-
-
இந்தியா, பாகிஸ்தான் பார்வையற்ற பெண்கள் கைகுலுக்கி கிரிக்கெட் உணர்வை வெளிப்படுத்தினர் Published By: Digital Desk 3 17 Nov, 2025 | 02:04 PM (நெவில் அன்தனி) உலகின் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய - பாகிஸ்தான் வீராங்கனைகள் கைகுலுக்கி கிரிக்கெட் ஆர்வத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தினர். அவர்கள் குறைபார்வை உடையவர்களாக இருந்தபோதிலும் விளையாட்டில் ஆழமான பற்றுடன்கூடிய பண்பான பார்வை இருப்பதை எடுத்துக் காட்டினர். பார்வையற்ற இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப் போட்டி நடுநிலையான கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக நிலைய மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலி…
-
- 1 reply
- 109 views
- 1 follower
-
-
நமிபியாவிலும் ஸிம்பாப்வேயிலும் 19 வயதின்கீழ் ஆண்களுக்கான உலகக் கிண்ணம் : சி குழுவில் இலங்கை, அட்டவணை வெளியீடு 19 Nov, 2025 | 07:41 PM (நெவில் அன்தனி) ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 16ஆவது அத்தியாயம் இணை வரவேற்பு நாடுகளான ஸிம்பாப்வே, நமிபியா ஆகியவற்றில் நடத்தப்படவுள்ளது. இந்த சுற்றுப் போட்டியில் சற்று இலகுவான சி குழுவில் இலங்கை இடம்பெறுகிறது. ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2026 ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி 6ஆம் திகதிவரை நடைபெறும். போட்டியில் பங்குபற்றும் அணிகள் ஸிம்பாப்வே, நமிபியா நாடுகளை 2026 ஜனவரி 8ஆம் திகதி சென்றடையும். தொடர்ந்து 9ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதிவரை பயிற்சிப் போட்டிகள் நடைபெற…
-
- 0 replies
- 90 views
- 1 follower
-
-
பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 6 ஓட்டங்களால் பாகிஸ்தான் வென்றது 12 Nov, 2025 | 01:04 AM (நெவில் அன்தனி) இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (11) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது. பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 300 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ஆறு வீரர்கள் 25…
-
-
- 5 replies
- 538 views
- 1 follower
-
-
ஜடேஜாவுக்கு பதில் சஞ்சு சாம்சன் : சிஎஸ்கே முடிவால் யாருக்கு லாபம்? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா 'ஐபிஎல் டிரேட்' உறுதியாகியிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அங்கமாக விளங்கிய ஜடேஜாவையும், ஆல்ரவுண்டர் சாம் கரண் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்குப் பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருக்கிறார். ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை ஏலத்தைத் தவிர்த்து 'டிரேட்' மூலமாகவும் வீரர்களை வாங்க முடியும். 2009ம் ஆண்டு முதலே ஐபிஎல் டிரேட்கள் நடந்துகொண்டுதான் இர…
-
- 5 replies
- 249 views
- 1 follower
-
-
கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல்.....! உச்சிக் குடுமி உள்ள பஞ்சாப் அணியில் அழகுக் கூந்தலுடன் குடிபுகுந்தான் கரிய நிறமும் பெரிய உருவமும் உனது பார்த்ததும் பருகிடும் பாவையர் மனது....! வர்ண வர்ணக் கையுறைகள் கலகலக்க மட்டையிலோ அச்சடித்த "த பாஸ்" மினுமினுக்க சிங்காரச் சிரிப்பழகும் சிதறிவர சிங்கத்தின் நடையழகுடன் நீ நடந்து வர .....! இரண்டு ஓவர்கள் நின்று ஆடினாலே பெஸ்ட்டு மூன்று தாண்டினால் சதமடித்து வரும் "பாட்" டு பந்துகள் எகிறிடும் பல மீட்டர் கடந்து பவுலர்க்கெல்லாம் ஏறிடும் ஹார்ட் பீட்டு......! அங்கும் இங்கும் ஆலாய் பறந்து பந்து பிடி…
-
-
- 80 replies
- 9k views
- 1 follower
-
-
'எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர் இல்லாமல் இந்தளவு உயர்ந்திருக்கமாட்டேன்' - 14 வயது இந்திய வீரர் சூரியவன்ஷி Published By: Vishnu 15 Nov, 2025 | 07:29 PM (நெவில் அன்தனி) எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர் என்னை கண்டிப்புடன் வளர்திராவிட்டால் நான் கிரிக்கெட்டில் இந்தளவு உயர்ந்திருக்கமாட்டேன்' என இந்தியாவின் 14 வயதுடைய இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி தெரிவித்துள்ளார். கத்தாரின் தோஹாவில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண உதய தாரகைகள் (Rising Stars) கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக இந்தியா சார்பாக இரண்டாவது அதிவேக ரி20 கிரிக்கெட் சதத்திற்கான இணை சாதனையை ஏற்படுத்திய பின்னர் வைபவ் சூரியவன்ஷி இதனைத் தெரிவித்தார். அப் போட்டியில் 32 பந்துகளில் 100 ஓ…
-
- 0 replies
- 134 views
- 1 follower
-
-
'பல விக்கெட் கீப்பர்களுக்கு இவரை பிடிக்காது' - கில்கிறிஸ்ட் செய்த மாற்றம் என்ன? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 13 நவம்பர் 2025 ''முன்பெல்லாம் கீப்பர் என்று சொன்னாலே தோனி, பவுச்சர் பேருக்கெல்லாம் முன்பு இவர்தான் ஞாபகம் வருவார்'' - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பற்றிப் பேசும்போது தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் பாபா இந்திரஜித் சொன்னது இது. நவம்பர் 14, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கியமான அங்கமாக இருந்த (1996 முதல் 2008 வரை) ஆடம் கில்கிறிஸ்ட்டின் பிறந்த நாள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 905 ஆட்டமிழப்புகளைச் செய்திருக்கும் கில்கிறிஸ்ட் பற்றி சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு - தேசிய கிர…
-
- 0 replies
- 61 views
- 1 follower
-
-
11 Nov, 2025 | 02:20 PM (நெவில் அன்தனி) இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் மேகாலயா கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சௌதரி 8 பந்துகளில் 8 சிக்ஸ்களை தொடர்ச்சியாக விளாசியதுடன் 11 பந்துகளில் அரைச் சதம் குவித்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக அரைச் சதம் குவித்து சாதனை நிலைநாட்டினார். இதன் மூலம் அனைத்துக் கால கிரிக்கெட் ஜாம்வான்கள் இருவரின் மைல்கல் சாதனைகளை முறியடித்தவர் என்ற பெருமையை 25 வயதான ஆகாஷ் சௌதரி பெற்றுக்கொண்டார். ஒரே ஓவரில் 6 சிக்ஸ்களை விளாசிய அவர் அடுத்து அவர் எதிர்கொண்ட ஓவரின் முதல் 2 பந்துகளில் மேலும் 2 சிக்ஸ்களை விளாசி இந்த அரிய சாதனையை நிலைநாட்டினார. மேகாலயா அணிக்கும் அருணாச்சல் பிரதேஷ் அணிக்கும் இடையில் குஜராத் மாநிலத்தின் சுராத் விளையாட்டரங்கில் வார இற…
-
-
- 5 replies
- 279 views
- 1 follower
-
-
யூரோ 2028 கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி அட்டவணை அறிவிப்பு! யூரோ 2028 கால்பந்து சுற்று போட்டி இங்கிலாந்து (England), (Wales) வேல்ஸ், (Scotland,) ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசு(reland) வெம்ப்ளி மற்றும் ஹாம்ப்டன் பார்க் (Wembley and Hampden Park.) ஆகிய வெவ்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளது. இதேவேளை, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் யூரோ 2028 கால்பந்தாட்டத்திற்கான டைனமிக் விலை நிர்ணயத்தைப் பயன்படுத்தி நுழைவு சீட்டுகள் விற்கப்படாது என போட்டி ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர். 2026 உலகக் கோப்பைக்காக FIFA போட்டியில் தேவையின் அடிப்படையில் மாறுபடும் விலை நிர்ணய முறை, ஏற்றுக்கொள்ளப்பட்டமையினால் அது ரசிகர்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ள நிலையில் யூரோ 2028 கால்பந்து சுற்ற…
-
- 0 replies
- 78 views
-
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் பணப்பரிசு நான்கு மடங்காக அதிகரிப்பு; சம்பியன் அணிக்கு 134 கோடி ரூபா Published By: Digital Desk 3 01 Sep, 2025 | 05:12 PM (நெவில் அன்தனி) இந்தியாவிலும் இலங்கையிலும் இந்த மாதம் பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ள 8 அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மொத்த பணப் பரிசாக 418 கோடியே 5 இலட்சத்து 74,000 ரூபா (13.88 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படவுள்ளது. இதன் படி இந்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான மொத்த பணப் பரிச நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. நியூஸிலாந்தில் 2022இல் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் மொ…
-
-
- 49 replies
- 1.2k views
- 2 followers
-
-
Nov 2, 2025 - 08:51 AM நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதாகும் வில்லியம்சன் 2011 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை 93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 அரை சதத்துடன் 2,575 ஓட்டங்களை பெற்றுள்ளார். தமது ஓய்வு குறித்து அவர் தெரிவிக்கையில், எதிர்பார்த்ததைவிட, அதிக ஆண்டுகள் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளேன். மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. நிறைய அனுபவங்களையும் நியூசிலாந்து டி20 அணியில் கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார். டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள கேன் வில்லியம்சன், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில…
-
- 2 replies
- 156 views
- 1 follower
-