விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம் ஐபிஎல் போட்டித் தொடரின் அணிகளில் ஒன்றாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் திகழ்கிறது. அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், அந்த அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். மேலும், டி20 போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். 42 வயதாகும் ஹாட்ஜ், ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் புகழ்பெற்ற பிக்பாஷ் டி20 லீக்கில் மெல்போர்ன் ரெனெடாக்ஸ் அணிக்காக அடுத்த சீசனில் களமிறங்கவுள்ளார். …
-
- 0 replies
- 254 views
-
-
விளையாட்டு கண்ணோட்டம் – பாகம் 06 தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வரலாறு படைத்த திஸர பெரேரா தலைமையிலான இலங்கை அணி, வருடத்தின் சிறந்த கால்பந்து வீரருக்கான பெலான் டி ஓர் விருதை 5ஆவது தடவையாகவும் தட்டிச்சென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட கிரிக்கெட், கால்பந்து மற்றும் ரக்பி களம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இந்த வார விளையாட்டு கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.
-
- 0 replies
- 381 views
-
-
'146 ரன்; 18 சிக்ஸர்' - டி20-யில் எதிரணியை மிரளவைத்த கெய்ல்! இந்தியன் பிரிமியர் லீக்கான ஐபிஎல் போல வங்கதேசத்தில் பங்களாதேஷ் பிரிமியர் லீக் (பிபிஎல்) தொடர் ஒவ்வோர் ஆண்டும் நடக்கிறது. வங்க தேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரின் இறுதி ஆட்டம் இன்று தாக்கவில் நடந்து வருகிறது. இதில், தாக்கா டைனமைட்ஸ் மற்றும் ராங்பூர் ரைடர்ஸ் ஆகிய அணிகள் கோப்பைக்கு போட்டா போட்டிப் போட்டு வருகின்றன. இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற தாக்கா டைனமைட்ஸ், ரைடர்ஸை பேட்டிங் ஆடச் சொல்லி பணித்தது. அந்த அணி சார்பில், கிறிஸ் கெய்ல், தொடக்க வீரர்களில் ஒருவராகக் களமிறங்கினார். கடைசி வரை நின்றாடிய கெய்ல், 69 பந்துகளுக்…
-
- 4 replies
- 698 views
-
-
'ஓய்வு நெருங்கியுள்ளதால் இறுதிப் போட்டிகளை அனுபவித்து விளையாடுவேன்" என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. இதனால் என்னுடைய இறுதிப் போட்டிகள் சிலவற்றை அனுபவித்து விளையாடுவேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீற்றர்சன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ‘பிக் பாஷ்’ இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடருடன் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெறவுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரராக திகழ்ந்த 37 வயதான கெவின் பீற்றர்சன், அந்நாட்டு கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப்பின் சர…
-
- 0 replies
- 376 views
-
-
UEFA சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றில் பரபரப்பு போட்டிகள் Getty Images உக்ரைனின் கீவ் நகரில் நடைபெறவுள்ள UEFA சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் மோதும் சுற்றுக்கான போட்டிகள் விபரம் இன்று (11) வெளியானது. இதன்மூலம் இந்த சுற்றில் பரபரப்பான சில முக்கிய போட்டிகள் இடம்பெறவுள்ளன. UEFA சம்பியன்ஸ் லீக்கின் இந்த ஆண்டு குழு நிலைப் போட்டிகளில் இரு முக்கிய சாதனைகள் படைக்கப்பட்டன. ரியல் மெட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ அனைத்து குழு நிலைப் போட்டிகளிலும் கோல் பெற்ற முதல் வீரராக சாதனை படைத்தார். பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (PSG) குழுநிலையில் மொத்தம் 25 கோல்களை போட்டு அதிக கோல்கள் பெற்ற அணியாக சாதனை படைத்தது. முன்னர் 21 கோல்கள் போட்ட போர்ஷியா டொர்மு…
-
- 1 reply
- 335 views
-
-
இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி 15 வயதின் கீழான டிவிஷன் – III பாடசாலை அணிகளுக்கு இடையிலான “சிங்கர் கிண்ண” மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியொன்றில் மொரட்டுவ ஸ்ரீ சந்திரசேகர மஹா வித்தியாலய அணி யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி அணியை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கின்றது. கண்டி பல்லேகல சிறைச்சாலை மைதானத்தில் திங்கட்கிழமை (11) தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்ரீ சந்திரசேகர வித்தியாலய அணி யாழ்ப்பாண இளம் வீரர்களுக்கு முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை வழங்கியது. இதன்படி களமிறங்கிய யாழ்ப்பாண சென் ஜோன்ஸ் கல்லூரி அணியி…
-
- 0 replies
- 661 views
-
-
டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கிறது நாளை நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்குகிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், வெலிங்டனில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது. சர்வதேசக் கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் நான்காமிடத்தில் நியூசிலாந்து இருப்பதுடன், எட்டாமிடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் காணப்படுகின்ற நிலையில் இத்தொடரின் முடிவு தரவரிசையில் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்தாது என்றபோதும் 1995ஆம் ஆண்டு பெப்ரவரிக்கு பிறகு நியூசிலாந்தில் டெஸ்ட் போட்டியொன்றை வெல்லாத மேற்கிந்தியத் தீவுகள், 22 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிபெற எதிர்பார்க்கிறது. மறுப…
-
- 9 replies
- 727 views
-
-
இங்கிலாந்து அணியின் ‘குடி’ பிரச்சினை ஜோக் அல்ல: ஆஸி.பயிற்சியாளர் டேரன் லீ மேன் டேரன் லீ மேன். - கோப்புப் படம். | கே.முரளி குமார் இங்கிலாந்து பந்து வீச்சு சாதனையாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தலையில் மதுவை ஊற்றிய சக வீரர் பென் டக்கெட், 2 நாள் பயிற்சி ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டதையடுத்து இங்கிலாந்தின் இந்தப் பிரச்சினை சிரிப்பதற்குரியதல்ல என்று கூறியுள்ளார் ஆஸி. பயிற்சியாளர் டேரன் லீ மேன். கடந்த செப்டம்பரில் பிரிஸ்டலில் மதுபான விடுதி அருகே பென் ஸ்டோக்ஸ் குடித்துவிட்டு இருவர் மீது பலப்பிரயோகம் செய்தது பிரச்சினையாகி இன்னமும் முடியாத நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது டக்கெட் மது ஊற்றி விளையாடும் சம்பவம் நடந்துள்ளது. இன்ன…
-
- 0 replies
- 349 views
-
-
2023 உலகக்கோப்பை கிரிக்கெட், 2021 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவில் நடைபெறுகிறது உலகக்கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணி. - படம். | ஐசிசி. 2023-ம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் 2021-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் நடைபெறுகிறது. பிசிசிஐ இதனை சிறப்பு பொதுக்கூட்டத்தில் உறுதி செய்தது. முதல் முறையாக முழுதும் இந்தியாவே ஏற்று நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட்டாகும் இது, இதற்கு முன்னதாக, நடைபெற்ற 1987, 1996, 2011 ஆகிய உலகக்கோப்பைகளை இந்தியா மற்ற நாட்டு வாரியங்களுடன் சேர்ந்தே நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2023-ல் முதல்முறையாக தனித்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்துகிறது. அதேபோல் 2021 சாம்…
-
- 0 replies
- 324 views
-
-
ஜஸ்ப்ரீத் பும்ராவைச் சந்திக்க முடியாத ஏக்கத்தில் தாத்தா மரணம்! இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் தாத்தா சந்தோக் சிங், சபர்மதி ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஜஸ்ப்ரீத் பும்ராவைப் பார்க்க அகமதாபாத்துக்கு வந்த அவரை ஜஸ்ப்ரீத் பும்ராவின் தாயார் தல்ஜித் சிங் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வெள்ளிக்கிழமையில் இருந்து சந்தோக் சிங் காணாமல் போனார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சபர்மதி ஆற்றில் அவர் சடலமாக மிதந்துள்ளார். குஜராத்தின் மிகச்சிறந்த வர்த்தகராக திகர்ந்த சந்தோக் சிங்கின் வியாபாரம் நஷ்டத்தைச் சந்தித்தையடுத்து, ஆட்டோ ஓட்டி பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆங்கில நாளிதழ் ஒன்ற…
-
- 0 replies
- 350 views
-
-
வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டனானார் ஷகிப் அல் ஹசன் Chennai: வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டனாக, ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கத் தொடரில், வங்கதேச அணி மிகமோசமாக செயல்பட்டு, அனைத்து ஃபார்மட்களிலும் வைட்வாஷ் ஆனதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஷகிப் இதற்கு முன்பே 2009, 2010 ஆண்டுகளில் 9 டெஸ்ட் போட்டிகளில், வங்கதேச அணிக்குக் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். அப்போது 8 போட்டிகளில் அணி தோற்றுவிட, அன்றைய வங்கதேச கிரிக்கெட் சங்கத் தலைவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டாலும், இவரது பதவி பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர் முஸ்ஃபிகூர் ரஹ்மான் அணியின் கேப்டனாகப் பதவியேற்றார். அவரது தலைம…
-
- 0 replies
- 420 views
-
-
2020-க்குப் பிறகு ஐ.பி.எல். தொடரின்போது சர்வதேச போட்டிகளில் கிடையாது: பிசிசிஐ முயற்சி ஐ.பி.எல். தொடரின்போது வெளிநாட்டு அணிகளுக்கு இடையிலான இருநாட்டு சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 20 ஓவர்கள் கொண்ட இந்த லீக்கிற்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஐ.பி.எல். கடந்த 10 வருடங்களாக ரசிகர்களின் பேராதரவோடு வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது. அடுத்த வருடம் 11 சீசன் நடைபெற இருக்கிறது. ஐ.பி.எல். …
-
- 0 replies
- 268 views
-
-
இலங்கை அணியின் புதிய விடியல் தனஞ்ஜெயா தனஞ்ஜெயா டி சில்வா - PTI இந்திய மண்ணில் அதிலும் 4-வது இன்னிங்ஸில் 100 ஓவர்களுக்கும் மேலாக எதிர்கொண்டு டெல்லி பெரோஷா கோட்லா டெஸ்ட் போட்டியை கடைசி நாளின் இறுதி மணித்துளிகள் வரை கொண்டு சென்று டிரா செய்து வியக்க வைத்துள்ளது இலங்கை அணி. பலவீனமான அணி என வர்ணிக்கப்பட்ட இலங்கை, இந்திய மண்ணில் 4-வது இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்களை (295) குவித்தும் சாதனை படைத்துள்ளது. இலங்கை அணி இந்த டெஸ்ட் போட்டியை காற்று மாசுபாட்டின் ஊடாகவே சந்தித்திருந்தது. காற்று மாசால் சில வீரர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு களத்திலும், ஓய்வறையிலும் வாந்தி எடுத்தனர். ஒட்டுமொத்த அணியும் முகமூட…
-
- 0 replies
- 437 views
-
-
ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கு போராடும் சந்திமாலின் எதிர்பார்ப்பு இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் இரு அணிகளினதும் தலைவர்களின் சிறப்பான ஆட்டம் மற்றும் வழிநடத்தலால் விறுவிறுப்புடன் நிறைவுக்கு வந்தது. இதில் இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டாலும், அண்மைக்கால ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்ற காரணத்தால் இந்திய அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக ஓட்டக்குவிப்பில் அசத்தி வருகின்ற சந்திமால், ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்காக…
-
- 0 replies
- 275 views
-
-
உடற்பயிற்சியும், உபாதையும் விளையாட்டில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்? அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணி மிக மோசமான சரிவுப் பாதையில் பயணிக்கின்றமை யாவரும் அறிந்த உண்மை. அத்தகைய வீழ்ச்சிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் வீரர்களின் தொடர்ச்சியான உபாதைகளினால் ஒரு நிலையான அணியை தெரிவு செய்ய முடியாமல் போனமையும் ஒரு முக்கிய காரணம் என்பது நிதர்சன உண்மையாகும். பொதுவாக உலக விளையாட்டு அரங்கினை நோக்கும்போது அவ்விளையாட்டுக்களில் ஜாம்பவான்களாக கொடி கட்டிப் பறந்த மற்றும் பறக்கின்ற பல வீரர்களை நோக்கினால், அவர்கள் உடல் உபாதைகளுக்கு உள்ளாகும் வீதம் மிக மிகக் குறைவு. அதற்கு உதாரணங்களாக இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் விராத் கோஹ்லி, கால்பந்து உலக…
-
- 0 replies
- 553 views
-
-
51 பந்துகளில் 126 ரன்கள், 14 சிக்ஸ், 6 பவுண்டரி: கிறிஸ் கெய்ல் மேஜிக் கிறிஸ் கெய்ல். - படம். | கெட்டி இமேஜஸ். வங்கதேச பிரீமியர் லீக், டாக்காவில் நடைபெற்ற டி20 போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக ஆடிவரும் கிறிஸ் கெய்ல், குல்னா டைட்டன்ஸ் பந்து வீச்சை புரட்டி எடுத்து அதிரடி சதம் கண்டார். இதனால் ரங்பூர் ரைடர்ஸ் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 15.2 ஓவர்களில் இலக்கை ஊதித்தள்ளியது. முதலில் பேட் செய்த குல்னா 6 விக், இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ரங்பூர் அணியில் மலிங்கா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மஷ்ரபே மோர்டசா 4 ஓவர்களில் 23 ரன்களையே விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டினார். இந்தச் சதம் பங்களாதேஷ் பிரீமியர் லீ…
-
- 2 replies
- 812 views
-
-
பார்முலா-1 கார்பந்தயம்: உலக சாம்பியன்ஷிப் மகுடத்தை சூடினார் லிவீஸ் ஹாமில்டன் பிரான்சில் உள்ள அரண்மனையில் பார்முலா-1 கார்பந்தய வீரரான லிவீஸ் ஹாமில்டனுக்கு உலக சாம்பியன்ஷிப் டிராபி வழங்கப்பட்டது. பாரிஸ்: கார்பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா 1’ கார்ப்பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான பார்முலா ஒன் சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து வீரரான ஹாமில்டன் பட்டம் வென்றார். 32 வயதான ஹாமில்டன் பார்முலா1 சாம்பியன்ஷிப் பட்டத்தை ருசிப்பது இது 4–வது முறையாகும். ஏற்கனவே 2008, 2014, 2015 ஆண்டுகளிலும் அவர் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தா…
-
- 0 replies
- 279 views
-
-
பெண்கள் பிக் பாஷ்: சிட்னி சிக்சர்ஸ் வீராங்கனை 47 பந்தில் அதிரடி சதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்கள் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் வீராங்கனை 47 பந்தில் அதிரடி சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சிட்னி சிக்சர்ஸ் அணியின் அலிசா ஹீலி, எலிசே பெர்ரி ஆகியோர் த…
-
- 0 replies
- 387 views
-
-
ஐந்தாவது முறையாக சிறந்த கால்பந்து வீரர் விருதைவென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ! உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் Ballon d’Or விருதை போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்தாவது முறையாக வென்றிருக்கிறார். Photo Credit: Twitter/Cristiano கால்பந்து அரங்கில் மிகவும் மதிக்கப்படும் விருதுகளில் இந்த விருது முக்கியமானது. 32 வயதான ரொனால்டோ ஏற்கெனவே, இந்த விருதை 2008, 2013, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் வென்றிருந்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியை முந்தி சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றிருக்கிறார் ரொனால்டோ. இதன்மூலம், அதிக முறை (5)…
-
- 2 replies
- 774 views
-
-
மும்பை ஐபிஎல் அணியை விட்டு விலகினார் ஜான்டி ரோட்ஸ்! புதிய பயிற்சியாளர் நியமனம்! கடந்த 9 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த 48 வயது ஜான்டி ரோட்ஸ், சொந்தக் காரணங்களுக்காக அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து நியூஸிலாந்தின் ஜேம்ஸ் பம்மெண்ட் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஈடுபட்டு வரும் வியாபாரம் தொடர்பான பணிகளுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக ரோட்ஸ் கூறியுள்ளார். 2009 முதல் மும்பை ஐபிஎல் அணிக்காகப் பணியாற்றியுள்ள ரோட்ஸ் குறித்து அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியதாவது: மும்பை அண…
-
- 0 replies
- 248 views
-
-
இம்மாத இறுதியிலிருந்து ஹத்துருசிங்க இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை சந்திக்க ஹத்துருசிங்க இம்மாத இறுதியில் ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் தலைமைப் பயிற்சியாளராகவிருந்த கிரஹம் போர்ட், சம்பியன்ஸ் கிண்ணத் தொடருடன் இராஜினாமா செய்ததையடுத்து நிரந்தர தலைமைப் பயிற்சியாளர் இல்லாமல் இலங்கை அணி தொடர்களில் பங்கேற்று வருகிறது. இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சந்திக்க ஹத்துருசிங்கவை இலங்கை அணுகியது. தற்போது ஹத்துருசிங்கவும் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இம்மாத இறுதியில் அவர் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.…
-
- 1 reply
- 612 views
-
-
2019 வரை திஸரதான் தலைவர் : மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் அமைச்சர் ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு அணித் தலைவரை நியமிக்கும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அத்தோடு எதிர்வரும் 2019ஆம் ஆண்டுவரை திஸர பெரேராவே தலைவராக நீடிப்பார் என்றும் அவர் தலைமையிலான உலகக் கிண்ண அணியை உருவாக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக் கிரிக்கெட் அணி தற்போது கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. அடுத்தடுத்த பல தோல்விகளால் அணி ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் மூன்றுவகை கிரிக்கெட் …
-
- 0 replies
- 270 views
-
-
பொரிசியா டொட்டமுண்டை வென்றது றியல் மட்ரிட் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கின் குழுநிலைப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், றியல் மட்ரிட், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், லிவர்பூல் ஆகிய அணிகள் வென்றுள்ளதுடன், மன்செஸ்டர் சிற்றி, நாப்போலி, மொனாக்கோ ஆகிய அணிகள் தோற்றுள்ளன. ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், 3-2 என்ற கோல் கணக்கில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரிசியா டொட்டமுண்டை வென்றது. றியல் மட்ரிட் சார்பாக பொர்ஜா மயோரல், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகாஸ் வஸ்கூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். பொரிசியா டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் பியரி எம்ரிக் அபுமெயாங் பெற்றார். இங்கிலாந்து…
-
- 2 replies
- 340 views
-
-
தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்! இரண்டு ஆண்டுகள் தடை முடிந்து வரும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கத் தயாராகி வருகிறது. ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த இரண்டு அணிகளும் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கத் தடை விதித்து கடந்த 2015-ல் உத்தரவிட்டது. இந்தத் தடை கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில…
-
- 1 reply
- 650 views
-
-
இந்தியாவுடனான தொடரில் மெதிவ்ஸ், அசேல மற்றும் குசல் இலங்கை அணியில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள இந்திய அணியுடனான போட்டித் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகிய வீரர்கள் மீண்டும் களமிறங்கவுள்ளதாக இலங்கை ஒரு நாள் அணியின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவுக்கு வந்த பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 போட்டித் தொடர் குறித்து ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடு இன்று (31) இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றது. இதில் ஊடகவியலாளர் ஒருவர் எழு…
-
- 64 replies
- 6k views
-