விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
‘அவுட் ஆவார் போல் தெரியவில்லை’: ரோஹித் ட்வீட்டும், சச்சின் சாதனையை முறியடித்த ஸ்மித்தும் பெர்த்தில் இரட்டைச் சதம் விளாசிய ஸ்மித். - படம். | ராய்ட்டர்ஸ். பெர்த் டெஸ்ட் போட்டியில் 3-ம் நாளான இன்று தனது 22-வது டெஸ்ட் சதத்தை எடுத்ததில் ஸ்மித், மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது சச்சின் டெண்டுல்கர் 114 இன்னிங்ஸ்களில் 22 டெஸ்ட் சதங்களை எடுத்தார், ஸ்மித் 108-வது இன்னிங்ஸில் 22-வது சதத்தை எடுத்து முறியடித்தார். முதலிடத்தில் 58 இன்னிங்ஸ்களீல் 22 சதங்களை எடுத்த டான் பிராட்மேனும், 101 இன்னிங்ஸ்களில் எடுத்த சுனில் கவாஸ்கர் 2-ம் இடத்திலும் உள்ளனர். ‘அருமையான …
-
- 0 replies
- 765 views
-
-
மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்துள்ளது. இலங்கை அணியின் ஒட்டுமொத்த போட்டிகளுக்கான தலைவராக செயற்பட்டுவந்த மெத்தியூஸ் கடந்த வருடம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரையடுத்து தனது இராஜினாமாவை அறிவித்தார். பின்னர் இலங்கை அணியின் டெஸ்ட் தலைவராக தினேஸ் சந்திமால் தெரிவுசெய்யப்பட்டதுடன், ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளின் தலைவராக உபுல் தரங்க தெரிவுசெய்யப்பட்டார். …
-
- 0 replies
- 500 views
-
-
என் மாமியார் கணித்துக் கூறிய புகழ்பெற்ற கொல்கத்தா டெஸ்ட் வெற்றி: கங்குலி ருசிகர பதிவு கொல்கத்தாவில் ஆஸி.அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் சவுரவ்கங்குலி, ஹர்பஜன் சிங் - படம் உதவி: கெட்டி இமேஜஸ் 2001ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மறக்க முடியாத, டெஸ்ட் போட்டி வெற்றியை முன்கூட்டியே எனது மாமியார் கணித்துக் கூறினார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடந்த 2-வது டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் யாராலும் மறந்திருக்க முடியாது. …
-
- 0 replies
- 396 views
-
-
பேட்டிங் உத்தியை மாற்றிக் கொள் என்று யாரேனும் கூறினால் என்னிடம் பேசச்சொல்: பிரித்வி ஷாவிடம் கூறிய சச்சின் டெண்டுல்கர் பிரித்வி ஷா, சச்சின். | படம்: பிடிஐ. இந்திய அணிக்கு புதிய தொடக்க வீரராக களம் காணவிருக்கும் பிரித்வி ஷாவின் பேட்டிங்கை ஏற்கெனவே பலரும் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். இந்நிலையில் பிரித்வி ஷா-வின் பேட்டிங் திறமை பற்றி ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து பேசியுள்ளார். பிரித்வி ஷாவுக்கு 8 வயதாக இருக்கும் போதே, பிர்த்வி ஷா-வின் இயற்கையான உத்தியை எந்த ஒரு பயிற்சியாளரும் மாற்றக்கூடாது என்று தெரிவித்திருப்பது இப்போது சச்சின் டெண்டுல்கர் வாயாலேயே வெளிவந்துள்ளது. …
-
- 0 replies
- 320 views
-
-
111 ஓவர்களில் 562 ரன்கள் விளாசித் தள்ளிய ஆஸ்திரேலியா எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிராக பந்தை வெளுத்து வாங்கும் மிட்செல் மார்ஷ். | படம்: ராய்ட்டர்ஸ். செம்ஸ்போர்டில் நடைபெறும் எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 111 ஓவர்களில் 562 ரன்களை விளாசி தள்ளியது. நேற்று தொடங்கிய இந்த 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற எஸ்ஸெக்ஸ் அணியின் கேப்டன் ரவி பொபாரா முதலில் ஆஸ்திரேலியாவை தெரியாமல் களமிறக்கி விட்டார். ஆனால் எஸ்ஸெக்ஸ் பந்து வீச்சு அவ்வளவு பலமானது அல்ல என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும், ஜே.ஏ.போர்ட்டரை விட்டால் அடுத்த முனையில் நியூஸிலாந்தின் ஜெஸ்ஸி ரைடர் பந்து வீசினார். சாலிஸ்பரி, வெஸ்ட்லி, ரியான் டென் டஸ்சாதே, நிஜ்ஜர், பிரவுன் என்று 8 பவுலர்கள் …
-
- 0 replies
- 323 views
-
-
ஐ.பி.எல். தொடரில் சென்னை, ராஜஸ்தானுக்கு பதிலாக கொச்சி, புனே அணிகள் ! அடுத்த ஐ.பி.எல். தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக கொச்சி மற்றும் புனே அணிகள் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2013 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை அணியின் முன்னாள் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களுல் ஒருவரான ராஜ் குந்ராவுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கும் 2 ஆண்டுகள் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அடுத்த இரு சீசன்களில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக கொச்சி டஸ்கர்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிகளுக்கு விளையாட வாய்ப…
-
- 0 replies
- 234 views
-
-
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்தியத் தீவுகள் அணி மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இலங்கை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக ஜோசன் ஹோல்டர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கை வந்தடையும். அதைத் தொடர்ந்து 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை 3 நாள் பயிற்சிபோட்டியில் விளையாடவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி 14ஆம் திகதி முதல் 18ஆம்திகதிவரை காலியிலும்இ இரண்டாவது டெஸ்ட் போட்டி 22ஆம் திகதி முதல் 26ஆம் திக…
-
- 0 replies
- 216 views
-
-
400 மீற்றர் தடை தாண்டல் மத்திக்கு வெற்றி October 14, 2015 இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட தடகளத்தொடரில் தடைதாண்டலில் யாழ். மத்திய கல்லூரிக்கு வர்ணச் சான்றிதழ் கிடைத்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 400மீற்றர் தடைதாண்டலில்; யாழ். மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்ததே. செந்தூர்ஜன் 56.95 செக்கன்களில் தடைகளைத்தாண்டி வர்ணச் சான்றிதழைப் பெற்றார். http://www.onlineuthayan.com/sports/?p=2051
-
- 0 replies
- 335 views
-
-
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்காக இந்தியா வர பாகிஸ்தான் வீரர்கள் மறுக்கலாம் ! மும்பையில் நடைபெற இருந்த இந்திய –- பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை சிவசேனா போராட்டத்தால் ரத்து செய்யப்பட்டது. மேலும், சிவசேனா மிரட்டலால் ஐ.சி.சி. தங்களது நடுவரான அலீம் தாரை திரும்பப்பெற்றது. இந்த செயல்களால் பி.சி.சி.ஐ. தர்மசங்கடத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவிருக்கும் இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட வரவிருக்கும் பாகிஸ்தான் வீரர் கள் மறுப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக ஐ.சி.சி. தலைவர்களில் ஒருவரும்இ பாகிஸ்தான் முன்னாள் வீரருமான ஸாஹிர் அப்பாஸ் தெரிவித்த…
-
- 0 replies
- 191 views
-
-
பிபா தலைவர் தேர்தல் பிளாட்டினிக்கு மறுப்பு November 14, 2015 சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (பிபா) தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதப்பகதியில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த தலைமைப் பதவிக்கான வேட்பாளர்களில் ஒரவரான பிளாட்டினியின் விண்ணப்பம் பிபாவால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பிபா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊழலில் சிக்கி தவித்தது. இந்த ஊழல் தொடர்பாக அமைப்பின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அதன் தலைவரான செப் பிளாட்டரும் சங்கடத்திற்கு உள்ளானார். ஆனால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மீறி சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற தேர்தலில் 5ஆவது முறையாக வெற்றி பெற்றார். ஆனால், பிபா தலைவர் பதவியில் இருந்து பிளாட்டர் விலக வேண்டும் என்று …
-
- 0 replies
- 317 views
-
-
புனே, இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் அரைஇறுதி சுற்றில் சென்னை அணி 3–0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை நொறுக்கியது. சிலிர்க்க வைத்த கோல் 2–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் தற்போது அரைஇறுதி சுற்று நடந்து வருகிறது. ஒவ்வொரு அரைஇறுதியும் இரண்டு ஆட்டங்கள் கொண்டதாகும். இதில் புனேயில் நேற்று இரவு அரங்கேறிய அரைஇறுதியில் புள்ளி பட்டியலில் 2–வது இடத்தை பிடித்த நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டீ கொல்கத்தாவும், 3–வது இடத்தை பெற்ற சென்னையின் எப்.சி.யும் கோதாவில் இறங்கின. இரு அணி வீரர்களும் சம பலத்துடன் ஆக்ரோஷமாக களத்தில் செயல்பட்டனர். 37–வது நிமிடம் வரை கோல் இல்லாத நிலைமையே காணப்பட்டது. 38–வது நிமி…
-
- 0 replies
- 510 views
-
-
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ மற்றும் 137 ஓட்டங்களினால் வெற்றிகொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்தியா- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி, புனேவில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 601 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. மயங்க் அகர்வால் 108 ஓட்டத்தையும் ரவீந்திர ஜடேஜா 91 ஓட்டத்தையும் எடுத்தனர். விராட் கோலி 254 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 275 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. முதல் இன்னிங்சில் 326 ஓட்ட…
-
- 0 replies
- 857 views
-
-
சின்னச் சின்னதாய் செய்திகள்: ‘2024 ஒலிம்பிக்’ 4 நகரம் விருப்பம் பாரிஸ், ரோம், லாஸ் ஏஞ்சல்ஸ், புதாபெஸ்ட் என நான்கு நகரங்கள் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த ஆர்வம் காட்டியுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. 2024ம் ஆண்டு போட்டியை நடத்தும் நகரத்தை தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பு 2017ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி பெருநாட்டின் லிமா நகரில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் விஜேந்தர் போட்டி உலக குத்துச்சண்டை அமைப்பு சார்பில் ஆசிய பட்டத்துக்கான போட்டி இந்தியாவில் வரும் ஜூன் மாதம் நடத்தப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான விஜேந்தர் சிங் கலந்துகொள்கிறார். …
-
- 0 replies
- 314 views
-
-
ஓய்வுக்கு தயாராகும் ஹேரத் March 26, 2016 டி20 உலகக்கிண்ண தொடர் முடிந்த உடன் ஓய்வு பற்றிய முடிவை எடுக்க உள்ளதாக இலங்கை அணியின் முன்னணி சுழல் வீரர் ரங்கண ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போதைய இலங்கை அணி அனுபவமற்ற இளம் வீரர்களால் தடுமாறி வருகிறது. இலங்கை அணியின் இரு தூண்களாக விளங்கிய சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோரின் ஓய்வையே இன்னும் சரிகட்டவில்லை. இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரரான ரங்கண ஹேரத் (38 வயது) ஓய்வு பெறும் முடிவில் இருக்கிறார். அவர் கூறுகையில், “நான் ஒரு சில விடயங்களை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். இப்போதைக்கு எனது முழுகவனமும் டி20 உலகக்கிண்ணத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே. அதேசமயம் இந்த தொடர் முடிந…
-
- 0 replies
- 1.2k views
-
-
சச்சினுடன் வளர்ந்தோம் சித்தார்த்தா வைத்தியநாதன் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்து ஓய்வெடுத்துவிட்டார். இது உங்களை எந்தவிதத்திலாவது பாதிக்கிறதா? அவர் ஓய்வுபெற்ற நாளன்று மரத்துப் போன உணர்வு தோன்றியதா? இறப்பதற்கு முன் தோன்றும் என்கிறார்களே அதுபோல், உங்கள் வாழ்வின் பல தருணங்கள் உங்கள் மனக்கண்ணில் பளிச்சிட்டனவா? 23 வருடங்களுக்கு முன்பான ஒரு நாள் ஆட்டங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? காலத்தில் பின்னோக்கிப் போய்ப் பாருங்கள்… என்ன தெரிகிறது? சிவப்புத் தோல் பந்துகள், வெள்ளை ஆடை அணிந்த வீரர்கள், இங்கிலாந்தில் அவ்வப்போது நடத்தப்படும், நடுவர்கள் தேநீர் குடிப்பதற்காக ஆட்டத்தை நிறுத்தும் சில ஒரு நாள் பந்தயங்கள். வேறென்ன தெரிகிறது? …
-
- 0 replies
- 427 views
-
-
விரைவாக ரன்களை எடுக்க புஜாராவை வலியுறுத்தினோம்: விராட் கோலி படம்.| கே.பாக்யபிரகாஷ். டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து தானும் அனில் கும்ப்ளேவும் புஜாராவிடம் விவாதித்து அவர் வேகமாக ரன்களை எடுக்க வேண்டியுள்ளதை வலியுறுத்தினோம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். மே.இ.தீவுகளுக்கு எதிரான சமீபத்திய தொடரில்தான் சர்ச்சைக்குரிய முறையில் புஜாரா உட்கார வைக்கப்பட்டு ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார். புஜாரா அங்கு 67 பந்துகளில் 16 ரன்களையும் பிறகு 159 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இந்த இரண்டும் கேப்டனையும், கும்ப்ளேவையும் அதிருப்திக்குள்ளாக்கியது. எந்தவொரு ‘நட்சத்திர’ வீரரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடத்தேர…
-
- 0 replies
- 343 views
-
-
ஸ்ரீலங்கா கிரிக்கெட் டயலொக் தேசிய விருது விழா 2016; தனஞ்செய, ஷஷிகலா அதி சிறந்த சகலதுறை வீர, வீராங்கனை 2016-12-21 10:56:26 இலங்கையில் நடத்தப்படும் ப்றீமியர் லீக் பிரதான கிரிக்கெட் போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த சகலதுறை வீரருக்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட் டயலொக் தேசிய விருதை தமிழ் யூனியன் கழக வீரர் தனஞ்செய டி சில்வா வென்றெடுத்தார். ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 65 வருடங்களின் பின்னர் சம்பியனான தமிழ் யூனியன் கழகம் சார்பாக கித்ருவன் வித்தானகே, டயலொக் வெற்றி விருதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவிடமிருந்து பெறுகின்றார். …
-
- 0 replies
- 262 views
-
-
இலங்கை அணிக்கு பயிற்சியளிக்க வருகிறார் அலன் டொனால்ட் இலங்கைக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அலன் டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவித்தலை இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது. எதிர்வரும் ஜுன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடர் வரையே அலன் டொனால்ட் இலங்கை அணிக்கு ஆலோசகராக செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 50 வயதாகும் அலன் டொனால்ட் தென்னாபிரிக்க அணியில் 1992ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட…
-
- 0 replies
- 367 views
-
-
40 வயதிற்குப் பிறகு 2000 ஆயிரம் ரன்னுக்கு மேல் அடித்து சாதனைப் படைத்த மிஸ்பா பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் 40 வயதிற்கு மேல் 2000 ஆயிரம் ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பவர் மிஸ்பா உல் ஹக். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நடைபெற்று வரும் 3-வது டெஸ்டின் இன்றைய கடைசி ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். தற்போது மிஸ்பா உல் ஹக்கிற்கு 42 வயது 351 நாட்கள் ஆகிறது. பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 2001-ம் ஆண்டு தனது 25 வயதில் அறிமுகமானார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டெஸ்ட் உடன் 75 டெஸ்ட…
-
- 0 replies
- 421 views
-
-
இந்திய உள் நாட்டு கிரிக்கெட் அணிகளின் டெஸ்ட் அங்கீகாரமும் ஈழத்துக் கிரிக்கெட் அணியும் வினையூக்கி பன்னாட்டு கிரிக்கெட் மன்றத்தின் (ICC) விதிகளின் படி, அதன் துணை / இணை உறுப்பினராக , ஒரு நாட்டைச் சார்ந்த கிரிக்கெட் வாரியமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை . கிரிக்கெட்டிற்காக ஒருங்கிணைந்த நாடுகளின் கூட்டு வாரியமாகவோ கிரிக்கெட் கட்டுமானம் சரியாக அமைந்து, புவியியல் அமைப்பைச் சார்ந்து இருக்கும் வாரியமாகக் கூட இருக்கலாம். (may be from a country, or countries associated for cricket purposes, or a geographical area where cricket is firmly established and organised.) இந்த வாரியங்களின் சார்பில் அணிகள் , ஐசிசி நடத்தும் போட்டிகளில் பங்கேற்கும். எடுத்துக்காட்டாக , மேற்கிந்திய தீவு…
-
- 0 replies
- 363 views
-
-
பந்து வீச்சு ஜாம்பவான்கள் ஸ்டெயின், முரளீதரன் சாதனையுடன் இணைந்தார் சாஹிப் அல்ஹசன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் அனைத்து நாடுகளுக்கும் எதிராக 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார் அல்ஹசன். வங்காள தேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 260 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. சாஹிப் அல்ஹசன் மற்றும் மெஹெதி ஹசன் மிராஸ் ஆகியோரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்…
-
- 0 replies
- 322 views
-
-
விளையாட்டு கண்ணோட்டம் – பாகம் 05 இலங்கை அணியுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் உலக சாதனை படைத்த விராத் கோஹ்லி, இலங்கை ஒரு நாள் அணியின் 22ஆவது தலைவராக நியமிக்கப்பட்ட திஸர பெரேரா மற்றும் 2018 பிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளின் குழு நிலை அணிகளின் விபரங்கள் உள்ளிட்டவை இந்தவார விளையாட்டு கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கவுள்ளது.
-
- 0 replies
- 209 views
-
-
ஐ.சி.சி தூசு மாசு சட்டத்தை தூசு துடைத்து நெறிப்படுத்துமா? இந்திய உபகண்டத்தில் கிரிக்கெட் விளையாட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது மட்டுமல்ல கிரிக்கெட் விளையாட்டை துதிக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் காணப்படுகின்றனர். பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் இன்று இந்தியாவில் தேசிய விளையாட்டைப்போல வரவேற்பைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து,அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து வீரர்கள் உட்பட கிரிக்கெட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த பலவீரர்கள் (ஐ.பி.எல்) எனப்படும் 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றி கோடானு கோடி இந்திய ரூபாக்களை அள்ளிச் செல்கின்றனர். முன்னொரு காலத்தில் இங்கிலாந்து சென்ற…
-
- 0 replies
- 430 views
-
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுவதில் சந்தேகம் Image Courtesy- PTV 2021 ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், நேற்று (9) இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி இன்) நிர்வாக கூட்டத்தினை அடுத்து சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடைபெறவிருக்கும் இடத்தில் மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் பாரிய விளையாட்டுத் தொடர் ஒன்று நடைபெறும் போது அத்தொடருக்காக விஷேட வரிவிலக்கு வழங்கப்படும். இப்படியான சலுகை ஒன்றை சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்காக சர்வதேச கிரிக்கெட் வாரியமும் எதிர்பார்த்திருந்தது. எனினும், இதுவரையில் அப்படியான ஒரு வர…
-
- 0 replies
- 219 views
-
-
சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!! சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!! யாழ்ப்பாண கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் 20 வயது ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதியாட்டத்தில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மோதியது. …
-
- 0 replies
- 445 views
-