விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7880 topics in this forum
-
2026 ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட நேபாளம், ஓமான் தகுதி 16 Oct, 2025 | 08:10 PM (நெவில் அன்தனி) இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருடம் கூட்டாக நடத்தப்படவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்கு நேபாளம், ஓமான் ஆகிய நாடுகள் தகுதிபெற்றுள்ளன. ஆசிய பிராந்தியத்திலிருந்து மூன்றாவது நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் தகுதிபெறுவதற்கான வாயிலை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஓமானின் அல் அமீரத்தில் நடைபெற்றுவரும் ஆசிய - கிழக்கு ஆசிய பசுபிக் பிராந்திய ரி20 உலகக் கிண்ண தகுதிகாணின் சுப்பர் 6 சுற்று நிறைவடைவதற்கு முன்னரே நேபாளமும் ஓமானும் ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டுள்ளன. இந்த இரண்டு அணிகளும் சுப்பர் 6 சுற்றில் முதல் மூன்று இடங்களுக்…
-
-
- 105 replies
- 3.9k views
- 2 followers
-
-
3வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி. 23வது உலக கிண்ண கால்பந்து போட்டியானது வருகின்ற ஜீன் மாதம் 11ம் திகதி ஆரம்பமாகி ஜீலை மாதம் 19ம் திகதிவரை அமெரிக்கா, மெக்சிகோ,கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் பங்குபற்றும் 48 அணிகளில் இதுவரை 42 அணிகள் தகுதிப்பெற்று விட்டன, மீதமுள்ள 6 அணிகளை தேர்வு செய்வதற்கான கடைசி கட்ட தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டிருந்தன, ஓவ்வொரு பிரிவிலும் இரு அரையிறுதி போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றிப்பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடி அதில் வெற்றியாளராக மாறும் அணி உலக கோப்பை போட்டிற்குள் நுழையும். 4 முறை சம்பியனான இத்தாலி அணி இறுதிப்போட்டியில் பொஸ்னியா மற்றும் ஹெர…
-
- 2 replies
- 148 views
-
-
வைபவ் சூர்யவன்ஷி: இந்த 15 வயது வீரரை கிரிக்கெட் உலகம் ஏன் இனி புறக்கணிக்க முடியாது? பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். கட்டுரை தகவல் ஆனந்த் வாசு கிரிக்கெட் எழுத்தாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் உலகின் பெரும் பணக்கார கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சனிக்கிழமை மீண்டும் தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் மீது அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும். அதே சமயம், பலரது கண்கள் ஒரு இளம் சிறுவன் மீதும் இருக்கும். ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, மார்ச் 27 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயத…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
பெங்களூரு மைதானம் நிறைந்தாலும் இந்த 11 இருக்கைகள் காலியாக விடப்படுமா? ஆர்சிபி பரிசீலனை பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார், பிபிசி தமிழ் மற்றும் பிரதீப் கிருஷ்ணா, பிபிசி தமிழ் 26 மார்ச் 2026 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் நடக்கவிருக்கும் 2026 ஐபிஎல் தொடரின்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 'ஹோம் ஸ்டேடியம்' சின்னசாமி மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் 11 இருக்கைகள் காலியாக விடப்படுவது குறித்து ஆலோசித்து வருவதாக ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. 2025 ஐபிஎல் கோப்பை வென்றதற்கான கொண்டாட்டத்தின்போது சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். அவர்கள்…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
ஒலிம்பிக்கில் திருநங்கைகள் பங்கேற்க தடை Mar 26, 2026 - 09:03 PM 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிறைவேற்று உத்தரவுக்கு இணங்க, ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான பிரிவில் திருநங்கைகள் பங்கேற்பதைத் தடை செய்யும் புதிய தகுதிக் கொள்கையை சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் இப்புதிய கொள்கையின்படி, எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான பிரிவுகளில் பங்கேற்கும் தகுதியானது, உயிரியல் ரீதியான பெண்கள் (Biological females) என்ற அடிப்படையில் மட்டுமே வரையறுக்கப்படும். இதனை உறுதிப்படுத்த, ஆண் உயிரியல் பாலினத்தைக் கண்டறியும் மரபணுச் சோதனை போன்ற வைத…
-
- 1 reply
- 177 views
- 1 follower
-
-
யாழ்நகரில் சண். சுந்தரம் அவர்களின் முயற்சியால் ஓட்டப் பயிற்சிக் குழுமம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஓடுவதையும் உடல்நலத்தையும் விரும்பும் அனைவருகாகவும் உருவாக்கப்பட்ட இக் குழுமத்துடன் இணைந்து பயன்பெற விரும்புபவர்கள் தாராளமாகப் பங்குகொள்ளலாம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 6:00 மணிக்கு துரையப்பா விளையாட்டரங்கில் சந்தித்து ஒன்றாக ஓடலாம். நீங்கள் என்றுமே ஓடாத புதியவராக இருந்தாலும் தொடர்ந்து ஓடுபவராக இருந்தாலும் இக் குழுவில் சேரலாம். சண். சுந்தரம் அவர்களைப்பற்றிச் சுருக்கமாகக் கூறுவதானால், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் ஒரு சமூக ஆர்வலர், மனித உரிமை செயற்பாட்டாளர், ஓவியர், ... இரண்டு வாரங்களுக்கு முன் தனது 73 ஆவது வயதில் டோக்கியோவில் தனது ஆறாவது சர்வதேச மரதன் ஓ…
-
- 0 replies
- 222 views
-
-
பெண்கள் விளையாட்டில் தேசிய சூழலுடன் முரண்படும் தமிழ்நாடு: பிபிசி ஆய்வு கூறும் சிக்கலான உண்மைகள் பட மூலாதாரம்,Getty Images 21 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் இந்திய பெண்கள் விளையாட்டைப் பார்க்கும் விதத்தில் ஓர் அமைதியான, ஆனால் முக்கியமான மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையும், மகளிர் விளையாட்டுகளைப் பார்ப்போரின் எண்ணிக்கையும், அதை ஒரு தொழில்வாய்ப்பாகக் கருதும் மனப்போக்கும் அதிகரித்து வருவதாக பிபிசி மற்றும் கலெக்டிவ் நியூஸ்ரூம் இணைந்து வெளியிட்ட புதிய ஆய்வு கூறுகிறது. ஆனால், இந்த முன்னேற்றக் கதையின் நடுவில் ஒரு சிக்கலான உண்மையும் பொதிந்துள்ளது. பெண்கள் விளையாட்டுத் துறைக்குள் வந்துவிட்டார்கள், ஆனால் அவர்கள் முழுமையான சுதந…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
முவாய் தாய் உலக சம்பியன்ஷிப்பில் இலங்கை வீரர்களுக்கு 3 தங்கம்: நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு! 20 Mar, 2026 | 04:04 PM தாய்லாந்தில் நடைபெற்ற 7ஆவது 'முவாய் தாய்' உலக சம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் உட்பட 5 வெற்றிக் கிண்ணங்களைச் (சம்பியன் பட்டிகள்) சுவீகரித்த இலங்கை வீரர்கள் இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை நாடு திரும்பினர்.Geographic Reference தாய்லாந்து முவாய் தாய் விளையாட்டுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டி, அந்நாட்டின் பட்டாயா நகரில் கடந்த 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய 11 வயதுடைய செஹா…
-
- 0 replies
- 103 views
- 1 follower
-
-
‘குடி’யை நிறுத்திவிட்டேன் - சாஹல் ‘ஓபன் டாக்’ யுவேந்திர சாஹல் ஆர்.முத்துக்குமார் Updated on: 19 Mar 2026, 11:45 am 1 min read இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட லெக் ஸ்பின்னர் யுவேந்திர சாஹல் தன் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், குடிபோதை அவதி போன்றவை பற்றி மனம் திறந்துள்ளார். மதுபான பழக்கத்தை முழுமையாக கைவிட்டது தனது உடல் மற்றும் மனநிலைக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். 2023 முதல் ஐபிஎல் தொடரில் 172 போட்டிகளில் 221 விக்கெட்டுகளுடன் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான பவுலராகத் திகழ்கிறார் யுவேந்திர சாஹல். 2005 ஆஷஸ் தொடரை இழந்த பிறகு கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் ‘ஆல்கஹால் எனக்குப் பெரிய பிரச்சனை தான்’ என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். அது போன்ற …
-
- 1 reply
- 181 views
- 1 follower
-
-
புற்றுநோயால் போராடும் குழந்தைகளுக்கு 1996 உலகக்கிண்ண வீரர்கள் இணைந்து நம்பிக்கையை விதைத்த சிறப்பு நிகழ்வு 18 Mar, 2026 | 10:35 AM (இணையத்தள செய்திப் பிரிவு ) இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட்ட 1996 உலகக்கிண்ண வெற்றியின் 30ஆம் ஆண்டு நினைவாக, சிறப்பு நினைவுவிழா ஒன்று செவ்வாய்க்கிழமை (17) மஹரகமவில் அமைந்துள்ள Indira Cancer Trust வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு Sri Lanka Cricket Foundation மற்றும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் இணைப்பில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் அளிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. 1996 உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்ட அணியின் முக்கிய வீரர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இ…
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
யாழ். மத்திய அணி வீரர் நிதர்சன் 9ஆம் இலக்கத்தில் இரட்டைச் சதம் குவித்து வரலாறு படைத்தார் Published By: Vishnu 17 Mar, 2026 | 08:37 PM (நெவில் அன்தனி) இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்பட்டுவரும் இரண்டாம் பிரிவு பி அடுக்கு கிரிக்கெட் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர் ஜேசுதாசன் நிதர்சன் இரட்டைச் சதம் குவித்து சாதனை படைத்தார். நீர்கொழும்பு புனித பேதுருவானவர் கல்லூரி அணிக்கு எதிராக யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தனது அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தபோது 9ஆம் இலக்க வீரராக களம் புகுந்த நிதர்சன், எதிரணி பந்துவீச்சாளர்களை சிதறடித்து இரட்டைச் சதம் குவித்தார். இதன் மூலம் இரண்டாம் பிரிவுக்கான பி அடுக்கு பாடசாலை கிரிக்கெட் போட்…
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் இருண்டதாகத் தெரியவில்லை அழகன் கனகராஜ் இலங்கைத் தீவின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலிக்கும் ஒரே உணர்வு 'கிரிக்கெட்'. 1996-ஆம் ஆண்டு லாகூர் மைதானத்தில் அர்ஜுன ரணதுங்கவின் படை உலகக் கிண்ணத்தை ஏந்திய அந்தத் தருணம், ஒரு சிறிய தீவை உலக வரைபடத்தில் ஜொலிக்க வைத்தது. அன்று முதல் இன்று வரை, இலங்கை கிரிக்கெட் பல உச்சங்களையும் சரிவுகளையும் கண்டுள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் அத்திவாரம் மிக வலிமையானது. சனத் ஜயசூரியவின் அதிரடி, அரவிந்த டி சில்வாவின் நேர்த்தி, முத்தையா முரளிதரனின் மாயாஜால சுழல் என ஒவ்வொரு ஜாம்பவான்களும் உலக கிரிக்கெட்டைத் திரும்பிப் பார்க்க வைத்தனர். பின்னரான காலத்தில் குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோரின் அபாரமான துடுப்பாட்டமும், …
-
- 0 replies
- 98 views
- 1 follower
-
-
இந்திய அணி பாகிஸ்தான் சென்றிருந்த போது முஷரஃப் செய்த டெலிபோனால் கங்குலி அஞ்சியது ஏன்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ரஷித் ஷகூர் மூத்த விளையாட்டு செய்தியாளர், கராச்சி 14 மார்ச் 2026, 02:54 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் 1992 உலகக் கோப்பை வெற்றி பெற்ற அணியின் கேப்டனுமான இம்ரான் கான் தற்போது சிறையில் இருக்கிறார். சிறையில் அவரது கண் பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தி கிரிக்கெட் உலகிலும் பலரையும் கவலையில் ஆழ்த்தியது. இம்ரான் கானுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று குரல் எழுப்பியவர்களில் இந்தியாவின் முன்னாள் கேப்டன்களான சுனில் கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் உள்ளிட்ட14 மு…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் வீரரை வாங்கிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் ஏன் விவாதிக்கப்படுகிறார்? பட மூலாதாரம்,John Phillips - ECB/ECB via Getty Images படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் 'தி ஹண்ட்ரட்' தொடருக்கான ஏலத்தில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியுள்ளது, ஆனால் அதன்பிறகு சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. ரசிகர்கள் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறனை டிரோல் செய்து வருகின்றனர். இந்தப் போட்டி பிரிட்டனில் நடைபெறுகிறது, இதில் இந்தியர்களுக்குச் சொ…
-
-
- 3 replies
- 245 views
- 1 follower
-
-
15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின் கடந்த வருட வெற்றிக்கு பதிலடி கொடுக்குமா இந்து கொழும்பு? Published By: Vishnu 13 Mar, 2026 | 01:26 AM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் நடைபெற்ற இந்துக்களின் சமர் 14ஆவது அத்தியாயத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து அத் தோல்வியை நிவர்த்திசெய்யும் குறிக்கோளுடன் இராமநாதன் தேஷ்கர் தலைமையில் இந்து கல்லூரி கொழும்பு அணியும் தொடர்ச்சியான வெற்றிக்கு குறிவைத்து கடந்த வருட நாயகன் எஸ். சுபர்னன் தலைமையில் யாழ். இந்து கல்லூரி அணியும் 15ஆவது அத்தியாயத்தில் களம் இறங்கவுள்ளன. இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான 15ஆவது இந்துக்களின் சமர் இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டரங்கு பி. சரவணமுத்து (சரா) ஓவல் விளையாட்டரங்கில்…
-
- 4 replies
- 262 views
- 1 follower
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமனம் Mar 9, 2026 - 06:56 PM இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten) நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இந்த நியமனம் 2026 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடிப்பார். கேரி கிர்ஸ்டன் இதற்கு முன்னர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக (2008-2011) பணியாற்றி, 2011 இல் இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெல்ல வழிகாட்டினார். மேலும், தென்னாப்பிரிக்க அணியி…
-
- 1 reply
- 158 views
- 1 follower
-
-
புனித பத்திரிசியார் - யாழ்ப்பாணம் கல்லூரி மோதும் பொன் அணிகளின் சமருக்கு டயலொக் அனுசரணை Published By: Digital Desk 3 08 Mar, 2026 | 10:58 AM இலங்கையின் வட பகுதியில் பிரசித்திபெற்ற பாடாசலைகள் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான யாழ். புனித பத்திரிசியார் அணிக்கும் வட்டுகோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பொன் அணிகளின் சமர் இம் மாதம் 12, 13, 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இலங்கையின் முன்னணி இணைப்பு நிறுவனமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இப் போட்டிக்கு பிரதான அனுசரணை வழங்குவதுடன் இந்த வருடம் வட்டக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் பொன் அணிகளின் சமர் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட், டோக்கியோ சிமென்ட் நிறுவனம் ஆகியன இணை அனுசரணை வழங்குகின்றன. …
-
- 5 replies
- 341 views
- 1 follower
-
-
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார் Published By: Digital Desk 3 03 Mar, 2026 | 05:13 PM இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். சட்டத்தரணியும், கண்டியில் மதிப்புமிக்க சட்ட நிபுணராகவும் அறியப்பட்ட சங்கக்கார, தனது தொழில்முறை பணிகளால் சமூகத்தில் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார். அன்னாரது உடல் கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு 2026 மார்ச் 4 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு கண்டி மஹியாவ சேமக்காலையில் நடைபெறவுள்ளது. அன்னாரின் உடல் மாலை 4.30 மணிக்கு இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும் எனவ…
-
- 1 reply
- 132 views
- 1 follower
-
-
யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் ! யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான “வடக்கின் போர்” என்றழைக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப் போட்டி மார்ச் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த துடுப்பாட்ட போட்டி இம் மாதம் (மார்ச்) 119வது முறையாக நடத்தப்பட உள்ளது. 119வது போட்டியானது 2026 மார்ச் 5, 6 மற்றும் 7ஆந் திகதிளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, 23வது மட்டுப்படுத்தப்பட்ட பந்து வீச்சுக்கான (50 ஓவர்கள்) போட்டி 2026 மார்ச் 14ஆந் திகதியன்று புனித பரியோவான் கல்லூரி மைதானத்தில் நடைபெறும். வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட முதலாவது வடக்கின் போர் 1904 ஆம் ஆண்டில் நடைபெற்ற…
-
- 6 replies
- 393 views
- 1 follower
-
-
தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இன்று விடைபெறுகிறார் சனத்! Feb 28, 2026 - 08:33 AM இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்லேகலவில் இன்று (28) நடைபெறவுள்ள போட்டியே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய பயிற்சியாளராகப் பணியாற்றும் கடைசிப் போட்டியாகும். இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் தான் பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜயசூரிய இத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே உறுதிப்படுத்தியிருந்ததுடன், அந்தத் தீர்மானத்தில் அவர் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை. பதவி விலகல் தீர்மானம் குறித்து 'அத தெரண' விடுத்த வினவலுக்குப் பதிலளித்த அவர், தனது தலைமைப் பயிற்சியாளர் ஒப்பந்தக் காலம் மேலும் எஞ்சியிருந்த போதிலும், அந்த…
-
- 1 reply
- 154 views
- 1 follower
-
-
இலங்கை - இங்கிலாந்து போட்டியுடன் 2026 மகளிர் ரி20 உலகக் கிண்ணம் ஆரம்பம் 25 Feb, 2026 | 03:18 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்தில் இந்த வருடம் நடைபெறவுள்ள பத்தாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயம் இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் எஜ்பெஸ்டனில் ஜூன் 12ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த வருடம் 12 அணிகள் இரண்டு குழுக்களில் பங்குபற்றவுள்ளன. அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நெதர்லாந்து ஆகியன ஒரு குழுவிலும் மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, நடப்பு சம்பியன் நியூஸிலாந்து, இலங்கை, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகியன மற்றைய குழுவிலும் விளையாடவுள்ளன. இரண்டு குழுக்களுக்குமான முதல் சுற்று லீக் போட்டிகள் நிறைவில் முதல் இரண்டு …
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
மகளிர் ஆசிய கிண்ணம் எழுச்சி நட்சத்திரங்கள் ரி20 கிரிக்கெட்: பங்களாதேஷை வீழ்த்தி இந்தியா சம்பியனானது 23 Feb, 2026 | 04:26 PM (நெவில் அன்தனி) ஹொங்கொங் தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்றுவந்த 8 அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசிய கிண்ண எழுச்சி நட்சத்திரங்கள் (ரைசிங் ஸ்டார்ஸ்) கிரிக்கெட் தொடரில் இந்தியா சம்பியனானது. பாங்கொக் தேர்ட்தாய் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்தாடிய இந்தியா 46 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியனானது. தேஜல் ஹசாப்னிஸ், அணித் தலைவர் ராதா யாதவ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 69 ஓட்ட இணைப்பாட்டம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. அத்துடன் ப்ரேமா ராவத், தனுஜா கன்வார் ஆகிய…
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
பதும் நிசங்கா: "இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு இவர் கையில்" பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் வித்யுத் சிவராமகிருஷ்ணன் முன்னாள் கிரிக்கெட் வீரர் 50 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் 2026 டி20 உலகக் கோப்பையில் இலங்கையின் சூப்பர் 8 பிரிவு ஆட்டங்கள் பிப்ரவரி 22 முதல் தொடங்குகிறது. குரூப் சுற்றில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணி அடுத்ததாக அரையிறுதியைக் குறிவைக்கும். ஆனால், அது சாத்தியமா? மெல்ல சூடுபிடிக்கும் இங்கிலாந்து, எப்போதும் இந்த ஃபார்மட்டில் சிறப்பாக ஆடும் நியூசிலாந்து, எப்போது எப்படி ஆடும் என்று தெரியாத பாகிஸ்தான் என 3 பெரும் சவால்களை அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. அதில் 2 போட்டிகளை வெல்வது கடினமானது தான் என்றாலும், அது முடியாத காரி…
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
2024-ல் தகுதி கூட பெறாத ஜிம்பாப்வே இன்று சாம்பியன்களை வீழ்த்திய கதை பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 20 பிப்ரவரி 2026, 11:21 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் நடந்து கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பையில் அநேக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் அணி ஜிம்பாப்வே. யாரும் எதிர்பாராத வகையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அந்த அணி, பின்னர் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. வியாழக்கிழமை நடந்த கடைசி லீக் சுற்றுப் போட்டியில் இலங்கையையும் வீழ்த்தி பி பிரிவில் முதலிடம் பெற்று அசத்தியிருக்கிறது அந்த அணி. 2024 டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்றபோதும் ஜிம்பாப்வே அணியால் அதற்குத் தகுதி பெற முடியவில்லை. அ…
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
இத்தாலி குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தருணங்கள் - புகைப்படத் தொகுப்பு பட மூலாதாரம்,Christian Petersen படக்குறிப்பு,ஸ்டெல்வியோ ஆல்பைன் ஸ்கீயிங் மையத்தில் ஆண்களுக்கான ஒருங்கிணைந்த ஸ்லாலோம் போட்டியில் பங்கேற்ற அமெரிக்காவின் ரிவர் ராடமஸ். (பிப்ரவரி 9) ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இத்தாலியின் மிலன், கார்டினா நகரங்களில், 25வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள், 22ஆம் தேதி நிறைவு பெறுகின்றன. இந்த 25வது குளிர்கால ஒலிம்பிக்கில் 90 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 விளையாட்டு வீரர்கள், 116 பதக்கங்களுக்காக போட்டியிடுகிறார்கள். இதில் இந்திய அணியும் கலந்துகொள்கிறது. இந்தியா சார்பில் ஆரிஃப் முகமது கான், ஸ்…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-